ATM Tamil Romantic Novels

பச்சை அரக்கனின் நீலப்பாவை

26 
ஹர்ஷா எழுந்ததும் ராகவனையும் திவ்யாவையும் தேடி போக ரவியோ “கண்ணா தாத்தாகூட வாக்கிங் போகலாம் வா உனக்கு என்னோட ப்ரண்ட்சை அறிமுகப்படுத்தி வைக்குறேன்” என்று கூட்டிச் சென்று விட்டார் மகனும் மருமகளும் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பிக்கட்டுமென்று.
 
இருவருமே கண்விழித்து விட்டனர் முதலில் யார் விலகுவது என்று இருவருமே அணைத்துக்கொண்டு படுத்திருந்தனர். “இப்படியே கட்டிபிடிச்சி படுத்திருக்க  நல்லாயிருக்கு திவி” என்று அவள் மார்பில் முகம் புதைத்ததும் அவளுமே அவனது சிகையை கோதிக்கொண்டு “ம்ம் இருக்கலாம் ஆனா இப்போ உங்க மகன் உங்களை தேடிட்டு இருப்பானே” என்றாள் இதழ் விரிப்பு சிரிப்புடன்.
 
“மணி என்னாச்சு?” தலையை தூக்கி கடிகாரத்தை பார்த்தான் மணி ஏழு ஆகியிருக்க “என் மகன் எழுந்திருச்சிருப்பானே அப்பாவை காணோம்னு தேடியிருப்பான் எப்படி மறந்தேன்?” என்று புலம்பியே விட்டான் ராகவன். 
 
வேகமாக எழுந்தவன் குளியலறைக்குள் சென்றவன் குளித்து விட்டு வந்து டீசர்ட் பேண்ட்டோட கதவை திறந்து வெளியே வந்த நேரம் தான் ரவியுடன் ஹர்ஷா வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
 
“அப்பா” என்று ஆசையாக தாவிய மகனை தூக்கி மகனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான் குழந்தையும் ராகவன் கன்னத்தில் முத்தமிட்டு “அம்மா இன்னும் எழுந்திரிக்கலையா பேட் கேர்ள் அம்மா இல்லப்பா” என்று அன்னையை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.
 
ராகவனோ “அம்மாவுக்கு இன்னிக்கு ஆபிஸ் லீவ் கண்ணா அதான் தூங்குறாங்க” என்றான் மனைவிக்கு வக்காலத்து வாங்கி.
 
திவ்யாவோ தலைக்கு குளித்து வெளியே வந்தவள் மகன் பேசியதை கேட்டு “ஏன் டா எத்தனை நாள் நீ காலையில 9 மணி வரை தூங்கியிருக்க அப்போ நீயும் பேட் பாய்தான் டா” மகனின் முதுகில் செல்லமாய் அடிபோட “அப்பா வலிக்குது” என்று மகன் போலி அழுகை அழுக “ஏய் என் மகனை அடிக்காதே” என்று அறைக்குள் ஓடினான் ராகவன்.
 
“இருங்க வரேன் உங்களை” கணவனின் பின்னால் ஓடினாள் திவ்யா மூவரையும் கண்ட பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். ராகவன் குடும்பமாய் வாழ ஆரம்பத்து விட்டான்.
 
கிருஷ்ணா தன் கொள்கையிலிருந்து மாறவேயில்லை அதே சமயம் ஜானவியின் மேல் காதலும் குறையவில்லை. 
 
வாணியோ தினமும் போன் செய்து “ஏய் கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லுடி மாப்பிள்ளை வீட்ல கேட்குறாங்க! நீ யாரையாவது லவ் பண்ணுறியா சொல்லுடா அந்த பையனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் மகளின் விருப்பம்தான் முக்கியமென்று.
 
ஜானவி எப்படி தான் இப்படி ஒரு உறவில் இடியாப்ப சிக்கலில் சிக்கியிருக்கேன் என்று கூறுவாள். வாணியிடம் தினம் ஒரு கதை சொல்லி தப்பித்துக்கொண்டே வந்தாள் ஜானவி.
 
