மோகனம்-13
இன்று அவள் அலுவலகப் படியேறும் போது அந்தக் கண்ணாடிக் கதவினைத் திறந்து விட்ட கூர்க்கா, சிரித்த முகமாக, “குட்மார்னிங் மேம்”என்று கூற, மதுராக்ஷிக்கும் உள்ளுக்குள் சற்று ஆச்சர்யமாக இருந்தது.
அவளுக்கா இந்த மரியாதை??அதுவும் நேற்று வரையில்லாத மரியாதை இன்றும் தான் ஏன்?!
நேற்று வரை வெறுமனே கதவினைத் திறந்து விட்ட கூர்க்காவா.. இன்று காலை வந்தனங்கள் எல்லாம் சொல்வது??
கூடவே, “மேம்”என்று சேர்த்துக் கூறியது?
உள்ளுக்குள் தோன்றிய ஆச்சரியத்தை.. வெளியில் காட்டிக் கொள்ளாமல்….
“குட்மார்னிங்க்”என்று சிநேகமாய் புன்னகைத்து பதிலிறுத்த மதுராக்ஷிக்கு..இம்மரியாதையெல்லாம் நிறுவன உரிமையாளனின் அந்தரங்கக் காரியதரிசி என்பதால் விளைந்ததாக இருக்கக்கூடுமென்றே நினைத்துக் கொண்டாள்.
ஆனால், உண்மைக்காரணமோ வேறு!!
நிறுவனத்தின் உரிமையாளனே… நேரிடையாக வந்து.. சொல்லிச் சென்றதன் பிற்பாடு தான்… அலுவலகத்திற்குள் அவளுக்கு இந்த ஏகபோக மரியாதை என்பதை அவள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் என்றுமேயில்லாதவாறு இன்று சேலைக்கட்டி வந்திருப்பதைக் கண்ட ரிசப்ஷனிஸ்ட் பெண்ணோ… அவளை நோக்கி.. வழமையான புன்னகை புரிந்து கொண்டே, “சேரி சூப்பர் மேம்..”என்று கூற மதுராக்ஷியின் இதழ்களும் தான்… மகிழ்ச்சியில் விரிந்தது சௌந்தர்யமாய்!!
என்ன?? இன்று மதுராக்ஷி.. அலுவலகத்திற்கு சேலை கட்டி வந்திருக்கிறாளா?
ஆம், சேலையே கட்ட தெரியாதவளுக்கு… அவளது அன்புத் தாயும் பார்த்து பார்த்துச் சேலைக் கட்டி விட்டிருக்க… இன்று சேலையில் தான் தரிசனம் தந்து கொண்டிருந்தாள் அழகி மதுராக்ஷி.
“தேங்க்ஸ்”என்று அவளைப் போலவே புன்னகைத்துக் கொண்டே மதுராக்ஷி.. தனக்கே தனக்கென்றிருக்கும் பிஏவின் கேபினுக்கு செல்லும் முன்னம்… தன் பாஸின் அறைக்குத் தான் சென்றாள்.
அவனுடைய அறை இன்று அவனில்லாமல் வெறுமனேயிருக்க.. இன்னும் அஜய்தேவ்.. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
எப்போதும் அவள் வருமுன்பாக… டான் என்று மணியடித்தது போல சொன்ன நேரத்திற்கு வந்து நிற்பவனுக்கும் தான் என்னாயிற்று??
ஏதேனும் அவனுக்கு உடல் உபாதைகளோ? இல்லை ஜூரமோ என்று மனத்துக்குள்.. தன் இனிய எதிரியைப் பற்றி யோசித்தவளுக்கு.. அவனது வருகையின்மை மனதோடு.. காரணமே புரியாத.. சிறு கவலையையும் கூட தோற்றுவித்தது.
அவள் தான் இன்று நேர காலத்துடன்.. அலுவலகத்துடன் வந்துவிட்டிருக்கவே… சேலைத் தழையத் தழைய.. மென்பாத எட்டுக்கள் எடுத்து வைத்து… அவளுக்கென ஒதுக்கப்பட்ட தனி அறையை நோக்கி நடந்தாள் மதுராக்ஷி.
இதமான ஏசி காற்று அவளது இலேசாக வியர்வைப் பூத்திருந்த மேனியையும் தழுவிச் செல்ல… பளிச்சென்று புத்தம் புதியது போல பளபளவென மின்னியது மதுராக்ஷியின் அறை!!
நவீனரக மேசை, நாற்காலியுடன்… அங்கே மேசையோடு பிணைக்கப்பட்டிருந்த மடிக்கணினி வேறு…. புத்தம் புதியது போலிருக்கவே…அவ்விடம்,சூழல் எல்லாம் நிரம்பவும் பிடித்துப் போனது மதுராக்ஷிக்கு.
வந்து சேர்ந்த முதல்நாளே காலிலும், கையிலும் கட்டோடு வந்து நின்றவள்… மறுநாளே மூன்று நாள் விடுப்பினை எடுத்தும் கொண்டவள்… இன்று தான் உத்தியோகபூர்வமாக பிஏ நாற்காலியில் அமரவும் செய்கிறாள்.
அவளது மேசையில்… தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்த, “மிஸ். மதுராக்ஷி ராமகிருஷ்ணன்.. பிஏ”என்னும் பதாகை வேறு… அவளுக்குள் சிறு பெருமிதத்தை பரிசளிக்கவே செய்தது.
அலுவலகம் வந்ததும்… குறும்புப் பெண்ணா மதுராக்ஷிக்கு.. ஏனோ.. அவள் அவன் வீட்டில் அன்று விட்டுப் போன ஜிம்மியின் நினைவாகவே இருந்தது.
ஜிம்மியை ஆசைதீர கண்கொண்டு பார்த்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டிருக்க… பாவம் ஜிம்மி, சரியாக உறங்கியதா… சாப்பிட்டதா… என்று எதுவுமே தெரியாமல்… வளர்த்த பாசம் மனதைக் குடைந்து கொண்டேயிருக்கலானது அவளுக்கு.
அவனது ஹிட்லர் பாஸோ… அன்றிரவு நடந்தது கார்த் திருட்டு முயற்சியே தான் என்று அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவனாயிற்றே அவன்!!
திருடியிடம் பழிவாங்க முடியாததை… அவளது ஜிம்மியிடம் வாங்கி விட்டால்??
சாப்பாடு ஏதும் போடாமல்.. பட்டினி போட்டு அதை.. ஈவிரக்கமேயில்லாமல் சித்திரவதை செய்திருந்தால்??
படிப்படியான எதிர்மறையான கேள்விகள் அவளுள் தாறுமாறாக வந்து போக.. சீராகத் துடித்துக் கொண்டிருக்கும் மதுராக்ஷயின் இதயமும் தான் ஒரு கணம் நின்று விடும் போலிருந்தது.
தன் நெஞ்சினைப் பட்டென்று பிடித்துக் கொண்டு, “ஐயோ கடவுளே.. அப்படி ஏதும் ஆகக்கூடாது”என்று அச்சத்தில்.. ஜிம்மியைப் பற்றி எண்ணிக் கொண்டு.. அவள் கையாலாகாத் தனத்துடன் நின்றிருந்த போது…
அவளறையில் வைக்கப்பட்டிருந்த இன்டர்காம் சிணுங்கவே… சட்டென கனவு கலைந்து நடப்புக்கு வரலானாள் அழகுப் பாவை மதுராக்ஷி.
ரிசீவரை எடுத்துக் காதில் வைத்து… மென்குரலில், இவளும், “ஹலோ”என்றுரைக்க.. மறுமுனையில்… கட்டளையிடும் க்ஷத்திரிய ராஜனின் குரலொன்று ஊடுறுவி வந்தது அவளது காதுக்குள்.
ஓ…!!எனில்,வந்து சேர்ந்து விட்டானா? என்று உள்ளத்தில் சிறு துணுக்கம் எய்திப் பரவ.. மறுமுனையில் கேட்டது அவனது கம்பீரக்குரல்!!
“மதுராக்ஷி.. கம் டூ மை ரூம் இம்மிடீயட்ளி!!”என்று அவளுக்கு கட்டளையிட்டு விட்டு… அவளின் மறுபதிலுக்குக் கூட காத்திராமல்… அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.
அவளோ… வேண்டாவெறுப்பாக இன்டர்காமை வைத்ததும்.. மனதுக்குள்ளோ.. ‘இன்னைக்கு என்ன நடக்க காத்திருக்கோ?” என்று புலம்பிய வண்ணமே.. இழுத்து பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டே… திடநம்பிக்கையுடன் எழுந்தாள் மதுராக்ஷி.
மானசீகமாக கடவுளிடம், “இன்னைக்கு .. எதுவும் தப்பாய் நடக்கக் கூடாது” என்று மனத்திற்குள் பிரார்த்திக் கொண்டே… அவன் சொல்வதையெல்லாம் குறித்துக் கொள்ளும் எண்ணத்துடன்.. கையில் நோட்பேட் மற்றும் பேனா சகிதம்.. அவனது அறைக்குச் சென்றாள் மதுராக்ஷி.
‘அவள் ஜிம்மி… இன்றாவது அவனோடு வந்திருக்காதா? அவன் அழைத்து வந்திருக்க மாட்டானா?’… என்று ஏங்கியது அவள் மனம்.
ஏக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனது அறைக் கதவை தட்டி விட்டி, “எக்ஸ்க்யூஸ்மீ சார் .. மே ஐ கம் இன்?? ”என்று கேட்க… உள்ளுக்குள்ளிருந்து காற்றில் மிதந்து வந்தது கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலொன்று, “எஸ்.. கம்இன்”என்று!!
அவளும் நோட்பேட்டை.. மார்புக் கேடயம் போல நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டே.. பாதங்கள் பின்னிப் பிணைய அவளும்…அவனை நோக்கி எட்டுக்கள் எடுத்து வைத்தாள்.
அவனோ.. தன் முள்ளந்தண்டு கூனாமல்… தன் கோர்ட்டைக் கழற்றி… தானமர்ந்திருந்த சுழல்நாற்காலியின் விளிம்பில் போர்த்தி வைத்து விட்டு… கீபோர்டில் அழகாய் கத்தரித்து வெட்டப்பட்ட விரல்கள் நாடகமாட… கணினியின் மீதே தன் கவனம் முழுவதையும் பதித்திருந்தான் அவன்.
அவள் வந்தது உணர்ந்தாலும் கூட.. கணினியில் நின்றும் பார்வையை திருப்ப முடியாத வண்ணம்.. அத்தனை வலுவாகத் தான் அவனைக் கட்டிப் போட்டிருந்தது அவனது அலுவல்!!
அவன் கவனம் முழுவதும் கணினியில் இருப்பதறிந்து.. அது தான் சந்தர்ப்பமென்று எண்ணியபடி… கண்களை சுதந்திரமாக சுற்றுமுற்றும் சுழல விட்டு… ஜிம்மியைத் தான் கண்களாலேயே தேடினாள் மதுராக்ஷி .
தேடிக்களைத்த கண்கள்… அவளது செல்ல நாய்க்குட்டி ஜிம்மியைக் காணாது முகம் தொங்கிப் போய் சோர்ந்து… மீண்டும் அவனிடத்திலேயே வந்து நிற்க… அங்கே அவன் அவளையே.. குறுகுறுவென பார்த்து வைத்த பார்வையைக் கண்டு.. அசடு வழிந்தது மதுராக்ஷிக்கு.
இரு கைகளையும் கோர்த்து நின்று… அதன் மூலம் நாடியை தாங்கிப் பிடித்த வண்ணம்… கண்களில் கூரிய பார்வையுடன்.. அவன் இமையாமல் பார்த்து நிற்கும் பார்வை??
ஹப்பப்பா!! அப்பார்வையின் அர்த்தத்தை விடவும்.. அதன் வீரியம்.. மதுராக்ஷியைத் தாக்க… ஏதும் பேசாமல்…தலையைப் பட்டென்று குனித்துக் கொண்டு நின்றாள் அவள்.
