மோகனம்-28
அடுத்த நாள்.. முற்பகல் பொழுதில்,
அவன்.. அவ்வப்போது அலுவலகத்தில் நின்றும் சடுதியாக.. திடீரென திக்விஜயம் மேற்கொண்டு… தன் ஆருயிர் அன்புப் பெண்ணைப் பார்க்க வருவது வழமையே!!
இன்றும் அப்படித்தான்!!
நேற்றைய தாறுமாறான தேகங்களின் இணைவில்.. அவளுக்கும், தனக்குமான இடைவெளி குறைந்திருப்பதாக.. தன்னைப் பொருத்தவரையில் எண்ணிக் கொண்டான் அஜய்தேவ்.
ஆயினும்,மதுராக்ஷியின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே இருந்ததா என்று கேட்டால்.. விடை சூன்யமே!!
காதல்ப் பெண்ணோடு இணையும் கூடல்… அவனுள் ஒரு உன்மத்தக் கிறுக்கையும் ஏற்றியிருந்தது.
அஜய்தேவ்.. “பால் ருசி கண்ட திருட்டுப் பூனை”யாயிற்றே??
இன்றும் தன் பாலை நோக்கித் தான் வந்திருந்தது பூனை!! இல்லையில்லை ஒரு புலி!
என்ன தான் அவள் தூக்கிப் வீசக்கூடுமென்று தெரிந்திருந்தும் கையில் சிவப்பு ரோஜா பூச்செண்டுடன்… தன்னவளை நாடி.. காதலாடும் விழிகளோடு.. இல்லம் வந்திருந்தான் அவன்.
உள்ளே வாசற்படி நுழைந்ததுமே…. இதயமெல்லாம் மையல் ஊற்றெடுத்துப் பாய.. தன்னவளைத் தான்… உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே உள்நுழைந்தான் அவன்.
“மதுராஆஆ… மதுராஆஆ!!”
அவனது கண்களில் எஞ்ஞான்றும் இல்லாத அலைப்புறுதல் தோன்ற… அவை… மதுராக்ஷியின் ரூபத்தை அன்பொழுகத் தேடலாயிற்று.
அவனது கண்களோ… அவள் வழமையாக உட்கார்ந்திருக்கும் மூங்கிலால் வேயப்பட்ட ஊஞ்சல் நாற்காலியினைத் துலாவித் தேடலாயிற்று.
அங்கே அவளில்லை!!
பின்பு.. நடுக்கூடம்.. சமையலறை… டைனிங் அறை என அங்கிருந்த அறையெல்லாவற்றிலும்.. அவளைக் கத்திக் கத்தி,
“மதுராஆஆ…. மதுராஆஆ”என்று தேடியவனின் கண்களில்.. குடிவந்தது ஒரு சோகம்!!
எங்கே போனாள் அவள்?? அவன் அழைக்கும் குரல்களும் அவளுக்குக் கேட்கவில்லையா?
அவள் தன் கண்பார்வை மட்டத்தில் இல்லையென்றானதும்… நிதானம் குன்றிப் போய்.. அவனுள் தோன்றவாரம்பித்தது அதீத களேபரம்!!
அவனையும் அறியாமல்.. அனிச்சையாய்…. விழிகளும் கலங்க தன் தொடைத் தசைகள் இறுகித் தளர… விறுவிறுவென மாடிப்படியேறினான்.
அங்கே.. அலசி மடிக்கப்பட்ட துணிகளோடு இருந்த பணியாளினிப் பெண்மணியொருத்தி எதிர்ப்படவே… அவளின் வழியை.. கைகள் நீட்டி மறித்தவன்,
“மதுரா… எங்கே?”என்று தன் இதயராணியைப் பற்றியே கேட்டான் அஜய்.
அப்பெண்மணியோ… எஜமானன் முகம் கூடப் பார்க்கத் திராணியற்று..
படபடவென கண்ணிமைகளை அடித்தவாறே தலையைக் கீழே குனித்துக் கொள்ளவும் செய்தாள் அவள்.
“வே.. வேலையில இருந்ததால ..மே..மேடம் எங்கேன்னு கவனிக்கல சார்..” என்று கூறி விட்டு…
பவ்யமாக தலையைக் குனித்துக் கொண்டே அங்கிருந்தும் குடுகுடுவென மாடிப்படிகள் இறங்கிப் போனாள் பணியாளினி.
ஒருவித சலிப்புடன்.. நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டே, “ம்ப்ச்சு”என்று உச்சுக் கொட்டியவாறே.. அலைக்கழிப்புடன்… மாடியறைகளிலெல்லாம் தன்னவளைத் தேடத் தொடங்கினான்.
அதுவும் பெரும் ஆயாசமாக!!
பிறகு… அவனது படுக்கையறையை நாடி சடாரென வந்து திறந்தவன்,
“மதுராஆஆ…. ஆர் யூ தேர்?” என்று கேட்டுக் கொண்டே… உள்ளே நுழைந்து… மஞ்சத்தில் அவளை நேற்று போல இன்றும்.. பாடிலோஷன் பூசிய மங்கையாக இருக்க மாட்டாளா என்று ஏங்கிப் போய் தேடினான்.
பூச்செண்டினை இதுகாறும் ஆதுரத்தோடு ஏந்தியிருந்த அவனது கைகளும்… ஆதங்கத்தோடு கீழிறங்கியது.
அவனது விழிகளிலேயே காதல் தவிப்பு இழையோட.. முகமெல்லாம் இரத்தப்பசையேயற்று சிவந்து… வாடிப் போனது.
அறையை விட்டும் சென்றவனுக்கு… மூளையில் மின்னல் வெட்டினாற் போல..
மொட்டைமாடியில் அமைந்திருக்கும் நீச்சல் தடாகத்தின் நினைவு வரவே… நிமிடமும் தாமதியாமல்.. அவன் பாதங்கள்… மேலே ஓடலாயிற்று.
அ.. அன்றும் அப்படித்தானே?? சாக்லேட் ஆர்க்கிட் மலர்ச்செண்டுடன்..
அவளை நாடி.. தலைவன் வந்த போது.. மொட்டை மாடியின் நீச்சல் தடாக நிழற்குடையிலல்லவா சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்??
அது போல இன்றும் இருப்பாளோ என்ற எண்ணம் முகிழ்க்கவும் தான்… ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று இதயத்தில் உதிக்க.. தடதடவென மொட்டைமாடிப் படிகளை ஏறிப் போனான்!!
அவன் கண்கள் கலங்கிய வண்ணம் மொட்டைமாடிக்கு வந்தவனுக்கு அதீதத்துக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருக்க..
ரோஜாப் பூச்செண்டோடு நின்றவன்… அப்பரப்பெங்கும் தன்னவளை… விழிகளால் துலாவலானான்.
அவளோ அங்கும் இல்லை!!
ஒ.. ஒருவேளை.. அவனோடு வாழப் பிடிக்காமல்… நீச்சல் தடாகத்தில் விழுந்து….? என்ற பயங்கரமான எண்ணம் இடைவெட்டியதும்.. ஏனோ அதனை முழுமையாக யோசிக்கக் கூட முடியவில்லை.
இதயப்பந்து… துடிப்பதை நிறுத்தியது போல ஒரு நோவு எழுந்து பரவியது அவனுக்குள்.
தொண்டைக்குழி ஏறியிறங்க.. கைமுஷ்டியை மடித்துக் கொண்டு.. அவன் அங்கிருந்த நீச்சல் தடாகத்தை… வலிய வேதனையோடு எட்டிப் பார்த்தான் அஜய்தேவ்!!
கண்களில் அவனையும் மீறி.. ஒருதுளிக் கண்ணீர் சரேலென வழிந்தது அந்நினைப்பிலேயே!!
அஜய்தேவ்.. உண்மையில் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கும் பலவீனமான ஆண்மகன் அல்லன்.
இன்றேல், தன் காதலை அத்தனை கனகச்சிதமாக அவளிடமிருந்து மறைத்துக் கொண்டு.. தன் அந்தரங்கக் காரியதரிசியை தலையாலேயே தண்ணீர் குடிக்க வைத்திருப்பானா??
ஆயினும், அவளுக்கு என்று ஒன்று என்றாகும் போது… அவனுள் இருக்கும் பலவீனம் தானாகவே வெளிப்படுகிறது.
தன் வாழ்வின் பலமும் சரி, பலவீனமும் சரி மதுராக்ஷி என்பதை அந்நொடி அறிந்தாற் போல..
நீச்சல் தடாகம் பார்த்தவன்… அங்கு அப்படியேதும் சடலங்களோ.. உடல்களோ இல்லை என்றானதும் தான்.. பெருமூச்செறிந்தான்.
மணிமணியாக நெற்றியில் குபுக்கென வியர்க்க.. தன் முழு நீளக்கை சொக்காவின் முழங்கைப் பகுதியினால்..
கையுயர்த்தி துடைத்துக் கொண்டவனிடம் முனகலாக வெளிப்பட்டது ஆசுவாசப் புன்னகை!!
மொட்டைமாடியிலிருந்து கடகடவென இறங்கி.. வீட்டின் பின்பக்கம் தேடிச்செல்ல முற்பட்ட வேளையில்..
நடுக்கூடத்தின் ஓர் அறையில் நின்றும் ஒலித்தது “ணிங்ணிங்” என்று ஓயாமல் இசைக்கும் மணி!!
அதனைக் கண்டதும் அப்படியே அவன் நடை தடைப்பட்டு நின்று போக.. தன் பின்னால் இருந்து கேட்கும் ஓசையை… இதமாகக் கேட்கலானது அவன் இருதயம்.
