பாவை 6
“ஜாப் ரிசைன் பண்ணுறதுக்கு ஐம்பது லட்சம் கேட்குறானே கடோத்கஜன் மனசாட்சி இல்லாம நாக்கு கூசாம கேட்குறானே! இன்னிக்கு இடுப்பை தடவினவன் நாளைக்கு என்ன வேணா நம்மை பண்ணலாம்!”
ஐம்பது லட்சம் அவளுக்கு பெரிய தொகையே! “அம்மாவிடம் தான் வேலை செய்யும் கம்பெனியின் எம்டி இடுப்பை தடவினான்னு சொல்லிவிட்டால் அவ்வளவு தான்! வீட்டை வித்து பணம் அனுப்புறேன் நீ வேலையை விட்டுட்டு வந்துடுடினு சொல்லிடுவாங்க! கனடா போக வேணாம்னு சொன்னேன்ல என் பேச்சு கேட்காம போனிலனு திட்டும் விழும். அம்மா நிம்மதியும் போய்விடும்… இவனுக்கு பயந்துக்கிட்டு நாம ஏன் வேலையை விட்டு நிற்கணும்! நாம கண்ட்ரோலா இருக்கோம். என்னை மீறி அவன் தொட்டா அவன் முகத்துல காறி துப்பி ரெண்டு கன்னத்துலயும் ரெண்டு அப்பு போட வேண்டியதுதான்.”
“மீறி அவன் உன்னை ரேப் பண்ணிட்டா என்ன பண்ணுவ ஜானவி! ரேப் பண்ணினா அவனை கொன்னுடுவேன்! கம்பெனியை விட்டு போனா நாம கோழைப்பொண்ணு ஆகிடுவோம். அவனை எதிர்த்து நிற்கணும்! நம்மளும் வேலுநாச்சியார் வம்சத்துல வந்தோம்னு மார்தட்டி நிற்கணும்! டைனோசர் என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்!”
“எதுக்கும் நம்ம சிரிக்கா மூஞ்சி ராகவன் கிட்ட டைனோசரை பத்தி சொல்லிவச்சிடலாமா! ஏன்னா அவன் கொஞ்சம் நல்லவனா தெரியுறான். யார் கண்டா எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு தெரியும்… எவனையும் நம்ம இப்போதைக்கு நம்பவேண்டாம். கடோத்கஜன் சொன்னானே வேற கம்பெனிக்கு போனாலும் அங்க ரெண்டு பேர் என்னைய விட மோசமானவனுங்களா இருப்பாங்கனு! ஜாப் ரிசைன் பண்ண மாட்டேன்…” என்ற பல வண்ண வண்ண யோசனைகளுடன் இருந்த ஜானவிக்கு இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.
விடியற்காலையில் கண் அயர்ந்தாள். சூரிய பகவான் அவள் வீட்டு ஜன்னல் வழியே அவளது முகத்தில் சுள்லென்று அடிக்க கண்ணை திறக்க முடிாயமல் திறந்து பார்த்தவள் மணியை பார்க்க 9.00 ஆகியிருந்தது.
“அச்சோ 9.00 மணியாச்சே!” என்று அடித்து பிடித்து எழுந்து அவசர குளியலை போட்டு குளித்து வந்தவள் பர்மிஷன் என்று ஹெச்ஆர் ராகவனுக்கு மெசேஜ் போட்டு விட்டு சமையல்கட்டுக்குச் சென்றவளின் வயிறு பசியில் கடமுடவென சத்தம் போட்டது. அவளுக்கு பிடிக்காத உப்புமாவை கிளறி நாலு வாய் அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு கேப் புக் செய்து ஆபிசிற்குச் சென்றாள்.
கிருஷ்ணாவோ ராகவனுக்கு போன் செய்து “சீனியர் ஜானவி வந்துட்டாங்களா? அவங்க கிட்ட நேத்து ஒர்க் ஒப்படைச்சிருந்தேன் என்ன பிராசஸ்ல இருக்குனு தெரியணும். இன்டர்காம்ல கூப்பிட்டேன் போன் எடுக்கலையே! திவ்யா இந்த நேரம் வந்திருப்பாங்கல்ல” என்று மணியை பார்த்தான்.
