ATM Tamil Romantic Novels

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22

மோகனப் புன்னகை – 21

ஒரு மாதத்திற்கு பிறகு,

அது சென்னையில் பெரும் பெருஞ்செல்வந்தர்களெல்லாம்… திருமணங்களுக்காக தேர்ந்தெடுக்கும்.. மிகப் பிரம்மாண்டமான மண்டபம்!!!

அம்மண்டபம்… அன்றைய தினத்தில்.. பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களென சகலவிதமான தரப்பினர்களாலும் சூழப்பட்டிருந்தது.

சுவர்களிலும், உத்திரங்களிலும் தொங்கும் வண்ண வண்ண மலர்களாலும்.. வாசனைத் திரவியங்களாலும்.. சிவப்புக் கம்பளமும் விரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஒரு பக்கத்தில்.. நாதஸ்வரமும், மேளதாள வாத்தியங்களும் கொண்டு… கல்யாண இசைக்குழு… கூட்டமாக இணைந்து இசைத்துக் கொண்டிருக்கலாயினர்.

இன்னொரு பக்கத்தில்.. பின்குடுமி வைத்திருந்த ஐயரோ… அவர் முன்னே வளர்க்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில்.. நெய்யை ஊற்றி ஊற்றி.. சமஸ்கிருத மொழியில்.. அதி தீவிரமாக… மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இருபக்கமும்… பிரித்து நாற்காலிகள் போடப்பட்டிருக்க… நடுவே சென்றிருந்த சிவப்புக் கம்பளம்..மணமேடை வரை அகன்று நீண்டிருந்தது.

நுழைவாயிலில் இருந்த பதாகையில்… வெள்ளை வண்ண ரோஜாக்களின் பின்னணியில், சிவப்பு நிற ரோஜாக்களைக் கொண்டு.. “மணமகன் அஜய்தேவ் சக்கரவர்த்தி”என்றும், “மணமகள் மதுராக்ஷி ராமகிருஷ்ணன்”என்றும் எழுதப்பட்டிருந்தது.

என்ன?? மணமகன் அஜய்தேவ் சக்கரவர்த்தியா?? ஆமாம்!

ம.. மணமகள்.. மதுராக்ஷியா?? அட ஆமாங்க!!

அன்று திருமண பந்தத்தில்.. இரு இளங்குருத்துக்களும்… இன்பமாய் இனிமையாய் நுழைந்து.. இல்லறம் நிகழ்த்திட பெரியோர்கள் கூடி ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்வு தானிது!!

மணமகள் அறையில்.. ஒரு மணமகளுக்குரிய சகலவிதமான அலங்காரங்களுடனும், ஒப்பனையுடனும்.. தேவலோகத்துக் கன்னிகையாய்… கைகளிலெல்லாம் மருதாணி மறைக்கும் வளையல் பூண்டு.. கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள் மதுராக்ஷி.

அவளின் திருமணம் குறித்து.. உற்றாரும், உறவினர்களும், தாயும், தந்தையும்.. இன்னும் ஏன்.. நாயகன் அவனும் கூட உல்லாசமாக… சந்தோஷத்திலிருக்க… அவளிடம் மாத்திரம் மகிழ்ச்சி என்பது மருந்துக்கும் இல்லாமற் போனது.

அருகிருந்த தோழி நிரோஷாவோ, “என்னடீ இது கல்யாண பொண்ணு நீ.. கொஞ்சம் சிரியேன்டீ!!”என்று வற்புறுத்த.. அவளிடம் சிரிப்பேயில்லை.

சோபையிழந்து போன சோர்ந்த விழிகளுடன் நின்றிருந்தவள்.. தன் அழகிய விம்பத்தைப் பார்த்து நின்ற போதும் கூட… அவளுள்.. பேரழகுப் பொலிவினை இரசிக்கும் பாவமுமில்லை.

ஏனோ தானோ.. யாருக்கு வந்த விருந்தோ என்பது போல.. திருமணத்தோடு மனம் ஒட்டாமல் நின்றிருந்த மதுராக்ஷியின் சிந்தனையைக் கலைத்தது??

பட்டென்ற ஒலியுடன் மணமகள் அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்த தாயின் குரல்!!

திருமதி. மீனாட்சி ராமகிருஷ்ணனோ.. தன் மூத்த மகவின் திருமணம் என்ற நினைப்பு தந்த பூரிப்பிலேயே பத்து வயது குறைந்தது போல.. அத்துணை இளமையாக.. காட்சி தரலானார் .

ஆனால், அவர் ஈன்ற மூத்தப் பெண்ணிற்கும் தான்.. அவரைப் போல முகத்தில் தேஜஸோ.. திருமண நாளை எண்ணிய ஜாஜ்வல்லியமோ இல்லையே??

மகளின் உள்ளக்கிடக்கையை அறியாத தாயோ, “சீக்கிரம் வாம்மா… முகூர்த்த நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சு..” என்ற வண்ணம் அவளருகே வந்து.. மதுராக்ஷியை நாற்காலியில் நின்றும் எழ வைத்து…. மணமேடையை நோக்கித் தான் அழைத்துச் செல்லவும் முற்பட்டார்.

முகத்தில் உணர்ச்சி முழுவதும் சுத்தமாகத் துடைக்கப்பட்டிருக்க… மணமேடையை நோக்கி.. குனிந்த தலை நிமிராமல் சாவி போட்ட பொம்மை போலத் தான் நடந்தாள் அவள்.

அவள் மனமோ, சினிமாவிலெல்லாம் நிகழ்வது போல, யாராவது அவளைக் காக்கும் ஆபத்பாந்தவனாக வந்து, “நிறுத்துங்கஅஅஅ!!”என்று திருமணத்தை நிறுத்தச் சொல்லி கத்த மாட்டார்களா?? என்று ஏங்கிக் கொண்டிருந்தது.

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்!!

இம்மி பிசகினாலும் முழு வாழ்வுமே கோணலாகி விடுமென்ற காரணத்தினால் இவ்வளவு காலமும் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள் அவள்.

உண்மையில் மதுராக்ஷி காதலுக்கும், கல்யாணத்துக்கும் எதிரியல்ல.

 ஆயினும், தன்னைச் சுற்றியிருந்த உறவுகளின் திருமண பந்தச் சீர்கேடு பற்றி அவள் பார்த்தது, கேட்டது, அறிந்தது என அனைத்தும்… திருமண பந்தத்தில் நுழைய பெரும் பயத்தினைக் கொடுத்தது.

அது அவள் தந்தைக்கும் விளங்கவில்லை; மணாளனான “அவனுக்கும்” விளங்கவில்லை.

 யாருடன் மதுராக்ஷி… பல்கலைக்கழகத்தில் படித்தாளோ?? .. யாருக்குக் கீழ் இத்தனை நாளும் வேலை செய்தாளோ??

அதே… அவன் தான்.. தனது மாப்பிள்ளையாக வரப்போகிறான் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

ஏற்கனவே கல்யாணத்தை.. நிறுத்தப் பார்த்திருந்தவளுக்கு.. அவளது மாப்பிள்ளை “முரட்டு பாஸ்..ஹிட்லர்” தான் என்றானதும் அவளது நிலையைச் சொல்லவா வேண்டும்??

மேடையை நோக்கி தாயால்.. வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்தவள்… மென்மையாக நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

 மணமேடையில் அக்னிக் குண்டத்தின் பின்னே.. மாலையும், கழுத்துமாக.. வெள்ளை, வேஷ்டி சட்டையில்..

தன் முதுகந்தண்டு கூனாமல்.. ஜம்மென்று நிமிர்ந்து.. சம்மணமிட்டு அமர்ந்து.. ஒரு இராஜனைப் போல் அமர்ந்திருந்தான் அவன்.

அஜய்தேவ் சக்கரவர்த்தி!!

அவனது விழிகளிலோ… இன்னும் சொற்ப நிமிடத்தில்.. தன் மனையாளாக விதிக்கப்பட்டவளை.. நெஞ்சாங்கூட்டில் இறுக்கிப் பொத்தி வைத்து… ஊனுருக.. உயிருருக.. காதல் செய்யும் உணர்வுகள் நிறைந்து வழிந்திருந்தது.

மதுராக்ஷியின் பாதங்கள் … மெல்ல மெல்ல எட்டுக்கள் எடுத்து வைத்து.. முன்னே நகர்ந்தாலும்.. அவளது மனமோ.. ஞாபக அடுக்குகளில் கிளர்ந்தெழுந்த அன்றைய நாளின் பின்னாடியே செல்லத் தொடங்கிற்று.

****

சுமார் இருபத்தொன்பது நாட்களுக்கு முன்பு!!

அதாவது, அஜய்தேவ்.. அவளது இல்லத்திற்கு அதிரடியாக வந்து போனதன் பின்பு!! மறுநாள்!!

தந்தை பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார்… கல்யாண நாள் பார்த்துக் குறித்து..நிச்சயம் செய்ய வரப்போவதாக தகவல்.. காற்றிலே கரைந்து வந்து அவளது செவிகளுக்கும் சற்றே ஈயப்பட்டது

முழுவீடுமே மினி கல்யாணத்துக்கு தயாரானது போல… அதகளப்பட்டிருக்க… இவள் தான் இறுகிப் போன வதனத்துடன்… சுவாரஸ்யம் இல்லாது மணமகள் அலங்காரத்தில் தயாராகியும் நின்றிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டார் வந்ததும்.. முதலில் இறங்கிய.. மாப்பிள்ளையின் பெரியம்மாவைப் பார்த்த போதும்.. மதுராக்ஷியின் வதனம் தனில்.. அத்தனைப் பெரிய உணர்வுகள் இல்லை!!

அடுத்ததாக இறங்கிய மாப்பிள்ளையின் தம்பி.. அதாவது பெரியம்மாவின் பையன் விக்னேஷைப் பார்த்த போதும் கூட.. அவ்வளவு பெரிய திகைப்போ.. அதிர்ச்சியோ அவளில் இல்லை!!

ஆயினும், இறுதியாக.. வெள்ளை சட்டை மற்றும் கறுப்பு பேன்ட் அணிந்து… ப்ரெஷ் லுக்கில்… பார்ப்போர் மனம் கவரும் வகையில்.. காரினை விட்டு இறங்கிய.. அவளது பாஸ்.. அஜய்தேவ் பார்த்ததும் தான்… விழிகள் அகலமாய் விரிந்து.. திகைத்துப் போய் நின்று போனாள் மதுராக்ஷி!!

இவனெப்படி இங்கே??

 மாப்பிள்ளையின் நண்பனா??

இல்லை அவர்கள் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவனா!? என்று பலவாறு எண்ணிக் குழம்பிப் போய் நின்றிருந்தவளுக்கு, ‘அவன் தான் மாப்பிள்ளை’என்று அந்நொடியும் சிந்தனை வராமலேயே போயிற்று!!

