மோகனம்-23
அது அவர்களின் திருமணத்திற்குப் பின்னரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு,
படுத்தால் அரையடி ஆழத்துக்குப் புதையும் சொகுசு மெத்தை!
அதில்… துயிலின் உச்சக்கட்டத்தில்… தலையணையை மல்லாக்கப் படுத்தணைத்து துயின்றிருந்தான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!!
அக்கணம்.. அவனின் புது மனையாளின்.. அரக்கப் பறக்க அழைக்கும் குரல் .. ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல.. அவனின் செவிகளைத் தீண்டியது.
“அஜய்.. அஜய்… சீக்கிரம் எந்திரிங்க அஜய்.. அஜய்ய்!!!”என்று அவள் நேற்றில்லாத மரியாதையுடன்… ஏதோ பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டாற் போன்ற பரபரப்புடன்..எழுப்ப முயன்றாள் தன் ஆகாத கணவனை.
அவனோ..இரவிரவாக விழித்திருந்து… அவளைப் பற்றிய யோசனையிலேயே உழன்று தவித்தவனாயிற்றே!!
சற்று நேரத்திற்கு முன்னர் தான் உறங்கியதால்… ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு… அவனது முதுகில் யாரோ கைவைத்து.. உலுக்கி எழுப்புவதும்… ஒரு பதற்றதைக் கொடுத்தது.
உண்மையில்… அஜய்யைக் கண்டாலே சினத்தில் வெந்து தகிப்பவளுக்கு… விடிந்த பின்னரும் சற்று.. அவன் நிம்மதியாக தூங்குவது கூட பிடிக்கவில்லை. மூக்குக்கு மேலே வியர்த்துப் போயிற்று.
எனவே அரக்கப் பறக்க.. இராக்ஷசியே.. எழுப்ப முனைந்திருக்க… அவனும் சுகமான உறக்கம் கலைந்து.. திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தவன்..பார்வை இறுதியில் அவளில் நினைத்தது.
பின்பு, அவளுக்குத் தான் என்னமோ ஏதோ வலியோ உடல் உபாதைகளோ என்று பதறிப் போனான்.
ஆகையால் அவன் விழிகளில் ஒரு களேபரம் பரவியோட, “எ.. என்னாச்சு.. என்னாச்சு மதுரா… ஆர் யூ ஓகே?” என்று அந்நிலையிலும் அவளைப் பற்றியே கேட்டான் ‘மதுரா உன்மத்தன்’.
அவனது அச்சிறு அன்புச் செய்கையும் அவளது உள்ளத்தை அடையவேயில்லை. இரும்புத் திரை போட்டாற் போல இறுகியிருந்தது அவளது ஹிருதயம்!!
எதிரே தன் மனையாளின் முகத்தினை.. அதுவும் என்றைக்குமில்லாமல் மலர்ந்த முகத்தினைக் கண்டதும் அமைதியானான்.
கூடவே அஜய்தேவ்வின் புருவங்களும் இடுங்கவே செய்தது!!
அவளோ மயக்கும் மோகனாங்கியைப் போல உருமாறி.. அவளின் கைவிரல்களை அவனது அடர்ந்த சிகைக்குள் இட்டு… அவன் தலை கோதியும் நின்றாள் ஒரு விநாடி!!
வருடும் தென்றலைப் போல அவளின் தொடுகை இதம் தர.. விழிகள் மூடி… ஒரு கணம் அவளது ஸ்பரிசத்தை.. காதலாட சுகித்து நின்றான் அஜய்!!
தன் இல்லாளின் சிரித்த வதனமும், அன்பான தலைகோதலும்.. உண்மையோ.. ஸ்வப்னங்களோ?? என்று அவன் திகைத்துப் போய் பார்த்திருக்க… கேட்டது அவள் குரல்!! அதுவும் தேனைப் போல குழையும் குரல்!!
“என்ன அஜய் கண்ணா.. இவ்வளவு நேரம் தூக்கமா??”.. என்று அவனைப் பார்த்து “கண்ணா” என்றெல்லாம் போட்டு ஆசையாய் கூற.. அவனது காதல் ஹிருதயம் உருகினாலும்.. ஏதும் புரியாது பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது கையோ.. அவனது தாடிக் குத்தும் முரட்டுக் கன்னங்களை வருட.. கண்களும் மிருதுவானது மோகனமாய்!!
அவள்.. நேற்றைய கோபத்தை மனத்தினுள் கொண்டு..அவனை முறைக்க வேண்டும்;பார்வையால் பஸ்பமாக்க வேண்டும்!!
இது தானே சாதாரணம்!!
ஆனால் அசாதாரணமாக.. அவள் காட்டும் அதீதபட்ச அன்பெல்லாம்.. முரணாக இருந்தாலும்… அவளது அன்புக்காக ஏங்கிப் போயிருப்பவனுக்குப் பிடித்தது அவை யாவுமே!!
அவனுக்காக “ஸ்பெஷல் காபி”போட்டுக் கொண்டு வந்திருப்பவளுக்கு.. … எங்கே அவன் அதை வாங்காமல் போய் விடுவானோ என்ற கலக்கம் முகிழ்த்தது.
“ஸ்பெஷல் காபி?”-அட ஆமாம்!!
அவன் தன் காபியை வாங்க வேண்டும் என்பதற்காகவே.. இந்த அன்புப் பார்வை.. இளகல் மொழிகள் எல்லாமே!!
அவளுடைய பாழுந்திட்டம் பற்றி அறியாத நாயகனோ. இது நனவா? கனவா என்று நம்ப மாட்டாமல்… கண்களை கசக்கியபடி… மறுபடியும் பார்த்தான் தன் முன்னே நிற்கும் அவள் ரூபத்தை!!
கனவாயின், கண்களை கசக்கினால் அகன்று விடுமல்லவா?? இல்லை அவள் அகலவேயில்லை!
டிராயர் மீதிருந்த.. ஆவி பறக்கும் காபி கப்பினை.. சாஸரோடு எடுத்து.. அவன்புறமாக நீட்டிக் கொண்டிருந்த மனைவியின் மலர்ந்த வதனம்.. அவனது விழித்திரையை விட்டும் நீங்கவில்லை!!
எனில், அது நிஜமே தான்!!
