ATM Tamil Romantic Novels

பச்சை அரக்கனின் நீலப்பாவை

பாவை 9
 
 
அவளோ “தேங்க்யூ சார் உங்க ப்ரண்ட் உங்களை மாதிரியே பொறுக்கியா இருக்காரே  சார்! எனக்கு கராத்தே கும்ஃபூ எல்லாம் தெரியும் இன்னும் கொஞ்சம் நேரம் என்கிட்ட அவர் இடக்கு மடக்கா பேசியிருந்தா அவர் கன்னம் பன்னு போல வீங்கியிருக்கும்” என்று அவள் சதீஷை வடச்சட்டியில் போட்டு வறுப்பது போல வறுத்துக்கொண்டிருதாள்.
 
சதீஷோ இந்த பொண்ணு ஏதோ நண்பனிடம் தன்னை போட்டுக்கொடுக்கிறாள் என்று தலையை எட்டி பார்த்த சதீஷை கண்கள் தெறித்து விழும் அளவிற்கு பார்த்து முறைத்தாள் ஜானவி.
 
“அவனை எதுக்கு முட்டை கண்ணை விரிச்சு முறைச்சு பார்க்குற..! அவன் நீங்க அழகா இருக்கீங்க உனக்கு தங்கச்சி இருக்கானு கேட்டிருப்பான் அவ்ளோதானே! அவன் ஒரு கம்பெனியோட எம்டி… உன்கிட்ட ஏதோ விளையாட்டா கேட்டிருப்பான்! என்ன பெருசா சீன் போடுற” என்றான் சாதாரணமாக.
 
“இதெல்லாம் ஓவரா இல்லையா உங்களுக்கு! என்னை பார்த்தா பொண்ணு புரோக்கர் மாதிரி தெரியுதா? உங்க ப்ரண்ட் என்கிட்ட கேட்ட கேள்வியில எனக்கு தலைவலியே வந்துடுச்சு சார்..! எனக்கு டீ குடிக்கணும் கான்ஃப்ரன்ஸ் முடிஞ்சுருச்சுல்ல நான் ரூம்க்கு கிளம்பவா சார்?” என்றாள் தலையை பிடித்துக்கொண்டு.
 
“ரொம்ப ஓவரா பண்ணாதீங்க ஜானவி நான் உங்க எம்டி நான் எப்ப ரூம்க்கு போகணும்னு சொல்றேனோ அப்பத்தான் போகணும்! நீங்க என்னமோ என் பொண்டாட்டி போல என்னை மிரட்டுறீங்க! நீங்க என்ன செய்யணும்னு நான்தான் சொல்லணும் அதிகபிரசிங்கத்தனமா நடந்துக்காதீங்க. கான்ஃப்ரன்ஸ் இன்னும் முடியலை லன்ச் முடிச்சிட்டு ஈவ்னிங்தான் ரும்க்கு போகணும் அன்டர்ஸ்டான்ட்” என்று ஜானவியை அதட்டியதும் அவளுக்கோ இவன்கிட்ட நான் வந்து வசமா மாட்டிக்கிட்டேன் என்று நொந்தவள் “ஓ.கே சார்” என்றவளோ கலங்கிய கண்களுடன் எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.
 
சதீஷ் முன்னால் தன்னைத் திட்டியதும் ஜானவிக்கு அழுகையே வந்துவிட்டது. முகத்தை தண்ணீர் கொண்டு அடித்துக்கொண்டு கர்சீப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்தவள் முன்னால் நின்ற சதீஷோ “சாரி சிஸ்டர் என்னால உங்களுக்கு திட்டு விழுந்துடுச்சு” என்று மன்னிப்பு கேட்டான். 
 
ஒரு கம்பெனியின் எம்.டி தன்னிடம் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 
 
“இட்ஸ் ஓ.கே சார்! இனிமே என்கிட்ட இப்படி லூசு தனமா கேள்வி கேட்காதீங்க” என்றவளோ விறுவிறுவென சாப்பிடும் இடத்திற்குச் சென்றவளுக்கு சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை. கிருஷ்ணா திட்டியதே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
 
“நம்மளால திட்டு வாங்கிட்டாளேன்னு சாரி சொல்ல வந்தா என்னை லூசுன்னு சொல்லிட்டு போறா… சரியான பஜாரி தான் போல” என்று தோளை குலுக்கிச் சென்றான்.
 
சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம் சதீஷோ “பாவம்டா அந்த பொண்ணு அவகிட்ட ஹார்ஷா பேசியிருக்க வேண்டாம்” என்றான் வருத்தமாக.
 
“டேய் அந்த பொண்ணை பத்தி உனக்கு தெரியாதுடா! இவ சரியான பஜாரி! என்கிட்டயே எகிறி எகிறி சண்டைப் போட்டவ தெரியுமா” அவளை வசைபாடினாலும் ஜானவி எங்கே அமர்ந்திருக்கிறாள் என்று கண்களால் அலைபாய்ந்து தேடினான்.
 
அவளோ பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொள்ள அவள் முன்னே வந்து நின்ற வம்சி கிருஷ்ணாவோ “இப்ப எதுக்கு கப்பல் முழுகி போனது போல முகத்தை வச்சிருக்க! என் நன்பனை என் முன்னாடி திட்டினா நான் சும்மா இருப்பேனா! நான் தினமும் உன்னை ஏதாவது ஒரு வேலை விசயத்துல திட்டுவது போல நிலைமை வந்தா அப்போ இப்படி சாப்பிடாம உடம்பு கெடுத்துக்குவியா. ஒழுங்கா சாப்பிடு” என்று அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டான் ஜம்பமாக.
 
அவளோ “நீங்க சொல்லித்தான் நான் சாப்பிடணும்னு இல்ல சார். எனக்கு பசிக்கல என் அம்மா ஞாபகம் வந்திருச்சு” என்றாள் அவன் திட்டியதால் சாப்பிடாமல் இருக்கிறாள் என்பதை மறைத்து பேசினாள் அவனிடம் கெத்தாக.
 
“நீ என்ன பால் குடிக்கற சின்னபிள்ளையா அம்மாவை பார்க்கணும் அழுவுறதுக்கு மெச்சூரான பொண்ணுதானே” என அவன் பேச்சில் நக்கல் தூக்கலாக வந்தது.
 
“ஹலோ சார்! ஏன் நீங்க அம்மாவை நினைக்காம இருந்துடுவீங்களா! இல்ல அம்மா கூட பேசாம இருந்துடுவீங்களா!” என சிடுசிடுத்தாள்.
 
“நான் உன்னை போல அம்மா வேணும்னு அழுதுட்டு இருக்கமாட்டேனே! எனக்கு அம்மாகிட்ட பேசணும்னு தோணுச்சா உடனே போன் பண்ணி பேசிடுவேன். சும்மா அம்மா அம்மானு சென்டிமெண்டல் பேத்தலா இருக்காதே! சாப்பிட்டு கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வா” என்று ஹேண்ட் வாஷ் பண்ணும் இடத்திற்குச் சென்றான்.
 
அவளோ இவன் என்ன மாதிரி டிசைனா இருக்கான். பாசம்னா என்னனு விலைக்கு கேட்பான் போலயே என்று சலித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குச் சென்றவள் சதீஷின் பக்கம் உட்கார்ந்துக் கொண்டாள்.
 
வம்சி கிருஷ்ணாவோ அவளை முறைத்தவன் “இந்த பக்கம் வந்து உட்காருடா” என்று சதீஷை  பார்த்தான். அவனோ “நீ நடத்து மச்சான்” என்று கிருஷ்ணா அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டான்.
 
கிருஷ்ணாவோ அவள் பக்கம் உட்கார்ந்தவன் “உன் பக்கம் நான் மட்டும்தான் உட்காருவேன்” என்று விதத்தில் ஜானவியை ஒரு பார்வை பார்த்தவன் ஸ்டேஜில் கவனத்தை வைத்தான்.
 
