மோகனம் – 19
மறுநாள்க்காலையில் அவள் எழுந்த போது.. மணி பத்து. ஞாயிற்றுக்கிழமையானாலே… ஜாகிங்கையும் கட் அடித்து விட்டு உறங்குவது அவள் வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொடர அவளுக்கு நன்றாகவே தூக்கம் பிடித்திருந்தது.
அவள் வீடென்றெண்ணி… நெட்டி முறித்துக் கொண்டு.. கைமறைவில் கொட்டாவியொன்றையும் வெளியேற்றிக் கொண்டு… அவள் கண் விழித்த போது அவள் தூங்கிய இடம் மாறியிருப்பது கண்டு மெலிதாகத் தான் அதிர்ந்தாள் அவள்!!
அவளெப்படி… அவனது கூர்க் வீட்டின் அழகிய அறையில் படுத்துக் கிடக்கிறாள்??
நேற்றடித்த சரக்கில் தலைவேறு விண் விண்ணென்று தெறிப்பது போல வலிக்கவே நெற்றியை நீவி விட்டுக் கொண்டே..
கண்ணை மூடி யோசித்தவளுக்கு… நேற்றைய இரவு நடந்த சம்பவங்கள் அனைத்தும் காணொளியை பின்னோக்கி ரிவைன்ட் செய்து ஓட விட்டது போல அனைத்தும் ஞாபகத்துக்கு வரலானது.
மூக்கு முட்ட கர்நாடக மாநில ஸ்பெஷல் உணவுகளை உண்டது!!
உண்டது ஜெரிக்க அவன் வலுக்கட்டாயப்படுத்தி வாக்கிங் அழைத்துப் போனது!!
அவனுக்கு தெரியாமல் வோட்கா அருந்தி விட்டு.. போதையில் கூர்க்கின் சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடியது!!
சர்தார்ஜீயின் ஜன்னலை உடைத்து… முறைத்துக் கொண்டு வந்தவரின் ஒற்றைக்கு ஒற்றையாக நின்று சண்டித்தனம் செய்தது!!
இவன் தோளில் தூக்கிப் போட்டு அணைத்து இழுத்து வந்தது!!
தலைமைக் காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது ஏறி நின்று.. குதித்தது!!
குளிரில் கடகடவென நடுங்கிக் கொண்டே.. தீப்பந்தலில் குளிர் காய்ந்தது!!
அப்படியே ஆற்றங்கரையோரத்தின் கட்டாந்தரையில்.. அடித்துப் போட்டாற் போல உறங்கிப் போனது!!
அனைத்தும் ஒன்றுவிடாமல் நினைவு வரவே.. ஆற்றங்கரையோரத்தில் இருந்தவள் எப்படி.. இங்கே?? அறையில் வந்து படுத்தாள் என்று விழிகள் இடுங்க.. போர்வையைக் களைந்த வண்ணம் யோசித்தாள் அவள்!!
நிச்சயம்.. அவளின் பாஸ்… அஜய்தேவ் தான்.. கையிலேந்தி தூக்கி வந்து… இங்கே படுக்க வைத்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று.
பொசுபொசுவென்ற பஞ்சும் தலையணை , மற்றும் குளிருக்கு இதமாக தாக்குப் பிடிக்கக் கூடிய கம்பளிப் போர்வையைப் பார்த்த போது.. அது அவனது வேலையாக இருக்கும் என்று தான் ஊர்ஜிதமானது அவளுக்கு.
நன்றாய் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஹிட்லருக்குள் இப்படியொரு மென்மை இருக்குமென்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
தன் வருங்கால மனைவி மீது இத்தனை ஆசை ஆசையாக.. பார்த்துப் பார்த்து.. பிரம்மாண்ட கடல் போல வீடெல்லாம் கட்டி வைத்திருக்கிறானே!!
அந்தப் பெண் கொடுத்து வைத்தவள் தான் என்று எண்ணிக் கொண்டே எழுந்து… குளியலறை நாடித் தான் போனாள் அவள்.
அதே அவன் நேற்று மதுராக்ஷி உறங்கிக் கொண்டிருந்த பொழுது.. உடைத்த உண்மையை… அவள் விழித்துக் கொண்டிருக்கும் போது கூறியிருந்தால்.. நிலைமை தலைகீழாய் மாறியிருக்கும்.
“அந்தப் பெண்” என்று அவள் எண்ணிய இடத்தில்.. “அப்பெண்” அது அவளாக இருக்கக் கூடுமென்று… அறியாமல் தான் போனாள்!!
பாவம் கேடி மதுராக்ஷி!!
ஆயினும் அவனின் “அப்பெண்ணாக” மாற வேண்டிய ஒரு காலக்கட்டம் வெகு சீக்கிரமே வரப்போகிறது என்பதுவும் கூட மதுராக்ஷி.. அறியாமல் போனாள்.
குளித்து விட்டு… வேற்றாடை புனைந்து கொண்டு அவள் வெளியில் வந்த போது முற்பகல் பொழுதாக.. அழகான சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க… அவளது பாஸோ.. கூர்க்கை காலி செய்து.. சென்னை சென்று சேர்வதற்கான ஏற்பாட்டுடன் தான் இருந்தான்.
அவனோ… சோபாவில்… காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு… கம்பீரம் மிளிர அமர்ந்து.. அன்றைய டைம்ஸ் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தான்.
அவளைக் கண்டதும்… நாளிதழை மடித்து விட்டு.. தன் பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளை இட்ட வண்ணமே எழுந்து நின்றவன் கேட்டான்,
“சரி.. கூர்க்கை விட்டு நம்ம இடத்துக்கு… இப்போ கிளம்பலாமா?”என்று!!
இமைகள் மெல்லமாய் படபடக்க, “இ.. இப்பவேவா… நான் இன்னும் என் டிராவலிங் லக்கேஜை எல்லாம்.. ரெடி.. பண்ணி. வைக்”என்று சொல்லிக் கொண்டிருந்த போதினில்…
மாடிப்படிகளை விட்டும் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கி வந்த இரு பணியாளர்கள்… அவன் பெட்டியையும்… அவள் பெட்டியையும் எடுத்து வந்து.. அவன் காலடியில் தான் வைத்து விட்டு பவ்யமாகக் கைக்கட்டி நிற்கலாயினர்.
அவளை காதல் மருகும் விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்தவனின் பார்வையோ.. அவளின் செஞ்சாந்து பூசப்பெற்ற அதரங்களையே தாபம் ஊற ஊறத் தான் வெறித்துப் பார்த்திருந்தது.
கணீர்க் குரலில், “இனியும் என்ன?? லக்கேஜூம் வந்தாச்சு மதுராஹ்… இப்போ கெளம்பலாமா??”என்று கேட்டவன்.. அவனது மணிக்கட்டைத் திருப்பித் தான் மணி பார்க்கலானான்.
பளபளத்த வெள்ளி நிற ரோலெக்ஸ் வாட்ச்.. உரிய நேரத்தைக் காட்டவே.. அதனை வாய்விட்டு மொழியவும் செய்தான் அவன்.
“இப்போ மணி மார்னிங் டென் தேர்ட்டி… அப்படீன்னா சென்னை ப்ளைட்டில்.. போய் சேர… டுவெல்வ் ஆகலாம்… ரெடி தானே?? வீ ஹேவ் நோ டைம் லெப்ட் மதுரா…”என்று நுனி நாக்கில் ஆங்கிலம் தாண்டவமாடச் சொன்னவன்… அவளையே தான் ஆழமாகக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.
கூர்க் வரும் போது வரமாட்டேன் என்று அடம்பிடித்து வந்தவள் தான் அவளும்!!
ஆனால் தற்போதோ.. கூர்க்கின் அழகு அவளைக் கட்டிப் போடவே.. கூர்க் விட்டு சென்னை செல்ல முரண்டு பிடித்தது மனம்!!
சென்னையின் வேலைப்பளுவான நாட்களை விடவும்.. கூர்க்கின் விடுமுறை நாட்கள் இனித்தது மனத்துக்கு!!
தன் மனச்சோர்வைக் காட்டாது, தலையைக் கீழேத் தொங்கப் போட்டுக் கொண்டு, “சரி அஜய் கிளம்பலாம்”என்று பதிலிறுத்தவள்.. அவனோடு..அங்கிருந்தும் கிளம்பிச் செல்லத் தயாரானாள்.
இங்கிருந்து கர்நாடகாவின் மடிகேரி விமானநிலையம் இருவரும் சென்ற போது… அங்கே அவர்களுக்காக தனியார் விமானமொன்றே காத்திருந்து சென்னை செல்வதற்காகவே!!
அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான விமானத்தில்.. இருவரும் மீண்டும் சென்னை வந்து சேர்ந்த போது.. உச்சிக்கு ஏறியிருந்த வெயில்… இருவரையும் கொளுத்தும் போலிருந்தது.
சென்னை விமானநிலையத்தின்.. தரிப்பிட வளாகத்தில்.. கண்களில் கூலர்ஸூடனும்… தன் தோள்புஜங்களை இறுக்கிப் பிடித்திருக்கும் மஸிள் ஃபிட் டீஷேர்ட்டுடனும்.. முரட்டு டெனிமுடனும் நின்றிருந்த போதும்… அவன் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாகவே இருந்தான்.
இவள் தான் இரண்டு மணித்தியாலப் பிரயாணத்திற்கே… வாடி வதங்கிய தக்காளிப் போல சோர்ந்து போய் நிற்பது விந்தையிலும் விந்தை!!
அங்கே அவன் ஏற்கனவே திட்டமிட்டது போல தரித்து நிறுத்தப்பட்டிருந்தது அவனுடைய அதிநவீன லம்போர்கினி வண்டி!!
கூர்க்கில் ஓட்ட தனி லம்போர்கினி வண்டி என்றால், சென்னையில் ஓட்டுவதற்கென்றே தனி லம்போர்கினி வண்டி.
இதைத் தவிரவும் அவனது செல்வ வளமையைப் பறைசாற்ற வேறென்ன வேண்டும்??
காரின் டிக்கியை தன் புஜங்கள் இரண்டும் இறுகிப் போய் பெரும் வனப்பாய் தெரியும் வண்ணம் திறந்தவன்.. அழுத்தமான காலெட்டுக்களுடன் நடந்து வந்து… அவளுடைய லக்கேஜ்ஜைத் தூக்கியதாக இருக்கட்டும்!!
அநாயசமாக எடுத்துக் கொண்டு போய் வண்டியில் வைத்ததாக இருக்கட்டும்!!
அனைத்திலுமே தனிவிதமான கம்பீரம் மிளிர்ந்திருந்ததையும் கூட சொற்பம் விடாமல்.. தன்னையும் மீறி இரசித்துக் கொண்டிருந்தாள் மதுராக்ஷி.
வேலை முடிந்ததும் அவனது அருகில் வந்தவன், “சரி வா… உன் வீட்டுல விட்டுட்றேன்..”என்றவனாக…தன்னவளுக்காக அவன் காரின் கதவுகளைத் திறந்து விட்ட போது ஏறிக் கொள்ளவேயில்லை மதுராக்ஷி!!
