10 மோக முத்தாடு அசுரா
வர்மன் முல்லை மலரில் தேன் எடுக்கும் வண்டு போல முல்லைக்கொடியின் இதழில் தேனமுதம் விடாது பருகிக்கொண்டிருந்தான்… மலரை போல மென்மையாக இருக்கும் முல்லைகொடியால் வர்மன் கொடுக்கும் வன்முத்தத்தை தாக்கு பிடிக்க முடியாமல் போய் ஆணவன் மீதே சருகு போல சரிந்தாள் பெண்ணவள்.
அவள் தன் மேல் சரிந்ததும்தான் சுயம் வந்தான் வர்மன்… அச்சோ வர்மா என்னடா கொசகெட்டபயல் போல நடந்திருக்க… உனக்கு கூறே இல்லைடா… என்று தன்னைத்தானே திண்டிக்கொண்டவன் அங்கே பால்கனி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பைப் இருக்க.. அங்கே போட்டிருந்த சாய்வு நாற்காலியில் அவளை படுக்க வைத்து தண்ணீரை பிடித்து அவள் முகத்தில் தெளிக்க… மெல்ல கண் திறந்து பார்த்தவள் இதழில் இருந்த ரத்தத்தை துடைத்துவிட்டு இப்படித்தான் பண்ணிவிங்களா என்ற ரீதியில் அவனை முறைத்துப் பார்த்து எழுந்து உட்கார்ந்தாள்.
“அச்சோ சாரி சாரி முல்லை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்… ஆமா நைட் என்ன சாப்ட ஒரே இனிப்பா இருந்துச்சு… என்று அவள் பக்கம் போய் நெருங்கி உட்கார்ந்தான்… அவன் நெருங்கியதும் இன்னும் பயந்து தான் போனாள் முல்லை.
அவள் கண்ணில் பயத்தை கண்டவன் “ஏய் நான் பேசிக்கா ரொம்ப சாப்ட்டி… ஆக்சுவலி இப்பக் கூட நான், உனக்கு முத்தம் கொடுத்திருக்க மாட்டேன்… நம்ம ரைட்டர் முத்தாடு அசுரான்னு தலைப்பு வச்சிருக்காங்க… அதனால நான் உனக்கு நிறைய முத்தம் கொடுக்கப் போறேன் முல்லை… என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் அணைப்புக்குள் கொண்டு வந்து “உனக்கு என்ன பிடிச்சிருக்கா” என்று கேட்டான். (ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே போ)
பிடிக்கலன்னு சொன்னா இன்னும் முத்தம் கொடுப்பாரோ… என்று எச்சில் விழுங்கி “பி..பிடிச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு அவள் தலையை குனிந்து கொள்ள.
“முல்லை நான் நல்ல பையன்டி என்னை நம்பி நீ கல்யாணம் பண்ணிக்கோடி… நா உன்ன காலம் முழுக்க கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துவேன்டி… நமக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் போதும் என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்”. (முத்தக் கணக்கு முக்கியம் அமைச்சரே).
இப்ப என்ன பண்ணுற மாமனுக்கு முத்தம் கொடுத்து லவ் கன்பார்ம் பண்ணு பார்க்கலாம்… நான் மறந்தே போய்ட்டேன் முல்லை இன்னிக்கு என்ன நாள்னு தெரியுமா பிப்ரவரி 14 காதலர் தினம் நமக்கு எல்லாம் சாதகமா இருக்கு பார்த்தியா என்று அவள் இதழ் அருகே தன் இதழை கொண்டு போக… அவளோ கண்களை சாசர் போல விரித்து “எனக்கு பயமாயிருக்கு” என்று இதழை மூடிக்கொள்ள.
“அதெல்லாம் பர்ஸ்ட்டைம் கொடுக்கும்போது மட்டும்தான் பயமா இருக்கும்… நான் முத்தம் மட்டும் தான் கேட்குறேன்… என் கை உன்னோட உடம்புல வேற எங்காவது படுதா பாரு… உன்கழுத்துல தாலி கட்டிட்டு தான் மத்தது எல்லாம் தொடுவேன்” என்று அவளது அங்க வளைவுகளை மார்க்கமாக பார்த்து பெருமூச்சு விட்டான்… அவள், அவன் கண்போன திசையை பார்க்க அவளோ நைட்டி போட்டிருந்தாள்… ஆடை சற்றே நெகிழ்ந்திருக்க… அவளது எழில் வனப்புகளின் வடிவம் தெரிய சட்டென்று ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.