அவனோ.. எதேர்ச்சையாக மடிக்கணினியில் நின்றும் விழிகளெடுத்து.. மதுராக்ஷி மீது பதித்தவன் தான்.. அவனால் தான் சொல்ல வந்ததை வாய் திறந்து பேசக் கூட முடியாமல் போக.. ஒரு சில நிமிடங்கள் அவளையே தான் வெறிக்க வெறிக்கப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் அஜய்தேவ்!!
தலையைக் குனித்துக் கொண்டிருந்த பெண்ணோ.. ‘என்னடா பேச்சைக் காணோம்?’ என்று மீண்டும் தலையை நிமிர்த்தியபடி அவனைப் பார்க்க.. அவனோ அப்போதும் வைத்த கண் வாங்காமல்… அவளையே… நேரங்களே கழிவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது மதுராக்ஷிக்கு.
இன்று அவளுடைய பாஸூக்கும் தான் என்னாயிற்று??
அவளது மொத்த உருவத்தையும் தன் விழிகளாலேயே சிறையெடுத்து.. மனதுக்குள் பூட்டி வைப்பது போல.. அஜய் பார்க்கும் பார்வைக்கும் தான் அர்த்தம் யாது??
அவள் தான் திருடி என்று அறிந்து கொண்டானா? அதனால் தான் இந்த ஓயாத பார்வையா என்று யோசித்தவளுக்கு… ஏசியிலும் வியர்க்கவாரம்பிக்க… பேசாப் பதுமையாக சமைந்து போனாள் அவள்.
ஆனால்.. அஜய்தேவுக்கோ… அவனுக்கு முதன் முதலாய் மதுராக்ஷி… என்றுமில்லாமல் இன்று.. சேலையில் வந்திருப்பது கண்டு.. சின்ன ஆச்சரியம் மிக.. லாவண்யம் கொட்டிக் கொழிக்கும் மங்கையின் விழிகளில் நின்றும் தன் விழிகளைப் பெயர்த்தெடுக்க முடியாமல் தான் நின்றான் அவன்.
இளமஞ்சள் நிற சேலைக்கு தோதாக அவள்.. கூந்தலுக்குச் சூடியிருந்த மல்லிகைச்சரத்தில் நின்றும் வந்த வாசனை வேறு.. அவனைக் கிறங்கடிக்க…
ஜாக்கெட்டினைத் தாண்டித் துருத்தித் தெரிந்த.. கொங்கைகளின் கூர்முனைகள்… அவனை சல்லடை சல்லடையாகத் துளைத்துக் கொண்டிருக்கலாயிற்று.
பளபளவென்றிருந்த… வெண்ணிறக் கழுத்து வளைவும்.. அதற்கு நன்றாகக் கீழே.. ஊளைச்சதைகள் ஏதுமற்றுத் தெரிந்த எலுமிச்சை நிற இடுப்பில் தடுமாறித் தான் போனான் அஜய்.
மதுராக்ஷி என்னும் சிறு பெண்ணின்.. ஆளை அசரடிக்கும் அழகு அவனை நிலைகுலைய வைத்தது
உள்ளே… நாடி, நரம்புகளெங்கும் புது இரத்தம் பாய்ந்தோட… சிந்தனை கலைந்தவன்… தன்னையும் மீறி.. அவளைக் கட்டிக் கொண்டு.. காதல் புரிய நாடும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நின்றான் அவன்.
ஒருவாறு குரலை செருமி.. தன் டையைத் தழற்றி நின்றவனோ… அவளை நோக்கி, கறாரான குரலில், “நீ உன் ரூமுக்கு போ… நீ என்ன என்ன செய்யணும்னு.. உன் ஜீமெயிலுக்கு… மெயில் அனுப்பறேன்… அனுப்பும் வேலையெல்லாம் இன்னைக்கே முடிச்சாகணும்..காட் இட்?” என கட்டளையிடும் அதிகாரக் குரலில் அழுத்திக் கூறியவன்..அவள் பதிலுக்கு நிதானித்து நின்றானா என்ன?
இல்லையே??
இடைவெளியே இல்லாமல்…. “யூ கேன் கோ நவ்” என்றான் குரலில் சிறிதும் பிசிறு தட்டாமல்.
ஏன்?? எத்தனையோ அழகிகளை அவன் கடந்து வந்திருந்த போதும்… இவள் முன்னிலையில்.. அதுவும் சேலையில் வந்திருப்பதைக் கண்டு.. தன்னுணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து நிற்பதுவும் ஏன்??
மதுராக்ஷியும் ஒப்புக்குச் சப்பாணியாக, “ஓகே சார்”ன்று முணுமுணுத்து விட்டு வெளியே வந்து.. அவனறை விட்டு வெளியே வந்ததும் மீண்டுமொரு பெருமூச்செறிந்து தான் நின்றாள்.
‘மெயில் செக் பண்ணு’என்பதை… அவன்.. இன்டர்காமிலேயே கூறியிருக்கலாமே??
இதற்கு ஒர் அழைப்பு வேறு!! அலைக்கழிப்பு வேறு!!
சேலையில்.. இந்திரலோகத்து மேனகையாக மிளிரும் அவள் யௌவனத்தில்.. உந்தப்பட்டவனுக்கு.. எங்கே அவனையும் மீறி.. மதுராவிடம்.. ஏடாகூடாமாக ஏதாவது நடந்து கொண்டு விடுவோமோ என்ற பயம் இயல்பாய் அவனுள் ஊற்றெடுக்கத் தான் செய்தது.
அப்படியேதும் நடந்து விடாமல் தான்.. வந்த விடயத்தை விடுத்து… அவசர அவசரமாய்க் குரலை உயர்த்திப் பேசிவிட்டு..அவளது மறுபதில் கூட அறிய நாடாமல்.. அவளை அங்கிருந்தும் அனுப்பி வைத்தான் அஜய்!!
அவள் அங்கிருந்து நகர்ந்ததும்…அவள் விட்டுச் சென்ற மல்லிப்பூ வாசனை..அவனது மோகக் கிறுக்கை இன்னும் இன்னும் அதிகரிக்க… அவன் சமநிலையடைய சிறிது நேரம் தேவைப்பட்டது.
அவள் சென்றதும் தன் பாரிய ஜன்னல்களைத் திறந்து விட்டவன்… ஆழ ஆழமாக மூச்செடுத்தவாறே… உடலின் தாப உஷ்ணத்தை சமன்படுத்த.. படாதபாடு பட்டுப் போனான்.
எல்லாம் அவளாலே.. அவளழகாலே!!
இது எதுவுமே அறியாதவளோ.. அவன் பேசியதை சீரியஸாக எடுத்துக் கொண்டு… எல்லா வேலைகளையும் இன்றே முடித்து விட அரும்பெரும் முயற்சிகளைத் தான் எடுக்கவாரம்பித்தாள்.
சிறு பிழை நேரிட்டாலும்.. அவன் தன்னை கைமா போட்டு விடுவான் என்று உள்ளுக்குள் அச்சமெடுக்க.. கடுங்கவனமாகத் தான்.. அவன் இட்ட பணிகளையெல்லாம் செய்யலானாள் மதுராக்ஷி.
ஓரிரு மணித்தியாலங்கள்… கடுங்கவனமாக அலுவலிலேயே அவள் மூழ்கியிருந்த வேளை.. மீண்டும் இன்டர்காம் ஒலிக்க… எடுத்துப் பார்த்த போது அவனே தான்!!
மறுமுனையிலிருந்தவனோ.. அதே மாறாத கறார்க்குரலில், “மதுரா… கம் குயிக்”என்று இரு வார்த்தைகளோடு… பேச்சினை முடித்துக் கொண்டவன்.. அவளைத் தன்னறைக்கு வருமாறு கூற… அவளோ கிலி கொண்டு தான் நின்றாள்.
முடித்த வேலைகள் பாதியிருக்க.. முடிக்காத வேலைகள் சரிபாதியிருக்க… அவளாலும் அவனருகே சென்று வாங்கிக் கட்டிக் கொள்ளவும் தான் முடியுமா??
பதறிப் பதறி நின்றவளோ.. முடித்த வேலைகளையெல்லாம் ஒரு தாளில்.. ஒன்று, இரண்டு என வரிசையாக இலக்கமிட்டு… குறித்துக் கொண்டு தன் நாற்காலியை விட்டும் எழ முற்பட்ட போது… கொடுமையே!!
மீண்டுமொலித்தது இன்டர்காம்!!
வேறு யார்?? இந்த முறையும் அந்த ஹிட்லரே தான்!!
இம்முனையிலிருந்தவளிடம், “மதுரா… வேலைகள் எல்லாத்தையும்… நீ… பென்டிரைவில் சேவ் பண்ணிட்டு வந்துரு ஓகே…அதுவும் வித் இன் ஃபைவ் மினிட்ஸ்”என்று காரசாரமான குரலில் தான் கட்டளையிட்டு விட்டு… அவள் வாய் திறக்கு முன்னம் அழைப்பைத் துண்டித்திருந்தான் இரண்டாம் முறையாகவும்.
எதே??? இன்னும் ஐந்து நிமிடங்களில் வேலைகள் அனைத்தையும்..பென்டிரைவில் சேமிப்பதா??
கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை அவளுக்கு!! பாதி வேலைகள் தான் முடித்திருப்பவள் எப்படி.. அனைத்து வேலைகளையும் சேமிக்கவும் கூடும்??
மதுராக்ஷிக்குள்.. அவனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள… பாதி வேலைகளை படபடவென பென்டிரைவில் சேமித்துக் கொண்டு.. அவசர அவசரமாக… நாற்காலியை விட்டு எழுந்த போது தான்… அவ் அசம்பாவிதம் நிகழ்ந்தேறியது அவளுக்குள்!!
பதற்றத்துடன் அவள் பட்டென்று எழும்போது.. இடையில் சொருகியிருந்த சேலை கொசுவத்தின் நுனி.. தரையில் தேய்ந்து கொண்டிருக்க.. … தவறுதலாக… எழும் போது அதில் கால்கள் வைத்து மிதித்து விட்டிருந்தாள் மதுராக்ஷி.
அது தெரியாமல்… அவளும் படக்கென்று எழுந்து நின்ற போது.. அவளது சேலை கொசுவம் அவ்வளவும் சரசரவென்று…கழன்று…கீழே விழ முனைய.. கொசுவம் முற்றிலும் கீழே விழாமல் இரு கைகளாலும்… பட்டென்று பிடித்து ஏந்திக் கொண்டு திருதிருவென விழித்து நின்றாள் மதுராக்ஷி.
ஐயோ இப்படியும் இக்கட்டான நிலையா??
மாடர்ன் யுவதியாகவே வளர்ந்து நிற்கும் பெண்ணுக்கும் சேலைக்கட்ட தெரியாதே?
இன்று சேலைக்கட்டிவிட்ட தாயும் தான்.. இப்போது கட்டிவிட அருகிலும் இல்லை!!
அலுவலகத்தில் தெரிந்த யாரையும் உதவிக்கு அழைக்கலாம் என்றாலும்… வெளியே செல்ல வேண்டுமே??
அவளது இன்டர்காம் சேவை வேறு… அவனுக்கு மாத்திரமே செல்லக்கூடியதாக இருக்க.. அலுவலகத்தில் வேலை பார்க்கும் பிறரை அழைத்து.. வரச் சொல்லவும் முடியாதே?
வெளியே இப்படியே செல்லவும் முடியாதே?? மானம் கப்பலேறி விடுமே??
உண்மையில் இந்நொடி அந்தரங்கக் காரியதரிசி தேவைப்படுவது அந்த ஹிட்லருக்கு அல்ல!! குறும்புக்காரி மதுராக்ஷிக்கு!!
கையில் கொசுவத்தை பிடித்துக் கொண்டு.. வழி தவறிப் போன பிஞ்சுக்குழந்தை போல… என்ன செய்வதென்று அவள் வழிதெரியாமல் தவித்து நின்றிருந்த போது…
எதிர்பாராமல் அறைக்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டு.. விழிகள் அகலமாக விரிய விதிர் விதிர்த்துத் தான் போனாள் அவள்.
