ATM Tamil Romantic Novels

5. மோக முத்தாடு அசுரா

5. மோக முத்தாடு அசுரா 

சிம்மன் வஞ்சியை வசைபாடி சென்றது கூட தெரியாமல்.. அவன் இடுப்பை பிடித்த பிடியில் பிடித்து வைத்த பிள்ளையாரை போல அப்படியே நின்றுவிட்டாள் பெண்ணவள் .

‘அச்சோ என் இடுப்பு போச்சு..இப்படி என்னோட இடுப்பை அழுத்தி பிடிச்சு சேதாரம் பண்ணிட்டாரு..’ என்று அவளின் இடுப்பை பார்க்க சிம்மன் கைப்பட்ட இடம் சிவந்து கன்றிப்போயிருந்தது.. ‘அச்சோ இப்படி சிவந்து போற அளவுக்கு பிடிப்பாங்களா என்ன? சரியான முரடனா இருப்பாங்க போல..’ என்று இடுப்பை பிடித்துக்கொண்டு நடந்து சமையல் கட்டுக்குள் சென்றாள்.

முல்லை இன்று ஏனோ ஆழந்து உறங்கி விட்டாள்.. எழுந்து பார்க்க மணி ஆறரை ஆகியிருக்க.. பாயை பார்க்க பாயில் படுத்திருந்த வஞ்சி அங்கேயில்லை.. எங்க போயிருக்கும் இந்தப் பொண்ணு அண்ணா திட்டி வெளிய அனுப்பி இருப்பாரோ என எழுந்து குழந்தைக்கு தலையணையை முட்டுக்கொடுத்துவிட்டு குளியலறைக்கு சென்று முகம் கழுவி அறைக்கு வெளியே வந்து பார்க்க சமையல் கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்க.. சமையல் கட்டுக்கு வெளியே நின்று பார்க்க.. அடுப்பில் சாப்பாடு கொதித்துக் கொண்டிருந்தது.. பக்கத்து அடுப்பில் பருப்பு வேகும் வாசம் முல்லையின் நாசியை சென்றடைய வஞ்சிக்கொடி பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தாள்.

முல்லை குளித்துவிட்டு தான் சமையல் கட்டுக்குள் வருவாள்.. இன்று வஞ்சிக்கொடியை காணாது பதட்டப்பட்டு சமையல் கட்டில் வந்து பார்க்க அவள் சமையல் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.. “வஞ்சி” என்ற அழைப்பில் திரும்பி பார்த்த வஞ்சிக்கொடி..

“அக்கா வாங்க காபி சாப்டறீகங்ளா.. காபி போட்டு வச்சிட்டேன்.. சமையல் வேலை பாதி ஆச்சு.. இதோ காய் தாளிச்சு விட்டா முடிச்சிடும்” என்று பேச்சுக்கொடுத்து கொண்டே காபியை ஊற்ற டம்ளரை எடுத்தாள் ..

“ஏய் இரு இரு எண்ணெயில போட்ட கடுகாட்டம் பொறிஞ்சு தள்ளுறயே” என்று இதழ் விரித்து சிரித்தாள் முல்லை ..

சிம்மன் உடற்பயிற்சி முடித்து வீட்டுக்குள் வந்ததும் பேச்சு சத்தம் கேட்டு சமையல்கட்டுக்கு வந்தவன் வெகு நாட்கள் கழித்து சிரிக்கும் முல்லைக்கொடியை பார்த்து நிம்மதி வந்தது அவனுக்கு.

“முல்லை இனி பாப்பா எழுந்துட்டாளா? எனக்கும் ஒரு கப் காபி கிடைக்குமா?” என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்குச் சென்றான்.

“அச்சோ நான் இன்னும் குளிக்கலையே.. வஞ்சிக்கொடி நீ அண்ணாவுக்கு காபி கொண்டு போய் குடுத்துறு.. இனிக்குட்டி எழும்பி பார்க்கும்போது நான் அவ முன்னே இருக்கணும் இல்லைனா அழுக ஆரம்பிச்சுடுவா” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள் ..

“அச்சோ அந்த சிடு மூஞ்சி சித்தப்பனுக்கு நான் காபி கொண்டு போகணுமா” என்று கன்னத்தில் கை வைத்துவிட்டாள்..

“முல்லை காபிஇஇ” என்று சிம்மன் ஏலம் போட.

‘இருய்யா கொண்டு வரேன் சும்மா பறங்காதீங்க’ என்று காபியை சூடு செய்து டம்ளரில் எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் வர.. அங்கே சிம்மன் வியர்வை வழிய பனியன் நனைந்து அவனது படிக்கட்டு தேகம் தெரிய அன்றைய பேப்பரை படித்துக்கொண்டிருந்தான்.. சிம்மனது ஆம்சை பார்த்து ஆத்தாடி பழனி படிக்கட்டு போல இருக்கே..’ என்று ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நின்றிருந்தாள் வஞ்சி .

பேப்பரை படித்தப்படி இருந்த சிம்மனோ “இங்க வச்சிட்டு போம்மா” என்று நிமிர்ந்து பார்த்தான் ..

பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு நிற்பதை பார்த்து.. “ஏய் பட்டிக்காடு ஒழுங்கா பாவாடையை இறங்கிவிட்டு நில்லு.. நாலு பேர் வந்து போற இடம் இப்படி சோ காட்டிட்டு இருக்காத காலங்காத்தாலயிருந்து ஏன் இப்படி வந்து என்னோட உசிர வாங்குற” என்று வல்லென காய்த்தான் வஞ்சியிடம்.

“இங்க பாருங்க சார்.. எங்க கிராமத்துல எல்லாம் கெண்டைக்கால் தெரிய பாவாடையை ஏத்திக்கட்டி தான் வேலைசெய்வாங்க.. நான் இது பட்டணம்னு கொஞ்சமா பாவாடையை தூக்கி சொருகியிருக்கேன் ம்க்கும்” என்று இதழை கோணி விட்டு காபி டம்ளரை டீபாயில் டக்குன்னு வைத்துவிட்டுச் சென்றாள்.

‘எல்லார் கண்ணுலயும் நான்தான் விரலவிட்டு ஆட்டுவேன்.. இவ என்னடானா என்னையே தூக்கி சாப்பிடுவா போலிருக்கே.’ என்று வஞ்சி கொண்டு வந்த காபியை எடுத்து குடிக்க.. காபியின் சுவை அருமையாக இருக்க.. ‘ம்ம் நல்லாத்தான் காபி போட்டிருக்கா’ என்று குடித்து முடித்தான்.

முல்லை அறைக்குள் போக இன்னும் இனியா உறங்கிக்கொண்டிருக்க.. குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து குளிக்கச்சென்றாள்.. அவள் குளிக்கச்சென்றதும் போர்வையை விட்டு எழுந்த இனியாவோ

“சிம்மாஆஆ எங்கயிருக்க” என்று சத்தம்போட்டுக் கொண்டே வெளியே ஓடி வர.. வஞ்சியின் மேல் மோதி நின்றது.. அவள் இரவு வந்தது குட்டிக்கு தெரியாது தானே..

தாடையில் கை வைத்து “நீங்க யாரு? எங்க வீட்டுக்கு எதுக்கு வந்துருக்கீங்க” என்று குட்டிக்கண்ணை அங்கும் இங்கும் உருட்டி உருட்டி கவுனை தூக்கி பிடித்துக்கொண்டு கேட்க.

“நான் இந்த வீட்டுக்கு புதுசா வேலைக்கு வந்திருக்கேன் ராஜாத்தி.. என்னோட செல்லப்பாப்பா புதுசா பூத்த ரோஜாப்பூ போல இருக்கே” என்று இனியா கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனாள் ..

“டோன்ட் டச்.. புதுசா வந்து இருக்க ஆன்ட்டி கிட்ட எல்லாம் நான் முத்தம் வாங்கமாட்டேன்” என்று தலையை ஆட்டி சொல்லிவிட்டு “சிம்மாஆஆ” என்று ஹாலுக்கு ஓடியது.

‘சரியான வாலுக்குட்டியாஆஆ இருக்கும் போல’ ..என்று காபி டம்ளரை எடுக்க ஹாலுக்குப் போக.

“அங்கே யானை யானை அம்பாரி யானை” என்று இனியா பாட்டு பாடிய படி சிம்மனின் முதுகில் ஏறி விளையாண்டுகொண்டிருந்தது..

அட கொஞ்சம் நேரம் முன்ன நம்மகிட்ட எரிஞ்சு விழுந்த மனுசனா இப்படி குழந்தைகிட்ட கொஞ்சி விளையாடுறாரு.. என்று இருவரையும் அதியசயமாக பார்த்துக்கொண்டிருந்தாள்

தலையில் துண்டுடன் வெளியே வந்த முல்லைக்கு இனியாவும், சிம்மனும் விளையாடும் சத்தம் கேட்டுவிட்டது.. இனி இவள ஸ்கூல்க்கு கிளப்பின மாதிரிதான்.. என்று சலித்துக்கொண்டு சயைமல் கட்டில் எட்டிபார்க்க அவள் அங்கே இல்லையென்று தெரிந்து.

“வஞ்சிக்கொடி எங்கம்மாயிருக்க”

இருவரின் பாசப்பிணைப்பை இரசித்து பார்த்திருந்தவள் முல்லையின் குரல் கேட்டு சித்தம் வந்து “ஹா இதோ வரேன்க்கா”என்று சமையல்கட்டுக்கு சென்றாள்

“பாப்பாக்கு பால் ஆத்திக்கொடுக்கணும் பால் அடுப்புல வைக்கிறயா.. நான் அவள குளிக்க வைச்சு கூட்டிட்டு வரேன்.. அவள இன்னும் கொஞ்சம் நேரம் விட்டா விளையாண்டு கிட்டு ஸ்கூல்க்கு போகலைன்னு அடம் பிடிப்பா” என்று வஞ்சியிடம் கூறிவிட்டு ஹாலுக்கு வர.. இருவரும் இன்னும் யானை சவாரி விளையாட்டை நிறுத்தவில்லை..

முல்லைக்கு நேற்றிரவு ரவுடி வீட்டுக்கு வந்த போது இனியா அந்த ரவுடியை கல்லால் அடிக்கலாம்… என்று கூறயதிலிருந்து அவள் மனம் தவித்துக்கொண்டிருந்தது.. எங்கே மகளும் கணவனை போல மூர்க்கத்தனமாக மாறிவிடுவாளோ என்று .. இதில் இனியா வேறு சிம்மனின் மீது காட்டும் பாசம் அவளுக்கு பயத்தைக் கொடுத்தது.. நாம இங்கிருப்பது சரியில்லை குழந்தையை கூட்டிக்கொண்டு வெளியே போகலாமா.. என்று குழம்பிக்கொண்டேயிருந்தவள் இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்து “இனியா விளையாண்டதும் போதும்” என்று குழந்தையை சிம்மனின் முதுகில் இருந்து தூக்கினாள் .

“ம்மா.. ம்மா” இன்னும் கொஞ்ச நேரம்” என்று கண்ணை சுருக்கி இனியா சிணுங்க..

“விடு முல்லை இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடட்டும்” என்றான் சிம்மன் .

சிம்மன் மீது வெறுப்பு காட்ட முடியவில்லை.. அவள் தொய்ந்து விழுந்த காலத்தில் தனக்கு தாயாக இருந்திருக்கிறான் சிம்மன்.. ரெண்டுங்கெட்டான் நிலையில் இருந்தாள் முல்லை.. சிம்மனை அதட்டி பேசக்கூட முடியவில்லை.

“அண்ணா இவள செல்லம் கொடுத்து கெடுக்கறது நீங்கதான் அண்ணா ” என்று சிம்மனுக்கு திட்டுவிழ அவன் கப்சிப் என்று அமைதியாகி விட்டான்.. அவள் நேற்றிரவு அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியதும் ஆடிப்போய்விட்டான்.. எங்கே முல்லை இனியாவை தன்னிடமிருந்து பிரித்து கூட்டிக்கொண்டு போய்விடுவாளோ என்று.. இனியா இல்லாது சிம்மன் இல்லை.. என்று அச்சப்பட்டவன் முல்லையின் போக்கில் விட்டுப்பிடிக்கலாம் என்று அவள் என்ன பேசினாலும் அமைதியாக கேட்டுக்கொண்டான்… அவள் தன் கூட பிறந்த தங்கை இல்லையே போகாதே.. என்று பிடித்து நிறுத்தி முல்லையின் மனதில் என்ன இருக்கிறதென தெரியாமல் தடுமாறித்தான் போனான் சிம்மன்.

“ஏய் இப்பவே மணி எட்டாக போகுது.. இன்னும் நீ பல்லு கூட விலக்கல.. உன்னை கிளம்ப வைக்குறதுக்குள்ள என் உசிரை எடுத்திருவ வாடி” என்று இனியாவை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு குளிக்க வைத்து யூனிபார்ம் போட்டு டைனிங் டேபிளுக்கு கூட்டிட்டு வர மணி எட்டுக்குமேல் ஆகிவிட்டது.. விளையாடவிட வில்லையென சிணுங்கிக்கொண்டேயிருந்தது இனியா.

“எனக்கு இட்லி வேணாம்” என்று மூஞ்சைத் தூக்கி வைத்தது..

“இனியா அம்மாவோட கோவத்தை கிளராத.. சரி தோசை சுட்டு கொடுக்கிறேன்” என்று சமையல்கட்டில் போய் தோசைக்கல்லை அடுப்பில் வைத்தாள் .

“அக்கா நீங்க போங்க நான் சுட்டு எடுத்துட்டு வரேன்” என்று தோசை மாவை கல்லில் ஊற்றினாள் வஞ்சி.

“பாப்பாக்கு குட்டி குட்டியா ஹார்ட்டின் போல தோசை சுடணும்” என்று வஞ்சியிடம் கூறிவிட்டு டைனிங் டேபிள் வந்த இனியா சிம்மனின் அறைக்குப் ஓடியது

“இன்னிக்கு என்கிட்ட இவ அடி வாங்க போற.. “ஏய் சாப்பிடாம எங்கடி போற” என்று குழந்தை முதுகில் ஒரு அடிபோட்டு டைனிங் டேபிளுக்கு தூக்கிட்டு வந்து உட்கார வைத்தாள்.

வஞ்சிக்கொடி தோசையை சுட்டு தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து முல்லையின் கையில் கொடுத்துவிட்டு சிணுங்கும் குழந்தையை பாவமாக பார்த்தாள் வஞ்சி ..

முல்லை அடித்ததில் விசும்பி கொண்டேயிருக்க.. தோசையை சட்னியில் தொட்டு இனியாவில் வாயில் ஊட்டிவிட குழந்தையோ வாயை இறுக மூடிக்கொண்டது.. “என்னடி சிணுங்கிட்டேயிருக்க.. சாப்பிடாம அடம் பிடிக்குற.. ஸ்கூலுக்கு போகாம நீயும் ரவுடித்தனம் பண்ணப் போறயா” என்று சிம்மன் மேலிருந்த கோவத்தில் குழந்தையின் கையில் இரண்டு அடி போட்டாள் முல்லை ..

இனியாவோ “அப்பாஆஆ” என்று கையை தேய்த்துக்கொண்டு அழுக ஆரம்பித்தது..

சிம்மன் குளித்துவிட்டு சட்டை பட்டன் போட்டுக்கொண்டிருந்தவன் குழந்தையின் அழுகுரல் கேட்க.
டைனிங் டேபிளுக்கு ஓடி வந்து இனியாவை தூக்கி வைத்துக்கொண்டு “என்னாச்சுடா தங்கம் எதுக்கு அழுகுற” என்றான் குழந்தையின் கண்ணீரை துடைத்து விட்டு

“அம்மா அடிச்சுட்டா சித்தா” என்று இதழ் பிதுக்கி அழுத குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு “முல்லை என்னம்மா இது.. உனக்கு என்ன பிரச்சனை.. உன் கோவத்தை என்கிட்ட காட்டு ஏன் குழந்தைமேல காட்டுற.. ஒருநாள் குழந்தை ஸ்கூலுக்கு போகலைன்னா ஒண்ணும் குடிமுழுகிப்போகிடாது.. இனிமே இனியாவ அடிக்கற வேலை வைச்சுக்காத” என்று முல்லையை அதட்டினான்

“இனியா என்னோட பொண்ணு எனக்கு அடிக்கக்கூட உரிமையில்லையா?” குழந்தையை அழ வைத்துவிட்டோம் என்று முல்லைக்கும் வருத்தம் வந்துவிட்டது..

” என் குழந்தைக்கும் ஏதாச்சும் ஆச்சுன்னா நானும் செத்துப்போயிருவேன்” என்று டைனிங் டேபிளிலில் உட்கார்ந்து முகத்தை மூடி அழுக ஆரம்பித்தாள்.

தோளில் படுத்திருந்த இனியா சிம்மனை விட்டு இறங்கி முல்லையின் பக்கத்தில் வந்து “இனிமேல் என்னை திட்டாதம்மா.. நான் பாவம் இல்லையா?” முல்லையின் முந்தானையை பிடித்து இழுத்து “அழுவாதம்மா நான் சாப்பிடுறேன்.. ஸ்கூலுக்கும் போறேன்.. அப்புறம் சிம்மனை திட்டாத.. என்னை பத்திரமா சிம்மன் தான பாத்துக்குது.. சித்தாகிட்ட சண்டைப்போடாத”என்று தாயை இடுப்போடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டது .

“அச்சோ என் தங்கம்.. என் தங்கத்தை அடிச்சேனா வலிக்குதா” என்று இனியா கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள் முல்லை.

வஞ்சிக்கொடி ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.

சிம்மனுக்கு முல்லையைப்பற்றி தெரியும் அல்லவா.. அவன் அமைதியாக கை கட்டி பார்த்திருந்தான்.
அதே நேரம் டிவியில் தமிழ்நாட்டில் நடந்த கொலை கேசை கண்டுபிடிக்க காளிங்கவர்மன் கேளராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்.. என்று டிவியில் செய்து ஒளிபரப்பாகி கொண்டிருந்தது .. டைனிங் டேபிளிலிருந்து பார்த்தால் டிவி தெரியும்.. அதில் இந்திரவர்மன் மீசையை முறுக்கியபடி போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்தான்.. டிவியை எதேச்சையாக திரும்பி பார்த்த சிம்மன் அதிர்ந்து.. டிவியின் பக்கம் போய் நின்றான்.. இனியா டிவியை பார்த்து “ஐ.. அப்பா.. அப்பா.. டிவில வராரு” என்று கை தட்டி சிரித்துசிம்மன் பக்கம் ஓடியது..

அதே நேரம் முல்லைக்கொடி டிவியைப் பார்க்க.. இந்திரவர்மனின் போட்டோ ஓடிக்கொண்டிருந்தது.. அதில் காக்கி உடையில் வந்த வா்மனின் படத்தை பார்த்து

“வர்மாஆஆஆஆ” என்று மயங்கிச் சரிந்தாள் முல்லைக்கொடி..

“அக்கா” என்று ஓடிவந்து முல்லையை தாங்கிப்பிடித்துக்கொண்டாள் வஞ்சி.

சிம்மன் தன் கண்ணையே நம்பாமல் டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்..

“சிம்மா, அப்பாஆஆ” என்று அவனை பிடித்துக்கொண்டு கை தட்டி சிரித்தது ..

“இது இது என்னோட நண்பன் தான்.. அவன் உயிரோட தான் இருக்கான்.. உன் அப்பா வந்துட்டான்.. என்னோட வ.வர்மா சா..சாகல” என்று கூறியவன் கண்களில் கண்ணீர் கடகடவென வந்தது சிம்மனுக்கு ..

ஆனால் சிம்மனுக்கு சந்தேகம் அவன் போலீஸ் உடையில் இருப்பதுதான்.. நாளை வருவான்தானே அப்போது பார்த்துக்கலாம்.. என்று கண்ணீரை துடைத்து விட்டு திரும்ப.

முல்லை முகத்தில் தண்ணீரை தெளிக்க அவள் எழும்ப வில்லை.. “சார் இவங்க டிவில போட்டோவ பார்த்ததும் மயங்கிட்டாங்க”

“பாப்பாவ தூங்கிட்டு என்னோ வா” என்று குழந்தையை வஞ்சியிடம் கொடுத்துவிட்டு.. முல்லையை தூக்கிக்கொண்டு வெளியே வந்து காரில் பின் சீட்டில் படுக்க வைத்து டிரைவர் சீட்டில் ஏறி உட்கார வஞ்சி குழந்தையுடன் முல்லைக்கு துணையாக ஏறி உட்கார்ந்து கொண்டாள்..

இனியா முல்லை பேசாமல் படுத்திருப்பது கண்டு “அம்மா.. அம்மா.. கண்ணு முழச்சுப் பாரு” என்று அழுக ஆரம்பித்தது..

எந்த பிரச்சனையையும் அசால்ட்டாக தீர்த்து வைக்கும் சிம்மன் முல்லை படும்பாட்டை கண்டு துவண்டுதான் போனான்.. இனி நண்பன் வந்துவிட்டான் அவனிடம் அவன் மனைவியையும் குழந்தையையும் ஒப்படைத்துவிடலாம்.. என்று நம்பிக்கையுடன் வண்டியோட்டினான் சிம்மன்.. ஆனால் அவன் காளிங்கராயனாகத்தான் இருப்பான் என்பது சிம்மனுக்கு தெரியவில்லை..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top