தன் கூலர்ஸை சிறு டென்ஷனோடு கழற்றியவனோ, “இப்போ என்ன??”என்று அவள் தன் வண்டியில் ஏறாமைக்கான காரணம் கேட்டான் அவன்.
விமானநிலைய தரிப்பிடத்திலும் கூட.. ஒற்றைக்கு ஒற்றை நின்று சண்டைப் பிடிக்கும் சண்டைக்கோழியானாள் அஜய்தேவ்வின் முன்கோபக் குயில்!!
“உங்க கூட கூர்க் வந்தா என்ன செய்வேன்னு சொன்னீங்க?? என் ஜிம்மியையும்.. மத்த எவிடென்ஸையும் திருப்பி தருவேன்னு சொன்னீங்கள்ல?? அப்போ கொடுங்க.. அப்போ தான் உங்க கூட வருவேன்..ம்ம்..கொடுங்க”என்று அவளின் உள்ளங்கையை நீட்டித் தான் சிறுகுழந்தை போலத் தான் கேட்டு நின்றாள் அவள்.
அவளின் வதனம் காட்டும் ஜாஜ்வல்லியங்கள் அனைத்தும் அற்பம் விடாமல்.. விழிகள் மிருதுவாக இரசித்தது காதல்க்காரனின் உள்ளம்.
இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டாது, “இப்போ என்ன உனக்கு உன் ஜிம்மி தானே வேணும்.. அதோ பாரு”என்று அவள் பின்புறமாகக் கைக்காட்ட.. அவன் பார்வையும் தான் திரும்பியது… நாயகன் கைக்காட்டிய இடத்தினை நோக்கி!!
அங்கே வெள்ளை சீறுடை அணிந்து நின்றிருந்த அவனுடைய கார் டிரைவரோ.. கைகளில் அவளது பொசுபொசு முடி கொண்ட மல்டிப்பூ வகை நாய்க்குட்டி ஜிம்மியை ஏந்தி நிற்பதைக் கண்டாள் அவள்.
ஜிம்மியைக் கண்டதும். இத்தனை நாள் காணாதிருந்த பிரிவுத் துயரில்.. கண்ணெல்லாம் கலங்கிப் போக, “ஜிம்மீஈஈ”என்று அவள் கைகள் நீட்டியது தான் தாமதம்!!
சாரதியின் கைகளில் நின்றும்… ஆற்றாமையுடனும், அவள் தன்னைத் தேடி வராத ஆத்திரத்துடனும், “வள்.. வள்”என்று குரைத்துக் கொண்டே.. அவள் மேலே பாய்ந்து தொற்றிக் கொண்டது ஜிம்மியும்!!
அவளை நக்கி நக்கி நிற்பதுவும், பின் தன் சீற்றத்தை வெளிக்காட்டும் வண்ணம், “வள் வள்”என்று குரைப்பதுமாக இருந்த ஜிம்மியைத் தன் கன்னத்தோடு ஒட்டி அணைத்துக் கொண்டாள் அவள்.
ஜிம்மியோ… அவளை சாடுவது போல பற்களைக் காட்டி.. ஓயாது உறுமிக் கொண்டே குரைத்திருந்தது.
நாயின் பாஷை புரிந்தது போல நம் நாயகியும்.. அதன் தாடைகளைச் சொறிந்து விட்டுக் கொண்டே,
“ஸாரி ஸாரி ஜிம்மி.. நான் பண்ணது தப்பு தான்.. உன்னை விட்டு போயிருக்கக் கூடாது தான்டா… ஸாரி”என்று எக்கச்சக்கமான ஸாரிக்களை கேட்க.. அவள் நாய்க்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் முத்தங்களையே விழிகள் ஏங்கித் தவிக்கப் பார்த்திருக்கலானான் அவன்!!
“என்கிட்ட இல்லாதது அந்த நாய்க்கிட்ட என்ன இருக்கு?? பேசாம நானும் ஜிம்மியா பொறந்திருந்தா… அவ பக்கத்துலயே இருந்திருக்கலாம்… அவளை உரசி உரசி.. ஹாஹ்”என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே.. தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அந்த கணம்.. தன் கம்பீரக் குரலை சொருகிக் கொண்டே.. இடையில் புகுந்தவனோ, “ம்கஹம்… உன் ஜிம்மி தான் உன் கைக்கு வந்திருச்சுல்ல… அப்போ கெளம்பலாமா..? உன் வீட்டுக்கு?”என்று அவளை அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தான் அவன்!!
அவளோ மீண்டும் மல்லுக்கு நிற்கும் பூனைக்குட்டியாகத் தான் அவனைப் பார்த்து சீறினாள்.
“அதெப்படி முடியும்… என்னோட மற்ற எவிடென்ஸ?? அதையும் கொடுங்க… இத்தோட இதையெல்லாம் ரத்து பண்ணிக்கலாம்.. நான் ஒண்ணும் திருடி கிடையாது… இனிமேல் நீங்க பாஸ்.. நான் உங்க எம்ப்ளாயி.. அவ்ளவு தான்… ம்ம்ம்.. சீக்கிரம் என் எவிடென்ஸ் கொடுங்க”என்று ஒரு கையில் ஜிம்மியை ஏந்திக் கொண்டே மறுகையை நீட்டினாள் அவனிடம்!!
அவளின் வார்த்தைகள் “இனிமேல் நீங்க பாஸ்.. நான் உங்க எம்ப்ளாயி மட்டும் தான்”என்ற அந்நியமான வார்த்தைகளும் கூட வலி தந்தது அஜய்க்கு.
அதனை உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்தவன்.. அவளை மீண்டும் சீண்டிப் பார்க்கத் தான் நாடினான் போலும்.
“யூ ஆர் கரெக்ட்.. நான் உன் பாஸ்.. நீ என் எம்ப்ளாயி… அப்படீன்னா பாஸ் சொல்றதைத் தானே நீ கேட்கணும்.. இஸிட்?”என்று கட்டளையிடும் குரலில் கேட்டான் அவன்.
அதற்குப் பதிலாக அவளது கண்ணிமைகளும் தான் ஒப்புவது பச்சக் பச்சக்கென்று அடித்துக் கொண்டது.
அவளது ஜிம்மி.. சூட்டுக் கதகதப்பு தேடி படுத்திருக்கும்.. அவளது கொங்கைகளில் அவனுக்கும் படுத்துக் கொள்ள ஆசை தான்.
காலம் கனிந்து வரும் நாள் மிக விரைவில்!!
ஒரு பெருமூச்சுடன்.. அவளது மலைமுகடுகளில் நின்றும் விழிகளை மேலேற்றிக் கொண்டவன்.. ஜென்டில்மேன் அவதாரம் பூண்டவனாகத் தான் அவளோடு அளவளாவினான்.
“நீ… என்னை.. உன்.. வீட்.. டுக்கு.. கூட்டி.. போற.. அப்போ தான் மற்ற எவிடென்ஸ் தருவேன்..”என்று நிதானமாக.. ஒவ்வொரு வார்த்தைகளையும் இடைவெளிவிட்டு அழுத்தி அழுத்தி சொன்னான் அவன்.
இவளுக்கோ… அவனது கோரிக்கை கேட்டு உதடுகள் கோணலாக வளைய… இமைகளோ ஓயாது அடித்துக் கொண்டது அவனது அடுத்த கட்டளை கேட்டு.
நகங்களை பற்களால் அவஸ்தையுடன் கடித்துக் கொண்டே யோசிக்கலானாள் அவள்.
“எனக்கு ஒரு ஆப்ஜக்ஷனும் இல்லை அஜய்… பட் .. ராம்கிய நினைச்சா தான் பயமா இருக்கு… சும்மாவே பொண்ணுங்க இருக்கற வீடுன்னு.. என்னோட ஆண் நண்பர்களை கூட்டி வந்தாலே… திட்டுவாரு.. இந்த லட்சணத்துல.. நான் உங்களையும் கூட்டிப் போனா??”என்று அவனுக்கு தன் இக்கட்டான நிலையை எடுத்தியம்பிக் கொண்டிருந்த போதே… மின்னல் வெட்டினாற் போல..
மூடிய இமைத்திரைக்குள் வந்து போனது.. தந்தையின் ரௌத்திர முகம்!!
அதுவும் குளோசப்பில்!!
பதறியடித்துக் கொண்டு விழித்தவளோ, “ஐயோ.. ராம்கீ திட்டும்..”என்று நெஞ்சு மத்தியில் கைவைத்து அலறிக் கொண்டே தொடர்ந்து சொன்னாள் மதுராக்ஷி.
“நோ வோ அஜய்.. ராம்கீ… இன்னொரு ஆளை வீட்டுக்கு கூட்டி வர்றத பிரியப்பட மாட்டாரு…அல்லோவ்வும் பண்ண மாட்டாரு..அதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்…” என்று அவள் கூறிக் கொண்டே.. நாடியைத் தட்டித் தட்டி தீவிரமாக யோசிக்க… அவனுக்கும் தாங்க முடியாமல் சிரிப்பு தான் வெடித்து வரும் போலிருந்தது!!
ஆயினும்.. அவள் முன்னிலையில் சிரித்து வைக்காமல்.. தன் இதழ்களுக்குள்ளேயே அச்சிறுப்பை ஒளித்து வைக்க படாதபாடு தான் பட்டுப் போனான் அவன்!!
அவன் தான் அவள் வீட்டு மாப்பிள்ளையாயிற்றே??
பெண்ணைக் கட்டிக் கொள்ள விழையும் மாப்பிள்ளையும் இல்லம் வந்தால்.. யார் என்ன கூறி விட முடியும்??
அது அறியாமல்.. அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக திட்டம் போடவாரம்பித்தாள் மதுராக்ஷி..அதுவும் விமான நிலைய வளாகத்தில் வைத்து.
அதற்குள்ளாக அவனும் ஏதோ யோசித்து வைத்திருந்தான் போலும். அவளை நோக்கியவன், “ஏன்.. இப்டி செய்தால் என்ன மதுராஹ்?”என்று அவள் பெயரை மோகனமாய்.. மதுரமாய் உச்சரித்துக் கொண்டே கேட்டான் அவனும்.
“எப்டி?” என்று அவளும் கேட்டாள்.
“ கையில ஜிம்மியோட என் கார்ல போய்… உன் வீட்ல ரெண்டு பேரும் இறங்கறோம்.. வீட்ல அம்மா அப்பா கேட்டால்.. நிரோஷனா வீட்லயிருந்து நடந்து வரும் போது… வழியில் கண்ட உன் பாஸ் அஜய்… கார்ல ஏத்திக்கிட்டு வந்துட்டாருன்னு சொல்லு… சிம்ப்பிள்”என்றான் பேரழகாய் இரு தோள் குலுக்கி!!
அவளுக்கோ… அவளுடைய பாஸ் அஜய்தேவ்… இப்படியொரு கனகச்சிதமான யோசனை சொல்லக் கூடுமென்று கனவிலும் எதிர்பார்த்திருக்காதவள் ஆயிற்றே??
அதனால் விழிகள் விரிய ஆச்சரியத்துடன் நின்றவளுக்கு… மனமோ அவனிடம் சிக்குப்பட்டிருக்கும் ஆதாரத்திலேயே சுற்றிச் சுழன்று நின்றது.