கான்ஃப்ரன்ஸ் முடிந்து வெளியே வந்தவர்கள் “பாய்டா மச்சான் நான் கிளம்புறேன் நீயும் கிளம்புற தானே” என்று கிருஷ்ணாவின் தோளில் கை போட்டான் சதீஷ்.
 
“இல்லடா இங்க ஒரு வீக் தங்கியிருந்துட்டுத்தான் போகணும்” என்றான் ஜானவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே.
 
சதீஷோ கிருஷ்ணாவை தனியாக அழைத்துச் சென்றவன் “டேய் உனக்கு சோபியாகூட என்கேஜ்மெண்ட் ஆகியிருக்குதானே..! இந்த பொண்ணை ஒருவாரம் உன்கூட எப்படி தனியா வச்சிருப்ப… இது சரியில்ல மச்சான்… நீ எப்பவும் அழைச்சிட்டு வர மாடல் அழகி போல உன் கூட ஜாலியா இருந்துட்டு உன் காசை கரியாக்கிட்டு போவாங்க… ஆனா இந்த பொண்ணை பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது பார்த்து நடந்துக்கோடா! அவசரப்பட்டு ஒரு பொண்ணு வாழ்க்கையில விளையாடாதடா! பெண் பாவம் பொல்லாதது” என்றான் நண்பன் மேல் உள்ள அக்கறையில்.
 
“பொண்ணோட விருப்பத்தோடதான் தொடுவேனு உனக்கு தெரியும்ல! சும்மா அட்வைஸ் பண்ணாம கிளம்புடா காத்து வரட்டும் நீ இங்க இருந்தா காரியத்தை கெடுத்துடுவ ஊர் போய் சேரு” என்று சதீஷை பிளைட்டிற்கு அனுப்பி வைத்தான்.
 
கான்ஃப்ரன்ஸ் முடிஞ்சிருச்சு எப்போதடா இந்தியா போவோம் என்று காத்திருந்தவளுக்கு கிருஷ்ணா ஒன் வீக் இங்கே தங்குவதாக சொல்லியதும் அதிர்ச்சியாகிவிட்டாள் ஜானவி.
 
ரூம்மிற்கு போனதும் பேக்கை எடுத்துக் கொண்டு கிருஷ்ணா முன்னே நின்றவள் “சார் என்னை கனடாவுக்கு அனுப்பி வச்சிடுங்க எனக்கு இங்க இருக்க முடியாது!” என்று ஒற்றைக்காலில் நின்றாள்.
 
“காலையில சொன்னதுதான் இப்பவும் சொல்றேன் நான் உனக்கு எம்.டி நான் சொல்லறதை கேட்கத்தான் உனக்கு சம்பளம் கொடுக்குறேன் ரைட்! நீ ஒருவாரம் என்னோடதான் இருந்தாகணும். நான் உன்னை ஒண்ணும் கடிச்சு தின்னுடமாட்டேன்! நம்ம ரெண்டு பேருக்கும் ஒன் வீக் கழிச்சுதான் கனடா போக டிக்கட் போட்டிருக்கேன் சரியா! எல்லா பொண்ணுங்களும் எப்போ வெளிநாடு  போக சான்ஸ் கிடைக்கும்னு காத்து கிடப்பாங்க… நீ என்னமோ ஸ்கூல் பொண்ணுங்க போல கனடாவுக்கு  போகணும்னு அடம் பிடிக்குற… பழைய பஞ்சாங்கமா இருக்கியே” என்று கண்ணை சுருக்கி அவளை வெறுப்பேற்றினான்.
 
“நான் பழைய பஞ்சாங்கமா இருந்துட்டு போறேன் சார்! நான் கனடா  போகணும்” என்று தேய்ந்து போன பழைய டேப் ரிக்கார்டு போல பேசிக்கொண்டிருந்தாள்.
 