அவளோ, “என்ன பார்க்குறீங்க அஜய்?? இது நனவு தான்… உங்களுக்காக ஆசையா… நானே காபி போட்டு எடுத்து வந்தேன்.. பெட் காபி!! எடுத்துக்குங்க..”என்று அவனைப் பார்த்து அன்புடன் கூற… அவனோ ஏதும் பேசாமல் ஓரிரு கணங்கள் அவளையே இமையாமல் பார்த்திருந்தான்.
பாலில் விழுந்த திராட்சை போல அக்கரு நயனங்களும், உதட்டுச்சாயம் பூசாமலேயே இயற்கையாக சிவந்திருந்த அதரங்களும்.. மனையாளை தேவலோகக் கன்னியாகக் காட்டியது.
இப்போது தான் குளித்திருப்பாள் போலும்!
அவள் உடல் தாங்கி வரும் பிரத்தியேக சவர்க்கார வாசனை.. அவன் நாசி நிரடி.. அவனது மோகத்தை.. தாபத்தை.. இன்னும் இன்னும் கிளர்ந்தெழச் செய்தது.
தட்டிலிருந்து காபி கப்பை… ஒன்றும் சொல்லாமல்… எடுத்து விட்டு மீண்டும் அவளையே தான்.. இமைக்காமல் பார்த்திருந்தான் அஜய்.
“என்ன அஜய் கண்ணா… ம்ம்.. சீக்கிரம் சாப்பிடுங்க..? ஆபீஸ் போகணும்.. அதுக்கு முன்னால நீங்க குளிக்கணும்.. ஆயிரத்தெட்டு வேலை இருக்குல்ல.. அதனால சீக்கிரம் காபி சாப்பிடுங்க..” என்று கூற… அவனுக்கு அன்றைய மனையாளின் அதீத கரிசனை… விழிகளை இடுங்க வைத்தது.
“ஸ்பெஷல் காபி”!!
“அதீத கவனிப்பு!!” இரண்டும் ஆபத்து என்று அபாயச்சங்கினை ஊதியது அவன் மனத்துக்குள்.
அவன் அப்போதும்… அமைதியாய் தன் இல்லாளைப் பார்த்திருக்க… அவளோ மீண்டும் மயக்கும் மோகனக்குரலிலேயே சொன்னாள்.
“நான் உங்களுக்காக போட்ட “ஸ்பெஷல் காபி” அஜய்.. ப்ளீஸ்… எனக்காக சாப்பிட மாட்டீங்களா?” என்று விழிகளை உருட்டி.. சிமிட்டி கேட்டாள் அவள்.
அவளின், ‘எனக்காக சாப்பிட மாட்டீங்களா?’ என்னும் வார்த்தையில்.. ஏற்கனவே காதல்க்காரன்.. தற்போது காதல்ப் பைத்தியம் தலைக்கடித்தவனாய்… கரைந்து போனான் அவன்.
அவளைப் பார்த்த வண்ணமே.. அவளது, ‘ஸ்பெஷல் காபி’யினை.. மிடறு மிடறாகப் பருகினான் அஜய்.
அவன் காபியைப் பருகியதுமே.. அவனது முகம் அஷ்ட கோணலாக மாறும்;அருந்த முடியாமல்… குபீரென்று காபி வெளியே துப்பப்படும் என்று எதிர்பார்த்திருந்த மதுராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முழுக்காபியையும் சொட்டு விடாமல் பருகியவன், விதிர் விதிர்த்துப் போய் சாஸர் விழிகளோடு நின்றிருந்தவளின் கைகளில்… வெற்றுக் கப்பைத் திணிக்கவும் செய்தான்.
பின் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தவன், மென்மையான ஒரு புன்னகையுடன், வாய் திறந்தான்.
“காபி சூப்பரா இருக்குமா.. தேங்க்ஸ்” என்றதோடு நில்லாமல்.. அவளது மென்மையான கன்னத்தில் பச்சக்கென்று சுருக்க முத்தம் பதித்து விட்டு குளியலறைக்கு எழுந்து சென்றான் அவன்.
அவன் முத்தமிட்டது முதல் அதிர்ச்சியானால், அவள் போட்ட காபியை சொற்பம் விடாமல் பருகியது இரண்டாவது அதிர்ச்சி!!
அவன் திணித்த வெற்று காபி கப்பைப் பார்த்த வண்ணமே.. தனக்குத் தானே முணுமுணுக்கலானாள் மதுரா.
“என்ன காபி.. சூப்பரா இருக்கா?? நான் தான் காபில சக்கரையே போடலையே.. உப்பள்ளி தானே போட்டேன்.. இவன் வேற சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு போறான்.. ஒருவேள மறந்து சர்க்கரை தான்.. போட்டுட்டேனா??”என்று தன் மீது தனக்கே சந்தேகம் எழுந்தது.
அவள் சொன்ன, ‘ஸ்பெஷல் காபி’க்கான அர்த்தம் தற்போது புரிகிறதா மக்களே??
சாதா காபியில் சர்க்கரை தான் இருக்கும்!! ஆனால் நம் மது போட்ட ஸ்பெஷல் காபியில்.. உப்பு மட்டும் தான் இருக்கும்.
அவன் தந்த காபி கப்பில்… கொஞ்சநஞ்சமிருந்த காபிச் சொட்டை.. தன் தொண்டைக்குள் சரித்து.. அது உப்பா? சர்க்கரையா என்று சோதித்துப் பார்த்தாள் அவள்.
முகம் சுளித்துப் போக… அவளுக்கு உப்பின் கரிப்பினைத் தாங்க முடியாமல்.. குமட்டிக் கொண்டு வரும் போலிருந்தது.
இதில், எப்படி இவன் முழுவதையும் குடித்தான்??எண்ணும் போதே தலைச்சுற்றும் போலிருந்தது.
யோசித்துக் கொண்டே கீழே வந்த போது.. அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த லான்ட்ரி அறையில் இருந்த வண்ணம்… அவனது வேலையாளி ஒருவன்.. உடைகளை அயர்ன் செய்து கொண்டிருப்பது புரிந்தது.
நேரே பணியாளனின் அருகே சென்றவளோ.. உடைகளை அயர்ன் செய்து கொண்டிருப்பதையே… விழிகளில் விஷமம் ஓடப் பார்த்திருந்தாள் மதுராக்ஷி!!