அ.. அது அவன் வீட்டு பூஜையறை!!
எல்லா இடமும் தேடிப்பார்த்தவன்.. தேடிப் பார்க்காத.. பார்க்கவும் மறந்த ஒரேயொரு இடம்… பூஜையறை மாத்திரமே!!
அங்கிருந்தும் இதமான சுகந்தம் தரும் ஊதுபத்தி வாசனை.. அவன் நாசி நிரடி.. ஒரு தெய்வீக குணத்தை… அவனைச் சூழ சுகிக்கச் செய்ய.. கேட்டது அவளது நாதம்!!
“தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்
திருநீலகண்டத்து குயவனார்க்கு அடியேன்.
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்”என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடலினை..
மனத்தினை உருக வைக்கும் குரலில்… அவள் பாடும் ஒலி… அவன் செவிகளை அடைந்தது இன்ப கீர்த்தனமாக!
அவனுள் என்றுமேயில்லாத அமைதி துளிர்த்தது போல… தேகத்தின் விறைப்பும் அகன்று…
மனத்தினுள் எழுத்தில் வரிக்க முடியாத ஆசுவாசம் குடிகொள்ள… அவன் பாதங்களும் நடந்தது பூஜையறை நோக்கி!!
உள்ளே நுழையாமல்.. நடுக்கூட வாசலோடு நின்று கொண்டவன்… தன் விழிகளை ஏறிட்டு நோக்க.. அதோ அவள்!!
மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய்… சேலை அணிந்து… ஒற்றை நாகம் படமெடுத்தாற் போல நீண்ட பின்னலோடு…இனிய குரலில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தாள் மதுராக்ஷி.
சேலை கட்டத் தெரியாமல்.. அலுவலகத்தில் அன்றொருநாள்.. அவள் சேலைக்கொசுவம் கழன்று விழுந்ததிலிருந்து… தாயை வருத்தியெடுத்து… நேர்த்தியாக சேலைக்கட்டப் பழகியிருந்தாள் மதுராக்ஷி.
அவளைக் கண்டதும்… இவன் வழியெல்லாம் அலைந்து திரிந்த பறவை கூடு வந்தாற் போல… இதயமெல்லாம் பரபரத்து அடங்க.. விழிகளும் ய மிருதுவானது அன்பினால்.
விழித்திரையெல்லாம் கலங்கிப்போய் அவள் ரூபம் இரட்டையிரட்டையாகத் தெரிய.. உடம்பும், மனதும் சோர தன்னவளையே அவன் இமையாது பார்த்திருந்த நேரம் அது!!
அவளும் பூஜைத்தட்டோடு.. நடுக்கூடம் நாடி வந்தவள்.. திருநீறு எடுத்து.. அவன் நெற்றியில் பூசி விட்ட நொடி!!
அதற்கு மேலும் தாங்கமாட்டாது… அவளுமே எதிர்பார்த்திராத நேரம் அவளைத் தாவி இறுக்கிக் கட்டிக் கொண்டான் அவன்.
அஜய்தேவ்வின் தேகத்தில் ஊடுறுவிய துணுக்கத்தினை.. அவன் அணைப்பில் நின்றிருந்தவளால் உணர முடிந்தது.
அவனது கண்ணீர்.. அணைப்பு… நடுக்கம் எல்லாமும் அவளை ஏதோ செய்ய… ஆயிரம் கோடி பூக்கள் தன் இதயத்தில் மொட்டு விட்டு அவிழும் … உணர்வினை அடைந்தாள் மதுராக்ஷி.
அவன்… மதுராவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது.. வீட்டின் கொல்லைப்புறத் தோட்டத்தில்.. இறைவனுக்கு சாத்தவென்று… பூக்கள் பறித்துக் கொண்டிருந்தாள் நாயகி.
ஆகையால், அவளுக்கும்.. தலைவன் தன்னை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தது செவிகளை அடையாமலேயே போயிற்று.
அவள் பூஜையறைக்கு வந்த கணம்.. இவனோ மாடிப்படியேறி மொட்டைமாடிக்குச் சென்றிருக்க.. அதனாலும்.. அஜய்யினால் தன் மனையாளைக் கண்டு கொள்ளாமலேயே போயிருந்தான் அவனும்.
அவள் பூஜையறையின் பக்தி கீர்த்தனங்கள் இசைக்க… அவ்வொலியில் தன் பொன்மானைக் கண்டெடுத்தவனின் உச்சாதி பாதம்.. பெருகி திளைத்தது பெருங்காதல்!!
தன்னவளைக் கண்டதும் மனம் இளகிப் போய்.. அணைத்தவனின் அணைப்பு.. நிமிடங்களானதும்… தளரவேயில்லை.
மாறாக, இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே போனது!!
ஆனானப்பட்ட செல்வந்தன் அவன்… தழுதழுத்துப் போன குரலில்,
“எ.. எனக்கு மட்டும் ஷக்தியிருந்திச்சுனா.. எ.. என் இதயத்தோட பொத்தி வைச்சுப்பேன் மதுரா… அ.. அப்போ நீ… என் கண்மறைஞ்சதும்.. இந்த பதட்டம், டென்ஷன் லாம் தோணாது??”என்று சொன்னவனின் வார்த்தைகள்.. தாக்க வேண்டிய இடத்தில் சரியாக சென்று தாக்கியது.
அவன் அணைப்பு.. அவனது இறுகிய அணைப்பு.. அவளுள் ஏதோ செய்தது என்றால்.. வார்த்தைகளோ… கண்ணில் கண்ணீரையும் உகுக்கச் செய்தது.
‘இதயத்தில் பொத்தி வைத்துக் கொள்ளும் வண்ணம் அன்பா?’
அவனது அணைப்பை ஏனோ அவளுக்கு நிராகரிக்கத் தோன்றவில்லை;தள்ளிவிடத் தோன்றவில்லை ;மறுத்துக் கத்தி வெளிவரவும் தோன்றவில்லை.
அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான மணம்.. அவளது நாசியை நிரடிக் கொண்டிருக்க… அவனது கல் போன்ற மார்பில்.. முகம் புதைத்திருக்கும் சுகம் அலாதியானதாக இருந்தது.
ஏனோ..ஒரு போதை சுகம்!!
அவள் தேடும் அன்பும், காதலும் அவனில் இருப்பது போல ஓர் உணர்வு மயக்கம்!!
அவளைத் தன்னில் நின்றும் பிரித்து.. அவளின் இரு கன்னங்களையும் ஏந்தியிருந்தவனின் வெண்விழிப்படலம் சிவந்து போயிருந்தது ஆற்றாமையினால்.
“மதுரா.. நீயென்னை விட்டுட்டுப் போயிட்டீயோன்னு பயந்துட்டேன்டீ.. எங்கே அந்த வீடியோவை… தந்தால் நீ என்ன விட்டு போய்டுவேன்ற அதே மைன்ட்செட்ல இருந்த எனக்கு…எ.. எப்படி என் காதலை வெளிப்படுத்துறதுன்னு தெரியல மதுரா.. எ.. . என்னை விட்டு மட்டும் போய்டாதேடீ…இங்கே வலிக்குது… இதயத் துடிப்பு நின்னுரும் போலிருக்கு மதுரா.. நீ.. நீ இல்லாம செத்துருவேன்டீ.. ”என்று அவள் கையைத் தன்னிதயப்பக்கத்தில் வைத்து…
அவன் உணர்ச்சி வசப்பட்ட குரலில் கூற.. கண்ணீர் என்பதும் தொற்று நோயோ??
ஆம், அப்படித்தான் போலும்.
ஆஜானுபாகுவான அரக்க உடல் கொண்ட கேள்வன்.. தன் முன்னிலையில் மதலையாய் உருமாறி கண்ணீர் சிந்தியதில்… அவள் கண்களும் கலங்கிப் போனது.
எதுவோ ஒன்று அவளின் கல்லான இதயத்துக்குப் புரிய.. அவளது கற்பாறை ஹிருதயத்திலும்… இலேசாக தென்றல் நுழைந்து வருடுவது போலிருந்தது.
அவனோ… திடீரென தன் சுயநினைவு அடைந்தாற் போல.. மதுராவில் நின்றும் வெடுக்கென்று.. அவன் கைகளை விடுவித்துக் கொண்டு.. விலகி நின்றான்.
பிடிக்காத கணவன் அல்லவா அவன்??
அவளுக்கு தன் அணைப்பு.. இடைஞ்சலென்று தோன்றியதோ??
மதுராவின் இளகும் நயனங்களைப் பாராமல்.. . வேறெங்கோ வெறித்துப் பார்த்தபடி,
“ஐம் ரியலி ஸாரி.. ஸாரி” என்று கூறியவன்.. அங்கிருந்து அகன்று போனான் போர்ட்டிக்கோவை நோக்கி.
மறுகணம்.. அவனது கார்வண்டி.. அங்கிருந்தும் உறுமிக் கொண்டு வெளியேறிச் செல்லும் ஓசையும் கேட்டது.
அவளுக்கோ.. அவன் தன்னை நீங்கிச் சென்றான் என்றானதும்.. இதயத்தில் ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது.
இன்னும் கொஞ்ச நேரம்.. அவனின் ஆண்மையான அணைப்பிலேயே இருக்க வேண்டுமென பெரிதும் ஆர்ப்பரித்தது அவளது பெண்மை.
“இதயத்துடிப்பு நின்னுரும் மதுரா… நீ இல்லாமல் செத்துருவேன்டீ” என்ற அவனது காதல் மல்கியக் குரல்.. அவள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.
பூஜைத் தட்டோடு அவள் வெளியே வந்த நேரம்… அவன் நின்றிருந்த வாடிய தோரணை… இப்போதும் கண்ணுக்குள் தோன்றி மறைந்தது அவளுக்குள்.
