ATM Tamil Romantic Novels

பச்சை அரக்கனின் நீலப்பாவை

பாவை 10
 
கிரேட் பேரியர் ரீஃப் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் குறிப்பிடத்தக்க பல்வேறு மற்றும் அழகுக்கான தளமாகும். 400 வகையான பவளப்பாறைகள், 1,500 வகையான மீன்கள் மற்றும் 4,000 வகையான மொல்லஸ்க்களுடன் இது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான டுகோங் (‘கடல் மாடு’) மற்றும் பெரிய பச்சை ஆமை போன்ற உயிரினங்களின் வாழ்விடம் என இது பெரும் அறிவியல் ஆர்வத்தை கொண்டுள்ள இயற்கையின் அதிசயத்தை காண ஜானவியை கிரேட் பேரியர் ரீஃப்க்கு அழைத்துச் சென்றான்.
 
ஜானவியோ இவனை நம்பி நாம போறோமே என்று பயந்துக் கொண்டே இருந்தாலும் வெளியில் பயப்படுவது போல அல்லாமல் தைரியத்தோடு இருப்பதை போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.
 
“ஜானு மேடம் உனக்கு ஸ்கூபா டைவிங் தெரியுமா?” என்று ஒருமையில் கேட்டதுகூட அவள் சரியாக கவனிக்காமல் அவர்கள் வந்த இடத்தை பேவென்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
“ஏய் ஜானவி” என்று அவளது கையை பிடித்ததும் அவள் சுயம் வந்து “ஹான் உனக்கு ஸ்கூபா டைவிங் தெரியுமா?” அவன் தாடையை தேய்த்துக்கொண்டு கேட்க.
 
அவளோ “நீச்சல் மட்டும் தெரியும் ஆனா ஒரு முறை ஸ்கூபா டைவிங் பண்ணி இருக்கேன் பயம் இல்ல” என்றாள் அசால்ட்டாக.
 
“இப்போ நாம வந்திருக்கிற் உலகின் மிகப்பெரிய தடுப்பு பாறை அமைப்பு கிரேட் பேரியர் ரீப். பவளக் கடலில் அமைந்து கிரேட் பேரியர் ரீப். பவளக் கடலில் அமைந்துள்ள இந்த உலக பாரம்பரிய-பட்டியலிட்டப்பட்ட தளம் விண்வெளியிலிருந்து தெரியும் மற்றும் கிரகத்தின் மிகப்பெரிய வாழ்க்கை கட்டமைப்புகளில் ஒன்றாகும். இங்க 3000க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளை பார்க்கப்போறோம் வா” என்று அவளின் கையை பிடித்ததும் 
 
“ஓ என்னை இந்த கடலுக்குள்ள தள்ளிவிடப் ப்ளான் பண்ணி அழைச்சு வந்திருக்கீங்களா மிஸ்டர் வம்சி கிருஷ்ணா” என்றாள் மூக்கு விடைக்க கோபத்துடன்.
 
“ஹா! ஹா! உன்னை கொல்ல நினைக்கணும்னா நான் உன்னை கடலுக்கு அழைச்சிட்டு வந்தா சாகடிக்கணும்… லேசா உன் கழுத்தை பிடிச்சாவே நீ பொட்டுனு போயிடுவ சும்மா சீன் போடாம வா நீ இதுவரை பார்த்திராத உலகத்தை பார்க்கலாம் என்னை நம்பி வா” என்று ஜானவியின் கண்களை உற்று பார்க்க 
 
அவளோ அவன் கண்களை பார்த்தவள் ஏதோ அவனோட பல வருடம் வாழ்ந்தவள் போல அவன் மீது நம்பிக்கை வந்து  அவனது கையை பிடித்துக்கொண்டுச் சென்றாள்.
 
சுவாச உபகரணங்களுடன் தயாராக இருந்தனர் வம்சி கிருஷ்ணாவும் ஜானவியும். 
 
கிருஷ்ணா எப்போது ஆஸ்திரேலியா வந்தாலும் ஸ்கூபா டைவிங் வராமல் போகமாட்டான்.
 
ஜானவியின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிய “ஏய் உனக்கு பயமா இருந்தா வெளியே வெயிட் பண்ணு நான் வரேன் பட் கடலுக்குள்ள இருக்க சொர்க்க நகரத்தை நீ பார்க்க முடியாம போகும்” என்றான் இதழ் பிதுக்கி.
 
