மோகனம்-31
அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும்.
காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!!
‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி.
தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத டீஷேர்ட் ஒன்றினை எடுத்து.. தலைக்கு மேலாகப் போட்டுக் கொண்டிருந்தான் அஜய்.
அவனது இறுகிய கட்டுமஸ்தான உடலில்… டீஷேர்ட்டோ… அவன் முகத்தை மறைத்து… கழுத்துக்கு கீழே இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து நின்றது.
திண்ணிய கரங்களை.. உத்திரத்தினை நோக்கி உயர்த்தி.. தோளினை நளினமாக ஆட்டி ஆட்டி.. டீஷேர்ட்டை கழுத்து வழியாக இறக்க முயல.. அப்போதும் இறங்க மறுத்தது அது.
அவன்.. சாதாரண டீஷேர்ட் ஒன்றை மாட்டுவதற்கே அல்லல்படுவது கண்டு… அவனை நாடி ஓடிப் போய்… அவனது வெற்றுத் தோளில் கைவைத்தாள் அவள்.
மென்மையான கரங்கள் தன்னில் பட்டதும்…அதன் உஷ்ணம் ஆனானப்பட்ட ஆண்மகனையும் ஏதோ செய்யும் போலிருக்கவே.. அவனது சலனங்கள் யாவும் நின்றும் போனது.
“இருங்க அஜய்.. நான் பண்றேன்” என்று மனத்தினை உருக்கும் தாய்மைக் குரலில் அவள் சொல்வது… அவனது காதோரம் கேட்க.. அஜய்தேவ்வின் மறைக்கப்பட்ட விழிகளும் அதிர்ச்சியில் அகல விரிந்தது.
தன்னோடு இயைந்து ஒட்டி நின்று உறவாட வருவதும் தன் ஆசைப்பெண் தானா??
அவளோ… அவனருகாமையில் வந்து.. டீஷேர்ட்டின் துணிக்கும் மேலாக… அவள் விடும் மூச்சுக்காற்றுக்கள்.. அவன் வதனம் தனில் பட்டு மோத.. அவனுக்கு அலைக்கழிப்பைப் பரிசளித்து நின்றாள்.
அவளின் கைகள்… பொருமி நிற்கும் அவனது மார்பில் பதிய… அவனின் தேகமோ ஏகத்துக்கும் கல்லாய் விறைத்தது.
அவனது உயரத்துக்கு தோதாக குதிக்காலில் எம்பியவள்.. அவனது டீஷேர்ட்டை மேலிருந்து சிறுகச் சிறுக இறக்கி.. அவனது முகத்தை.. டீஷேர்ட்டில் நின்றும் விடுதலையாக்கி விட்டாள்.
அவனது சிவந்த விழிகளோ.. தன் காதல் மாதுவை… இமையாடாமல் பார்த்திருக்க.. அவளின் மீது எழுத்தில் வரிக்க முடியாத காதல் உணர்வுகள் தோன்றலானது அவனுக்கு.
அவனது டீஷேர்ட்டை.. இடுப்பின் வழியாக இறக்கி.. அதன் நுனியைப் பிடித்து… நீட்டி.. நேர்ப்படுத்தியவளாக நிமிர்ந்தவள்.. தன் கணவன் தன்னை ஓயாது பார்த்து வைப்பதில்.. பேரழகாய் நாணங் கொண்டாள்.
அவனது முரட்டுக் கன்னங்களை தன்னில் தாங்கி… அவனது நெற்றியில் எம்பி… மிருதுவான நயனங்களுடன், “ம்ப்ச்சு”என்று ஒலியெழும்ப… காதல் முத்தம் பதித்தாள் மதுராக்ஷி.
அன்பின் வெளிப்பாடாய்.. அவளிடமிருந்து வந்த ஒற்றை முத்தத்தில்.. . திடீரென்று தலையுயர்த்தி ஆச்சரியக் கண்கொண்டு.. ‘இது மெய்தானா?” என்பது போலப் பார்த்தான் அவன்.
அவளோ.. கணவனின் திகைப்பு, ஆச்சரியம்.. அருங்காதல் பொழியும் விழிகள் என எல்லாவற்றையும் பார்த்து… மனத்துக்குள் நகைத்துக் கொண்டாள்.
“இது உங்க ஜிம் டைம்னு தெரியும்.. நீங்க டிரஸ் போட்டுக்கிட்டது கூட ஜிம்முக்காகன்னு தெரியும்.. அதனால சீக்கிரம் ஜிம்மிட்டு வர்றீங்களா..?? உங்களுக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறேன் அஜய் கண்ணா!!”என்று அவனின் கன்னத்தினைப் பிடித்தாட்டி செல்லம் கொஞ்சியவளாகச் சொன்னாள் அவள்!!
அவனோ… ஏதும் பேசாமல் உள்ளிழுத்த மூச்சுடன், “ம்ம்!!”ஒற்றை இம்மோடு நிற்க…அவனின் கோலம் கண்டு புன்னகை வந்தது அவளுக்கு.
அன்று காலை முழுவதும் உற்சாகத்துடன் இருந்த மதுராக்ஷியைக் காணக் காண வித்தியாசமாக இருந்தது அவனுக்கு.
இன்று அவளிடமிருந்து இப்படியான.. அன்பை.. காதலை.. நடத்தைகளை அவன் எதிர்பார்த்தேயிருக்கவில்லை.
அவளது நெருக்கத்துக்கும் காரணமேது??
அவனது மெய்யன்பை உணர்ந்தாளா?? இல்லை இதுவும் விவாகரத்து பெற வேண்டி அவள் நடத்தும் நாடகத்தின் ஓரங்கம் தானோ??
ஆனால் அவளோ சிறகில்லாத பட்டாம்பூச்சியாய்.. தன் மனவானில்.. காதல் வந்த பெருநொடிகளை இன்பத்துடன் சுகித்த வண்ணம் பறந்து திரிந்தாள்.
அவளுக்குச் சொந்தமானவன் அருகிலிருக்கும் போது.. அவளுக்கும் தான் எப்படி சோர்வு வரும்??
பம்பரம் போலச் சுழன்று சுழன்று.. தன் கணவனுக்கான காலையுணவை.. தன் கையாலேயே பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்து முடித்தாள் மதுராக்ஷி!
மல்லிப்பூ போல இட்லி.. தொட்டுக்க எட்டுவகைச் சட்டினி என்று அத்தனையும் படுசுவையாகத் தயாரித்து.. கரண்டியால் அள்ளி.. உள்ளங்கையில் தொட்டு நக்கிப் பார்த்து.. அதன் சுவையில் திருப்தியும் கண்டாள் அவள்.
அனைத்தையும் பக்காவாகத் தயார் செய்து விட்டு.. லெமன் ஜூஸினை எடுத்துக் கொண்டு… தன் கணவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஜிம்கூடத்திற்குத் தான்.. போனாள் அவள்.
அங்கே டம்பெல்லைத் தூக்கித் தூக்கி.. தன் திரண்ட கைத்தசைநார்கள் இறுகி இறுகித் தளர… உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அஜய்யின் தோற்றம்.. மதுராக்ஷியின் மனத்தினை நயக்க வைத்தது.
அதிலும் அவன் அணிந்திருந்த டீஷேர்ட்… ஒட்டிவைத்தாற் போல… வியர்வையில் நனைந்து… தெரிய.. அவனது கட்டுமஸ்தான தேகமும்.. அவளுக்குள் காதல் சுதியை ஏற்றியது.
அவ்வறை எங்கிலும்.. ஜிம்முவதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் எல்லாம் பிரம்மாண்டமாக அடைத்து நிறைந்திருக்க… ஒரு பக்கச் சுவர் முழுவதையும் அடைத்து அமைந்திருந்தது கண்ணாடி!!
உள்ளே லெமன் ஜூஸோடு வந்தவள்.. அஜய்யின் தேகத்தையே பார்த்த வண்ணம்.. ஒருகணம் அவனில் நின்றும் பார்வையை திருப்ப முடியாமல் திக்குமுக்காடி நின்று போனாள்.
வாசலிலே நின்று போன தன் மனையாளின் ரூபம். மோகன விம்பமாய்… கண்ணாடியில் பதிந்திருந்தது.
அவளைப் பார்த்த வண்ணமே.. ஒற்றைக்கையை பின்னாடி மடித்துக் கொண்டே.. மறுகையால்.. டம்பெல்லைத் தூக்கித் தூக்கி இறக்கிக் கொண்டிருந்தான் அவன்.
அவளுக்காகத் தானே.. தன் ஊளைச் சதையையும், தொப்பையும் குறைத்து.. விடாமுயற்சியுடன்… கட்டுக்கோப்பாக உடலை அவன் பரிணாமம் காணச் செய்ததே??
எப்போதும்.. அவனின் தேகத்தை.. தினமும் காலையில் அவன் ஜிம்முவதை.. ஏனோதானோ என்று உதாசீனம் செய்து பாராமுகமாக கடந்து செல்பவள் அவள்!!
இன்று.. தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பது.. அவனுக்குள்.. உற்சாகத்தைக் கிளறி விட… “உஃப்.. உஃப்”என்று மூச்சு விட்டுக் கொண்டே.. டம்பெல் தூக்கும் யௌவனம்… அவளுள் ஏதேதோ உணர்ச்சி மயக்கம் தந்தது!!
அவனது ‘எய்ட்பேக்’ கொண்ட கட்டுலை இமை கொட்டாமல் இரசித்துக் கொண்டே…அவன் உடற்பயிற்சி செய்யும் அழகை இரசித்தாள் அவள்.
அவனது மேனியெங்கும் உதித்து ஓடும் வியர்வை மணிகள்.. அவனது இறுகிய கழுத்துவளைவில் பட்டு இறங்க.. அதைக் காணும் போது.. அவனை அணைத்து.. தேகமெல்லாம் பூசிக் கொள்ளும் எண்ணமும் தான் மிகுந்தது அவளுக்குள்.
உடற்பயிற்சி செய்வதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டு.. கீழே தொங்க விடப்பட்ட டம்ப்பெல் கையுடன் அவளைப் பார்த்து, “என்ன ?” என்று கேட்டான் அவன்.
அவளோ பட்டென்று இனிமை மயக்கம் கலைந்தாற் போல..நின்றவளோ.. அவன் தன்னை வெறித்துப் பார்க்கும் பார்வையில் அசடுவழியும் புன்னகையோடு நின்று போனாள்.
“இல்ல.. இல்ல… ஜூஸ்… உ.. உங்களுக்காக?” என்று தன் தட்டிலிருந்த குவளையை அவன்புறமாக நீட்டி… காற்றே வராத குரலில் சொன்னாள் அவள்.
அவளின் அச்சிறு செயல் இதயத்தைக் கொய்தாலும்.. இதுவும் சூட்சுமம் தானா என்ற சந்தேகத்துடன்.. இறுகிக் கறுத்துப் போன வதனத்துடன்.. தன் காதல் மனையாளையே குறுகுறுவெனப் பார்த்திருக்கலானான் அவன்!!
உடற்பயிற்சி செய்வதை அத்தோடு நிறுத்திக் கொண்டவனுக்கு.. அவள் அங்கு நின்று பார்த்துக் கொண்டேயிருப்பதும் அசௌகரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்!!
“அத.. டீபோய் மேல வச்சுட்டு போ..”என்று கட்டளையிடும் ராஜதோரணையில் கூறியவன்.. அங்கிருந்தும் நகர்ந்து சென்று.. சுவற்றின் ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த டவலினைத் தான் கையில் எடுத்தான்.
அவளும் அவன் சொன்னது போலவே, “ம்ம்.. சரி”என்று வைத்து விட்டு நிமிர்ந்த போது… அவனின் ஆஜனுபாகுவான தோற்றம்.. அவளுக்குள் புதுவிதமான ஹார்மோன்களின் அவஸ்தையை உண்டு பண்ணும் போலிருந்தது.