அவளது தந்தையோ… வாயெல்லாம் பல்லாக.. அவர்களை நோக்கி ஓடிப்போய்…. குறிப்பாக அஜய்யைப் பார்த்து, “வாங்க வாங்க.. வாங்க மாப்பிள்ளை”என்று தோளோடு அணைத்து.. இருகரம் கூப்பி.. தமிழர் பண்பாட்டினடிப்படையில் உள்ளே அழைத்த அந்நொடி!!

தன் காதுகளையே நம்ப முடியாமல்… ஹிருதயமும் ஒருமுறை நின்று துடிக்க.. ஸ்தம்பித்துப் போனாள் அவள்!!

என்ன?? ‘வாங்க மாப்பிள்ளை’யா??

எனில், மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா??

அவனுடைய ஹிட்லர் போல முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன்மையும், “இப்படிச் செய்.. அப்படிச் செய்”என்று குட்டி மிலிட்டரி நடத்துவது போல ஏவும் குணமும் ஒரு சிறிதும் பிடிக்காதிருப்பவளாயிற்றே அவள்??

மிலிட்டரியே தன் மணாளன் என்றானதும்… அவனுடனான வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாமல்.. உள்ளம் ஒவ்வாமை தந்தது அவளுக்கு.

அந்நிமிடத்திலிருந்து…அவளது மழுங்கிய மூளைக்குள் ஓடிய ஒன்று தான்… ‘எப்பாடுபட்டாவது இக்கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும்’என்பது.

தாயை காலில் விழாத குறையாக தாஜா செய்து… தந்தையிடம் சிலபல முறைப்புக்களைப் பரிசாகப் பெற்று.. “மாப்பிள்ளையோடு தனிமையில் பேசணும்”என்று தைரியமாகச் செப்பி… அவனோடு பேச.. அரும்பாடுபட்டு சம்மதமும் வாங்கினாள் மதுராக்ஷி!!

அதன் விளைவாக… இதோ அவள் வீட்டு மொட்டை மாடியில், அவனோடு.. அவள்.. ஒரு கல்யாண நிறுத்தப் பேச்சுவார்த்தை நிகழ்த்த.. சந்தர்ப்பமும் கிட்டியது.

‘நான் தான்’ மாப்பிள்ளை என்றறிந்த அதிர்ச்சி என்று அவளது இறுகிப் போன முகத்தைப் பார்த்து தப்பிக் கணக்குப் போட்டுக் கொண்டான் நாயகன் அஜய்தேவ் சக்கரவர்த்தி. உண்மை எதும் அறியாமல்.

அவள் வீட்டு மொட்டை மாடித்திட்டில்.. தன் இடுப்பைச் சாய்த்து.. சுவற்றில் ஒற்றைக்கால் பதித்து.. மார்புக்கு குறுக்காக கைக்கட்டி நின்று… அவளையே தான் மிருதுவான விழிகளோடு பார்த்திருந்தான் அஜய்.

அழகான மந்தகாச சிரிப்புடன் வாய் திறந்தவனோ, “ஸாரி மதுரா.. ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் யுவர் பீலிங்க்ஸ் ரைட் அட் த மொமென்ட்.. நான் தான் மாப்பிள்ளைன்றது உனக்கு பெரிய அதிர்ச்சி கொடுக்கும்னு தெரியும்… சில சமயம்.. அதிர்ச்சி வைத்தியம் தான் சிறந்தது”என்று மனத்தில் இருப்பதை எல்லாம் இன்முகம் மாறாமலேயே கூறலானான் அவன்.

தொடர்ந்து பேச நாடியவனோ, “உன்னை பெண்பார்க்க.. அன்னிக்கு ஈவ்னிங் வந்திருப்பேன்.. ஆனா.. இன்டர்வீவ் நேரம்.. உன் ப்ரெண்டு நிரோக்கிட்ட…ஃபோன்ல… மாப்பிள்ளையை துரத்த ப்ளான் போட்டுட்டிருந்தீயே?? அதைக் கேட்டதும்.. சின்ன அசம்பாவிதம் ஏதாவது நிகழ்ந்து.. நான் உன்னை இழந்துருவேனோன்னு பயந்தேன்.. அதனால தான் நான் அன்னைக்கு வரலை.. ஆனால்.. உனக்கொரு பட்டுப்புடவை அனுப்பி வைச்சேனே… கிடைச்சதா?? ஆசை ஆசையா நானே செலக்ட் பண்ணது… உனக்காக!! …இன்னிக்கு கூட அதை தான் கட்டியிருப்பேன்னு எதிர்பார்த்தேன்”என்று அவன் பக்க விளக்கங்களை ஒன்றுவிடாமல் சொல்ல.. அதிர்ந்து நின்றிருந்தாள் அவள்.

என்ன?? மாப்பிள்ளையைத் துரத்த போட்ட திட்டம் இவனறிந்தானா??

ஆம், நேர்காணலுக்குச் சென்ற போது.. லிப்ட்டில் வைத்து… பேசிக் கொண்டே போனாளே அவள்!!

அக்கணம் அஜய்யும் அதே லிப்ட்டில் தானே பயணப்பட்டு வந்தான்??

 இவள் தானே.. நண்பியுடனான பேச்சு சுவாரஸ்யத்தில்.. அவன் வந்ததை கவனிக்காமல் போனாள்??

அவனது காதல் மொழிகள் யாவும் இதயத்தை அடைய மறுக்கவே… அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே.. கையை உயர்த்தி.. அவனை, ‘மேற்கொண்டு பேச வேண்டாம்’ என்பது போல சமிக்ஞை செய்தாள் மதுராக்ஷி.

பின்பு.. அவன் விழிகளை கடுமையாகக் கூர்ந்து பார்த்தவளோ.. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்பது போலத் தான் பேசவாரம்பித்தாள்.

“இங்கப் பாருங்க… அஜய்… இந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்கல”என்று அவனை.. தனிமையில் கூறிய போது.. அவன் நிதானமாக கைகளைக் கட்டிக் கொண்டு, ஒற்றைப் புருவம் மாத்திரம் உயர்த்தி நின்றான்.

“ஏன் பிடிக்கல??.. நான் என்ன.. பார்க்கவே முடியாதளவு அசிங்கமாவா இருக்கேன்?” என்று கேட்டான் அவன்.

அவன் அழகன் தான்!!

அடர்ந்த சிகையில் ஹேர்க்கீரிம் போட்டு அவன் வாரிவிட்டிருப்பதிலிருந்து.. சட்டையின் கையின் கஃப் பட்டன்களைப் போட்டிருப்பதிலிருந்தது.. பாதத்தில் ஒரு அழுக்கு கூட அற்று.. சீராக கத்தரிக்கப்பட்ட நகத்தின் பராமரிப்பு வரை பார்த்த போதும்.. சிறுபிழை கூட சொல்ல முடியாத பேரழகன் தான் அவன்!!

ஆனால் அவள் மறுப்பது அழகினால் அல்ல!! மனம் கூடி வராமையினால் அல்லவா??

சிறு எரிச்சல் மீதூற, “ஐயோ அஜய்… அழகு,அசிங்கம் சம்பந்தப்பட்டதல்ல கல்யாணம். இரு மனசு சம்பந்தப்பட்டது.. ரெண்டு மனசு ஒன்றாகணும்.. அது தான் கல்யாணம்!!”என்று கூறினாள் அவள்.

அவர்களுக்குள் நடந்த.. உரசல்.. இதழொற்றல் சம்பவங்களில் எல்லாம் அமைதியாக அதனை ஏற்று நின்றவளாயிற்றே அவள்??

அவற்றையெல்லாம் காதல் என்று மனக்கணக்கு போட்டிருந்த அஜய்தேவ்வோ, அவளை நாடி ஈரெட்டில் வந்திருந்தான்.

“நானும் உன்னைக் காதலிக்கிறேன்.. நீயும் என்னைக் காதலிக்கிற.. வேறென்ன வேணும்..?? வேறு யாராவது… ஏதாவது..உன் மனசை கலைக்கும்படி.. சொன்னாங்களா…?” என்று புருவமத்தியில் ஒரு முடிச்சு விழத்தான் கேட்டான் அவன்.

இதென்ன புதுக்கதையாகவிருக்கிறது??

அவள் எப்போது.. அவனை காதலிப்பதாக எங்கு?? எப்போது?? எந்நேரத்தில் சொன்னாள்..?? விட்டால், ‘உன் வயிற்றில் என் குழந்தை வளருது’ என்பானா??

அஜய்யையே குறுகுறுவெனப் பார்த்தவளோ, “நான் எப்போ சொன்னேன் உங்களை காதலிக்கிறேன்னு?? சொல்லுங்க.. ஒருதடவையாவது.. நான் உங்களை காதலிக்கிறேன் அஜய்ன்னு சொல்லியிருக்கேனா??” என்று கேட்டதும் தான் தாமதம்…

 பட்டென்று வாய் திறந்தான் அவன்.

காதல் இதயத்தை வருடும் குரலில், “காலில் அடிபட்டு கிடந்தப்ப.. உன்னை என் இரண்டு கையாலும் ஏந்தி வந்து உன் வீட்டில் விட்டேனே… அப்போ என் தொடுகையை ஏற்று நின்னீயே.. அது காதலில்லையா?? உன் ஸாரி கழன்று நின்னப்போ… உன் இடையில் என் கைகள் படர… போட்டு விட்டேனே… அது காதலில்லையா? கூர்க்கில்… உன்னோட இருந்த ஒவ்வொரு நாட்களிலும்.. குழந்தை போல கவனிச்சிக்கிட்டேனே.. அது காதல் இல்லையா?? ”என்று அவன் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு…

“காதலில்லையா.. காதலில்லையா” என்று கேட்டுக் கொண்டே போக…. இவளது சீற்றமும் தான் உச்சத்தைத் தொட்டிருந்தது.

“ஐய்யோஓஓ.. நிறுத்துங்க அஜய்… நீங்க வளர்ந்தவர் தானே… சின்னப்பிள்ளையில்லையே?? எந்த காலத்தில் இருக்கீங்க நீங்க.. இது இருபத்தோராம் நூற்றாண்டு… தொட்டு உதவி பண்ணதையெல்லாம் சும்மா சும்மா காதல்னு நீங்க முடிவு பண்ணிக்கிட்டா.. நான் என்ன பண்ண முடியும்??தினம் காலையில் பால் போட வரும் பால்க்காரன் கையும், அதை வாங்க வரும் என் கையும் உரசுது.. அது காதலா??”என்று தன் காதல்த் தொடுகையோடு.. ஒரு பால்க்காரனின் தொடுகையை இணைத்துப் பேசும் காதலியையே.. வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் அஜய்!!

அவனின் இதயத்தில்.. யாரோ சிக்கிமுக்கி கற்கள் கொண்டு தீமூட்டினாற் போல… அது பற்றியெரிய… இதயத்தின் வெம்மை விழிகள் வழியே.. சிவந்து வெளிப்படும் போலிருந்தது.

கைமுஷ்டி இறுக.. தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. இழுத்துப் பிடித்த பொறுமையுடன் நின்றிருக்கலானான் அவன்.

