7. மோக முத்தாடு அசுரா
டாக்டர் ஐ.சி.யுவிற்குள் வந்ததும்.. கதறி அழும் காளிங்கனை வெளியே கூட்டி போகுமாறு சிம்மனிடம் கூற.. அவனின் தோளை அணைத்தபடியே வெளியே கூட்டி கொண்டு வந்தான்.
காளிங்கனுக்கு மற்றொரு அதிர்ச்சி அவனது சித்தப்பாவும் இறந்தது.. காளிங்கன் இரும்பு மனிதன் தான்.. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய் இருந்து ரவுண்டு கட்டி அடித்து எதிரிகளை பந்தாடுபவன்.. குடும்பம் என்று வந்தால் அவன் குழந்தை போல ஆகிவிடுவான்.. குடும்பத்தின் மீது அலாதி பாசம் வைத்திருப்பவன் காளிங்கன்.. ஒரு வீட்டில் இரு இறப்பு என்றால் அவனால் எப்படி தாங்க முடியும்.. தூக்கி வளர்த்த சித்தப்பா.. பார்வதியுடன் சில வருஷம் சந்தோசமாக வாழ்ந்தவன்.. ஒரு கூட்டில் பாச பறவைகளாக வாழ்ந்தவர்கள் இப்போது இல்லாமல் போனது காளிங்கனுக்கு வாழ்க்கையில் மிக பெரும் இழப்பு.
டாக்டர் பார்மலிட்டீஸ் முடித்து வெளியே வந்ததும் மிஸ்டர் “காளிங்கன் உங்க வொய்ப்ப எங்கனால காப்பாத்த முடியாம போச்சு சாரி.” என்று கூறிவிட்டு நீங்க உங்க மனைவிய எடுத்துட்டுப் போங்க என்றதும்..
“அச்சோ பாரு உன்னை என்னால காப்பாத்த முடியாம போச்சே.. அஜய் அம்மா எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் பாரு” என்று முகம் பொத்தி குலுங்கி குலுங்கி அழுதான் காளிங்கன்.
“வர்மா அழாதீங்க உங்க மனைவி இல்லாம போனது உங்களுக்கு பெரிய இழப்புதான் இல்லைன்னு சொல்லல.. ஆனா உங்க பையனுக்காக நீங்க வாழணும்.. இதைவிட பெரிய இழப்பு எல்லாம் நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கு.. நிதானமா இருங்க” என்று அவனுக்கு ஆறுதல் கூறிய சிம்மன், இனியா குடித்துவிட்டு மீதி வைத்திருந்த பாலை எடுத்து வந்து காளிங்கனுக்கு கொடுக்க.. “எனக்கு எதுவும் வேண்டாம் சாரே! அஜய்க்கு பசிக்கும் அவனுக்கு கொடுங்க” என்றான் தாய் மனம் மாறாத காளிங்கன்.
“அஜய் பால் குடிச்சிட்டுதான் தூங்குறான்.. நீங்க அவன பத்தி கவலைப்பட வேண்டாம்.. அவன என்னோட பையன் போல நான் பாத்துப்பேன்.. நீங்க ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.. உங்க சித்தப்பாவோட பாடிக்கு நான் ரிலேசன் சொல்லி சைன் போட்டு கொடுத்திருக்கேன்” என்று அவன் கையை பிடித்தபடி சொல்ல.
“சாரே நீங்க யாரு எனக்கு அறியில்லா.. ஆனா, எனக்கு நீங்க செய்த உதவிய என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்” என்று சிம்மனின் கையை பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டான்.
“நீங்க யாருன்னு தெரியலை” என்று காளிங்கன் கூறிய வார்த்தையை கேட்ட சிம்மனுக்கு அந்த நிமிஷம் உயிரே போய்விட்டது.. நெஞ்சுக்குழிக்குள் வலி வந்து போனது.. அதை காளிங்கன் முன்பு காட்ட முடியாமல் தவித்துப் போய் காளிங்கனின் தலையை நீவிக்கொடுத்தான்.
ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டீஸ் முடித்து பார்வதியின் உடலையும், காளிங்கனின் சித்தப்பாவின் உடலையும் கல்பாத்திக்கு எடுத்து செல்ல உதவி செய்தான் சிம்மன்.