முல்லைக்கொடியின் செயலைக்கண்டு அவன் வாய்விட்டுச் சிரிக்க… “மெதுவா சிரிங்க பட்டம்மா முழிச்சுக்குவாங்க… அப்புறம் நாம ரெண்டு பேரும் மாட்டிக்குவோம்” என்று இரகசிய குரலில் பேச.
“யார் வந்தா என்னடி எனக்கு பயம் இல்லை… அதோ வெளியில என் நண்பன் சிம்மன் சிங்கம் போல நிற்குறான்… அவன் நம்ம மேல கீறல் கூட போட விடமாட்டான்” என்று சிம்மனை பற்றி பெருமையாகக் கூற.
“சிம்மனா அது யாரு”
“ஏய் சிம்மனை பத்தி அப்புறம் பேசலாம் இப்ப மாமன கவனிடி” என்று அவள் இதழ் அருகே போக… “ஐ. லவ். யு சொல்லி முத்தம் கொடுக்கணும்” என்று கண்ணடித்தான்.
முல்லைக்கும் வர்மனை பிடித்துவிட்டது… அதனால்தான் வர்மன் இதழில் இரத்தம் வர முத்தம் கொடுத்தும் கூட அவள், அவனை திட்டவில்லை… அவன் கொடுக்கும் முத்தத்தை சுகமான முத்தமாக ஏற்றுக்கொண்டாள்.
கண்ணை மூடிக்கொண்டு “ஐ. லவ். யு” என்று மெல்ல அவன் இதழ் நோக்கிப் போக.
“ஏய் கண்ணைதிறடி” என்று அவள் விழிகளுக்கு முத்தம் கொடுத்தான்.
“எனக்கு வெட்கமாயிருக்கு” என் உதடு கடிக்க
“ காதல் வந்துட்டா வெட்கம், சுத்தம் பத்தம் பார்க்க கூடாதடி தங்கமே! அவளது இதழில் பட்டும் படாமலும் முத்தம் கொடுத்து… பாப்பா இன்னிக்கு இந்த முத்தம் மட்டும் போதும்டி அடுத்தவாரம் உன்ன கல்யாணம் பண்ணிட்டு மொத்தமாக எடுத்துக்குறேன்… இப்ப நீ ஒரு முத்தம் கொடுடி” என்று கெஞ்சியேவிட்டான்.
“ம்ம்.. சரி தரேன்” என்று முதன் முதல் அவன் கண்களை காதலாக பார்க்க இருவரது விழிகளும் பௌர்ணமி வெளிச்சத்தில் ஒன்றோடு ஒன்று கலக்க விட்டனர்.. மெதுவாக இருவரின் இதழ்களும் நெருங்க… முல்லையின் இதழ் நடுங்க ஆரம்பிக்க… அவளை இழுத்து இடுப்போடு சேர்த்து தன் மடியில் அமர வைக்க… அவளுக்கு உடம்பு நடுங்கியது… இப்போது உடம்போடு சேர்த்து அணைத்து அவளுக்கு பயத்தை போக்கினான் ஆண்மகன்… வர்மனின் வன் இதழழோடு முல்லை தன் மென்பட்டு ரோஜா இதழை சேர்த்தாள்… முத்தம் கொடுக்க தெரியாமல் கொடுக்க ஆசானாய் சொல்லிக்கொடுத்தான் வர்மன்… அவளும் நல்ல மாணவியாய் முத்தம் கொடுக்க கத்துக்கொண்டாள்… வர்மன் கைகள் அவளது மேனியில் உலாவ விட ஆசை வர… ம்ஹும் வேணாம் வர்மா தாலி கட்டிட்டுத்தான் அவளை முழுதாக தொடணும்… என்று அவனது வானளவு ஆசைக்கு கடிவாளமிட்டு அவள் கொடுக்கும் தேன் முத்தமே இப்போதைக்கு போதும் என்று அவளோடு இதழ் முத்தத்தில் திளைத்திருந்தான்.. இருவரின் முத்தம் நொடிகள் நிமிசங்கள் ஆனது… பெண்ணவளின் நிலை கருதி முல்லையை விட்டுப் பிரிந்தான் வர்மன்.
“தேங்க்ஸ்டி பப்லி” என்று அவளது தலையை வருடிக்கொடுத்து தன் மார்புக்கூட்டோடு சாய்த்துக்கெர்ண்டான்.
கீழே நின்றிருந்த சிம்மன் இவன் இன்னிக்கு குடித்தனம் முடிச்சிட்டுத்தான் வருவான் போல… என்று எண்ணி வர்மனுக்கு போன் போட… வைப்ரேட்டில் வைத்திருந்தான் போனை… “முல்லை, சிம்மன் போன் போட்டான் நான் நாளைக்கு இதே நேரம் வரேன்” என்று அவளை தன் மடியிலிருந்து இறங்கி விட.
முல்லையும் எழுந்து நின்று… “என்னை ஏமாத்திர மாட்டிங்கள்ள” என்று அவன் கண்களை ஏக்கத்துடன் பார்த்து கேட்க.
“இதோ இந்த பௌர்ணமி நிலா சாட்சியா நான், உன்னை ஏமாத்தமாட்டேன்டி” என்று அவள் இதழில் முத்தமிட்டான்.
“எனக்கு. எங்கப்பாவ நினைச்சா பயமாயிருக்குங்க”
“மக்கு நான் இருக்கும் போது பயம் உனக்கு தேவையில்லை… உன்னோட அண்ணன் முகேஷ் என்கிட்டே செம அடி வாங்கி இருக்கான்.. ரொம்ப பொறுக்கி பயலா இருக்காண்டி அதான் நாலு போடு விட்டேன்.. இப்ப ஏரியா பக்கம் தலை வைச்சு பார்ப்பதில்லை.. உன்னோட அப்பாவ கண்டும் பயம் இல்லை .. நம்ம காதலுக்கு உன்னோட மொத்த குடும்பமும் எதிர்த்து நின்னாலும் அத்தனை பேரையும் அடிச்சுப் போட்டு தூங்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன் பப்லி… என்று அவளது பன் போல உப்பிய கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“அச்சோ போதும் முத்தம் கொடுத்தது” என்று சிணுங்க.
“அடியேய் 100001 கிஸ் கொடுக்கணும்… மனசுல வச்சிக்க” என்று அவள் நெற்றியில் முட்டினாள்.
“என்னடி முத்தம் கொடுத்ததுக்கு சலித்துக்குற…மத்ததுக்கு நான் என்ன பாடுபடுவேனோ தெரியல” என்றவன் சிம்மன் விடாமல் போன் போட… அட இருடா நண்பா வரேன்… என்று சொல்லி போனை கட்செய்தான்.
“சரிடி பப்லி மாமன் நாளைக்கு வரேன்” என்று அவள் கன்னம் தட்டிவிட்டு பால்கனி பைப் வழியாக கீழே இறங்கினான்.
காம்ப்பவுண்ட் சுவர் மேல ஏறி “சிம்மா” என்றிட.
“வாடா எல்லாம் முடிச்சிட்டியா?” என்று கேட்டபடி குனிந்து நிற்க… அவன் முதுகில் மெல்ல கால் வைத்து இறங்கியவன்.
“டேய் நண்பா என்னைய உன்னை போல நினைக்காதடா? முத்தம் மட்டும்தான் கொடுத்தேன்… நல்ல ரொம்ப நல்லபையன்” என்று சட்டைக்காலரை தூக்கிவிட்டான்.
“நீ நல்ல பையன்னு நான் சொல்லணும்… உனக்கு போய் நான் தேவுடு காத்தேன் பாரு” என்று வர்மனை முறைத்துக் கொண்டு சென்றான்.
“அச்சோ கோவம் வந்திருச்சு என் நண்பனுக்கு” என்று அவன் முன்னே போய் நின்று “சாரி நண்பா” என்று காதைப் பிடித்து மன்னிப்பு கேட்க.
“நான் கோவிச்சுக்கலடா… வா போகலாம்” என்று அவனை காருக்குள் இழுத்துப்போட.
“டேய் நண்பா இருடா” என்று பால்கனியை பார்க்க முல்லை நின்றிருந்தாள்… அவளுக்கு கையை காட்ட அவளும் கையசைக்க வர்மன் பறக்கும் முத்தம் கொடுத்து காருக்குள் ஏறினான்.
முல்லை, வர்மனின் கார் மறையும் வரை பார்த்திருந்து விட்டு சிறிது நேரம் நின்றிருந்தவள் நான் செய்வது தப்பா என்னனு தெரியல… ஆனா, எனக்கு வர்மன ரொம்பப் பிடிச்சிருக்கு… என்று உள்ளே சென்றாள்.
தன் தந்தை சந்தானத்தை நினைத்தவளுக்கு அவரை எண்ணி பயம் வந்தது… நண்பர்களிடம் போன் பேசினாலே யார் கிட்ட போன் பேசுற என்று சந்தேகப்பட்டு அவளை வார்த்தைகளால் நோகடிப்பார்… இந்த நிலையில நான் வர்மன லவ் பண்றது தெரிஞ்சா அவ்ளோதான்… என்று எண்ணியபடி படுக்கையில் வந்து படுத்தாள்.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் காதல் வானத்தில் சிறகடித்துப் பறந்தனர் வர்மனும் முல்லையும்… ஸ்பெஷல் கிளாஸ் என்று வீக்எண்டில் இருவரும் மகாபலிபுரம் வரை சென்று சுற்றித்திரிவார்கள்…ஆனால் வர்மன் முத்தம் தவிர அவளிடம் எல்லை மீறமாட்டான்… ஒரு முறை வர்மனின் கார் சிக்னலில் நின்றுகொண்டிருக்க வர்மன் முல்லையிடம் நெருக்கமாக இருப்பதை முல்லையின் அண்ணன் முகேஷ் பார்த்துவிட்டான்… அவனது டிரைவரிடம் “டேய் இவன் வர்மன் தானே” பாரு என்று டிரைவரை பார்க்க சொல்ல “ஆமா அண்ணே வர்மன் தான்… இவன் கூட நம்ம தங்கச்சி” என்று இழுத்துப் பேச..
“அவ வீட்டுக்கு வரட்டும் காலை உடைச்சு போடுறேன்” என்றவன் முகம் முழுவதும் எள்ளும் கொள்ளும் வெடித்தது… முகேஷ், வர்மாவிடம் இரண்டு முறை அடிவாங்கியிருக்கிறான்… அதுவும் பெண்கள் விசயத்தில் தான் அவன் அடிவாங்கியது… இப்போது வர்மன் அடித்ததை எண்ணி கன்னத்தை தேய்த்த முகேஷ், உனக்குப் போய் என் தங்கச்சிய கட்டிவைப்பேனாடா நான்… என்று வஞ்சம் கொண்டு பேசியவன் “காரை எடுடா வீட்டுக்கு போலாம்” என்றான். வீட்டுக்கு சென்றதும் தந்தை சந்தானத்திடம் முல்லையை பற்றி கூற… அப்போதே முல்லைக்கும் அரசியல் வட்டாரத்தில் சந்தானத்தின் நண்பன் மகனுக்கும் திருமணம் என முடிவு செய்தார் சந்தானம்.
முல்லையை பக்கத்து தெரு வரைக்கும் காரில் கொண்டு வந்து விட்ட வர்மன்… “பைடி பப்லி நாளைக்கு பார்க்கலாம் … என்று சொல்லி அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து முல்லையை இறங்கிவிட்டுச் சென்றான்.
முல்லை எப்போதும் போல வீட்டுக்குள் போக… “நில்லு முல்லைஏன் இவ்ளோ லேட்?” என்று சந்தானம் காரசாரமாக கேட்க.
“ஸ்பெஷல் கிளாஸ்ப்பா” என்று சொல்லிவிட்டு நின்று பார்க்காமல் மேலே மாடிப்படியேற.
“ஒரு நிமிசம் முல்லை..நின்னு பதில் பேசு” என்றான் முகேஷ்.
“இவங்களுக்கு நம்ம லவ் பத்தி தெரிஞ்சிருச்சு போல” என்று நோட்டை இறுகப்பற்றிக்கொண்டு சந்தானம் முன்பு போய் நின்றாள்.
“உட்காரு முல்லை” என்று சாந்தமாக பேசினார் சந்தானம்.
அலாட்டா இரு முல்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
“முல்லை உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன்… என் ப்ரண்ட் மகன் பரத்தான் மாப்பிள்ளை… அமெரிக்காவுல சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கான்… அடுத்த வாரம் கல்யாணம் ரெடியா இரு”
“அப்பா இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு டிகிரி முடிக்க”
“நீ படிச்சு ஒண்ணும் வேலைக்கு போகப் போறதில்லைல… அப்புறம் என்ன கல்யாணத்துக்கு தயாரா இரு… இப்ப நீ அறைக்கு போலாம்”என்று தந்தையும் மகனும் கல்யாணத்துக்கு பந்தல் போடுவதைப் பத்தி பேச ஆரம்பித்தனர்.
முல்லை எழுந்து அவள் அறைக்குப் போக… அவள் பின்னாடியே வந்த முகேஷ், “முல்லை இன்னொரு முறை வர்மன் கூட உன்னப் பார்த்தேன் வீட்டுக்குள்ள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிடுவேன்… இல்ல இல்ல நீ நாளையிலிருந்து வெளியவே போக வேண்டாம்… அப்படி மீறி போன உன் காலை வெட்டிப் போட்டிருவேன் பார்த்துக்க” என்று முல்லையை எச்சிரித்து போனான்.
முல்லைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அறைக்குள் போனதும் போனை எடுத்து வர்மனுக்கு போட.. வர்மன் போனை ஜார்ஜில் போட்டிருந்தான்.. போன் எடுக்கவில்லை.. வெளியே சிம்மனுடன் அடுத்த சம்பவத்துக்கு ப்ளான் போட்டுக்கொண்டிருந்தனர் இருவரும்.
முகேஷ் முல்லை அறைக்குள் வர அவள் வர்மனுக்கு போன் போட்டுக்கொண்டிருந்தாள்.
“நினைச்சேன்டி நீ வர்மனுக்கு போன் பண்ணுவேனு.. அதான் பின்னாடியே வந்தேன்” என்று அவளது போனை பிடிங்கிக் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு “நாளை மறுநாள் உனக்கு பரத்க்கும் கல்யாணம்” என்று முகேஷ் வெளியே சென்றுவிட.. இப்போது வர்மனிடம் எப்படி பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.. இருவரும் தினமும் பார்த்துக்கொள்ள துவங்கியதும் வர்மன் வீட்டுக்கு அதிகம் வருவதில்லை.. வர்மா இன்னிக்கு வந்துடு சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து அழுது கரைந்தாள்.
பட்டம்மா வந்து சாப்பாடு கொடுத்தும் அவள் சாப்பிடவில்லை.. “கண்ணு சாப்பிடாம இருந்தாலும் உங்கப்பன் வந்து உன்னை திட்டுவான்.. ஒரு வாய் சாப்பிடு சாமி” என்று கேட்க..
பட்டம்மாவுக்காக சாப்பாட்டை வாங்கி வைத்து “நீ போங்கம்மா நான் சாப்பிட்டுக்குறேன்” என்று அவரை அனுப்பிவிட்டு கதவை லாக் வைத்துவிட்டாள்.
வர்மன் சிம்மனுடன் பேசி விட்டு போனை பார்க்க முல்லையின் மிஸ்டு கால் இருக்க.. “பப்லி போன் பண்ணியிருக்கா” என்று முல்லைக்கு போன் போட.. போன் சுவிட்ச்ஆப் என்று வர.. போன் சுவிட்ஆப் பண்ணமாட்டாளே என்று தாடையை தேய்த்து சம்திங் ராங் என யோசித்தவன் அப்போதே சிம்மனிடம் கூற.. “டேய் போன் சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்டா.. பேசாம வாங்கி வச்சி பிரியாணியை சாப்பிட்டு படுக்கலாம் வா” என்று வர்மனை கூப்பிட
“இல்லடா என் மனசுக்கு சரியா படல.. அவள இப்பவே பார்த்தாகணும்” என்று வருத்தப்பட்டு கூற..
“டேய் முகத்தை இப்படி வைக்காத வா வந்து தொல போலாம்” என்று சிம்மன் வர்மனைகூட்டிக்கொண்டு முல்லை வீட்டுக்குச் சென்றான்.
எப்போதும் போல பால்கனி வழியே சென்று பார்க்க.. பால்கனி கதவு திறந்திருக்க.. உள்ளே எட்டிப்பார்த்தான் வர்மன்.. பட்டம்மா கட்டிலில் படுத்திருக்க.. முல்லையோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
“பப்ளி ” என்று வர்மனின் குரல் கேட்டதும் அந்நொடி ஓடிவந்து தாயை கண்ட சேய் போல அவனை அணைத்துக்கொண்டாள்.
- மோக முத்தாடு அசுரா
“பப்லி” என்று வர்மனின் குரல் கேட்டதும் அந்நொடி ஓடிவந்து தாயை கண்ட சேய் போல அவனை அணைத்துக்கொண்டாள்.