அங்கே.. தன் ஆறடி உயரத்துக்குமாக.. கதவு வழியாக உட்புகுந்து நின்றவனோ,சற்றே காண்டான குரலில், “எவ்ளோ நேரமாச்சு உன்ன வரச்சொல்லி.. இன்னும் என்ன பண்ணிட்டிருக்…”என்றவண்ணம் வந்தவன்… அப்போது தான்… விழிகள் பிதுங்க… அவள்.. கொசுவத்தை கையிலேந்திய வண்ணம்…. திகைத்து சிலையாய் சமைந்து நின்றிருப்பதுவும் புரிந்தது.
அவளின் உள்பாவாடை முதற்கொண்டு விளங்க.. அதன் வழியாக உள்ளே வளவளத்த யானைத்தந்தம் போன்ற அவளது தொடைகளும் கூட… வரிவடிவமாகப் புலனானது அவன் கண்களுக்கு.
அவளோ திக்குமுக்காடிப் போய்.. திக்கித் திணறும் குரலில்.. திரும்பி நின்று கொள்ளக் கூட சிந்தயற்று.. மூளை மழுங்கிப் போனவளாக நின்றிருந்தவளோ,
“ஸா.. ஸா.. ரி.. சார்..”என்று எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு.. இன்னும் வேலையை முடிக்காததால் திட்டுவானோ என்ற அச்சம் மாத்திரமே!!
அவனோ… அவளின் கோலத்தையும்… வெளேரென்று தெரியும் அவளது இடையையும் லஜ்ஜையேயற்று தன் ஏகபோக பொருள் என்றெண்ணிக் கொண்டவனாக…
வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டே… அழுத்தமான காலெட்டுக்கள் எடுத்து வைத்து அவளிடம் தான் வரலானான் அஜய்.
அவளருகே.. அவளது கூர்முனை மார்புகளோடு இக்கடா.. அக்கடா என்று மோதும் நிலையில் அவளோடு உரசியும், உரசாமலும் வந்து நின்றவனோ,
“ஒரு சேரி எப்படி கட்டணும்னு தெரியாதா…?”என்று கேட்க.. அவளின் இமைகளோ அச்சத்தில் படபடவென அடித்துக் கொள்ளலாயிற்று.
தன்னைக் கண்டு அச்சப்படுபவன்.. சட்டென தன் முத்துமூரல்கள் காட்டி புன்னகைத்த புன்னகை!! அது அழகிய மோகனப் புன்னகை!!
அதைப் பார்த்து அவள் ஜர்க்காகி நின்றிருந்த வேளை.. அவள் கையில் குவித்துப் பிடித்திருந்த சேலைக்கொசுவத்தை எல்லாம் தன் கைகளில்… அவள் மறுக்க மறுக்க இழுத்து ஏந்திக் கொண்டான் அவன்.
அவளோ பதறிப் போய்… குரலே எழும்பாமல், “ஐய்யோ… என்ன பண்றீங்..”என்று கேட்டவளின் மொழிகள் யாவும்… அவன் அவளை நிமிர்ந்து பார்த்த வைத்த ஒற்றை ஈர்ப்புப் பார்வையில்.. அத்தனையும் நின்று தான் போனது.
அவனோ… அவளது இடையையே… உள்ளுக்குள் உன்மத்தம் ஏற ஏறப் பார்த்த வண்ணம் நின்றிருந்தவன், “சேரி கட்டறது சிம்பிள் தான்.. ஆனா சேரிக்கு அழகு சேர்க்கறதே.. இந்த ப்ரீள்ஸ் தான்…”என்றவனின் முன்னால்,
தன் மெல்லிய ஒற்றைக்குழி தொப்புளைக் காட்டிக் கொண்டு நின்றிருக்கும் விதத்தில் நாணம் வந்து கொள்ளை கொண்டது அவளை!!
ஓர் அந்நிய ஆடவன் முன்னிலையில் அவள் நின்றிருக்கும் நிலையில்… கோலத்தில் பெண்ணவளுக்கு கோபமும், எரிச்சலும் அவமானமும் அவளைப் பிடுங்கித் தின்பது தானே வழமை??
ஆனால்.. அவன் கண்ணோடு தன் கண்களை நோக்க நாணங்கொண்டு… அவன் கைகளில் தவழும் சேலைக்கொசுவத்தைப் பார்த்த வண்ணமே ஏன் நின்றிருக்கிறாள்??
அதன் காரணம்… அறிய முடியாமல் தான்… அவனருகாமையில் சிக்குண்டு தடுமாறி நின்று போனாள் அவள்!!
ஆனால் அவனோ… அவன் கைகளில் இருக்கும் சேலையை.. இரு விரல்களின் இடைவெளியில் பிடித்து..இப்புறமும்,அப்புறமும் மடித்தவனாக,
அவளது தொப்புளைப் பார்த்தவண்ணமே,மோகனக் குரலில், “இப்படி.. இப்படி.. இப்படி… இப்படி தான் மடிக்கணும்”என்று மோனக்கிறுக்கத்துடன் சேலையை மடித்து..
கொசுவத்தை அத்தனை அழகாய் ஒரே கோட்டில் நேர்ப்படுத்தியவன் சொல்ல.. உள்ளுக்குள் ஏதோ… பனிமலை இதயத்தில் நின்றும் சறுக்குவது போல உணர்ந்தாள் அவள்.
அவனோ… ஹஸ்கி குரலில், “இதோ…இப்டி மாட்டியதும்… எல்லாம் பெர்பெக்ட்”என்றவனாக… சேலைக்கொசுவத்தை அவனது உள்பாவாடையில் சொருக..
அவனது ஒற்றைச் சுண்டுவிரல் அவளது தொப்புள்க்குழிக்குள் மீண்டு நிமிண்டு… அவளது வயிற்றை பட்டென உள்ளே எக்கச் செய்தது.
அவனது இதர மூன்று விரல்களும்.. சேலைக்கொசுவத்தோடு.. அவளது இடைதழுவி.. அடிவயிற்றினை தீண்டி மீள… தொண்டைக்குழியில் சுவாசம் சிக்குண்டு மீள… தடுமாறிப் போய்… விழிகள் சொக்க… மேசையை கப்பென்று பிடித்துக் கொண்டாள் மதுராக்ஷி.
தன் ஒற்றைத் தீண்டலில் துவளும் தன்னவளையே.. சிறு புன்னகை இழையோட பார்த்தவன்.. “இப்போ ஓகேல்ல?? எதுக்கும் கொசுவம் கழன்றுராம இருக்க.. சேஃப்டி பின் குத்திக்க மதுரா…”என்று இலவச ஆலோசனையைக் கொடுத்து விட்டு… அங்கிருந்தும் சென்று மறைய….
அவன் ஸ்பரிசத்தின் தடுமாற்றம்.. தன்னுடலை விட்டும் போகவே… சிலபல நிமிடங்கள்… பதுமையாய் சமைந்து நின்றாள் அவள்.
பின் அவன் சொன்னது போலவே கொசுவம் கழன்றிராத வண்ணம்… சேப்ட்டி பின்னைக் குத்தி விட்டு… அவன் கட்டளையிட்டது போல.. பென்ட்ரைவினை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்றாள் மதுராக்ஷி.
அங்கே சுற்றுமுற்றும் சுழன்று சுழன்று அவனைத் தேடியும் அங்கே அவனிருக்கவில்லை.
எங்கே சென்றான் அவன்??
உண்மையில், பெண்ணவளுக்கே அவனின் தீண்டல்… இத்தனை பெரிய தள்ளாட்டத்தைக் கொடுக்க.. வலிய வந்து தீண்டிய அவனது நிலைமை??
தன் தாப உஷ்ணங்களை அடக்க.. சுத்தமான காற்று தேவைப்படவே.. விறுவிறுவென கார்டனுக்குத் தான் நடந்து போயிருந்தான் அவன்.
அங்கே அவனில்லாமல்… நின்றிருந்தவளின் கண்கள் பதிந்தது.. அவனது மேசையில்… அழகிய கண்ணாடியிலான ஓர் வெள்ளைக்காகிதமொன்று.. நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பேப்பர்வெயிட்டின் மீது.
காற்றுக்கு படபடவென ஆடிக் கொண்டிருந்த காகிதத்தில்… அவனின் தமிழ்க் கையெழுத்துக்களிருப்பது புரிய.. ‘அதில் என்ன இருக்கிறது?’என்று அறிய வேண்டுமென்ற ஆவல் தூண்டப்பட்டது அவளுக்குள்.
அவள் மெல்ல மேசையில் அருகில் சென்று சுற்றுமுற்றும் திரும்பி.. யாராவது பார்க்கிறார்களா என்று திருட்டு விழி விழித்துப் பார்த்து விட்டு…அப்படி யாருமில்லை என்பதை உறுதி செய்த பின்பு… அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்க்கலானாள் தன் கரங்களுள்!!
எந்நேரமும் சிரிக்காமல்.. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வளைய வரும் ஹிட்லருக்குள்ளும் தான்… இப்படியொரு காதல் இராக்ஷசனா என்று எண்ணும் வகையில் அமைந்திருந்தது காகிதத்திலிருந்த கவிதையொன்று!!
கவிதையா?? ஆம், ஹிட்லரே தன் கைப்பட உணர்ச்சி மல்க மல்க எழுதியிருக்கும் கவிதை தானது!!
எனில், .. கல்லுக்கும் ஈரமுண்டு என்பார்களே.. அது அவன் விஷயத்தில் சரியாகித் தான் போனது.
இதோ அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த கவிதையோ.. கீழ்வருவன தான்!!
“உன் அன்புக்கு அடிமையாகி,
ஆசை தீரா காதலுடன்,
மோகம் குறையா காமத்துடன்..
ஆயுள் முழுவதும் உன் கரம் பற்றி
வாழ்ந்திட ஆசையடி எனக்கு” என்று எழுதப்பட்டிருந்த கவிதையை நயக்கும் குரலில் வாசித்தவளுக்கு… மனதோடு சிறு வலி அவளையுமறியாமல் பிறக்கத் தான் செய்தது.
தன்னோடு ஒட்டி நின்று சேலை அணிவித்தவனுக்கும், வேற்றொரு பெண்ணின் மீது காதலா?? என்ற வருத்தம் தானது!!
சேலை கழன்று நின்றவளுக்கு… பாலின பேதம் காட்டாமல்… உதவி செய்தவனின் உதவியை… தான் கீழ்த்தரமான எண்ணங்கொண்டு.. ஆராயக்கூடாது என்றுதோன்ற அவன் காதலுக்காக அடுத்த விநாடியே இன்பம் கொண்டாள் அவள்.
ஆம், பல ப்ரோபசனல் சாரி அணிவிக்கும் ஆடையாளர்களில் பல ஆண்கள் இருப்பதில்லையா?? அது போலத் தான் அவனும்.. ஆண், பெண் பாகுபாடு பாராது உதவினான் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அவள்.
இதழ்கள் முறுவலிக்க, “வாவ்.. இந்த ஹிட்லருக்குள்ள ஒரு வைரமுத்து ஒழிஞ்சிட்டிருக்கறது… இதுவரை தெரியாமல் போச்சே…”என்று உச்சுக் கொட்டியவளாக எண்ணிக் கொண்டிருந்த வேளை..
திடீரென்று கதவின் பிடி.. திருகப்படுவதை அறிந்தவள் விரைவாகச் செயற்பட்டு காகிதத்தை.. அது முன்பிருந்த இடத்திலேயே வைத்தவள்… அவனை புன்னகை முகமாகத் தான் வரவேற்கத் தயாரானாள்.
அறைக்குள் நுழைந்ததுமே.. அவளைக் கண்டதும், புருவமத்தியில் முடிச்சுக்கள் விழ… “வாட்?? ”என்று அவள் அங்கு வந்து நிற்பதற்கான காரணம் தான் கேட்டான் அவன்.