அவனது கண்ணீர், அவளைக் கண்டு கொண்டான் என்றானதும் அவளின் உச்சாதி, பாதம் வரை.. அவனின் தேடல் என எல்லாமுமே உணர்த்த விழைவது எதனை??
தூய வைரம் போல மண்ணுக்குள் மறைந்திருக்கும் காதலை!!
சோர்ந்து போய்.. அருகிருந்த சோபாவில்… அப்படியே.. சரிந்து அமர்ந்து கொண்டாள் அவள்.
‘காதல் வருவதற்கு அற்பமான காரணங்கே போதுமானவை’ என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!!
இது நாள் வரை அவன் கொடுத்த தொல்லைகள் தாங்கியவனின் அன்பு…. அது நிகரில்லாத தாய்ப்பாசத்துக்கும் ஈடாகுமோ??
அவள் சற்று கண் மறைந்ததும்… தேகமெல்லாம் வெலவெலத்துப் போய், “என்னை விட்டு போயிட்டீயோன்னு பயந்துட்டேன்’ என்று சொல்லுமளவுக்கு.. அவள் மீது காதலா??
மதுராவின் கன்னத்தில் எதுவோ வழிவது போலிருக்க.. மென்மையாகத் தொட்டுப் பார்த்தாள் அவள்.
‘ஓ.. கண்ணீர்..??தன்னையுமறியாமல் அழுதிருக்கிறாளா அவள்?’
முதன் முறையாக.. மதுராவுக்கு… தன் மீதே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அவனைப் போய், “காமுகன்” என்றாளே? அவனது தூய கலப்பற்ற நேசத்தை, ‘காமம்’ என்றாளே??
காமத்தில்.. எப்போதும்.. ஒருபோதும் தீர்க்க முடியாத தேக தேவை மாத்திரமே இருக்கும்.
ஆனால் காதலில், கொடுக்கக் கொடுக்கத் தெவிட்டாத அன்புத்தேவைகள் நிறைந்திருக்கும்.
எனில், அஜய் என்னும் முரட்டுக்குழந்தைக்கும் அவளோடு அன்புத்தேவைகளே இருந்திருக்க.. அன்பனை அன்பியைக் கொச்சைப்படுத்தியிருக்கிறாள் அரக்கி!!
நிஜக்காதலுக்கும், காமத்துக்கும் போய் வித்தியாசம் தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டதனை எண்ணி.. மதுராக்ஷியின் மனம் வெந்து தகித்துக் கொண்டிருந்தது.
எத்தனையெத்தனை தொல்லைகள் புரிந்தும்.. ஒருநாளாவது அவன் முகம் குன்றி அவளைப் பார்த்ததுண்டா.??
குறும்பு என்ற பெயரில் அவள் செய்யாத சேட்டைகளும் ஏது??
ஒரு நாளாவது மனம் நோகும் வண்ணம்… கீழ்மையான வார்த்தைகளால் திட்டியதுண்டா..??
அவளுக்கு… சிறு தலைவலி என்றாலும் அவளை விட அதிகம் பதறிப் போனானே??
அவனைப் போய், தரக்குறைவாக நடத்தியிருப்பதை எண்ணி.. வெட்கித் தலைகுனிந்து நின்றாள் மதுராக்ஷி!!
எத்தனை மணிநேரமாக.. அப்படியே கன்னங்களில் வழியும் காய்ந்த கண்ணீர் சுவடோடு நின்றிருந்தாளோ தெரியாது??
மீண்டும் அவள் சிந்தை தெளிந்த போது.. தனக்குத் தானே ஒரு உறுதி பூண்டாள் அவள்.
அன்றிரவு.. வீடு வந்தவுடன் அவனை.. இறுக்கி அணைத்து.. இதழ் சுவைத்து… மன்னிப்பு யாசித்திட ஏங்கித் தவித்தது உள்ளம்.
என்ன??
‘இறுக்கி அணைத்து.. இதழ் சுவைத்தா?’ – அவ்வெண்ணம் வந்ததும் திகைத்துப் போய் நின்றிருந்தவளுக்கு.. அப்போது தான் அவள் மனம் அவளுக்கே புரிந்தது.
அன்றும் அவனின் இதழ் சுவைப்பையும் ஏற்று நின்றதன் காரணம் புரிந்தது!!
அதே இடத்தில் வேற்றாடவன் இருந்தால் தள்ளி விட்டு… பெரும் கலகமே விளைவித்திருப்பாள். அஜயின் அணைப்பை ஏற்கக் காரணம்??
காதல் தானே?
ஆற்றில் விழுந்த நிலவின் விம்பமாய்.. தெள்ளத் தெளிவாக.. தன் மனத்தின் தேவையை.. அது அஜய்தேவ்வின் பால் கொண்டுள்ள அன்பை.. காதலை உணர்ந்தாள் மதுராக்ஷி.
மறுகணம்.. அவளது வதனத்தில்.. இன்பத்தின் சாயை படர்ந்தது கீழ்வானின் சிவப்பை நிகர்த்து.
இது அவள் தானா என்று ஆச்சரியத்துடன் அவளையும் அறியாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. நிமிர்ந்த போது.. அவள் கண்டாள் அதனை.
அவன் போகும் போது டீபோயின்.. மீது வைத்துவிட்டுப் போன சிவப்பு ரோஜா மலர்க்கொத்தினை!!
சிவப்பு ரோஜா என்றாலே காதலின் சின்னம் அல்லவா??
அதை எடுத்து முகர்ந்து தன்னோடு குழந்தை போல அணைத்துக் கொண்ட மதுராக்ஷியின் முகம் மலர்ந்தது.
அதன் பின்பு.. நொடியும் தாமதியாமல்.. எழுந்தவள்.. பம்பரம் போலச் சுழன்று சுழன்று தான்.. காதல்ப்பெருக்கில்… உழன்று வேலை செய்யலானாள்.
பணியாளர்கள் உதவியுடன்.. தன் அறையை சுத்தம் செய்து.. திரைச்சீலைகள் எல்லாம் மாற்றி.. வாஸ்களின் பூக்களையும் புதிதாக மாற்றி… அன்று.. அவனுக்காக காத்திருக்கலானாள்.
மோகனம் – 29
முற்பகல் வேளையில் வீட்டை விட்டும்.. ஆற்றாமையுடன் கிளம்பிச் சென்றவன்.. மீண்டும் அவன் வீட்டுக்கு கிளம்பி வந்த போது மதியம் ஒரு மணியாகியிருந்தது.
அவனது காரின் சப்தம் கேட்டதும்.. தடதடவென காலில் சக்கரத்தைக் கட்டி விட்டாற் போல.. மாடிப்படியிறங்கி வந்தவளின் இதழ்களும் தான் விரிந்தது இனிமையாக.
கடைசிப்படியில் நின்ற வண்ணம்.. கைப்பிடி வரிசையைப் பிடித்துக் கொண்டு நின்றவளின் பார்வை… அவனின் வருகையைத் தான்.. காதலாட.. பரவசமோடத் தேடலாயிற்று.
அங்கே சிகையை அழுந்தக் கோதிக் கொண்டே… யாரையோ பார்த்து புன்னகைச் சிந்திக் கொண்டு அவன் மட்டும் வரவில்லை.
மாறாக, அவன் தோளில் கைப்போட்டுக் கொண்டு… அவன் கோதிவிட்ட கேசத்தைக் கலைத்த வண்ணம்… கும்பலாக வந்தது அவனுடைய நண்பர்கள்!!
அதாவது அவளின் பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர்கள்!!
கனடா, யூ. எஸ், யூகே என்று செட்டிலான நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு… சென்னையின் செல்வந்தனைத் தான் பார்க்க வந்திருந்தனர்.
உள்ளே நுழைந்த போதே… அவனின் விலா என்பில் குத்தி.. அவனை நோவினைப்படுத்திய நண்பன் சுரேஷோ,
“நமக்கெல்லாம் சொல்லாம… கல்யாணம் பண்ணிட்டேல்ல… இன்னைக்கு இருக்குடா..”என்று அவனைப் பார்த்து சுட்டுவிரல் காட்டி கறுவவும் செய்தான்.
தன் பல்கலைக்கழகத்தின் சீனியர்களைக் கண்ட சந்தோஷம் அவளுள்ளும் ஒட்டிக் கொள்ள, முகமெல்லாம் மலர,
“அட அட வாங்க சுரேஷ் அண்ணா.. வாங்க கார்த்திக் அண்ணா… வாங்க முரளிண்ணா”என்று அவனோடு வந்த அத்தனை பேரையும் அழைக்கலானாள் அவள்.
அத்தனை பேரையும் இன்முகத்துடன் அழைத்த மதுராவின் கண்கள்.. மெல்ல தன் தலைவனைத் தான் ஏறிட்டு நோக்க..
அங்கே அவனோ.. அவளொருத்தி இல்லாதது போல… இறுகிய முகத்துடன்… வேறெங்கோ பார்த்தபடி நின்றிருந்தான்.
அதில்.. எப்போதும் தன் கேள்வனை உதாசீனப்படுத்துபவள்.. முதன் முதலாக… அவன் தன்னை உதாசீனப்படுத்துவது தாங்க மாட்டாது.. மனநோவுடன் நின்றிருக்கலானாள்.
இருப்பினும் வீட்டுக்கு வந்திருப்பவருக்கு விருந்தோம்புவது தமிழர் பண்பாடு அல்லவா??