அங்கிருந்த பயிற்சியாளரோ “நான் மேடம்க்கு ஹெல்ப் பண்ணுறேன்” என்றதும் 
 
“கமான் ஜானவி நானும் உன்  கூட இருக்கேன் பயப்படாதே” என்று கண்ணைச் சிமிட்டி அவளின் கையை பிடித்து கடலுக்குள் செல்ல ஆயத்தமானான்.
 
“மாரியாத்தா என்னை காப்பாத்தும்மா” என்று கடவுளை வேண்டிக்கொண்டு கிருஷ்ணாவுடன கடலுக்குள் நீந்திச் சென்றாள். 
 
பயிற்சியாளர்களும் ஸ்கூபா டைவிங்கில் ஆர்வமுள்ளவர்கள் சந்தோசமாக நீந்தி கடல் உயிரினங்களையும் அங்குள்ள பவளப்பாறைகளை கண்டு இரசித்துக்கொண்டிருந்தனர். 
 
கிருஷ்ணா அடிக்கடி ஸ்கூபா டைவிங் போவதால் அவன் சாதாரணமாய் அவனை தொட்டுச் செல்லும் மீன்களையும் மின்னி மறையும் பாசிகளையும் கடந்துச் சென்றுக் கொண்டிருந்தான்.
 
ஜானவி முதலில் பயந்தாலும் பயிற்சியாளர் அவளுடன் இருக்க பயமில்லாமல் நீந்தியவளுக்கு அவளை தொட்டு நெளியும் மீன்களையும் பவள பாறைகளையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 
 
“டைனோசர் நீ நல்லாயிருடா எனக்கு இப்படியொரு அதிசய உலகத்தை காட்டியதற்கு கோடி நன்றிகள்” என்று மனதிற்குள் பாராட்டுபத்திரம் கொடுத்தவளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட அவள் தடுமாறுவதை கண்டு கிருஷ்ணா அவளது பக்கத்தில் நீந்தி வந்தவன் பயிற்சியாளர் உதவியுடன் தண்ணீரிலிருந்து வெளியே அழைத்து வந்துவிட்டான்.
 
ஜானவியை மேலே தூக்கி வந்த கிருஷ்ணாவே அவள் போட்டிருந்த ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் எல்லாற்றையும் களைந்து அவளுக்கு தன் மூச்சை அவளுக்குள் செலுத்த ஒரு சில நிமிடங்களில் அவள் கண்களை திறக்க “ஆர் யூ ஓ.கே ஜானு” என்று சிறு பதட்டத்துடன் அவளது கன்னத்தை தட்டியதும் அவள் மெல்ல தலையை அசைக்க இழுத்து அணைத்துக்கொண்டான். 
 
அவளுக்கும் அந்த அரவணைப்பு ஆறுதலாய் இருக்க அமைதியாய் இருந்தாள்.
 
வேற எந்த இடத்திற்குச் செல்லாமல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் அழைத்துச் சென்றுவிட்டான். அவளால் சாப்பிடக்கூடமுடியவில்லை சோர்ந்து போய்விட்டாள் ஜானவி… 
 
“எனக்கு ஃபுட் வேணாம் சார் ஒரு மாதிரி மயக்கமா இருக்கு” என்று சோர்ந்து மெத்தையில் குறுக்கி படுத்துக்கொண்டாள் ஜானவி.
 
“நீ தண்ணில ரொம்ப நேரம் இருக்க முடியாதுனு என்கிட்ட சொல்லவே இல்லையே ஜானு! சொல்லியிருக்கலாம்ல. கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு. ஏதாவது ஆகியிருந்தா உன் பேரன்ட்ஸ்க்கு யார் பதில் சொல்லுவாங்க ஹான்” அவன் மிரட்டினாலும் அவளுக்கு சூடாக குடிக்க கீரின் டீ கொண்டு வந்தான். 
 
“தண்ணில ரொம்ப நேரம் இருந்திருக்கேன் சார் இன்னிக்குதான் முடியல! இப்போ நீங்க பேசியும் என்னை டென்சன் பண்ணாதீங்க ப்ளீஸ் நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்று கண்ணைமூடிப்படுத்தவளை “வெறும் வயித்தோடு படுக்காதே டீயை மட்டுமாவது குடிச்சிட்டு படு” என்று அவளை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி உட்கார வைத்து டீயை குடிக்க வைத்தான்.
 