“இது யாருடைய டிரஸ்??” என்று அவ்வீட்டு எஜமானியாக.. மிடுக்கான தோரணையுடன் கேட்டபோது..அவனிடமிருந்து பவ்யமாக வந்தது பதில்,
“சாரோடதுமா!! ”என்று.
ஓ.. அவனுடையதா..?? என்ற எண்ணமே… ஏற்கனவே குறும்புக்காரிக்கு.. இன்று பக்கா குறும்பினை உள்ளுக்குள் ஊற்றெடுக்கச் செய்ய.. விழிகளில் விரிந்தது ஒரு பளிச்சிடல்!!
“ஏம்ப்பா.. அதை இங்கே கொடு..என் புருஷன் டிரஸ்ஸை நான் அயர்ன் பண்றேன்… நீ போய்.. கார்டன்ல… ஒழுங்கா வாட்டர் சப்ளை இருக்கான்னு பார்த்துட்டு வா..” என்று லான்ட்ரி செய்வதற்கு பணியமர்த்தப்பட்ட பணியாளனை… கார்டன் பணி செய்வதற்கும் அனுப்பி வைத்தாள் அவள்.
ஆனால், சொல்வது எஜமானியாயிற்றே?? அதற்கு மேலும் மறுத்துப் பேசவும் முடியுமோ??
“சரிம்மா”என்று தலையை அசைத்த வண்ணம்.. அங்கிருந்தும்.. தோட்டப்பக்கம் விரையலானான் லான்ட்ரி மேன்!!
இதோ.. அவள் கண்முன்னே இருப்பதோ.. இளநீல நிறத்தினாலான முழுநீளக்கைச் சட்டை!! இன்று அவன் ஆபீஸிற்கு அணிவதற்காக.. தேர்ந்தெடுத்திருக்கும் சட்டை!!
அதனை விழிகளில்.. குறும்பு இழையோடப் பார்த்திருந்தவளோ.. அயர்ன் டேபிளின் மீது… அவனது சட்டையைப் படுக்கப் போட்டு விட்டு.. விஷமமாகப் புன்னகைத்தாள் அவள்!!
வேண்டுமென்றே மின்னழுத்தியை அதிச்சூட்டில் வைத்து சட்டையின் நீளக்கைப் பகுதியை… அழுத்திப் பிடித்தாள் அயர்ன் பாக்ஸினை.
அறையெங்கிலும் ஒருவிதமான கருகும் வாடை அடிக்க… அயர்ன் பாக்ஸினை அப்போதும்.. அவள் அழுத்திய இடத்தினை விட்டும் அகற்றாமல்.. குரூரமாகச் சிரித்த வண்ணமே நின்றிருந்தாள் அவள்.
கைப்பகுதி.. சுடுபட்டு.. முழுவதுமாக கிழிந்து.. இங்கிருந்து பார்த்தால்..எதிரே இருப்பவர் முகம் தெரியும் வண்ணம் ஓட்டையும் விழுந்தது அதன் மீது!!
அதை எடுத்து… கண்முன்னே தூக்கிப் பார்த்தவளுக்கு, இதை அவன் அணிந்து சென்றால்…?? என்ற நினைப்பே பெரும் சிரிப்பை மூட்டியது.
சட்டையின் கைப்பகுதி வெளியே தெரியாத வண்ணம் அதைக் கச்சிதமாக மறைத்து.. மடித்தவள்.. துணியோடு துணிகளாக.. அவனது அறைக்கும் தான் அனுப்பி வைத்தாள்!! இதர பணியாளர்கள் மூலம்!!
இன்னும் சிறிது நேரத்தில்… அவனது குரல்… வீடே.. இரண்டாகப் பிளந்து… அதிரும் வண்ணம்.. உச்சஸ்தாயியில் கேட்டது.
“மை ஷேஏஏஏர்ட்!!!”
சுடுபட்டுப்போன சட்டையைப் பார்த்து… ருத்திர தாண்டவம் ஆடும் சிவனாக.. கோபத்தின் வீரியத்தில் கத்திக் கொண்டிருந்தான் அவன்.
அவளும்.. ஏதும் தெரியாத அப்பாவி குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு.. சம்பவம் நடக்குமிடத்துக்கு விரைந்த போது.. பேன்ட் மற்றும் பெனியனோடு .. அறையின் நட்ட நடுமையத்தில் நின்றிருந்தான் அவன்.
இப்போது தான் குளித்து விட்டு வந்திருந்தவனது அலை அலையான அடர்ந்த சிகையை விட்டும்.. நீர்த்துளிகள் இறங்கிக் கொண்டிருக்க…. காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தான் அவன்.
அவனோ… இஸ்திரி போட பணிக்கப்பட்ட தலைமைப் பணியாளனின் சட்டைக்காலரைக் கொத்தாகப் பிடித்திழுத்து… திட்டிக் கொண்டிருந்தான்.
பற்கள் நறுநறுவெனக் கடிக்கப்பட்டு.. உறுமும் புலி போல விகாரமாயிருந்தது அன்று அவளது பாஸின் முகம்.
“என்ன பண்ணி வைச்சிருக்க ய்யூ ஃபூல்… இதுக்கு தான் மாதம் ஒண்ணாந்தேதி பிறந்ததும் சம்பளம் தர்றேனாஆஆஆ!! இன்னிக்கு போர்ட் மீட்டிங் வேற இருக்கு… இத உங்கப்பன்னா உடுத்திக்கிட்டு போவான்..??” என்று வேலையாளிக்குத் தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருந்தான் நாயகன்!!
பாவம் அப்பாவி பணியாளன்!!
இவள் செய்து வைத்த திருகுத்தாளத்திற்கு அவனும் தான் என் செய்வான்??
மதுராக்ஷயிடமிருந்த கொஞ்சநஞ்ச மனசாட்சியும்.. அவளைக் கேள்வி கேட்க.. பணியாளனுக்கு மேற்கொண்டு திட்ட விடாது.. இடையில் புகுந்தாள் அவள்.
பணியாளனின் சட்டையைப் பிடித்திருக்கும்.. அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் மதுராக்ஷி!!