“அஜய் பாஸ்… சாஆர்…. வீட்டுக்குப் போறது ஓகே தான்… ஆனா.. என்னோட எவிடென்ஸ் எல்லாம்… எப்போ என் கையில கிடைக்கும்னு… சொன்னீங்கன்னா…” என்று முடிக்காமல் இழுக்க….
இடையில் புகுந்தவனோ… காட்டமான குரலில், “இப்போ என்ன அவசரம் உனக்கு?? .. நான் தரமாட்டேன்னு சொன்னேனாஆ…. முதல்ல உன் வீட்டுக்கு என்னை அழைச்சிட்டுப் போ.. அதுக்கப்புறம் அடுத்த நாள் எல்லாம் பார்த்துக்கலாம்” என்றதோடு பேச்சைக் கத்தரித்துக் கொண்டவனின் முகத்தில்.. பழைய விறைப்புத் தன்மை மீண்டும் குடிபெயரலானது.
தன் அதீத அழுத்தமான காலெட்டுக்களுடன் நடந்து சென்று.. தன் காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டவனோ… சட்டைப்பையிலிருந்து… நூறு ரூபாய் நோட்டை… அழகாய்.. தன்னிரு விரல்களுக்கிடையில் இழுத்துப் பிடித்து… தன் பணியாளனைத் தான் அருகே அழைத்தான்.
பணியாளன்??
ஆமாம், ஜிம்மியையும், காரையும்.. அவன் சொன்ன உரிய நேரத்திற்கு விமானநிலையம் அழைத்து வந்திருந்த அதே பணியாளன்!!
வெள்ளைச் சீறுடை அணிந்திருந்த அவனது சாரதி!!
அருகே வந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு மரியாதையாக நின்ற சாரதியிடம்.. காருக்குள் இருந்த வண்ணமே…
ரூபாய் நோட்டை நீட்டியவன், “ம்ம்… டேக் இட்.. நீங்க ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிருங்க பழனி….”என்று.. சாரதியை அம்போ என்று விமானநிலையத்தில் விட்டுச் செல்லாமல் கரிசனையுடன்…. வீட்டுக்கும் தான் போக ஏற்பாடு செய்தான் அவன்!!
கருணையுள்ளம் கொண்ட அஜய்!! அஜய் தேவ் சக்கரவர்த்தி!!
ஊருக்கே கருணை காட்டுபவன்… இவளிடம் கொஞ்சம் இறங்கி வந்து.. இரக்கம் காட்டக கூடாதா?? ஏங்கியது அவள் மனம்!!
ஸ்டியரிங் வீலில் ஒரு கை நிரந்தரமாகப் பதிந்திருக்க…. தலை நீட்டி..வெளியே நின்றிருக்கும் அவளை எட்டிப் பார்த்து, “மதுரா… நீ இப்போ வர்றீயா.. இல்லை.. நான் வீட்டுக்குப் போகட்டுமா??”என்று கேட்டது மட்டும் தான்!!
அதற்கு மேலும் பொறுமையென்பது ஒரு சிறிதும் இலாதாளாய் நின்றவளுக்கோ அவன் சொற்களைக் கேட்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில், “என்னமோ அவன் கிட்ட… பிச்சை கேட்டது போல… அப்பறம் பார்த்துக்கலாம்னு சொல்றான்… யோவ்… நான் என் ஐட்டம்ஸ் தானேய்யா கேட்கறேன்.. . யோவ் ஹிட்லரே… நீ ரொம்ப ஓவராத்தான் போறேய்யா…. இரு இரு என் வீட்டுக்குத் தானே வர்ற.. உன்னை என்ன பண்றேன் பாரு” என்ற படியே…
காற்றில் இரு கைளால் முறுக்குப் பிழிந்தவள்.. தன் வலது காலை.. ஓங்கி தரையில் அடித்துக் கொள்ளவும் செய்தாள். இயலாமை ததும்பிய சீற்றத்தின் விளைவினால்!!
அவனோ…இவளை விடவும் பொறுமையேயற்றுப் போனவனாக.. ஹாரனை.. அதீதமாக அழுத்திக் கொண்டேயிருக்க…. காது ஜவ்வு கிழிந்து விடும் போல இருந்தது சப்தத்ததில்!!
இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு, “வ்வர்றேஏஏஏன்ன்… வர்ர்றேஏஏஏன்ன்!!”என்று கத்திக் கொண்டே பத்ரகாளி அவதாரத்தில் நின்றவள்…. குடுகுடுவென ஓடிப் போய்.. கதவு திறந்து அவன் பக்கத்தில் ஏறிக் கொண்டாள்.
காரும் தான்.. ஸ்மூத்தாக தரிப்பிட வளாகத்தை விட்டும் வெளியேறலானது.
இவளுக்கோ அவன் படுத்தும் பாட்டில்… முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தாலும் கூட… அதையெல்லாம் அணுவும் கூட வெளியில் காட்டாது… “ஈ”யென்று இளித்த முகமாகத் தான்… பயணம் முழுவதும் வரலானாள்.
இருந்தாலும் அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்வது பற்றிய தயக்கத்துடனேயே இருந்தவள்.. அடிக்கடி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டும், கைகளை பதற்றமாக பிசைந்து கொண்டும் தான் வந்தாள்!!
அவள் ஏதோ தன்னிடம் சொல்ல முயல்வதும், தயங்குவதுமாக இருப்பதைக் கண்டவனுக்கு…அவள் இதயம் புரிந்தாலும்.. அவளே வாய் விட்டுக் கேட்கட்டும் என்று அமைதியாகவே வரலானான்.
இமைகள் படபடத்து அடங்க…மதுராக்ஷியோ.. “நான் வீட்டுக்குப் போனதும் அப்பாக்கிட்ட எப்படி உங்களை இன்ட்ரோ கொடுக்கறது அஜய்…??”என்று தன் பரபரப்பிற்கான கேள்வியை அவனிடமே கேட்டும் விட்டிருந்தாள்.
இதற்குத் தானா..இத்தனை களிநடனமும்??
மனதோடு பூத்த புஞ்சிரிப்பை.. மறைத்துக் கொண்டு… காரை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தவனும் தான் வாய் திறவலானான்.
“சும்மா…. அஜய்.. அது போதும்..”என்று மிக மிக எளிமையாக ஒரு பதிலைக் கொடுத்து.. அத்தோடு பேச்சை கத்தரித்தும் கொண்டான் அவன்.
அவன் தான்.. ராம்கி வீட்டு மாப்பிள்ளையென்றறியாமல் தந்தை என்ன சொல்வாரோ என்று பதறிக் கொண்டே தான்.. சதா சர்வகாலமும் யோசனையில் வந்தாள் மதுராக்ஷி!
அவளோ தந்தை முகஞ்சுளிக்கக்கூடும்!! அஜய் சென்றபின்.. அவளை நடுக்கூடத்தில் இருத்தி வைத்து திட்டக் கூடும்!! என்றெல்லாம் ஏடாகூடமாக ஏதேதோ எதிர்பார்த்திருந்தாள் நாயகி.
ஆனால் அவள் நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று!!
அவளும், அவனுமென.. இருவருமாய்… வீடு போய் சேர்ந்த போது..ஞாயிற்றுக்கிழமை அல்லவா??
எந்த வேலைப்பளுவும் இல்லாது… வீட்டிலேயே.. அதுவும் ஹாலிலேயே.. சோபாவில் ஜம்மென்று அமர்ந்து தொலைக்காட்சி தான் பார்த்திருந்தார் அவளின் முரட்டுத் தந்தை. ராமகிருஷ்ணன்!!
வீட்டு வாசலில்.. ஒரு கையில் ஜிம்மியை அணைத்துப் பிடித்துக் கொண்டு.. மறுகையிலை.. டிவாலிங்க் லக்கேஜினைப் பிடித்துக் கொண்டு… அஜய்யோடு நின்ற காட்சி??
ஏதோ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச் சென்ற பெண்பிள்ளை. காதலனோடு மீண்டும் வீடு வந்த மருளும் முகபாவனையுடன் தான் இருந்தது.
“சன்டே ஸ்பெஷலாக”… தாயின் கைவண்ணத்தில்.. கோழிக் குருமாவின் மணமும்,இதர அசைவ உணவுகளின் வறுவல் மணமும் வீடு பூராகவும் கமகமத்துக் கொண்டிருந்தது.
வீட்டில் நுழையும் போதே மூக்கையிழுத்துப் பிடித்து மணத்தை நுகர்ந்நவளோ.., “வாவ் அம்மாஸ் ஸ்பெஷல்.. இன்னைக்கு ஒரு பிடி!! ”என்று கூறி விட்டு… நாவை அவனிருப்பதால் கடித்துக் கொண்டு…. அவனைத் தான் நிமிர்ந்து பார்த்தாள் மதுராக்ஷி.
அவளின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும், அது காட்டும் ஆயிரம் அபிநயங்களையும் இரசித்துப் பார்த்திருந்தவனுக்கு… அவளது அசடுவழிதல் புன்னகை கூட.. பிடித்திருந்தது.
இடம், பொருள், நேரமென எல்லாமும் மறந்து.. அவளது இரு கன்னத்தினையும்..அவள் மறுக்க மறுக்க விடாப்பிடியாகப் பிடித்து.. இதழோடு இதழ் கோர்த்து முத்தம் வைக்கவும் தான் பேராசை பிறந்தது ஆண்மகனுக்கு!!
அடக்கிக் கொண்டான்!!
வாசலில்நின்றபடியே ஹாலிலிருந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த தந்தையை… “அப்பா” என்று மகளும் அழைத்தாள்.
அவளின்… குரல் கேட்டு… வாசல்பக்கம்.. சோபாவிலிருந்த படியே தலைத் திரும்பினார் தந்தை.
திரும்பிய தந்தையின் முகம்.. “மகளோடு வந்திருப்பவன் யாரிவன்?” என்று தெரியாமல்..குழப்பத்திற்குள்ளாகும் என்றெண்ணியவளுக்கு.. சர்வ நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சியது.
மாறாக, அப்படியே எழுந்தவரோ.. மலர்ந்த முகத்துடன்… வாயெல்லாம் பல்லாக நின்றவரின்.. அந்த தரிசனம்.. அது அவளுக்கு முற்றிலும் புதிது!!
மூன்று நாட்களாக காணாது கண்ட அன்புப் புதல்வியைக் கண்டதும் ஆறாக ஊற்றெடுத்துப் பாய்கிறதோ அன்பு??
நிமிடத்தில் தப்புக் கணக்கும் தான் போட்டுக் கொண்டாள் அவள்!! அது தான் இல்லவேயில்லை!!
அவரோ.. அவர்களை நோக்கி… இரு கைகளையும் நீட்டியவராக…. நடந்து வர… தந்தை தன்னை அணைக்கத் தான் வருகிறார் போலும் என்றெண்ணி.. லக்கேஜை போட்டு விட்டு அன்பொழுக.. இவளும் தான் கை நீட்டினாள் பதிலுக்கு.
“அப்பா…”என்று முத்துப்பற்கள் காட்டி நகைத்து… பாசத்தோடு தந்தையை அழைத்த வண்ணம் அவள்!!