ஆனால் அவளோ… அவனின் மனம் அறியாத ஆத்திரத்தில்,

“ ஸேரி டிரஸ்ஸிங்க்கு… இப்போ.. ஆண்கள் கூட… அழகா பண்ணி விடுறாங்க… அத அவங்க இப்போலாம் ப்ரோபஷனா பண்றாங்க.. அது போலத் தான் நீங்களும் ஹெல்ப் பண்றீங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.. ”என்று சொல்ல.. தன் காதலை உதாசீனம் செய்யும்.. அவளையே நறுநறுவெனப் பற்களைக் கடித்த வண்ணம் பார்த்திருந்தான் அவன்.

அவள் தொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க.. அழுத்தமான குரலில், “போதும் மதுராஆஆ… சரி இதெல்லாம்.. ஒரு உதவி.. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. ஆனா.. நேத்து உன்னை முத்தமிடும் போது… ஏன் அதை ஏற்று நின்ன?? நீ என்னை காதலிக்கலேன்னா.. என்னை தள்ளிவிட்டு… என்னை அறைஞ்சிருக்கணுமே.. ஏன்.. அ.. அதை செய்யல??”என்று கண்கள் துடிதுடிக்க.. வதனம் இரத்தப் பசையேயற்று வெளிறிப் போகக் கேட்டான் அவன்.

அவளால் அதற்கு பதில் பேச முடியவில்லை!! ஆம், ஏனந்த இதழ் முத்தத்தை ஏற்று நின்றாள்?? அவனுமிழ்நீர்.. இவளோடு கலக்க….. அதையெல்லாம் ஏற்று நின்றதும் ஏனோ??

அக்கணம் அவள் கொஞ்சம் பொறுமையாகச் சிந்தித்திருந்தாலும் கூட… இதயம் உண்மையை உரக்க உரைத்திருக்கும் அவளிடம்!!

ஆயினும், திருமணம் கூடாது என்று மூர்க்கத்தனமான முடிவிலிருந்தவளோ, “ம்ப்ச்சு… எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல… உங்களையும் பிடிக்கல அஜய்..” என்று கூற… அவளின் மதிவதனத்தைத் தான் வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்தான் அவன்.

ஆயிரம் தானிருந்தாலும்.. அவன் உருகி உருகிக் காதலித்த காதல் பெண்ணின் வதனமல்லவா??

அவனால் என்ன முயன்றும் மதுராக்ஷி மேல் வன்மத்தையும், கோபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியாமல் போனது.

“ஓகே பைன்.. நீ என்னை லவ்… பண்ணல..இது காதல் கல்யாணமா வேண்டாம்… பெரியவங்க பார்த்து நிச்சயிக்கற ஒரு கல்யாணமா இருக்கட்டும்!! நிச்சயம் வரை வந்தாச்சு… இப்போ போய்… கல்யாணம் வேண்டாம்னு சொல்றது…சமூகத்தில் உன் தந்தையை பாதிக்கும்.. உன் குடும்பத்தைப் பாதிக்கும்.. உன் பின்னாடி இருக்கற உன் தங்கை… அவளுக்கு வருங்காலத்தில் வரன் பார்த்தா.. அவ வாழ்க்கையையும்… உன் முடிவு பாதிக்கும்.. இரு குடும்பம் ஒரு குடும்பமாகி…பண்ணும் கல்யாணம் இது… அது போக உன்தரப்பிலிருந்தும் சரி.. என் தரப்பிலிருந்தும் சரி… கோடி.. கணக்கில் செலவு பண்ணி செய்யப் போகும்… இந்தக் கல்யாணத்தை நிறுத்தணுமா…??”என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்லிப் புரிய வைப்பது போலத் தான் திருமணம் நின்றால் நிகழப்போகும் பாதகங்களை எல்லாம்.. தன் ஆருயிர்ப் பெண்ணுக்கு விளக்கிச் சொன்னான் அவன்.

ஆம், அவளின் தந்தை ராமகிருஷ்ணன்.. தெருவில் நடந்து போனால், “என்னப்பா ராம்கி.. உன் மூத்தப்பொண்ணு நிச்சயதார்த்தம் நின்னு போச்சாமே… பொண்ணுக்கு என்ன குறையோ?”என்று நான்கு வாய்கள்.. தந்தை முன்னின்று பேசத்தானே செய்யும்??

பின்னாளில் அவள் தந்தை திவ்யாக்ஷிக்கு ஒரு வரன் பார்த்தாலும் கூட, “நாங்க உங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சோம்.. மூத்த பொண்ணுக்கு நல்ல பணக்கார சம்பந்தம் கைவிட்டு போச்சாமே… பொண்ணோட அக்காவுக்கு ஏதோ குறைன்னு வெளியே அரசல்புரசலா பேசிக்கிறாங்க… தங்கைக்கும் இருக்குமோ?”என்று ஊர்… தங்கை மீதும் பழி போட்டு… இளையவள் வாழ்க்கையுமல்லவா பாழாக்கும்??

நிச்சயதார்த்தம் வரை வந்த பின்னர்… அவனைப் பின்வாங்கச் சொல்வது.. அவளை மாத்திரமல்ல.. அவளின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பது புரிந்திருந்தவன்.. இறுதிவரை பின்வாங்காமல்,

“நீதான் எனக்கு”என்று உடும்புப் பிடியாக நின்றான்.

அவனின் பிரசங்கமெல்லாம் எட்டிக்காயாக கசக்கவே… பொறுமையிழந்து பெருமூச்சு விட்டுக் கொண்டே இதழ் திறந்தாள் மதுரா.

“சமூகத்தை பத்தி நினைச்சா வாழ முடியாது அஜய்.. இன்னைக்கு பேசும்.. நாளைக்கு மறந்துரும்… மோர் ஓவர்.. பணம்..போனா.. எப்போவும் சம்பாதிச்சுக்கலாம் அஜய்.. ஆ.. ஆனா… லைப்ன்றது ஒருமுறை தான்… போனா வராது..”என்று இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை என்பதை தெளிவாகச் சொன்னாள் அவள்.

அவளருகே இன்னும் கொஞ்சம் அவன் ஆவேசத்துடன் நெருங்கி வரவே.. அவன் வந்த வீரியத்தைக் கண்டே அதிர்ந்து.. ஈரெட்டுப் பின்வாங்கி நின்று கொண்டாள் அவள்.

அவள் தன்னைக் கண்டு அஞ்சியதும் உள்ளத்தோடு ஓர் வலி பிறக்கவே, அதற்கு மேலும் ஓரெட்டு நகராமல்… பாதங்கள் வேரோடினாற் போல அங்கேயே நின்று கொண்டான் அவன்.

அவளை உணர்ச்சிகள் சுத்தமாகத் துடைக்கப்பட்ட வதனத்துடன் பார்த்தவனோ, காதல் மல்கும் குரலில்,

“என்னோட வாழ்க்கை இருட்டினாலும், தனிமையினாலும் ஆனது… அப்போ திடீர்னு ஒரு வெளிச்சம்..கண்ணைப் பறிக்கற வெளிச்சம்… அதனால என் வாழ்க்கை அழகாச்சு… வாழ்க்கைய நான் புதுக்கோணத்துலயிருந்து பார்க்க ஆரம்பிச்சேன்… அந்த வெளிச்சம் நீ மதுரா…. சின்ன வயசுலயிருந்து அத செய்.. இதை செய்ன்னு.. கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்ட எனக்கு.. தனக்குப் பிடிச்சதை… சுதந்திரமா…. விளையாட்டுப் புத்தியோட… நீ செய்தது பிடிச்சிருந்தது.. இன்பாக்ட் அந்த விளையாட்டு புத்தி தான்.. உன்னை லவ் பண்ண வைச்சது.”என்றவன்.. இம்முறை அவளை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்து அருகில் வந்திருந்தான்.

அவளது மென்மையான பட்டு போன்ற கன்னங்களைத் தாண்டி, கண்களெல்லாம் கலங்க.. தளர்ந்து போன குரலில் பேசினான் அவன்.

“நீ எனக்கு வேணும்மா.. நீ இல்லாத.. ஒ.. ஒரு வாழ்க்கைய நினைச்சுக்கூட பார்க்க முடியல மதுரா.. என்கூட வாழ்க்கை ஒருநாளும் போரடிக்காது.. நம்ம கூர்க் பயணம் ஞாபகம் இருக்குல்ல?? எவ்வளவு ஜாலியா.. சூப்பரா இருந்தது அது போல… நாம ரெண்டு பேரும் சேர்ந்து…. வாழ்க்கையை அணுஅணுவா இரசிச்சு வாழலாம்..”என்று அவன் உணர்ச்சி பூர்வமாக கூறிக் கொண்டு இருந்த போது… அவளுக்கும் தான் உள்ளே ஏதோ செய்தது.

இது அனைத்தும் பசப்பு வார்த்தைகள்!!

திருமணம் என்னும் கும்மிருட்டுச் சுழலுக்குள் இழுக்க… அவன் கூறும் பாசாங்கு வார்த்தைகள் இவை!!

 நம்பாதே மதுரா- என்று அவளது பாழும் மூளையும் எடுத்துச் சொல்ல… மென்மையாய் தோன்றிய உணர்வுகளும் மறந்து வன்மையாக ஆனது.

அவளுக்கு இவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்னும் போது, இவன் இரசித்து இரசித்து வாழலாம் என்கிறான்??அது ஏற்புடைத்தா??

தன் கன்னம் பற்றியிருக்கும் அவன் கையைத் தன்னிலிருந்தும் பட்டென்று தட்டி விட்டவளின்.. இடது விழியில் நின்றும் ஓடியது ஒருதுளி உவர்நீர்!!

“எனக்கு உங்க மேல லவ் வரல அஜய்ய்ய்!!”என்று சீறிக் கத்தினாள் அவள்.

அவனோ.. அடிபட்ட குழந்தை போல அவளையே பார்த்திருக்க… இவளும் சீற்றம் மாற்றம் காணாத குரலிலேயே தொடர்ந்தாள்.

“உங்க இடத்துல இன்னைக்கு ய்யாரு நின்னாலும்.. நான் அதே தான் சொல்லியிருப்பேன்.. சின்ன வயசிலயிருந்து… அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு.. டிவோர்ஸ் வரைக்கும்… போன எத்தனையோ ஜோடிகள நான் பார்த்திருக்கேன்.. அஃப்கோர்ஸ் அதில் விதிவிலக்கும் இருக்காங்க…. ஆனா மோஸ்ட் ஆப் தி கேஸஸ்… வாழ்க்கை வாழல.. சண்டையும், சச்சரவும்… வேதனையான.. சோ.. சோதனையான வாழ்ந்தது தான் மிச்சம் அஜய்”என்று தழுதழுத்த குரலில் கண்ணீருடன் கூறினாள் அவள்.