சீற்றம் தணியாது.. தோள்புஜங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ஏறியிறங்க… தன்னவளைத் தான் சிவந்த நயனங்களூடன் ஏறிட்டான் அவன்.
“அஜய்… அந்த சட்டையை… அயர்ன் பண்ணது நான் தான்… அத சுட்டதும் நான் தான்.. திட்டுறதுன்னா என்னை திட்டுங்க.. ஒண்ணும் தெரியாத அப்பாவி… அவன் ஒண்ணும் பண்ணல” என்று அத்தனைத் தவறையும்.. கணவன் முன்னிலையில்.. ஒப்புக் கொண்டாள் அவள்.
அவள் சொன்ன சொற்களைக் கேட்டதும், “என்ன நீயா?”என்று அதிர்ந்த அஜய்தேவ்வின் கரங்கள்.. அப்பாவி பணியாளனின் சட்டையை.. பட்டென்று விட்டது.
இதை இவ்வளவும் செய்வது ஏன்??
எந்தக் குறும்புத்தனங்களினால்.. அவன்… அவளைக் காதலிக்க நேரிட்டதோ.. அதே குறும்புத்தனங்களினால்.. அவன்.. அவளை வெறுக்க வைப்பதற்காகவா இத்தனையும் செய்கின்றாள்??
அவன் தன் மீது வெறுப்பு கொண்டு..மண விடுதலை தர வேண்டுமென்று தானே.. காபியில் உப்பு…. சுடுபட்ட சட்டை என எல்லாமும்!!
செய்வதையெல்லாம் செய்து விட்டு…தைரியமாய் நின்று கொண்டிருந்தவளின் முகத்தை.. இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் மீது ஆழியளவு காதல் வைத்திருப்பவன்… இச்சின்னஞ்சிறு நிகழ்வுகளுக்கெல்லாம்.. அவள் மீது வெறுப்பு பூண்டு.. மணவிடுதலைத் தரக்கூடுமா என்ன??
அவன் காதலின் ஆழம் அவனறிவான்!! அவளை விட்டும் அவனுக்கும் வாழ்வேது??
மறுகணம்.. அவன் முரட்டு வதனம் பூவாய் மாற.. அவனது கோபம் போன இடமும் தெரியவில்லை.
அவனுக்கு முகத்தைப் பார்த்து திட்ட முடியாமல் போக.. அவளை நாடி வந்து.. அவளின் கரங்களைத் தான் பற்றி.. சூட்டுக்காயங்கள் இருக்கிறதா என்று தீவிரமாக.. பதற்றத்துடன் பரிசோதிக்கலானான் அவன்.
“.. எ.. என்னாச்சு அஜய்… எ.. எதை தேடுறீங்க?” என்று திக்கித் திணறிய குரலில் ஏதும் புரியாமல் கேட்டாள் அவள்.
அங்கே… அப்படி ஏதும் சூட்டுக்காயங்கள் ஏதும் இல்லாமல் போனதும் தான்.. பெருமூச்சுடன்.. அவளைத் தாவி இறுகி அணைத்துக் கொண்டான் அவன்.
“இந்த மாதிரிலாம் பண்றது நிறுத்து மதுரா… சட்டை போனா டோன்ட் கேர்.. இன்னொன்னு வாங்கிக்கலாம்.. ஆனா.. உனக்கேதாவது ஆகிருச்சுன்னா…உனக்கு அயர்ன் சுடுபட்டிருச்சுன்னா… ஐ கான்ட் டேக் இட்!!”என்று மனம் தளர்ந்து.. உடல் துணுக்கமுற்றுச் சொன்னவனின் வார்த்தைகள்.. அவளை இலேசாகத் தாக்கியது.
சட்டையில் ஓட்டை விழுந்ததும்.. வானத்துக்கும், பூமிக்குமாகதச் சீற்றத்தில் துள்ளுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு.. அவனின் அன்பு.. உள்ளே ஏதோ பிசைவது போல செய்தது.
அவள்.. அவனையே இமையாமல் பார்த்த வண்ணம் நின்றிருக்க…. அஜய்தேவ்வோ… ஏதும் பேசாமல் டீஷேர்ட் மற்றும் கோர்ட் எடுத்து அணிந்து கொண்டே.. அலுவலகம் விரையலானான்.
அவன் சாப்பிடாமல் கூட சென்று விட்டானே என்று அவன் மீது பரிவு தோன்றியது எல்லாம் சில நிமிடங்கள் தான். அவள் இதயத்தில்.. அவனுக்காக ஊற்றெடுத்த அன்பும் கூட சில நிமிடங்கள் தான்!!
எங்கிருந்தோ பாழும் மனம், ‘மார்ஃபிங் செய்து யூடியூப்ல விட்டிருவேன்” என்று அவன் சொன்னதை நினைவுறுத்த.. அவன் வார்த்தைகளும் காதோரம் ஒலிக்க.. சிலிர்த்து விழித்தாள் அவள்.
அவன் உனக்கு கருணை காட்டினானா மதுரா?? பின் நீ அவனுக்கு கருணை காட்ட விழைவதும் ஏனோ? – மூளை கேள்வி கேட்க.. அவளுள் மறைக்கப்பட்ட புதையல் போல காதல் புதைந்தும் போனது.
புதையல் வெளிவருவதும் எப்போது??
மோகனம்-24
அலுவலகத்திற்கு…எப்போதும் இல்லாமல்… டீஷேர்ட் மற்றும் கோர்ட்டில்.. ஒரு ஆண்மாடலைப் போல.. வந்திருக்கும் தங்களது பாஸின்.. அழகை எல்லாரும் ஆச்சரியக் கண் கொண்டு இரசித்துப் பார்த்தனர்.
அவர்கள் அனைவரும்.. அவனைக் கண்ட உற்சாகத்தில், “குட்மார்னிங்”குகளை துள்ளல் குரலில் சொல்ல… அவனிடம் மாத்திரம் உற்சாகம், களிப்பு, துள்ளல் எதுவுமே இல்லை.
அவர்களின் காலை வந்தன உபசரிப்புக்களை எல்லாம்.. ஒற்றை தலையசைவில் ஏற்றவன்.. டைல்ஸ் தரையில் ஷூ பாதங்கள் தடதடக்க நடந்து.. தனக்குரிய அறை நாடிப் போனான்.