நல்லவேளை முல்லைக்கு மயக்கம் தெளியவில்லை.. இல்லையென்றால் அறைக்கு வெளியே கதறி அழும் கணவனின் குரல் கேட்டு இன்னேரம் வெளியே வந்திருப்பாள்.. அவளின் நிலையை நினைத்தால்தான் சிம்மனுக்கு வியர்த்துக்கொட்டியது.. இறந்து விட்டதாக நினைத்திருக்கும் கணவன் கண் முன்னே வந்து நின்றால் முல்லையின் நிலை என்னவாக இருக்கும்.. அதை யோசித்தே அவன் முல்லை இருக்கும் அறைக்கதவை கூட திறக்கவில்லை.
“சார் அஜயை தூங்கிட்டு வறீங்களா? அவன்தான் காரியம் எல்லாம் செய்யணும்.. ஆனா எப்படி என்னால அவன சமாளிக்க முடியும்னு தெரியல” என்று கண்ணை இறுக மூடி சுவற்றில் சாய்ந்து கொண்டான் காளிங்கன்..
“ஏன்? சார் பார்வதி உங்க வொய்ப் தான நீங்க செய்லாம்ல” என்று சிம்மன் மெல்ல கேட்க..
சிம்மனுக்கு.. வர்மனா? காளிங்கனா? என்று சந்தேகம் அவன் மனதில் இருந்தது.. சிம்மன் புரிந்து கொண்டான்.
“பாருவோட இறுதி காரியத்தை அவள் மகன் அஜய் தான் செய்யணும் என்பது பாருவோட விருப்பம்.. அவன இப்போதிலிருந்தே என்னை போல தைரியமா வளர்க்கணும்னு கடைசியா சொல்லிட்டா” என்று சுவற்றில் கையை குத்திக்கொண்டு அழுதான்.
சிம்மன் முல்லை இருந்த அறைக்கதவை திறந்து போக அஜய் விழித்துக்கொண்டு வஞ்சியை பார்த்தும் கட்டிலில் படுத்திருந்த முல்லையை பார்த்தும் அழுக ஆரம்பித்தான்.. இனியாவும் எழுந்து கொண்டது.. முல்லையின் கருமணிகள் அசைய ஆரம்பித்தது.. இனியா அழுகும் சத்தம் போல அவள் காதில் கேட்டிருக்கும் போல “இ.இனி.. இனி” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.
“சிம்மா அம்மாவ பாரு” என்று இனியா, அவனை தூக்கச் சொல்ல..
“இரு தங்கம் இந்த அண்ணா அழறான் பாரு அவங்க அப்பாகிட்ட கொடுத்துட்டு வந்துடறேன்” என்று இனியாவை சமாதானப்படுத்தி “வஞ்சி, இனியாவ பார்த்துக்க” என்று அவளிடம் வஞ்சியை பார்க்குமாறு கண் காட்ட இனியாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள் வஞ்சிக்கொடி.
காளிங்கன், அஜயை வாங்கி தோளில் போட்டு சிம்மனை ஒரு பக்கம் அணைத்துக்கொண்டு “நான் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.. ரொம்ப நாள் பழகின பீல் இருக்கு” என அவன் தோள்பட்டையில் முகம் புதைத்து சொல்ல..
“ஆமா நீயும், நானும் உயிர் நண்பர்கள்” என்று அவனுக்கு சொல்ல அவனது நாவு துடித்தது.. ஆனால் நண்பனிடம் நீ தான் என்னோட வர்மன் என்று சொல்லிவிட்டால் அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்றும் பயந்தவன் அடுத்த நொடியே “நான் அடிக்கடி கேரளா வருவேன் நீங்க அப்ப பார்த்திருப்பீங்க” என்று சமாளித்து அவனை விட்டுப் பிரிந்தான்.
“சரி நான் கிளம்புறேன் நண்பா” என்றான் பாரு காளிங்கன்..
“வர்மாஆஆஆ” என்று மீண்டும் அவனை கட்டிக்கொண்டான்.. சிம்மனால், அவனை அப்படியே தனியே அனுப்ப மனமில்லை..
“ஒரு நிமிசம் இரு வர்மா நான் வரேன்” என்று ஹாஸ்பிட்டலுக்குள் ஓடியவன்.. முல்லை இப்போது கண்விழித்துவிட்டாள்.. அவள் மடியில் இனியா சமத்தாக அமர்ந்திருந்தது..
“முல்லை இப்ப உடம்பு எப்படியிருக்கு”
“நல்லாயிருக்கேன் அண்ணா” என்றவள் சிம்மன் முகத்தில் இருக்கும் அப்பட்டமான வலியை உணர்ந்து
“என்ன அண்ணா என்னாச்சு.. உங்க முகம் ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கு” எனக் கேட்க..