அவளும்… மெல்லிய குரலில், “சார்.. பென்டிரைவ்..”என்ற வண்ணம் அதனை நீட்ட… அவனும் எதுவுமே சொல்லாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பெற்றுக்கொள்ள.. இவளும் தயங்கித் தயங்கி அக்கேள்வியைக் கேட்டாள்.
“சார்.. நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைப்பீங்களா…?”என்று பீடிகையுடன் ஆரம்பித்தவளுக்கு.. ‘நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?’ என்று கேட்க ஆசை தான்.
பெண்ணின் மனத்தினை அறியாத நாசிசவாதியோ, “நன் ஆப் யுவர் பிஸினஸ்” என்று முகத்திலடித்தாற் போல திட்டிவிட்டால்…அவமானத்தில் கன்றிப் போன முகத்தை… எங்கே தூக்கி வைத்துக் கொள்வாள் அவளும்??
அதனால், அவன் தன் முகத்தையே பார்த்த வண்ணம்.. திடமான குரலில், “என்ன கேட்கணும்?” என்று கேட்டு விட்டு…தன் முகத்தையே குறுகுறுவென பார்த்திருப்பவனிடம் என்ன சொல்லித் தான் சமாளிப்பது??
திருதிருவென விழித்தவாறே… சமாளிக்கும் குரலில், “ஜி.. ஜிம்மி. எப்படி சார் இருக்கு.. இன்னைக்கு ஏன் சார் கூட்டி வரல…?”என்று பட்டென்று வேறு விஷயத்தைப் பற்றிக் கேட்டுவிட்டாள்.
அவன் அதற்கு சொன்ன பதில்!??அவளையும் கூட மயிர்களையெல்லாம் கூச்செறியத்தான் வைத்தது.
அவனோ சின்ன ஆசுவாசதுடன்… “ஓ.. அதுவா. நான் இல்லாத நேரத்துல அந்தத் திருடி.. வந்து… உன் ஜிம்மியை தூக்கிட்டுப்போக வந்தா.. கையும் களவுமா பிடிக்கலாம்னு தான்… அத வீட்லயே விட்டுட்டு வந்திருக்கேன்..நான் வீட்டில இருக்கற நேரத்தை விட.. இல்லாத நேரம் தான் காவல் ஜாஸ்தி.”என்று சொல்ல…. அவனது பதில் … அவளைச் சற்று மழுங்கடிக்க வைத்தது.
அன்று நடந்தது கார் திருட்டு முயற்சி என்றும், காரைத் திருட வந்த திருடியே தான் என்றும் முடிவெடுத்து விட்டவனை..என்ன சொல்லி தான் மனம் மாற்ற!!
இதற்கு பேசாமல் ஜிம்மியைப் பற்றிக் கேட்கமாலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது இவளுக்கு.
மோகனம்-14
அன்று சாயங்காலம் நேரம்… அவளது செல்லுக்கு அழைப்பெடுத்திருந்த தோழி நிரோஷனாவோ… முக்கியமான தகவலொன்றைத் தான் மதுராக்ஷியின் காதுகளில் எத்திவைக்க நாடினாள்.
“மது..இன்னைக்கு ஈவ்னிங் ஃபைவ்க்கு.. நம்ம கேம்பஸ் பாஸ்ட் பியூபிள்ஸ் கெட்டுகெதர் பார்ட்டி… வைச்சிருக்காங்கடி.. அதுவும் ஸ்பெஷலா.. பிஸினஸ் மேனேஜ்மென்ட் பேகல்ட்டி..” என்று அவளருமை நிரோஷா… அழைப்பெடுத்து.. .
அவர்கள் பயின்ற கல்லூரியில். பழைய மாணவர்களின் மன்றமொன்று இன்று இடம்பெறுவதாகத் தான் கூறி அழைத்திருக்கிறாள்.
இம்முனையில் நின்றிருந்த நம் நாயகி மதுராக்ஷியோ.. அலுவலகத்தில் நின்றிருப்பதால்.. அவ்விழாவுக்கு போகக் கிடைக்குமா??கிடைக்காதா??என்பது போல யோசித்துக் கொண்டே அமைதியாக நின்றிருக்கலானாள்.
மறுமுனையிலிருந்த நிரோ தான் பொறுமையிழந்து.. நாயகியிடம், “ஏன்ட்டீ.. சைலன்ட்டா இருக்கே.. ஏதாவது பேசு” என்று பொறுமை பறந்து போன குரலில் படபடப்பாகத் தான் கேட்டாள் அவள்.
ஆனால் குறும்புக்காரியான மதுராக்ஷியோ… அவ் ஒன்றுகூடலுக்கு தன்னால் செல்ல முடியுமா? முடியாதா என மனக்கணக்கு போட்டுக்கொண்டே முணுமுணுக்கலானாள் அவள்.
நிரோஷனாவிற்குக் கேட்காத குரலில், தனக்குத் தானே உரையாற்றும் குரலில்,
‘இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன்.. எப்டியும் ஆபீஸ் முடிய ஐஞ்சர ஆகிரும்…. அப்படியே காலேஜ் போறதும்னாலும்… ஒன் அன்ட் ஹாப் அன் ஹவர் பிடிக்கும்.. அப்போ அங்கே போய் சேரும் போது.. ஆறரை ஆகிரும்.. பாதிநேரத்தில் போய் என்ன செய்வது? அதனால் போகாமலிருப்பதே நல்லது’ என்று முடிவு செய்து கொண்டாள் மதுராக்ஷி.
ஆயினும், அங்கு சென்றால் பழைய நண்பர்களை.. பழைய ஞாபகங்களை… அவர்களோடு அடித்த அரட்டைகளை.. கலகலப்புக்களை எல்லாம்.. மீண்டும் மீட்டிப் பார்க்கும் வாய்ப்புமல்லவா கிடைக்கும்??
மனதோடு இதமான இளையராஜா பாடல் கேட்கும் போல இருந்தது அவளுக்கு.
இருப்பினும் அலுவலகத்தை வைத்துக் கொண்டு… ஒன்று கூடலுக்குச் செல்வது என்பது முடிகிற காரியமல்ல.. என்றெண்ணியவளோ…
தன் மறுப்பை தோழியிடம் சொல்லும் முகமாக,தேய்ந்து போன சோகக்குரலில்,
“நோ.. நான் வரல நிரோ.. நான் இப்போ ஆபீஸ்ல இருக்கே.. வர்றது எப்படியும் கஷ்டம்.. நீ வேணும்னா போய்ட்டு வா”என்று கூற.. மறுமுனையிலிருந்தவளோ.. அதற்கு இணங்கவில்லை.
விடாப்பிடியாக ஒற்றைக்காலில் நின்ற தோழி நிரோவோ, “ஹேய்… நீ.. உன் பாஸ்கிட்ட கொஞ்சம் பர்மிஷன் கேட்டுப்பாரேன்.. ஒருவேளை அவர்… ஓகே சொன்னாலும் சொல்லலாம்… ப்ளீஸ்டி.. எனக்காக ஒரு தரம் கேட்டுப்பாரேன்… எப்படியோ நீ வருவேன்ற நம்பிக்கையில் தான் நான் காலேஜ் போறேன்… எப்படியோ வந்துடுடீ..ப்ளீஸ் ப்ளீஈஸ் ப்ளீஈஈஸ்” என்று.. ஆயிரத்தெட்டு ‘ப்ளீஸ்’கள் போட்டு… கூறிவிட்டு… மதுராக்ஷியின் சம்மதத்துக்காக் கூட காத்திராமல்.. அழைப்பைத் துண்டித்தும் விட்டிருந்தாள்.
மெல்ல தன் செல்லில் மணி பார்த்த போது.. அது தற்போது நேரம் சரியாக மாலை நான்கு மணி என்று காட்டிக் கொண்டிருந்தது.
அவனிடம், தற்போது அனுமதி வாங்கிக் கொண்டு கிளம்பினால் தான்… ஐந்தரை மணிக்கு சரியாக… ஒன்றுகூடல் இடம்பெறும் போது காலேஜில் இருக்கலாம் என்று சிந்தித்தவளோ…
சிறிதே தைரியத்தை மனத்திற்குள் இழுத்துப் பிடித்துக் கொண்டு…விடுப்பு கேட்பதற்காக.. தயங்கித் தயங்கி அவனது அறைக்குச் சென்றாள் மதுராக்ஷி.
அவனது அறைக்கதவைத் தட்டித் திறந்து எட்டிப் பார்த்தவனாக, “எக்ஸ்க்யூஸ்மீ சார்… மே ஐ கம் இன்..?”என்று அவள் அனுமதி கேட்க.. உள்ளே கணினியின் முன் அமர்ந்திருந்தவனின் ஏகாந்தக் குரல்,
“உள்ளே வா.. மதுரா” என்றது மிகமிக உறுதியாக.
அவளும் தயங்கித் தயங்கித் தடுமாறி அவனிடம் சென்று நின்றவள்.. குரலை இலேசாக செருகிய வண்ணம்,
“சார்.. இன்னைக்கு ஈவ்னிங் ஃபைவ் தர்ட்டிக்கு என் காலேஜ்…. நான் படிச்ச….****. காலேஜில்.. ஒரு பங்க்ஷன்.. அதுக்கு இப்போ கிளம்பினால் தான் டைமுக்கு போக முடியும்.. வித் யுவர் பர்மிஷன்.. நான். உஉ.. ங்க அனுமதி இருந்தால் போய் வரலாமா??”என்று ஒருவாறு இதோ… தன் காரியத்தைக் கேட்டே விட்டாள் அவள்.
தன்னுடைய சுற்றும் நவீனரக நாற்காலியின் பின் மாட்டப்பட்டிருந்த… அவனது கோர்ட்டை எடுத்து வக்கீல் போடுவது போல.. முன்னங்கையில் போட்டுக் கொண்டேயெழுந்தவனோ..
தன்னுடைய கூலிங்கிளாஸை எடுத்து மாட்டிக் கொண்டு அவன் வெளியே செல்ல முற்பட.. அவளுக்கும் தான் பற்றிக் கொண்டு வந்தது.
‘இங்கே ஒரு மனுஷி… தவிக்க தவிக்க நின்று.. அவனிடம் அனுமதி கேட்டு நிற்பது அவனுக்கு புரிகிறதா? இல்லையா?”என்று எரிச்சல் கூந்தலாக வந்தது அவளுக்கு.
இருப்பினும் அவனது அந்தரங்கக் காரியதரிசி ஆயிற்றே!! அவனும்.. இவளது முதலாளி ஆயிற்றே??
அதனால் தன் போபத்தின் சிறு அளவைக் கூட காட்டாமல், அவளும் பின்னாலேயே நாய்க்குட்டி போல..வேகவேகமாக எட்டுக்கள் எடுத்து வைத்து கிட்டத்தட்ட ஓடியவளோ,
அவன் புறமுதுகைப் பார்த்தவாறே“ சார்.. சார்” என்றவண்ணமே அவனது முன்னாடி சென்று நின்று… வழியை மறித்து தடுத்து நிறுத்தினாள் மதுராக்ஷி.
தானணிந்திருந்த கூலர்ஸின் வழியாக.. சேலையணிந்து அவனை கிக்கேற்றிக் கொண்டு நிற்பவளை நோக்கியவள், அவளைத் திரும்பிப் பார்த்து
“அங்கே தான் நானும்.. போறேன்… வா.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்..”என்று கூற.. திகைப்பூண்டு என்னும் திகைப்பு தரும் செடியை மிதித்தாற் போல.. ஒரு சில செக்கன்கள் ஏதும் கூற முடியாதளவுக்கு அதிர்ந்து தான் போனாள் அவள்.
என்ன??.. இவனும் அவள் காலேஜ் தான் செல்கிறானா..?? எனில், அவளது முதலாளியான அஜய்தேவ் சக்கரவர்த்தியும் கூட… அவள் படித்த அதே பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனா…??