அன்றைய போர்ட் மீட்டிங்கில்.. ஏனோ தானோ என்று அமர்ந்திருந்தவனின் சிந்தை, பொருள், செயல் என எல்லாவற்றிலும் மனையாளே நிறைந்திருக்க… அவனுக்கு இன்று வேலை ஓடவேயில்லை.
அவள் என்ன தான் அவனைத் தொல்லைப்படுத்தினாலும்.. அவனுக்கு அவள் பக்கத்திலேயே இருந்து.. அவள் விழிகளைப் பார்த்த வண்ணம்.. அவளது தேகவாசனையை முகர்ந்த வண்ணம்… கட்டிலோடு அவளுடன் கலந்த வண்ணம்… இன்பமாய் இருக்க வேண்டும் போலிருந்தது.
அவளோ… வீட்டிலிருந்தபடியே… எப்படி அவனிடம் மணவிடுதலைப் பெறுவது என்று.. அதிதீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கலானாள்.
அதேவேளை… அவனோ… அலுவலகத்திலிருந்து எப்படி அவளுக்கு.. அவனது காதலின் வீரியத்தைப் புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கலானான்.
எதிரெதிர் திசையில் குணாதிசயம் கொண்டு.. இருக்கும் இரு துருவங்கள் தானே ஈர்க்கும்??
அவ் இயற்கை விதியை.. அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை!!
***
அழகான பொன்மாலைப் பொழுதில்… சூரியன் வானத்தின் கடைக்கோடியில்… கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கிக் கொண்டிருக்க…. தங்கமுலாம் பீய்ச்சியடித்தது போல காட்சி தந்தது வானம்!!
அதனையே… மொட்டைமாடியில் இருக்கும்.. “ரூஃப் டாப் ஸ்விம்மிங் பூல்’ அருகே இருந்த…சாய்நாற்காலியில் அமர்ந்து… கண்களில் ஒரு கூலர்ஸூடன்…ராயல் பெண்ணைப் போலப் பார்த்து இரசித்திருந்தாள் அவள்.
உண்மையில், அவளுடைய பிறந்தகத்தை விடவும்.. இங்கே… அஜய்தேவ்வின் வீட்டில் அதி சொகுசுகளும், அவற்றையெல்லாம் எந்தக் கட்டுப்பாடுமின்றி அனுபவிக்கும் சுதந்திரமும் இருக்கவே செய்தது.
இன்னும் ஏன்.. அவளுக்காக தனி ஆடிக்காரொன்று வெளியில் எந்நேரமும்.. ஒரு ஓட்டுநரோடு நின்றிருக்க… அவளுக்கு இருபத்து நான்கு மணி நேரமும்.. வேண்டிய இடத்திற்கு.. சென்று வரவும்.. ஏற்பாடும் செய்திருந்தான் அவன்.
மேலதிகமாக.. அவனின் கிரெடிட் கார்ட்டினையும் அவளுக்காக கொடுத்து வைத்திருந்தான் அஜய்.
அஜய் அந்தளவுக்கு… அவளுக்கு வேண்டிய சுதந்திரத்தை அளித்து.. க்ஷத்திராணி போல உணரச் செய்திருந்தாள் அவளை!!
என்ன தான்.. மணவிடுதலை பெறும் நோக்கத்தோடு இருந்தாலும்… அவனோடு இருக்கப் போகும் சொற்ப காலத்தில்.. அவனின் செல்வ வளமையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணமும் அவளுள் பூத்துக் கிடக்கவே.. அவனின் சொகுசுகளை ஒருபோதும் அவள் தள்ளி வைத்ததேயில்லை.
இன்றும் அப்படித்தான்!!
அவன் சென்றபிறகு.. மாலையானதும்.. இளநீல நிற நீச்சல் தடாகத்தில்.. ஒரு பெண் டால்பினைப் போல… ஆசை தீர நீராடியவள்.. இதோ இப்போது சாய்நாற்காலியில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தையும்… இரசித்துப் பார்த்திருக்கிறாள்.
அவளருகே இருந்த குட்டி மேசையில்… பலவிதமான குளிர்பானங்கள்.. ஸ்ட்ரா மற்றும் குட்டி குடை சகிதம்.. குவளைகளில் ஊற்றப்பட்டிருக்க.. நவீனரக ஹோட்டலில் இருப்பது போல.. சொகுசு அங்கே அவளுக்கு..குறைவின்றி கிடைத்தது.
அவனோ… மாலையில் வீடு திரும்பிய போது.. தன் மனையாளுக்கு மிகவும் பிடிக்குமே என்று… அவன் கையில் ஓர் மலர்க் கொத்துடன் வந்திருந்தான்.
‘சாக்லேட் ஆர்க்கிட்’ என்னும் மிகவும் விலைகூடிய மலர்களால் ஆன.. மலர்க்கொத்து தான் அது. சாக்லேட் நிறத்தில்.. சாக்லேட் மணத்தில்.. தென்னெமரிக்க நாடுகளில் மட்டுமே விளையும் பூக்களைக் கொண்டு அமைந்திருந்தது அது.
இதைக் கொடுத்து.. அவளை, “இம்ப்ரஸ்” செய்து விடும் நோக்கத்தோடு… அவன் வீடு வந்தவனின் இதயமும், பார்வையும் அவளைத் தான் ஊனுருக.. உயிருருகத் தேடலானது.
அவள் மொட்டை மாடியில் இருப்பதை.. பணியாளர்கள் மூலம் அறிந்து கொண்டவன்.. படிகளை மும்மூன்றாக.. நன்னான்காகத் தாவித் தாவி… மேலே மொட்டை மாடிக்கு வரவும் செய்தான்.
அங்கே அவன்… “மதுரா” என்று மையல் ததும்ப வந்து நின்ற நேரம்.. நீச்சல் உடையில்.. சாய்நாற்காலியில் அமர்ந்திருந்தவளும் தட்டுத்தடுமாறி நின்றிருந்த நேரமும் ஒன்று!!
கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தவனின் கண்கள்.. தன் ஸ்வப்ன ஸ்ரூபினியின் அங்க லாவண்யங்களைத் தான் இடைவிடாது கண்ணுறலானது.