“என்னாலேயும்… அவங்கள போல கோர்ட்டு கேஸூன்னு அலைய முடியாது… எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… உங்க மேல காதல் வர்றதுக்கு… அப்படியில்லேன்னா.. கடைசிவரைக்கும்.. ப்ரென்ட்ஸாகவே இருக்கலாம்” என்று அவள் இந்தக் கல்யாணத்தை நிறுத்தும் படி.. அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

கல்யாணத்துக்கு மறுக்கும் தன் தேவதைப் பெண்ணையே இதழ்களில் குறுநகை ஓடப் பார்த்திருந்தவனோ, காதல் தோல்வி கண்ட வேதனை மண்டிய குரலில், சொன்னான்.

“உலகத்திலேயே காதல் வர்றதுக்கு டைம் கேட்ட பொண்ணு நீயா தான் இருக்கும். உனக்கு டைம் தானே வேணும்?? எடுத்துக்க.. பட் கல்யாணத்துக்கப்றம் நீ எவ்ளோ டைம் வேணாலும் எடுத்துக்கலாம்… உன் மனம்.. அதில் என் காதல் பூவா.. காயா கனிஞ்சு வர்ற வரை நான்.. பொறுமையா காத்திருப்பேன்.. ஆனா இப்போ இந்த நிச்சயதார்த்தம், கல்யாணம் நடக்கட்டும். பின்னால உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலேன்னா..”என்றவன்…

வலி தாங்காமல் சற்றே நிறுத்தினான்.

“நான் உனக்கு டைவர்ஸ் தர்றேன்” என்று அவள் முகத்தைப் பாராமல்.. வேறு எங்கேயோ பார்த்தபடி… முகத்தை இறுக்கமாக வைத்த வண்ணம் கூறிக் கொண்டிருந்தான் அஜய்.

அவனது எந்தக் கோரிக்கைகளும் பூங்காரிகையின் மனம் அடையாமல் போகவே.. அவனது பிடிவாதம் தாங்க முடியாமல்,

வெறுப்புடன் தாறுமாறாகக் கத்தலானாள் அவள்.

“எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டிருக்கேஏஏன்.. நீங்க வேற… என்ன நிம்மதியா இருக்க விடமாட்டீங்களாஆஆ?? … உங்க டைவர்ஸ் எல்லாம் எனக்குத் தேவையில்ல.. ஃபஸ்ட் ஆப் ஆல்.. உங்க மேல எனக்கு நம்பிக்கையில்ல..”என்றவள் கரங்கள் தட்டிய ஒலி எழும்பும் வண்ணம் இரு கரம் கூப்பி நின்றாள்.

ரௌத்திரம் தோயும் சிவந்த விழிகளுடன், “ப்ளீஸ் என்னை விட்டுருங்க… இப்போவே அப்பாக்கிட்ட போய் நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொல்லுங்க..”என்றாள் அவள்.

அவளால் தந்தை ராமகிருஷ்ணனிடம் போய்.. கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி சொல்லிவிடவும் முடியுமோ?? சொன்னால் பிரளயம் அல்லவா வெடிக்கும்??

‘கல்யாணத்துக்கு சம்மதிக்கா விட்டால் தூக்கில் தொங்குவேன்’ என்றெல்லாம் அவளை உருட்டி மிரட்டி… கல்யாணத்துக்கு சம்மதிக்க அல்லவா வைக்கக் கூடும்??

ஆகையால், அவன் தரப்பிலிருந்து “திருமணம் வேண்டாம்”என்று சொல்ல வைக்க முயன்றாள் கேடி மதுராக்ஷி.

ஆனால், அஜய்தேவ்க்கோ…அவளது வார்த்தைகளின் முன்பாதி அவ்வளவு மனதில் பதியாது.. அவள் சொன்ன, “உங்க மேல “நம்பிக்கை”இல்ல”என்று சொன்ன பின்பாதியே நச்சென்று மனத்தில் பதிந்தும் போனது.

அவளின் இரு தோள்களைப் பற்றி மென்மையாகக் பற்றியவனோ… அவளுக்காக எதையும் செய்து விடும் உத்வேகத்தில் தான் கீழ்வருமாறு கேட்டான்.

“உனக்கு நம்பிக்கை வர நான் என்ன செய்யணும்?? சொல்லு… மலை மேல இருந்து குதி.. கடல்ல குதின்னு முட்டாள்தனமா எதுவும் செய்யச் சொல்லமாட்டேன்னு எனக்கு தெரியும்.. வேறு என்ன செய்யணும்?? சொல்லு.. என் சொத்தையெல்லாம் உன் பெயர்ல எழுதி வைச்சிரட்டுமா??.. அப்போவும் நம்பிக்கை வரலேன்னா.. நான் என்ன செய்யணும் சொல்லு?? “என்று அவன்.. தன்னவளின் விழிகளைப் பார்த்துக் கேட்டான்.

இவனுக்கென்ன பைத்தியமா..??

அவள் பிடிக்காது பிடிக்காது என்ற போதும்.. ‘அவள் தான் வேண்டும்’ ஒற்றைக்காலில் நிற்கின்றான்?

தன்னை விரும்பாத.. தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு பெண்ணை மணம் முடித்து.. இவன் எந்த சுகத்தைக் காணப் போகின்றான்??

அவனால், தன்னுடன் எப்படி.. ஒரு நிம்மதியான.. இன்பமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகிறது? அவளால் முடியவில்லையே!!

என்று பலவாறு சிந்தித்தவளுக்கோ.. அவன் தலைகீழாக நின்று தவம் செய்து சிவ சம்மதம் வாங்கினாலும் சரி… இந்தக் கல்யாணத்தில்.. அவனுடனான வாழ்க்கையில்.. துளியும் இஷ்டமிருக்கப் போவதில்லை.

அவனைக் கல்யாணம் கட்டி.. அவனுக்காக.. அவன் சாயலில் பிள்ளைகள் பெற்று…?? அதற்கு மேலும்.. கற்பனை செய்யவும் நாராசமாக இருந்தது அவளுக்கு.

ஆனால், உண்மையில்.. மதுராக்ஷி உலகிலுள்ள முந்நூறு பில்லியன் கோடி ஆண்களில் யாரை மணம் முடிக்க நேர்ந்தாலும் சரி.. அஜய்தேவ்வின் அளவுக்கு.. அவளை ராணி போலப் பார்த்துக் கொள்ள ஆண் கிடைப்பது கடினமே!!

வார்த்தைகளாலும், உவமைகளாலும் விவரிக்க முடியாத வண்ணம் ஆழியளவுக்கு.. காதல் நிறைத்து வைத்திருந்தான் அஜய்.. தன் ஹிருதயத்திலே!!

அவனின் காதலின் வீரியம் அறியாதிருந்தவளோ, அவன் காதலை மறுத்தாள் அதுவும் கண்களை மூடிக் கொண்டு.

“என்னால ஒத்துக்கவ்வ்வேஏஏ.. ம்முடியாது.. இப்போ நீங்க இந்த நிச்சயதார்த்தத்தை…. நிறுத்துறீங்களா..இல்லை என்ன ஆனாலும் பரவால்லைன்னு.. பின் விளைவுகளைப் பத்தி யோசிக்காம நானே.. கீழே… போய் நிறுத்தட்டுமா..” என்று சினந்து கேட்டவள்.. மேற்கொண்டு அங்கு நிற்கவா செய்தாள்??

அங்கிருந்தும்.. அவசரகதியில்… அவனைக் கடந்து.. மாடிப்படியருகில் அவள் செல்ல முற்பட.. அவளின் முன்னங்கைப் பற்றித் தடுத்து.. அவள் பெயரை.. இதுகாறும் இல்லாதது போல அழுத்தமாக உச்சரித்திருந்தான் அவன்.

“ம்மதுராக்ஷீஈஈ”என்று!!

அவளும் திரும்பி.. அவன் முகத்தைப் பார்த்த வேளையில்.. அவள் எஞ்ஞான்றும் பார்த்திராதது போல… அவன் வதனம் இறுகிக் கறுத்து சிவந்திருக்க… வெகு வெகு அழுத்தமான குரலில் சொன்னான் அவன்.

“நீ மட்டும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தினேன்னா. உன் பேர்.. மரியாதை.. மானம்.. கெட்டுரும்.!!”என்று!!

‘பெரிதாய் என்ன செய்து விடப் போகிறான்?’ என்று எண்ணிய மதுராவோ.. அவனிடம்.. இறுமாப்புடன்.. “என்ன செய்வீங்க அஜய்.. என்னை தூக்கிட்டுப் போய் ரேப் பண்ணுவீங்களா??” என்று எகத்தாளத்துடன் கேட்க… அவனிடமிருந்து கர்ஜனை தொனியில் வந்தது பதில்!!!

அதில்.. தன் இதயம் நடுநடுங்க.. தேகமெல்லாம் வெலவெலத்துப் போய்… நின்றிருந்தாள் மதுராக்ஷி.

“உன்னை அடைய ஒரே வழி ரேப் பண்றதுனா. நீ என் கூட… கூர்க் வந்தப்போவே.. ரேப் பண்ணியிருப்பேஏன்ன்டீ!” என்று அநாகரிகமாக டீ எல்லாம் போட்டு அவன் கத்திய தினுசில் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

நிஜமாலுமே… அஜய்தேவ் அன்று தான் தன் ஹிட்லர் முகத்தை.. தன் உயிர்க்காதலிக்கும் காட்ட சித்தமானான் போலும்!!

அவளது மருண்ட மான் விழிகளையே..வேட்டையாடும் புலியின் இரைப்பார்வை போல.. இமையாமல் வெறித்துப் பார்த்தவனின் வதனம்.. அன்று அச்சத்தை உண்டு பண்ணும் வண்ணம் விகாரமாக மாறியது.

 அவனது விகார தீவிர மௌனம்… அவளுள் அபாய மணியை அடிக்கச் செய்ய… ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தேறாமல் இருக்க வேண்டுமென எண்ணியவளாக..எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே நின்றிருந்தாள் அவள்.

அவள் கணிப்பு பொய்த்துப் போகவில்லை!!

அவளை படியவைக்கும் அதிகாரத் தோரணைக் குரல் அவனில் நின்றும் வெளிவரலானது.

“யூ நோ சம்திங்.. உன்னோட வீடியோ ஒண்ணு என்கிட்ட இருக்கு…”என்று பெரும்பீடிகையுடன் அவன் தொடங்கிய நொடி!!

அவளின்…இதயத்தில் பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போல ஒரு வலி எழுந்து.. அகத்தை அடைக்கும் போலிருந்தது.

“வீ.. வீடியோ..?”என்று புரியாமல் குழப்பமான விழிகளுடன் கேட்டாள் அவள்.

“ஆமா… கூர்க்கில் சர்தார்ஜீயை நீ தாறுமாறா திட்டிய வீடியோ…??”என்று தன்னிரு பேன்ட் பாக்கெட்டில் கைகளை இட்ட வண்ணமே அவன் சொல்ல…

அவளின் தேகம் இறுக.. நெஞ்சம் கல்லாக… மூச்சுவிடக்கூட சிரமப்பட்ட வண்ணம் அவன் முகத்தைப் பார்த்தபடி நின்றாள் மதுராக்ஷி.