ஆகையால் தன் சீனியர்களை நோக்கியவளோ,
“முதன்முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. எல்லாரும் சாப்பிட்டுத் தான் போகணும்.. இதோ இப்போ சமைச்சிட்றேன்.. ”என்றவள்…
குறுகிய காலத்தில் பணியாளர்களின் உதவியுடன் சமைத்து.. நானாவித உணவுகளையும் பரிமாறலானாள்.
தமிழக உணவுகளையெல்லாம்.. கண்டு..அதிலும் மதுராவின் கைப்பக்குவத்தில்.. நாவூறித் திளைத்துப் போயிருந்தனர் அவர்கள் எல்லாரும்.
முரளி அண்ணாவோ.. வாய்க்குள் கருவாட்டுப் பீசினைகெ கடித்திழுத்து ருசித்தவனாக,
“பாரின்ல எல்லாம் சேன்ட்விச் சாப்பிட்டு சாப்பிட்டு.. வரட்டு வரட்டுன்னு ஆகிப்போச்சுமா நாவெல்லாம்… இப்போ உன் சமையல்ல தான்… ஆஹா.. அப்படீன்னு இருக்கு…கருவாட்டு குழம்பு சூப்பர்…நம்ம அஜய் கொடுத்து வைச்சவன்மா.. சூப்பர் சமையல்”என்று சிலாகிக்கவும் செய்தான்.
அப்போதும் கூட.. ஏதும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் கொண்டான்..
ஒருவார்த்தை தன் சமையலைப் பற்றி ஏதும் வாய் திறந்து சொல்லவில்லையே என ஏங்கிப் போயிற்று மனம்.
டொம்மென்று வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு.. சீனியர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்து.. வாலிப வயதுக்குண்டான கலகலப்புடன்… அரட்டையும், கூத்துமாக நேரத்தைக் கழிக்கலாயினர்.
பல மாதங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்வதினால்.. அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ள ஆயிரம் கதைகள் இருந்தது.
அதிலும் சுவாரஸ்யமான கல்லூரி சம்பவங்கள்!!
எக்ஸாமில் பிட் அடித்த அனுபவங்கள்!!
இரவில் ஹாஸ்டல் சுவரேறி குதித்து நைட் ஷோ படம் பார்க்கப் போன கூத்துக்கள்!!
அதன் போது நிகழ்ந்த கதைகள் என்று அனைத்தும் ஒன்று விடாமல் ஒன்று சொல்லி.. ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதும்… கலகலத்துச் சிரிப்பதுவுமாக இருந்தனர்.
அஜய்தேவ்வோ என்றுமேயில்லாதவாறு இன்று.. நகைத்த வண்ணமேயிருக்க.. அப்போதும் அவள் பார்வை அவனைத் தான் கண்ணாரத் தழுவிக் கொண்டேயிருக்கலானது.
அஜய்தேவ்வின் மனையாளின் பார்வை..நாயகனைத் துளைப்பதைக் கண்ட… சுரேஷூம், கார்த்திக்கும்.. தங்களின் கைச்சந்தினை இடித்துத் தட்டிக் கொண்டே… அவர்களைக் கண்ணால் கைக்காட்டி தங்களுக்குள் நகைக்கலாயினர்.
இதுவரை அமைதியாக தங்களை வேடிக்கைப் பார்க்கும் மதுராக்ஷியையும் தங்கள் பேச்சுக்குள் இழுக்க நாடினர் அவர்கள்.
“யம்மா மதுரா… நம்ம பையனப் பார்க்கும் போது…எப்படியிருந்தவன்.. இப்படி ஆகிட்டானேன்னு பீலிங்க்ஸா இருந்ததா?? இல்ல ஜிம்பாடி ஆகிட்டானேன்னு ஹேப்பியா இருந்ததா?? சொல்லு”என்று சுரேஷ் சீனியர் கேட்டதும் தான் தன் கணவனில் நின்றும் திடுக்கிட்டு… கேள்வனின் தோழனைப் பார்த்தாள் அவள்.
“ஏ.. ஏன்ணா… கேட்கறீங்க??”என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி கேட்டாள் மதுரா!!
அவளின் பதிலைக் கேட்டு ஜர்க்கான சுரேஷோ,
“ஏன்ணா கேட்கறீங்க’ளா???அவன் உன்கிட்ட சொல்லலையா மது.. அவன் ஜிம்முக்கு போய்… படிக்கட்டு பாடி வைச்சிக்கிட்டதே… உனக்காக தான்..”என்று கூற புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் அவள்.
என்ன.. அவன் உடல் இளைத்ததே அவளுக்காகவா?? அன்றைய நாளின் பெரும் திகைப்பைத் தந்தது சுரேஷின் வார்த்தைகள்!!
“உன் பின்னாடி வந்துட்டு இருந்தானே.. ஆ..அவன் பேரென்ன?” என்று கண்கள் சுருக்கி… நெற்றியைச் சொறிந்த வண்ணம்.. மதுராவின் பின்னால் காலேஜ் நாட்களில் அலைந்த பேர்வழியின் பேரையும் யோசிக்கலானான் சுரேஷ்.
சட்டென்று யோசனை வரவும்,
“ஆஆ.. கரண்… உன் பின்னாலேயே லவ் மீ லவ் மீன்னு… சுத்திட்டிருந்தான்ல கரண்… அவன் எப்படி… உன்னை விட்டு.. ஒரேயடியா போனான் மதுரா.??”என்று அவளைப் பார்த்து கேள்வியும் கேட்டான் அவன்.
“கஞ்சா கேஸ்ல??” என்று அவளுக்குத் தெரிந்த.. கரணின் கதையைக் கூறினாள் அவள்.
சுரேஷோ..தன்னருகே இருந்த தலைவனின் தோளில் கைப்போட்டு இழுத்து அணைத்தவாறே,
“ அத மாட்டிக் கொடுத்ததே நம்ம ஆளு தான்மா… உன் பின்னால அவன் வந்தது உன் மேல லவ்ஸ்ல திரிஞ்ச நம்ம ஆளுக்கு பிடிக்கல.. அதான் போட்டுக் கொடுத்துட்டான்.. போலீஸூம் வந்து அலேக்கா தூக்கிட்டுப் போயிட்டாங்க..”என்று கூறிய பொழுது.. அதைக் கேட்டு நாயகியின் கண்களிலும் ஆச்சரியம் கொழித்தது.
என்ன??? பின்னாலேயே வந்து.. அவளுக்கு காதல் தொல்லைக் கொடுத்த ‘பொம்பளை பொறுக்கி கரண்’ணை… .. கஞ்சா வழக்கில் மாட்டிக் கொடுத்தது இவனா..???
அன்றைய நாளில்.. முழு கல்லூரியும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்க.. கரணை… போலீஸார் சட்டைக்காலரை இழுத்துப் பிடித்து.. சென்ற காட்சிகளெல்லாம் அவள் மனதில் நிழற்படங்களாக வந்து போனது.
தொடர்ந்து பேசிய சுரேஷின் குரலில்.. நடப்புக்கு வந்தவள்.. அவன் பேசுபவற்றைக் கேட்கலானான்.
“இன்னும் ஏன் .. ஒரு வாட்டி… யம்மா தப்பா நினைச்சுக்காதேம்மா… அப்போ உன் கேரக்டர்.. கொழந்த பிள்ளை கேரக்டர்னு புரிஞ்சிக்காத நேரம்மா.. நானே, மதுரா ஓப்பன்மைன்ட்டட்.. பொண்ணுடா.. அப்படிப்பட்ட பொண்ணுங்க எல்லாம். அந்த மாதிரி பொண்ணுங்கடா’ன்னு சொன்னதும்.. வாயிலேயே.. ஒரு குத்து!! பொளபொளன்னு மூக்கிலயிருந்துலாம் இரத்தம்.. அதுக்கப்றம் என்கூட பேசவேயில்லையே..” என்று கூற அவளுக்கு இன்னும் இன்னும் ஆச்சரியமாய்ப் போனது.
பிற நேரமாயிருந்தால்..
‘ அது எப்டி நீங்க ஓப்பன் மைன்டட் பொண்ண எல்லாம்… அந்த மாதிரி பொண்ணுங்கன்னு முடிவுக்கு வரலாம்… உங்க பார்வையே தப்பு… ஃபர்ஸ்ட் அதை மாத்துங்க’ என்று ஏட்டிக்குப் போட்டியாக மல்லுக்கு நின்றிருப்பாள் அவள்.
ஆனால் இது என்றோ நடந்த சம்பவமாயிற்றே?
அதிலும்.. அவளது கேள்வன்.. உயிர் நண்பனை… வாயிலேயே குத்தியிருப்பதைக் கேள்விப்பட்டு..
அப்படியே திகைத்த இதயத்துடனும்.. அவனின் காதலின் வீரியம் உணர்ந்த விழிகளுடனும் நின்று போனாள் அவள்.
பக்கத்தில் இதுகாறும்.. பேசாமல் இருந்த நாயகனோ..அதற்கு மேலும் அங்கிருக்க சங்கோஜப்பட்டவனாக எழுந்து கொண்டான் சோபாவை விட்டும்.
தன் டீஷேர்ட்டை நேர்ப்படுத்திய வண்ணம்.. நண்பனை நோக்கியவன்,
“டேய்.. ஈவ்னிங் ஊர்சுத்த போகணும்னு சொன்னீங்கள்ல.. நான்.. மேலே போய்… கேமராவை எடுத்துட்டு வந்துட்றேன்…”என்றபடி.. செல்ல எத்தனித்தான் அஜய்.
அருகிலிருந்த கார்த்திக்கோ, நாயகனை கலாய்க்கும் குரலில்,
“பார்றா… செல்லத்துக்கு.. வெட்கத்தை பாருடா ?” என்று கத்த… அவனது பாங்கற் கூட்டமே.. ஹாலே நிறைக்கும் வண்ணம் கொல்லென நகைத்தனர்.