கிருஷ்ணா இல்லாத நேரம் பார்த்து சோபியாவோ ரவீந்திரனுடன் ஜானவியை பார்க்கச் சென்றாள்.
 
ஜானவியோ அப்போது தான் குளித்து விட்டு சாப்பிட அமர்ந்தாள். “ஏய் மாயக்காரி வெளியே வாடி” என்று சோபியா சத்தம் போட்டதில் சாப்பிடாமல் எழுந்து வந்தவள் ரவீந்திரனை கண்டு “வாங்க அங்கிள் என்ன சாப்பிடறீங்க?” என்றாள் மெல்லிய குரலில்.
 
“எங்க வீட்டுல இருந்துட்டு எங்களை வானு கூப்பிடுறீயா இந்தியாவுக்கு எப்போ கிளம்புற? சொல்லுடி” என்று ஜானவியை அடிப்பதை போல வந்து நின்றாள்.
 
“நான் எதுக்கு இந்தியா போகணும்!  கிருஷ்ணாவும் நானும் கணவன் மனைவியா வாழந்திட்டிருக்கோம்! நான் கிருஷ்ணாவை விட்டு போகமாட்டேன்!” என்றாள் உறுதியாக தைரியத்தோடு.
 
“ஓ நீயா போகமாட்ட அப்போ என் மாமா போகச் சொன்னா போயிடுவல்ல”
 
“அவரு என்னை எப்பவும் அவரை விட்டு போகச் சொல்ல மாட்டாரு! நானும் அவரை விட்டு போகமாட்டேன்!” என்றவளை
 
“ஏன்மா போகமாட்ட! என் மகன் உன் கழுத்துல தாலி கட்டியிருக்கானா இல்லை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்கானா! நீ எங்க கிட்ட இருக்க சொத்துக்கு ஆசைப்பட்டுதானே என் மகனோட ஒட்டிட்டு இருக்க இந்தா ப்ளாங் செக் உனக்கு எவ்ளோ வேணா பணம் எழுதிக்கோ ஆனா என் மகனை விட்டு போயிடு” என்றார் நாக்கில் நரம்பில்லாமல் பணக்கார திமிரை காட்டினார்.
 
ஜானவிக்கோ அழுகையும் ஆத்திரமாய் வந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு “நான் பணத்துக்காக உங்க மகனோட வாழலை. அவரும் நானும் காதல் செய்து தான் வாழுறோம் எங்களை பிரிக்க நினைக்காதீங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள். 
 
ரவீந்திரனும் சோபியாவும் ஜானவியை பார்க்க போகிறார்களென தெரிந்ததும் அம்பிகாவும் அங்கே வந்துவிட்டார்.
 
“என்னங்க நீங்க பண்றது பெரிய தப்பு நம்ம மகன் பிடிவாத குணம் தெரியும்ல அவன் இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழட்டும். இந்த பொண்ண பார்த்தா நல்ல குடும்பத்தை சேர்ந்த குணமான பொண்ணா இருக்கா! அவ நம்ம பையன் கூட வாழட்டும் சோபியாவுக்கு நம்ம நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்” என்றார் நெகிழ்ச்சியுடன் அம்பிகா. 
 
“ரொம்ப நன்றி அத்தை நீங்களாவது என்னை புரிஞ்சிக்கிட்டீங்களே” என்று அழுகையுடன் அம்பிகாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் ஜானவி.
 
சோபியாவோ “அத்தை அப்போ நான் உங்க மருமகள் கிடையாதா” என்று பழைய வசனத்தையே பேசவும் “அம்மாடி சோபியா நீ எப்பவும் என்னோட மருமகள்தான் ஆனா என் மகனுக்கு பிடிக்காம நீ எப்படி அவன் கூட வாழ முடியும்… ஒருமித்த தாம்பத்யம்தான் வாழ்க்கைக்கு ஆதாரமா இருக்கும். பிடிக்காம கல்யாணம் செய்தா வாழ்க்கை நரகம் ஆகிடும் தங்கம்” என்று சோபியாவை சமாதானம் பண்ண பார்த்தார்.
 