அந்த காணொளி!??

சர்தார்ஜீயை.. அன்றிரவு வயிறு முட்டக் குடித்து விட்டு.. திட்டியதை… கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் படம் பிடித்த காணொளி அல்லவா அது??

அதனை கன்னடச் சிறுவர்களிடமிருந்தும்… விலைபேசி.. அவளுடனான கூர்க் நினைவுக்காக வாங்கியிருந்தவன்.. இன்று காதலை அடையும் பேரஸ்திரமாகவும் உபயோகிக்கிறான்!!

ஆனால் அவளுக்கோ, இந்த காணொளியால்.. இவன் என்ன செய்து விடமுடியும்? என்று பெரும் இறுமாப்பு தான் வந்தது.

அவளின் இறுமாப்புக்கும் தான்.. அஜய்தேவ் வைத்தான் ஆப்பு!!

பேன்ட் பாக்கெட்டில் நின்றும் அவனது செல்லை எடுத்து.. அதில் அவளின் காணொளியை… அவளுக்கு நேராக ஓட விட்டுக் காட்டவும் செய்தான் அவன்.

நாயகனில் நின்றும்…. வில்லனாக பரிணாமம் கண்டவனாக, “இந்த வீடியோவ மார்பிங் செய்து யூடியூப்ல விட்டேன்னா.. கடைசியில் உன்னை கட்டிக்க எவனும் வரமாட்டான்…நீ போலீஸூக்கு போனா கூட… எனக்கிருக்க பணபலத்த.. செல்வாக்க… வச்சி எனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு நிரூபிப்பேன்..!! இத்தனையும் ஆகாம இருக்கணும்னா…. நீ இந்த நிச்சயதார்த்தத்துக்கு… கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று… சொன்னவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்தாள் அவள்.

ஈவிரக்கமில்லாமல்.. மணக்கா விடில்.. மானபங்கப்படுத்துவேன் என்று சொல்லும்… இவனும் மனிதனா?? என்று அவனை இழிமையாக நினைக்கத் தோன்றியது.

ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்பதற்காக… ஆண்கள் எத்தகைய நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்லக்கூடுமென்று அவள் புராணங்களில் தான் கேட்டதுண்டு.

ராமாயணத்தில் ராவணனையும் இது போல அறிந்ததுண்டு!!

எனில், இவன் நவீன ராவணனா?? அவனையே இடையறாது சுட்டெரித்து விடும் ரௌத்திரப் பார்வை பார்த்திருந்தவளுக்கு.. தொண்டையில் அடைத்து நின்றது கண்ணீர்!!

இது உண்மை அன்பு தானா??

எதிரே.. விகாரம் மாறாத முகத்துடன் நின்றிருக்கும் அவனது உருவம்.. அவளின் கண்ணீரில் கலங்கிப் போனது இரட்டையிரட்டையாக!!

வருங்கால மனைவிக்கு கூர்க்கில் அதி சொகுசு வீடு கூட கட்டி வைத்திருக்கும்… அன்பனா இப்படி கூறியது??

 அவன் மீது.. இதுவரை காலமும் வைத்திருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் அவளை விட்டும் பறந்தோடிப் போனது!!

 அதற்கு மேலும்.. ஏதும் பேசாமல் அமைதியாக அவள் சாபம் கொண்ட அகலிகையாய்… கல்லாய் சமைந்து போனாள்.

அவளின் கண்ணீர்!! அவளின் தோய்ந்து போன ரூபம்!! அவனை வெறித்துப் பார்க்கும் பார்வை..!! எல்லாமும் கொடூர வலியைக் கொடுத்தது அஜய்க்கு!!

ஒரு பெண் விரும்பும் சகலபூரணமான தகுதிகள் இருந்தும்… தன் மையல் காரிகை அவனை நிராகரிப்பது தாங்காது… இக்கொடூர மிரட்டல் முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.

அவள் படும் வலிகளை எல்லாம் அவன்.. தேகம் விறைக்க விறைக்கப் பார்த்திருக்கலானான்.

“நீ கீழே வர்ற… அமைதியா எல்லாத்துக்கும் சம்மதிக்கற… இல்ல.. நான் சொன்னதை செய்வேன் ம்மதுரா”என்று மூர்க்கனாய்..கிட்டத்தட்ட அவளை மிரட்டி விட்டு… அங்கிருந்தும் தடதடவென மாடிப்படிகளில் நின்றும் கீழிறங்கிப் போனான் அவன்!!

அவன் போன பின்னும்.. அவனின் நிழலுருவம் அவளின் விழித்திரையில் நின்றும் விலகாமல்.. இம்சித்தது.

அஜய்தேவ் பற்றி கல்லூரி நாட்களில் நின்றும் நன்கு தெரியும்!! அவன் சொன்னதை செய்யக் கூடியவன் என்று தெரியும்!!

அதன் பின்பு.. தன் பழைய கலகலப்பு, இன்முகம், சந்தோஷமென எல்லாத்தையும் தொலைத்தவள் தான்… அமைதியென்னும் முகமூடி போட்டுக் கொண்டே நடமாடலானாள்.

இதோ.. அவளின் அமைதி கல்யாணம் வரை கொணர்ந்து விட்டிருக்கிறது. இது அவள் இஷ்டப்பட்டு செய்யும் கல்யாணம் அல்ல.

பிடிக்காதவனுடன் வாழப் பிடிக்காமல்.. ‘தற்கொலை’ போன்ற கோழைத்தனமான முடிவெடுப்பதும்.. அவளது இயற்கை சுபாவத்துக்கு.. முரணாக இருந்தது.

ஆயினும், இப்பிரச்சினைக்குத் தீவிரமாக யோசித்து.. ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தவள்… எதையெதையோ மனத்துக்குள் உருப்போட்டுக் கொள்ளலானாள்.

அவளின் முடிவு??

“அவளை இஷ்டப்பட்டு கட்டிக்கொள்ளும் அவனை.. நன்றாய் கஷ்டப்பட வைக்கலாமே…?” என்ற குதர்க்கமான முடிவாகவே அமைந்திருந்தது.

எந்த சுகத்துக்காக அவளைக் கட்டிக் கொள்ள ஆசைப்பட்டானோ.. அந்த சகத்தையே வெறுக்க வைத்து விட்டால்??

எந்த விளையாட்டுப் புத்தியைப் பார்த்து.. அவளை ஆழமாகக் காதலித்தானோ.. அதே விளையாட்டுப் புத்தியை வைத்து… அவனுக்கு அவளை பிடிக்காது போக வைத்தால்??

பலவிதமான தீவிரத் திட்டங்களுடனேயே.. அவனை மணக்க சம்மதித்திருந்தாள் அவள்!!

****

அனிச்சம்பூப் பாதங்கள்.. தரையில் மிருதுவாய் பதிய… நடந்து போய்.. அவன் பக்கத்தில் மணவறையில் உட்கார்ந்து கொண்டாள் பாவை.

அஜய்தேவ்வின் முகமோ… இன்னும் சொற்ப நேரத்தில் தனக்கு மனையாளாக விதிக்கப்பட்டவளையே… இமையாமல் பார்த்திருந்தது.

சும்மாவே அழகி!! இன்று கூரைப்பட்டுச் சேலையில்.. ஒப்பனைகளுடன்.. பேரழகியாய் அமர்ந்திருந்தவளை விட்டும் ஏனோ கண்களை எடுக்க முடியவில்லை அவனுக்கு!!

இதோ மந்திரங்களின் உச்சக்கட்டம்!!

“மாங்கல்யம் தந்துனானே..மம ஜீவன.. ஹேதுனாம்” என்னும் ஐயரின் மங்கல்யம் ஒருபக்கத்தில் ஒலித்தது.

ஒரு பக்கம் யாரோ.. “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்” என்று மேளவாத்தியக்குழுவுக்கு.. உரத்து வாசிக்கச் சொல்லி… கத்திய சப்தமும் கேட்டது.

அதனைத் தொடர்ந்து மேளம் முழங்க.. நாதஸ்வரம் வாசிக்க.. அர்ச்சதைகள் எல்லாம் மணமேடை நோக்கி தூவப்பட்டது.

இத்தனைக்கும் இடையில்… சர்வ வல்லமை மிக்க.. தாலி.. அவளின் கழுத்தை நோக்கி… அஜய்யின் கைகளால் நீட்டப்பட்டது.

இதோ இன்னும் சிறிது நேரத்தில்…!!

 அவளுக்கு மங்கல நாண் சூட்டியிருந்தான் அவன்!!

விழிகளை… மோனமாக மூடிக் கொண்டவளின் இமையை விட்டும் சரேலென இறங்கிய அவளின் கண்ணீர்த் துளி..தாலிக் கட்டிக் கொண்டிருந்த அவனது புறங்கையில் விழுந்து உடைந்தது.

அழுகையின் காரணகர்த்தா அவன் என்றானதும் அஜய்யின் இதயம் சுட்டது.

அவளின் கைப்பிடித்து.. கணவன்-மனைவியாக அக்னியை வலம் வந்து.. அம்மி மிதித்து.. மெட்டி போட்டு விடும் போது.. அவளின் பாதம் ஏந்திய அவனுக்குள்ளும்… நுண்பூகம்பமாய் காதல் சலனங்கள்!!!

அவளது பாதங்களைப் பிடித்திருந்தவனோ.. காதலாட சர்வமும் உருகிப் போய்… அவளை அண்ணார்ந்து பார்த்திருக்க… உணர்ச்சி சுத்தமாகத் துடைக்கப்பட்ட வதனத்துடன் அவனை மறுபார்வை பார்த்திருந்தாள் அவள்.

உள்ளுக்குள் கறுவி நின்றவளோ, “இந்த ஆண்கள் ஜென்மத்தையே வெறுக்கிறேன். எனக்குத் தோன்றிய வெறுப்பை அவனிடமும் ஏற்பட வைப்பேன். அவன் வாயாலேயே…. உனக்கும், எனக்கும் ஒத்துவராது.. பிரிஞ்சுரலாம்” என்று கூற வைப்பேன்” என்று ஒரு சபதம் போல தனக்குள் சொல்லி… மறைக்கப்பட்ட வன்மத்தோடு நின்றிருந்தாள் அவள்.

அதன் பின்… புது மணமகனுக்கும், மணமகளுக்குமான.. எல்லா சாத்திர சம்பிரதாயங்களும் முடிந்து நிமிர்ந்த போது.. அவள் கழுத்தில் நெஞ்சு பக்கத்தில் சரசமாடிக் கொண்டிருந்த தாலிக் கயிறு… அவளுக்குத் தூக்குக் கயிறாகவே இருந்தது.

அதனை அறுத்து எறிந்து விட்டு யாருமே கண்காணாத இடத்துக்கு ஓடினாள் தான் என்ன??