அவரோ..தன் முன்னே அணைப்பதற்கு ஏதுவாக நீட்டப்பட்ட மகளின் கையினை உதாசீனம் செய்தவராக.. அங்கே நெடுமரம் போல நின்றிருந்த அஜய்யை.. அப்படியே தாவி.. தழுவி அணைத்துக் கொள்ளவும் செய்தார்.
ஜென்டில்மேனுக்கு ஜென்டில் மேன் அணைத்துக் கொள்வது போல!!
இவளோ.. அன்றைய நாளின் இரண்டாம் முறையாக அசடுவழிய.. நீட்டப்பட்ட தன் கைகளை தன்னிடம் இழுத்துக் கொண்டு…. இதழ்களை அழுந்த மூடிக் கொண்டு தான்.. ஆச்சரிய அதிர்ச்சியுடன் நடப்பதையெல்லாம் பார்க்கலானாள்.
அவரது தந்தையோ.. “வாங்க மா…”என்று அவனை ‘மாப்பிள்ளை’ என்று முழுமையாக அழைத்து வரவேற்க முற்பட்ட போது.. அவளறியாமல் இடையிட்டான் அஜய்.
அவளறியாமல் தந்தை மட்டும் அறியும் இரகசியக் குரலில், அணைத்திருந்த அவரது காதுக்குள் “மாப்பிள்ளையெல்லாம் எதுக்குஅங்கிள்??.. அஜய் இஸ் இனாஃப்”என்று கூறவே வாங்க மாப்பிள்ளை என்று கூற வேண்டியவர்,
“மா”விலேயே நிறுத்தி விட்டு.., “ வாங்க அஜய்..”என்று தான் வரவேற்கலானார்.
அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவேயில்லை. ஒருவேளை தந்தை அவளைப் பார்த்து.. “வாங்க மா” என்று செல்லமாக கூறியிருப்பாரோ??
அப்படித்தான் போலும்.
தந்தைக்கு முன்னாடியே அஜயைத் தெரியுமா?
இது அறியாமல் அவள் தான் அஜய்யை வீட்டிருக்கு அழைத்து வர பயந்தாளா?
“எது நடக்கிறதோ.. அது நன்றாகவே நடக்கிறது” என்று எண்ணிக் கொண்டு நடப்பதையெல்லாம் ஏதும் பேசாமல் வேடிக்கைப் பார்க்க மட்டுமே முனைந்தாள் அவள்.
அஜய்யின் தோள் மீது கைப்போட்டுக் கொண்டு உள்ளே அழைத்துப் போன ராம்கியோ… ஒரு சிறிதும் தான் ஈன்றெடுத்த மகள்.. அங்கு நின்றிருப்பதைக் கண்டு கொள்ளவேயில்லையே??
அவளோ பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு அழாத குறையாக வாசலிலேயே நின்றிருக்க.. ‘அ.. அப்பா.. அப்போ நானு?’ என்று நின்றிருக்கலானாள் மதுராக்ஷி.
உள்ளிருந்த அவளின் தாயை குரல் கொடுத்து அழைக்கலானார் டாக்டர். ராமகிருஷ்ணன்!!
“மீனாட்சீஈஈ..…மீனாட்சீஈ….சீக்கிரம்.. வந்து… யாரு வந்திருக்கான்னு பாரேன்” என்று தந்தை சமையல்கட்டிலிருந்த தாயை அழைக்க.. தாயும் சமையலறையில் இருந்து…
யாரோ எவரோ என்று இடுங்கிய விழிகளுடன் எட்டிப் பார்த்தார்.
மறுவிநாடி… அவள் தாயின் விழிகளும் தான் விரிந்தது இன்பமாக!! இனிமையாக!!
சேலைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே.. தன் மாப்பிள்ளை அருகே வந்த தாயோ.. “அடடே வாங்க தம்பி.. சாப்பிட்டீங்களா?? .முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. காலும் ஓடல.. கையும் ஓடல…. நீ வாங்க சாப்பிடலாம்.. கை அலம்பிட்டு வாங்க.. நான் சாப்பாடு பரிமாறுறேன்…” என்று தாய் வந்தவனை முகம் மலர வரவேற்றதுமில்லாமல்.. சாப்பாடு பரிமாறும் அளவு வரை செல்ல… அவளுக்கோ ஆச்சரியத்தின் உச்சம் அந்நன்னாள்!!
அவள் வீட்டில் தாய் தந்தைக்கு கூட இவனை தெரியுமளவுக்கு.. இத்தனை பிரபல்யமாகியிருக்கிறானா அஜய்??
அதில் வேறு இவளும் இடையிட்டு, ‘.. இவனை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா..?’ என்று கேட்டு வைத்து.. .. அவர்களின் முன்னிலையில் பல்பு வாங்க விரும்பவில்லை அவள்.
கையிலிருந்த ஜிம்மியும்.. அவளை விட்டும் துள்ளி இறங்கி.. தன் பழைய எஜமானனின் வீடு வந்த சந்தோஷத்தில்.. வாலாட்டிக் கொண்டே ஓடியது.
ஏதும் பேசாமல் அமைதியாக… லக்கேஜை இழுத்துக் கொண்டு உள்ளே போய் வைத்து விட்டு வெளியே வந்த போது.. தங்கை திவ்யாக்ஷியும் கூட… மாடிப்படி விட்டு கடகடவென ஓடி வருவதுவும் புரிந்தது.
அறையிலிருந்து வந்த திவ்யாவைக் கண்டதும்… இவளோ.. தங்கையை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு,
“வாடீவா.. நீ மட்டும் தான் பாக்கீ.. வாங்க அஜய் மாமான்னு நீயும் கூப்பிட்டு மடியில் வைச்சு கொஞ்சு..”என்று வேண்டா வெறுப்பாக கூற.. இளையவளோ.. நாயகியை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றி விட்டுப் போனாள்.
“நீ சொன்னாலும் சொல்லலேன்னாலும்… மாமான்னு அவரைக் கொஞ்சத் தான் போறே?”என்று சொல்லி விட்டு…
கடகடவென மாடிப்படி இறங்கி போனவள்..
“மாமாஆஆ”என்று… அவனது கையைக் கட்டிக் கொண்டு தான் நின்றாள் இளையவள்.
இங்கே.. திவ்யா தன்னைக் கடுப்பேற்றுவதற்காக அஜய்யுடன் ஈஷிக் கொண்டு நின்ற கோலம் கண்டு… மனத்துக்குள் பற்றிக் கொண்டு வரவே.. திகைப்பில் விரிந்த வாயை.. கைவைத்து பொத்திக் கொண்டாள் மதுராக்ஷி!!
“ஆஆஆ… ஒரு பேச்சுக்கு மாமான்னு சொன்னா.. என்னை கடுப்பேத்த வேணும்னு மாமான்னு போய் ஈஷிட்டு நிற்கிறயாடீ… இரு இரு உனக்கு இருக்கு!!”என்று தூரத்தில்.. அஜய்யோடு ஒட்டி இழையும் தங்கையைப் பார்த்துக் கூறிக் கொண்டவள் அறியாள்.. அஜய்…. திவ்யாவின் மாமா தானென்று.
அதாவது அவளது வருங்கால கணவன் தானென்று!!
அதே சமயம்.. இப்போது தான் வீடு வந்து சேர்ந்திருக்கும் ஜிம்மியின் நினைவு வரவே… மாடிப்படிகளின்.. இறுதிப்படியில் ஏறி நின்றிருந்தவள்… கண்களை விட்டுத் துலாவி ஜிம்மியைத் தேடலானாள்.
“ஆமா.. என் ஜிம்மி எங்கே?”என்று முணுமுணுத்த வண்ணம்!!
அதோ அங்கே!!
சாப்பாட்டு மேசையின் நாற்காலிகளுள் ஒன்றில்… அமர்ந்து.. நாக்கைத் தொங்க விட்டபடி… அவர்களின் அன்பு அரவணைப்பைத் தான்… மிருதுவான விழிகளுடன் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது ஜிம்மி.
அவளோ மானசீகமாக ஜிம்மியுடன் உரையாடும் குரலில், “பார்த்தீயா பார்த்தீயா ஜிம்மி ?? இது நாள்வரைக்கும் உன்னைக்காணாம.. ஒருமாதிரி இருக்குன்னு சொன்ன உன் ராம்கீய.. நீ வந்ததும்… உன்னை கண்டுக்காம.. அந்த வீணாப் போனவனைக் கொஞ்சிக் குலவிட்டிருக்கார்… நீ என்ன பண்ணனும்?? எனக்கு சேர வேண்டிய அன்பை எடுத்துட்டியான்னு.. கோபத்தில் அவன் டிக்கியை கடிச்சுக் குதற வேணாமா??.. அதை விட்டுட்டு வாய்ப் பார்த்துட்டிருக்க…? வெட்கமாயில்லை..”என்று மனம் நிறைய தன் ஜிம்மியைத் திட்டித் தீர்த்திருப்பாள் அவளும்.
நாய்களுக்குத் தான் குறைந்த டெஸிபல் ஒலிகளும் தான் துல்லியமாக கேட்குமாமே??
இவளின் முணுமுணுப்பும் தான் கேட்டதுவோ ஜிம்மிக்கும்??
நாற்காலியில் நின்றும் நாலுகாலில் நின்ற ஜிம்மியோ.. தூரத்தே நின்றிருக்கும் அவளை நோக்கி, கோபத்தில் உறுமிக் கொண்டே, “வள் வள்”என்று குரைக்கலானது.
அது குரைத்ததும்.. சற்றே பின்வாங்கி அஞ்சி நின்றவளோ, மீண்டும் அதைப் பார்த்து முணுமுணுக்கும் குரலில்,
“அவன் நாலு நாளா நல்லா பார்த்துக் கிட்டான்ற நன்றியுணர்வு..??ஆனா நான் உனக்காக கூர்க் வரை போய் வந்திருக்கேன்…ச்சீ நாயே என் கூட பேசாத” என்று அதைத் திட்ட.. இம்முறை முன்பை விட அதிகமாக, “வள் வள்”என்று குரைத்தது அது!!
மனதால் அதனுடன் உரையாடி விட்டு மதுராக்ஷி…நிமிர்ந்து பார்த்த பொழுது திவ்யாவும் முகம் மலர அவனுக்கு கைக்கொடுத்துக் கொண்டிருப்பது புரிந்தது.
அதைக் கண்டதும்…ஒரு விதமான பொறாமை அவளையும் அறியாமல் ஊற்றெடுக்க.. டீ பாய்லர் போல சூடாக.. மூசு மூசு வென மூச்செடுத்துக் கொண்டு நின்றாள் அவள்!!
அவனோ… திவ்யாவுக்கு கைக் கொடுக்கும் போது.. பட்டென்று தன் மந்தகாச விழிகளைத் திருப்பி… அவளைப் பார்த்த போது… காதலியின் விழிகளில் துளிர்க்கும் பொறாமை… அவனை ஏகத்துக்கும் வானத்துக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் குதிக்கத் தான் வைத்தது!!
பின்னே.. தங்கைக்கு கைக்கொடுத்தால் இத்தனை பொறாமை ஹார்மோன்கள் ஊற்றெடுக்கின்றனவே??