உலரும் கூந்தல்க் கற்றையுடன்.. பளிச்சென்று கைகள் தெரிய… அவளது இரு பாதித் தனங்களும் வெளியே பிதுங்கித் தெரிய.. ஒல்லி வயிற்றோடு ஒட்டிச் சென்ற நீச்சலாடையில்.. வளவளத்த தொடைகள் திரையின்றி தெரிய மேலோகத்து மேனகையாய் தெரிந்தாள் அவள்.
அதிலும்.. அவள் இதழ்கள்!!
நீர்மணிகள் கோர்த்து நிற்க… தெரிந்த செவ்வரத்தை மலர் போன்ற இதழ்களைக் கௌவிச் சுவைக்க பேராவல் முளைத்தது அவனுக்குள்!!
அவனின் பார்வை.. தன்னை ஊடுறுவிப் பார்ப்பதறிந்து.. அவள் தள்ளாடி தடுமாறி நின்று.. அருகிருந்த டவலினைத் தேடியது மதுராவின் பார்வை.
மனையாளாகவே ஆனாலும்.. அவளின் தடுமாற்றம் உணர்ந்து.. “ஸாரி மதுரா..”என்ற வண்ணம்.. அவளுக்கு வேண்டிய இடைவெளியைக் கொடுத்து திரும்பி நின்றான் அவன்.
பார்வையாலேயே கண்ணியம் காத்து.. ஒதுங்கி நிற்பவன்.. இங்கிதமற்று மார்பிங் செய்து அவளை மானபங்கப்படுத்தவும் கூடுமோ??
சிந்தக்கவேயில்லை அவள்!!
அவன் திரும்பி நின்ற இடைவெளியைப் பயன்படுத்தி.. அருகிருந்த டவலினை எடுத்து.. இடுப்பின் கீழ் கட்டிக் கொண்டு நிமிர்ந்தவளோ.. குரலை செருமிக் கொண்டு.. தன் கேள்வனை அழைத்தாள்.
“ம்க்ம்…என்ன விஷயம் அஜய்!!”என்று சொல்ல… அவனும்… விரிந்த புன்னகையுடன்.. தன் காதலியிடம் காதலைச் சொல்ல வந்த.. விடலைப் பையனின் களிப்போடு திரும்பினான்.
அவளுக்கோ.. ஏனோ.. அவனைப் பார்க்கும் போது பரிதாபமோ அன்போ காதலோ தோன்றவில்லை.
மாறாக வீடியோவை அன்று, ‘மார்பிங் செய்து போடுவேன்’ என்றது ஞாபகம் வரவே… மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு.. அழுந்த மூடிய அதரங்களுடனேயே நின்றாள் அவள்.
“உண்மையில் காதலிப்பவன்,காதலியின் காணொளியை மார்பிங் செய்வேன் என்று மிரட்டுவானா?” என்று இதயம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தது அவளிடம்.
அவனைப் பார்க்கும் போது சீற்றமும், அருவெறுப்பும் தோன்றியதே தவிர வேறொன்றும் தோன்றாமல் போனது மதுராவுக்கு.
“ பூஸ் பார் யூ மதுரா..” என்ற வண்ணம்.. அவளுக்கென அவன் வாங்கி வந்த.. மிகவும் விலையுயர்த்த சாக்லேட் ஆர்க்கிட் மலர்களை முகம்மலர அவள் பால் நீட்டியிருந்தான் அஜய்.
அவனின் முகத்தில் தோன்றிய… அம்முகமலர்ச்சி பிடிக்காமல் போகவே…அவன் மலர்களை வாங்கிக் கொள்ளாமல்.. அவன் காதல் மனத்தினை இம்சை செய்யும் கொடூரியாக.. கல்லாய் சமைந்து நின்றிருந்தாள் அவள்.
அவனது மலர்கள் ஏந்திய கையோ… நீட்டியது நீட்டியது போலவே இருக்க.. சிலபல மணித்துளிகள் கடந்த பின்னும்.. தன் காதல் மலர்களை அவள் வாங்காமையைக் கண்டு.. செல்வந்தனின் முகம் வாடத் தொடங்கியது.
அவனின் முகவாட்டத்தையும் கூட குரூரத்தனமாக இரசித்த வண்ணம்… அவன் கையிலிருந்த சாக்லேட் ஆர்க்கிட் மலர்களை எடுத்தவுடன் தான்… அவனது வாடியிருந்த முகம் மீண்டும் மலர்ந்தது.
வேண்டுமென்றே.. அவன் தந்த மலர்களை.. கைநழுவி விழுந்தது போல.. அருகிலிருந்த நீச்சல் தடாகத்தில் அத்தனை மலர்களையும் போட்டாள் மதுராக்ஷி.
அவளுக்காக ஆசை ஆசையாக கடல் கடந்து ஆர்டர் செய்து தருவித்த மலர்கள்.. அவன் கண்முன்னாடியே… நீச்சல் தடாகத்தில் விழுவதைக் கண்டவனின் கண்கள்… சிவந்து கண்மடல்கள் எல்லாம் துடித்தன.
தன் காதலை உதாசீனப்படுத்தும் மனையாளை… வெறிக்க வெறிக்கப் பார்த்தவனின்…கைமுஷ்டி இறுக.. உடம்பைக் கல்லாக்கிக் கொண்டு நின்றான் அவன்.
பற்களை நறுநறுவெனக் கடித்தவாறே, “வாட் த ஹெ…”என்று தன் கோபத்தை வெளிப்படுத்த போனவன்..வார்த்தைகள் நின்றது.
அவனின் கோபத்தை.. அவள் மீதான ஓர் வெறுப்பை அல்லவா அவளும் எதிர்பார்த்து நிற்கின்றாள்??
அதைப் பரிசளிப்பது அவனது காதலை தொலைத்து நிற்பதற்கு சமம் அல்லவா??
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு..இழுத்துப் பிடித்த பொறுமையோடு… நின்றான் அவன்.
“அச்சச்சோ.. தெரியாம கீழே விழுந்திருச்சே அஜய் கண்ணா?”என்று பரிதாபப்படுபவள் போல… சலித்துக் கொள்ளும் குரலில்.. உச்சுக் கொட்டிக் கொண்டே சொன்னாள் அவள்.