‘நம்ப முடியவில்லையே…?? அல்லது பொய் சொல்கிறானா..??” என்றெண்ணியவள்.. அதனை வெளிக்காட்டாமல்.. அவனிடம் தத்தளிக்கும் குரலில், “இ.. இ.. இல்ல சார். நானே போய்க்கிறேன்.. நீங்க பர்மிஷன் தந்தா மட்டும் போதும்” என்று கூற… அவனா அதை ஏற்கக் கூடும்??
கூலிங்கிளாஸை.. மூக்கின் மேல் நுனியில் கைவைத்து சற்றே கீழே இறக்கியவன்… அவளையே கூர்ந்து நோக்கியவளாக, “ எதுக்கு?? பர்மிஷன் தந்ததும்.. என்னை ஏமாத்திட்டு… மறுபடியும் தியேட்டருக்கு போறதுக்கா?? டாக்டரைப் பார்க்க போறேன்னு சொல்லிட்டு… தியேட்டர் போனவள் தானே நீ…இன்னைக்கும் என்னை ஏமாத்திட்டு வேறெங்கும் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்?? உன்னை நம்ப முடியாது மிஸ். மதுராக்ஷி…”என்று அவள் அழகையே….
இமைக்கொட்டாமல் பார்த்து அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டே கேட்க… அவள் பெயரை முழுமையாக அவன் உச்சரித்த விதம் கூட… கொள்ளை லாவகமே.
தன்வினை தன்னைச்சுடும் என்று சும்மாவா சொன்னார்கள்..??
அன்று பொய் சொல்லி விட்டு தியேட்டரிற்குச் சென்று அவனிடம் கையும் களவுமாக பிடிப்பட்டவளாயிற்றே அவள்.
அது போல மீண்டும் பொய் சொல்லி விட்டு.. ஊர் சுற்ற செல்லப் போகிறாள்.. என்று நினைத்துக் கொண்டு தன்னை கீழ்மையாக நோக்கியவனை… உள்ளுக்குள் உரோஷத்தீ மூள.. பட்டென்று நிமிர்ந்து நோக்கினாள் மதுராக்ஷி.
இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.. “இல்லை சார் .. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. நான்.. நிஜமாலுமே என் காலேஜூக்கு தான் போகப் போறேன்…”என்று கூறிக் கொண்டே அவன் பின்னால் ஓட… அவனோ எதுவும் சொல்லாது கதவைத் திறந்து வெளியே வந்தான்.
அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே தன் பேன்ட் பாக்கெட்டில் ஒற்றைக் கையினை இட்ட வண்ணமே… சிம்ம நடை நடந்து அக்காரிடாரை கடந்து கொண்டிருந்தவனோ,
“. ஐ கான்ட் ட்ரஸ்ட் யூ.. நீ என்னோட வாரதுன்னா வா.. இல்லாட்டி நோ பர்மிஷன்.. பேசாம நீ இங்கேயே இருந்து பேலன்ஸ் வேலையெல்லாம் பார்த்துட்டு.. ஆபீஸ் விட்ற டைமுக்கு.. நீ… வீட்டுக்குப் போகலாம்..”என்று முகத்தில் அடித்தது போலக் கூறியவன்… விறுவிறுவென நடந்து லிப்ட்டுக்குள் புகுந்து கொள்ளவும் செய்தான்.
அவளும் ஓடியோடிச் சென்று லிப்ட் மூடிக் கொள்ளும் சமயத்தில் கொஞ்சமிருந்த இடைவெளியில், அவள் மெல்லிய உடலைப் பூனை போல் வளைத்துப் புகுந்து கொண்டு..
தன் கொங்கைகளிரண்டும் ஏறியிறங்க மூசுமூசு என மூச்சு வாங்கிக் கொண்டே தான் நிற்கலானாள்.
லிப்ட்டினுள்…வைத்து..கையிலிருந்த கோர்ட்டைப் போட்டவன் அவளை நோக்கி, ‘என்ன செய்வதாய் இனி உத்தேசம்?’ என்பது போல.. பார்வை பார்த்து வைத்தான் அவளை.
அவனோடு செல்ல ஒருதுளி கூட பிடித்தம் காட்டாது நின்றவளோ, அவனின் கல்மனதையும் மாற்ற நாடி, “சார் நீங்க என்னை நம்பலேன்னா.. நான் ஸ்கூட்டியில்… உங்க கார் பின்னாடியே வந்துட்றேன்… சார்… எப்டி ஐடியா??” என்று பெரிய நாசா விண்வெளி ஐடியாவைச் சொன்னது போல..
முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு எரியும் வண்ணம் அத்தனை பிரகாசமாகக் கேட்டாள் அவள்!!
அவனோ.. அவளது விழிகள் காட்டும் உணர்ச்சி ஜாலங்களில் மனம் லயித்தாலும் கூட.. அதனைக் கண்டுகொள்ளாதவன் போல..
கட் அன்ட் ஸ்ட்ரெய்ட்டாக, “உன்னை நான் நம்பவே முடியாது மதுராக்ஷி… என்னை ஏமாத்திட்டு நீ ஓடினாலும் ஓடலாம்.. அதனால.. என்னோடு வர்றதுன்னா… வா… இல்லை… உனக்கு நோ மோர் ஹாலிடேஸ்”. என்று சொல்லி விட்டு நிமிர்ந்த நேரமும்,
சரியாகக் கீழ்த்தளத்தில்… வந்து நின்ற லிப்ட் திறந்து கொண்ட நேரமும் ஒன்று!!
அவளுக்காகவோ.. அவள் பதிலுக்காகவே ஒரு நிமிடநொடி நேரம் கூடக் காத்திராமல்.. அதனூடாக இறங்கி …. கீழ்த்தளத்தில்.. தடதடவென நடக்கவாரம்பித்தவனின் நடை, உடை, பாவனை என அனைத்திலும் மிளிர்ந்திருந்தது நேர்த்தி!!
இன்னும் ஏன், அவன் கண்களில் இருந்த கூலர்ஸ் கூட அவன் கம்பீரத்தையும், செருக்கையும் ஒருபடி கூட்டிக் காண்பித்தது கூட அழகே!!
‘இதை விட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்காது. எப்படியும் போய்ச் சேர்ந்தால் சரி?? நிரோ வேறு எனக்காக காத்திருப்பாள். இவனுடன் ஓர் ஓன்றரை மணித்தியாலம் தானே??. பேசாமல் சகித்துக் கொண்டு சென்று விடலாம்’ என்றெண்ணிக் கொண்டே… அவள் மனக்கணக்குகள் எல்லாம் கலைந்து நிமிர்ந்த போது… அவன் தன் காரின் முன் ஸீட்டின் கதவு திறந்து ஏறிக் கொண்டிருப்பதுவும் புரிந்தது.
அவனது கார்.. அவள் வருவதற்கு முன்னாடி நகரத் தொடங்கலாயிற்று.
ஓடோடி சென்று.. அவனது காரின் முன்.. இரு கைகளையும் நீட்டி வழிமறித்து நின்று… உச்சஸ்தாயியில், “நிறுத்துங்கஅஅஅ!!” என்று கத்தியதும்…
அவனும் காரினை சடன்பிரேக் போட்டு நிறுத்தி விட்டு… இதழோரம் உறைந்த புன்னகையை மறைத்துக் கொண்டு..காரின் ஜன்னலினூடாக இலேசாக தலையைப் போட்டு எட்டிப்பார்த்து,
“என்ன?”என்று கேட்டான் அதே மாறாத கறார்க்குரலில்!!
இவளும்.. உள்ளுக்குள் அவனைப் பொறிந்து தள்ளியவாறே, முகத்தை தொங்கப் போட்டவாறே, “.. நானும் வர்றேன்… என்னையும் கூட்டிப் போங்க” என்று அவளது முடிவினைக் கூற.. ஒரு சில கணங்கள் சேலையில் நின்றிருக்கும் பேரழகு பூங்காரிகையே இமையாமல் தன் சிந்தனை கூட மறந்து போனவனாகப் பார்த்திருந்தான் அவன்.
பின்பு சட்டென தன் சுயத்தை திரட்டிக் கொண்டு விறைப்புப் பேர்வழியாக வதனம் காட்டி நின்று.. அவனும், “வா.. வண்டியில ஏறு” என்று பணிக்க
அவளும் போய் காரின் கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள் ஒரு சாவி போட்ட பொம்மை போல.
காரும் அதிக வேகமாகவும் இல்லாமல், மெல்லமாகவும் இல்லாமல்… மிதமான வேகத்தில் கிளம்பத் தொடங்கவே.. அவளையே பார்க்கச் சொல்லித் துடியாய்த் துடிக்கும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு… அவள்புறம் பாரமலேயே.. வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டு வரலானான் அவன்.
ஆனால் அவளோ.. மனதுக்குள், “என்ன??? இவன் நம் கல்லூரியில் படித்தவனா..?? இவனைப் பார்த்தால் என்னை விட… நான்கைந்து வயது பெரியவனாய்த் தெரிகிறான். எனில்,இவன், அவளது சீனியரா?? இவன் அவள் படித்த காலேஜ்ல படித்திருந்தும்.. இவன் முகத்தினை நான் கண்ட ஞாபகமே இல்லையே? இந்த முகத்தை எந்த கோணத்தில் பார்த்தாலும் என் காலேஜ்ல படிச்ச மூஞ்சி மாரி தெரியலையே….??”என்று பற்பல யோசனைகளுடன் வழிநெடுக வந்தவளுக்கு.. நில்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது சிந்தனைகள்!!
தனக்குத்தானே உரையாற்றிக் கொள்ளும் தொணதொணக்கும் குரலில், “ஒருவேளை.. இவன்..ஸ்பெஷல் கெஸ்ட்டா… ச்சேச்சே… இல்லையே இருக்காது .. பழைய மாணவர்கள் மட்டும் தான் இந்த ஒன்றுகூடலில் கலந்துக்கலாம்.
எனில், இவன் ரொம்ப ரொம்ப பழைய மாணவனா?? .
அப்படியானால் இந்த மன்றத்துக்கு அவனால் வர முடியாதே
. காரணம். இந்த வருடம் பாஸ் அவுட்டானவர்களில் இருந்து… ஐந்து வருடங்கள் முன்னர் பாஸ் அவுட்டானவர்கள் தானே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.?? எனில், அவன் பழைய மாணவனும் இல்லை..”என்று வழிநெடுகிலும் யோசித்துக் கொண்டே வரலானாள் அவள்.
வாயெல்லாம் ஞமஞமக்க அவனிடமே.. “ சார் நீங்க எந்த வருடம் பாஸ் அவுட்?”என்று கேட்டு விட அவனுக்கும் ஆசை தான்!!
இருப்பினும் வாயை அடைப்பது போல ஏதேனும் ஏடாகூடமாக பதில் சொல்லி விடுவானோ என்றஞ்சி.. மனதை அடக்கிக் கொண்டு … அவளுடைய காலேஜ் வரும் வரை அமைதியாய் வாளாது வந்தாள் அவள்.
‘எப்படியும் காலேஜூக்கு தானே வரவேண்டும்.. அங்கு வைத்தே கண்டு கொள்ளலாம்’ என்று எண்ணியபடியே விட்டு.. பேசாமல் இருந்து விட்டாள் மதுராக்ஷி.
காலேஜ் வந்து சேர்ந்ததும்… அவள் சுவாசம் புத்துணர்வு பெறுவதைப் போல உணர்ந்தவளுக்கு.. காலேஜின் ஆடிட்டோரியத்தைச் சுற்றியிருக்கும்… தரையெங்கினும்.. சிவப்பு குல்மோஹர் மலர்கள்.. வெல்வட்டாய் தரையில் உதிர்ந்திருப்பது கண்டு…. மனம் மழலையாய்த் துள்ளிக் குதிக்கலானது.
காலேஜின் குல்மோஹர் மர அடிவாரம்!! சிற்றுண்டிச்சாலைகள்!! பூங்கா என எல்லாவிடமும்… புதிய நினைவுகளாய் மீண்டும் மலர…
எத்தனையெத்தனை அரட்டைகள்??எத்தனையெத்தனை கேலிக்கூத்துக்கள் என எல்லாமும்… நினைவு வர தோழிகளைத் தேடினாள் கண்களாலேயே.