எனில், இது லவ் தானே மதுராக்ஷி! – அவன் மனம்.. அவளிடம்.. கேள்வியும் கேட்டது.
அவனின் காதலின் வீரியம் அறியாமல் நின்ற மங்கையோ…. தூரத்தில் நின்ற வண்ணமே அஜய்யிடம்,
“நீங்க பேசிக்கிட்டிருங்க.. அஜய்!! … நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துர்றேன்”என்று கூறிய பொழுது….
அவனருகே நின்றிருந்த தந்தையோ பட்டெனத் திரும்பி, “.. என்னமா தம்பிய.. அஜய்ன்னு… பேர் சொல்லி கூப்பிடுற..?” என்று கேட்டார்.
அவளோ.. சீற்றத்தின் உச்சத்தில்… இரகசியக் கிசுகிசுப்புக் குரலில்… “அப்போ உங்களை மாதிரி தம்பின்னு கூப்பிடட்டாப்பா…? இவனுக்கு இந்த மரியாதையே பெருசு… இதில் வேறு பெயர் சொல்லி அழைக்கக் கூடாதாமா… வேறெப்டி கூப்ட.. மாமோய்ன்னா?”என்று ஏகத்துக்கும் பொறிந்து தள்ளினாள்.
தங்கள் வீட்டு மாப்பிள்ளையை.. இப்படி.. காதுபட திட்டி வைத்தால்… தந்தையும் சும்மா இருக்கக் கூடுமா என்ன?? அதனாலேயே.. மென்மையாக முணுமுணுத்து வைத்தாள் அவள்!!
அவள் தன்னைத் திட்டுவது அறிந்து.. அதனையும் சுவாரஸ்யமான கண்களுடன் ஏற்றிருந்தவனுக்கு… தந்தை அவளை ஒரு சொல் சொன்னது கூட பொறுக்காமல் போனது.
அத்தனைக்கு காதல் உன்மத்தம் அவளின் மீது!!
பட்டென்று இடையிட்டவனோ, “அது வேறொண்ணும் இல்லை அங்கிள்.. கேம்ப்பஸ் படிக்கிற காலத்தில இருந்து.. அஜய் அஜய்ன்னே கூப்பிட்டு பழகிட்டாள்ல.. அது தான்…அப்டியே அஜய்ன்னு வருது… உங்களுக்குத் தெரியுமா அங்கிள்… நான் கேம்பஸ் படிக்கும் போது கொழு கொழுன்னு இருந்தேன்னா… அப்போ.. மதுராக்ஷி… என்னை எப்படி கூப்பிடுவான்னு தெரியுமா அங்கிள்?”என்று கேட்டு…அவன் முடிக்கவேயில்லை.
“எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்..மாமாவ அக்கா எப்டி கூப்பிடுவான்னு எனக்கு நல்லா தெரியும்… குண்டு பூசணிக்கா.. குண்டு குண்டு பூசணிக்கா…”என்று ஏதோ ஜென்ரல் நாலேஜ் குவஸ்டினுக்கு விடை சொன்னது போல..சொல்லி விட்டு… சந்தோஷத்தில் வாய் மூடி கிளுக்கி நகைக்கவும் செய்தாள் தங்கை திவ்யாக்ஷி.
அவனுமே அதனை கேஷூவலாக எடுத்துக் கொண்டு நகைத்து வைக்க.. தந்தை தான்.. தன் மூத்தப்புதல்வியின் சீரிய ஒழுக்கத்தைக் கண்டு… ஏகத்துக்கும் அவளை முறைத்து வைக்கலானார்.
“என்னமா இதெல்லாம்..?” என்பது போல.. மதுராக்ஷியை ஒரு பார்வை பார்த்து வைக்க.. அவளோ… திக்கும் குரலில், “நா.. நான்.. டிரஸ் சேஞ்ச் ப.. பண்ணிட்டு வந்துர்றேன்பா” என்று சொல்லி விட்டு… பதில் கூட எதிர்பாராமல்.. அங்கிருந்து கழன்று அவளறைக்கு வந்தாள்.
அறைக்கு ஓடி வந்து படாரென்று கதவு சாத்தி நின்றவளோ, அறையே எதிரொலிக்கும் வண்ணம், “கடவுளே… ஏன் இந்த ஹிட்லர என் வீட்டுக்கு கூட்டி வர வைச்சஅஅஅ????”… என்று அறையே அதிரும்படி கத்தினாள் அவள்.
அப்படியானால், அஜய்க்கும் கூட… அவள் வீட்டிலுள்ளோரை.. முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அஜய்க்கும், தந்தைக்கும் சுமூகமான உறவு முறை கூட நிலவுகிறது??
எப்படி அவனைத் தெரியும்??
ஒருவேளை… தந்தையிடம் பல்லினைக் காட்ட… ஒரு பேஷன்ட்டாக வந்திருப்பானோ?? அப்படித்தான் போலிருக்கிறது.
என்று அவளே கேள்வியும் கேட்டு.. ஏதேதோ நினைத்து உளறி… பதிலும் சொல்லிக் கொண்டாள் அவள்!!
இவள் தான் அது தெரியாமல் இருந்திருக்கிறாளா என்று தன்னைத் தானே நொந்தபடி.. குட்டிக் குளியலொன்றையும் போட்டு விட்டு.. “கூந்தல் உலர்த்தி”யால்.. கூந்தலையும் உலர்த்தி…. உடைமாற்றி விட்டு.. மீண்டும் அவள் கீழே வந்த போது.. அவனுக்கு.. இராஜபோக விருந்து நடந்து கொண்டிருந்தது.
அவளது தந்தை, தாய் மற்றும் தங்கையுடன் போதாக்குறைக்கு.. அவளது நாய் ஜிம்மியும் கூட.. அவனைச் சுற்றி அமர்ந்து..
“இத சாப்பிடுங்க அஜய்.. இதை சாப்பிடுங்க அஜய்… இன்னும் கொஞ்சம் குருமா வைச்சுக்கங்க மாமா” என்று பலவகையில்… அவனை கவனித்துக் கவனித்து… பரிமாறிக் கொண்டிருக்கலாயினர்.
‘ஏன்.. அதையெதுக்கு தட்டில் வைச்சிக்கிட்டு.. பேசாம அவன் வாய்க்குள்ளேயே ஊட்டி விடறது..’ என்று அவள் மனத்திற்குள் நினைத்த நொடி தானது!!
நினைத்துக் கொண்டிருந்த போதே… தாய்மையெண்ணங்கள் ஊற.. அவளது தாய் மீனாட்சியோ… ஒரு பெரிய உருண்டைக் கவளமெடுத்து.. அவனது நாடி தாங்கி… அதனை ஊட்டியும் விட்டிருந்தாள்!!
தூரத்திலிருந்து பார்த்திருந்த அவளுக்கு வயிறு எரிந்தது.
ஞாயிற்றுக்கிழமையானல் அவளுக்கு கிடைக்க வேண்டிய ராஜமரியாதை எல்லாம் இன்று அவனுக்கு கிடைப்பதைப் பார்த்தால் வேறு என்ன செய்யும் அவளுக்கும்??.
அவள் அங்கு தேமே என்று நின்றிருப்பதைப் பார்த்த அவளது தந்தை தான், “வாம்மா.. நீயும் சாப்பிடு.”என்று அவளையும் சாப்பிட வருமாறு அழைத்தார்!!
தந்தையாவது அழைத்தாரே..அது வரையில் சந்தோஷமே!!
“எனக்கு பசிக்கல டாடி..நான் பசிச்சா போட்டு சாப்பிட்டுக்கறேன்” என்று ஓரமாக ஒதுங்கிக் கொள்ள…அவனுக்கோ ராஜ விருந்து.
ஹப்பா.. முட்டை, கோழி, மீன் வறுவல், நண்டு வறுவல்.. இறால்..கணவாய்….மட்டன்…!!!
இன்னும் அசைவ உணவு வகையறாக்கள் லிஸ்ட்டு போய்க் கொண்டேயிருந்தது அங்கே!!
“ஹப்பா.. இவனென்ன கடோத்கஜனின்… சொந்தக்காரனா?”-அவன் சாப்பிடுவது பார்த்து மலைப்பாக எண்ணிக் கொண்டாள் அவள்!!
உணவு முடிந்ததும் சூட்டு உணவின் சூடு தணிக்க.. அவனுக்கு மோர் வேறு!!!
அவனோ அத்தனையும் ஒன்று விடாமல்.. சாப்பிட்டு முடித்து விட்டு…. உணவுண்ட களைப்பு கொஞ்சம் கூட அற்று.. ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி… தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“இப்படியே டெய்லி சாப்பிட்டேன்னு வைச்சுக்குங்க அங்கிள்.. அப்றம் மறுபடியும்… குண்டாயிருவேன்.. மதுரா என்னை குண்டுபூசணிக்கான்னு தான்.. கூப்பிடுவா..”என்று அவன் கூற.. தந்தையோ… அவன் பெரிய ஹாஸ்யம் சொல்லவிட்டது போல.. கைகளை அடித்துக் கொண்டு.. அண்ணார்ந்து பார்த்து
“ஹஹஹா…” என்று நகைத்தார். நகைத்தார். நில்லாது நகைத்துக் கொண்டேயிருந்தார்.
அவரின் சிரிப்பை சகிக்க மாட்டாதவளாக நின்றிருந்தவளோ.. அவர்களுக்கிடையே புகுந்து.. “ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்ப்பா… டைம்மாயிடுச்சில்ல.. அஜய் நீங்க வேற… நாலரைக்கெல்லாம் கெளம்பணும்.. ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்கள்ல… வா.. வாங்க கெளம்பலாம்..”என.. அவனுக்கு கண்களால் வா என்று ஜாடை காட்டிச் சொல்ல..அவனும் தான் உல்லாசச் சிரிப்போடு எழுந்தான்!!
தன் மாப்பிள்ளையை அனுப்பப் பிரியப்படாத தந்தையோ.. படபடப்போடு எழுந்து, “ஈவ்னிங் ஆச்சுல்ல.. டீ சாப்பிட்டு போகலாம்.. சண்டே அதுவுமா… என்ன மீட்டிங்க்?”என்று கேட்க.. அவனோ அமைதியாய் கைக்கட்டிக் கொண்டு நின்றான்.
“நீ தான் பொய் சொல்றதில் எக்ஸ்பர்ட் ஆச்சே… சொல்லு.. உங்கப்பா கேட்குறாருல்ல பதில் சொல்லு?”என்று அவள் காதுக்குள் முணுமுணுக்க… அவனை.. தொங்கிப் போன முகத்துடன் முறைத்துக் கொண்டே தொடர்ந்தாள் அவள்!!
“அ.. அதுப்பா… அமெரிக்கன் கிளையன்ட்ப்பா.. உங்களுக்கு சொன்னா புரியாதுப்பா.. இப்பவே லேட்டாச்சு.. நாங்க கெளம்புறோம்”என்று ஏதேதோ உளறி சமாளித்த போது..
தந்தை “எங்கே” என்று கேட்பாரென்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
மாறாக, அஜய்யின் மீது சும்மாவே மரியாதை அதிகம் அவருக்கு.