“இந்த ஆபிஸ்ல யாரும் பொறுப்பா வேலையை முடிக்கிறதில்லை. மாசம் ஆன சம்பளம் மட்டும் வாங்கத்தெரியுதுல்ல” என்று சுள்லென்று விழுந்தான் ராகவனிடம்.
ராகவனோ போனை வைத்து விட்டு கிருஷ்ணாவின் அறைக்குள் சென்றவனை “உட்காருங்க சீனியர்” என்றதும் நார்மலாதான் இருக்கான்ப்பா என்று பெரும்மூச்சு விட்டு “திவ்யாவோட பையனுக்கு உடம்பு சரியில்லை லீவுனு உனக்கு மெயில் போட்டிருப்பாங்களே! ஜானவி பர்மிஷனு ஒன்னவர் முன்னாலதான் வாட்சப் மெசேஜ் போட்டிருக்காங்க வந்ததும் உங்களை பார்க்கச் சொல்லட்டுமா?” என்றான் அவன் குரலில் ஜானவியின் மீது கோபம் இருப்பது அப்பட்டமாக தெரிந்தது ராகவனுக்கு.
“வேலைக்கு வந்து ஒரு வாரம் ஆகலை அந்த பொண்ணுக்கு வாய் மட்டும் நயகரா நீர்வீழ்ச்சி போல நீளமாக போகுது. அவளை கொஞ்சம் அடக்கி வாய் பேச சொல்லுங்க சீனியர் எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது” என்றான் பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே.
“ஜானவி வேலைக்கு வந்து ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ள அந்த பொண்ணை பத்தி நீ எப்படி ஜட்ஜ் பண்ணி பேசுற கிருஷ்ணா மத்த பொண்ணுங்ககிட்ட நடந்துக்குறது போல ஜானவிகிட்ட அட்வாண்ட்டேஜ் எடுத்துக்காதே. இந்தியா பொண்ணு கதகளி ஆடிடுவாங்க பார்த்துக்கோ அவ்ளோதான் சொல்லுவேன்! உன் அப்பா வேற எங்க பேச்சுதான் அவன்கிட்ட எடுபடமாட்டேங்குது நீயாவது நல்லது கெட்டது சொல்லக்கூடாதாப்பானு என் தலையை உருட்டுவாரு” என்றான் சலிப்புடன் நெற்றியை தடவிக் கொண்டு.
“நான் என்ன ஸ்கூல் படிக்குற சின்னப் பையனா சீனியர்! ஐ ஆம் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன்! எதை பண்ணனும் பண்ணக்கூடாதுனு எனக்கு தெரியும்… என் மனசுக்கு எது சரினு படுதோ அதைத்தான் நான் பண்ணுவேன். இந்தியா பொண்ணுங்கனா எனக்கு பிடிக்கும்! சம்திங் ஸ்பெஷல்!” என்றான் அழுத்தமாக இதழ்கடையோர சிரிப்புடன்.
“ஓ அப்போ ஜானவியை உன் கம்பெனியில வேலைக்கு எடுத்தது கூட காரணமாகத்தான் ரைட்… உனக்கும் சோபியாவுக்கும் எங்கேஜ்மெண்ட் நடந்து முடிஞ்சிருக்கு ஞாபகம் இருக்கா?” என்றான் புருவத்தை தூக்கி அவனை முறைத்தபடியே.
“நல்லா நினைவுல இருக்கு சீனியர் ஆனா எனக்கு கல்யாணம் பண்ண பிடிக்கலை. லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணனும்! கல்யாணம் பண்ணினா பொண்டாட்டியை கூட்டிட்டு ஊர் சுத்தணும்… அவ கேட்கறதை நான் வாங்கிக்கொடுக்கணும்! குழந்தைகள் பிறந்தா அவங்கள கேர் பண்ணனும்! ப்ளா ப்ளா குடும்பம் எனும் கமிட்மெண்ட்டுக்குள்ள நான் சிறைபட்டு இருக்க எனக்கு இஷ்டம் கிடையாது! ஐ ஆம் ஃப்ரீ பேர்ட் அதுக்காக பொண்ணுங்க வாசனை இல்லாம சன்னியாசி போல நான் இருக்க மாட்டேன்! என்னை பிடிச்சு என்கூட கல்யாணம் பண்ணிக்காம வாழ எந்த பொண்ணு ஓ.கே சொல்லுறாளோ அந்த பொண்ணுகூட லைஃப் முழுக்க கமிட்மெண்ட் ஆகிடுவேன்” என்றான் தோளைக்குலுக்கிக்கொண்டு
“அப்போ உனக்காக சோபியாவை கல்யாணத்துக்கு வெயிட் பண்ண வைக்கறது தப்புதானே!” என்றான் கோபத்தோடு.