“அஜய் கண்ணா”- அவள் தெரிந்தோ தெரியாமலோ அழைத்த.. ‘கண்ணா’ என்ற ஒற்றை அழைப்பில்.. கல்லான இதயமும் கரும்பாக மாறி.. அவளின் வார்த்தைகள் தித்தித்தது.
ஒரு மொட்டொன்று.. பூவாக அரும்பியது போல.. இறுகிய வதனமும் தளர்ந்து போக… பேரழகாய் தன் முத்துமூரல்கள் காட்டி நின்றான் அவன்.
என்ன?? புஞ்சிரிப்பு சிந்துகிறானா அஜய்!!! – அவனது பேரழகுச் சிரிப்பைக் கண்டு… திக்குமுக்காடி நின்று போனாள் மதுரா.
காலையில்.. உப்பு காபி கொடுத்த போதும் சரி..தற்போது கைத்தவறி விழுந்தது போல.. ஆர்க்கிட் மலர்களை தடாகத்தில் விட்ட போதும் சரி… ஏன் அவ்வளவாக கோபம் கொள்ளவில்லை??
அப்படியே கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொள்கின்றானே ஏன்??
அதற்கெல்லாம் காரணம்… அவன் பெயரை, “அஜய் கண்ணா” என்று அழைத்தமையினால்… விழைந்த பேரன்பு தான் காரணமென்று புரிந்ததும்… அவளொரு மனச்சபதம் எடுத்துக் கொண்டாள்.
இனியொரு போதும், “கண்ணா”என்று சிலாகித்து.. அவனை குழந்தையை தாய் அழைப்பது போல உருகும் குரலில் அழைக்கவே போவதில்லை என்று.
ஆயினும், காலம் அவளுக்காக என்ன ஒளித்து வைத்திருக்கிறதோ??
****
அன்று இரவு… உணவுக்குப் பிறகு.. கடல் போல விரிந்து பறந்திருந்த வீட்டில்.. பிரத்தியேகமாக.. ஹோம் தியேட்டர் இருந்த நடுக்கூடத்தில்…
அங்கே கைநிறைய பெரிய கண்ணாடிப் பாத்திரம் நிறைய.. பாப்கார்ன் ஏந்தியவாறு… சோபாவில் உட்கார்ந்தபடி.. ஒருபக்க சுவற்றையே அடைத்து.. எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான தொலைக்காட்சி திரையில்… சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதில்.. ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர்கபூர் நடித்த சூப்பர் ரொமான்டிக் பாடலொன்று போய்க் கொண்டிருக்க.. அதனை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்!!
ரன்பீர் கபூர்.. முழங்கால் வரை மடித்து விடப்பட்ட காற்சட்டையும்… மேலே சட்டை அணியாத வெற்று மேனியுமாக நின்றிருக்க…
பாப்கார்னை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டே… ரன்பீரின் சிக்ஸ்பேக் பார்த்து சொக்கிப் போனாள் அவள்.
தட்டுத் தட்டான தசைகள் கண்டு.. இரு கன்னத்திலும் கை வைத்துக் கொண்டவளோ, “ஓ.. ரன்பீஈஈர்… இன்னா சிக்ஸ் பேக்யா.. வாஆவ்”என்று தன்னையும் மீறி… அவள் இரசித்துக் கொண்டிருந்த வேளை அது!!
தன் முக்கியமான அலுவலக கோப்பொன்றை எடுக்க.. தன்னறையில் நின்றும் மாடிப்படியிறங்கி.. அலுவலக அறைக்கு வந்தவனின் காதுகளில்.. விழுந்தது மனையாளின் சிலாகிப்பு மொழிகள்!!
தன் மனைவி தன்னை மட்டுமே காதல் செய்ய வேண்டும்!! தன்னை மட்டுமே இரசிக்க வேண்டும் என்று ஓவர் பொஸஸிவ்வில் இருக்கும்..
எந்த ஆணுக்கும் தன் மனைவி…. இன்னொரு ஆணை இரசிப்பது பிடிக்காது தான் இல்லையா??
அவனுக்கும் மனைவியின் இரசிப்பு பார்வையும், சிலாகிப்பு மொழிகளும் பிடிக்காமல் போயிற்று.
ரன்பீரைப் பார்த்து அவள்… திரையை நோக்கி கைக்காட்டி நெட்டி முறித்து.. கண் திருஷ்டி கழித்தவளாக,
“வாவ் ஹேன்ட்சம்.. என்னவொரு சிக்ஸ்பேக்.. என்னவொரு பாடி.. வாவ்..வாட் அ பைசெப்ஸ். (biceps) ” கூறிக் கொண்டிருப்பது மனத்தினுள்… பெரும் அலைக்கழிப்பைக் கொடுத்தது அவனுக்கு.
பின்னே கல்லூரி நாட்களில்.. கொழுகொழுவென குண்டுபூசணிக்காய் போலிருந்தவன்.. ஜிம் சென்று… ஆஜானுபாகுவான உடலைப் பெற்றதே அவளுக்காகத் தானே??
கள்ளக் கண்ணால் அவள் முகத்தைப் பார்த்த வண்ணமே.. .. இறுகி கறுகிப் போன வதனத்துடன்… வந்து போன தடயமே இல்லாமல்.. மீண்டும் மாடிப்படிக்கே விரைந்தான் அவன்.
மணவிடுதலை வேண்டுமானால்.. மூன்று விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று விதித்தவன்.. அதில் ஒன்று, ‘ஒன்றாக இருவரும் ஒரே கட்டிலில் படுக்க வேண்டும்’ என்றும் விதித்திருந்தான்.
ஆகையால்.. துயிலும் நேரம் வந்ததும்.. தொலைக்காட்சியை அணைத்து விட்டு.. ஒருவித நடுக்கத்துடனேயே அறைக்கு வந்து.. தன் இரவாடை எடுப்பதற்காக அலமாரி நாடிப் போனாள் அவள்.
அக்கணம் குளியலறையில் நின்றும்..வெறும் ஷார்ட்ஸூடன்.. உள்ளே வந்த கணவனின் விம்பம் அலமாரி கண்ணாடியில் விழ.. அதைக் கண்டு… திகைத்து நின்றாள் அவள்!!