மகளைக் காதலிப்பதை.. மகளிடம் கூட சொல்லாமல்… வீட்டில் சொல்லி.. முறைப்படி திருமண ஏற்பாடு செய்த அவன் மீது… என்றுமே அன்பும் அதிகம் அவருக்கு!!
அதனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல், “சரி… போகும் போது எங்கேன்னு கேட்கறது அவ்வளவு நல்லா இருக்காது.. சரி.. பத்திரமா போய்ட்டு வாங்க” என்று வழியனுப்பி வைக்க… அவளுக்குள் ஆச்சரியமாக இருந்தாலும்… அவனோடு வந்து வண்டியில் ஏறிக் கொண்டவள்.. இம்முறை அவள் தான் வண்டியை ஓட்டலானாள்.
மோகனம்-20
அவள் மிதமான வேகத்தில் வண்டியோட்டும் இலாவகத்தை.. உடல் முழுவதும் அவள் புறமாகத் திருப்பி… பார்த்து இமையாமல் இரசித்துக் கொண்டே வந்தவனோ,
“இப்போ நாம எங்கே போகப் போறோம்…?”என்று தான் அவளைப் பார்த்து கேட்டான்.
“ஆ.. சுடுகாட்டுக்கு தான்… பேசாம ஒரு குழிய வெட்டு படுத்துக்கலாம்னு தோணுது.. இப்போ போகத் தானே போறீங்க.. அப்போ பார்த்துக்கலாம்” என்று அவன் மீது எறிந்து விழுந்தவள்… வழிநெடுக தொணதொணக்கும் தொனியில்,
“உனக்கு யாரு அஜய் னு பேர் வைச்சாங்க.. பேசாம… தொல்லைன்னு பேர் வைச்சிருக்கலாம்..எவிடென்ஸ இவன் கையில் கொடுத்துட்டு.. நான் படும்பாடு.. அய்யகோ..”என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.
அவளுக்கு இவற்றையெல்லாம் உரத்த தொனியில் கேட்டு விட ஆசை தான்!! அதன் பின் கோபம் கொண்டு.. மூர்க்கம் கொண்டு..ஆதாரங்களை தரமாட்டேன் என்று விட்டால்??
அவள் நினைவெல்லாம்.. அவன் கையில் சிக்கியிருக்கும் ஆதாரங்கள் மீதேயிருந்தது.அதனால் இயன்றவரை பற்களைக் கடித்துக் கொண்டு அமைதியாகத் தான் வரலானாள் அவள்!!
ஆனால் அவனுக்கோ… அவளின் சீற்றம் தன் சீண்டலால் என்று புரிய.. அவனது சுவாரஸ்யம் அப்போதும் ஒரு சிறிதும் குறையவேயில்லை!!
கோபப் பெருமூச்சுக்களின் போது ஏறியிறங்கும் அவளது தனங்களையும், துடிக்கும் அதரங்களையும் தான் இமையாமல்.. காதலுருகப் பார்த்த வண்ணமே வந்தான் அவன்.
நேராக.. அவள் வண்டி போய் நின்றது என்னமோ சென்னையின் வங்கக்கடல் கரைக்கு!!
அது தானுங்கோ உலகின் நீளமான கடல்கரையைக் கொண்ட மெரீனா பீச்சிற்கு!!
தூரத்தே கடலும் வானும்… இலேசாக இருட்டடிப்பு கொண்டு இருண்டிருக்க… வெண்ணுரை பொங்கும் கடலலைகள் ஒன்றையொன்றை துரத்தி வந்து… இரைந்து கொணடேயிருந்தது ஓயாது!!
ஏதும் பேசாமல்.. வண்டியை உரிய இடத்தில் தரித்து விட்டு… கடலை நாடிப் போனவள்.. மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு… பாதங்களில் நீர் வந்து வந்து அணைத்துத் தழுவத் தான் அமைதியே உருவாக நின்றிருந்தாள் அவள்.
“ஆதாரங்கள்… அதைப்பற்றி பேச எப்படி வாயெடுப்பது.?”என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்.. அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அஜய்யின் முகத்தில் வந்து வந்து மோதிக் கொண்டிருந்தது.. காற்றுக்கு ஆடும்…. அவளின் கார்க்குழல் கற்றைகள்.
அக்கூந்தல் வாசனைக்கே நொறுங்கிப் போயிருந்தவன்.. திருமணம் வரை தாங்குவானா?? இப்போது தாலி கட்டி பெண்டாடிட.. ஆசை பிறந்தது அவனுக்கு!!
அவளின் பின்னெழில்களை இரசித்த வண்ணமே, “சன்டேய்ஸ்ல நீ வழமையா இங்கே வருவீயா மதுரா?”என்று அங்கு நிலவும் அமைதியைக் கலைப்பதற்காகக் கேட்டான் அவன்.
“ஆமா”- சற்றே ஆசுவாசப்பட்டிருந்த மனத்துக்கு… அவன் தொனியில்..இதயம் கொல்லன் உலைக்களமாக மீண்டும் கொதிக்கத் தொடங்க..எரிச்சல் மண்டிய குரலில் சொன்னாள்.
“ஏன் என்ன ஸ்பெஷல்??”என்று மறுபடியும் அவன் கேட்க… பட்டென அவனை நோக்கி.. அகண்ட விழிகளோடு திரும்பியவன்,
“சுண்டல் ஸ்பெஷல்… போதுமா??”என்று கடுகடுத்தவளைக் கண்டு சிரிப்போடு சிறு வேதனையும் பிறக்கத் தான் செய்தது!!
அவளருகே நடந்து வந்தவனின் வெற்றுப் பாதங்களிலெல்லாம்.. கடலலைகளின் வெண்ணுரை தேங்கி நின்றிருக்க.. அவன் நடை மட்டும் நிற்கவில்லை.
இனி அவள் தன் மனையாள் என்ற நினைப்பு!! அவனிடம் அதீதமாக இருக்கவே.. அன்று அவளின் கோபம் குறைக்க.. சற்று அதிகப்படியாகவே நடந்து கொள்ளலானான் அவன்!!
அவளின் தோளைப் பற்றி.. தன்னை நோக்கித் திருப்பியவன்.. குத்தும் கூர் கொங்கைகள் ஏகத்துக்கும் ஏறித்தாழ.. சீற்றப் பெருமூச்சுக்கள் விட்டுக் கொண்டிருப்பவளை கண்டான் அவன்.
அவளின் அழகு.. அன்றே எல்லை மீறிடத் தூண்டிக் கொண்டேயிருந்தது அவளை!! பெரிதும் முயன்று தன் பிரியம் அடக்கிக் கொண்டான் அவன்!!
அவனின் கைகள் அனிச்சையாய் மேலுயர… மெல்ல அவளின் நாடிப் பற்றியவன், “ஹேய் மதுரா… இங்கே பாரு… என் கண்ணைப் பாரு… என் மேல கோபமா?”என்று கிசுகிசுப்பான குரலில் தான் கேட்டான்.
உண்மையில் அவன் மீது ஏக சீற்றத்தில் இருந்தவள் தான் அவள்!!
ஆயினும்.. அவனின் அந்தக் குரல்.. இதயம் வரை அடையும் கிசுகிசுப்பான குரலில்.. மனம் கொஞ்சம் கொஞ்சமாக சீற்றம் தணிந்து.. சிவனிடம் அடங்கும் சதியாய்.. அடங்கிப் போவதும் ஏனோ?
அவனது கண்களை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு.. அவன் விழிகளில் தெரியும் ஏதோ ஒன்று.. அவளை ஈர்த்து.. இழுத்து.. கட்டிப் போடுவது போல ஒரு பேருணர்வு தோன்றியது.
அவளின் இமைகள் படபடத்தது அழகாய்;இதழ்கள் துடித்தது சன்னமாய்!! விரல்கள் காதுக்கிப் பின் சொருகியது கூந்தலை வேகமாய்!!
இவன் முகம்!! அவளெப்போதும்.. ஹிட்லர் முகம் என்று திட்டும் முகம்.. இன்று அடர்ந்த மீசை கொண்ட அதரங்களுடன்.. யௌவனமாய் தோன்றுவதும் ஏனோ??
அவனிதழ்களும் தான் ஏதோ அவளை நோக்கி நகர்ந்து… எதையோ சொல்ல விழைவதுவும் ஏன்??
அந்த முரட்டு அதரங்களைக் கண்டதும்… உடலெல்லாம் ஒரு சுக அவஸ்தை புதுமையாகப் பிறக்க… அவன் கையைத் தன்னிலிருந்தும் தள்ளி விட்டு ஓடி விட முடிவு செய்தாள்.
தன்னை விட்டும் கரை நோக்கி நகர்ந்தவளின்.. முன்னங்கையினை, “ஹேய் நில்லூ…”என்று சொல்லி இழுக்க… அவனின் இழுப்பு விசையில்.. சர்ரென்று இழுக்கப்பட்டவளின் பூமேனி சாய்ந்தது தேக்கு மரத்தோடு!!
பெருஞ்சூறாவளிக்கு ஆடாத தேக்கும் தான் விழுந்தது. பூங்கொடியாளின் சரீரம் பட்டதும்!!
அவனும் தடுமாறி.. கடலுக்குள் விழ.. அவன் மேல பூக்குவியல் வந்து விழுந்தது போன்ற சுமையுடன்.. வந்து விழுந்தாள் மதுராக்ஷி!!
அலைகளும்… “ஐய்யைய்யோ.. கன்னிப் பெண்ணை அணைத்து இந்தக் கந்தர்வனும் செய்யும் செயலது காண்”என்று அலறி இரைந்து.. சுற்றத்தினரையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்து… அவனை அடித்து அடித்துச் சென்று கொண்டிருந்தது.
அவனின் ஒரு கை அவளது மெல்லிடையூடு அணைத்துச் சென்றிருக்க.. அவனின் மறுகையோ.. அவளது பிருட்டங்களை அழுத்திப் பிடித்திருக்க.. இருவரும் தெப்பமாயினர் கடலலையின் விளைவால்!!
இருவரின் ஆடைகளும் நனைந்து விடவே… ஏதோ இருவரும்.. ஆடைகளின்றி வெற்றுடலோடு அணைத்துக் கிடப்பது போல மாயை தந்தது ஈரம்!!
அவளின் கூர்முனைகள்.. அவனது வதனத்தைத் துளையிட்டது. ஆம்.. விழுந்த தினுசில்.. அவனுக்கும் மேலே இருந்தாள் அவள்.
அவனை விட்டும் தலைகாட்டிய சர்ப்பமும் தான் வெலவெலத்துப் போய்… பொந்தில் நுழைய… துடித்துக் கொண்டிருந்தது.
அவனது இதழ் வேறு.. அவளது முகட்டில் மோதிய தினுசில்… பச்சக்கென்று ஒலி பிறக்க… பட்டும் போடாமல்.. முத்தம் வைத்தவனுக்கு.. கனிந்த பழத்தினைக் கடித்துத் தின்னவும் தான் ஆசை பிறந்தது.
இப்படி காலம் பூராகவும் அணைத்துக் கிடக்க பேராசையும், நப்பாசையும் முளைத்தது அஜய்க்கு!!