“இல்ல என்னோட ப்ரண்ட் கேரளாவுல இருக்கான் அவன் வீட்டுல இறப்பு நடந்திருச்சு.. இப்பதான் போன்ல சொன்னா.. நான் உடனே கிளம்பியாகணும்டா” என்றவன்.. வஞ்சியிடம் திரும்பி “வஞ்சி நீ முல்லையை வீட்டுக்கு பத்திரமா கூட்டிட்டுப் போ.. நான் பொம்மன் அண்ணாவ கார எடுத்துட்டு வரச்சொல்றேன்” என்று கூறிவிட்டு முல்லையின் மடியில் அமர்ந்திருந்த இனியாவின் கன்னம் பிடித்து “தங்கம் சித்தப்பா ப்ரண்ட் வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு காலையிலதான் வருவேன்.. நீங்க அம்மாவுக்கு தொந்தரவு தராம குட் கேர்ளா இருக்கணும்” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. முத்தத்தை வாங்கிக்கொண்டு “நீ போயிட்டு வா சித்தா நான் வஞ்சி ஆன்ட்டி கூட விளையாடுவேன்” என்று அவனை பார்த்துக்கண்ணடித்தது..
“சரி தங்கம்” என்று அவன் கிளம்ப
“சித்தா இங்க வா” என்று அழைக்க சிம்மன் பக்கம் வந்ததும் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.. வஞ்சி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள் இருவரையும்..
“என் பட்டுக்குட்டி வெளியே தனியா வரக்கூடாது” என்று ஆயிரம் முறை பத்திரம் கூறி விட்டு..
“முல்லை நீ எந்த வேலையும் செய்யாதே.. வஞ்சி இருக்காள்ள எல்லாம் அவ பார்த்துப்பா” என்று வஞ்சியை பார்த்தான்
“சார்.. நான் முல்லை அக்காவ எந்த வேலையும் செய்ய விடாம பத்திரமா பார்த்துக்குவேன்” என்று தலையாட்டினாள்
“ம்ம்” என்று வெளியே நடக்க திரும்பிப் பார்த்து முல்லை குழந்தையிடம் குனிந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க.. வஞ்சியிடம் “பார்த்துக்கோ” என்று அவளிடம் இதழ் மட்டும் அசைத்தான்.. அவளும் தலையை மெதுவாக ஆட்ட.. கிளம்புறேன் என்று வெளியே சென்றான்.
காளிங்கனுடன் அவனும் கேரளாவுக்கு சென்றான்.. காரில் ஏறியதிலிருந்து காளிங்கன் அமைதியாக கண்ணை மூடியிருந்தான்.. சிம்மனிடம் நெருங்க நெருங்க அவன் மூளைக்குள் ஏதேதோ ஞாபகங்கள் வந்து கொண்டேயிருந்தது.. மூன்று வருடத்திற்கு முன்பு அடிபட்டதிலிருந்து அவன் மனைவியுடன் வாழ்ந்த நாட்களையும் நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.. காரின் பின்னாடி ஆம்புலன்ஸில் அவனது மனைவியின் உடலும் சித்தப்பாவின் உடலும் வந்துகொண்டிருந்தது.. காரில் போகும்போது அவனது சொந்தபந்தங்களுக்கு சொல்லிவிட்டான்.. இனி மகனுக்காக வாழ வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.. இறுதியாக பார்வதி கூறிய வார்த்தைகள் உண்மையாக இருக்குமா? அவள் ஏன் அப்படி சொன்னா? என்று ஆயிரம் குழப்பங்கள் அவனை சூறாவளியாய் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது.
சிம்மன், காளிங்கனையே பார்த்திருந்தான்.. அவனது முகத்தில் இருந்த ஒரு வெட்டு காயம் மட்டும் தான் அது வர்மனிடம் இல்லை.. மத்தபடி அனைத்தும் வர்மனை அச்சு வார்த்தது போல இருந்தான் காளிங்கன்.. காளிங்கன் மடியில் படுத்திருந்த அஜய் எழுந்து சிணுங்க ஆரம்பித்தான்.. சிம்மன் தன்னிடம் வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்துக் கொடுக்க குழந்தை சாப்பிட்டு விட்டு தந்தையின் முகம் பார்த்து “அச்சா, அம்மா எங்க” என்று கேட்க..
காளிங்கனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. அப்படியே நெஞ்சோடு அணைத்து அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து “அம்மா பி..பின்னாடி வண்டியில வராங்க”
“எப்பவும் நாம மூணு பேரு மட்டும் வருவோம்.. இப்ப அம்மா ஏன் தனியா வருது” என்று காளிங்கனை நிமிர்ந்து பார்த்து கேட்டான் அஜய்.