அவள் உறங்கியதும் அந்த அறையிலிருந்து சோபாவில் காலை குறுக்கி படுத்துவிட்டான். ஆனால் உறங்கவில்லை. அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அச்சம் அவனுக்கு. அவன் நினைத்தது போலவே அவளுக்கு நடுஇரவில் காய்ச்சல் வந்து விட அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது. 
 
“என்னாச்சு ஜானு?” என்று சற்று பதட்டத்துடன் வந்தவன் அவளை கை கால்களை தேய்த்து விட்டு கம்பளியை எடுத்து அவள் போர்த்தி விட்டு ஹோட்டலில் டாக்டர்ஸ் யாராது ஸ்டே பண்ணியிருக்கிறார்களா என்று ரிசப்சனுக்கு போன் அடித்து கேட்டதும். அவனது பக்கத்து அறையிலேயே ஒரு லேடி டாக்டர் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
 
டாக்டரிடம் ஜானவி  கடலில் ஸ்கூபா டைவிங் பண்ணியதை கூறிவிட்டான்.  ஜானவியை செக் பண்ணிவிட்டு “உங்க மனைவிக்கு தண்ணி ஒத்துக்கல போல… கொஞ்சம் படபடப்பு இருந்திருக்கும் அதான் ஃபீவர் வந்திருக்கு இன்சக்சன் போடுறேன் சரியாகிடுவாங்க” என்று இன்சக்சன் போட்டு விட்டு அவரிடமிருந்த மாத்திரையை கொடுத்துவிட்டுச் சென்றார். அடுத்த நாள் காலையில் காய்ச்சல் குறைந்திருக்க அவளுக்காக கஞ்சி ஆர்டர் செய்து அவளை தன் நெஞ்சில் சாய வைத்து குடிக்க கொடுத்தான்.
 
“சார் உங்களுக்கு ஏன் சிரமம் நானே குடிச்சுக்குறேன்” என்று அவனிடமிருந்து விலகி டம்ளரை வாங்க “ஏய் ஓங்கி அறைஞ்சுடுவேன் பார்த்துக்கோ… கையெல்லாம் நடுங்குது இவளே வாங்கி குடிப்பாளாம் நான் தொட்டா ஒன்னும் நீ கரைஞ்சு போயிடமாட்ட” என்று அவளை வா போ என்று உரிமையில் அவன் அவளை திட்ட ஆரம்பித்தவன் அவளை கஞ்சியை குடிக்க வைத்தே அவளை விட்டு நகர்ந்தான்.
 
அவளுக்கு முடியாத நிலையிலும் “சார் ஓவரா பேசாதீங்க! உங்களை யாரு என்னை கவனிக்க சொன்னது கஞ்சியை வச்சிட்டு போனா நானே எடுத்து குடிச்சிப்பேன்” என்றாள் தன்னை தொடுவது அவளுக்கு பிடிக்காமல்.
 
“ஓவரா பேசாம மாத்திரையை போட்டு பேசாம தூங்கு… நாளைக்கு மார்னிங் நமக்கு ப்ளைட்… உன்னால என்னோட ஜாலி ட்ரிப் கேன்சல் பண்ணுறேன்” என்ற இறுகிய குரலுடன் மாத்திரையை அவளது கையில் கொடுத்தான்.
 
“நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க சார்! நான் உங்க கூட வரலை ரூம்லயே தங்கிக்குறேன்! என்னால உங்களுக்கு தொந்தரவு வராது” என்றாள் உடைந்த குரலுடன்.
 
“எதுக்கு உன்னை தனியா விட்டுட்டு போய் உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னைத்தான் எல்லாரும் ரேப் பண்ணி ஏதோ பண்ணிட்டான்னு பழி போடுவாங்க… எனக்கு பெரும் தலைவலியா வந்து நிற்கும்! நாளைக்கு நாம கிளம்பலாம் பேசாம தூங்கு” என்று சோபாவில் உட்கார்ந்து லேப்டாப்பில் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
 
‘இவன் என்ன முசுடு பிடிச்சவனா இருக்கானே! நானா ஸ்கூபா டைவிங் அழைச்சிட்டு போகச் சொன்னேன்! நேத்தே என்னை பிளைட் ஏற்றி விட்டிருக்கலாம். இப்போ என்னமோ என்னால இவன் ஜாலி ட்ரிப் கேன்சல் ஆகிடுச்சுனு குதிக்குறான். இவனை போய் நல்லவன்னு நினைச்சோம் பாரு’ என்றவளோ உடம்பு சோர்வாய் இருக்க மாத்திரை போட்டு படுத்துவிட்டாள்.
 