கழுத்தை இப்புறமும், அப்புறமும் திருப்பிக் கொண்டே வியர்வை டவலினால் ஒற்றிக் கொண்டே… அவளின் டீபோய் அருகே வந்தவன்…
குனிந்து லெமன் ஜூஸ் எடுக்கப் போன கைகள் அப்படியே.. அதைத் தொட்டும் தொடாதது போல நின்றது.
பட்டென்று பழைய நினைவுகள் தோன்ற.. எலுமிச்சைப் பழச்சாறுக்கும் சீனிக்கு பதில் உப்பு ஏதேனும் கலந்திருப்பாளோ என்ற துடுக்குத்தனமான எண்ணம் தலைத்தூக்கியது அவனுக்கு!!
அவ்வெண்ணம் துளிர்த்த கணம்.. அவன் குவளையை எடுக்காமல்.. கைமுஷ்டி இறுக நின்று போனவன்.. அவளைப் பார்த்து கொடுங்குரலில் பேசினான்.
“சரி… நான் குடிச்சிக்கறேன்… நீ போ!!”என்று மதுராக்ஷி தன்னையே குறுகுறுவென்று பார்த்து வைக்கும் பார்வையில்.. அவளை அணைத்து காதல் செய்திடத் தகித்த உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கறார்ப் பேர்வழி போலச் சொன்னான் அவன்.
அவன் மனத்தினை நன்குணர்ந்தது போல அவளும்.. தன் சேலை முந்தானையின் நுனியை.. ஆட்காட்டி விரலில் சுற்றுவதும், பின்பு கழற்றுவதுமாக இருந்தவள்.. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே வாய் திறந்தாள்.
“ஒருவாட்டி தப்பு பண்ணேன் தான்.. ஒத்துக்கறேன்..ஆனா ஒவ்வொரு வாட்டியும் தப்பு பண்ணுவேன்னு நினைக்காதீங்க.. நான் ஒண்ணும்.. அதில் எதுவுமே கலக்கல… நீங்க இந்த வாட்டி நம்பி குடிக்கலாம்…”என்று குற்றவுணர்வு தாளாத குரலில் சொல்ல… அவனோ அவளின் பேச்சுக்களை அணுவும் காது தாழ்த்திக் கேட்கவில்லை.
அங்கிருந்தும்.. அவளை ஒற்றைக்கையால் தள்ளி நிறுத்தி விட்டு… இறுகிய தாடைகளுடன் நிமிர்ந்து, “ஐ டோன்ட் நீட் எனி ஜூஸ்!!.. அதுவும் நீ தயாரிச்சது வேண்டவே வேண்டாம்” என்று அவளின் பழச்சாறையும் திடமான தொனியில் மறுத்து விட்டு.. அங்கிருந்தும்… தரதரவென நகர்ந்து போனான் குளியலறை நோக்கி.
அவள் தயாரித்தது வேண்டாம் என்றதும்… ஏனோ இதயத்தை அடைத்து.. விம்மி விம்மி வரும் போலிருந்தது அழுகை!!
இவனுக்கு என்ன ஆயிற்று..??
அவனது தேவதை அவள் என்று வாயாற சொன்னவனும் அவன் தானா??
லஜ்ஜை மறந்து.. நாணம் துறந்து.. காதலோடு.. அவனுடன் ஒட்டி ஒட்டி வர.. இப்படி விலகி விலகி ஓடுகிறானே இவன்??
ஒருபக்கம் ஆயாசமாகவும்.. மறுபக்கம் ஆதங்கமாகவும் இருந்தாலும்.. தன் காதலை அவனுக்கு உணர்த்தி விடும் பெருமுயற்சியை மட்டும் கைவிடவேயில்லை அவள்!!
‘இவனை தன் பக்கம் சாய்க்க.. அவளின் காதலைப் புரிய வைக்க என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவளுக்கு… ஒரு நல்ல திட்டம் உண்டாயிற்று.
பகல் முழுவதும்.. வீடு வராமல்.. ஆபீஸ் சென்ற பாண்டி மன்னவனை… அந்தகாரம் கமழும் இரவில் கவிழ்க்கத் திட்டமிட்டாள் மதுராக்ஷி!!
அவனும் இரவு உணவுக்குப் பின்.. மஞ்சத்தில் இருந்த நேரமது!!
வேண்டுமென்றே.. அன்றிரவு… மிகவும் தாமதாக.. கலைத்துப போன விழிகளுடனேயே உள்நுழைந்தாள் அவள்!!
அவனோ இரவுடைக்கு மாறி.. உறங்குவதற்காக.. தலையணையில் சாய்ந்து கொண்டிருந்தவனாக… கையில் ஏதோ ஒரு ஆங்கில நாவலை வைத்து வாசித்துக் கொண்டிருக்கலானான்.
அவளோ… அவனை ஓரக்கண்ணாலேயே பார்த்துக் கொண்டே.. குட்டிக் குளியலொன்றை போடுவதற்காக குளியலறை விரைந்தாள்.
படுக்கைக்குச் செல்லும் முன்னம்.. அவள் குட்டிக் குளியலொன்று போடுவது.. அங்கே வழமையாக நடக்கும் விஷயம் தான்!! அவனும் அறிந்ததே.
அவனோ.. தன்புறமிருந்த இரவு நேர மேசை விளக்கின் ஒளியில்.. ஆங்கில நாவலை வாசித்துக் கொண்டிருந்த போதினில்… அவனது நாசிக்குள் சுகந்தமான ஷாம்பூ வாசனையும், அதனோடு இணைந்த சவர்க்கார மணமும் ஒருங்கே வரவே…
நாவலில் நின்றும் சிந்தை களைந்தவன்.. பட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அங்கே, அப்படியான கோலத்தில் மதுராக்ஷி… நின்று ஆணிதயத்தைக் கொல்லக் கூடுமென்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
அவனின் விழிகள் சற்றே விரிய..ஒற்றைப் புருவம் உயர.. அவளையே.. நாவூற எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே பார்க்கலானான் அவன்.
கணவன் தன்னைப் பார்ப்பது உணர்ந்தும்.. உணராதது போல நின்றிருந்தவளின் கோலம்??
எப்போதும்.. குளியலறையிலேயே உடையையும் மாற்றிக் கொண்டு வருபவள்.. இன்று அவனை மயக்கும் மோகனாங்கியாக உருமாறி… வெறுமனே டவலை கட்டிக் கொண்டு நின்றிருக்கலானாள்.
அவளை விட்டும் அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அவளையே மேலிருந்து கீழ்வரைப் பார்த்தவனுக்கு… விழிகளிலே தோன்றியது மோக உணர்வுகள்!!
தலையில் நீர்படாமல்.. அத்தனை கூந்தலையும் வாரியெடுத்து ஹேர் இன் அ பன் ஸ்டைலில்.. உச்சியில் கொண்டை போட்டிருந்தாள் மதுராக்ஷி.
அதன் விளைவாக.. அவளது சங்குக் கழுத்தும்… பளிச்சென்ற முத்துக்கள் போல நீர் தேங்கி நிற்கும் கழுத்து வளைவும் தரிசனம் தந்து.. அவனுக்கு அதீத தாபம் கொடுத்தது.
டவலை சரிவரக் கட்டாமல்… இழுத்துப் பிடித்திருந்தவளின் கைகள்.. அவளது தனங்களையே அழுத்திப் பிடித்திருக்க.. அதன் விளைவாக… பிதுங்கித் தெரிந்த.. வெண்ணெய்க் கோளத்தில் தன் வசம் இழந்தான் அவன்.
அவளின் டவல்.. அவளின் நளினமான மேனியைச் சுற்றிச் சென்றிருக்க.. அதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த அவளின் ஹவர் கிளாஸ் மேனியமைப்பு… மோகம் தந்தது அஜய்க்கு.
அவள் கட்டியிருந்த இத்தனூண்டு டவலோ… தொடையின் ஆரம்பத்தோடு நின்று போயிருக்கவே.. அதன் கீழே யானைத் தந்ததம் போலத் தெரிந்தது அவளின் வளவளத்த தொடை!
கூடவே பிருட்டத்தின் ஒருபாதி.. வேறு கூடுதல் இதம் தரவே.. அவற்றையே சொக்கிப் போன விழிகளுடன் பார்த்திருந்தவன்.. மெல்ல மெல்ல விழிகளை மேலேற்றி தன் பூங்காரிகைப் பெண்ணோடு விழி கலந்தான்!!
அவள் கண்களில்… கறுப்புப் பளிங்கின் பளிச்சிடலைப் போலத் தெரிந்த கருவிழிப் படலத்தில்.. தன் வசம் இழந்து நின்றான் அஜய்தேவ்!!
மனையாளின் விழிகளில் இருந்த ஏதோ ஒன்று.. இழுத்தது அவனையும்.
நீர்மணிகள் தேங்கி ஈரமான செவ்வதரங்கள் இலேசாகத் துடிதுடித்து, “வா.. வா” என்று அழைக்காமல் அழைத்தது.
அவளையே தன் தாபத்தீ வானளாவி எழுந்து ஜூவாலையும் மூட்ட… உணர்ச்சிகள் துடித்த பார்வையோடு பார்த்திருந்தான் அவன்!!
அவன் பார்வையில்.. ஹப்பப்பா பெண்ணவளின் கன்னங்களும் அந்திவானத்தின் சிவப்பைக் கடன்வாங்கிப் பூசிக் கொண்டது நாணத்தினால்.
அவளின் நாணச்சிவப்பும்.. அவள் முகத்தில் ஜாஜ்வல்லியம் கூட்டியது.
தன் பேரழகி.. தன்னைப் பார்த்திருக்கும் ஒயிலைக் கண்டவுடன் ஆண்மகன் அவனுக்கும் உள்ளுக்குள்… லஜ்ஜை தோன்றியிருக்க வேண்டும்!!
“ம்கம்!!” என்று தன் குரலை செருமிக் கொண்டே நடப்புக்கு வந்தவன்.. அவளில் நின்றும் விழிகளை எடுத்து.. தன் நாவலில் விழிகளைப் பதிக்கலானான்.
அவன் பார்க்க வேண்டுமென்றே.. அத்தகைய கோணத்தில் நடந்து வந்தவளோ.. தன் கணவனை அழைத்தாள் கிறக்கமேற்றும் ஹஸ்கி குரலில்.
“அஜய்.. அஜய்!!” என்று அவள் அவனை அழைக்க.. அவனும் தன் காரிகையை நிமிர்ந்து பார்க்காமலேயே… இறுக்கமான தொனியில் கேட்டான்,
“என்ன?”என்று.
அவளும் முன்னாடியே திட்டமிட்ட விஷயங்களையெல்லாம் தற்போது அவன் முன்னிலையில் செயற்படுத்தவும் நாடியவளாய்.. மயக்கும் மாயக் குரலிலேயே வாய் திறந்தாள்.
“அஜய்… உங்க பில்லோவ் கிட்ட என் டிரஸ் இருக்கு… கொஞ்சம் எடுத்து தர்றீங்களா ப்ளீஸ்?” என்று அவன் பக்கத்திலிருந்த தலையணையின் அடியில் அவள் முன்பு வைத்து விட்டுப் போன ஆடைகளை எடுத்துத் தருமாறு கேட்டாள் மதுராக்ஷி.
அவனும்.. உதவுவதற்காக.. ஆடைகளை எடுத்து.. அவளைத் திரும்பிப் பார்த்தால்.. காதல் ஹார்மோன் சேட்டைகளில் அவளோடு அத்துமீறி விடுவோமோ என்று அஞ்சிப் போனான் அவன்.
ஆகையால்..அவள் புறம் திரும்பிப் பாராமலேயே.. மஞ்சத்தில் அமர்ந்து இருந்த வண்ணம்.. ஆடையேந்திய கைகளை மட்டும். அவள் பக்கம் நீட்டினான் அஜய்தேவ்.
மனைவியே ஆனாலும் கூட.. அவளுக்குப் பிடிக்காமல்.. தன்னைத் தொடக்கூடாது.. தன் மனம் பிறழ்ந்திடக் கூடாது என்பதற்காக… தன்னைப் பாராது திரும்பி நிற்கும் அவனின் கண்ணியம்.. அவளின் மனம் கவர்வதாகவே இருந்தது.