“நான் வெயிட் பண்ணச் சொல்லலை இரண்டு வருசம் டைம் கேட்டிருக்கேன்! அதுக்கப்பறமும் டைம் கேட்பேன் எங்க டாடி இவனை நம்பி பிரயோசனம் இல்லனு சோபியாவோட மனசை மாத்தி அவளை ஒரு பிஸ்னஸ் மேனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாரு சோ அவளை பத்தி எனக்கு கவலை கிடையாது” என்றான் அசால்ட்டாக தலையை சிலுப்பிக் கொண்டு.
“நீ பண்ணறது எனக்கு சரியா படலை கிருஷ்ணா! கல்யாணம் பண்ணி வாழறது ஒரு தனி சுகம் எனக்குதான் லைஃப் அமையலை… நீயாவது குடும்பம் குட்டினு சந்தோசமா வாழுடா இந்த நண்பனோட ஸ்மால் ரெக்கவஸ்ட்” என்றான் தயங்கியபடியே.
“இப்ப உங்களுக்கு 38 தானே சீனியர்… அவன் அவன் 50 60 வயசல கூட கல்யாணம் பண்ணிக்குறாங்க. உங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணு இனி கிடைப்பானு எனக்கு பட்சி சொல்லுது” என்றான் கண்ணைசிமிட்டிக்கொண்டு.
“இதுக்குமேல யாரும் கிடைக்கமாட்டாங்க கிருஷ்ணா” என்றான் சலிப்பாக.
“திவ்யாவை நீங்க தான் கார்ல அழைச்சிட்டு போனதா எனக்கு தகவல் வந்துச்சே! என்ன திவ்யாவை லவ் பண்ணுறீங்கதானே!” என்றான் தாடையை தேய்த்துக்கொண்டு
“அட போடா காதலும் இல்ல கத்திரிக்காயும் இல்ல… திவ்யா கிளம்பின நேரம் கம்பெனி கேப் இல்ல. அவங்க பையனுக்கு வாமிட் ஃபீவர் அதிகம்னு சொன்னாங்க அதான் நான் ஹெல்ப் பண்ணினேன் நீ நினைக்கிற காதல் கன்றாவி எல்லாம் 38 வயசு ஆனவனுக்கு வராதுடா!“ என்று டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தான்.
ராகவனுக்கு திவ்யா மேல காதல் எல்லாம் கிடையாது! ஆனால் நேற்று இரவு அவளுடன் தனியாக இருக்கும் தருணத்தில் அவள் ஹர்ஷாவிடம் காட்டிய தாய்மை பாசத்தில் கண்டு காதல் வந்தது அவனுக்கு. அவள் உடலை பார்த்து அவள் மேல் காதல் வரவில்லை அவளது தாய்ப்பாசத்தில் காதல் கொண்டான்.
“திவ்யாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போனது இல்லாம அவங்க பையனை ஹாஸ்பிட்டல்க்கு அழைச்சிட்டு போய் நைட் முழுக்க அவங்க கூடதான் இருந்தீங்கனு எனக்கு நியூஸ் வந்துச்சே!” என்றான் கழுத்தை வருடிக்கொண்டே.