அவர்கள்.. அங்கே விஸ்தாரமாக கிளைப்பரப்பி நின்றிருந்த குல்மோஹர் மரத்தினடியில்.. கூட்டமாக நின்று தங்களுக்குள் கிசுகிசுத்து குசுகுசுப்பது தூரத்திலிருந்து பார்க்கும் போதே விளங்கியது மதுராக்ஷிக்கு.
மதுராக்ஷி.. அவளுடைய ஹிட்லர் பாஸூடன்.. காரில் வந்ததைப் பற்றி அவர்கள் அறிய வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல்… அவள் காரில் வந்திறங்கியதை.. அவர்கள் காணவுமில்லையே!!
கார் தரிக்குமிடத்தில் அவன் இறங்க முன்னம்.. முதல் ஆளாய் இறங்கிய மதுராக்ஷியோ.. கார்க்கதவினை மூடிவிட்டு.. ஜன்னலினூடாக குனிந்து.. உள்ளேயிருக்கும் அவனை நோக்கியவளாக,
“ரொம்ப தேங்க்ஸ் சார்… இப்பவாவது நம்புங்க சார்… பொய் சொல்லிட்டு தியேட்டர்லாம் போகல.. காலேஜ் கெட்டுகெதருக்கு தான் வந்திருக்கேன்..” என்றவள்..
குல்மோஹர் மலர்களெல்லாம் பூத்துக் குலுங்கும், மர அடிவாரத்தை காட்டியவளாக, “அதோ என் ப்ரென்ட்ஸெல்லாம் அங்கே தான் நிற்கறாங்க…ப்ளீவ் மீ சார்…ஒன்ஸ் அகேய்ன்.. தேங்க்ஸ்”என்று புன்னகையோடு பதில் சொல்லி விட்டு… அவனது மறுபதிலுக்கு காத்திராமல் மளமளவென அங்கிருந்து ஓடியே போனாள் மதுராக்ஷி.
அப்படி அவன் பதிலுக்காக காத்திருந்து அவன், ‘இல்லை உன்னை நம்ப முடியாது… நீ பங்க்ஷன் முடியற வரை என்கூடவே இரு’என்று சொல்லிவிட்டால்??’.
அந்த பயத்தில் தான்.. மூச்சினை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓரேயடியாக பேச்சைப் பேசி முடித்ததும்… மறுகணம் ஓட்டமும் நடையுமாக… அவள் தோழிமார்கள் இருக்கும் இடத்தை அடைந்திருந்தாள்.
அவள் மான்குட்டி போல ஓடும் ஓட்டத்தையே விழிகள் மிருதுவாக.. தலையைச் சிலுப்பிக் கொண்டு ரசித்திருந்த ஹிட்லருக்கும் தான் மனதெல்லாம் காதல் வாசம்!!
பைய்யப் பைய்ய தன் சகாக்களை நாடி மதுராக்ஷி நடந்த போது.. அவர்கள் வதனங்களெல்லாம் தரைப்பார்த்து வதங்கித் தொங்க.. கொஞ்சம் துக்கமாக இருப்பது புலனானது மதுராக்ஷிக்கு.
மெல்ல மெல்லமாய் வந்தவள்.. அவர்கள் நின்ற குல்மோஹர் மரத்தின் எதிர்ப்பக்கமாயுள்ள தண்டின் மறைவில் நின்று.. அவர்கள் பேசுவதெல்லாம் தெள்ளத் தெளிவாகக் கேட்கலானாள் கம்மென்று.
அவள் வராமல்.. உச்சுக் கொட்டியவளாக வேதனையில் நின்ற நிரோஷனாவோ… “பங்க்ஷன்… ஸ்டார்ட்டாக இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு… இன்னும் அவளைக் காணோம்.. அவள் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டு டீ.. ஒருவேள அவளுக்கு பர்மிஷன்… கொடுக்காமல் இருந்துட்டாரோ தெரியல??”என்று சோகமாய்க் கூறிக் கொண்டிருக்க….
அதைக் கேட்ட அவள் தோழிகளில் ஒருத்தியோ..பொறுமை காற்றில் பறந்து போன தொனியில், .. “ஹேய்… அவளுக்கு போன போட்றீ.. என்னாச்சுன்னு கேட்கலாம்??”என்று கூற ஒருத்தி விரைந்து செயற்பட்டு.. செல்பேசியை எடுத்து.. மதுராக்ஷி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலானாள்.
கைப்பேசி அழைப்புமணி குல்மோஹர் மரத்துக்குப் பின்னிருந்து கேட்கவாரம்பிக்கவே. அனைவரும் திரும்பி குல்மோஹர் மரத்துக்குப் பின் சுற்றி வந்து நிற்கலாயினர்.
அங்கே… செல்லை அணைத்து வைக்கத் தடுமாறி.. அது முடியாமல்.. திருதிருவென விழித்துக் கொண்டிருக்கும் மதுராக்ஷியைத் தான் காண நேரிட்டது அவர்களுக்கு.
அவளை எல்லாரும் பப்பரப்பாக பரபரப்பாகத் தேடிக் கொண்டிருக்க.. இவளிங்கே ஆசுவாசமாக மரத்தின் பின் ஒழிந்திருந்தால்… கோபம் வாராதா என்ன அவர்களுக்கு??
அவளை அங்கே பார்த்த அதிர்ச்சியில் அவளது தோழிகள் ஒருத்தியான மாலாவுக்கு விரிந்த விழிகள் விரிந்தவாறே நிற்க பேச்சே வரவில்லை அவளுக்கு!!
நிரோவோ,மூக்குக்கு மேல சீற்றம் போன குரலில், “நாங்க இங்கே நீ வரலையேன்னு தேடிக்கிட்டிருந்தா… எவ்ளவு நேரமா இங்கேயே ஒழிஞ்சிட்டு இருக்க?? ஹாங்?? ”எனக் கேட்க…அலறிப் பதறிப் போனாள் நாயகி!!
“ஹய்யோ.. அப்படிலாம் இல்லடி… என் பாஸ் கூட இப்போ தான் வந்தேன்.. எல்லார் முகமும் சோகமா இருந்ததனால என்ன பேசுறீங்கன்னு கேட்கலாமேன்னு.. இப்போ தான் இந்தப் பக்கம் வந்தேன்.. அதுக்குள்ள பிரில்லியன்ட் கேர்ள்ஸ் கண்டுபிடிச்சிட்டீங்க.” என்று அவர்களனைவருக்கும் சேர்த்து ஐஸ் வைத்துக் கொண்டே அசடு வழிய வழியப் புன்னகைத்துச் சமாளித்தாள் அவள். .
அதிர்ச்சியிலிருந்து திரும்பிய மாலாவோ.. முன்பை விட அதிர்ச்சியானவளாக, “என்ன?? உன் பாஸ் கூட வந்தீயா?? . அப்படீன்னா.. உ.. உன் பாஸூம் நம்ம யூனிவர்சிட்டியில் படிச்ச பழைய ஸ்டூடன்ட்டா??..”என்று தான் கேட்கலானாள்.
இவளும் பற்களுக்குள் சிக்குண்ட நகத்தினை நறுக் நறுக்கென தீவிர யோசனையுடன் கடித்துத் துப்பியபடியே,
“ஆமா டீ… எனக்கும் இன்னைக்கு தான் தெரியும்… அந்த ஹிட்லர… எந்த கோணத்தில் பார்த்தாலும்.. ஐஞ்சு வருஷத்து முன்ன பார்த்த முகமாகவே இல்லையேடீ..”என அவள் கூற… பட்டென்று வந்தது நிரோவிடமிருந்து ஒரு கேள்வி!!
“உன் பாஸ் பேரு.. அஜய் தானேடீ..??”
கேள்வி கேட்ட தன் பெஸ்ட்டீயை நோக்கி, நாயகியும் புரியாத அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, “ஆமா” என்று தலையாட்டவும்..
மற்றவர்களிடம்.. திரும்பிய நிரோவோ.. இதர தோழிமார்களுக்கு ஏவும் குரலில்,
“ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச அஜய் பேரை யோசிங்கடீ.. கண்டிப்பா நினைவுக்கு வந்துருவான்” என்று… அனைவரையும், “யார் அவர்களோடு படித்த அஜய்”என்று யோசிக்கவும் தான் பணித்தாள் அவள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நின்று.. மூளையைக் கசக்கிப் பிழிந்து.. யோசித்த யோசனையின் முடிவில், ஒவ்வொருத்தர் மூளையிலும்… ஒவ்வொருவிதமான அஜய் உதயமாகியிருந்தான்.
அவள் மூளையைத் தவிர!!
அவளுக்காக இத்தனை பேர் சிந்திக்க… மதுராக்ஷியோ.. மூளையை வீண்விரயப்படுத்தாமல்.. தன் வருங்கால குறும்புத்திட்டங்களுக்காக சேமிக்க நாடி.. வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கலானாள்.
ஆனால்.. தன் பாஸின் பெயர், “அஜய்தேவ் சக்கரவர்த்தி”என்று முழுமையாகச் சொல்லியிருந்தால்… இந்த சந்தேகங்களெல்லாம் உடனேயே நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
மாறாக, அவள், “அஜய்” என்று சொன்னதில்.. சில குழப்பங்களும் தான் ஏற்பட்டது அங்கே.
ஏதோ ஒரு அஜய் பட்டென்று நினைவு வந்தவளாக ஒருத்தி, “ஐடி மாஸ்டர் அஜய்!! ”என்று சுட்டுவிரல் நீட்டித்தான் சொன்னாள் அவள்.
தோழி சொன்ன, ‘ஐடி மாஸ்டர் அஜய்’யின் உருவத் தோற்றம்.. மதுராக்ஷிக்குள் வந்து போக, “ச்சேச்சே அவனா இருக்க முடியாது.. அவன் கட்டையா… கறுப்பா… பெரீஈஈய்ய.. கண்ணாடி போட்டுக்கிட்டு இருப்பான்.. அவனில்ல”என்றாள் அவள்.
“அப்போ முடிச்சவிக்கி அஜய்யா…??”என்று மாலா பட்டென்று கேட்க.. முடிச்சவிக்கி அஜய்யின் முகத்தை மனத்திற்குள் கொண்டு வந்தவளோ…
தன் எஜமானனையும், கேடி அஜய்யையும் உள்ளே சீர்தூக்கிப் பார்த்தவளாக, “அந்த முடிச்சவிக்கி பொம்பளையத் தவிர வேறெதையும் பார்க்க மாட்டான்.. ஆனா என் ஹிட்லரை… பொண்ண தவிர மற்ற எல்லாத்தையும் பார்ப்பான்.. அதனால அந்த அஜய்.. இவன் கிடையாது”என்று மாலா சொன்ன அஜய்யையும் தான் மறுதலித்தாள் அவள்.
மாலா மறுபடியும்.. வானத்தை அண்ணார்ந்து பார்த்தவளாக நாடியைத் தட்டித் தட்டி யோசித்து விட்டு, பட்டென்று வதனம் மின்விளக்கு போட்டது போல பிரகாசமாக,
“.. அ.. அடி… நம்ம குண்டுபூசணிக்கா அஜய்..” என்று கூற… குண்டோதரன் போலிருக்கும் அஜய்யுடன்.. தன்னழகு பாஸை ஒப்பிடுவதை எண்ணி.. மாலாவை முறைத்துப் பார்க்கலானாள் மதுரா.
அந்த குண்டனைப் போய் இவனோடு ஒப்பிடலாமா??
மாலாவை கடுப்புடன் நோக்கி, “எக்ஸ்ட்ரா லார்ஜ் டீஷேர்ட் போட்டுக்கிட்டு… கையில பாஸ்ட்புட்டோட திரியுற.. அந்த குண்டு பூசணிக்காய் அஜய்.. எங்கே..?? ஸ்லிம்பிட் ஷேர்ட் போட்டு…..ஸ்மார்ட்டா ஹேன்ட்ஸமா.. வர்ற நம்ம பாஸெங்கே..??” என்று கூற.. நிரோவின் மூளைக்கோ ஏதோ தட்டுப்படும் போலிருந்தது.