ஆண்களின் கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலினாலான சிரிப்பலையை… அசிரத்தையாய் கேட்ட வண்ணமே… ஏதும் ஒரு வார்த்தை சொல்லாமல்… எழுந்து மேலே சென்று விட்டிருந்தான் நாயகன்.
அவளுக்கோ.. தன் மீது கல்லூரி காலத்திலிருந்து காதல் பயிரை ஒருதலையாக வளர்த்திருக்கும் கேள்வனின் கதை கேட்கும் ஆர்வம் கூடியது.
“அப்றம் எப்படி இப்ப.. ரெண்டு பேரும் பேசுக்கிறீங்கண்ணா?? புரியலையே?” என்று அவளும்… தலைவனும், சுரேஷூம் தற்போது பூசல் ஏதுமற்று சுமூகமாகப் பேசிக் கொள்வதைக் கண்டு.. இடுங்கிய விழிகளுடன் கேட்டாள் மதுராக்ஷி.
இம்முறை பதில் வந்தது சுரேஷிடமிருந்து அல்ல!!
கார்த்திக்கிடமிருந்து!!
“அத ஏன்மா கேட்கற?? .. அதுக்கும் காரணம் நீ தான்மா..”என்று கார்த்திக் அவளைக் கைக்காட்டிச் சொல்ல.. ஆச்சரியம் சிந்தும் விழிகள் விரிய கேட்டாள் அவள்.
“நானா??”என்று.
இம்முறை மீண்டும் இடையிட்ட சுரேஷோ, “ஆமாம்மா.. நீ தான் காரணம்…நடந்ததையெல்லாம் மறந்துட்டீயா மது?? அன்னைக்கு ஒரு நாள் உன்கிட்ட வந்து.. “ யம்மா மது.. எனக்கும், அஜய்க்கும் சின்ன மிஸ்அன்டர்ஸ்டான்டிங் ஆகிப்போச்சு… அதனால கோவிச்சுக்கிட்டு பேசமாட்டேங்குறான்.. எப்படியாவது அவன்கூட பேசி.. அஜய்யை கன்வின்ஸ் பண்ணி… அவனையும், என்னையும்.. நீ தான் சேர்த்து வைக்கணும்”னு சொன்னேனே அதையும் மறந்துட்டீயா..?? அப்றம்.. நீயும் விஷயம் முழுசா தெரியாமல் அஜய்க்கிட்ட போய்… “என்ன சீனியர்?? காலேஜ்லயே.. டாப்பர்ஸ்… அன்ட் பெஸ்ட் ப்ரென்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கலாமா..??”ன்னு கேட்டு… எங்க ரெண்டு பேரையும், கை குலுக்க வைச்சீயே.. அதையும் மறந்துட்டீயா??” என்று கேட்க… அவளோ அசடுவழி புன்னகைத்தாள் ஏதும் ஞாபகத்தில் இல்லாதவளாக.
முதலில் இளைத்துப் போன தன் பாஸ் தான்.. அவள் சீனியர் என்பதனைக் கூட அனுமானிக்க முடியாமல் அல்லவா நின்றாள் அவள்??
முழு குடிகாரனுக்கு…. போதை தெளிந்ததும்.. யாராவது நடந்ததைச் சொல்ல சொல்ல ஞாபகத்திற்கு வருவது போல.. அவளுக்கும் சிறுகச் சிறுக.. அனைத்தும் ஞாபகம் வந்தது.
அன்று அவள் முன்னிலையில்.. முகத்தை கோபத்தில் உர்ரென்று வைத்துக் கொண்டிருந்த குண்டுபூசணிக்காய் அஜய் அவள் மனக்கண்ணில் வந்து போனான்!!
“இல்ல மதுரா.. சுரேஷ் கூட பேசுங்கறீயே…. அவன் என்ன சொன்னான் தெரியுமா..??”என்று அஜய்.. மனத்தாங்கல் தாங்காது எகிறிய குரலில் கேட்டதுவும்… மெல்ல மெல்ல நினைவடுக்கில் வந்து போனது.
அஜய் கேட்க வருவதைக் கேட்கும் பொறுமையற்று.. அவளும் அன்று இடையிட்டு,
“என்ன சொன்னா என்ன சீனியர்?? சுரேஷ் அண்ணா உங்க பெஸ்ட் ப்ரெண்டு… அவர விட்டுக் கொடுக்கக் கூடாது.. காலேஜில் உங்க பேட்ச்.. இருக்கப் போறது.. இன்னும் ஆறுமாசம் தான்.. அதுக்குள்ள எதுக்கு ஹார்ட் {hard} பீலிங்க்ஸ்லாம்? சந்தோஷமா இருந்துட்டுப் போங்க.” என்று கூறியதும்..
அதனைக் கேட்டு.. அவர்களது வதனம் பிரிவை நினைத்து வருந்தியதுவும்.. பிறகு இருவரும்..ஒருவாறு கட்டிப்பிடித்துப் புன்னகைத்துக் கொண்டதும்… நினைவுக்கு வந்தது.
சுரேஷ் சொன்னது போல.. ஒருதடவை சுரேஷூக்கும், அஜய்க்கும் கட்டப்பஞ்சாயத்து தீர்த்து வைத்தது உண்மை தான்!!
ஆனால் இரு உயிர் நண்பர்களின் பூசலின் பின்னே… காரணகர்த்தாவாக ஒரு பெண் இருக்கக் கூடுமென்றும், அது அவளாக இருக்கக் கூடுமென்றும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை அவள்!!
அவளை தவறாகப் பேசியதற்கு.. உயிர் நண்பனையே மூக்கில் ஓங்கிக் குத்து விடுமளவுக்கு… இவள் மீது காதலா??
‘காதலிருந்தால் அப்போதே வந்து சொல்ல வேண்டியது தானே?? ஏன் மறைத்தான்??’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்ததை.. அப்படியே மனத்தினைப் படித்தாற் போல கேள்வியாகக் கேட்டான் மூன்றாமவன் முரளி!!
“என்ன மதுரா யோசிக்கற..?? இவ்ளோ லவ் இருந்தும்.. அவன் ஏன் உன்கிட்ட முன்னாடியே வந்து.. சொல்லலைன்னு யோசிக்கிறீயா??”என்று கேட்டவன்..
அவனே.. மதுராக்ஷியின் மறுபதிலை எதிர்பாராது… மேற்கொண்டு பதிலிறுத்தான்.
“நீ வேற ரொம்ம்ப்ப அழகா..?? சார் வேற ரொம்ம்ப்ப குண்டா..? சாருக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை… எங்கே அவனை வேணாம்னு சொல்லிடுவீயோன்னு பயம்.. ரிஜெக்ஷனுக்கு பயந்துகிட்டு.. கடைசி வரை.. சொல்லாமலே விட்டுட்டான் அவன்” என்று சொல்ல… மதுராக்ஷியின் விழிகளெல்லாம் அவன் காதலின் வீரியம் அறிந்து மிருதுவானது.
காலேஜ் நாட்களிலிருந்து காதலித்து.. அவளுக்காக உடல் இளைத்து.. வியாபாரத்தில் தனக்கென புது நாமத்தையும் உருவாக்கிக் கொண்டு.. வீடு தேடி வந்து பெண்கேட்டு… கரம் பிடித்தவனின் தில்!!
அந்த தில்…. காரணமேயில்லாமல் பிடித்துப் போனது அவளுக்கு!!
அவளோ பாவை போல அமர்ந்திருந்தவள்…மனத்துக்குள் முணுமுணுப்பதாய் நினைத்துக் கொண்டு. சப்தமாய்..
“ஆனா அஜய் கொழுகொழுன்னு.. குண்டு பூசணிக்காவா..இருந்தப்போ தான்.. எனக்கு ரொம்ப.. பிடிச்சிருந்தது” என்று அவள் வாய் விட்டுக் கூற…. ஹாலே அதிரும்படி சிரிப்பொலிகள் கேட்டது.
அவள் பின்னாடி.. பார்வையைச் செலுத்திய அனைவரும்.. ஒரே நேரத்தில் கோரஸாக,
“டேய் அஜய் கேட்டீயாடா.. உன் ஒயிப்க்கு… நீ கொழு கொழுன்னு இருந்தப்போ தான் பிடிச்சிருந்ததாம்!! ”என்று கத்தியவர்களாக…சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்து கரம் உயர்த்தி ஹைஃபையும் போட்டுக் கொள்ளலாயினர்.
என்ன அஜய்யா?
அவள் கணவன்.. அவள் பின்னாடியா நின்றிருக்கிறான்??
கேமராவை எடுக்கச் சென்றவன்.. எப்போது கீழே வந்தான்?? என்று அசடுவழிய..
சடாரென திரும்பி அவனைப் பார்த்த போது.. அதே மாறாத இறுக்கத்துடன்.. அவனது முகம் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் இனம்புரியாத வலி எழுந்தது அவளுக்கு.
நாயகனோ… அசிரத்தையாக… “போங்கடா நீங்க வேற. என்னை குண்டு பூசணிக்கான்னு கூப்பிடலாம்னு தான்.. அவளுக்கு அந்த குண்டு அஜய்யைப் பிடிக்கும்..” என்று சொல்ல..
தன் மனம் புரியாமல் பேசுபவனையே நெருஞ்சி முள் இதயத்தைக் குத்தக் குத்தப் பார்த்திருக்கலானாள் அவள்.