மோகனம் – 22

அனைத்து சம்பிரதாயப் படலங்களும் நிறைவடைந்து.. மறுவீட்டுக்குச் செல்லும் படலமும் தான் அங்கே ஆயத்தமாகியது.

மணமக்களுக்கான.. பூவலங்காரம் செய்யப்பட்ட காரில்.. இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள… அவளது புக்ககத்துக்கான காரும் புறப்பட்டது அவனது இல்லம் நோக்கி!!

அவனது தாய் ஸ்தானத்தில் நின்றும்.. திருமணத்தை நிகழ்த்தி வைத்த.. பெரியம்மாவினதும்.. அவரது மகன் விக்னேஷின் காரும்.. அவர்களைப் பின்தொடர்ந்து… அவன் இல்லம் நோக்கித் தான் வந்தது.

அதனைத் தொடர்ந்து அவள் உறவுகளான தாய், தந்தை, தங்கை, நிரோ என அனைவரும் இரு வண்டிகளில் பின்னாலேயே அவளது புக்ககம் வரலாயினர்.

மணமக்களை ஆரத்தி எடுத்து… உள்ளே அழைத்து.. விளக்கேற்ற வைத்து என்று புக்ககத்தின் அனைத்து விதமான சம்பிராதயங்களும் நிகழ்த்தி முடிக்க… அங்கொரு கூட்டம்.. அவன் சார்பில் கூடியிருந்தது.

இன்னும் சொற்ப நேரத்தில்… அவளை விட்டும்.. அவள் உறவுகள் பிரிந்து செல்லப் போகின்றது.

பெற்றெடுத்த அன்னையை… கண்ணைப் போல காத்த தந்தையை… உடன்பிறந்த சகோதரியை.. விட்டுச் செல்லும் துயரம்… அவளின் நெஞ்சை கிடுக்குப்பிடி போட்டது போல வலிக்க வைத்தது.

கூடவே… அவள் செல்லும் பாதை.. அது ஆபத்தான கரடுமுரடான முட்கள் குத்தும் பாதையாக இருக்குமோ??

எதிர்காலத்தைப் பற்றி எண்ணும் போது.. அவளின் அழுகை அதிகமாக.. தந்தையின் மார்பில் சுருண்டு.. ஒரு குஞ்சுப் பறவை போல ஒடுங்கி.. அழுதாள் மதுராக்ஷி!!

எப்போதும் உணர்ச்சி வசப்படாத ராமகிருஷ்ணனோ..இன்று தன் மார் சாய்ந்து அழும் தன் மூத்த மகவின் தலை கோதியவராக, “சரிடா.. சரி கண்ணு… அழக்கூடாது மது.. இதெல்லாம் ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்”என்று அவளைத் தேற்ற ஆயிரம் தேறுதல் மொழிகள் இடைவிடாது சொல்லிக் கொண்டேயிருந்தார் அவர்!!

அவளோ.. அழும்போது..தன் தந்தையின் இதயத்துடிப்பை உளமாறக் கேட்டவளுக்கு.. அதையே தாலாட்டாகக் கேட்ட வண்ணம்.. சிறு வயதில் உறங்கிப் போன.. நினைவுகள் எல்லாம் வந்து போனது.

குமுறி அழுதவளின் மனமோ.. மானசீகமாக தந்தையிடம், “அப்பா பொண்ணுக்கு நல்லது செய்றேன்னு..என்னை இப்படி கடைசியில் பாழும் கிணத்துல தள்ளிவிட்டுட்டீங்களேப்பா?? உ.. உங்க மாப்ள..ச..சரியில்லைன்னு… உங்களுக்கு எப்படி நான் புரிய வைக்கறது??” என்று சொல்ல.. அதை நினைக்க நினைக்க அழுகை வந்தது.

இது அறியாத தந்தையோ.. அவளின் உச்சந்தலை வருடியவராக..அவளைத் தன் மார்பில் நின்றும் பிரித்து எடுத்தார்.

கலங்கிப் போன தொனியில், தந்தையோ, “.. அழாம போய் வாம்மா… அப்பாவை பார்க்கணும்னு தோணிச்சீன்னா ஒரு கால் பண்ணு.. அப்பா ஓடி வந்துட்றேன்” என்று கூற.. அவனும் நகைத்துக் கொண்டே…இடையிட்டான்.

அவளின் தோள் மீது, “இவள் என் மனைவி”என்னும் அதீத உரிமையுடன்.. கையிட்டு அணைத்தும் நின்றான் அவன்.

“அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது அங்கிள். உங்க பொண்ண.. கண்ணு கலங்காம… உங்க நினைவே வராம.. சந்தோஷமா… பார்த்துக்கறது என்னோட பொறுப்பு..”என்று அவளைத் தன்னோடு இறுக்கிச் சேர்த்து அணைத்த வண்ணம் சொல்ல… அவன் தொட்ட இடம் பற்றியெரிந்தது மதுராக்ஷிக்கு!! .

 அனைவர் முன்னிலையிலும், “எட்றா க்கைய்ய”என்று கத்தி.. அவனை தலைகுனியச் செய்ய வேண்டும் போல் வெறியே முகிழ்த்தாலும்… கடினப்பட்டு… பல்லைக் கடித்துக் கொண்டு வாளாவிருந்தாள் அவள்.

தோழி. நிரோவோ.. அவளைக் கட்டியணைத்து.. காதோரம் பிறரறியாமல் கிசுகிசுப்பாக, “எல்லாம் கடவுளோட சித்தம் மது.. உனக்கு இவர் தான்னு எப்பயோ முடிவாகிருச்சு.. அஜய் சீனியர் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு.. நீ வேணா பாரு.. நீயும் அவரோட காதல் கடல்ல தொபுக்கட்டீர்னு குதிக்கத் தான் போற?”என்று தோழிக்கு நன்மதிகள் சொன்னாள்.

அதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல உதாசீனம் செய்தாள் அவள்.

இனிமேல் நடக்கப் போகும் அனைத்தும்… கடவுள் விட்ட வழி என கடவுள் மீது அத்தனையையும் பாரம் சாட்டி விட்டிருக்க அவளால் முடியவில்லை.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானாக வேண்டுமென்பது விதி!!

அதே போல அவளை மணந்தவன்.. அவளால் வேதனைப்பட வேண்டுமென்பதும் விதி!! என்று மனத்துக்குள்… எதையெதையோ பக்காவா உருப்போட்டுக் கொண்டாள் மதுராக்ஷி.

அவளது தாய் வீட்டுச் சொந்தங்களும் அவளை விட்டும் கிளம்பிப் போனது.

அவளை.. அவனறைக்கு அழைத்துச் சென்ற.. அவன் உறவுப் பெண்கள்.. அன்றைய நல்ல நாளின் இரவில் சாந்தி முகூர்த்தத்துக்கு.. நாயகியை மீண்டும் புது ஒப்பனையும், சேலை நகைகளுமாக தயாராக்கவும் செய்தனர்.

அவள்… உணர்ச்சிகள் காட்டாத பாவை போல அனைத்துக்கும் ஆயத்தமாக… அவளின் மனமோ வெந்து தணியும் தீக்காடாக அல்லல்பட்டுக் கொண்டிருந்தது.

அவனோடு சாந்தி முகூர்த்தமா??

 அவளால், அதனை நினைத்துப் பார்க்கும் போது… எரிதழலாய் தகித்தது அனல் தேகம்!!

கலகலவென்றிருந்த வீடு… கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து… அவனும், பெரியம்மா, தம்பி மற்றும் அவளுமென தனிமைப்பட்டுப் போனது!!

அவளது அறைக்கு நாடி வந்த அவனது பெரியம்மாவோ, அவளின் கைப்பற்றி,

“இங்கே பாரும்மா.. அவன் தாய், தந்தையில்லாம வளர்ந்தவன்… என்ன தான் பெரியம்மாவா நான் கூட இருந்தாலும்… தாரம்ன்ற ஒரு உறவு தர்ற அன்பு… எப்போவும் ஒரு ஆணுக்கு ஸ்பெஷல் தான்… அவனை கொழந்த போல பார்த்துக்கோ… தாய்க்கு குழந்தையோட குறைகள் தெரியாது இல்லையா??குழந்தை போல கணவனைப் பார்த்துக்கற மனைவிக்கு.. தன் கணவனோட குறைகளும் தெரியாது.. அங்கே அன்பு மட்டும் தான் இருக்கும்..”என்று இதமான ஆலோசனைகள் வழங்க.. அது எதுவும் அவள் இதயத்தை அடையவேயில்லை.

அஸ்திவாரமே தப்பு!! திருமணமே பிடிக்கவில்லை என்கின்றாள் அவள்!!

எனில், அவளுக்குப் போய் “குழந்தை போல கணவன்”என்னும் போதனைகள் எல்லாம் புரியுமோ??

அவள் வேண்டா வெறுப்பாக… அழுந்த மூடிய இதழ்களுடன் பொறுமையுடன் நின்றிருந்த போது, தன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சாவிக் கொத்தை… அவளின் கையில் திணித்தாள் அவளின் பெரிய அத்தை!!

அவளே விதிர் விதிர்த்துப் போய் பார்த்திருக்க… அத்தையோ, “இதுவரைக்கும் இது என்னோடது… இனிமேல்..உன்னோடது. இந்த வீட்டுக்கு முழுப் பொறுப்பு நீ…”என்றதும் தடுமாறிப் போனாள் அவள்.

“நா… நானெப்படி இதை??”என்று அவள் சாவியைக் கண்டு துணுக்கத்துடன் கேட்டாள்.

பெரிய அத்தையோ சிறு புன்னகையுடன், “ஆமா.. இது இப்போ உனக்கானது… நானும், விக்னேஷூம்… வேறு புது வீட்டுக்கு போறோம்.. அவனுக்கும் ஒரு குடும்பத்தை எடுத்து நடத்தும் பொறுப்பு வரணும் இல்லையா?? அதனால தான் இந்த முடிவு!! நீ அடிக்கடி நம்ம வீட்டுப்பக்கம் அத்தையை பார்க்க வரணும்மா?? நானும், விக்னேஷூம் கிளம்புறோம்!!”என்று சொல்லியவரின் கூற்றுக்கள் தந்தது அதிர்ச்சி!!

என்ன?? பெரிய அத்தை புதுவீட்டுக்கு குடித்தனம் போகிறார்களாமா??

எனில், அவனும், அவளும் மாத்திரமா இந்த கடல் போன்ற இல்லத்தில்?? எண்ணமே மலைப்பைக் கொடுத்தது.

பெரியம்மாவும், விக்னேஷூம் செல்லத் தயாரானதும்… புதுமக்கள் இருவரும் வாசல் வரை வந்து.. வழியனுப்பி வைக்கலாயினர்.

விக்னேஷோ செல்லும் முன்னர், “நான் வர்றேன் அண்ணி”என்று அவளிடம் விடைபெற்றுச் செல்ல.. அவன் முதல் நாள் பெண் பார்க்க வரும் போது சொன்ன, “அண்ணி”.. இன்று முறையான உறவுபூர்வமான “அண்ணி”யாகிப் போனதையும் தான் எண்ணி கலங்கிப் போனாள் அவள்.