ஆடைகள்.. அவளின் கைக்கெட்டும் தூரத்திலிருந்தும்.. ஆடைக்காகவா டவலைக் கட்டிக் கொண்டு படுக்கை வரை வந்தாள் மாது!!
இல்லையே?? அவன் தன்னை.. தன்னழகைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே இவை யாவுமே??
அவனையே உஷ்ணப் பெருமூச்சுக்களுடன் பார்த்திருந்தவளோ… வேண்டுமென்றே சொன்னாள்,
“என்ன அஜய்.. எங்கேயோ நீட்டுறீங்க..?? இங்கே இந்தப்பக்கம்.. ம்ப்ச்சு… எழுந்திருச்சு வந்து தந்தீங்கண்ணா தான் எடுப்பேன்..” என்று கூற… அவனுக்குள்ளோ அழகாய் வந்து போனது திருட்டுவிழி!!
தாலி கட்டிய மனையாள் தான்.
இன்னும் ஏன் ஒருதடவை ஆத்திரத்தில்.. அவளின் மீது பாய்ந்து களி தீர்த்துக் கொள்ளவும் செய்தான் தான்.
இருப்பினும் அந்நிலையில்… அவளைப் பார்க்க… எதுவோ ஒன்று தடுத்தது.
அவனும் அமைதியாக நின்றிருக்க… அவளிடமிருந்து மீண்டும் கேட்டது அவள் குரல்.
“உங்க பொண்டாட்டி தானே நான்… என்னைப் பார்த்து டிரஸ் எடுத்து தர்றதில்… என்ன தயக்கம் உங்களுக்கு?? இங்கே பாருங்க அஜய்… அந்த டிரஸ்ஸ எடுத்து தாங்க” என்று இவள் மீண்டும் மீண்டும் நச்சரிக்கத் தொடங்க… அவனும் எவ்வித மறுப்புக்களுமற்றுத் திரும்பினான் தன் யௌவன மங்கையை நோக்கி!!
முழு உயரத்துக்குமாக மஞ்சத்தில் நின்றும் நிமிர்ந்து நின்றவன்.. அவள் புறமாக அவள் ஆடைகளை நீட்டியவன்.. கறுப்புப் பளிங்கு போன்ற விழிகளைப் பார்த்தவன்.. பார்த்தது போலவே நின்று போனான்.
அவளை கட்டியணைத்து இதழ்கள் கௌவி.. அவள் வாய்மணம் சுகித்திட வேண்டும்!!
அவளோடு புகுந்து.. காதல் காட்டில் கண்ணாமூச்சி ஆடிடவும் வேண்டும்!!
அவள் மேனி உரசி… அவள் வியர்வை அலசி.. ஜென்மம் முடித்திடவும் வேண்டும்!!
கைகள் பஞ்சுக்கோளங்கள் தழுவி.. இதயம் கனலில் தகிக்க.. அவளுக்காய் வெந்து தகிக்கவும் வேண்டும்!!!
அவனுக்கு நீட்டிய ஆடைகளை வாங்க.. அவளும் தன் தளிர்க் கரங்களைக் கொண்டு சென்ற போது..வேண்டுமென்று கைத்தவறி …ஆடைகளை தரையில் நழுவ விட்டாள் மதுராக்ஷி.
“அச்சச்சோ.. கீழே விருந்திருச்சே அஜய் கண்ணா… ப்ளீஸ் எடுத்துத் தாங்க.. ப்ளீஸ்” என்று அவளும் கெஞ்சலாய் விழி சுருக்கி… அவனைப் பார்த்துக் கேட்க… அவனும் ஏதும் பேசாமல்.. அவஸ்தையுடனேயே கீழே குனிந்தாள்.
அவள் தன்னுள்.. அனல் மூட்ட மூட்ட.. அவனுள் வளர்ந்து நின்றது மோகமுள்!!
ஆடைகளை எடுக்க முயன்றவனின் விழிகள்.. மாமல்ல புரத்து சிற்பம் போல.. ஒரு பாதம் தரையில் பதித்தும்.. மறுகாலை ஊன்றாமல் நளினமாக நின்றிருக்கும் ஒரு ஜோடிப் பாதத்தில்.. தன் கண்ணை பதிய விட்டான் அவன்.
அனிச்சம் பூ போல இளஞ்சிவப்பு நிறத்தில்… பூமி படாத குழந்தைப் பாதம் போல… கணுக்கால் கூட கறுப்பு இல்லாத பாதங்கள் அவை.
அவன் விழிகளுள் நீங்காத விம்பமாய் பதிந்து போனது.
அதிலும் அவள் கட்டியிருந்த மூன்றடுக்கு தங்கக்கொலுசின் கொக்கியில்.. அவன் இதயமும் மாட்டிக் கொண்டது.
முடியற்றிருந்த ஆடுதசைக்கால்களும்… தொடையழகி ரம்பாவின் அழகைத் தோற்கும்.. தொடைகளும்.. அவனுள் உன்மத்தக் கிறுக்கேற்றியது.
பிறகு மெல்ல மெல்ல மேலேறிய பார்வை.. அவளது பிரம்மாண்டமான மலைமுகடுகளில் பதிய.. அவன் பார்வை பட்டதுமே விறைத்து.. மல்லுக்கு நின்றது பெண்ணுச்சிகள்!!
டவலின் மேலாகப் புடைத்த மொட்டுக்கள்.. சர்வ நிச்சயமாக அவனுள் உணர்ச்சிகளைக் கிளப்பியிருக்க வேண்டும்.
அது தானே அவளுக்கும் வேண்டும்?
இன்னும் மெல்ல மேலேறி.. அவளை நோக்கியவனின் பார்வை.. அவளது கண்களையே விழுங்கி விடுவது போல பார்த்தவன்..மன்மதனாய் நின்றிருந்த நேரமது.
அவளும்.. “ம்.. சீக்கிரம் தாங்க அஜய்” என்று ஓரெட்டு முன்னே எடுத்து வைத்து.. அவன் கையிலிருக்கும் ஆடையை எடுக்க விளைந்த நேரமும் கூட!!
அடுத்த விநாடி… தரையில் பதிந்த ஈரக்கால்களும் வழுக்க.. அங்கே நிலைகுலைந்து சமநிலைத் தடுமாறி, “ஆஆ”என்று அவள் கத்தி நின்றவளின்.. இடையூடு கையிட்டுப் பிடித்திருந்தான் அவன்.
‘இதுகளும் சதி பண்ணுதே மொமென்ட்!!”
பின்னோக்கி விழப்போனவளை.. விழுந்து விடாமல் அவன் கரங்கள் முன்னோக்கி இழுக்க… படாரென்று வந்து பச்சக்கென்று அழுந்த மோதிக் கொண்டது அவன் மார்புகளும், அவள் மார்புகளும்.
அவளு விழுந்த விசையில்.. இவனும் கால் தடுமாறி.. மஞ்சத்தின் மீது மல்லாக்காக அவளை அணைத்துப் பிடித்த வண்ணமே விழ.. அவளின் இதழ்களும்..அவனதரங்களோடு மோதி… ஏடாகூடமாக அடித்தது “கிஸ் கிஸ்”.
அவளுக்கோ என்றுமில்லாமல்.. ஒரு ஆண்மகனின் அதுவும் அவளுக்கே அவளுக்கென்று பிரம்மன் படைத்த.. வலிய ஆண்மகனின் நெருக்கம்.. அவளது இதயத்தை வேக வேகமாக அடிக்கச் செய்தது.
அவளின் கூந்தலெல்லாம்.. அவன் கன்னத்தில் படர்ந்து சாமரம் வீச… அவள் கண்களோ முத்தத்தில் மிருதுவாகிப் போனது. அவன் விழிகளோ.. அதிர்ச்சியில் சாலவும் பெரிதாக விரிந்தது.
தன் கேள்வனின்.. இதயம் வேகமாக தடதடத்து.. துடித்ததை மதுராக்ஷியின் காதுகள் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.
மோகனம்-32
விழுந்த தினுசில்… கட்டியிருந்த டவல் கழன்று விடவே… அவனது கண்களுக்கு பெருவிருந்தாய் ஆனது முப்பரிமாணத் திரட்சி அழகுகள்!!
தக்கதருணத்தில் மாறனும்.. காதல் அம்புகள்.. அவர்களை நோக்கித் தொடுக்க.. மறுகணம்.. ஒருவித மோகனத்தோடு.. அவளது அதரங்களை இறுக்கிக் கௌவிச் சுவைக்கலானான் அஜய்!!
அவனது ஆவேசமான சுவைத்தலில்… விர்ரென்று ஒரு மின்சாரம்.. அவளது தேகமெல்லாம் பாய்ந்து அவளையும் … ஆட்டுவித்து நின்றது.
அவனது கரங்கள்.. அவளது இடைவிட்டுக் கீழிறங்கி.. வெற்றுப் பின்னழகில் தொடுதிரையின்றித் தொட்டு அழுத்தியது.
இதழ்களோ, “மதுராஹ்”என்று எல்கை கடந்த தாபத்தில் பிதற்ற… அவளைத் தள்ளி… கட்டிலில் படர்ந்து.. அவன் மீது ஏறினான் நாயகன்.
டவலும் கழன்று.. அவள் உத்திரம் பார்த்த.. சிலையழகுகளை.. தன் மணாளனுக்கு விருந்தாகக் காட்டி நிற்க.. எதைப் பறிக்க.. எதைக் கடிக்க… எதை நிமிண்ட.. எதைக் கொறிக்க என்று தெரியாமல் பழத்தோட்டத்தில் நாவூற நின்றது அணில்க்குஞ்சு!!
“மதுராஹ்… யூ சோ செக்ஸீஈஈ” என்று ஹஸ்கி குரலில் சொன்னவன்… அவளின் அழகையெல்லாம் விழிகளாலேயே அள்ளிப் பருகி நின்றான்.
அவன் வார்த்தைகளில்.. அவன் விழிகள் காட்டும் ஜாலங்களில் சொக்கிப் போய் நின்றிருந்த பெண்மைக்கும்… அன்றைய ஊடலுடன் இணைந்த கூடல் ஞாபகத்திற்கு வந்து போனது.
அன்று தலைவி காதல் உணராத நிலையன்றோ??
அக்கணத்திலும்… அவனோடு கூடி மகிழ்ந்தவனின் ஒவ்வொரு அசைவும்.. ஒவ்வொரு பிடியும்.. அவளுக்கு வலிக்குமோ வலிக்குமோ என்று மென்மையாய் ஆனதையும் அவதானித்தாள் அவள்.
தாபம் கரை கடந்து முட்டி நிற்கும் வேளையில்.. தன் சுகம் மட்டுமே மதியென இயங்கும் ஆண்களுக்கு மத்தியில்.. தன் இன்பத்தை விடவும்… அவளின் வலியை பெரிதாக எண்ணியவனின் அன்பு புரிந்தது இன்று!!
விழிகளில்.. தலைவனுக்கான காதல் கனியக் கனிய.. அவனையே பார்த்திருந்தவனுக்கு.. தன் தலைவனின் விழிகள் தன்னை இரசித்துப் பார்ப்பதில்.. தன்னழகில் பெரும் கர்வம் எழுந்தது அவளுக்கு!!
அவனோ.. உணர்ச்சிகளின் உச்சத்தில், “மதுராஹ்…”என்று பிதற்றிய வண்ணம்.. அவளது மார்புக்குழிக்குள் தன் முகம் வைத்து.. அங்குமிங்கும் திருப்பித் திருப்பி தன் தாபமெல்லாம் உணர்த்தி நின்றான் அவன்.
அக்கணம்… அவளும் அருங்காதல் மல்கிப் பெருக.. வாய் திறந்து, ‘ஐ லவ் யூ அஜய்!!’ என்று வெட்கம் விட்டு காதல் சொல்லத் துணிந்த கணம் அது!!