மீண்டும்.. கல்லூரிக் காதல் கதை தொடங்கவே.. இம்முறை பேசிய முரளியோ… குபீர் சிரிப்பைப் பொத்திய வண்ணம்,
“ஆனா இதில் காமெடி என்னான்னா..ஹஹஹா அன்னைக்கு காலேஜ்ல..கெட்டுகெதர் வைச்சாங்கள்ல…ஹஹஹா.. அப்போ… அவன் லவ் பண்ற பொண்ணே நீன்னே தெரியாம அந்தப் பொண்ணு… உன் பாஸ்க்கு கிடைக்கணும்னு… ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னேல்ல.. சான்ஸே இல்ல.. கலக்கிட்டப் போ.. ஹஹஹா”என்று அனைவருடனும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கலானான் அவன்.
ஆமாம், உண்மையில் இப்போது அவள் அஜய்யின் மனையாளாக ஆனபின்பு தான் அதனை யோசித்தே பார்க்கிறாள்.
கல்லூரி கெட்டுகெதரில்.. மேடை மீது ஏறி, ‘காதல் கைகூட ஆல் தி பெஸ்ட்’ என்றெல்லாம் அவள் சொல்லியிருப்பதும்.. அவள் தான் அவன் காதலி என்றறியாமல் தானே??
அத்துடன் நில்லாமல் சுரேஷோ,
“அன்னைக்கு நய்ட் பார்க்கணுமே… பையன் அவ்ளோ ஹேப்பி… பேட்ச்சியூலர் பார்ட்டியில் பையன் குடிச்சிட்டு… அவன் பண்ண அலப்பற இருக்கே… ஐய்யைய்யோ… நீ லவ் சொல்லிருந்தா கூட அவ்ளோ சந்தோஷபட்டிருக்க மாட்டான்மா?” என்று சொல்ல…. விழிகளில் பேரழகாய் பூத்திருந்தது காதல்ப்பூ!!
என்ன? அவளது நாணயமும், நன்னயமும் கொண்ட பாஸ் குடிப்பானா??
இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல இருந்து கொண்டு.. பீர் குடிக்கிறானா அவன்?
“அஜய் குடிப்பாரா?”
“ஆமா ஒண்ணு ரொம்ப்ப சந்தோஷமா இருந்தா.. இல்ல.. ரொம்ப சோகமா இருந்தா குடிப்பான்”-இது முரளி!!
“அப்றம் என்னண்ணா ஆச்சு?”- சுவாரஸ்யம் மின்னிக் கொண்டிருந்தது பெண்ணவளின் விழிகளில்.
“அப்றம் என்ன ஆகணும்.. அவனை ஒரு வழியா கூட்டி வந்து.. படுக்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு..” என்று சுரேஷ் கூற…
கணவனின் கறுப்புப் பக்கம் அறிந்து.. மிரட்சியாக நின்றிருந்தாள் அவள்.
பேச்சுக்கள் எல்லாம் எல்லை கடந்து செல்வதைக் கண்டவன்.. நண்பர்கள் இன்னும் சொற்ப நேரம் அங்கிருந்தால்.. கதை கந்தலாகி விடும் என்பதை ஐயந்திரிபற உணர்ந்து கொண்டான்.
சும்மாவே அவளுக்கும், அவனுக்கும் ராசி சரியில்லை. இதில் ஏடாகூடாமாக எதையும் பற்ற வைத்தால்.. முடிஞ்சது ஜோலி என்று அச்சம் வந்தது அஜய்தேவ்க்குள்.
ஆகையால் பட்டென்று இடையிட்டு.. கார்த்திக்கினதும், சுரேஷினதும்.. சட்டைக்காலரை ஏக உரிமையுடன் பற்றி எழவைத்தவனாக, முரளியையும் பார்த்தான்.
“இங்கே நின்னு கிழிச்சதுலாம் போதும்.. எந்திரிச்சு வாங்கடா.. ஊர் சுத்திப் பார்க்க கெளம்பணும்னீங்களே…?இப்டியே விட்டா நைட்டு பூரா பேசிட்டிருந்தாலும் இருப்பீங்க.. ஏன்னா என்னைப் பத்தி கிழிக்கறதுன்னா அவ்ளோ வெறி மாப்பிள்ளைங்களுக்கு?” என்ற வண்ணம்.. அவர்கள் சரியாக பிரியாவிடை கூட கொடுக்க விடாது… அனைவரையும் வெளியே அழைத்து வந்தான் அவன்.
அவளாவது, “போயிட்டு வாங்கண்ணா”என்று பிரியாவிடை கொடுக்க நாடுவதற்குள்..
அவர்களனைவரையும் உருட்டி, மிரட்டி.. காருக்குள் ஏற்றி… அங்கிருந்தும்.. தன் ஜாகுவார் கார்வண்டி உறும உறும… சென்றும் விட்டிருந்தான் அவன்.
எப்போதும் செல்லும் முன்னர்.. அவளைப் பார்த்து கண்களாலேயே, “வர்றேன்மா” என்று கதை பேசுபவனுக்கும் என்ன ஆனது??
அவனது இறுகிய முகவதனமும், ஸ்டியரிங்கில் கைப்பதித்திருந்தவனின் அழுத்தமும் மதுராக்ஷியின் மனத்தினை அழுத்திப் பிசையும் போலிருந்தது.
ஒரு உண்மைக்காதலை இத்தனை நாளாய் கொச்சைப்படுத்திய வலி… அவளுள் எழவே… அமைதியாக வந்து தன்னறை சேர்ந்தாள் யௌவனமாது!!
மோகனம்-30
அவள் சிந்தையில்.. அன்று அவள் தாய் வீட்டு மொட்டைமாடியில்.. நிச்சயதார்த்தம் நேரம் அவனுக்கும், அவளுக்கும் நிகழ்ந்த சம்பாஷணைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வரலானது.
‘எனக்கு கொஞ்சம் டைம் தாங்க அஜய்.. உங்க மேல காதல் வர்றதுக்கு.. இல்லன்னா கடைசிவரை நல்ல ப்ரென்ட்ஸாகவே இருந்துரலாம்” என்று அவள் கூறியது யாவும் அவளது சிந்தனாவடுக்குகளில் வந்து போனது!!
அவள் அன்று கூறியது போல கல்யாணத்தைத் தள்ளி வைத்திருந்தால்..
உண்மைக்குண்மையாக காதலித்துக் கொண்டிருக்கும்.. அன்பு ஜீவனை இழந்திருப்பாள் அவள்.
அவன் காதலித்த நேரம் அருகிருந்தும் பாராமுகம் காட்டி.. நோவினை என்னும் சாட்டை கொண்டு சுழற்றி அடித்தவள்..
தனக்கு காதல் வந்த நொடி தான்.. காதலின் அவஸ்தை உணர்ந்தான்.
இதனால் தான் கவிஞர் வாலியும், “காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம். நரக சுகம் அல்லவா?”என்று பாடி வைத்தாரோ??
அவனது காதல்ப் பெருவிழிகளைப் பார்த்தால் தான் அவளுக்கு.. மனம் ஆசுவாசம் கொள்ளும் என்று தோன்றியது.
உடலெல்லாம் காதல் ஹார்மோன்கள் தாறுமாறாகக் குதித்து ஓட.. பட்டென்று எழுந்தவள்..
அன்று அவன் மனத்துக்கு உகந்த காதல் மனமாற்றத்தையும் அவனுக்கு பரிசாக அளிக்க நாடினாள்.
அதற்காக.. தன் பணியாளர்களின் உதவியுடன்.. அவர்களது அறையில் சின்ன, ‘கேன்டில் லைட் டின்னருக்கு’ ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றி.. கனகச்சிதமாகத் தயாரானாள் அவள்.
அன்று இரவு.. குளித்து முடித்து விட்டு… அவனுக்காக.. உடலின் அங்கங்களையெல்லாம் வெட்டி எடுத்துக் காட்டும் “சீ த்ரூ” சேலையைக் கட்டிக் கொண்டு… மனம் மயக்கும் மோகனாங்கியாய்.. அவனுக்காக காத்திருக்கலானாள் அவள்.
ஆனால்.. நேரம் எட்டரை!!
ஒன்பதே கால்!!
பத்தே முக்கால்! என்று போய்க் கொண்டேயிருக்க.. அவன் மட்டும் வரவேயில்லை இல்லத்துக்கு.
தன் அன்புக் கணவன் இப்போது வரக்கூடும்.. இப்போது வரக்கூடுமென்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள் பாவம் அப்பாவிப் பாவை!!
அவன் நள்ளிரவு தாண்டியும்.. வரவே இல்லை!!
மனத்துக்குள் இனம்புரியாத அச்சமும், அவனுக்கு என்னானதோ ஏதானதோ என்ற கலவரமும் தோன்ற..
கல்யாணமாகி வந்த இந்த மூன்று மாதங்களுக்கும்.. கணவனின் இலக்கங்களுக்கு அழைப்பே எடுத்திராதவள்… முதன்முறையாக அவனுக்கு அழைப்பெடுத்தாள்.
ஆனால் அவன் செல்பேசி, “ஸ்விச்ட் ஆப்..”என்று வரவே..
மதுராக்ஷிக்கு அந்தகாரம் கவிழ்ந்த இரவில்.. ஹிருதயத்தைச் சூழ பயம் கௌவிப் பிடித்துக் கொண்டது.
வெளியே தெருவின் மாடமாளிகைகளின் மின்விளக்கும் கூட அணைக்கப்பட்டு.. தெருவிளக்கு மாத்திரம் ஒளிர்ந்திருக்க.. நாயும் குரைக்காத மயான அமைதி கொண்டது இரவு!!