டைனிங் டேபிள் மேல் இருந்த கத்தியை எடுத்து கையை லேசாக கீறிக்கொண்டு “எனக்கு மாமா வேணும் மாமாவை கல்யாணம் பண்ணி வைங்க நான் எப்படியும் அவர் மனசுல இடம் பிடிப்பேன்! இப்போ இவ இந்த வீட்டை விட்டு  வெளியே போகணும் இல்லனா கையை வெட்டிக்குவேன்” என்று கையில் கத்தியை அழுத்தியதும் கத்தியை பிடுங்கி போட்டார்.
 
“ஏய் பொண்ணு என் மகனை விட்டு போயிடுடி என் மருமகள் உயிர்தான் முக்கியம் நாளைக்கு நீ இங்க இருக்க கூடாது” என்று ஜானவியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே தள்ளி விட்டு கதவுக்கு பூட்டு போட்டு விட்டு “நீயெல்லாம் நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா இப்பவே என் மகன் வாழ்க்கையை விலகி இரு” என்று அவளை அவமானப்படுத்தி வேடிக்கை பார்த்தார். 
 
கம்பெனியில் வேலை செய்யும் நபர்களின் பார்வை ஜானவியை ஊசியாய் குத்தியது. இந்த நேரம் அவர்களை எதிர்த்து பேச முடியாமல் போனது அவளால். கிருஷ்ணா தன் கழுத்தில் தாலி கட்டியிருந்தால் ரவீந்திரனை தன்னை அவதூறாய் பேசுவதை கேட்டுக்கொண்டு நிற்க முடியுமா அவளால். இப்போது அவளுக்கு கிருஷ்ணாவின் மீதுதான் கோபம்.
 
இரவீந்திரனோ “இப்பவே நீ  இந்தியாவுக்கு கிளம்பு! இப்படி என் மகன் கூட வாழறதுக்கு என்ன பேரு தெரியுமா” என்று ஜானவியின் கையை அழுத்தி பிடித்ததும் ரவீந்திரன் மீது பெரும்கோபம் கொண்டு கண்ணகியாய் மாறி “என் கையை பிடிக்க நீங்க யாரு அதுவும் உங்க மகன் இல்லாத நேரம் பார்த்து என்கிட்ட கலாட்டா பண்ணுறீங்களா?” என்று ரவீந்திரன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். 
 
“ஏய் எங்க மாமாவையே அடிச்சிட்டியாடி” என்று ஜானவியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வர அவளோ “உன்னையும் அடிப்பேன்டி” என்று சோபியாவையும் அடித்துவிட்டாள். 
 
“பாரு அம்பிகா இவள் நல்ல குடும்பத்து பொண்ணா இருந்தா ஒரு ஆம்பிளையை அடிப்பாளா தரங்கெட்ட குடும்பத்து பொண்ணா இருப்பா போல” என்றதும் அங்கிருந்த கல்லை எடுத்து ரவீந்திரன் மேல போடப்போனதும் அம்பிகா குறுக்கே வந்து விழுந்தவர் நெற்றியில் கல்பட்டு இரத்தம் பீறிட்டது.
 
வெளியேச் சென்றிருந்த கிருஷ்ணா தன் வீட்டின் முன் கூட்டமாய் நிற்பதை பார்த்து வந்தவன் கண்டது அம்பிகாவின் நெற்றியில் ரத்தம் வழிந்துக் கொண்டிருப்பதை தான். அவர் மயக்கத்திற்குச் சென்றிருந்த நேரம் “பார்த்தியாடா இவளை… இவ வேண்டாம்னு நான் தலையால அடிச்சிக்கிட்டேனே! இப்ப பாரு உன் அம்மா மேல கல்லை தூக்கி போட்டுட்டா சண்டாளி!” என்றார் இதுதான் சமயம் மகனை தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்று சதி திட்டத்தோடு பேசினார்.
 