அடுத்த நாள் காலை கனடாவுக்கு ப்ளைட் ஏறி விட்டனர் வம்சி கிருஷ்ணாவும் ஜானவியும்.
 
இருவரும் ப்ளைட்டில் பேசிக்கொள்ளவில்லை. அவனோ இந்த முறைதான்டி நான் நினைச்சது நடக்காம வந்திருக்கேன்… அவளை தன்வசம் கொண்டு வந்திடுவோம் என்ற பிளான் எல்லாம் சொதப்பிவிட்டதே என்று ஆத்திரத்தில் கடுகடுவென முகத்தை வைத்திருந்தான்.
 
‘போடா நீ எப்படியோ இரு எனக்கென்ன’ என்ற ரீதியில் ஜானவி சீட்டில் தலையை சாய்த்துக்கொண்டு உறங்கிவிட்டாள். 
 
கனடா சென்றதும் நேராக வீட்டுக்குச் சென்றவன் குளியலை போட்டு “ம்மா டிபன் எடுத்து வைங்க ஆபிஸ் கிளம்பணும்” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தவள் ராகவனுக்கு போன் போட்டிருந்தான்.
 
தோசையை தட்டில் வைத்த அம்பிகாவோ “இப்போதானேடா ஆஸ்திரேலியா போய்ட்டு வந்த கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ் போகலாம்ல” என்று மகனின் உடல் நலனில் அக்கறை எடுத்துப்பேசிக்கொண்டே தக்காளி சட்னியை வைத்தார்.
 
“ம்மா நியூ ப்ராஜக்ட் வந்திருக்கு. நான் வீட்ல படுத்து தூங்கினா ஆபீஸ்சை யாரு பார்ப்பாங்க உங்க புருசன் போவாரா ஆபிஸ்க்கு! கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னா சொத்து கொடுக்க மாட்டேன்னு ப்ளாக் மெயில் பண்ணுறீங்க! சொத்து மட்டும் நான் பல மடங்கா பெருக்கி தரணும் உங்க வீட்டுக்காரருக்கு” என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.
 
“நான் என்னடா சொன்னேன்! நீ என்னடா பேசிட்டு இருக்க! உன் மகனை என் கையால வளர்க்கணும்னு ஆசை அதான் அப்பாவும் நானும் உன்னை கல்யாணம் பண்ணச் சொல்லுறோம்! எனக்கும் வயசாகிட்டே போகுது. இந்த வீட்டு நிர்வாகத்தை மருமக கையில ஒப்படைச்சுட்டு உனக்கு பிறக்கப்போற குழந்தையோட நான் நிம்மதியா விளையாடுவேன்டா” என்றார் கெஞ்சுதலாக தாயின் தவிப்போடு.
 
“வீட்டு நிர்வாகத்தை பார்க்க சம்பளம் கொடுத்தா ஆள் வரப்போறாங்க… அப்படி இல்லைனா அதான் நம்ப வீட்ல இருக்காளே தண்டச் சோறு சோபியா அவளை உங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க! இந்த வீட்ல ஒரு நாள் நிம்மதியா சாப்பிட என்னால முடியலையம்மா நீங்களும் என்னை டார்ச்சர் பண்ணுறீங்க” என்று பாதி சாப்பிட்டிலேயே எழுந்துச் சென்றுவிட்டான் வம்சி கிருஷ்ணா.
 
அம்பிகாவோ ‘இவனை கல்யாணம் பண்ண சொன்னது ஒரு குத்தமா எல்லா அம்மாவும் மகன் கல்யாணம் செய்து குடும்பம் நடந்துறதை பார்க்கணும்னுதானே நினைப்பாங்க! இவன் பேசறதை பார்த்தா சோபியாவை கல்யாணம் பண்ணமாட்டான் போலயே! இந்த ஜென்மத்துல நான் என் பேரப்பிள்ளையை பார்ப்பேனா’ என்று கவலைப்பட்டு அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குள் சென்றார்.
 