மணியைப் பார்த்த போது.. அது நள்ளிரவு கடந்து.. மணி ஒன்றரை என்று காட்டவே…
செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு.. நெற்றியும், ஜாக்கெட்டின் முன்புறமும், பின்புறமும் வியர்வையில் நனைந்து போக.. அலைக்கழிப்புடனேயே…
ஹாலில் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டேயிருந்தாள் அவள்.
அவனுக்கு என்ன ஆனதோ… ஏதானதோ என்று தெரியாமல்.. சரியாய் உறக்கமுமில்லாமல்.. வீட்டிலேயே உழன்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு..
அவனுக்கு ஏதேனும், “ஆக்ஸிடென்ட்’ நிகழ்ந்ததோ என்ற எண்ணமே… மூர்ச்சையைத் தருவிக்கும் போலிருந்தது.
திடீரென்று.. அவளுக்கு இச்சமயத்தில் உதவும் ஆபத்பாந்தவனாக.. அவன் தம்பி.. அவளது கொழுந்தன் மற்றும் அவளது உயிர்த்தோழி நிரோவின் காதலன் விக்னேஷின் ஞாபகம் மூளைக்குள் மின்னல் வெட்டினாற் போல வந்து போனது.
சற்றும் தாமதியாமல்.. தன் கொழுந்தனாருக்கு அழைப்பெடுத்தவள், மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்.. பேசமுடியாமல் அழுகைத் தொண்டையை அடைக்க நின்று போனாள்.
“ஹலோ சொல்லுங்க அண்ணி… என்ன இந்த நேரத்தில் கால்??” என்று தூக்கக் கலக்கக் குரலில்.. கொட்டாவியொன்றையும் கை மறைவில் வெளியேற்றிய வண்ணம் கேட்டான் கொழுந்தன் விக்னேஷ்!!
அவளோ.. அழுது கரையும் தழுதழுத்த குரலில், “ விக்.. விக்னேஷ்.. மணி ஒன்னே முக்காலாச்சி.. இன்னும் உங்க அண்ணன் வீடு வந்து சேரல… ப்ரென்ட்ஸோட அவுட்டிங் போறேன்னு போனாரு.. எ.. எனக்.. எனக்கென்னவோ பயமா இருக்கு..” என்று கூற.. அவன் முதலில்.. மறுமுனையில் தமையனைக் காணாமல் அழும்.. தன் அண்ணியைத் தான் தேற்றினான்.
“அண்ணி கவலப்படாதீங்க… அண்ணாவுக்கு ஏதும் ஆகிருக்காது…நீங்க தைரியமா இருங்க.. நா…நான் போய் பார்க்கிறேன்” என்ற வண்ணம்..அழைப்பைத் துண்டித்தான் அவன்.
மறுமுனையில் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன் நின்றிருந்தவளுக்கு.. அவனின் வதனம் காணும் வரை..
அவன் குரல் கேட்கும் வரை… அவன் முழுமையாக வீடு வந்து சேரும் வரை.. கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
“அஜய்க்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாது கடவுளே!!” என்று இருகரம் கூப்பி… இடது கண்ணில் நின்றும் சரேலென நீர்வழிய.. மனமார இறைவனிடமை இறைஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.
‘ஒருவேளை வரும்வழியில் அவன் வாகனத்தில்.. ஏதும் தீ விபத்து ஏதும் நடந்திருக்குமோ?’ என்று அவள் மனத்துக்குள் ஒரு எண்ணம் தோன்ற… அவளுக்கு மூச்சு நின்று வந்தது.
விழிகளோ ஹாலில் ஆளடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்களது கல்யாண புகைப்படத்தில் படிய… அவளது விழிகள் கலங்கிப் போயிருந்தது அநேகத்துக்குமாக.
பிடிக்காத திருமணமாகையால்.. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கும் அவள்!!
அவளையே.. காதலாடப் பார்த்திருக்கும் அவன்!!
அவனது நிழற்பட முகத்தை… இந்நொடி அவள்.. அன்பு கனிய கனியப் பார்த்திருக்க…
அவளது கையோ நெஞ்சு மத்தியில் சரசமாடும் தாலிச்சரடை.. உள்ளங்கையோடு பொத்தி நெஞ்சோடு அடக்கிக் கொண்டாள்.
அவளது மனமோ தனக்குத் தானே,
“அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. எ.. என்னோட கா.. காதல் அவனை என்கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேர்க்கும்”.. என்று சமாதானம் சொல்லிக் கொண்டேயிருந்த போது… வீட்டின் அழைப்புமணி அடிக்கும் ஓசை கேட்டது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. ஓடிச் சென்று கதவை.. இன்பமாய் வளைந்த இதழ்களுடன் திறக்க… அங்கே அவன் தன் தம்பியுடன் நின்றிருந்த கோலம்??
அப்படியே விரிந்த இதழ்களும் கூம்பிப் போக.. தொண்டையில் அடைத்த அழுகையை எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே நின்றிருந்தாள் அவள்.
குடித்து.. தன் சுயநினைவு என்பது சிறிதுமற்று.. நிற்கக் கூட முடியாமல்.. வலிய பாதங்கள் துவள… தள்ளாடியபடி.. தம்பி விக்னேஷின் உதவியுடன்.. கைத்தாங்கலாக நின்றிருக்கும் அவன்!!
விக்னேஷ் மாத்திரம்.. தன் தமையனைக் கைத்தாங்கலாகப் பிடித்திருக்கா விடின்.. நிற்கக் கூடத் திராணியற்று.. அவன் சர்வநிச்சயமாய் விழுந்திருக்கவும் கூடும்!!
மதுராக்ஷிக்கு கணவனின் நிலை கண்டு… அவள் விழிகளில் கண்ணீர் ..நில்லாமல் வழிய… விக்னேஷைப் பார்க்க…
அவனும் தன் அன்னைக்கு நிகரான அண்ணியின் அழும் வதனம் பார்க்க முடியாத சோகத்துடனேயே வாய் திறந்தான்.
“அண்ணனோட ப்ரெண்டு சுரேஷ் கூட இன்னைக்கு டின்னர் பார்ட்டின்னு அண்ணா சொல்லியிருந்தாரு அண்ணி.. நீங்க அண்ணன் இன்னும் வரலேன்னதும் சுரேஷ்க்கு தான் கால் பண்ணேன்.. சுரேஷ், கார்த்திக், முரளி எல்லாரும்.. அண்ணா அப்போவே கிளம்பி போயிட்டதா சொன்னாங்க.. சரின்னு வண்டி எடுத்துட்டு திநகர்.. கேகே நகர்னு ஒரு ரவுண்டு போய் பார்த்தேன்.. அப்போ… அண்ணே பீச்ல குடிச்சிட்டு விழுந்து கிடந்தாரு… நான் தான் தூக்கிட்டு வந்தேன்” என்றபடி… விக்னேஷ் பேசிக் கொண்டே… தமையனைக் கைத்தாங்கலாக அழைத்தவாறே உள்ளே வந்தான்.
அவள் கணவன்.. கடற்கரையோரத்தில்.. மூக்கு முட்டக் குடித்து விட்டு விழுந்து கிடந்தானா..??
‘அவனது இந்நிலைமைக்கு அவள் தானே காரணம்?’என்ற நினைப்பு.. அவளுக்குள் ஒரு வெடித்து வரும் அழுகையை உருவாக்க.. கொழுந்தனின் முன் அழக்கூடாது என்று முயன்று கீழுதட்டைக் கடித்து நின்றாள் அவள்.
அப்படியே அழைத்து வந்து.. தமையனை சோபாவில் சாய்த்து படுக்க வைத்தவன்,
“அப்டியே விடுங்க.. அங்கேயே படுக்கட்டும்.. இவனெல்லாம் யாரும் கவனிக்கலேன்னா தான் புத்தி வரும்…”என்று அஜய் சரக்கடித்து விட்டு… விழுந்து கிடந்த கோபத்தில் சொல்லி விட்டுப் போனான் விக்னேஷ்.
ஆனால்.. தன் கேள்வனின் அன்பின் வீரியத்தை உணர்ந்து நிற்கும் மங்கைக்கும்… அப்படியே அவனை விட்டுச் செல்லவும் தான் முடியுமோ??
அவனருகே வந்து.. சன்னமான குரலில், “எழுந்திருங்க அஜய்… எழுந்திருங்க.. இங்கே படுக்க வேணாம்.. நம்ம ரூமுக்கு போலாம்” என்ற வண்ணம்.. அவனை எழுப்பி..
அவன் கையைத் தன்மேல் தூக்கிப் போட்டுக் கொண்டே… கைத்தாங்கலாய் மாடிப்படியேற்றி அழைத்துப் போனாள் மதுராக்ஷி.
எப்போதும் கம்பீரமாக.. மிடுக்குடன் வளைய வரும் கணவனின் பழைய தோற்றமும்,
குடித்து வந்திருக்கும் இன்றைய தடுமாற்றத் தோற்றமும் அவள் கண்முன்னே வந்து இதயத்தை நெரித்துக் கொன்றது.
அவனது நண்பன், ‘ரொம்ப்ப்ப சந்தோஷமா இருந்தா இல்லேன்னா ரொம்ப்ப சோகமா இருந்தா குடிப்பான்’ என்றது அவளது சிந்தைக்குள் வந்து போக…
அவன் தாளாத சோகம் காரணமாகக் குடித்திருப்பதுவும் புரிந்தது.
காரணம்.. அவன் மனத்தினை புரிந்து கொள்ளாது உதாசீனப்படுத்தும் மனைவி!!
கைத்தாங்கலாய் மாடிப்படியேறிக் கொண்டிருந்தவன்.. அரை போதையில்.. திறக்க முடியாத விழிகளைத் திறந்து..