ஜிம்மில் ஜிம்முகின்றவன் என்பதைக் காட்டும் வண்ணம்…. முறுக்கேறிப் போயிருந்த கைத்தசை நார்களும்… திட்டுத் திட்டுத் தசைகளுமாக… எய்ட் பேக்குடன்… நின்றிருந்தவனைக் கண்டு… மிடறு கூட்டி விழுங்கிக் கொண்டாள் அவள்.
அவள் பிற ஆடவனை இரசிப்பதால் விளைந்த.. பொறாமையால் அவன் தேகத்தையும், வனப்பையும் .. தன்னவளுக்குக் காட்ட நினைத்தானோ அவனும்??
விம்பத்தில் விழிகள் பதிக்காமல் கடினப்பட்டு விழிகளைத் திருப்பிக் கொண்டு… அவள் இரவுடையை எடுத்துக் கொண்டு திரும்பிய போது.. ஏதோ கற்றூணில் மோதுண்டது போல.. தலையை வலிமையான பொருளில் இடித்து நின்றாள்.
“ஸ்… அஅ”என்று கத்தியவாறே.. தன் நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டே.. தான் மோதுண்ட பொருளைப் பார்த்து விழிகள் நிமிர்த்திய போது.. அங்கே நின்றிருந்தது அவன்!!
அவனது தேகவாசனை.. அவள் நாசி நிரட.. அவனது இடுப்பின் கீழான பகுதி.. இவளதைப் போட்டு நசுக்கி நெருங்கி நின்றிருந்தது.
அவள் அங்கிருந்தும் விலகி வர முற்பட.. அதற்கு விடாமல்.. இரு கைகளாலும் அணைகட்டி தடுத்து அலமாரி கதவில் உள்ளங்கைப் பதித்து… அவளை இன்னும் இன்னும் நெருங்கி நின்றான்.
எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே… நிமிர்ந்தவளோ படபடப்புடன் அடித்துக் கொள்ளும் விழிகளோடு, “க.. கைய எடுங்க அஜய்… எனக்கு தூக்கம் வருது..நான் தூங்க போகணும்”என்றாள் அவன் நயனம் பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தபடி.
அவனது கையொன்று எழுந்து.. அவளது இதழ்களை வருட.. அவளை தன் பிடியிலிருந்தும் விடாமல் வேறு சொன்னான் அவன்.
“உனக்காக.. நீ இரசிக்கணும்ன்றதுக்காக.. எய்ட் பேக் வைச்ச என்னை இரசிக்காம.. எவனோ ஒரு நடிகன இரசிச்சு..வார்த்தைகளை வெளியிட்ட.. இந்த உதடுகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று ஒற்றைப் புருவமுயர்த்திக் கேட்டான் அவன்.
அவளுக்கோ.. அவனது மந்தகாசப் பார்வையும், ஹஸ்கி தொனியும் இன்னும் இன்னும் பயம் கொடுக்கலானது.
“இ… இஇங்க பாருங்க.. சும்மா சும்மா கட்டிப் பிடிக்கறது..அப்றம் இப்டி வவ.. ழிய மறைச்சு நிற்கறது…ன்னு இருந்தா… நான் நான்.. அம்மா வீட்டுக்கு கெளம்பிருவேன்!!”என்று சுட்டுவிரல்காட்டி அவனை எச்சரிக்க செய்தாள் அவள்.
அவனோ தாடியை வருடி விட்டவாறே… கூர் பார்வையுடன், “ஓ.. இஸிட்… அவ்ளவு தைரியம் வந்துருச்சா… இவ்வளவு பேசற வாய”என்று மோனக் குரலில் சொன்ன வண்ணம்… அவளை இன்னும் இன்னும் நெருங்கிப் போனான் அவன்.
அவனது மார்பில் கைவைத்து..அவனைத் தன்னில் நின்றும் தள்ளிவிட… அவனது தேகம் சுட்டது அவளது உள்ளங்கையை.
“வேணா.. அஜ”என்று மாத்திரம் சொன்னவளின் திறந்த அதரங்களை.. தன் இதழ்களில் கௌவி… அப்படியே தனக்குள் அடக்கி… தீஞ்சுவையை சொற்பம் விடாமல் உறியலானான் அவன்.
அவளோ விதிர் விதிர்த்துப் போய்.. நுனிக்கால் விரல்களில் எம்பி நின்றாள். இவனோ.. அவளைத் தன்னில் நின்றும் விலக்காது.. அவளது மெல்லிடையூடு கையிட்டு..அவனது வயிற்றோடு இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டான்.
அவளது அழகு நயனங்கள்… விரிந்தது பெரிதாக. அவன், நாயகியின் இதழ்களில் தேன் கடைந்து கொண்டிருந்தான் இனிதாக.
மூக்கும், மூக்கும் இடித்துக் கொள்ள… இதழ்கள் கடந்து நாவு கடந்து.. இதயம் அடைய.. அவன் முத்தத்தால் முயன்று கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மீசையை முற்றாக மழித்து அவன் ஷேவ் செய்திருக்க.. அவளின் இதழ்களைக் குத்த.. அவனின் மீசையும் அங்கில்லை.
சிலபல மணித்துளிகளாக நீண்ட முத்த யுத்தமும் முடிவுக்கு வர… அவனின் கண்கள் பெரிதும் மிருதுவாகி சொக்கிப் போயிருந்தது.
அவளின் மூக்கை தன் மூக்கால் உரசியவனோ, “இனி.. ஹீரோவை இரசிக்க முன்னாடி… அம்மா வீட்டுக்கு போவேன்னு சொல்ல முன்னாடி… இந்த பனிஷ்மென்ட் உனக்குஞாபகம் வரும்… வரணும்!!”என்றவன்..அங்கிருந்து மஞ்சத்தை நோக்கி விரைந்தான் அவன்.
கணவனின் முத்தத்தில் இதழ்களெல்லாம் சிவந்து வீங்கிப் போய்… அவ்விடத்திலேயே கல்லாய் சமைந்தவளுக்கு..அவன் பேச்சுக்கள்… அதிர்ச்சியைக் கொடுக்க… கணவனோடு மஞ்சத்தில் துயிலவும் அச்சம் வந்தது.
wow super sis………..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