“நம்ம கம்பெனியில ஒர்க் பண்ணுற பொண்ணுனு ஹெல்ப் பண்ணினேன் அவ்ளோதான் லவ் கிவ்வு எல்லாம் கிடையாது. திவ்யாகிட்ட நீ எதையும் கேட்டு தொலைச்சிடாத. அந்த பொண்ணு நேத்து நான் ஹாஸ்பிட்டலுக்கு பில் பே பண்ணினதுக்கே என்கிட்ட முகத்தை கடுகடுனு வைச்சுட்டு பேசுச்சு. நான் மாசக்கடைசி உங்ககிட்ட பணம் இருக்குமோனு சமாளிச்சுட்டு வந்துட்டேன்டா. நான் இதுவரை நல்லபையன்னு சொசைட்டில பேர் வாங்கி வச்சிருக்கேன் அதுக்கு பங்கம் வரவைச்சிடாத உனக்கு புண்ணியமா போகும்” என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்டான் ராகவன்.
“ஏன்டா திவ்யா டிவோஸிதானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா! இல்லை ஒரு டிவோஸியை கல்யாணம் பண்ணனும்னு நினைக்குறியா. உங்க அம்மாவும் என் மகன் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்கிறானே ரொம்ப புலம்புறாங்க சீனியர்… திவ்யாகிட்ட நான் வேணா பேசவா?” என்றான் அக்கறையாக.
நேற்று இரவு அவள் எதையோ எண்ணி அழுதுக் கொண்டே இருந்தது அவன் கண் முன்னே நிழலாடியது “டேய் திவ்யா லைஃப்ல ரொம்ப காயப்பட்டிருக்கானு தோணுது! அவங்ககிட்ட எதுவும் இப்போதைக்கு கேட்காதே” என்றவனோ அவன் கொண்டு வந்திருந்த மன்த்லி சாலரி ரிப்போர்டை வைத்துவிட்டுச் சென்றவனை.
“ஒரு நிமிசம் சீனியர்” என்றதும் ராகவன் திரும்பி நின்றான்.
“நீ மட்டும் எனக்கு கல்யாணம் பண்ண சொல்லி அட்வைஸ் பண்ணலாம் நான் பண்ணக்கூடாதா” என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி.
“எனக்கு கல்யாணம் ராசி கிடையாது கிருஷ்ணா” என்ற விரக்தி சிரிப்புடன் வெளியேச் சென்றான்.
கிருஷ்ணாவும் ராகவனும் நண்பர்கள்தான் கிருஷ்ணா படிச்ச யூனிவர்சிட்டியில் ராகவன் சீனியர் கிருஷ்ணாவுக்கு நல்ல தோழன். ராகவன் படிப்பை முடித்ததும் தன் கம்பெனியில் ராகவனை அப்பாய்ட்மெண்ட் செய்துக் கொண்டான் கிருஷ்ணா.
ஜானவியை எதிரே கண்ட ராகவனோ “மேடம் நீங்க வந்ததும் எம்டி உங்களை வரச்சொல்லியிருக்காரு” என்று கூறிவிட்டு அவனது கேபினுக்குச் சென்றுவிட்டான்.
“டைனோசரை பார்க்கணுமா போறேன் சிடுமூஞ்சி” என்று இதழை சுளித்தவள் கிருஷ்ணாவின் அறைக் கதவை நாக் செய்தாள்.
“எஸ் கம்மின்” என்றான் கிருஷ்ணா எப்போதும் போல் அவனின் ஆளுமையான சிம்மக் குரலில்.
ஜானவி உள்ளேச் சென்றதும் “என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ஜானவி மேடம்?” என்றான் பேனாவை சுழட்டிக்கொண்டு திமிர்பார்வையுடன்.
அவளோ “நான் உங்க கம்பெனியிலேயே ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன் சார்! நீங்க நேத்து எனக்கு ஒரு லெக்சர் எடுத்தீங்க என்னை போல பல கம்பெனிகளில் பல பொம்பளை பொறுக்கிங்க இருப்பாங்கனு” என்றவளின் குரலில் ஆவேசம் தெறித்தது.
“மேடம் நீங்க பார்க்கத்தான் சிக்குனு ஒடிசலா நாலு எலும்பு மட்டும் இருக்குனு நினைச்சேன் ஆனா அந்த எலும்புக்குள்ள கூட கொழுப்புதான் இருக்கும் போல! என்னை பொம்பளை பொறுக்கினு சொல்லுற“ என்று பட்டென்று எழுந்து அவளருகே வந்துவிட்டான்.
ஜானவி ஜர்க் ஆகிவிட்டாள் ஒரு நிமிசம்.