அவனை அணைத்திருக்கும் தன் யௌவனமாதுவின்… பக்கவாட்டு முகத்தைத் தான் பார்க்கலானாள்.
அவள் அழுவதைப் பார்த்து விட்டு.. போதை நிலையிலும் இதயம் வேதனை கொண்டது அவனுக்கு.
வார்த்தைகள் தெளிவாகப் பேசமுடியாத போதைக் குரலில்,
“ஏன் மதுழா அழுவுற.?? . சரியாக பாழ்த்தா நான் டான் அழணும்.. என்னொட தேவதை.. மை ஏஞ்சல் மதுழா நீ!! .. உ.. உன்னோட.. வாழ்க்கையையே பாழாக்கிட்டேனேன்னு நான் தான் அழணும்.. நீ அழக்கூடாது ”என்று மனத்தினுள் வந்ததெல்லாம் உளறியவன் கைகள் தானாய் எழுந்து.. அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டது வலியைத் தாங்காது.
அவள் ஒன்றுமே பேசாமல்.. கீழுதட்டைக் கடித்துக் கொண்டு.. சோபையிழந்த முகத்துடன் நடந்தாள்.
அவனும்.. அவளால் அறைவரை அழைக்கப்பட்டு வந்தவன் அறைவாசலில் கால் வைத்ததும் தான் தாமதம்!!
மறுவிநாடி.. அங்கே நின்று.. வாய் அஷ்டகோணலமாக மாற, “உவ்வே.. உவ்வே” என்று அங்கேயே.. தன் டீஷேர்ட்-டெனிம் எல்லாமும் அழுக்காகும் படி… வாந்தியெடுத்திருந்தான் அஜய்!!
அவனின் நிலை கண்டு அப்போதும் அய்யரவு கொள்ளாமல்.. அவனைப் பார்க்கும் விழிகளில்.. அவளிடம் தொற்றிக் கொண்டது பரிதாபம்!!
அவளோ… மழலைக்கு ஒரு தாயாக உருமாறி… அவனை அணைத்தவாறே… நேரே குளியலறைக்கு அழைத்துச் சென்ற போதும் கூட… அவனுக்கு ஒழுங்காய் நிற்கக் கூட முடியவில்லை.
குளியலறையிலிருந்த.. நீர் நிரப்பப்படாத.. வெறுமையான பாத் டப்பில்.. தன்னவனை இறக்கி…
சாய வைத்தவள்.. டீஷேர்ட்டையும், டெனிமையும் கழற்றி விட்டு… அருகேயமர்ந்து.. தலைக்கு நீரூற்றி.. அவனைக் குளிப்பாட்டினாள் மதுரா.
தலையில் ஊற்றப்பட்ட தண்ணீர்.. புருவங்கள் நனைத்து கண்ணிமைகள் வழியாக நனைந்து ஓட..
அவனோ.. தன்னை குளிக்க வைக்கும்.. தன் காதல் மங்கையையே.. இமை கொட்டாது பார்த்த வண்ணம் இருந்தான்.
அவனுக்கோ… அவன் காதல் இறுதிவரை ஏற்கப் படாமலேயே போய் விடுமோ என்ற ஏக்கம் மிளிர.. அது அவனது கண்களில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
அவளும்.. அவனை குளிக்க வைத்து விட்டு.. டவலால் அவன் தலை மற்றும் மேனியைத் துவட்டி..
கையில்லாத டீஷேர்ட் ஒன்றையும், இரவுக்கு ஏற்றாற் போல காற்றோட்டமான.. பாட்டம் ஒன்றையும் அவனுக்கு அணிவித்தும் விட்டாள்.
அவளின் ஒவ்வொரு செயல்களிலும் காதலோடு இணைந்த தாய்மை அதீதமாகவே இருந்தது.
அவனை அழைத்து வந்து… படுக்கையில் படுக்கச் செய்து விட்டு… நடுநிசியில்.. யார் உதவியுமின்றி.. அவனது வாந்தி சிந்திய தரையனைத்தையும் சுத்தம் செய்து…
வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு… அவளும் குளித்து வேற்றாடை புனைந்து வந்த போது.. அவன் அப்போதும் கூட சற்றும் போதைக் குறையாமல், “மதுழா.. மதுழா.. மதுழா” என்று வலியில் அனத்தும் குரலில் உளறிக் கொண்டிருந்தான்.
அவளைக் கண்டதும்.. அவள் கையைப் பற்றி.. அருகிழுத்து.. படுத்தவாறே அணைத்துக் கொண்டவன்,
“இ.. இ.. இன்னைக்கு உன் மடியில்.. படுத்துக்கட்டா?” என்று கேட்க…
அவனையே வேதனையோடப் பார்த்திருந்தவளும், “ம்ம்” என்று இசைந்தாள்.
அவள் மஞ்சத்தின் பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக் கொள்ள.. அவளது மடியில் சாய்ந்து படுத்திருந்தவனோ.. காதல் ஆற்றாமை தாளாது… அப்போதும் உளறிக் கொண்டேயிருநதான்.
“மதுழா.. நீ ஏன் என் லைஃப்ழ வந்த… நான் ஏன் உன்னை பார்க்கணும்?நா..நான்… ஏன் உன்னை கட்டாயப்படுத்தி தாழி. கட்டணும்??”என்று அவன் உச்சபட்ச வேதனையில் உளறிக் கொண்டேயிருக்க..
அவனை இன்னும் இன்னும் அணைத்து தலைகோதலானாள் அவள்.
அவன் தலை கோதியபடியே,மென்மையான குரலில்,
“ஆல் ஃபைன்.. ஆல் ஃபைன்… ஒண்ணும் இல்ல.. ஒண்ணும் இல்ல.. பேசாம தூங்குங்க.. அஜய்”என்று கூறி.. அவன் முதுகைத் தட்டித் தட்டி.. தூங்க வைத்தாள் அவள்.
அலுவலகம் முழுதும் ஹிட்லர் போல சர்வாதிகாரியாக வலம் வருபவன்… இன்று அவளிடம்.. சர்வாங்கமும் உருகிப் போய்…
பால்மணம் மாறாத குழந்தை போல… தூங்கும் எழிலை இரசித்துக் கொண்டே அவளும் உறங்கியும் போனாள்.
அதிகாலையில்… சாளரம் தாண்டி வந்த பொற்கிரணங்கள் முகத்தில் நேரடியாக விழுந்து தாக்க… கண்களை சுருக்கிக் கொண்டே எழுந்து கொண்டான் அவன்!!
பக்கத்திலே மனைவியில்லை!! சமையலை மேற்பார்வை செய்ய கீழே சமையலறை விரைந்திருந்தாள் அவள்.
எழுந்ததும் நேற்று நடந்த கூத்துக்கள் அனைத்தும் மறந்திருந்தவன்.. குளியலறை சென்று… அசதி தீர குளிக்க ஆரம்பித்த நேரம்… பக்கெட்டில் ஊறப் போட்டிருந்த அவனின் நேற்றைய டீஷேர்ட்-டெனிமைக் கண்டு கொண்டான் அவன்.
நேற்று என்ன நடந்திருக்கும்?? போதையில் சரக்கடித்து வீடு வந்த பின்பு??
அவளோடு இணைந்து கட்டிலில் ஒன்றி துயின்ற போது அசம்பாவிதம் நிகழ்ந்ததா??
குளியலறையில் இருந்து.. இடுப்பில் துண்டினைக் கட்டிக் கொண்டு.. டவலினால்.. தலையைத் துடைத்துக் கொண்டே அவன் அறைக்குள் வந்த போது எதிர்ப்பட்டாள்..
அவனுக்கு முன்னமே எழுந்து தயாரான அவனின் இனிய இல்லாள்!!
அவளருகே வந்தவனோ.. மெல்லமாக அழைத்தான் அவளை.
“ம.. மதுரா.. நேற்று நைட்.. ஏதாவது ஏடாகூடமா… போதையில நமக்குள்ள நடந்ததா?”என தலையைத் துவட்டுவதை பாதியில் அப்படியே நிறுத்தி விட்டுக் கேட்டான் அவன்.
அவளோ.. அவன் கட்டுமஸ்தான தேகத்தை.. ‘என் கணவன் என் உரிமை’ என்று லஜ்ஜையேயற்று விழிகளால் இரசித்துப் பார்த்திருந்தவள்,
முணுமுணுக்கும் குரலில், “ஏன் அப்படி நடந்திருந்தால் தான் என்னவாம்.. நான் உங்க மனைவி தானே..?”என்று சொல்ல..
அவன் கேட்டது மெய்தானா?? என்று தன் காதுகளையே நம்பாத வண்ணம் நின்று போனான் அவன்.
அவனை நோக்கி மெல்ல எம்பி.. அவனது கழுத்தோடு கையிட்டு.. அவனைக் குனித்து அணைத்தவள்.. அவனது தலையை ஈரம் போகத் துவட்டி விட்டாள் மிருதுவாக!!
எப்படியெல்லாம் தன் மனையாள் தன்னிடம் அன்பு காட்ட வேண்டுமென்று ஆசை கொண்டானோ??
அதே போல அன்று நடக்க… அவன் ஏதேனும் ஸ்வப்னங்கள் காண்கின்றானா?? என்று திகைத்துப் போய் நின்று விட்டிருந்தான் அவன்.
இது டீசர் தான்மா.. மனையாளின் மெய்யன்பின்.. மெயின் பிக்ச்சரும் அவன் பார்க்க நேரிட்டால்??
ஹார்மோன்களின் தாறுமாறான சேட்டையில் மூர்ச்சையாகிப் போவானோ
super sis vera level sis sema sema……
Super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