அவள் வாழ்க்கையோ.. அவளை ஏமாற்றி மணந்த ஒரு துரியோதனனிடம் அகப்பட்டுக் கொண்ட உணர்வு!!

அலுவலகத்தில் பெண்கள் பக்கம் பாராமலேயே அத்துணைக் கண்ணியத்துடன் நடந்து செல்பவன்.. அவளது வீடியோவை மார்பிங் செய்யுமளவு… ஓர் பொறுக்கியாய் இருப்பானென்று அவள் நினைத்திருக்கவில்லை.

எல்லாம் மதுராக்ஷியின் முழுமுதல் மடத்தனம்!!

அப்போதே… மாப்பிள்ளையின் புகைப்படத்தினை பார்த்திருந்தால், இன்று.. திருமணம் நிகழ்ந்து.. முதலிரவு வரை வந்திருக்காது அல்லவா??

பெரிய அத்தையின் கார்.. அவன் வீட்டு காம்பவுண்ட் சுவற்றினைத் தாண்டியதும்… தன் பக்கத்தில் நின்றிருக்கும் அவனைத் திரும்பிக் கூட பாராமல்… அங்கிருந்தும் அறைக்குச் சென்றுவிட முடிவெடுத்திருந்தாள் அவள்.

அவள் முகம் காட்டும் உணர்ச்சிக் கலவைகளையே.. அருகிலிருந்தும் எட்ட நின்று தொடாமல் பார்த்திருந்தவனுக்கும்… வலித்தது.

மறுகணம், “நில்லு மதுரா”என்று அவளது வளைகரம் பற்றி.. அவள் நீங்கலைத் தடுத்து நிறுத்தியிருந்தவன்.. அவளை இழுத்து தன் நெஞ்சாங்கூட்டோடு சேர்த்து அணைத்திருந்தான்.

அவளோ.. அவனைத் தன்னில் நின்றும் தள்ளிவிட முடிவெடுத்திருக்க.. அவளை இன்னும் இன்னும் தனக்குள் ஆழமாகப் புதைத்துக் கொண்டான் அஜய்!!

“ஸாரி மதுரா.. நான் உன்கிட்ட அப்படி பேசியிருக்கக் கூடாது. உன்னை அடையணும்ன்ற.. பேராசை… பெருங்காதல்… என் கண்ணை மறைச்சிருச்சு.. உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க என்ன பண்றதுன்னு தெரியல” என்று அவளை அணைத்து தன் காதலின் உக்கிரத்தை அவன் கூற.. அதுவெல்லாம் புலம்பல் மொழிகளாவே தோன்றிற்று அவளுக்கு.

அப்படித் தோன்றியதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை!!

தன் ஒட்டுமொத்த வலுவையும் உபயோகித்து.. அவளில் நின்றும் தன்னை.. தள்ளிவிட்டு வெளியே வந்தவளும் கத்தத் தொடங்கினாள்.

“ச்சீ…. என்னைத் தொடாஆஆத!!”என்று கத்தியவளை.. இதயத்தில் நறுக்கு தைத்தாற் போன்ற பெரும் வலி எழத்தான் பார்த்திருந்தான் அவன்.

கைமுஷ்டி மடக்கி நின்று.. இருவிழிகள் மூடித் திறந்தவனோ, “.. நான் உன் கணவன் மதுரா!! உன்னைத் தொடுறதுக்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு!! ..”என்று தீர்க்கமான குரலில்.. தன் உள்ளத்தை உடைத்தான் அவன்!!

அன்று குமுறிக் கொண்டிருந்த இதயத்தின் சொந்தக்காரியைப் போலவே வானமும் அகோர இடி இடித்து குமுறியது.

 மறுகணம் பெரும் இரைச்சலுடன்… கொட்டித் தீர்க்கலானது மாமழை!!

இங்கேயும்.. அவளது உள்மனவோட்டங்கள் அத்தனையையும் கொட்டித் தீர்க்கலானாள் அவள்.

“செய்றதையும் செஞ்சிட்டு… கணவன்றீயே… உனக்கு வெட்கமாயில்ல… உன்னோட காமப்பசிய போக்குறதுக்கு ஊர்ல.. வேற பொண்ணுங்களே கிடைக்கலையா…??” என்று அவள் தன் வெறுப்பையெல்லாம் உச்சஸ்தாயியில் கத்தி விட்டிருந்தாள் அவள்.

சினம் உகுக்கும் குரலில், “என்ன சொன்ன காமமா?? என் காதலை கொச்சைப்படுத்த.. உனக்கு எந்த ரைட்ஸூம் இல்ல மதுரா?”என்று எழுந்த கல்மண் தெரியாத ஆத்திரத்தில்… அவன் கைகளும் தான் அனிச்சையாய் எழுந்தது.. அவளை அறைந்து விடும் நோக்கில்.

அவனது ஆஜானுபாகுவான அசுர உயரத்துக்கு.. அவன் தாக்கினால் அவள் தாங்குவாளா??

கடினப்பட்டு கைகளை கீழிறக்கி.. ஒரு பெருமூச்சுடன் நின்றவன்..தன் காதல் மனத்தினை அவளுக்குப் புரிய வைத்திட… இயன்றவரை நிதானமான குரலிலேயே சொன்னான்.

“உனக்கு.. எப்படி புரிய வைக்கறதுமா.. . இது காமம் கிடையாது காதல்.. நான்.. இங்கேயிருந்து… என் இதயத்திலேயிருந்து.. உன்னை சின்ஸியரா லவ் பண்றேன் மதுரா”என்று தன் அகத்தினைச் சுட்டிக்காட்டிச் சொல்ல.. அது அவள் அகத்தை அடைந்ததா என்ன??

இல்லையே??

அவளுக்கு புரிய வைப்பதும்.. எருமை மாட்டின் மீது மழை பெய்வதும் ஒன்று தானே??

இரண்டுக்கும் உறைக்காது!!

“ எங்கே நீ எனக்கு கிடைக்காம போயிருவீயோன்னு.. தான் நான் இதெல்லாம் பண்ணேன்..இது வெறும் மிரட்டல்.. ப்ளாக் மெயில்ன்னு உனக்கு புரியலையா?? உன்னை மானபங்கப்படுத்துறது.. என்னை நானே கேவலப்படுத்திக்கிட்டதுக்கு சமன் மதுரா!! ப்ளீஸ் டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ..” என அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்து விடும் தொனியில் தான் கூறிக் கொண்டிருந்தான் அவன்.

ஆம், உண்மை தான்.

அவளை உயிருக்குயிராகக் காதலிப்பவன் அவன்… அவளை மானபங்கப்படுத்தும் வகையில்.. மார்ஃபிங் செய்யக் கூடுமா என்ன??

இல்லை. சர்வநிச்சயமாக இல்லை!!

அவளை மணக்க.. இவன் கையான்ட ஓர் சாதனம் அது! அவ்வளவே!!

எதற்கும் மனம் இரங்காமல்.. நின்றவளோ.. அவன் தன்னை அடையப்பார்த்தது காமத்திற்காகத் தான் என்று விடாப்பிடியாக அதையே பிடித்துக் கொண்டு தொங்கினாள் அவள்.

இருப்பினும்.. அவளின் பாராமுகத்தைக் கண்டும்.. அது வலித்தும்… கண்டு கொள்ளாதவன் போல்.. தன் காதல் மனையாளோடு சகஜமாகவே பேசினான் அஜய்!!

அவனது கடல் போன்ற மாடமாளிகையைச் சுட்டிக்காட்டி, “இது உன் வீடு.. இந்த வீட்ல இருக்கற எல்லாமுமே உன் பொருள்.. இங்க நீ எப்படி வேணாலும் இருக்கலாம்..சந்தோஷமா.. சுதந்திரமா… ஜாலியா இருக்கலாம்… இந்த வீட்டோட எஜமானி நீ.. உன்னைத் தட்டி கேட்க.. யாரும் கிடையாது… உன் சந்தோஷம் தான்.. என் சந்தோஷம் மதுரா”என்று கூறியவன்.. இனி வருங்காலங்களில்.. அவன் காதலை.. அவளுக்கு உணர்த்தி விடவே காரியம் யாவும் செய்வான் அவன்.

எனில், அவள்??

அவன் தன் காதலைத் துறந்து வெறுக்க வைப்பதற்கான அத்தன வழிவகைகளும் செய்வாள்!!

இருவரும் ஏட்டிக்குப் போட்டியா இயங்க எது வெற்றி பெறும்?? அன்பா?? வம்பா??

கண்ணீர் வழிய.. கோபக் குரலில், “அப்படியா?? .. இது உன் வீடு தானே. இந்த வீட்ல இருக்கற பொருள் எல்லாம் என்னோடது தானே…அப்படீன்னா வெளியில் நிற்கற.. பென்ஸ் காரும் என்னோடது தானே??” என்று கேட்டாள் அவள்.

தன் முதுகுக்குப் பின் கைக்கட்டிய வண்ணம், இறுகிய முகத்துடன் நின்றிருந்தவனின் தலையும், “ஆமாம்” என்பது போல ஆடியது.

அடுத்த நொடி.. அவள் பாதங்கள்.. வெண்ணிற டைல்ஸ் பதிக்கப்பெற்ற நடுக்கூடத்தை மின்னல் கதியில் தாண்டி… போர்ட்டிக்கோவை நாடி வந்திருந்தது.

பெரு மழையில் அவள் தேகம் தெப்பமாக நனைந்தும் போனது.

அங்கே அவன் புத்தம் புதிதாக வாங்கிய.. நவீனரக பென்ஸ் மாடல் கார் தனிமையாய் நின்று கொண்டிருந்தது.

அதை நாடிப் போனவளின் கண்களோ… அவ்வாகனத்தைத் தான் வெறித்துப் பார்த்திருக்க.. மனமோ.. காரையும் உயிருள்ள பொருள் போல பாவித்து.. அதனோடு மானசீகமாக உரையாடலானது.

‘உன்னால் தான் எல்லாமுமே?’

‘உன்னை நான் பார்த்து மேக்-அப் போட்டதிலிருந்து வந்த வினை தானே எல்லாம்?’

‘ நீ என் வாழ்க்கையை வாழ்ந்திருக்காவிடில்… இன்று நான் சுதந்திரமாய்.. தாலிக்கயிறு இல்லாமல்… திரிந்திருக்கக் கூடுமே’

என்று அதனோடு உரையாடியவளுக்கு.. தன் திரண்ட கொங்கைகள் இரண்டும் ஏறித்தாழ… வெளிவந்தது அனல் மூச்சுக்கள்.

அவளுக்கு வந்த ஆத்திரத்துக்கு… சுற்றுமுற்றும் தேடியவளுக்கு… போர்ட்டிக்கோவின் மருங்கிலிருந்த பூப்பாத்தியிலிருந்த.. இரும்புக்கம்பி தான் கண்களில் அகப்பட்டது.