அவளருகே வந்தவன் “நான் பொம்பளை பொறுக்கி கிடையாது. பொண்ணுங்க பர்மிஷன் இல்லாம நான் அவங்களை எடுத்துக்கிறது கிடையாது! ஆனா உன்னை பார்த்தாதான் என் கன்ட்ரோல் மிஸ் ஆகுது” என்றான் கன்னத்தை தேய்த்துக்கொண்டு.
“நீங்க கன்ட்ரோல் இல்லாம இருக்கலாம் சார்… நான் கன்ட்ரோலாதான் இருக்கேன். நீங்க என்னோட பாஸ் மட்டும்தான் நீங்க நினைக்குற ஆள் நான் கிடையாது வேற ஆளை பாருங்க. என் வேலையில குறை இருந்தா மட்டும் என்னை திட்ட அனுமதிப்பேன்! எனக்கு வாய் நீளம் குறைவு அதிகமாக பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன்! உங்க அக்ரிமெண்ட் கணக்குப்படி நான் இங்க வேலை செய்யுறதா முடிவு பண்ணிட்டேன்! நேத்து முடிக்காத வேலை இருக்கு நான் கிளம்புறேன் சார்” என்று கதவு வரை சென்றவள் திரும்பி பார்த்து
“என்னை நீங்க அங்குலம் அங்குலமா இரசிக்கறதை விட்டிருங்க சார். ஒரு பொண்ணோட அனுமதியில்லாம இப்படி ரசிக்கறது கூட பொறுக்கி செய்யற வேலைதான்” என்ற முறைப்போடு கதவை திறந்துச் சென்றாள்.
ஜானவி சென்றதும் எப்படிதான் இவளை கரெக்ட் பண்ணப்போறோம்! இவ எப்படி என்னோட டீல்க்கு ஓ.கே சொல்லுவா! என்றெல்லாம் அவனது கிரிமினல் மூளை வேலை செய்தது. அவனுக்கு சாதகமாக ஆஸ்திரேலியாவில மெடிக்கல் கான்ப்ரன்ஸ்சில் கலந்துக் கொள்ள அழைப்பு வந்திருக்க. ஜானவியை அழைத்துச் செல்ல ப்ளான் செய்து விட்டான்.
ஜானவி அன்று ரிப்போர்ட் கொடுக்கச் சென்றிருந்தாள். “மேடம் நீங்க நாளைக்கு என்னோட ஆஸ்திரேலியா வரணும்” என்றான் ஆர்டர் போட்டு லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டே
“என்கிட்ட ஃபர்ஸ்ட் இன்பார்ம் பண்ணனும்ல சார். திடீர்னு கிளம்பணும்னா எப்படி! எனக்கு ஹெல்த் இஸ்சு என்னால வரமுடியாது நெக்ஸ்ட் டைம் வேணா நான் வரேன். வேற யாரையாவது அழைச்சிட்டு போங்க” என்றவேளா அவளது பைஃலை டேபிள் மீது வைத்தாள்.
“உங்களை பார்த்தா சிக்கா இருக்க மாதிரி தெரியலையே என் கூட கான்ப்ரன்ஸ்க்கு வர பயமா!” என்றான் தோரணையாக.
“ஹலோ சார் உங்க கூட வரதுக்கு எனக்கு பயம் கிடையாது நீங்க என்ன சிங்கமா புலியா உங்களை கண்டு பயப்படறதுக்கு நீங்களும் மனுசன்தானே!” அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்று காட்டும் விதமாக பேசினாள்.
“நீங்க எலிசபெத் ராணியா இருந்துட்டு போங்க நாளைக்கு நீங்க என்னோட கான்ஃபிரன்ஸக்கு வந்தாகணும் உங்க நேம் கொடுத்தாச்சு. ஃபிளைட் டிக்கெட்டும் போட்டாச்சு! நீங்க வந்தாகணும் அவ்ளோ தான் சும்மா வளவளனு வெட்டியா பேசிட்டிருக்காதீங்க எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு” என்று லேப்டாப்பில் மூழ்கிக்கொண்டான்.
“யூ இடியட் என்னோட நிலமை தெரியாம பேசுறான்” என்று நிலத்தில் காலை உதைத்தவளை இரகசியமாய் இரசித்தான் வம்சி கிருஷ்ணா.