அதற்குள்… தலைவனும், தலைவியும் காதலில் திளைத்து நிற்பது பொறுக்க மாட்டாத அவனது செல்லும் தான்.. மஞ்சத்தின் மீதிருந்து… ‘குய்யோ முய்யோ’ என்று அலறவாரம்பித்தது.
அப்போதும் சிந்தை கலையாமல்.. அவளின் தாமரை வித்துக்களில் தன் இதழ்களால் கௌவி.. எயிறுகள் படாமல்.. சுவைக்க ஆயத்தமான நொடி!!
இடையறாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது அவனுடைய நவீனரக ஐ போன்!!
அவளில் நின்றும் எழாமலேயே.. தன் நீண்ட இராட்சத கைகள் நீட்டி.. அதனை எடுத்து கட் செய்ய விழைந்தவனின் கண்கள் கண்டது அதில் அழைப்பாளர் ஐடியாக ஒளிரும் நாமத்தினை!!
அது அமெரிக்காவிலிருந்து அழைப்பெடுக்கும்.. ஆயிரம் பில்லியன் கோடி ரூபா ப்ராஜெக்ட்டின்… ஆங்கிலப் பங்குதாரன்!!
இந்தியாவில் தான் இரவாக இருந்தாலும்.. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பத்தரை மணித்தியாலங்கள் வித்தியாசம் இருக்க.. அங்கே தற்போது பகல் அன்றோ??
ஆகையால்.. தன் அமெரிக்கப் பங்குதாரர்.. உரிய நேரத்தில் அழைப்பையெடுத்திருக்க…. அழைப்பை துண்டிக்கத் தோன்றாமல்… அவளை விட்டும் ஒரேயடியாக எழுந்து கொண்டான்.
டவலால் உடலை அரைகுறையாக மூடிய வண்ணம் எழுந்தவளோ… தலைவனின் தோளினைப் பிடித்துக் கொண்டே.. சந்தேகம் கேட்டாள்.
“என்னாச்சு அஜய்?? யாரு ஃபோன்ல?”என்று புருவங்களிடுங்கக் கேட்க… அவனும் தன் கையிலிருந்த செல்லின் திரையைப் பார்த்த வண்ணமே பதிலிறுக்கலானான்.
“ஷிட்.. இதையெப்படி மறந்தேன்.. ஃபாரின் பார்ட்னர் கால் பண்றேன்னு சொல்லியிருந்தார்.. நான் தான் மறந்துட்டேன்” என்று சொன்னவன்…இரசனை கலைந்து.. சிந்தை தெளிந்தவன் போல…அழைப்பையேற்றான்.
மஞ்சத்தில் நின்றும் ஆறரையடி உயரத்துக்குமாக எழுந்து… சிகைக்குள் கையிட்டு… தலைகோதி நின்றவன்..,செல்லில், “யா. அஜய்தேவ் சக்கரவர்த்தி ஸ்பீங்க்..” என்று தொடங்கியவன்.. அங்கிருந்தும் எழுந்து சென்றான் பேசிக்கொண்டே!!
அவளொருத்தி அங்கே இல்லாதது போலவே!!
அவளோ இதயத்தில் பெரும் ஆற்றாமை மீதூற… இரு கைகளாலும் டவலைப் பிடித்தவாறே… தன்னுள் கிறக்கத்தீ மூட்டி விட்டு.. அணைக்கும் பொறுப்புடையவன்.. அணைக்காமல் செல்வதையே… கண்கள் சிவக்கப் பார்த்திருக்கலானாள்.
எனில்,அவனுக்கு கட்டிய மனையாள் முக்கியம் இல்லையா??என்று ஆற்றாமை இதயம் நிறைத்தது.
அட லூசுப்பெண்ணே!! அவன் இப்படி இரவிலும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுவதும்.. அவளுக்காகத் தானே??
அவளை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தானே??? – அவனுக்காக காதல் சுமந்த உள்ளமும் உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்க… அவனின் மீது மையல் கூடியது அவனுக்கு.
பாவம் உரிய வயதில்… தாயின் அன்பில்லாமல் ஏங்கியிருப்பான் குழந்தை!!
அவனுக்காக கழிவிரக்கம் கொண்டு சிந்தித்தவளுக்கு…அவனைத் தன் நெஞ்சாங்கூட்டோடு அணைத்துக் கொள்ள ஆசை மிகுந்தது.
அவனைப் பற்றியே சிந்தித்த வண்ணம் இருந்த போது தான் ஒன்று ஞாபகம் வந்தது. அதாவது அவள் இப்போதெல்லாம் அவனை.. “ஹிட்லர்” என்று அழைப்பதில்லையே??
ஏன்??
‘ஹிட்லர் ஹிட்லர்’ என்று மூச்சுக்கு முந்நூறு தரம் அவனை அழைத்தவள் அல்லவா.. திருமணத்தின் பின் ஹிட்லராக நடந்து கொண்டாள்??
ஹிட்லர் அவன் அல்லன்; அவள்!! அதுவும் பெண் ஹிட்லர்!!
நேற்றிரவு குடித்து சுயநினைவற்று வந்தவனின் சிகையை கோதிய வண்ணமே… இதமாக.. தாயின் அரவணைப்பை ஒத்த அன்போடு.. அவனோடு உறங்கியது ஞாபகம் வர.. அவளின் இதழ்களும் விரிந்தது மென்மையாக!!
எத்தனை நேரம் அவளும் டவலுடனேயே… மோகனச்சிற்பமாய் நின்றிருப்பது??
அமைதியாக எழுந்து சென்று ஆடை மாற்றி விட்டு வந்து அவனுக்காக தூங்காமல், ‘தேமே’ என்று விழித்திருந்தாள் அவள்.
அக்கணம்.. குப்புறத் திருப்பிப் போட்ட, “ட” போல்.. கையை அவளது நெற்றி மீது வைத்து… மறுகையை.. தன் ஒல்லி வயிற்றில் வைத்து… உத்திரம் பார்த்திருந்தவளின் விழிகளும் நேரம் செல்லச் செல்லச் சொக்கத் தொடங்கியது.
அவ்வேளையிலும் கூட.. அவனது திண்ணிய மார்பில்.. தன் தலை சாய்த்து அவனுடைய இதயவோசையை தாலாட்டுப் போல் கேட்டபடியே உறங்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
ஆனால், அவனின் அன்புக் கண்ணாளன்… இறுதி வரை வராமல் போகவே… அவளும் எப்போது கண்மூடி உறங்கிப் போனாள் அவளுக்கும் தான் தெரியாது.
அவன் அழைப்பினை பேசி முடித்து விட்டு.. ஆவலுடன் அறை வந்து சேர்ந்த போது.. முன்னெழில்களைக் காட்டி துயிலும் மனையாளைக் கண்டான் அவன்.
மெல்ல அவளருகே வந்து ஒருக்களித்துப் படுத்து…அவளின் எழில் தோற்றத்தையே காதலாடப் பார்த்திருக்க.. இதயத்தை நயக்க வைத்தது… அவளின் கன்னம் மறைத்து விழுந்திருந்த கார்க்குழல் கற்றைகள்!!
அவற்றை அவள் தூக்கம் கலையா வண்ணம்.. மெல்ல காதுக்குப் பின் ஒதுக்கியவன்…இளஞ்சிவப்பு நிறத்தில் சிவந்திருந்த கன்னங்களின் லாவண்யத்தில் சொக்கிப் போய் நின்றான்.
அதிலும்… இலேசாகத் திறந்திருந்த செவ்விதழ்களில்… தன் முரட்டு அதரங்கள் பதித்திட.. அஜய்தேவ்வின் மனம்.. மையலில் திண்டாடியது.
தன்னையும் மீறி.. அவளை நோக்கி இதழ்கள்.. காந்தமாய் இடம்பெயர.. அவளின் இதழ்களில்… மென்மையாக முத்தம் வைத்தான் அவன்.
விழித்திருந்தவரை கட்டுப்பாடோடு இருந்தவளோ.. ஆழ்ந்துஉறங்கிய பின் தன் கட்டுப்பாட்டை.. மதுராக்ஷியால் காக்க முடியாமல் போனது போலும்.
அவன்.. தன்னை முத்தமிட்டதும்… என்றுமே இல்லாதவாறு உறக்கத்தில் அவளுக்கே தெரியாமல் உருண்டு.. அவன் மாரோடு ஒரு கோழிக்குஞ்சு போல சுருண்டு ஒட்டிக் கொண்டாள் அவள்.
அவள் மேனி சூட்டின் கதகதப்பில்… அவளை அணைத்து.. காதல் யுத்தம் நிகழ்த்திட.. உடல் விறைத்து நிற்க.. ஒருக்களித்துப் படுத்திருந்த நிலையிலே திகைத்து நின்றான் அவன்.
அருகில்.. தன் மாரோடு இன்னும் இன்னும் முகம் பூசி ஒட்டிக் கொள்ளும் அவளின் உடல் தந்த சுகம்.. அஜய்தேவ்வையும் அன்றிரவு அரக்கனாய் மாற்றியது.
அவள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு .. அவனையும் மீறி அணுகப் பார்த்தவனின் கைகள்… தன்னிச்சையாய் எழுந்தது அவளின் பின்னழகோடு தன்னை அணைத்துக் கொண்டது!!
கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாளாதிருந்தான் அவன். அன்றிரவு அவனை சோதிக்கும் ஓர் இரவாகப் போக.. கண்களெல்லாம் சிவந்து பசலை நோய் கொண்டது.
இறுதி வரை உறங்காமல்… தன் தேகத்தை கல்லாக்கிக் கொண்டு… வெளிறிப் போன முகத்துடனேயே.. மொட்டு மொட்டென்று விழித்து நின்றிருந்தான் அவன்.
அவனுடைய டீஷேர்ட்டைப் பற்றியிருந்த அவளது தளிர் விரல்களை நயந்து இரசித்தவன். அவள் கைகளை தன்னில் நின்றும் விடுவித்து விட்டு தூங்கியிருக்கலாம் தான்.
ஆயினும்.. அவள் தூக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சம் விளைந்தது.
ஆகையினால்… அவளின் ஆழ்ந்த அழகிய தூக்கம் கலையக்கூடாதென்று.. ஒரே போக்கில் படுத்திருந்தவனை மேலும் சோதிக்கும் வண்ணம்.. பாதத்தினைத் தூக்கி அவன் மீது இட்டு.. இன்னும் நெருங்கினாள் அவனை.
அவனின் கூராயுதமும் இவளின் உடலை உரச.. ஹப்பப்பா பற்றியெரிய ஆரம்பித்தது ஆண்தேகக் காடு!!
ஒருவேளை அவன் உறங்கி தூக்கத்தில் அவளைக் கட்டியணைத்து.. அவனையும் அறியாமல்.. கற்புக்கு பங்கம் விளைந்து விடுமோ என்று பெரிதும் விசனப்பட்டான் அவன்.
ஆகவே… விடியும் வரை விழித்தே இருந்தான் அவன்.
ஆனால் அவனும் மனிதன் தானே? . அவனுக்கும் உறக்கம் வரத்தானே செய்யும்??
ஒருவாறு தன்னுணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. நீரிழிவு நோய்க்காரன் முன் வைக்கப்பட்ட இனிப்பு மிட்டாயை சாப்பிட முடியாத நிலை அவனுக்கு.
அவன்.. கடைசியில் உறங்கிப் போன போது.. கீழ்வானில் சூரியனின் ஒளிவெள்ளம்.. கடுஞ்சிவப்பு நிறத்தில் பாயும் விடிகாலை ஆகிவிட்டிருந்தது.
மோகனம் – 33
அன்றைய உடற்களைப்பும் அவளை வாட்டியெடுக்கவே… எத்தனை மணிநேரம் தான் உறங்கினாளோ.. என்று கேட்டால் விடை மதுராக்ஷிக்கும் தான் தெரியாது.
அவள் கண் விழித்த போது.. சூரியன் உச்சிக்கு ஏறுவதற்கு இக்கடா அக்கடா என்று ஆகியிருந்த பொழுது அது.