ரவீந்திரனை முறைத்தவன் “ஏன் ஜானவி இப்படி பண்ணின! எனக்கு ஒரு வார்த்தை போன் போட்டிருக்கலாமே! என்னோட குடும்பம் வந்திருக்காங்கனு இப்படியா ஒரு உயிரை கொல்ல பார்ப்ப” என்று அவன் அம்மாவின் தலையில் இரத்தம் வருவதை தாங்க முடியாமல் என்ன பேசுகிறோமென்று தெரியாமல் பேசி விட்டு தன் தாயை தூக்கிக்கொண்டு காரில் ஏறிவிட்டான்.
 
பெரிதாக அடியில்லை என்றாலும் “இரத்தம் நிறைய போயிருச்சு அவங்க கண்விழிக்க நேரம் ஆகும்” என்று டாக்டர் சொல்லிவிட கிருஷ்ணா ஜானவி மீது கோபத்தில் இருந்தான் நடந்த முழு விசயம் அறியாமல்.
 
கிருஷ்ணாவின் பக்கம் உட்கார்ந்த சோபியாவோ “மாமா ஜானவி அத்தையை மட்டும் அடிக்கல மாமாவையும் அடிச்சிட்டா என்னை இதோ கத்தியால லேசா கீறிவிட்டிருக்கா பாருங்க மாமா” என்று சோபியா தன் கையை காட்டினாள். 
 
கிருஷ்ணாவோ “நான் பார்த்துக்குறேன் எனக்கு எல்லாம் தெரியும்! நீ இங்கிருந்து கிளம்பு சோபியா” என்று அதட்டல் போட்டிருந்தான்.
 
“மாமா நான் போகமாட்டேன் அத்தை கண்ணு முழிக்கட்டும்” என்று வீம்பாக ரவீந்திரன் பக்கம் உட்கார்ந்துக் கொண்டாள்.
 
ஜானவியோ கையில் தாலியுடன் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றாள். நான் கிருஷ்ணாவோட பொண்டாட்டி இல்லைனு என்னை காசுக்காக வந்தவனு பேசினாங்கல்ல அவ முகத்துக்கு முன்னால என் கழுத்துல கிருஷ்ணா கையால தாலியை கட்டிக்கணும் என்று தனக்கு துணைக்கு ராகவனையும் திவ்யாவையும் அழைத்துச் சென்றாள் ஜானவி.
 
இங்கோ ஐசியுவினுள் அம்பிகாவை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா. 
 
எல்லா மகன்களுக்கும் தாய் என்றாலே தனி ப்ரியம்தானே. கிருஷ்ணா மட்டும் விதிவிலக்கா என்ன?
 
ஹாஸ்பிட்டல் வந்ததும் கார் கதவை  திறந்தவள் வேகமாக நடக்க ராகவனோ “திவ்யா சீக்கிரம் வா” என்றவன் “ஜானுமா ஒரு நிமிசம் நில்லுமா அவசரப்படாதே” என்றதும் அவள் நின்றாள்.
 
“நீ கோபத்துல இருக்க ஜானு அவங்க உன்னை பேசியது மகா தவறுதான் கிருஷ்ணாவுக்கு அம்பிகா அம்மா மேல பாசம் அதிகம். கோபத்துல எடுக்கற முடிவு சரியா இருக்காது. கிருஷ்ணா எப்பவும் உன்னை விட்டுத்தரமாட்டான். அவன் மேல் நம்பிக்கை வச்சுதானே அவனோட வாழ ஆரம்பிச்ச கொஞ்சம் பொறுமையா இரு நான் அவன் கிட்ட பேசுறேன்” என்றதெல்லாம் ஜானவி காது கொடுத்து கேட்கவில்லை.
 