விரைந்து அதனை எடுத்து… அவள் ஓங்கி அடித்த அடியில் கார்க் கண்ணாடியை சில்லு சில்லாய் வெடித்து..துகள்..துகளாகிப் போனது.

ஓர் மனித உயிரை… வதைக்குமளவுக்கு… உறுதியை.. கடவுள் மதுராக்ஷிக்குத் தரவில்லை.

ஆகையால், அவனுக்குப் பதிலாய் தான் இந்தக் கார்!! அதுவும் அவள் வாழ்க்கையில் குறுக்கிட்ட அதே கார்!!

அவளால்.. அதனை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ… அந்தளவுக்கு அந்தக்காரை சேதப்படுத்த முயன்றாள் அவள்!!

காரின் பானட் கண்ணாடி உடைத்தது போதாதென்று ஜன்னல் கண்ணாடிகள், டிக்கிக் கண்ணாடிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது.

 காரின் முன்பகுதி… அவள் ஓயாது தன் ஆக்ரோஷத்தை எல்லாம் காட்டிய தினுசில்.. மேடு பள்ளமாய் ஆகிப் போனது.

அவளுக்கோ.. இரும்புக்கம்பியின் துரு அவள் மென்மையான உள்ளங்கையைத் துளைத்து சிராய்த்தது.

வலியில் கைகள் நடுங்கினாலும் மனம் தளராமல்… அடித்து நொறுக்கிக் கொண்டே போனாள் அப்பெருமழையின் இடையில்!!

இனி அந்தக் காரில் உடைப்பதற்கு ஒன்றுமில்லை என்றான போதும்… ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால்.. இன்னும் இன்னும் ஓயாது அடித்துக் கொண்டேயிருந்தாள் அவள்.

இதுகாறும் அவளின் கோபச் செயல்களையெல்லாம் பார்த்திருந்தவன்.. இது அவளின் சீற்றத்தைத் தணிக்கும் யுக்தி என்று கொண்டு அமைதியாகவே இருந்தான்.

ஆனால் அவளது உள்ளங்கையில் இரும்புத் தாது சிராய்த்ததும்.. அதற்கு மேலும் பொறுக்க மாட்டாது வந்து அவள் கையிலிருந்த கம்பியை அதற்கு மேலும் விடாது இறுக்கிப் பிடித்திருந்தான் அவன்.

“போதும் மதுரா… பாரு உன் கை எப்படி சிராய்ச்சிருச்சுன்னு… விட்ரு.. இனி அந்தக் காரில் உடைக்கறதுக்குன்னு ஒண்ணுமில்ல.” என்று மனமுடைந்தவனாகக் கூறியவன்..அவளில் நின்றும் கம்பியைத் தூக்கிக் கீழே போட்டு விட்டு… அவளை மழையில் நின்றும்.. தரதரவென உள்ளே அழைத்து வந்தான்!!

அங்கிருந்த பணியாளியினிடம்.. விழிகளால் சைகைக் காட்டியிருப்பான்!!

மறுவிநாடி அவனருகே ஈரம் துடைக்க துண்டும்.. அவள் காயத்துக்கு மருந்திட முதலுதவிப் பெட்டியும்… வந்து சேர்ந்திருந்தது.

அவள் மறுக்க மறுக்க… அவளை இறுக்கித் தழுவி… நின்றிருந்தவனோ.. அடங்க மறுக்கும் மழலையெனக் கண்டான் அவளை.

அவள் அங்குமிங்கும் அசைய முடியாத வண்ணம்.. வன்மையாக இறுக்கிப் பிடித்து.. தலையைத் துவட்டியவன்.. அவள் கைகளை இழுத்துப் பிரித்துப் பார்த்ததும்… அதில் ஏற்பட்டிருந்த காய்ப்புகளும், சிராய்ப்புகளும் கண்டு கலங்கிப் போனான்!!

அவள் கை வீக்கத்தைத் தாங்க முடியாது..அடிபட்ட வதனத்தோடு இருக்கும் நாயகனின் முகம் ஏனோ கவலை தந்தது அவளுக்கும்.

இளகும் இதயத்தை.. இரும்புத்திரை போட்டு மறைத்து.. அவனை முறைத்துப் பார்த்த வண்ணம் நின்றாள் அவள்.

அவள் உள்ளங்கைக்கு… அவள் வலிக்குமோ என்றஞ்சி அஞ்சி… பஞ்சினால் மருந்து தேய்த்து கட்டிட்ட போது.. அவன் முகத்தில் கோபமும், வருத்தமும் ஒருங்கே தோன்றியதைக் கண்டு..குரூரமான அகமகிழ்வு கிடைத்தது அவளுக்கு.

அக்கோபம், வருத்தம் எல்லாம்.. தான் ஆசை ஆசையாக வாங்கிய காரை.. அவள் அடித்து நொறுக்கியதற்காகத் தோன்றியது என்று தப்புக் கணக்கும் போட்டுக் கொண்டாள் அவள்.

அதை அனுபவிக்கும் சிரிப்புடன், “என்ன பார்க்கற அஜய்.. நீ தானே… இந்த வீடு பொருள் எல்லாம் என்னோடதுன்னு சொன்ன…?? கார் போனதுன்னு வருத்தமா இருக்கா?” என்று கேட்டபடி அவன் முகத்தைப் பார்க்க… அவனது கண்கள் சிவந்திருந்ததைப் பார்த்தாள் அவள்.

அவன் வாட்டமெல்லாம்… மழையில் நனைந்து உடல் நலனைக் கெடுத்துக் கொண்டு… கையையும் புண்ணாக்கிக் கொண்ட அவளுக்கானது அல்லவா??

அவனது தூய காதலை உணராமல்… வக்கிர மனம் படைத்தவர்களைப் போல.. அவளையும் அறியாமல்… விஷமமாய் புன்சிரிப்பு சிந்த நின்றிருந்தாள் அவள்.

அவளோ.. அவனிடமிருந்து கட்டிடப்பட்ட கையை இழுத்துப் பிரித்துக் கொண்டவளாக.. வெஞ்சினம் தொனிக்கும் குரலில்,

“எந்த விளையாட்டுப் புத்தி என்னை லவ் பண்ண வைச்சதோ.. அதே விளையாட்டுப் புத்தியாலேயே என்னை வெறுக்க வைப்பேன்.. உன்வாயாலேயே.. டைவர்ஸ் தரேன்னு சொல்ல வைப்பேன்..”என்று வெளிப்படையாக.. தன் சபதத்தைக் கூற..ஒரு கணங்கள் உணர்வேயற்ற விழிகளுடன் அவளைத் தான் இமைக்கொட்டாது பார்த்திருந்தான் அவன்.

அவன் விழிகளில் தான் என்ன இருந்தது?? காதலா? ஆற்றாமையா? விரக்தியா?? சீற்றமா?? அது அவனுக்கே வெளிச்சம்!!

அவளைத் தன் கூர்விழிகளால் ஆழ்ந்து ஊடுறுவி நோக்கியவனோ, “அப்படி ஒரு காலம் வரவே போவதில்லை மதுரா.. சப்போஸ்.. ஏதாவது நேர்ந்து… நான் உனக்கு டைவர்ஸ் தரணும்னா..”என்று சொல்லி விட்டு.. இடைநிறுத்தியவனின் முகத்திலோ… சொல்லொணா சோகம்.

சிற்சில நாழிகையின் பின் தொடர்ந்தவனோ, “அப்படி நான் தரணும்னா… நீ என் மூணு கன்டிஷனுக்கு ஒத்துக்கணும்.” என்றான்.

உண்மையில் அவன் மிகச்சிறந்த வியாபாரி!!

வாணிபம் என்னும் சதுரங்க ஆட்டத்தில் அவன் நகர்த்திய காய்கள்.. ஒருபோதும் தோல்வியைத் தழுவியதேயில்லை.

ஐந்தரையடி உயரப் பெண்.. அவளை காலம்பூராகவும் மனையாளாக இருத்தி வைப்பது ஒன்றும் அவனுக்கு பெரிய விஷயமும் இல்லை!!

ஆனால்.. காதல் என்னும் நோய் அவனைத் தாக்கியிருக்க… அவளிடம்… வீரியமாக விளையாட முனையாமல் தோற்றுத் தான் நிற்கின்றான் அவன்!!

“என்ன கன்டிஷன்?”என்று அவள்… ஆவலான குரலில் பாய்ந்து தான் கேட்டாள்.

“ஒண்ணு… இந்த வீட்டை விட்டு வெளியே தாண்டினால் நாம ரெண்டு பேரும் உண்மையான புருஷன் பொண்டாட்டியா நடிக்கணும்…இரண்டு.. நீயும், நானும் ஒரு பெட்டுல தான் தூங்கணும்.. மூணு.. எப்போவும் உன்னை நீ செல்ப் ஹார்மிங்.. அதாவது உன்னை நீயே துன்புறுத்திக்கக் கூடாது.. சத்தியம் பண்ணு”.. என்று அவள் புறமாகக் கைக்காட்டி நின்றவனின் அத்தனை நிபந்தனைகளிலும் நிறைந்திருந்தது அவள் நலன் பற்றிய அக்கறையே!!

 ‘மணவிடுதலை’ பெற வேண்டும் என்ற ஒரே மூச்சில் இருந்தவளின் கையும்… அவன் கையோடு வைக்கப்பட்டது.

அந்நொடியிலிருந்து.. இருவருக்குமான காதல் பரமபத விளையாட்டும் ஆரம்பமானது.

அவளது கன்னம் தட்டியவனோ, “இரும்பு சிராய்ப்பு நல்லதல்ல… செப்டிக் ஆகிரும்… நான் நம்ம டாக்டரை வரச் சொல்றேன்… ஊசி போட்டுக்கோ.. போட்டுக்கற!!”என்று சொல்ல… உடல் நடுங்கியது மதுராக்ஷிக்கு.

ஆனானப்பட்ட செல்வந்தன்.. அவனோடு..தைரியமாக மல்லுக்கட்டி நின்ற தைரியம்… இத்தனூன்டு சிறிய ஊசி என்றானதும்… எங்கே போனது தெரியவில்லை.

“ஐயோ.. ஊசியா?”என்று அதிர்ந்தவளின் விழிகளை.. சுவாரஸ்யம் இழையோடும் புன்னகையுடன்… பார்த்திருந்தான் அவன்!!

டாக்டர் வந்து.. வம்படியாய் இவன் இழுத்துப் பிடித்துக் கொள்ள… அவரும்.. ஊசி போட்டு விட்டு அகன்றார்.

அன்றைய இரவு உத்தியோகபூர்வமாக இருவருக்கும் “முதலிரவு!!”.

ஆனால் அவனுக்கும், அவளுக்கும் விடியாத இரவாக.. தொலையாத… பாழும் இரவாக ஆகிப் போனது.

காதல் என்னும் பரமபத விளையாட்டில் முதல் காய் நகர்த்தப் போவது யாரோ? அவனோ.. அவளோ??

 

 

 

 

2 thoughts on “மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top