கையையுர்த்தி.. சோம்பல் முறித்துக் கொண்டே.. கைமறைவில் கொட்டாவியொன்றை வெளியேற்றியவாறே.. தன்னருகில் கண்களை ஓட விட்ட போது.. அவன் அருகில் இல்லை.
சின்ன பதற்றம் இழையோட அறையைச் சுற்றிலும் சுழன்று..தன் மன்னவனைத் தேடியது அவள் விழிகள்!!
அவன் கண்ணில் படாமல் போகவே, “எங்கே சென்றிருப்பான்?” என்று எண்ணியபடியே… கீழே இறங்கி வந்தாள் அவள்.
அவனோ ஹாலில்… நவீனரக சொகுசு சோபாவில் உட்கார்ந்தபடி… இன்னும் தன்னுடைய இரவுடையினைக் கூட மாற்றாது.. கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தான்.
அவன் கைகளில்… அன்றைய செய்தி நாளிதழ் அடைக்கலமாகியிருக்க..விழிகள் அதில் கருத்தேயற்று.. அசிரத்தையாகப் பதிந்திருந்தது.
இரவு எல்லாம் உறங்காததன் விளைவாக கண்கள் சிவந்திருக்க.. அவனில் எஞ்ஞான்றும் இல்லாத..ஒரு விரக்தி பாவமும் வதனத்தில் பரவியிருந்தது.
மாடிப்படியிறங்கி வந்தவளின் மெல்லிய காலடி அரவத்தினைக் கேட்டு.. பத்திரிகையில் நின்றும் தலைத் திருப்பிய அஜய்.. தன் மனையாளைக் கண்டு கொண்டான்.
அவனின் வதனம்.. அவளைக் கண்டதும்.. இறுகிக் கறுத்துப் போயிருக்க.. அவளின் வதனம்.. தன்னவனைக் கண்டு விட்ட ஆசுவாசத்தில் பேரழகாய் புன்னகைப் பூத்திருந்தது.
அவனின் இரத்தைப்பசை காணாது விறைத்த வதனம்.. செஞ்சீற்றம் உகுக்கும் விழிகள்… எல்லாமும் அவளின் புருவங்களை மெல்ல இடுங்கச் செய்தது.
அவன் முகத்தில்.. எப்போதும் அவளைக் கண்டதும் தோன்றும் மலர்ச்சி எங்கு போயிற்று இன்று??
அவனுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையோ??
அவ்வெண்ணம் முகிழ்த்த கணம்.. இதயத்தில் தாய்மையாட பதறிப் போனவள்.. அவனை நாடி வந்து.. அவன் கழுத்து நெற்றி கன்னம் எல்லாவற்றையும் தன் உள்ளங்கையாலும், புறங்கையாலும் தொட்டுப் பார்த்தாள் மதுராக்ஷி.
“என்னாச்சு அஜய் கண்ணா..ஏன் முகமெல்லாம் வாடிப் போயிருக்கு?? ஃபீவர் ஏதாவதூஊஊ?”என்று இழுத்த வண்ணம்.. அவனது கழுத்தையும், நெற்றியையும் மாறி மாறித் தொட்டுப் பார்த்தாள் அவள்.
அவளின் தொடுகையும், அவளின் “அஜய் கண்ணா” என்னும் அழைப்பும்.. அவனுள் என்றுமில்லாத இதத்தையும், வருடலையும் பரிசளிக்க… கண்களை மூடித்திறந்தான் அஜய்.
இது இந்த அன்பு, காதல் எல்லாம் உண்மையாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது அவன் மனம்.
கேவலம்.. விவாகரத்துக்காகத் தானே இந்த நடிப்பு எல்லாம்??
மனையாளின் உறைந்த மனம்.. தனக்காக மெய்க்காதலில் உருகி நிற்பது தெரியாமல் எண்ணினான் அவன்.
அவள் தொடத் தொட அவனது வலிய திடகாத்திரமான மேனி இன்னும் இன்னும் விறைத்து நிற்க.. அவனின் தேக விறைப்பு கூட அச்சம் தந்தது அவனுக்கு.
“என்.. என்னாச்சு அஜய்?? ப்ளீஸ் எதுவா இருந்தாலும் வாய் விட்டு சொல்லுங்க?? ஆர் யூ ஓகே??”என்று அவள் பதற்றத்துடன் கேட்டதும். பாய்ந்து வந்தது அவனது உறுமும் குரல்.
“நோ.. ஐ ஆம் நாட் ஓகே.. நாட் ஓகே!!!”என்று அவளின் கையைத் தன்னில் நின்றும் தள்ளிவிட்டு கொண்டே எழுந்து… கண்மடல்கள் சீற்றத்தில் துடிதுடிக்க.. கைமுஷ்டி இறுக்கியவனாகச் சொன்னான் அஜய்!!
தன் கைகளைத் தள்ளி விட்டது.. அவளின் தொடுகையை…ஏற்க மருகி நிற்பது அவனா?
அவனது கத்தலில் இதயம் தூக்கிவாரிப் போட நின்றவள்.. மறுகணம் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, “அஜய்”என்று கேள்வனை அணுகினாள் அவள்.
“நிறுத்து மதுரா.. என்கிட்ட வ்வராஆஆதே” என்று அவன் கையுயர்த்தி.. ‘அவளை அருகே வரவேண்டாம்’ என்று தடுக்க… அவனை நாடி எடுத்து வைத்த எட்டுக்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்று போனது.
“ஏன்?? நான் உங்க மனைவி அஜய்.. நா.. நான் உங்க பக்கத்துல வரக்கூடாதா?”என்று அடிபட்ட குழந்தை போல நெஞ்சம் வலிக்க… தழுதழுத்த குரலில் கேட்டாள் அவள்.
ஏதோ சொல்ல வாயெடுத்தவனுக்கு… கண்கள் கலங்க நின்றிருக்கும் மனையாளின் கோலம் சர்வநிச்சயமாய் வேதனையை அவனுள் கொடுத்திருக்க வேண்டும்.
மதுராவை நிமிர்ந்து பார்த்தவனுக்கு… பேசமுடியவில்லை போலும்.
“ம்மதுராஹ்” என்று அவளை அழுத்தமாக.. அழைத்து விட்டு ஓரிரு நாழிகைகள் பேசாதிருந்தான் அவன்.
என்னாயிற்று இவனுக்கு??
அவனோ , “போதும் மதுரா.. உன் நடிப்பை நிறுத்து… இனியும் பிடிக்காத என்னோடு குழைஞ்சு பழகுற அவசியம் இருக்காது..”என்று சொன்னவனின் கூற்றுக்கள் கேட்டு ஆடிப்போனாள் மதுரா.
அவன் என்ன சொன்னான்?? இவள் என்ன கேட்டாள்?? காதில் விழுந்தவை யாவும் மெய் தான்!!
“ந.. நடி.. ப்.. பா?”என்று தழுதழுத்த குரலில் இருதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு பிளந்தாற் போல வலி ஏற்பட.. இடது கண்ணில் நின்றும் சரேலென ஒரு துளி நீர் வழியக் கேட்டாள் அவள்.
அவனிடம் நெருக்கமாய் நடிப்பதாகவா எண்ணுகின்றான்?
அப்படியானால், அவனுக்கு டீஷேர்ட் அணிவித்து விடும்போது நெற்றியில் முத்தமிட்டது…??
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனுடைய .. கட்டுடலை இரசித்து நெருங்கியமர்ந்தது??
அவனிடம் தன்னை இழக்குமளவுக்கு நேற்றிரவு சென்றது?? எல்லாம் வெளிவேஷம் என்கின்றானா??
நிஜமாகவே.. அவள் காதல்.. அவன் இதயக்கதவை தட்டவில்லையா?? மனதளவில் சோர்ந்து போனாள் மதுராக்ஷி.
அவனோ… பெருமூச்சுடன் கண்மூடித் திறந்தவனாக, “நீ இன்னைக்கே.. இப்பவே… உன் வீட்டுக்குப் போகலாம்.. நீ என்கிட்ட கேட்ட டைவர்ஸ்.. அதான் மணவிடுதலை தாராளமா தர்றேன்… டைவர்ஸ் நோட்டீஸ்.. கூடிய சீக்கிரம் உன் வீடு தேடி வரும்..”என்று கூற.. அவளுக்கு பூமி ஓரிடத்தில் நில்லாமல் நழுவுவது போல உலகமே இருண்டு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
என்ன சொன்னான்?? “டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறானாமா?”
அவளுக்கு கண்களில் நின்றும் கண்ணீர் வழிய முனைய.. அவன் முன்னிலையில் நீர் சிந்தினால் அவமானமாகி விடுமோ என்று அமைதியாக பற்களைக் கடித்துக் கொண்டு…கண்ணீரை அடக்கி நின்றாள் அவள்.
அவனோ தன் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்பது போல வெகுவெகு தீவிரமான மற்றும் உறுதியான குரலிலேயே வாய் திறந்தான்.
“போ… ப்போய் ரெடியாகு மதுரா… நானே உன்னை வீட்டில் கொண்டு போய் விடுறேன்… போகும் போது… இந்த வீட்டில் உனக்குப் பிடிச்ச நகை.. நட்டு.. சேலை… எதுவா இருந்தாலும் எடுத்துக்கலாம்.. எனக்கு எந்தவிதமான ஆப்ஜக்ஷனும் இல்ல…. பீரெடி”என்று சொல்பவனின் வார்த்தைகள் அத்தனையும் குத்தீட்டியாக இதயம் தனைத் துளைத்து பெரும் வலி தந்தது அவளுக்கு.
அவள் பெரிதாக நினைக்கும் சொத்தான அவனே… அவளுக்கு இனி இல்லை என்றான பின்பு.. அவன் தரும் நகை, நட்டு, சேலையெல்லாம் எதற்கு?
அவனே, “போ.. போ” என்று ஓயாது சொல்லும் போது.. அவள் மாத்திரம்.. ‘முடியாது’ என்று சொல்வது.. எத்தகைய அவமானம்??
எனவே… அங்கிருந்தும் செல்வதற்கு முடிவெடுத்தவளாய் அவனிடம்.. “ஓ.. ஓகே நான் போறேன்… இ.. இதோ… இப்போ ரெடியாகிட்றேன்” என்று தொண்டைக்குழியில் அடைப்பட்டிருந்த அழுகையை வெளிக்காட்டாமல் சிரமப்பட்டுக் கொண்டு கூறினாள் மதுரா.
அவன் முன்னால் அழுது விடக்கூடாது .. கூடவே கூடாது!
அது அவளுக்கு பேரவமானம் என்றெண்ணியவள்.. அவனின் மறுபதிலுக்குக் கூட காத்திராமல்.. தடதடவென திரும்பி மாடிப்படியேறி விரைந்தவளின் விழிகளில் வழிந்து கொண்டிருந்தது நீர்!!
இதைக் கண்டவனோ.. தனக்கு புறமுதுகிட்டு மாடிப்படியேறிச் செல்லும் அவனின் ஒருதலைக் காதலி.. சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஓடுவதாகத் தோன்றியது.
வலியோடு கண்கள் மூடி.. சிகைக்குள் கையிட்டு தலைகோதி நின்றான் அவன்!!
உண்மையில் சொல்லப் போனால்.. இது தான் கர்மாவோ??
அவன் நெஞ்சுநிறைய காதலோடு அவளை நாடி வந்த போது உதாசீனப்படுத்தியவளுக்கு… தற்போது அவள் நெஞ்சு நிறைய காதலோடு வரும் போது..அவன் உதறித் தள்ளி உதாசீனப்படுத்துவதும் தாங்க முடியாமல் போனது.
உள்ளே தன்னறைக்கு வந்து.. தாழ்ப்பாளிட்டவளின் இதழில் நின்றும்.. நெஞ்சு பொரும.. கேவி வந்தது அழுகை!!
இந்த ஹிட்லருக்கு விவாகரத்து கொடுக்குமளவுக்கு தைரியமா..??
என்னமோ பெரிதாய் சொன்னானே.. ஹிட்லர் கூட காதலியை உயிருக்குயிராய் காதலித்தார் என்று… இப்போது அந்தக்காதல் எங்கே போயிற்றாம்??