“இல்ல அண்ணா என்னோட காதல் வம்சி மனசை மாத்தி அவர் என் கழுத்துல தாலி கட்டுவாருனு நம்பிக்கையோட இருந்தேன். ஆனா அவர் என்னோட காதலுக்கு மதிப்பு கொடுக்கல! இப்பவே அவர் என் கழுத்துல தாலி கட்டணும்! அவர் தாலி கட்ட மாட்டேன்னு சொன்னா அவர் கூட நான் வாழ மாட்டேன்” என்று ஆவேசத்துடன் பேசியவள் அம்பிகாவை வைத்திருந்த ஐசியுவுக்குச் சென்றாள். ஜானவி வருவதை பார்த்த சோபியாவோ கிருஷ்ணாவை பார்த்தாள். அவன் ஐசியுவை விட்டு நகரவில்லை. 
 
வேகமாக ஜானவி முன்னே நின்றதும் ஜானவியோ கோபத்தில் இருந்தவள் “தள்ளுடி” என்று அவளை தள்ளிவிட “எங்க போற எங்கத்தைகிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்குறேனு எங்க மாமா சத்தியம் செய்து கொடுத்துட்டாங்க. நீ இன்னிக்கே இந்தியாவுக்கு போறதுக்கு டிக்கெட் எடுத்து என்கிட்ட கொடுத்துட்டாரு” ப்ளைட் டிக்கெட்டை அவள் கையில் திணித்ததும் ஜானவிக்கு நம்பிக்கை போனது. 
 
வாழ்க்கையில் சந்தேகம் வந்தால் சந்தோசம் விலகி விடுமென்று ஜானவி அறியாது போய்விட்டாள்.
 
சோபியாவை தள்ளிவிட்டவள் கிருஷ்ணாவின் முன்னே வேக மூச்சுகளை இழுத்து விட்டு நின்றவளை “இப்ப எதுக்கு இப்படி மூச்சு வாங்க வந்து நிற்குற வீட்டுக்கு போ நான் வரேன்” என்றான் இறுக்கமான குரலில்தான்.
 
“ஏன் நான் இங்க இருக்ககூடாதா? உங்க சொந்தம் என்னை ஏத்துக்கமாட்டாங்களா? இல்லை என் கூட வாழ வந்த பொண்ணு இவனு சொல்லறதுக்கு உங்களுக்கு வாய் வரலையா! இல்லை என்னை ஏமாத்த பார்க்குறீங்களா! இதோ சோபியாவை கல்யாணம் பண்ணிக்குறேனு சத்தியம் பண்ணிக்கொடுத்தீங்களா! அப்போ நான் யாரு இவளை கல்யாணம் பண்ணிட்டு என்னை ஆசை நாயகியா வச்சிக்கலாம்னு பிளான் போடுறீங்களா! நீங்களும் உங்க குடும்பமும்… என்னை காசுக்கு வந்தவனு உங்கப்பா வாய் கூசாம கேள்வி கேட்குறாரு நான் சும்மா பார்த்திட்டிருக்கணுமா உங்கம்மாவை நான் வேணும்னு கல்லால அடிக்கலை என் கற்பு மீது பழி போட்டு பேசும்போது என் கண்ணுக்கு துஷ்டன் போலத்தான் தெரிஞ்சாரு உங்கப்பா, அதான் அவரை அடிக்க கல்லை தூக்கிப்போட்டேன் உங்கம்மா வந்து விழுந்துட்டாங்க நான் எதையும் வேணும்னு பண்ணலை” என்றாள் விரக்தி குரலில்.
 
கிருஷ்ணாவோ “இப்ப எதுவும் பேசாத ஜானு நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்! என் மேல நம்பிக்கை வைச்சு போ!” என்றான் பல்லைக்கடித்து.
 