சட்டென அவளது கையை பிடித்து அவள் நேற்று தங்கியிருந்த இருந்த அறைக்குள் தள்ளிவிட்டு வெளியே கதவை தாழ் போட்டவன் கதவில் சாய்ந்து நின்று “நீ ஒன்வீக் என்கூடத்தான் இருக்கணும் ஜானவி மேடம்! உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதானே! அப்போ என்கூட தங்கறதுக்கு என்ன கஷ்டம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
 
‘அச்சோ டைனோசர் ரொம்ப படுத்துறான்! இவன் கூட எப்படி நான் தங்கறது எனக்கு இவனை பிடிக்கவேயில்லை…’ என்று தன்னை கனடாவிற்கு அனுப்பவில்லை என்ற வெறுப்பில் பொத்தென்று உட்கார்ந்தவள் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள். எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. அடுத்த நாள் காலையில் கண்விழித்த போது அவள் முன்னால் கால் மேல் போட்டு காபி குடித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.
 
‘ச்சே காலங்காத்தால இவன் முகத்துலதான் முழிக்கணுமா?’ என்று சலித்துக்கொண்டு அவனை முறைத்தபடியே எழுந்தாள் ஜானவி. தன் மேல் போர்வை போர்த்தியிருக்க… 
 
‘நான் போர்வையை போர்த்தவேயில்லையே அப்போ இவன்தான் நைட் ரூம்க்கு வந்திருக்கான்! திருட்டு ராஸ்கல் நான் தூங்கும்போது அப்படி இப்படினு காலை பரப்பிக்கிட்டு தூங்குவேன் என்னை எப்படி பார்த்து இரசிச்சானோ இங்க இருக்க எல்லாம் நேரமும் நாம கதவை லாக் பண்ணி தூங்கணும் இவனை நம்ப முடியாது’ என்று கிருஷ்ணாவை கறுவிக்கொட்டிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
 
அவனோ ‘போடி போடி போ எப்ப இருந்தாலும் நான் பார்க்கத்தானே போறேன் நேத்து நைட் கொஞ்சமா மேலோட்டமா எனக்கு கண்ணுக்கு தெரியறதையெல்லாம் பார்த்து இரசித்தேன்டி’ என்றான் இதழ்கடையோரச் சிரிப்பில்.
 
அவள் குளித்து விட்டு மிடி டாப்புடன் வெளியே வந்தவளை “ஒருநிமிசம் நில்லு ஜானவி” என்றதும் 
 
“சொல்லுங்க சார்” என்றாள் பல்லைக்கடித்துக் கொண்டு.
 
“காலையில எம்டிக்கு குட்மார்னிங்  சொல்லணும்னு உனக்கு தெரியாதா?” என்றான் தோரணையாக.
 
இவன் ரோதனை தாங்க முடியலைப்பா என்று புலம்பிக்கொண்டாலும் “குட்மார்னிங் சார்” என்று தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டாள்.
 
கிருஷ்ணா அவள் பின்னேயே பால்கனிக்கு பூனை போல சென்றவனின் மீது அவளின் மென்மைகள் அவன் நெஞ்சில் பதிய மோதி நின்றாள்.
 
“ம்ம்” என்று அவள் மென்மையில் கரைந்தவன் ஒரு நிமிசம் கண்ணைமூடித் அவள் தன்னை மோதியதில் தனக்குள் ஏதோ ஏற்பட்ட இன்ப அவஸ்தையில் மூழ்கினான்.
 
அவளது ஈர தலைமுடி அவனது டீசர்ட் பட்டனில் மாட்டிக்கொள்ளவும் அவளால் அவன் மீது இருந்து பிரிந்து வர முடியவில்லை. அவளோ கோபத்தில் தன் முடியை பிடித்து இழுக்கவும் “ஏய்! ஏய்! ஒரு மினிட் வெயிட் பண்ணு நான் எடுத்து விடறேன்” என்ற பெயரில் அவள் முகத்தோடு தன் முகத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவளது பன்னீர் ரோஜா இதழை விழுங்கி விடுபவனை போல பார்க்க அவளோ “யூ இடியட்” என்று பல்லைக்கடித்தவள் “சா.சார் கொஞ்சம் முடியை எடுக்க ஹெல்ப் பண்ணுங்க” என்றாள் அடிக்குரலில்.
 
“இதோ இதோ எடுத்துவிடறேன்” என்று அவளது கன்னத்தில் தன் கன்னத்தை உரசி அவளது முடியை மெதுவாக எடுத்துவிட்டு “என்ன ஷாம்பு யூஸ் பண்ணுற ஸ்மெல் நல்லாயிருக்கே” என்று அவளது முடியை கையில் தொட்டு வாசம் பிடித்தான்.
 
“ஹலோ சார் முடியை தொடற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க” என்று அவனது மார்பில் கையை வைத்து தள்ளிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
 
“பிடியே கொடுக்க மாட்டேன்கிறா என்கிட்ட விழாத பொண்ணுங்களே கிடையாது உன்னை மட்டும் விடுவேனா” என்று தலையை சாய்த்து அவள் சென்ற திசை நோக்கி சொடுக்கு போட்டு “இங்கிருந்து போறதுக்குள்ள உன்னை என் பக்கம் கொண்டு வருவேன் பாருடி” என்றான் கர்வக்குரலில்.
 
ஜானவிக்கோ ‘காலையிலேயே வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டான் டைனோசர்’ என்று கடுப்பாக வந்தது அவளுக்கு. பசியில் வயிறு கடபுடவென உருள ஆரம்பிக்க ‘இவன்கிட்ட போய் பசிக்குதுனு சொல்லணுமா அதுக்கு பசியோட உட்கார்ந்துக்கலாம்’ என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவளுக்கு அன்னையின் நினைவு வந்து விட உடனே தாய் வாணிக்கு போன் அடித்துவிட்டாள். அவரோ உறங்கிக்கொண்டிருந்தவர் போன் அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்து போன் எடுத்து பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது.
 
“ம்மா” என்றவளுக்கு குரல் நடுங்கியது.
 
“தங்கம் எப்படி இருக்க! ஆஸ்திரேலியாவிலிருந்து கனடாவுக்கு கிளம்பிட்டீயா! எப்போ நீ லீவு கிடைச்சு  இந்தியா வருவேன்னு இருக்குடி” என்றார் பரிதவித்து குரல் கரகரப்புடன்.
 
“ஒரு வருஷம் கழிச்சு தான் வர முடியும் ! நீ பி பி மாத்திரை சரியா போடுறியா! என்னை நினைச்சு கவலைப்படாம ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போடுமா” என்றாள் அக்கறையாக.
 
“ம்ம் போடுறேன் உன்னை ஒருத்தன் கையில புடிச்சு கொடுக்கும் வரை இந்த உடம்பை நான் பத்திரமா பார்த்துக்கணும்ல” என்றார் பெரும்மூச்சுவிட்டு.
 
“உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன் சாரிமா நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க” என்றவளுக்கோ தாயின் பேச்சை கேட்காது கனடா வந்தது தப்பு என்று காலதாமதாகத்தான் தோன்றியது.
 
மகளின் குரலில் ஏதோ தடுமாற்றம் இருக்க அவளுக்கு பிரச்சனையோ என்னவோவென்று தாயுள்ளம் தவித்துப்போனது.
 
“ஜானுமா என்னாச்சு குரலே சரியில்லையே! உன்னோட எம்.டி உன்னை ஏதும் சொல்லிட்டாங்களா! உனக்கு பிடிக்கலைனா உடனே கிளம்பி வந்திடுடா! நீ வேலை செய்துதான் நமக்கு சாப்பாடுனு இல்லையே… வந்துடு தங்கம்” என்றார் ஆதங்கத்துடன்.
 
“இ.இல்ல. எ.எனக்கு பிரச்சனை ஒண்ணுமில்லைமா நான் ஜாலியா ஆஸ்திரேலியா சுத்திப்பார்க்கப்போறேன்! என்னமோ உன்கிட்ட பேசணும்னு தோனுச்சு அதான் போன் பண்ணினேன்மா” என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டு வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்.
 
“உன்னோட சந்தோசத்திற்காகத்தான்டி கடல் கடந்து வேலைக்கு போக அனுமதிச்சேன். உன் குரலே சரியில்லையே” என்றார் கவலைப்பட்டு.
 