அழுத வெடிப்பழுகையில் கால்கள் துவளத் தொடங்க.. தரையில் முழந்தாளிட்டு.. இரண்டாக மடிந்து அமர்ந்தவளின் கண்ணில் நின்றும்.. அடக்க மாட்டாமல் வழிந்தது உவர்நீர்!!
‘எல்லாம் உன் தப்பு தான் மதுரா.. சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட நடித்தால்.. அவன் இதனையும் நடிப்பு என்று கூற மாட்டானா என்ன.. எல்லாம் உன் தப்பு தான்?’ என்று இடித்துரைத்தது ஹிருதய அங்கம்!!
இனியொரு காலம் இப்படி வருமா?? தூய காதல் நிராகரிக்கப்படும் வலியை அனுபவித்தவனும்.. இது போலத் தான்.. அவள்.. அவனது காதலை மறுக்கும் போதும் உணர்ந்தானா??
அவள்… அழுகையில் கரைந்து உழன்று இருந்த போது.. கதவு தட்டப்படும் ஒலி கேட்கவே.. அழுகையை நிறுத்திக் கொண்டவள்.. கன்னங்களை அழுந்த துடைத்துக் கொண்டே கேட்டாள்,
“யாரு?”என்று.
கதவின் மறுபுறமிருந்து கேட்டது பணிப்பெண்ணொருத்தியின் பவ்யமான குரல்!!
“ஐயா உங்களை கீழே வரச் சொன்னாருமா..”
இப்போது எதற்கு அழைக்கிறான்?? அவள் தான் எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொண்டு விட்டாளே??
“சரி.. வரேன்னு போய் சொல்லு”என்று கதவைத் திறக்காமலேயே.. உள்ளிருந்து பதில் சொல்லி பணிப்பெண்ணை அங்கிருந்தும் அனுப்பி வைத்தாள் அவள்.
‘பெட்டி படுக்கையை எல்லாம் நீ தயாராக்க தேவையில்லை.. உடனே வா… கொண்டு போய் விட்டு வருகிறேன்.பிறகு உன் உடைமைகளை அனுப்புகிறேன்’ என்று சொல்லப் போகிறானா??
விழிகளில் நின்றிருந்த அழுகை மீண்டும் உடைப்பெடுக்கும் போலிருக்கவே… கீழுதட்டைக் அழுத்திக் கடித்துக் கொண்டு.. அமைதியாக தன்னழுகையை நிறுத்த ஆவன செய்தாள் அவள்.
ஆயினும் நிறுத்த மாட்டாமல் உவர்நீர் அது பாட்டுக்கு வழிந்து கொண்டேயிருக்க… எழுந்து குளியலறை நாடிப் போனாள் மதுராக்ஷி!!
வாஷ்பேஸின் முன் நின்று.. தண்ணீரை திறந்து விட்டு.. முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவியவள்.. தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
பின் முகம் துடைத்து..புதுச்சேலையெடுத்து கட்டி. அழுத தடம் வதனத்தில் தெரியாத வண்ணம் இலேசாக டச்-அப் செய்து விட்டு கீழே சென்ற போது… அங்கே ஹாலில் அவளுக்காக காத்திருந்தனர் அவளது கொழுந்தன் விக்னேஷூம், உயிர் நண்பி நிரோவும்!!
இவர்கள் வந்ததற்காகவா அவளை அழைத்தான்..??
பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே அவர்களிடம் சென்ற போது.. தூரத்திலேயே அவளைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில்.. சோபாவை விட்டும் எழுந்தோடி வரலானாள் தோழி நிரோஷா!!
ஓடி வந்து.. தலைவியை இரு கைகள் நீட்டி கட்டியணைத்தவள்.. தன் காதல் கைகூடிய சந்தோஷத்தில் இன்னும் இன்னும் முகம் விகசித்த வண்ணமே வாய் திறந்தாள்.
“எப்படி இருக்க மது?” என்று கேட்க.. அவளின் பார்வையோ அவளையும் தாண்டி… தன்னை அழ வைத்த தலைவனில் பதிந்தது.
அவனோ இதுகாறும் தன் தலைவியிலேயே பார்வை பதித்திருந்தவன்.. தற்போது அவள் தன்னைப் பார்க்கிறாள் என்றானதும் வெடுக்கென்று தலைத் திருப்பி.. தம்பி விக்கியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
அஜய்.. அவள் அணிந்திருக்கும் புதுச்சேலையும், முகத்தில் போட்டிருந்த லைட் மேக்-அப்பும்.. இங்கிருந்தும்.. அவனை விட்டும்… செல்லப் போவதால் விளைந்த மகிழ்ச்சி என்று தப்பாக கற்பிதம் செய்து கொள்ளவும் செய்தான்.
ஆகையால் ஆற்றாமையில் கழுத்து நரம்பு புடைத்தெழ.. தன் மனம் மரணவேதனையை அனுபவிப்பதைக் காட்டிக் கொள்ளாமல் நின்றான் அவன்!!
அவனின் பாராமுகத்தில் மனம் நோவு கொண்டாலும்.. அதை வெளிக்கு அற்பமும் காட்டாமல்.. வலிய.. ஒரு சிறு புன்னகையை தவழவிட்ட படி..
“நா.. நான்.. நல்லாயிருக்கேன் நிரோ.. எதிரெதிர் வீட்டுல இருந்துக்கிட்டு ஒருநாள் கூட இந்தப்பக்கம் எட்டிப் பார்க்காத மேடம்.. என்னிக்குமே இல்லாம.. இன்னிக்கு என்ன இந்தப்பக்கம் திடீர்ன்னு திக்விஜயம்??”என்று வந்த காரணத்தை வினவினாள் அவள்.
நிரோஷாவோ..உடனே வந்த காரியத்தைச் சொல்லாமல்.. மதுராவின் கைப்பிடித்து இழுத்து சோபா அருகே அழைத்து வரலானாள் விடாப்பிடியாக.
“முதல்ல.. வா.. வந்து உட்கார் சொல்றேன்” என்றபடி அவளை இழுத்து வந்து.. நாயகனின் பக்கத்தில் அவன் தொடை இறுக்கி ஒட்டி உரசி நிற்கும் வகையில்.. அமர வைத்தாள் நிரோ.
தன்னவனோடு ஒட்டி அமர வைக்கப்பட்ட தினுசில்.. உள்ளூற ஓர் சங்கோஜ உணர்வு தோன்றி மறைந்தது மதுராவுக்கு.
பிறகு நிரோவும்… தன் அன்புக் காதலன் விக்னேஷோடு ஜோடியாக இணைந்து அமர்ந்து கொண்டவள்.. தன் காதலனின் கரங்களோடு தன் கரத்தை கோர்த்த வண்ணம்.. விக்னேஷை காதல் மல்க இனிமையாகப் பார்த்திருக்கலானாள்.
விக்னேஷின் மையல் பார்வையும்.. தன் காதற்கிழத்தியிலேயே பதிந்திருக்க.. இருவரும் ஒரே வாய் திறந்து சொல்லலானார்கள்!!
“ஒரு குட் நியூஸ்.. நம்ம ரெண்டு பேர் காதலுக்கும்… அம்மா ஓகே சொல்லிட்டாங்க!!”என்று இரு புது காதல் ஜீவிகளும் கோரஸாகச் சொல்லி ஆனந்திக்க… நாயகியின் விழிகளும் விரிந்தது அதே ஆனந்தத்தோடு!!
திருமணங்கள் எல்லாம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறாள் மதுராக்ஷி!! அது போல சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட தோழியின் காதலும் ஒன்று சேர்ந்தது எண்ணி மனதளவில் குழந்தையாகிப் போனாள் மதுராக்ஷி.
ஆனால் என்ன??
சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அவள் திருமணம் தான் மரணம் வரை நிலைக்கும் பாக்கியம் அற்றுப் போனது!!
‘பாவம்.. அவர்களாவது.. கடைசி வரை சந்தோஷமாய் இருக்கட்டும்’ என்று தோன்ற.. இருக்கையில் நின்றும் துள்ளிக் குதித்து எழுந்து.. தன் தோழியைக் கட்டிக் கொண்ட மதுராக்ஷியோ,
“வாவ். கங்கிராட்ஸ் நிரோ” என்று தன் சந்தோஷத்தைப் பகிரலானாள் அவள்.
அவனும் ஏதும்… அவள் அளவுக்கு சந்தோஷத்தை வெளிக்காட்டாமல்… “வாழ்த்துக்கள் விக்கி.. அன்ட் நிரோ”என்ற சிறு வாழ்த்தோடு நிறுத்திக் கொள்ள… அங்கே பெண்களின் பேச்சுக்கா எல்லை உண்டு??
விக்னேஷ் தன்னை சந்தித்தது முதற்கொண்டு.. தனக்காக ஊர்சுற்றுவது நிறுத்தி… வேலைக்கு செல்ல ஆயத்தமானது.. திருந்தியது.. தாயிடம் தில்லாக சென்று பேசியது என அனைத்தையும் ஒன்று விடாமல்… ‘கச்சகச்ச’என்று பேசவாரம்பித்தாள் நிரோ!!
அக்கணம் அனைவர் சப்தத்தையும் நிசப்தமாக்கும் வண்ணம் கேட்டது தம்பி விக்னேஷின் குரல்!!
மதுராவைப் பார்த்தவனாக, “என்ன இருந்தாலும் அண்ணன் மேல நீங்க வைச்சிருக்க லவ் மாதிரி வராது அண்ணி”என்று கூற.. நாயகனின் பார்வையோ மின்னல் மின்னி மறையும் தருணம் போல… அவளில் விழுந்து நிமிர்ந்தது.
அவன் தன்னைப் பார்த்தது மெய்தானா?? இல்லை பிரம்மையா?? என்ற சந்தேகத்துடன்.. தன் தலைவனையே இமைக்காது பார்த்திருந்தான் அவன்!!
“என்னடா உளர்ற..?”- இது நாயகன் அஜய், தன் தம்பியைப் பார்த்து கேட்டது.
தமையனின் கேள்வியே.. அவனுக்கு அன்று நடந்த சம்பவங்கள் ஒன்றும் தெரியாது என்பதை பறைசாற்றியது.
“அண்ணி… நீங்க நடந்தத அண்ணன்கிட்ட சொல்லலையா??” என்று ..தன் அண்ணியைப் பார்த்துக் கேட்டவன்… மதுராக்ஷி சங்கடத்துடன் தலைகுனிந்து கொள்ள.. அன்றைய நள்ளிரவு தாண்டி நடந்த சம்பவங்களை எல்லாம் கூறவாரம்பித்தான் விக்னேஷூம்.
“அன்னைக்கு நய்ட்.. மே பீ.. ஒன்னு.. ஒன்னரை மணியிருக்கும்.. அண்ணிக்கிட்டேயிருந்து ஒரு கால்.. அழுதுக்கிட்டே அண்ணி.. “அஜய் இன்னும் வீட்டுக்கு வரல..”ன்னு சொன்னாங்க”என்று சொல்ல… நாயகனுக்குள்ளும் தான் அதிர்ச்சி!!
என்ன?? அவனுக்காக அழுது கொண்டே தேடினாளா அவனது காதற்கிழத்தி!! தலைவனுக்குள்.. அவள் அழுதிருக்கிறாள். அதுவும் தனக்காக என்றானதும்… உள்ளுக்குள் புதுமாதிரியான காதல் உணர்வுகள் தோன்றப் பார்த்திருந்தான் அவன்!!
அவனின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் கேட்டது தம்பியின் குரல்!!
“உங்கள தேடினேன்ணா… அண்ணே என்னன்னா நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு பீச்ல ஃபுல் மட்டை.. பாவம் அண்ணி எப்படி அழுதாங்க தெரியுமா..?” என்று சொல்ல… அவளுக்குள்ளோ இதயம் நாறுநாறாகக் கிழியும் உணர்வு!!
இத்தகைய மெய்க்காதலையும் கூட.. அவன் காணாமல் பதறி நின்றதையும் கூட.. நடிப்பு என்பானா..??