“நான் போகமாட்டேன் இதோ இந்த தாலியை கட்டுங்க! என் கழுத்துல தாலி இருந்திருந்தா உங்கப்பா என்னை காசுக்கு வந்தவனு சொல்லியிருப்பாரா. கிருஷ்ணாவோட பொண்டாட்டினு காட்டணும் தாலி கட்டுங்க” என்று தாலியை கிருஷ்ணாவிடம் கொடுத்தாள்.
 
அவனோ “பைத்தியம் போல உளறாதேடி எங்கப்பா பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்! நீ வீட்டுக்கு கிளம்பு” தாலி கட்டமாட்டேன் என்று சொல்லாமல் சொன்னவனின் முன்னால் பத்ரகாளியாய் மாறிவிட்டாள்.
 
“ஆக என்னை எல்லாரும் உங்களுக்கு கீப்பா பார்க்கணும் இல்ல… இப்ப சொல்லுங்க என்னை உங்க பொண்டாட்டினு இங்க இருக்க எல்லார் முன்னாடியும் சொல்லுங்க! இல்ல என் கழுத்துல தாலி கட்டுங்க அப்போதான் போவேன்! நீங்க தாலி கட்ட முடியாதுனு மறுப்பு கூறினா நம்ம உறவை முடிச்சிட்டு இந்தியா கிளம்பிடுவேன்” என்றாள் உறுதியான குரலில்.
 
கிருஷ்ணாவுக்கு ஒரு நிமிடம் கைகள் நடுங்கியது. அவளது கையை பிடித்து இழுத்து தூணுக்கு பக்கம் நிறுத்தி “என்னை நீ நம்பணும்டி நான் உனக்கு மட்டும்தான் சொந்தம் யார் என்ன சொன்னாலும் நம்பிடுவியா! இப்போ என் அம்மா உயிர்க்கு ஆபத்து இல்ல. ஆனா கண்ணு முழிக்கணும்! வீட்டுக்கு வந்து பேசிக்கலாம் ஜானு! நீ எப்பவும் எனக்கு சொந்தம்தான்” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தவனின் மார்பில் கை வைத்து தள்ளியவள் “இல்ல யார் கண்ணு முழிக்கணும்னு எனக்கு கவலை கிடையாது இப்பவே நீங்க தாலி கட்டுங்க! உங்கம்மா எழுந்து சோபியா கழுத்துல தாலி கட்டுனு சொன்னா நீங்க கட்டிடுவீங்க… அப்புறம் நான் எப்பவும் உங்களுக்கு ஆசைநாயகிதான் இல்ல” என்று இதழ் வளைத்து இகழ்ச்சியாக சிரித்தவளின் கையை அழுந்தப்பற்றியவன் 
 
“ஆமாடி நீ எனக்கு ஆசைநாயகிதான்! நான் அதோ அங்க நிக்கிறால சோபியாவைதான் கல்யாணம் பண்ணிக்குவேன் போடி இங்கிருந்து” என்று அவனும் ஈகோவில் அவளது கையை பிடித்து வந்து ஹாஸ்பிட்டல் வெளியே விட அவள் தடுமாறி கீழே விழுந்து விட்டாள்.
 
திவ்யாவோ ஓடிவந்து ஜானவியை தூக்கி விட்டதும் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே “நீ என்னை ஏமாத்திட்டல்ல பணக்காரன் புத்தியை காட்டிட்டல!! திவ்யா நீ சொன்ன இந்த உறவு உனக்கு ஒத்து வராதுனு! பாவி பாவி நான் கேட்கலையே இவன் மேல முழுசா நம்பிக்கை வச்சேனே! என்னை ஆசை நாயகினு சொல்லிட்டானே” என்று தாறுமாறாய் நெஞ்சில் அடித்துக்கொண்டவள் “என் பாவம் உன்னை சும்மா விடாதுடா” என்று சாபம் விட்டு அழுது மயங்கியவளை தாங்கிக் கொண்டாள் திவ்யா.
 
ராகவனோ “என்னடா இதெல்லாம் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு பாவம்டா ஜானவி தாலி கட்டுறதுல என்ன கஷ்டம் உனக்கு” என்று ராகவன் அவனை முறைத்துக்கொண்டு நின்றான்.
 