“என்ன மேடம் காலுல சுளுக்கா?” என்று கடவாயில் நாக்கை சுழட்டிக்கொண்டு கேட்க
அவளோ “எனக்கு சுளுக்கு கிடையாது ஒருத்தருக்கு ஒருநாள் சுளுக்கு எடுக்கப்போறேன்” என்று முணகியவள் “நான் வரேன்” என்று அங்கிருந்து கிளம்பியவள் தன் நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு கோபம் கொப்பளித்தது.
திவ்யாவோ “என்னாச்சுடி எம்டிசார் ஏதும் திட்டிட்டாரா! உன் முகம் சரியில்லையே?” என்றாள்.
“எனக்கு பிரியட்ஸ்டி இன்னிக்கே கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தேன்! நாளைக்கு ஃப்ளோ இன்னும் அதிகம் இருக்கு என்னை இந்த எம்டி டைனோசர் கான்ஃபிரன்ஸ்க்கு ஆஸ்திரேலியா அழைச்சிட்டு போறாராம்” என்று எரிச்சலாக பேசினாள்.
“நீ எம்டி சார்கிட்ட சொல்லியிருக்கலாம்ல! அவர் ரொம்ப நல்லவருடி என்னோட சூழ்நிலையை எடுத்துச் சொன்னதும் எனக்கு ஒர்க் கரெக்டா இருந்தா சரினு சொல்லிட்டாருடி ஜெம் பெர்சன் நீதான் அவரை பத்தி கம்ப்ளைண்டா சொல்லிட்டேயிருக்க” என கிருஷ்ணாவுக்கு வக்காலத்து வாங்கினாள்.
‘அவன் பச்சோந்தி போல யார் கிட்ட எப்படி நடக்கணும்னு அவனுக்கு தெரியாதா’ என்று மனதிற்குள் நினைத்தவள் “எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க திவி! நான் அவர் கூட வந்தேயாகணுமாம் ஆர்டர் போடுறாரு என்கிட்ட கேட்காம கூட டிக்கெட் போட்டாச்சு இது தப்புதானே” என்றாள் அடங்காத கோபத்துடன்.
“ஏய் நாம அவர் கம்பெனியில் வேலை செய்யுறோம்! அவர் சொல்றதை கேட்டுதானே ஆகணும். ஆக்சுவலி நானும் ராகவன் சாரும்தான் கான்ஃப்ரன்ஸ்க்கு போக வேண்டி இருந்துச்சு! என்கிட்ட வில்லிங்கானு கேட்டாங்க… நான் ஹர்சாவை விட்டு வரமுடியாதுனு சொல்லிட்டேன்! ராகவன் சாருக்கும் அவங்க அம்மாவுக்கு யூட்ரஸ் ஆப்ரேசன் இருக்குனு சொன்னதாலதான் கிருஷ்ணா சாரும் நீயும் கிளம்பவேண்டியதாய் இருக்குடி எதையும் ஆராயாம பேசாத” என்றாள் பொறுமையாக.
ஓ டைனோசரை தப்பா நினைச்சிட்டோமே என்று வருத்தப்பட்டவள் “சாரி திவ்யா” என்றாள் கண்ணைச்சிமிட்டி.
கிருஷ்ணா பிளான் போட்டுத்தான் திவ்யாவையும் ராகவனையும் ஒரு ஃபார்மாலிட்டீஸ்க்கு கேட்டிருந்தான் தன் மேல் சந்தேகம் வரக்கூடாதென.
“டைம் ஆச்சுடி நான் கிளம்புறேன்” என்று திவ்யா கிளம்பி விட்டாள்.
அடுத்தநாள் இரவு கிருஷ்ணாவுடன் ஃபிளைட்டில் ஏறினாள் ஜானவி.
ஹாய் பிரண்ட்ஸ் லைக்ஸ் குறைச்சு போயிருச்சு. உங்க லைக்ஸ் தான் எனக்கு பூஸ்ட் ஆகவே ஒரு லைக்ஸ் பூட்டு விடுங்க பிரண்ட்ஸ்
👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பரா போய்ட்டு இருக்கு ❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு