ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

3. மோக முத்தாடு அசுரா

“ஏ பொண்ணுஊஊ” என்று கத்திக்கொண்டே சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினார் பொம்மன்.

சீட்டில் தலைசாய்த்து கண்மூடியிருந்தவன் எழுந்து நெட்டி முறித்து “என்னாச்சுண்ணா? என்று கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான்.

“ஒரு பொண்ணு நம்ம வண்டி முன்னால விழுந்திருச்சு தம்பி” என்றார் படபடப்புடன்

“இறங்கி என்னன்னு பாருங்க ..இந்தப் பொண்ணுங்களுக்கு கண்ணே முன்ன வச்சு பார்த்து வர தெரியாது.. ரோட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்து கார்ல விழ வேண்டியது”.. என்று பெருமூச்சு விட்டு கதவை திறந்து வெளியே வந்தான் சிம்மன்.

அங்கே வஞ்சிக்கொடி கீழே விழுந்து மயங்கியிருந்தாள்.. பொம்மன் தண்ணீர் பாட்டிலுடன் சென்று வஞ்சிக்கொடி முகத்தில் தண்ணீரை தெளித்தார்.

மெதுவாக கண்விழித்துப் பார்த்த வஞ்சிக்கொடி.. “அச்சோ நான் உயிரோட தான் இருக்கேனா”..என்று எழுந்து அமர்ந்தாள்..

முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க அதில் ரத்தம் வேறு கசிந்துகொண்டிருந்தது.

“ஸ்ஸ்.. ஐய்யோ கையில இரத்தம் வருது… வலிக்குதே அண்ணா.. பார்த்துட்டே இருக்கீங்களே.. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போங்களேன்..” என்று மூக்கை சிந்தி முந்தானையில் துடைத்தாள்.

“நல்ல வேளை நான் பிரேக் போட்டுட்டேன்.. எதுக்குமா இவ்ளோ வேகமா ஓடிவந்த ” என்று அவளைப் பார்த்து பரிதாபமாக கேட்டார் பொம்மன்.

“என்னை இரண்டு தடிமாட்டு பசங்க துரத்திட்டு வந்தாங்க.. நான் அவங்க கண்ணுல மிளகாய் பொடி தூவிட்டு ஓடி வந்துட்டேன்.. அவங்க வரதுக்குள்ள என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போங்களேன்” என்று குய்யோ முய்யோவெனெ அடைமழை போல பேசிக்கொண்டிருந்தாள் வஞ்சிக்கொடி.

பெண்ணவளின் முகத்ததை ஆழந்து நோக்கினான் சிம்மன்.. அவள் கண்ணில் உண்மை தெரிகிறதாவென்று “அண்ணே பர்ஸ்ட்யெட் பாக்ஸ் எடுத்துட்டு வந்து அந்த பொண்ணு காயத்துக்கு மருந்து போட்டுவிடுங்க” என்று கூறியவன் அவள் பக்கம் சென்று அவள் எழும்ப கைகொடுத்தான்.

ஒரு முறை அவன் முகம் பார்த்தவள் அவனது கட்டுமஸ்தான உடம்பைக் கண்டு.. உடம்பே கர்லா கட்டை போல இப்படி இருக்கே இவர் கையை நாம பிடிச்சா அவ்ளோதான்.. என்று திகைத்துப்போய் “இல்லிங்க நானே எழுந்துப்பேன்” என்று அடிபடாத கையால் ஊனி எழுந்து பக்கத்திலிருந்த மைல் கல் மேல் அமர்ந்து அவள் ஓடி வந்த திசையை பார்த்தபடி பயந்து கண்ணை அல்லி பூ போல விரித்து வைத்து சிமிட்டி சிமிட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் கைகொடுக்கவில்லை என்றதும் சிம்மனுக்குள் இருந்த சிங்கத்துக்கு கோவம் சீறிகொண்டு வந்தது..

“போடி பாவம் பார்த்து கைகொடுத்தேன் பாரு என்னைச் சொல்லணும்” என்று மார்புக்கு குறுக்கே கைகட்டி காரில் சாய்த்து நின்று ‘எத்தனை பெண்களை பார்த்தாச்சு.. அதில் இவள் என்ன இனம்’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.. அவள் மீது சினம் இருந்தாலும் அவளது குழந்தை முகத்தை மீண்டும் பார்க்கத் தோன்றியது.

சித்திரை மாசத்து நிலவு போல அவள் முகம் .. வில் போல வளைந்த புருவம்.. அவள் அழுததில் கன்னம் ரோசாப்பூ போல சிவந்திருந்தது.. பச்சைநிற பாவாடையும் ரோஸ்நிற தாவணியும் போட்டிருந்தாள்.. காற்றில் வேறு தாவணி விலகி அவளது சிற்றிடை அவன் கண்ணுக்கு காட்சியளித்து.

மொத்தத்தில் அவளது சித்திரமேனியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.. இது தவறு என்று அவன் புத்திக்கு தெரியாது போனது.. சிம்மன் மனதை ஏதோ மாயம் செய்தாள் அவள்.. வர்மன் இல்லாத போன நாள் முதல் எந்தப் பெண்ணையும் தேடியும் போவதில்லை.. தேடி வந்தவர்களையும் பணம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டான்.. இவளைப் பார்த்ததும் நம்ம மனசு மீண்டும் அலைபாயுது.. என்று எண்ணியவன் அவளை பார்க்க கூடாதென்று வேறுபக்கம் திரும்பி நின்று கொண்டான்.

பொம்மன் வஞ்சிக்கொடி முழங்கையில் இரத்தத்தை மெல்ல துடைக்க.. “ஸ்ஆஆ” என்று அவளது இதழ் அசைய..

அவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்து “இந்தக் காலத்து பொண்ணுங்க சிறு அடியை கூட தாங்க முடியறது இல்ல” என்று வாய்க்குள் முணகினான்.

“சின்ன காயம்தான்மா” என்று காயத்துக்கு மருந்திட்டு கட்டு போட்டுவிட்டு

“எந்த ஊருமா நீயி எதுக்கு இவ்ளோ வேகமா ஓடிவந்த” என்று பொம்மன் கேட்க.

“என் பேரு வஞ்சிக்கொடி.. நான் பக்கத்து ஊரு.. எங்க ஐய்யனும், ஆத்தாளும் இல்ல.. பட்டணத்துல எங்க மாமா இருக்காங்கன்னு இங்க வந்தேன்.. பஸ்ஸை விட்டு இறங்கி ஓரமா நடந்து வந்திட்டிருந்தேன்.. ரெண்டு காவாலி பையலுக என்னைப் பார்த்து ஏதோ பேசினாங்க.. நான் அவங்கள பார்த்து பயந்துதான் ஓடிவந்து உங்க கார்ல விழுந்துட்டேன்” என்று அவள் சிறிய குழந்தை போல இதழ் பிதுக்கி அழுதாள்.

“ஏய் சும்மா அழாதே” என்று அவளை பெருங்குரலெடுத்து அதட்டிய சிம்மன் “அண்ணே அவ அட்ரஸ் எங்கன்னு கேளுங்க… பஸ் ஏத்தி விட்டிரலாம்” என்றவன் மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்து
“இனிக்குட்டி ஸ்கூல் விடுற நேரமாச்சு நாம போகணும்” என்று காருக்குள் ஏறப் போக.

“சார் சார் என்னை எங்க மாமா வீட்ல விட்டிருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்” என்று தரையில் உரசிய பாவாடையை தூக்கிக்கொண்டு சிம்மன் பக்கம் வந்து நின்றாள் வஞ்சி கொடி

“ஏதோ கார்ல வந்து விழுந்தன்னு காயத்துக்கு மருந்து போட்டு விட்டோம்.. இப்ப உன்னை மாமா வீட்ல கொண்டு போய் விடச்சொல்ற.. அதெல்லாம் முடியாது.. இந்தா பஸ் ஸ்டாப் பக்கத்துலதான் இருக்கு போய் அங்க நில்லு” என்று முகத்தை பாறை போல வைத்து பேசி காருக்குள் ஏறினான்.. அவன் ஒன்றும் கல் மனசுக்காரன் இல்ல.. நம்ம கூட ஒரு பொண்ணு காருக்குள்ள வந்தா அவளுக்குத்தான் கெட்ட பெயர் வரும்மென்று தான் அவளிடம் எரிந்து விழுந்தான்.

பொம்மனுக்கு, வஞ்சிக்கொடியை பார்த்து பாவமாக இருந்தது..

“தம்பி ஸ்கூல் விட இன்னும் அரைமணி நேரம் இருக்கு.. இந்தப் பொண்ண இறங்கி விட்டுட்டு போயிடலாம்.. எங்காவது வழி தெரியாம மாட்டிக்கிட்டா வம்பா போய்டும்” என்று மென்று விழுங்கி பேசிவிட்டார்.

“அண்ணே அதெல்லாம் சரி பட்டு வராது வந்து காரை எடுங்க” என்று கூறிவிட்டான்..

அப்போது அவளை துரத்தி வந்த நபர்கள் “டேய் அந்தக் குட்டி அங்க நிற்குறா பாரு” என்று அவள் பக்கம் வந்தனர்

அதில் ஒருவன் “டேய் இப்படியே திரும்பி ஓடிடலாம்.. அந்தக் கார் சிம்மனோடது.. மாட்டினா சங்க அறுத்துப் போட்டிருவான்” என்று வந்த வழியே ஓடினர்.

சிம்மன் ஓடுபவர்களை பார்க்கத் தவறவில்லை.. வஞ்சிக்கொடியை பார்க்க அவளோ எச்சில் விழுங்கிக் கொண்டு என்னையும் கூட்டிட்டுப் போயிடுங்களேன்.. என்று சிம்மனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரியான இம்சையா இருப்பா போலவே.. வந்து கார்ல ஏறு” என்று கூறியதும் தான் தாமதம் கதவை திறந்து ஏறி அமர்ந்துகொண்டாள்.

“எந்த ஏரியா அட்ரஸ் சொல்லும்மா” என்று பொம்மன் கேட்க.

அது தெரிஞ்சா நான் ஏன் உங்க கார்ல ஏறுறேன்.. என்று முணகல் போட்டாள்

“ஏதே” என்று சிம்மன் தலையைத் திருப்பி முறைத்தான் ..

“அ.அது இங்கண பக்கத்தான் இந்தாங்க அட்ரஸ்” என்று ஒரு பேப்பரை சிம்மன் கையில் கொடுத்தாள் கண்ணை உருட்டி கொண்டு ..

காகிதத்தை வாங்கிப் படித்து பார்த்தவன் “சென்னையில இந்த அட்ரஸ் எனக்கு தெரிஞ்சு எதுவும் இல்லையே” என்றவன் பேப்பரை பொம்மன் கையில் கொடுத்தான்.

இந்த அட்ரஸுக்கு போய் பார்ப்போம் என்று சொல்லி காரை எடுத்தார்.

அவள் சொன்ன அட்ரஸ் முன் காரை நிறுத்த அங்க சுடுகாடு தான் இருந்தது.. சிம்மனுக்கு விறு விறுவென்று கோவம் வந்து விட்டது.

“ஏய் என்ன பொய்யான அட்ரஸ் சொல்லி எங்களை ஏமாத்த பார்க்கிறாயா” என்று காரை விட்டு இறங்கி பின்னாடி டோரை திறந்து அவள் கையை பிடித்து “முதல் நீ காரை விட்டு இறங்கு.. பொம்பளை பிள்ளைன்னு பாவம் பார்த்து வண்டியில ஏத்தினது தப்பா போச்சு” என்று அவளை இறக்கி விட்டான்

“ஓஓ” வென்று அழுக ஆரம்பித்துவிட்டாள்..

“பொம்மண்ணா இவளோட இம்சையாயிருக்கு என்னன்னு கேளுங்க” என்று பல்லைக்கடித்து நின்றான்

“சார் என்னை மிரட்டாதீங்க.. எங்க மாமா இந்த அட்ரஸ்தான் கொடுத்தாங்க” என்று கண்ணைத் தேய்து கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்தாள்.

“அம்மாடி, உன் மாமா பொய்யான அட்ரஸ் கொடுத்திருக்காங்க”

“அய்யோ நான் இப்ப எங்க போறதுன்னு தெரியலையே..ஆத்தா என்னை இந்த பட்டணத்துல வந்து நிற்கதியா நிற்க வச்சிட்டியே” என்று கையை விரித்துபுலம்பித் தீர்த்தாள் .

“தம்பி பொம்ள பிள்ளை தனியா விட்டுட்டுப் போக வேணாமே” சிம்மனின் பதிலை எதிர்பார்த்து நின்றார் பொம்மன்

“அண்ணே இவள என் பேரை சொல்லி ஹாஸ்டல் சேர்த்து விட்டுட்டு வாங்க ” என்றவன்.

போனை எடுத்து இன்னொரு காரை வரச்சொல்லியவன் “நான் பாப்பாவ ஸ்கூல்லயிருந்து கூட்டிட்டுப்போறேன்.. இந்த பொண்ண பணத்தை கட்டிவிட்டு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு வாங்க” என்று கூறிவிட்டான். அவனது ஆள் காருடன் வர வஞ்சிக்கொடியை திரும்பி பார்க்காமல் காருக்குள் ஏறிக்கொண்டான்.

சிம்மன் சென்றதும் அவன் கார் சென்ற திசையை பார்த்திருந்தவள் கண்ணைத்துடைத்து காருக்குள் ஏறினாள் .
பொம்மன் சிம்மனுக்கு தெரிந்த ஹாஸ்டலுக்கு கூட்டிச்சென்று அங்கேயிருந்த வார்டனிடம் சிம்மனுக்கு தெரிஞ்ச பொண்ணு.. என்று கூறி வஞ்சிக்கொடியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வஞ்சிக்கொடியிடம் “பத்திரமா இருமா ஏதாவதுன்னா போன் போடு” என்று சிம்மனின் விசிட்டிங்கார்ட்டை கொடுத்தார் பொம்மன்

வஞ்சிக்கொடிக்கு இங்க தங்குவது பிடிக்காமல் இருந்தது.. வீட்டு அட்ரஸை அவள் கையில் தர சிரித்த முகத்துடன் வாங்கிக்கொண்டாள்.

“சரிமா நான் கிளம்புறேன்” என்று பொம்மன் கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார்.. சிம்மன் அப்போது தான் இனியாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் வந்தான்..

“இனியா குட்டி அம்மாகிட்ட போங்க” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து உள்ளே அனுப்பினான்..

“அம்மாஆஆ” என்று வீட்டுக்குள் இனியா ஓடிவிட்டது.

“அண்ணே அந்த பொண்ண ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டிங்களா.. நமக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லித்தானே சேர்த்தீங்க” என்று கழுத்தை தேய்த்துக்கொண்டு கேட்டான் சிம்மன்

“ஆமா தம்பி நமக்கு வேண்டப்பட்ட பொண்ணுதான் சேர்த்துவிட்டிருக்கேன்.. சரி தம்பி எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் கிளம்புறேன்” என்று பொம்மன் கிளம்பிவிட்டார்

சிம்மனின் கண் முன்னே வஞ்சிக்கொடி அழுவது போல தெரிந்தது.. “ம்ஹும்” என்று தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

இனியா ஹாலில் சோபாவில் உட்கார்ந்து பால் குடித்துக்கொண்டிருந்தது.. பால் குடித்து முடித்து டம்ளரை டிபாயில் வைத்துவிட்டு “சிம்மா நாம தோட்டத்துல விளையாட போலாமா” என அவன் காதருகே போய் ரகசியமாக கேட்க.

“ஏய் ஹோம் ஓர்க் பண்ணாம எங்கயும் போகக்கூடாது” என்று மிரட்டியபடி கையில் காபியுடன் வெளியே வந்தாள் முல்லைக்கொடி.

“அண்ணே இவ ஹோம்ஓர்க் முடிக்காம நீங்க எங்காவது அவள விளையாட கூட்டிட்டுப்போனீங்க அவ்ளோதான் பார்த்துக்குங்க” என்று சிம்மனுக்கு காபியை கொடுத்தாள்.

காபியை வாங்கிய சிம்மன் இனியாவை பார்க்க.. மூச்சை உம்மென்று தூக்கி வைத்திருந்தது.. காபியை குடித்துவிட்டு குழந்தையை தூக்கி மடியில் வைத்து “என்னோட தங்கப்பாப்பால நீ இப்ப அம்மாகிட்ட கொஞ்ச நேரம் ஹோம்ஓர்க் பண்ணிட்டு வா.. அப்புறமா உன்னை சித்தப்பா விளையாட கூட்டிட்டுப்போறேன்” என்று குழந்தையை தாஜா செய்து அவனே ஹோம் ஓர்க்கை செய்ய பேக்கை எடுத்து டைரியை எடுத்து அதில் இருந்த ஹோம்ஓர்க்கை பார்த்து செய்ய சொல்ல.. இனியாவும் வேகமாக செய்ய ஆரம்பித்தது.. இருவரையும் பார்த்து மெல்லிய புன்னகையுடன் சமையல்கட்டுக்கு சென்றுவிட்டாள் முல்லைக்கொடி.

ஹோம் ஓர்க் முடிப்பதற்குள் சிம்மனுக்கு போன் கால் வந்துகொண்டேயிருந்தது.. “அதை முடிச்சிரு நான் காலையில வந்து பார்க்குறேன்” என்று போனை வைத்து குழந்தையுடன் சேர்த்து ஹோம்ஓர்க்கை முடித்தான்.

“சித்தா விளையாட போலாம்” என்று சிம்மன் முகத்தை ஏக்கமாக பார்த்தது இனியா..

நோட்புக்கை எடுத்து பேக்கில் போட்டுக்கொண்டே “இதோ இனியா குட்டியும் சிம்மனும் விளையாட போலாம்” என்று குழந்தையை தூக்கி கொண்டு தோட்டத்துக்கு பக்கம் சென்றான்..வீட்டுக்குள்ளே மினி பார்க்கே வைத்திருந்தான் சிம்மன்.. சர்க்கலில் ஏறி விளையாட.. “பார்த்துடா” என்று குழந்தையின் மீதே கண்வைத்துக்கொண்டிருந்தான்.

முல்லைக்கொடி தட்டில் இட்லியை போட்டு எடுத்து வந்து குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

இனியாவும் விளையாடிக்கொண்டே சாப்பிட்டிருக்க ஒரு உருவம் தோட்டத்திற்குள் எட்டிக்குதித்தது.. அது சிம்மனுக்கு காதுக்கு கேட்காமல் போகுமா.. எந்நேரமும் அருவாளை முதுகுக்கு பின்னே சொருகியிருப்பான் வீட்டுக்குள் வந்ததும் அறையில் எடுத்து வைத்துவிடுவான்.. தற்காப்புக்காக எப்போது இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து “முல்லை பாப்பாவ தூக்கு” என்றவன் அந்த உருவம் பக்கத்தில் சென்றான்.

2 thoughts on “மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top