“ம்மா நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். நீ வேற புலம்பிக்கொண்டு நான் இப்போதான் வேலைக்கு வந்திருக்கேன் ஒரு வருஷம் கழிச்சு லீவு கிடைக்கும் போது என் அம்மாவை பார்க்க ஓடி வந்துருவேன் இப்ப போன் வைக்குறேன்மா பை மா” என்று போனை வைத்தவளுக்கு கண்ணீர் சொட்டு சொட்டாய் வடிந்தது.
 
தாயின் அன்பு அருகிலிருக்கும்போது தெரியாது. வெளிநாட்டில் இருக்கும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் தன் அம்மாவை விட்டு பிரிந்து வெளிநாடு போகும் நேரம் இருக்கும் சந்தோசம் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் தாயின் கைப்பக்குவத்தில் சாப்பாடு கிடைக்காது. இரவு ஏன்பா வீட்டுக்கு இன்னிக்கு வரலையே என்று அக்கறையாக கேட்க ஆள் இருக்காது! தாய் தனக்காக இரவு சாப்பிடாமல் காத்து கிடந்து தனக்கு பரிமாறுவார். ஆனால் இங்கே வேலை முடித்து வந்து தானே சமைத்து தானே சாப்பாடு போட்டு சாப்பிடும் கொடுமை நரகம்தான். தாய் அன்புக்கு நிகர் ஒன்றுமில்லையே.
 
கிருஷ்ணாவோ அவள் தாயிடம் பேசுகிறாள் என்று தெரிந்துக் கொண்டவன் அவளுக்கு பிரைவசி கொடுத்து வெளியேச் சென்றிருந்தவன் அவள் போன் வைத்த சமயம் தான் அறைக்குள் வந்தான். அவன் வந்த அடுத்த சில நிமிடங்களில் காலை உணவு அவர்களது அறைக்குள் கொண்டு வந்து வைத்தனர்.
 
“ஜானவி வா சாப்பிட்டு வெளியே கிளம்பலாம்” என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். இவனால் மட்டும் எப்படி இயந்திரதனமாய் இருக்க முடியுது. இவன் குடும்பத்தோடு போன் பேசி நான் பார்க்கவேயில்லையே. குடும்பம் இருக்கா இல்லையா இவருக்கு! என்றெல்லாம் குழம்பிப்போனவள் அவன் சாப்பிட வரவில்லையென்றாலும் அதற்கும் குற்றம் சாட்டி பேசுவானென்று அமைதியாக சாப்பாட்டை இருவருக்கும் பரிமாறினாள்.
 
ஜானவி சாப்பிடாமல் கொறித்துக்கொண்டிருக்க “ஜானவி நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன்மா! நீ என்னமோ அதையே நினைச்சிட்டிருக்க நான் என்னமோ காமுகன் போல நடந்துக்கிட்டதா நினைக்காத ஜானு! தினமும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டுறேன் எந்த ஸ்டாஃப்புக்கும் கிடைக்காத ஆப்பர்சூனிட்டி உனக்கு கொடுத்திருக்கேன் பயன்படுத்திக்கோ” என்றவனோ அளவாக சாப்பிட்டு கைகழுவச் சென்றான்.
 
“இவன்கிட்ட நான் ஆப்பர்சூனிட்டி கொடுன்னு கேட்டேனோ!” என்று எரிச்சலாக வந்தது அவளுக்கு. சாப்பிட்டு முடித்தவள் சாப்பிட்ட பார்சல்களை குப்பைத்தொட்டியில் போட்டு கை கழுவி வந்தவள் தலையை போனிடெயில் போட்டு கண்ணுக்கு காஜலை போட்டு ஃபேஸ் கீரிம் அப்ளை பண்ணி மெலிதான ஒப்பனையுடன் வெளியே வந்தவள் பிடிக்காமல்தான் கிருஷ்ணாவுடன் ஆஸ்திரேலியா சுற்றிப்பார்க்கச் கிளம்பினாள். தனக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல்.

3 thoughts on “பச்சை அரக்கனின் நீலப்பாவை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top