அவளுக்கும் கூட மோக மயக்கங்களெல்லாம் தோன்றியது நொடிக்கும் குறைவான கணப்பொழுது மாத்திரமே!!
அவளை அடித்து ஓடிய பேரலையில்.. பட்டென்று சுயநினைவு கொண்டு.. அவனில் நின்றும்.. அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்த மதுராக்ஷிக்கோ… அவனைப் பார்க்கவும் கூட வந்து தடுத்தது நாணம்!!
கரையில் மணல்.. உள்ளங்காலில் தோயத் தோய நடந்தாள் மதுராக்ஷி… அவனைத் திரும்பிப் பாராமலேயே!!
அவனோ.. காதலின் இன்பம் உடம்பெல்லாம் பரவியோட கடலலை விட்டும் எழுந்தவன்.. கையிலெல்லாம் கடல்த்துளிகள் வழிந்தோடும் வனப்போடு.. தலையைக் கோதி விட்ட வண்ணமே நடந்தான் கரையை நோக்கி!!
அவன் தன் பின்னால் நடந்து வருவது உணர்ந்தாலும்.. இவள் மனமோ… “ஆதாரங்கள் பற்றி கேட்கலாமா வேண்டாமா?” என்று பதைபதைத்துக் கொண்டிருந்தது.
ஒருவேளை.. அப்டியே கேட்டு விட்டாலும்… அவன் அதனைத் திரும்பத் தருவதற்கு மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்வானோ?? என்ற பயம்… அவளை நேரிடையாக அதனைக் கேட்க விடாமல் அமைதியாக்கியது.
அவளின் நடைக்கு இணையான வேக நடை நடந்த வண்ணமே.. அவளின் வதனத்தை… இரசித்துப் பார்த்தவனாக, “என்ன பேசாம வர்ற..?”என்று கேட்டான் அவன்.
சீற்றம் முற்றிலும் தணிந்திருந்தவளுக்கு.. அவனின் வதனம் கூட பார்க்க முடியாமல் போக, “ஒண்ணுமில்லை.”என்று தனக்கே கேட்காத குரலோடு முடித்துக் கொண்டாள்.
இருவரும் நடந்து சென்று… ஆடைகள் காற்றும் உலரும் நோக்கோடு.. கரையொதுங்கிய படகில் முதுகு சாய்த்து நின்றிருந்த போதும்.. மதுராக்ஷி மறந்தும் கூட அஜய்யின் புறமாகத் திரும்பவேயில்லை!!
ஆனால் அவன்.. அவளின் நனைந்திருந்த எழில்களையும், மேடுபள்ளங்களையும்.. இடையின் ஒயிலையும் பார்த்திருந்தான் இமைக்காது.
அக்கணம்… அவள் சாய்ந்து நின்றிருந்த படகின் மறுபுறத்தின் அடியில் நின்றும்.. இரு குரல்கள் கேட்டதும்.. பட்டென்று இடுங்கலாயிற்று அவள் கண்கள்!!
இது அவள் கேட்டு பழக்கப்பட்ட குரலாயிற்றே… என்பது போல் தோன்றியது அவளுக்கு.
இல்லை.. ஒருவேளை… அப்படியில்லாமலும் இருக்கலாம்!! பிரம்மையாகவும் இருக்கலாம் என்று அவள் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட போது.… ஒரு பெண்குரல் வாய் விட்டு சிரிக்க.. அதனைத் தொடர்ந்து ஆண்குரலும் சிரிப்பதும் கேட்டது.
அந்தப் பெண்குரலின் உரிமையாளினி.. யாரென்று மனம் வேறு எடுத்துக் காட்டவே.. உள்ளிழுத்த மூச்சும் தான்.. அப்படியே வெளிவராமல் நின்றும் தான் போனது.
தன்னருகே நின்றிருக்கும் நாயகனின் எண்ணத்தினை அறவோடு மறந்தவள்.. படகைச் சுற்றிக் கொண்டு..அதன் மறுபுறம் நாடிப் போனாள் மதுராக்ஷி!!
அங்கே கரைத்தட்டிய படகினடியில் அவள் கண்ட காட்சி???
அவள் நினைத்தது.. ஊகித்தது.. அனுமானித்தது நூற்றுக்கு நூறு சரியே என்பது போல.. படகின் கரை மணலில் அமர்ந்திருந்தது அவளது உயிர்த்தோழி நிரோஷாவே.
அந்த சிரிப்புக்கு சொந்தக்காரியே அவளே தான்.
அவள் மடியில்.. ஓர் ஆஜானுபாகுவான ஆடவன் படுத்திருக்க. அவன் முகத்தைக் கூர்ந்து நோக்காமையினால் அது யாரென்றே முதலில் புரியவில்லை அவளுக்கு!!
ஆனால் நண்பி நிரோவோ காதல் மயக்கத்தில் தன் தலைவனன்றி அங்கே பிறிதொரு பொருளில்லை என்பது போல நின்றிருந்தவள்… அங்கே தரையில் கிடந்த பெண்பாதங்களைத் தான் முதலில் பார்க்கலானாள்.
“இந்தக் கால இதுக்கு முன்ன எங்கோ பார்த்த மாரி இருக்கே”என்ற வண்ணம் மெல்ல.. அவள் பாதங்களில் நின்றும் மேலேற்றிய போது.. அங்கே இடுப்பில் கைவைத்துக் கொண்டு காளி அவதாரத்தில்… மதுராக்ஷி நின்றிருக்கக் கண்டாள் நிரோ!!
அவளை அங்கு கண்டதும் நிரோ…தூக்குவாரிப் போட்டுக் கொண்டு… மடியில் இருக்கும் காதலனை, “எழுந்திரு.. எழுந்திரு சீக்கிரம் சீக்கிரம்”என்று அவசரப்படுத்திக் கொண்டே…அவரவர் நிலையிலிருந்து எழுந்து..நிற்கலாயினர்!!
திருதிருவென்று நிரோ.. விழித்துக் கொண்டு… தோழியைத் தான் பார்த்து நிற்கலானாள் மதுராக்ஷி!!
இவளோ… தோழியின் காதலனில் அத்தனை கண்கள் பதியாவள்.. நிரோவிடம் சாடும் குரலில், “ஒதுங்கின போர்ட்டுக்கு அடியில்… என்னடீ நடக்குது இங்கே…?”என்று தான் சீறும் குரலில் கேட்டுக் கொண்டே.. நண்பியின் காதலனைப் பார்த்தவள் அதிர்ந்தாள்!!
அங்கே நிரோவோடு திருட்டு விழி விழித்துக் கொண்டு நின்றிருந்தது?? யாராம்?? .
அது.. அன்று.. அவளைப் பெண் பார்க்க வந்தவனே தான்!! அவளது வருங்கால மாப்பிள்ளையின் தம்பியே தான்!!
“இ.. இவன்.. அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தான்ல?? பேர் கூட என்னமோ சொன்னானே.?”என்று மதுரா.. யோசிக்கவாரம்பிக்கவும் செய்தாள்.
பட்டென இடையிட்ட நிரோ தான், “விக்னேஷ்.. என் விக்கி!!”என்றாள் அவனை காதலாடப் பார்த்த வண்ணம்.
நண்பி தன் காதலை மறைத்த கோபம் ஊசலாடியது ஒருபுறமிருக்க… விக்னேஷ் மேலும் சினம் பொங்கி வழிந்தது அவளுக்கு.
“அடப்பாவி.. என்னையும், நிரோவையும் ஓரகத்தி ஆக்கலாம்னு பார்க்கறீயா??”என்று திட்ட.. காதலனைத் திட்டுவது பொறுக்க மாட்டாமல் போனது நிரோவுக்கு.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே குற்றவுணர்வு தாண்டவமாடும் குரலில், நிரோவோ, “இல்ல.. நான் முன்னாடியே… உங்கிட்ட சொல்ல நெனச்சேன்.. ஆனா நீ தான்.. ஆபீஸ்ல ஜிம்மி டென்ஷன்ல சுத்திட்டிருந்த.. அதான் சொல்லல..நீ ரிலாக்ஸ் ஆனதும் சொல்லலாம்னு நினைச்சேன்..நான்.. விக்னேஷை.. உயிருக்குயிரா.. சின்ஸியரா லவ் பண்றேன்..”என்று சொல்லி முடிக்க.. தலையில் கைவைத்துக் கொண்டு சிலையாய் நின்று போனாள் மதுராக்ஷி!!
“மதூ”-தோழியின் மெல்லிய அழைப்பில் தான் மீண்டும் ஸ்மரணை வரப்பெற்றாள் அவள்!!
“இதெல்லாம் எப்போடீ… நடந்துச்சு..?? நானும் உன்கூட தானே பெரும்பாலான நேரம் சுத்திட்டிருந்தேன்… எனக்கு தெரியலையே?”. என்று முறைத்தவண்ணம் கேட்டாள் மதுராக்ஷி!!
இதுகாறும் பேசாமலிருந்த விக்னேஷோ… சட்டென்று வாய் திறந்து, “அண்ணன் தந்த கிப்ட்டை கொடுத்துட்டு போகலாம்னு நான் அன்னைக்கு உங்க ரூம் வந்தேன்ல?? அப்போ நிரோ.. என்மேல ஜூஸ் கொட்டினாள்ல… அதைத் துடைக்க கிட்ட வந்தாள்ல.. அப்போ..அப்போலயிருந்து காதல் வந்திருச்சு அண்ணி”என்று அவளை உறவுமுறை சொல்லி அழைக்க.. அண்ணி என்ற அழைப்பு அவளிருந்த சீற்றத்தில் அபத்தமாக அப்போது தெரியவில்லை அவளுக்கு!!
“அட்ச்சீ.. இதெல்லாம் ஒரு காதல்.. கன்றாவி.. த்தூ… ஜூஸ் கொட்டினதுக்கு எல்லாம் காதலா???”என்று அவனைப் பார்த்துக் கத்தியவள்…
தற்போது தன் தோழியை நோக்கி, “ஏன்டீ… ஊர்ல காதலிக்க இந்த ஏணியா உனக்கு கெடச்சான்..”என்று கேட்டதும்.. காதலனைச் சொன்னதும்.. மூக்குக்கு மேலே கோபம் போனது நிரோவுக்கு!!
“மதுரா.. என்னைப்பத்தி என்ன வேணா பேசு.. என் காதலைப் பத்தியோ.. காதலனைப் பத்தியோ.. ஒண்ணும் பேசாத.. எனக்கு கெட்ட கோபம் வந்திரும்… உண்மையான காதலுக்கு ஒரு காட்சியே கதையில போதும்… விக்னேஷ்.. செக்கன்ட் ஹீரோ தான்.. நான் செக்கன்ட்… ஹீரோயின் தான்..”என்று சொல்ல ஜூஸ் கொட்டியதில் காதலா?? என்ற அதிர்ச்சி மதுராவுக்குள்!!
அதுவும்.. கடலோரத்தின் கரைத்தட்டிய படகு வரை.. செல்லுமளவுக்கு காதலா??