விக்னேஷ் சொல்லி முடிந்த கணம்… தற்போது வாய் திறந்த அவனின் காதலி நிரோஷா சொன்னவை யாவும்.. ‘இவளுக்கு எப்படி தெரியும்?’என்று தலைவியே குழம்பி நிற்கும் வண்ணம் ஆனவை!!
நிரோஷாவோ, “அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா.?? . உங்கண்ணே ரூம் வாசல்லயே வாமிட் எடுத்துட்டாரு… உங்க அண்ணனையும் க்ளீன் பண்ணி.. அவரோட வாமிட்டையும் க்ளீன் பண்ணி.. அன்னிக்கு நைட் உங்க அண்ணனை குழந்தை பிள்ளை போல பார்த்துக்கிட்டது என் மது தான்”என்று தன் தோழியின் அன்பை.. அத்தனை பெருமிதமாகத் தான் சொல்லிக் காட்டவும் செய்தாள்.
போதாக்குறைக்கு தன் தோழியை பாராட்டும் வண்ணம், “.. நீ எங்கேயோ போய்ட்ட மதுரா.. ரியலி யூ ஆர் கிரேட்” என்று கூற ஆச்சரியத்தில் அகல விரிந்தது மதுராக்ஷியின் நயனங்கள்.
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”என்று நாயகி அதிரந்து கேட்க..
நிரோஷாவோ, “அன்னிக்கு நைட் திறந்திருந்த.. உன் வின்டோ வழியா என் ரூம் வின்டோவிலிருந்து பார்த்தேன்”என்று சொல்ல… தலைவியும் மெல்ல விழிகள் திருப்பி தன் தலைவனைப் பார்த்தாள்.
இதே போல அன்று நிரோ வீட்டுக்கு பிறந்தாள் கொண்டாட.. நடுநிசியில் வந்த போது… நிரோ அறையில் நடந்த அத்தனைக் கூத்துக்களையும்.. அவன் தன்னறையில் பார்த்திருந்ததாகச் சொன்ன ஞாபகங்களெல்லாம் வந்து போனது அவளுக்குள்!
நிரோ வேறென்ன என்ன எல்லாம் பார்த்திருப்பாள்?? நல்லவேளை அந்தரங்கக் கூடல் ஏதுமின்றி.. தலைவன் அவள் மடியில் தலைசாய்த்து உறங்க மட்டுமே செய்தான் அல்லவா??
தோழி, ‘பார்த்தேன்.. பார்த்தேன்’ என்றது பகீர் திகிலைக் கொடுத்தாலும்… அன்று தாம்பத்தியம் இல்லை என்றானதும்… அமைதியாக.. ஆசுவாசமாக தலைகுனித்துக் கொண்டாள்.
அன்றைய பகல் புது காதலர்கள் இருவருக்கும்… தன் கைப்பக்குவத்தில் மணக்க மணக்க சமைத்துப் போட்டு.. அதகளப்படுத்தி… இருவரின் வயிற்றையும், மனத்தையும் திருப்தியாக நிறைத்தே அனுப்பி வைத்தாள் மதுராக்ஷி!!
அவர்களிருவரும் சென்ற பின்பு…கணவனையும், மனைவியையும் பேரமைதி பிடித்துக் கொள்ள… தன் காதல்ப்பெண் ஒரே நாளில் தூரமான உணர்வு அவனுள்!!
அவளை நாடி வந்தவன், “சரி போய் ரெடியாகு.. உன் வீட்டுக்கு கெளம்பலாம்..”என்று கறார்க்குரலில் சொன்னான்.
அவளும் ஒருவார்த்தை சொல்லாமல்.. தன்னறைக்குச் சென்று.. பெட்டி படுக்கையில்.. துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கிளம்ப ஆயத்தமானாள்.
இது நாளும் கணவன், மனைவியாக.. வாழ்ந்தவர்கள்.. இன்றைய நாளின் பிறகு.. அவன் யாரோ?? அவள் யாரோ??..
துணிகளையெல்லாம் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த போது.. அவள் கண்ணில் எதேர்ச்சையாகப் பட்டது.. பெண்பார்க்க அவன் தம்பியும், பெரியன்னையும் வந்த நேரம்.. விக்னேஷின் கையில் அவன் கொடுத்தனுப்பிய பட்டுச்சேலை!!
அதைக் கண்டதும்.. கண்ணைக் கரித்துக் கொண்டு வரவே…’ம்ஹூஹூம்.. அழக்கூடாது.. அழக்கூடாது’ என்று தனக்குத் தானே அறிவுறுத்தியவளாக.. கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்.
அன்று அவள் அணிய மறுத்த ஆடையை.. இன்று அவள் விரும்பி ஏற்று அணிந்த நேரம்.. அதனை விரும்பித் தந்தவனுக்கும்.. விருப்பம் தானில்லை!!
மெல்ல ஆயத்தமாகி கீழே வர.. அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் காரில் ஏற்றினர் அவன் வீட்டு பணியாளர்கள்!!
எல்லாம் எஜமானனின் கட்டளையின் பேரில் நடக்கிறது என்று அவளும் நன்கே அறிந்தே இருந்தாள்!!
அவனோ.. அவளை அவள் வீட்டுக்கு விட்டுவர ஆயத்தமாகி..அச்சிறு இடைவெளியில் ப்ரெஷ்ஷாக தலைக்கு குளித்து.. ஜெல் போட்டு சிகையை ஸ்டைலாக வாரி.. மேனியை இறுக்கிப் பிடிக்கும் ‘மஸிள் பிட்’ டீஷேர்ட்டில் நின்றிருந்தான்!!
அவள் போகிறாள் என்றதும் அத்தனை மகிழ்ச்சியா அவனுக்கு??
தொண்டையில் அடைத்த அழுகையை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு அவனருகே வந்தாள் அவள்.
அவன், “சரி கெளம்பலாமா??” என்று கேட்டது மாத்திரம் தான் தாமதம்.. சீறும் குரலில் வந்தது அவள் குரல்!!
“இவ்வளவு தான் உங்க காதலா?? என்னை விட்டுட்டு வாழ முடியாது.. இதயத்துடிப்பு நின்னுரும்.. செத்துரு.. வேன்னு சொன்னது… எல்லாம் பொய்யா?? இப்போ என் கண்முன்ன நிக்கறது… எ.. என் அஜய் தானா?? ஏ.. ஏன்?? எ.. என் காதல் உங்களுக்கு புரியல?? இல்ல புரிஞ்சும் புரியாத போல நடிக்கிறீங்களா?”என்று கண்ணீர் மல்க தழுதழுத்தவளாகக் கேட்டவளின் வார்த்தைகள் கல்லுக்கும் காதல் உயிர்ப்பிக்கும்!!
ஆனால் அவனுக்கு??
அவன் எங்கேயோ பார்த்தபடி..முதுகுக்குப் பின் கைகளைக் கட்டியபடி நின்றான் அவன்!!
அவளோ ஆற்றாமை நிறைந்த குரலில், “உங்க காதலை புரிஞ்சிக்காம இக்னோர் பண்ணது தப்பு தான்.. உ.. உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்… ஆ.. ஆனா… நீங்க இல்லாம என்னால வாழ முடியாது… கல்யாணம்னாலே வெறுப்புல இருந்த என்னை… கல்யாணம்ன்றது அழகிய உலகம்னு புரிய வைச்சது நீங்க தான்.. உங்க காதல் தான்.. ஆ.. ஆனா… இப்.. இப்போ என்னை விட்டு போறேன்னு நீங்களே சொல்லலாமா?? விவாகரத்துல முடியும் விவாகம்ன்னு நினைச்சிட்டிருந்த.. எ.. என் எண்ணத்தை.. நீங்களே உண்மையாக்கலாமா அஜய்??”என்று அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளும்.. அவளின் அன்பு இதயத்தையே பிரதிபலித்தது.
அவளின் இதயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டியவனோ… அவளின் கல்லெறி போன்ற வார்த்தைகள் பட்டும் உடையாமல்.. பொடுபோக்காகவே நின்றிருந்தான்.
இவளுக்கோ.. கண்ணீர் ஓயாது வழிந்த தினுசில்.. அவன் ரூபம் இரண்டிரண்டாகத் தெரியலானது. இதயத்தை நெருக்கிப் பிடிக்கும் வலியுடனேயே வாய் திறந்தான்.
“அன்னைக்கு நிச்சயதார்த்தம் அப்போ கேட்டீங்களே ஒரு கேள்வி… என்னோட முத்தத்தை உன்னால எப்படி ஏற்க முடிஞ்சதுன்னு.. சத்தியமா அ.. அப்போ எனக்கு பதில் தெரியல அஜய்.. ஆ.. ஆனா இப்போ சொல்றேன்.. அன்னைக்கு உங்க முத்தத்தை ஏற்க காரணம்.. ஐ வாஸ் இன் லவ் வித் யூ…ஸ்டில் ஐ ஆம் இன் லவ் வித் யூ… எனக்கே தெரியாம… என் ம.. மன.. மனசே எனக்குப் புரியாம.. நா.. நான் உங்களை காதலிச்சிருக்கேன் அஜய்!! என் மனசு புரிஞ்ச நேரம்… உங்க ம.. மனசு விட்டுப் போயிருச்சா..?? உ.. உங்க காதல் அவ்வளவு தானா?”என்று இதயம் நொறுங்கிப் போன குரலில் மனையாள் கேள்வி மேல் கேள்வி கேட்க.. காதே கேளாதவன் போல அமைதியாக இருந்தான் அவன்.
அவளோ.. இன்னும் இன்னும் தன் மனத்தினை தெளிவுறுத்த நாடியவளாக, ஓடோடி வந்து அவன் முதுகோடு கையிட்டு அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள் மதுரா.
அவன் தேகமோ இரும்பாய் திண்ணென்று.. இளகாமல் நின்றது.
இவளோ, கண்ணீர் மல்க, “நான் உங்களை லவ் பண்றேன்.. ரொம்ப ரொம்ப…லவ் பண்றேன்.. நீங்க எடுத்துட்டுப் போக சொன்ன.. … உங்க நகை, சேலை… ஏதும் எனக்கு வேணாம்.. எ.. எனக்கு வேணுங்கறதுலாம்.. நீங்க தான்.. நீங்க மட்டும் தான்..டைவர்ஸ் நோட்டீஸ் என்ன.. நீங்க எது அனுப்பினாலும் என் காதல் மாறாது.”என்றவளின் கரங்கள் தன் மன்னவனை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டது.
அவனோ தீச்சுட்டாற் போல.. அவள் கையைத் தன்னில் நின்றும் பிரித்து நிறுத்தியவன்.. ரோபோ குரலிலேயே வாய் திறந்தான்.
“பேசி முடிச்சீட்டியா..?? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?? இல்லேன்னா கிளம்பலாமா?” என்று சுரத்தையற்றவனாக.. காதல் மரித்துப் போன இதயத்தோடு சொல்பவனை என்ன செய்தால் தகும்??
அவனை ஆற்றாமை தாங்கொணாமல் முறைத்துப் பார்த்தவள்.. அடுத்தொரு விநாடி… அங்கு நிற்காமல்.. அவனுக்கு முன்னரேயே நடந்து சென்று காரின் சாரதி ஆசனத்துக்கு பக்கத்து ஆசனத்தில் ஏறிக் கொண்டாள் அவள்.
அவனும் வந்து அமர… அவளது இல்லம் நோக்கிப் பயணமானது கார் வண்டி!!
காரிலிருந்த ரியர்வீயூ கண்ணாடி வழியாக தன் காதல் பெருந்தலைவனையே கண்ணீர் மல்கப் பார்த்தவாறு வந்தவளின் விழிகள்.. காதலை யாசித்தது.
‘என் காதலைப் புரிந்து கொள்’ என்று இறைஞ்சியது.