நாயகியின் கைகளைப் பற்றிய நிரோவோ, “நமக்கு தெரிஞ்ச.. அத்தனை அஜய்யையும் சொல்லிப் பார்த்தாச்சு.. அதில் ஐடி மாஸ்டர் லேது… முடிச்சவிக்கியும் லேது… அப்போ ஏன்.. உன் ஹிட்லர் அந்த குண்டு பூசணிக்காயா இருக்கக் கூடாது??”என்று சொல்ல மதுராக்ஷியும்… விழிகளிடுங்க… யோசிக்கலானாள்.
“மது..இப்படிஏன் இருக்கக் கூடாது… ஆரம்பம் படத்தில் குண்டா இருக்க ஆர்யா…லவ்வர் டாப்சிக்காக.. மெலிஞ்ச மாறி உன் பாஸூம்.. ஜிம்மு, கிம்முன்னு போய்… ஜம்முன்னு ஆகியிருக்கலாம்ல?”என்று நிரோ.. ஒரு பெரும் இரகசியத்தைக் கூற வாயடைத்துப் போய் நின்று போனாள் மதுராக்ஷி.
அவளுக்கும்… தோழியின் எடுத்துரைப்பின் பின் தான் உண்மை புரியவே… அந்த குண்டுபூசணிக்காய் தான் அஜய். அஜய்தேவ் சக்கரவர்த்தி என்று ஆணித்தரமாக அம்பலமானது அவர்கள் அனைவருக்கும்!!
தற்போதிருக்கும் அஜய்தேவ்வின் சாயல்… பழைய குண்டு பூசணிக்காய் அஜய்யோடு ஒத்துப் போவதை எண்ணி மயக்கம் போடாத குறையாகத் தான் நின்றிருக்கலானாள் அவள்.
விட்டத்தை விழிகள் நிலைத்துப் பார்க்க, பெண்ணவளோ, இதமான குரலில், “இப்போது திடகாத்திரமா.. திண்ணென்ற உடலுடன் வளைய வர்ற… அஜய்தேவ் சக்கரவர்த்தியை விட.. அந்த கொழுகொழுவென்ற புஷ்டியான கன்னங்களுடன்… காலேஜ் முழுவதும் வளைய வந்த குண்டு பூசணிக்காய் அஜய்யைத் தான் எனக்கு பிடிக்கும் நிரோ”என்று சொல்ல.. தோழிமார்கள் அனைவரின் இதயமும் தான்அதிர்ந்து… நின்று துடித்தது.
எதே?? குண்டு பூசணிக்காய் அஜய் தான் பிடிக்குமா இவளுக்கு?? அவளைப் பற்றி நன்கறிந்திருந்த நிரோவுக்கு .. ஏதோ இடிக்கும் போலவே இருந்தது.
சரியாக.. வைபவம் ஆரம்பிக்கும் நேரத்தில்.. போய் மண்டபத்தில் அமர்ந்தனர் பெண்கள் எல்லாரும். ஆடிட்டோரியத்துக்குள் அமர்ந்திருந்த முகங்கள் அத்தனையுமே மதுராக்ஷிக்கு பழைய முகங்களாகவே இருக்க… மீண்டும் காலேஜ் செல்லும் பெண்ணாகவே தன்னை உணர்ந்தாள் தலைவி.
ஏதோ காலேஜ் கல்ச்சுரல்ஸூக்கு சேலை அணிந்து தயாராக வந்து நிற்பது போலவே இருந்தது அவளுக்கு.
அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் … பெரும் பெரும் புள்ளிகளாக இருக்க… பெரிய வங்கி நடத்துநர்கள்.. முகாமையாளர்கள்.. பற்பல நிறுவனங்களின் ஸ்தாபகர்கள்.. அரசின் பொருளாதார ஆலோசகர்கள்.. பங்குச் சந்தை முகாமையாளர்கள்… என அனைவரும் வியாபாரத் துறையில் பேர் போனவர்களாகவே இருந்தனர்.
அவளுக்கோ ஏனோ மேடையில் மனம் இலயிக்கவில்லை.அவள் விழிகள் முன்வரிசையில் அமர்ந்திருந்த அவனையே தான் பின்னிருக்கையில் அமர்ந்து… அழகழகான உணர்வுகள் பூக்க… சின்னப் புன்னகையுடன் ஒரு பிச்சியைப் போலப் பார்த்திருக்கலானாள் அவள்.
இந்தச் சின்னப் புன்னகையும் தான் ஏன்??
தன் எஜமானன்.. தன் சீனியர் குண்டுபூசணிக்காய் அஜய் தான் என்பதால் விளைந்த சின்ன சிநேகபாவம் அவளை அலைப்புறுதலுக்குள்ளாக்கியது.
சிந்தனைக் கலைந்து அவள் சுயநினைவுக்கு வந்த வேளை… மேடையைப் பார்த்த போது..அங்கே சீனியர் சுரேஷ் அண்ணா எதையோ ஒலிவாங்கியில் கூறிக் கொண்டிருப்பதும், யாருக்கோ புகழாரம் சூட்டப்பட்டுக் கொண்டிருப்பதும் புரிந்தது.
மேடையிலிருந்த சுரேஷ் அண்ணாவோ… தன் கணீர்க்குரலில், “வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடல். இருபத்து மூன்று கிளைகளைக் கொண்ட அவரது நிறுவனத்தை குறுகிய காலத்துக்குள் நாற்பத்தேழு கிளைகள் கொண்ட நிறுவனங்களாக ஆக்கியவர்.. வருங்காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தையே ஆக்கிரமிக்கப் போகும் கிங் மேக்கர்!! லெட்ஸ் வெல்கம் மிஸ்டர். அஜய்தேவ் சக்கரவர்த்தி… டு கிவ் அ பிவ் வர்ட் அபவுட் ஹிஸ் ஜர்னி!!”என்று தலைவன் வியாபார உலகில் கடந்து வந்த பாதையைத் தான்.. உரையாற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது அங்கே!!!
அவளும்… சுரேஷ் அண்ணா கூறிய புகழாரங்களையெல்லாம் கேட்டு.. தன் காதை தன்னாலேயே நம்ப முடியாமல் நின்றவள்.. உண்மையில் தான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் வளர்ச்சியை அறிந்து தானிருக்கவில்லை.
அவனது உயரத்தை அன்று தான் அறிந்து கொண்டவளின் ஹிருதயமோ, “அட நம் ஹிட்லர்.. இப்படி திறமை வாய்ந்தவனா..?? ஆனால் அவன் முகத்தில் இதுநாள் வரை.. தன் செல்வந்த நிலைமையைப் பற்றிப் பேசும்… சின்ன பெருமையோ… இறுமாப்பையோ… கூட கண்டதில்லையே..?” என்று மனதுக்குள் அவனை மெச்சித் தான் எண்ணிக் கொள்ளவும் செய்தாள்.
ம்ஹூஹூம்… இவன் முகத்தின் சிரிப்பையே காண்பது அபூர்வம்!! அப்படியிருக்க இறுமாப்பு சிரிப்பெல்லாம் காண்பது எங்ஙனம்?? என்று உள்ளுக்குள் நினைத்தாள் மதுராக்ஷி.
அவன் ஈரெட்டுக்களில் மேடைப்படிகளைத் தாண்டியேறி… கம்பீரமாய்.. மேடைக்கு வந்த போது.. குறும்புக்காரியான அவளுக்கும் தான் மூளையில் மின்னல் வெட்டினாற் போலத் தோன்றியது இந்த குறும்பு யோசனையும்.
அவளது வலது பக்கத்தில் நிரோ அமர்ந்திருக்க.. இடது பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியான வினோதாவிடம்.. காதுக்குள் பட்டென்று எதையோ… சடசடவென குசுகுசுத்தான்.. வினோதா மாத்திரம் அறியும் வண்ணம்.
உண்மையில் வினோதா!!! பெயருக்கேற்றாற் போலவே விநோதமானவள் அவள்!!
மதுராக்ஷி கல்லூரி நாட்களிலும்கூட… என்ன சொன்னாலும் யோசிக்காமல் செய்து முடிப்பவள் தான் இந்த வினோதா!!
தோழி மதுராக்ஷி தன் காதுக்குள் ஓதியதை அப்படியே கத்திச் சொல்லி விடும் எண்ணத்தில் வினோதாவும், “எப்படியிருந்த நீங்க இப்படி ஆஆஆஆஆகிட்டீங்களேஏஏஏ!!!” என்று மதுராக்ஷி சொல்லிக் கொடுத்தது போலவே.. என்ன, ஏதென்று யோசியாமல்.. கத்த..முழு அரங்கமும் கொல்லென்று நகைத்தது.
மேடையிலேறி… ஒலிவாங்கியில்… அவன் பேச வாயெடுக்கும் போது….. வினோதா… மேற்கண்டவாறு…கத்தியதும்.. அவன் முகம் அசடுவழியுமென்று காத்திருக்க… அதில் மதுராக்ஷிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்தோ அவளின் துரதிர்ஷ்ட்மே!!
அவன் முகம்… மதுராக்ஷி நினைத்தது போல.. அசடுவழியாமல்.. பிறரைப் போலஅவன் புன்னகை பூத்தபடியே, கந்தர்வக் குரலில்,
ஒலிவாங்கியில், “ஆமா சிஸ்டர்… யூ ஆர் அப்சலூட்ளி கரெக்ட்..அப்டி குண்டா இருந்த நான்.. இப்டி ஆகிட்டேன்” என்று கூறி… வினோத கூறியதை ஆமோதித்தவன் கண்கள்… மதுராக்ஷியைத் தான் கூர்மையாகப் பார்த்துக் கொண்டேயிருக்க… இவள் தான் அசடுவழிய தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளலானாள்.
அவனுக்கு இது அவள் சதியென்று கண்டிப்பாய் விளங்காமலா போகும்?? தன் அந்தரங்க காரியதரிசியின் குறும்பின் வீரியம் இன்னதென்று அவனும் அறியாததா??
அவளைப் பழிவாங்குவதற்கென்றே வேண்டுமென.. ஒலிவாங்கியில்.., “என்னைப்பத்தி நானே சொன்னா எப்படி.. அதனால ஒரு சின்ன மாற்றத்துக்கு… என் பிஏ.. மிஸ். மதுராக்ஷியை கூப்பிட்றேன்.. ஷி வில்.. கன்வே மோர்…”.. என்று கூற அவளுக்கு மூச்சு பட்டென்று நின்றது.
என்ன?? அவனைப்பற்றி பேச அவளா??
அவளோ சாபம் கொண்ட அகலிகை சிலையாக உருமாறி..நாற்காலியில் பசைப்போட்டு ஒட்டிக் கொண்டது போல இருந்திருக்க… அவளின் மீது அடிக்கப்பட்டது மேடையின் ப்ளாஷ் லைட்டுக்கள்!!
அவனோ…. பழிவன்மம் கூத்தாடும் விழிகளுடன், “மிஸ். மதுராக்ஷி ப்ளீஸ் கம் ஆன் திஸ்டேஜ்” என்று அவளை அழைக்க… அவளுக்கு இதயமோ திக் திக் என்றிருந்தது.
எதுவுமே தயாராகாமல்.. அவனைப்பற்றி என்ன தான்… மேடையில்.. அதுவும் ஆயிரம் பேர் சூழ்ந்திருக்கும் மேடையில் பேசிவிடவும் முடியும்!!
அருகிலிருந்த நிரோவோ.. தலைவியின் காதுகளுக்குள் குசுகுசுக்கும் குரலில், “அவமானப்பட முன்ன போயிரு மது.. அவனைப் பத்தி வல்லவரு.. நல்லவருன்னு சொல்லிட்டு வந்துரு… சிம்ப்பிள்.”என்று.. சின்ன யோசனை கூறி அனுப்பி வைக்க.. அவளும் தான்… பொற்பாவையாக எழுந்தாள் இருக்கையில் நின்றும்!!