இவளோ மைன்ட் வாய்ஸ் என்றெண்ணி சப்தமாக, “அதான்.. அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ… உனக்கு ஓகேயில்லைன்னா… நான் கட்டிக்கறேன்.. பையன் சூப்பரா.. அழகா இருக்கான்னு சொன்னீ.. யாடீ”என்று தேய்ந்து போன குரலில் தான் கேட்டாள்!!
ஆமாம், கண்ணை மூடி யோசித்தவளுக்கு.. அன்றைய சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வந்தது.
இப்போது நினைக்கும் போது எல்லாமே காதல் பார்வைகளாக, காதல் புன்னகைகளாக.. இளையராஜா பின்னணி இசையோடு.. ஸ்லோமோஷனில்.. மனக்கண்ணில் ஓடியது மதுராவுக்கு.
தன்னருகே நின்றிருந்தவள்.. விக்னேஷை.. இடைவிடாமல் வெறித்துப் பார்த்தது…
மதுராவின் அறைக்கு.. மோகப் பார்வையுடன் விக்னேஷை, “உள்ளே வாங்க சார்.. வாங்க”என்று வழிந்து வழிந்து கூப்பிட்டது!!
ஜூஸ்.. அவனது அங்கத்தில் கொட்டியதும்.. அவனது திண்ணென்ற மார்பைத் துடைக்க.. நிரோ.. ஏங்கிப் போய் தொட்டது!!
நிரோவின் இடைவிடாத பார்வையெல்லாம் நினைவுக்கு வந்து போனது அவளுக்கு!!
எனில், நான்காவது அத்தியாயத்திலிருந்தே சைட் அடித்திருக்கிறாளா தோழி என்று புரிந்தது அவளுக்கு அப்போது தான்!!
மதுராக்ஷியின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் கேட்டது தோழியின் குரல்!!
மதுவின் கையைப் பட்டென்று பற்றிக் கொண்டு, “இவ்வளவு நாளா.. “எதிரெதிர்” வீட்டுல இருந்தும் சந்திக்காத நாங்க உன்னால தான் சந்திச்சோம் மதுரா..”என்று சொல்ல.. “எதிரெதிர்” வீடு.. அது அஜய்யின் வீடு தானே என்று யோசிக்காமல் போனாள் மதுராக்ஷி!!
விக்னேஷோ.. ஒரு படி மேலே போய்.. அவளருகே மண்டியிட்டமர்ந்து.. இரு கரம் கோர்த்துக் கூப்பியவனாக, மன்றாடும் குரலில்,
“அண்ணி.. இப்போ நான் முன்னே மாதிரி இல்ல.. ரொம்ப … திருந்திட்டேன் அண்ணி.. அம்மாவோட பிஸினஸ் கூட நான் தான் டேக் ஓவர் பண்ணி பார்த்துக்கறேன்.. எனக்கு கல்யாண வயசு வந்திருச்சு.. காதல் வந்ததும் பொறுப்பும் வந்திருச்சு.. நீங்க தான் அண்ணா மூலமா அம்மாகிட்ட பேசி… எங்க காதலை சேர்த்து வைக்கணும் அண்ணி… ப்ளீஸ்”…கெஞ்சிக் கொண்டே கூற எரிச்சல் வந்தது மதுராக்ஷி.
அதிலும் அவனின் அண்ணி என்னும் அழைப்பு ஒவ்வாமை தந்தது!!
“ஹேய் பூல்.. இனி அண்ணின்னு கூப்பிட்ட..இப்போவே உங்கம்மாவுக்கு கால் பண்ணிருவேன்… எக்கேடோ கெட்டுப் போங்க… எனக்கென்ன வந்தது?? காதலை என்கிட்ட மறைச்சு என்னென்னமோ பண்ணிட்டீங்கள்ல.. போங்க.. போங்க..என்னை உங்க கூட்டுக் களவாணி ஆட்டத்துல சேர்க்காதீங்க.. நான் போறேன்..”என்று கத்திக் கொண்டே.. ஒரு கணம் கூட… அங்கு நில்லாமல்… அவர்களின் கெஞ்சல்.. அழைப்பு.. என எதையுமே… காது கேளாதவள் போல…உதாசீனப்படுத்திக் கொண்டு நடந்தாள்.
“நானே எப்படி என் கல்யாணத்தை நிறுத்தணும்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. இதில் வேறு அவங்க காதலை சேர்த்து வைக்கணுமாம்… இடியட்ஸ்” என்று தனக்குத் தானே பேசியவாறே…. திட்டிக் கொண்டே வண்டி தரித்திருக்கும் இடத்திற்குத் தான் விரைந்தாள் மதுராக்ஷி!!
படகில் சாய்ந்து நின்றிருந்த அஜய்க்கு என்ன ஆனான் என்ற நினைவே அற்று… சினத்தில்.. ஏதேதோ உளறிக் கொண்டே… காரை நோக்கி நகர்ந்து வந்திருந்தாள் அவள்!!
அவனது கார்க்கதவினைத் திறந்து அவள் ஏறிக் கொள்ள… படகு விட்டு எப்போது தான் அஜயும் காருக்கு வந்தானோ!!
அங்கே தான் அவனும்.. சாரதி ஆசனத்தில் அவள் வந்து சேரும் வரை அமர்ந்திருந்தான் அமைதியாக!!
அஜய்தேவ்.. அவளை அப்படியே படகுப்புறமாக.. விட்டு வந்ததுக்கு வேறு காரணமுண்டு!!
படகின் மறுபுறம் இருந்தது தம்பி என்றறிந்ததும்.. அவன் தம்பி.. இவனைக் கண்டால்.. “அண்ணாஆஆஆ.. மன்னிச்சிருங்கண்ணாஆஆ” என்று அழைத்தபடி காலில் சாஷ்டாங்கமாக விழுந்து.. தன்னைக் காட்டி கொடுத்து விடுவானோ என்று அஞ்சி தான்.. அங்கிருந்தும் மெல்ல கழன்று வந்துவிட்டான் அஜய்.
அங்கு படகின் மறுபுறம் போயிருந்தால்.. உண்மையில் கையும், களவுமாக அகப்படுவது விக்னேஷ் அல்ல!! அஜயே!!
அதனால்… தம்பி நின்றிருந்த இடத்தை திரும்பிக் கூட பாராமல் ஓடி வந்து… காரில் கமுக்கமாக அமர்ந்திருக்க… இவளோ அவன் தான் தன் வருங்கால மாப்பிள்ளை என்று அறியாமல் தாறுமாறாகத் தான் கிழிக்கவாரம்பித்தாள்!!
சும்மா கிழி!! – தலைவர் ரஜினி ஸ்டைலில் சொல்வது போல் சும்மா கிழியே தான்!!
“இதுங்க வீட்ல இதுகளை கட்டிப்போட்டு வைக்க மாட்டாங்களா… அண்ணன் தம்பி… ரெண்டுக்கும் பொண்ணுங்க பின்னாடி தான் போறது தான்… வேலையாயிருக்கு.. ஜிம்மி கூட அவிழ்த்து விட்டா… இந்த மாதிரி பிகரு தேடி அலையாது.. அடச்சீ நானொருத்தி.. நாயோட அவனுங்கள ஒப்பிடலாமா… என் ஜிம்மி எவ்வளவோ மேல்!! …” என்று வண்டியில் ஏறிய கணம் முதல் ஓயாது திட்டிக் கொண்டேயிருக்க.. அவனது முகம்… நன்றாய் சிவந்தது.
அவளின் வாயடைக்க வழிதெரியாது திண்டாடிப் போனவனோ.. ஏற்கனவே கடலில் கட்டிப் பிடித்து உருண்டு புரண்ட மோகன மயக்கத்தில் இருந்தவனாயிற்றே!!
ஆசை வந்து தலைகாட்டவே… அவளின் இரு கன்னத்தினையும்… அள்ளிப் பிடித்தவன்.. அவளுமே விழிகள் விரித்து விதிர் விதிர்த்துப் போகும் வண்ணம் கௌவிக் கொண்டான் இதழ்களை!!
கீழிதழ் கௌவி.. சுவைத்து.. பற்கள் ஒவ்வொன்றாக தழுவித் தழுவி.. அவளின் நாவினை சிறையெடுக்கவும் தான்.. முத்தத்தில் திண்டாடிப் போனான் அவன்.
இன்னும் ஒரு மாதத்தில்.. அதாவது முப்பது நாட்களில் திருமணம்!!
அதன் பின் அவள்.. அவனுக்கே அவனுக்கென்ற ஏக உரிமை.. அவளின் இதழ்களின் உரிமைச் சாசனத்தை.. இன்றே அவனை ஏற்க வைத்தது!!
அவள் தரமாலேயே எடுத்துக் கொண்டான் இன்னும் இன்னும்!!!
ஒரு கட்டத்தில் மூச்சுக்கு தவித்து… அவள் பற்கள் திறக்க.. அது தான் சந்தர்ப்பமென்று.. அவளின் நாவு நிரடி.. உமிழ்நீரின் இன்சுவை மொத்தமும்.. சர்ரென்று பற்றி உறிஞ்சலானான் அவன்!!!
இவளோ இன்னும் விதிர்விதிர்ப்பு அடங்காமல் பேயறைந்தாற் போல நின்றிருக்க… கார் முழுவதும் மோகவாசம் சுற்றி வீச…. அவளின் இதழ்களில் உயிலெழுதிக் கொண்டிருந்தான் அவனுக்குத் தான் சொந்தமென்று!!
அம்முத்தத்தில் மென்மை ஒரு கணம்!! வன்மை மறுகணம்!! எல்லாம் கலந்த தீஞ்சுவை முத்தத்தில்… மெல்ல அவனது தாபத்தீ வளர.. அவளின் எச்சில் இனிப்பில் அணைத்துக் கொண்டான்.
மெல்ல முழு நிறைவடைந்து.. அவன் விலகி நிற்க, ஏனோ அவளில் கோபமில்லை;அருவெறுப்பில்லை!!
அவன் தீண்டலை ஏற்பது ஏன்?? அன்று யோசிக்க மறந்து போனாள் மங்கை!!
“என்னாச்சு??”.. என்று தன் புறம் திரும்பாமலேயே இருந்தவளைப் பார்த்து.. நாயகன் புரியாமல் கேட்டாள்.
“ ஒன்றுமில்லை” என்றவள் குனித்த தலை நிமிராமல் இருக்க… வண்டியை எடுத்தான் அவளது வீடு நோக்கி.
வீட்டுத்தெருவில் அவளை இறக்கி விட்டவன்.. அவள் கொலுசு.. முந்தானை…எல்லாம் அடங்கிய பையை.. அவள் கைகளில் கொடுத்து விட்டு.. “பை மதுரா.. தேங்க்ஸ் பார் தி லவ்லி டே”என்று அவள் இதழ் பார்த்து கண்ணடித்துச் சொல்லி விட்டு வண்டியை எடுத்தான் அவன்!!
பொருட்கள் மீண்டும் கைக்கு வந்தாலும்.. மீசை குத்திய அதரங்களின் முத்தம்… இன்னும் இன்னும் அவன் இழுத்து இழுத்து சுவைப்பது போல விறுவிறு என்று மெல்லிய வலி தந்து கொண்டேயிருந்தது.
Super sema super super super super super 💕💕💕💕💕💕
Super …Ajay lv…cute
super o super sis