ஆனால் அவனோ.. அவளொருத்தி அங்கே அமர்ந்திருப்பதை சட்டை செய்யாமலேயே.. வண்டியை ஓட்டலானான். இறுதியாக அவளது வீட்டின் முன்னிலையில் காரை நிறுத்தியவன்,
அவளைப் பாராமல் இறுகிய குரலில், “இறங்கு மதுரா.. இதோ நீ ஆசைப்பட்ட வாழ்க்கை.. உன் வீடு.. உன் சொந்தம்… சந்தோஷமா இரு”என்று சொல்ல… இமைகள் துடித்து.. வெளிவந்தது கண்ணீர்.
‘நீங்க இல்லாம எனக்கு சந்தோஷமே இல்ல… நான் உங்களை விட்டு போக மாட்டேன்’ என்று காரே அதிர கத்த வேண்டும் போலிருந்தது.
ஆயினும், கத்தி என்ன பயன்?? அவன் கேட்கவா கூடும்??
தொண்டைக்குழி ஏறியிறங்க.. அவனைத் திரும்பிப் பார்த்தவள்… இறுதியாக அவனை உச்சாதி பாதம் வரைப் பார்த்து.. தன் மனத்திரைக்குள் என்றென்றும் அழியாத விம்பமாக நிறைத்துக் கொண்டாள்.
பின் சட்டென வாய் திறந்து, “வெட்கம் விட்டு கேட்கறேன்… மனசின் அடியாழத்திலிருந்து கேட்கறேன்… போ.. க முதல்.. உ.. உங்களை ஒரேயொரு வாட்டி கட்டிப் பிடிச்சுக்கட்டா??”என்று ஏங்கிப் போய் கேட்டவளைக் கண்டு… கல் நெஞ்சும் கசிந்துருகி இருக்கும்.
ஆனால் அவன்?? சிவந்த விழிகளுடனேயே நின்றிருக்க.. இவள் தான் அவன் சம்மதத்துக்கு காத்திராமல்.. அவன் அக்குளோடு கையிட்டு.. தாவி இறுக்கி அணைத்துக் கொண்டாள்!!
அவள் அணைப்பு இன்னும் இன்னும் இறுகிக் கொண்டே போனது!!
அவளின் வதனமோ.. அவன் மார்பில் மேலும் மேலும் புதைந்து அவன் தேக மணத்தை.. அங்கமெல்லாம் பூசிக் கொண்டது!!
பின் சட்டென அவனில் நின்றும் பிரிந்து கொண்டவள்… கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. காரை விட்டும் இறங்கி.. ஒரேயடியாகப் போய் விட்டாள்.
இதோ.. போயே போய் விட்டாள்!! அஜய்தேவ்வின் இதயத்திலோ.. அவள் நீக்கம் பெரும் வெறுமையை அளித்தது.
தன் பெட்டியினைக் கூட எடுக்க மறந்தவளாக.. தன் தாய் வீட்டு கதவின் அழைப்பு மணி அடித்து… கண்ணீரைத் துடைத்துக் காத்திருந்த போது.. படக்கென்று கதவு திறக்கப்பட்டது.
உள்ளே தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு நுழைந்த போது யாருமே இல்லை.
“அப்பா.. அம்மா… திவ்யா… யாராவது இருக்கீங்களா?”என்று கேட்டுக் கொண்டே ஹாலில் நுழைந்திருப்பாள் அவள்!!
அங்கே ‘பார்ட்டி பாப்பர்’ வெடிக்கப்பட.. ஒருவகையான மினுங்கும் துகள் அவள் மீது சரமாரியாகக் கொட்டுப்பட.. அவள் தாய், தந்தை திவ்யா, அவன் பெரியன்னை, விக்னேஷ், நிரோ என ஒரு பட்டாளமே.. கோரஸாக,
“ஹேப்பி பர்த்டேஏஏஏ மதுராஆஆஆ”என்று குதூகலித்துக் கத்தலாயினர்.
அவளே அன்று தன் பிறந்தநாள் என்பதை சுத்தமாக மறந்து போயிருக்க..தன்னை சந்தோஷப்படுத்த.. சுவரெல்லாம்.. அலங்கார காகிதங்கள் கொண்டு.. ஆங்கில எழுத்தில், “ஹேப்பி பர்த்டே மதுரா”என்று எழுதி.. அலங்கரித்திருப்பதைப் பார்த்தாள்.
அங்கே வெண்ணிறப் போர்வை போர்த்தப்பட்ட மேசையில் அவள் வெட்டுவதற்காக காத்திருந்தது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட கேக்!!
அவளது தந்தை ராம்கியின் மீது.. கண்ணீரோடு, “அப்பா”என்று அவள் சாய.. அவரோ தன் மகளை நெஞ்சோடு அணைத்துத் தேற்றிய வண்ணம்.. “என்ன பார்க்கற?? இந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்லாம் எப்படின்னா… எல்லாம் அஜய் மாப்ள தான் காரணம்.. அவரோட ஏற்பாடு தான் இது எல்லாம்!! அவர் உன்னை அளவு கடந்து நேசிக்கிறாருமா.. அந்த நேசத்தோட வெளிப்பாடு தான் இது… இப்போ நீ பார்த்துட்டிருக்கறது ”என்று சொல்ல..
தந்தையில் நின்றும் வெடுக்கென்று தலைநிமிர்த்திப் பார்த்தாள் அவள்!!
“அ.. அஜய்யா?” – நம்பாமையில் விழிகள் விரிய.. வார்த்தைகள் தந்தியடித்தது அவனுக்கு.
அவனது பெரியன்னையோ, “ஆமாம்மா.. அஜய்.. அவன் ஏற்பாடு தான் இது எல்லாம்.. நேற்று எங்களையெல்லாம் கூப்பிட்டு.. சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அத்தனையும் பண்ணச் சொல்லி சொன்னதே அவன் தான்”என்று சொல்ல எரிமலையிதயம்.. பனிமலையாகக் குளிர்ந்தது.
ஓரெட்டு வந்து அணைத்துக் கொண்ட தோழி நிரோவோ, “உன் வீட்டுக்கு உன்னைத் தேடி வந்தது எங்க லவ் சக்ஸஸ் ஆன மேட்டரை சொல்ல மட்டும் இல்ல மது.. உனக்கு விஷ் பண்ணவும் தான்.. ஆனா அஜய் அத்தான் தான்… இப்போ ஏதும் சொல்ல வேணாம்.. எல்லாம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு மறைச்சுட்டாரு”என்று சொல்ல..
அவள் அறையில் இருந்த இடைவெளியில் இத்தனையும் நடந்திருக்கிறதா என்று அதிர்ந்து போனாள் அவள்.
எனில், இந்த டைவர்ஸ் நோட்டீஸ்.. முகச் சுணக்கம்.. தேக விறைப்பு.. அவன் வார்த்தைகள் எல்லாம் நாடகம் தானா??
அ.. அவன் காரிலிருப்பது நினைவு வர.. தன் சொந்தங்கள் அனைத்தையும் விட்டு.. தன்னவனை நோக்கி சென்று விட.. திரும்பியிருப்பாள் அவள்!!
அங்கே.. அவளை நோக்கி மலர்ந்த முகத்துடன்.. அவனும் நின்றிருக்க.. அதற்கு மேலும் தாங்கமாட்டாது, “அஜய் கண்ணாஆஆ”என்று கேவிக் கொண்டே போய் அவனைத் தாவிக் கட்டியணைத்திருந்தாள் அவள்.
அவளது ஒல்லி இடையூடு.. அவனது கரங்கள் தழுவியோட.. அவளைக் கொத்தாகப் பற்றித் தூக்கி.. தன்னோடு இன்னும் அணைத்து நின்றவன்.. அவள் காதோரம், “ஹேப்பி பர்த்டே மதுரா”என்றான்.
சுற்றி நின்ற சொந்தங்களின் விழிகளெல்லாம்… காதலைக் கண்டு சொக்கிப் போய்.. ஆகர்ஷிப்புடன், ‘எந்நாளும் இதே அன்புடன் வாழ்க’ என்னும் வாழ்த்தொலியுடன் பார்த்திருக்கலாயினர்.
அவள் அணைத்த தருணங்களிலெல்லாம் தன் அணைப்பை உதாசீனப்படுத்திய அவன் செயலில்.. சர்ரென்று மூக்குக்கும் மேலே கோபம் ஏறியது அஜயின் முன்கோபக்குயிலுக்கு!!
அவனைத் தள்ளி விட்டு நிமிர்ந்தவள்.. அவன் இதயத்துக்கு சரமாரியாகத் தாக்கிய வண்ணம், கண்ணீருடன்.. “ஒரு பொண்ணு நான்.. வெட்கம் விட்டு அணைச்சிக்கவா கேட்கறேன்.. அப்போ கூட கல்லு போல நின்னேல்ல… யூ.. யூஊ.. ப்ராடு” என்று சொல்ல.. அவளின் தாக்குதலைத் தாங்கியவாறே வாய்விட்டு நகைத்து நின்றான் அவன்.
“ஹஹஹா…உன்னோட பழகிய தோஷம் தான்டீ… காருக்கே என்னமா ஆக்ட் கொடுத்தே நீ.. அதில் பாதியாவது இல்லேன்னாலும்.. அணுவாவது… உன் புருஷன் எனக்கு வரவேணாம்..”என்றவன்..அரக்கனாய் தன் கைகள் நீட்டி.. காதல் பெண்ணை மீண்டும் அடக்கிக் கொண்டான் நெஞ்சாங்கூட்டில்!! சுகமாக!! இனிமையாக!!
அவளுக்குள் பாந்தமாக அடங்கியவளும் கண்ணீரோடு, “அதுக்காக… இப்படி தான் உசுரோடு விளையாடுவீங்களா?? நீங்க.. என்னை விட்டுப் போனா… நான் இந்நேரம் வீட்டுக்கு வந்து தப்பான முடிவெடுத்திருந்தா?”என்று மெல்லிய குரலில்.. அவன் மட்டும் அறியும் வண்ணம் கேட்டவளின் வார்த்தைகளில் வெலவெலத்துப் போனது அவன் தேகம்!!
“மதூ… நான் தான் உனக்கு ஹிட்லராச்சே.. ஹிட்லர் சாகும் போது.. காதலியோடவே இறந்தவரு… அப்போ உன் ஹிட்லர்…மட்டும் எப்படி உன்னை கைவிடுவேன்னு நினைக்கலாம்…. உன்னை எந்த சந்தர்ப்பத்திலும் கைவிட மாட்டேன்டீ…” என்றவனின் அணைப்பு இன்னும் இன்னும் இறுக்கமானது.
நிமிடங்கள் போவது தெரியாமல் இருவரும் காற்றுக்கு கூட இடங்கொடுக்கா வண்ணம் அணைத்தாவறு நிற்க.. இருவரையும் கலைத்தது அவளின் தங்கை திவ்யாவின் குரல் தான்.
“ம்கம்.”என்று குரலை கனைத்தவளோ, “மாமா.. அக்கா… கேட் பண்ணனும்.. உங்க ரொமான்ஸ ரூமுக்குள்ள வைச்சுக்கங்க. இப்போ கேக் கட் பண்ண வர்றீங்களா??”என்று கத்திக் கேட்ட குரலில் தான் சிந்தனை கலைந்தார்கள் இரு காதல் பறவைகளும்.
மெழுகுவர்த்தி அணைத்து.. கேக் வெட்டி.. தலைவனுக்கும், தந்தைக்கும் இதர சொந்தங்களுக்கும் ஊட்டி நின்று.. அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டம் அதகளப்பட்டது.
ஆனால்.. அவனின் விழிகளும், அவள் விழிகளும் எங்கிருந்தாலும் தழுவிக் கொண்டேயிருக்க… கைகளும் இணைந்திருந்தன.
காதல் கைகூடிய சுகத்தில் இருவரும்… வருங்காலத்தின் மனமகிழ்வை எண்ணி திளைத்துப் போயினர்.
Монтаж септика: доступные цены и высокое качество работ
септик под ключ [url=http://septik-pod-kluch-moskwa.ru/]http://septik-pod-kluch-moskwa.ru/[/url] .
super sis very intersting waiting for next epi
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