ஜானவியோ வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். 
 
ராகவன் கிருஷ்ணாவை பார்ப்பதற்கு வந்தவன் “கான்ஃப்ரன்ஸ் முடிஞ்சதும் ஒன் வீக் ஸ்டே பண்ணறதா சொன்ன இப்ப நாலு நாள்ல வந்துட்டியே! என்னாச்சு கிருஷ்ணா?” என்றபடியே அவன் நாலு நாட்கள் சைன் வாங்காத வைத்திருந்த பைலை டேபிள் மீது வைத்தான்.
 
“இந்தியாவுல இருந்து வந்திருக்காங்களே நியூ ஜாயினி ஜானவி மேடம்! அவங்கனாலதான் நாலு நாலு கூட முழுசா ஆஸ்திரேலியாவுல தங்க முடியாம வந்துட்டேன்” என்று அங்க நடந்த கூத்தை கதையாக கூறினான்.
 
“அந்த பொண்ணுக்கு  தண்ணியில மூச்சு விட சிரமமா இருக்கும்னு என்கிட்ட சொல்லியிருக்கணும் நான் அவங்களை  பத்தி முழுசா தெரியாம ஸ்கூபா டைவிங் அழைச்சிட்டு போய்ட்டேன் தண்ணிக்குள்ள போனதும் கொஞ்ச நேரத்துல இவளால மூச்சு விட முடியாம சிரமப்பட்டு என்னை பதட்டமடையவச்சிட்டாங்க ! என்னை சேவகம் பண்ண வச்சிட்டா அவளுக்கு!” என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தவன் 
 
“எங்க அவ வந்துட்டாளா! உடனே வந்து என்னை பார்க்க சொல்லுங்க சீனியர். புது ப்ராக்ஜெக்ட் பத்தி பேசணும்” என்றான் சுழற்நாற்காலியில் சுற்றிக்கொண்டே.
 
ராகவனோ “நீ ஜானவி மேடத்துக்கு சேவகம் செய்தியா! என்னடா விளையாடுறியா நம்மபவே முடியலை… எத்தனை நாள் நாம ரெண்டு பேரும் விடிய விடிய வேலை பார்த்திருக்கோம். உன்னோட சீனியர்க்கு ஒருநாள் காபி வச்சு கொடுத்திருப்பியாடா… புதுசா வந்த பொண்ணுக்கு சேவகம் செய்திருக்க ஏதோ சம்திங்கா இருக்கு… உனக்கு சோபியாகூட என்கேஜ்மெண்ட் ஆகியிருக்கு ரெண்டு முறை ஞாபகப் படுத்தியிருக்கேன் கிருஷ்ணா” என்றான் பெரும்மூச்சு விட்டு
 
“அட போங்க சீனியர் சோபியாவை மட்டுமல்ல நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலப்பா! ஒருநாள் அந்த பொண்ணு ராங்கிக்காரி கூட தனியா இருந்ததே போதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டிக்கு சேவகம் பண்ண என்னால முடியாதுப்பா” என்று தலைக்குமேல் கையை தூக்கி கும்பிட்டான்.
 
“டேய்! டேய்! இப்படி சொல்றவன்தான் பொண்டாட்டி காலடியில கிடப்பாங்கனு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க” என்று வாய்விட்டு சிரித்தான் ராகவன்.
 
“சீனியர் சிரிக்காதீங்க” என்றவனோ ஜானவியின் கேபினுக்கு இன்டாகாமில் அழைத்தான்.
 
“ஹலோ சார் திவ்யா” என்றிட
 
“ஜானவியை பேச சொல்லுங்க திவ்யா” என்றான் கிருஷ்ணா.
 
“ஜானவி இன்னும் ஆபிஸீற்கு வரலைங்க சார் ஏதும் எமர்ஜன்சி ஓர்க்கா நான் பண்ணித்தரட்டுமா?” என்று கேட்டவளை 
 
“இல்ல நீங்க உங்களுக்கு கொடுத்த வேலையை பாருங்க” என்றவனோ ஜானவியின் மொபைலுக்கு அழைத்தான்.
 
ஜானவியோ போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு கும்பகர்ணியை போல உறங்கிக்கொண்டிருந்தாள்.

1 thought on “பச்சை அரக்கனின் நீலப்பாவை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top