கிருஷ்ணாவோ “எப்ப அவளுக்கு என்மேல நம்பிக்கை இல்லையோ அப்பவே அவ என் லைஃபை விட்டு தூரமா போயிட்டா இனி அவ எனக்கு வேண்டாம்” என்றான் அழுத்தமான வார்த்தைகளுடன்.
 
அப்போதுதான் கண்விழித்த ஜானவியின் காதில் தான் அவனுக்கு வேண்டாமென்ற வார்த்தையை கேட்டதும் “நீயென்னடா என்னை வேண்டாம்னு சொல்றது இப்போ சொல்றேன் நீ எனக்கு வேண்டாம்” என்று பொது இடம் என்று பாராமல் கிருஷ்ணா மார்பில் அடிக்க துவங்கினாள். அவனோ அவளது கையை எடுத்து விட்டு “என்மேல் நம்பிக்கை இல்லாதவ எனக்கு வேண்டாம் போடி” என்று ஹாஸ்பிட்டலுக்குள் சென்றுவிட்டான் ஈகோ பிடித்த மனிதன் போல.
 
ராகவனும் திவ்யாவும் ஜானவியை வீட்டுக்கு அழைத்து வந்து அவளை சமாதானம் செய்தனர். அவளோ “அண்ணா எனக்கு இந்தியாவுக்கு டிக்கெட் போட்டு கொடுங்க இங்க இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்” என்று தலையை பிடித்துக்கொண்டாள்.
 
கண்ணில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அடுத்தநாள் காலையில் இந்தியா பிளைட்டில் ஏறியிருந்தாள். 
 
இந்தியா சென்று வீட்டுக்குச் சென்றவளிடம் வாணி “மாப்பிள்ளை பார்த்துட்டேன் ஓ.கேனு சொல்லுடி” என்று மகளை கெஞ்சுதலாய் கேட்க. அவளோ கிருஷ்ணாவின் மேல் இருந்த கோபத்தில் சரியென்று கூறிவிட்டாள். தன் தாயிடம் உண்மையை கூறினால் அவரால் தாங்க முடியாதென தன்னை பற்றிய உண்மையை வாணியிடம் மறைத்து விட்டாள். ஆனால் தன்னை கல்யாணம் பண்ணிக்க போற அஜயிடம் மட்டும் தான் வாழ்ந்த வாழ்க்கையை கூறி உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருந்தா மட்டும் பண்ணிக்கோங்க என்று கூறியிருந்தாள் அவன் தன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளமாட்டான் என்ற நம்பிக்கையில் ஆனால் அஜயோ எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டான்.
 
இன்னும் கல்யாணத்திற்கு நாள் இருக்க கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டாள் ஜானவி. அதிரடியாக கிருஷ்ணாவின் வரவை அவள் எதிர்பார்க்கவில்லை. 
 
இப்போது அன்று தன்னை வேண்டாமென்று ஒதுக்கி விட்டவன் மறுபடியும் நீ வேண்டுமென்று அடமாக வந்து நிற்பவனை எதுவும் பண்ண முடியாமல் அமர்ந்திருந்தாள் ஜானவி. 
 
“அம்மாடி ஜானவி கைக்கு மெஹந்தி வைச்சு விட வந்திருக்காங்க” என்ற வாணியின் குரலில் கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்தாள் ஜானவி.

2 thoughts on “பச்சை அரக்கனின் நீலப்பாவை”

  1. Услуги сантехника: устранение поломок в системе водоснабжения
    сантехник на дом [url=https://www.vyzov-santehnika-spb-52.ru/]https://www.vyzov-santehnika-spb-52.ru/[/url] .

  2. Как сэкономить на стоматологических услугах в Минске?, предлагаем вам узнать.
    Стоматолог цены [url=http://www.total-implant.ru/]http://www.total-implant.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top