அவள் கால்கள் பின்னிப் பிணைய.. பார்வைகள் மான்குட்டியது போல மருள மருள… மெல்ல மெல்ல மேடைக்கு ஏறியதும்.. பிறர் அறியாமல், “என்ன மாட்டினீயா ஐயாச்சாமி” என்பது போல வன்மையாக கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தவனாக,
ஒலிவாங்கியை அவள் கைகளில் திணித்து விட்டுப்.. போய்.. மேடையில் நிகழப் போகும் சுவாரஸ்யத்தைப் பார்க்கும் எண்ணத்துடன் அமர்ந்து கொண்டான் அவன்.
அனைவரையும்… பொதுமையாக சுற்றிவர ஓர் பார்வை பார்த்து விட்டு.. குரல் நடுநடுங்க.. இரு கரம் கூப்பி, “எ.எ..எல்லாருக்கும் வணக்கம்” என்றவளுக்கு குரல் வேறு பிசிறு தட்டவே… சிறிது நேரம் என்ன பேசுவது தெரியாமல் தலையைக் குனித்துக் கொண்டே அமைதியாக நின்றாள் மதுராக்ஷி.
பின்பு பெருமூச்சுடன் நிமிர்ந்தவளோ, “ரொம்ப நாள் கழிச்சு.. சுரேஷ் அண்ணா, கார்த்திக் அண்ணா.. குண்டுபூசணிக்கா அஜய்..”என்று அவனது பழைய… பட்டப்பெயர் வேண்டுமென்றே சொன்னவள்… அவனை அவமானப்படுத்தி விட்ட வெற்றிப் பெருமிதத்துடன் தான்.. அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் முகம் அப்பொழுதும் மாறாமல்… ஏதோ கோயில் சிலையை நயக்கும் மிருதுவான பார்வை சிந்திக் கொண்டே….புன்னகை முகமாகவே இருப்பதைக் கண்ணுற்றதும்… மனதோடு சின்ன… ஏமாற்றம் முகிழ்க்கத் தொடர்ந்தாள் அவள்!!
பழைய நினைவுகள் மலரும் இதமான குரலில்“இப்படி எல்லாத்தையும் மீட் பண்ண கிடைச்சதில் ஹாப்பி.. ஐம் ஸோ ஹாப்பி டூடே..”என்றவள்…
மீண்டும் வேண்டுமென்றே அவன் பட்டப்பெயரை அழைக்கும் சாக்கில்.. வெகுவெகு அழுத்தமான குரலில், “இந்த குண்டு பூசணிக்காய் அஜய் தான் என் பாஸ்னு இங்கே வரும்வரை எனக்கு தெரியாது.. இன்னும் ஏன்.. குண்டு பூசணிக்காய் தான் என் பாஸா எதிர்காலத்துல வரக்கூடும்னும் நான் நினைக்கலை… அஅவருடைய இந்த மாற்றத்துக்கு… கடின உழைப்பு தான் காரணமுன்னு சொல்வேன்…” என்று அவன் மெலிந்ததற்கு ஜிம் என்னும் கடின உழைப்பு தான் காரணம் என்று ஜாடைமாடையாகத் தான் சொன்னாள் அவள்.
பின் அவளையுமறியாமல்… அவனின் மீது அவளுக்குள் இருக்கும் நல்லெண்ணங்கள் வெளிப்பட… மென்மையான தொனியில், “இப்போ எனக்கு பாஸ்ன்றதுனால… சார்னே சொல்றேன்… ஏன்னா குண்டுபூசணிக்காய்னு சொல்லி.. பின்விளைவுகளை என்னால தாங்கிக்க முடியாது சீனியர்ஸ்.. ஐம் பாவம்…!”என்று சொன்ன தினுசில்… அரங்கத்தில் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள…. ஒரு மெல்லிய சிரிப்பலை எழுந்து பரவலானது.
சிரிப்பு முடியும் வரை காத்திருந்து அவள் தொடர… அஜய்யின் விழிகள் அவளொருத்தியைத் தவிர பிறிதொரு பொருளில்லை என்பது போல தான் பார்த்துக் கொண்டேயிருக்கலானது.
அது என்னே மாதிரியான பார்வை இது??
அவளை இழுத்து விழித்திரைக்குள் சிறைவைக்கும் ஆகர்ஷிப்புப் பார்வை தானது!!
“அவரோட பயாக்கிராபி..வாழ்க்கை சரிதம் சொல்ல நான் வரலை… கூகுள் பண்ணாலே அவரப் பத்தி கொட்டும்.. இன்னும் ஏன்… அவரைப்பத்தி அவர விட.. இங்கேயிருக்கற ஒவ்வொருத்தரும் அதிகமா தெரிஞ்சு வைச்சிருக்கலாம்… ஏன்னா சாரோட உயரம் அப்படி!! அதனால என்னைக் கவர்ந்த என் பாஸ் பத்தி சொல்றேன்!! சார் ரொம்ப பங்க்ச்சுவல்.. டைமுக்கு டான்னு.. ஆபீஸ் வருவாரு…டைமுக்கு… வேலை செய்வாரு.. சொன்ன வேலை.. சொன்ன டைம்க்கு இருக்கணும்… அவருக்கு ஸ்டாப் பர்ஸ்ட்.. வொர்க் நெக்ஸ்ட்.. அவருக்கு பொய் பேசறவங்கள கண்டா பிடிக்காது… கொஞ்சமா தான் பேசுவாரு.. ரொம்ப வித்தியாசமான ஜென்டில் மேன்!!! கல்லுக்குள் ஈரம் இருக்கறது போல இவருக்குள்ளும் ஒரு அழகிய இரகசியக்காதல் இருக்குன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிக்கிட்டேன்…”என்று அவள் பெரும் இரகசியத்தை வெளியிடத் தயாராக…
இதுவரை காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் கால்களும் தான்… கீழிறங்க… அவளைத் தான் நெற்றியில் இரேகைகள் ஓடப் பார்த்திருந்தான் அங்கே!!
அவளோ தொடர்ந்து சொல்லும் இதமான தொனியில், “அவர் ரூம்ல ஒரு கவிதை பேப்பர்…அதை வாசிச்ச நான் ஷாக் ஆயிட்டேன்… அவர் காதலிக்காக அவர் கைப்பட எழுதிய கவிதை…”என்றவள்…
பட்டென திரும்பி தன் எஜமானனை நோக்கி, “ஸாரி சார்… உங்க கவிதையை வாசிச்சது தப்பு தான்.. ஆனா அதை இரகசியமா வைச்சுக்காம.. என் கண்ணுல பட்ற மாதிரி வைச்சது உங்க தப்பு”என்று மிக மிக உணர்ச்சி பூர்வமாகச் சொல்ல… மெல்லிய புன்னகை பரவிற்று அவனுள்.
கவிதைசொல்லும் உணர்ச்சிக் கலவைகள் சொட்டும் குரலில்,
“உன் அன்புக்கு அடிமையாகி,
ஆசை தீரா காதலுடன்,
மோகம் குறையா காமத்துடன்..
ஆயுள் முழுவதும் உன் கரம் பற்றி
வாழ்ந்திட ஆசையடி எனக்கு” என்று அவனது கவிதை வரிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்பித்து முடித்தவளோ, காதல் கைகூட வேண்டுமென்ற உண்மையான உள்ளத்துடன்,
“யாரோ.. ஒரு வெண்ணிலாவுக்காக… சார் இஸ் ஸ்டில் வெயிட்டிங்க்.. ஆல்தி பெஸ்ட் சார்.. நீங்க மனசுல நினைச்சிட்டிருக்கறவங்களே உங்க ஒயிபா கிடைக்கட்டும்.”என்றவளாக அவளது குட்டி உரையை முடித்ததும் தான் தாமதம்!!
அரங்கத்தில் நின்றிருந்தவர்களெல்லாம்… காதலின் அருமையை.. பிரிவை.. மனோவலியை.. ஒருதலைக்காதலின் சுகத்தை என பற்பல காதல்களைப் பற்றி சுகித்திருக்கும் இளைஞர்யுவதிகளாயிற்றே??
அவன் காதல் கைகூடட்டும் என்ற உண்மையான பிராத்தனையுடன்… முழு அரங்கமுமே எழுந்து கைத்தட்டவே.. அவன் நண்பர்கள் அவனுக்கு கைக்குலுக்கி.. அவனை இறுக்கிக் கட்டியணைத்துக் கொள்வதுவும் தான் புரிந்தது அவளுக்கு.
அஜய்தேவ்வின் பார்வை… பேசிவிட்டு கீழே வந்த தன் அந்தரங்க காரியதரிசியையே விடாது பார்த்துக் கொண்டேயிருக்க.. அதைப் பார்த்துக் கொண்டே நிரோவை நாடிப் போனாள் மதுராக்ஷி.
அவளது பாஸ்… இத்தகைய பார்வை பார்த்து வைப்பதன் எண்ணமும் தான் என்னவோ??
அப்பார்வையின் அர்த்தமும் தான் யாதோ?? ஒன்றுமே புரியவில்லையாயினும் இதயம் வரைத் தாக்கி… மயிர்க்கூச்செறியச் செய்தது அவனது காந்தப் பார்வை.
நிரோவோ, தன்னை நோக்கி வந்த தோழியைக் கட்டியணைத்து, “… வாவ் சூபப்ரா பண்ண.. நான்கூட அப்படீயே ஷாக் ஆயிட்டேன்.. என்னா பீலிங்க்ஸ்… என்னா எமோஷன்ஸ்… சூப்பரோ.. சூப்பர்”என்று பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்க… அவள் பார்வையோ.. சற்றே தூரத்தில் நின்று தன்னையே பார்த்திருக்கும் அவனில் தான் பதிந்து மீளலானது.
அவன் பார்வையில் உள்ளுக்குள் அச்சப்படபடப்பு வந்து போனாலும்.. தன்னியல்பு தலைத்தூக்க.. குறும்பு மிளிரும் விழிகளுடன்,
“எப்படினு தெரியல… நானே.. வாய்க்கு வந்ததெல்லால் அடிச்சு விட்டேன்.. . பட் என் வாயால ஹிட்லர்.. குண்டுபூசணிக்காய்னு … அவனை.. அவன் முன்னாடியே… சொல்லக் கிடைச்சதில்ல.. மதுரா ஹாப்பி அண்ணாச்சி” என்று கூற..
தலையில் அடித்துக் கொண்ட நிரோவோ…, “நீ திருந்த மாட்டேடீ..”என்று சொல்லி அலுத்துக் கொண்டதெல்லாம்… சட்டை செய்யவில்லை அவள்.
மதுராக்ஷியும்.. நிரோவும் பேசிக் கொண்டிருந்த போது தூரத்தில்.. அவன்.. அவளை நோக்கி.. பேன்ட் பாக்கெட்டில் ஒரு கையை இட்ட வண்ணமே… நடந்து வருவது புரிந்தது அவளுக்கு.
அவன் வரும் போதே.. இதயம் தாறுமாறகக் குதித்து குதித்து அடங்க..தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் தடுமாறி நின்ற போதினில்,
அவனோ அவளருகில் வந்து, அதே மாறாத பணிக்கும் குரலில், “நாளை காலையே ஆபீஸ் வந்துடு.. முக்கியமான வேலை இருக்கு .. ஞாபகம் வைச்சிக்க… நாளை காலையிலேயே ஆபீஸ் வந்துரு”என்று சொன்னதையே திரும்ப.. அழுத்திச் சொல்லி விட்டு செல்ல… அவனது குரலின் அழுத்தத்தின் அர்த்தம்.. அன்று அந்நொடி புரியவில்லை அவளுக்கு.
மாறாக, நாளை காலை அலுவலகம் சென்றவளுக்கு காத்திருந்தது இதயவலி வராத குறையாக பேரதிர்ச்சி!!
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