“அய்யோ இனி உன் அம்மே வரவே மாட்டா.. சாமிகிட்ட போயிட்டா மகனே.. இனி நான் தான் உனக்கு அம்மா அப்பா எல்லாம்” என்று அஜயை இறுக்கி அணைத்துக் கொண்டு கதறினான்.
காளிங்கனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை..
“காளிங்கன் குழந்தைகிட்ட என்ன சொல்றீங்க அவன் பயப்படுவான்.. அம்மா இல்லை என்றால் வருத்தப்படுவான்” என்று காளிங்கனை சிறு கண்டிப்புடன் பேச..
“அவன் என் மகன் என்னைப் போல அஞ்சா நெஞ்சம் கொண்டவன்.. எதையும் தாங்குவான்” என்று காளிங்கன் வாய் சொன்னாலும் உதடு துடிக்க வார்த்தைகள் வந்தது.
அஜய் என்ன நினைத்ததோ தெரியாது.. “அப்பா.. அம்மா சாமிக்கிட்ட போயிட்டா திரும்பி வரமாட்டங்கள்ள.. எனக்கு யாரு சாப்பாடு ஊட்டுவா.. என்னை யாரு குளிச்சுவிடுவா.. நான் அவங்க கூட பேச முடியாதா” என்று கேட்டு விம்மி விம்மி அழுதது.
குழந்தையை தன் மடிக்கு தூக்கிய சிம்மன்.. “கண்ணா இங்க பாரு அழாத” என்று குழந்தையின் கண்ணீரை துடைத்துவிட்டு “என்னோட வீட்டுல உனக்கு சித்தி, தங்கச்சி பாப்பா எல்லாம் ஊருல இருக்காங்க.. அங்க.. உன்ன உங்க சித்தி உன்னோட அம்மாவ போல பார்த்துப்பாங்க.. என்கூட வந்துடு நான் உன்ன வச்சிக்குறேன்” என்று அவனை மார்பில் சாய்த்துக்கொண்டு கேட்க..
“அப்படியா என் அம்மா பாரு போல ஸ்கூல்ல இருந்து வந்தா பால் கொடுப்பாங்களா.. சாதம் ஊட்டுவாங்களா? நான் குறும்பு பண்ணினா என்னை என் அம்மா அடிக்கவே மாட்டா.. அதே போல அவங்களும் என்னை அடிக்கமாட்டாங்க தானே” என்று சிம்மனிடம் கண்ணை விரித்துக் கேட்டது பால்மனம் மாறாத குழந்தை அஜய்.
“ம்ஹும்.. அங்க உன்ன யாரும் அடிக்கமாட்டோம்.. என்று அவன் நெற்றியில் முத்தம் வைத்தான் சிம்மன்.
வீட்டில் நடக்க வேண்டிய காரியங்களை நடத்தி முடித்தான் காளிங்கன்.. அவனை விட்டு பிரியவேயில்லை சிம்மன்..
அதைவிட அஜயை அவன் தோளிலேயே போட்டுக்கொண்டான்.. பார்வதி ஆசைப்பட்டது போல அஜயின் கையால் பார்வதிக்கு இறுதிச் சடங்கு செய்ய வைத்தான்..
பாலகனுக்கு ஒன்றும் தெரியாமல் தாய்க்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்தான் அஜய்.
சொந்த பந்தங்கள் எல்லாம் கிளம்பியிருக்க.. அவனது நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தது.. காளிங்கனை சடங்குகள் முடித்து சாப்பிட சொல்ல ஒரு பருக்கை கூட அவன் சாப்பிடவில்லை.. அஜய்க்கு, சிம்மன் சாப்பாடு ஊட்டிவிட்டான்.. நண்பனுக்காக தானும் சாப்பிடாமலேயே இருந்தான் சிம்மன்.
அஜய் தூங்கியதும்.. “சார், நான் உங்க பையனை ஒரு பத்து நாள் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டுமா.. எங்க வீட்டுல குட்டி இளவரசி இருக்கா.. அவ கூட அஜயை இருக்க வச்சா கொஞ்சம் அம்மாவ மறக்க பார்ப்பான்”
“போதும் சாரே நீங்க செய்த உதவி.. நான் அவன பார்த்துப்பேன்” என்றான் இறுக்கமான மனதுடன்.
அதற்குமேல் சிம்மனால் எதுவும் பேசமுடியவில்லை.. அன்றிரவு குழந்தை அம்மா.. அம்மா.. என்று தூக்கத்தில் சிணுங்க அவனை தன் நெஞ்சுக்கூட்டுக்குள் அணைத்துக்கொண்டான் காளிங்கன்.
அடுத்த நாள் காலையில் ஐ.ஜி காளிங்கனை பார்க்க வந்திருக்க.. காளிங்கனுக்கு ஆறுதல் கூறிவிட்டு “காளிங்கன் நீங்க அடுத்த வாரம் தமிழ்நாடு போகவேண்டியிருக்கும் அங்கே ஒரு மாசம் தங்கி ஒரு கேஸை கண்டுபிடிக்கணும்.. உங்கனால முடியுமா? இல்லைனா வேற யாராவது அனுப்பலாமா” என்று காளிங்கனை கேட்க.
“நோ சார் நானே தமிழ்நாட்டுக்கு கிளம்புறேன்” என்று எழுந்து ஐ.ஜிக்கு சல்யூட் அடித்தான்.
“குட்” என்ற ஐ.ஜி அவர் கொண்டு வந்த கேஸ் பைலை காளிங்கனிடம் நீட்டினார்.
பைலை வாங்கியவன் “இது என்ன கேஸ் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க” என்று நெஞ்சை நிமிர்த்தி விரைப்பாக அமர்ந்தான்.
சிம்மன் அஜயுடன் விளையாடிக்கொண்டிருந்தாலும் காளிங்கனையும், ஐ.ஜியையும் கண்காணித்துக்கொண்டுதான் இருந்தான்.
“ஒரு பொண்ணு நம்ம ஊரு கம்பெனியில வேலை செய்தது.. அந்த பொண்ண தமிழ்நாட்டு எம்.எல்.ஏ பையன் அசிங்கம் செய்து கொன்றுவிட்டான்.. அவன் இப்போது தமிழ்நாட்டில் இருக்கான் அவனை கண்டுபிடித்து ஜெயிலில் அடைக்கணும் அது உங்கனால மட்டும்தான் முடியும்.. எம் எல் ஏ மகன் தெரிஞ்சதும் டிப்பார்ட்மென்ட்ல எல்லாரும் பின் வாங்கிட்டாங்க.. உங்கனால முடியும்னு இந்த கேஸ உங்ககிட்ட ஒப்படைச்சேன்”
“நான் பதினைந்து நாளுல கண்டு பிடிக்கிறேன்” என்று ஐ.ஜிக்கு கை கொடுத்தான்.
“ஐ.ஜி ஆல் தி பெஸ்ட் காளிங்கன்” என்று கைக்கொடுத்து நீங்க தமிழ் நாடு போக வேண்டியதிற்கான ஏற்பாட்டை நான் செய்யுறேன்.. என்று கிளம்பினார்.
“என்ன காளிங்கன் சார் நான் குழந்தையை தான் தமிழ்நாட்டுக்கு கூட்டிக்கொண்டு போறேன்னு சொன்னேன்.. இப்ப நீங்களே வரப்போறீங்களா” என்று புன்னகையுடன் காளிங்கன் முன்னே நிற்க.
“ஆமாம்.. நானும் வரேன்” என்று மெல்ல இதழ் விரித்தான் காளிங்கன்.
வர்மன் எப்போதும் வாய்விட்டு சிரிப்பான்.. இந்த காளிங்கன் மருந்துக்கு கூட சிரிக்க மாட்டான் போல.. என்று தலையை கோதினான் சிம்மன்.
அதற்குள் இனியா, சிம்மனுக்கு போன் போட.. சிம்மன் வாஷ்ரூம் சென்றிருக்க காளிங்கன் சிம்மனின் போனை எடுத்து “ஹலோ” என்றான்.
“சிம்மாஆஆஆ.. நீ எப்போ வருவ” என்று ஏங்கிய குரலில் இனியா கேட்க.
காளிங்கனால் ஒரு நிமிஷம் பேச முடியவில்லை.. குழந்தையின் குரல் அவனை உலுக்கிப்போட்டது.
6th and 7th episodes are same bro.
Optimal price-quality ratio
replacement windows prices [url=https://www.doors-manufactoring.com/replacement-melbourne]https://www.doors-manufactoring.com/replacement-melbourne[/url] .
Каркасные дома с коммуникациями: готовое жильё для заселения
каркасный дом под ключ в спб [url=https://www.karkasnye-doma-v-spb178.ru]https://www.karkasnye-doma-v-spb178.ru[/url] .