“பப்லி என்னடி என்னாச்சுடி ஓடிவந்து கட்டிப்பிடிக்குற.. அவள் அணைப்பதிலேயே அவளின் பயம் அவனுக்கு புரிந்து போக “பிரச்சனையா” என அவள் மனம் அறிந்தவனாக அவளை அணைத்துக்கொண்டே கேட்க
“வர்மாஆஆ.. நம்ம லவ் மேட்டர் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கடா.. அமெரிக்கா மாப்ளயாம்… அண்ணா உன்னை பார்க்ககூடாது.. பேச கூடாதுன்னு போனை கூட வாங்கிட்டு போய்ட்டான்” என்று அவள் உதடு துடிக்க கண்ணில் கண்ணீர் வர பேச.. அவளது கண்ணீர் அவனது வெற்று மார்பில் பட..
“பப்லி அழறியாடி” என்று அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு கலைந்த அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டு இந்த ஜென்மத்துல நீ தான் எனக்கு பொண்டாட்டி நான் தான் உனக்கு புருஷன் இதை யாராரும் மாத்த முடியாது பப்லி..எந்தக் கொம்பன் நினைத்தாலும் நாளைக்கு காலையில நமக்கு கல்யாணம் நடக்கறத தடுக்க முடியாது.. என்று அவள் கன்னத்தில் முத்தமிட அவன் முத்தத்தை வாங்கியவள்.. அவனது கழுத்தை வாகாக பிடித்துக்கொண்டு அவளாக அவன் இதழில் முத்தமிடத்துவக்கினாள்.. அவள் முத்தத்தில் அவன் மீது கொண்ட அதீத காதலை தெரிந்து கொண்ட வர்மன்.. அவளுக்கு ஈடுகொடுத்து முத்தம் கொடுத்தான்..
முல்லைக்கு இருவரையும் எங்கே பிரித்துவிடுவார்களோ.. என்ற பயம் அவளுக்கு நிறையவே வந்து விட்டது.. தந்தை அரசியலில் பெரிய ஆளாக இருப்பவர் வர்மனை ஏதாவது செய்து விடுவான் என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது.. ஆனால் வர்மன் சிம்மனை பற்றி முல்லைக்கு முழுதாக தெரியவில்லை.. ஏன் சொந்தவீட்டில் தந்தையும், அண்ணனும் செய்யும் மோசமான தில்லாலங்கடி வேலைகளும் கூட அவளுக்குத் தெரியாது.
முல்லை வர்மனின் கைகளை எடுத்து அவளது மென்பாகத்தில் பதிக்க விட.. தேன் முத்தத்தில் திளைத்திருந்தவன் அவளது செயலில் அதிர்ந்து போய் இதழை விட்டு பிரிந்து “என்னடி இது என்ன பண்ற” என்று சற்று கோவத்துடன் கேட்க
“இல்ல நாம் இப்பவே சேர்ந்துட்டா நம்மள யாரும் பிரிக்க முடியாது?” என்று இதழ் பிதுக்கி கண்ணை உருட்டி விழிக்க
“லூசு.. லூசு.. உன்னை அடையனும்னு எனக்கு தோனியிருந்தா.. நீ லவ் சொன்ன அடுத்த நாளே நான் உன்னை எடுத்திருப்பேன்.. எனக்குனு ஒரு கொள்கை இருக்குடி.. கல்யாணம் பண்ணித்தான் உன்னை முழுசா எடுத்துக்கணும்.. என் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையாடி” என்று அவள் நெற்றியில் முட்ட.
“அப்பா ரொம்ப மோசமானவரு என்னை பொண்ணு போல நடத்தமாட்டாரு.. ஏதோ கடமைக்கு சாப்டியானு கேட்பாரு அவ்ளோதான்.. அவருக்கு அரசியல்வாதி குடும்பத்து மருமகளா நான் போகணும்னு நினைக்குறாரு வர்மா.. என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடு” என்று அவனை அணைத்து கண்ணீர் விட.
“பைத்தியமாடி நீ! நான்தான் சொல்றேன்ல நீதான் என் பெண்டாட்டின்னு.. இன்னும் சும்மா அப்பாவ கண்டா பயமாயிருக்கு.. அண்ணனை கண்டா பயமாயிருக்குனு புலம்பிகிட்டிருக்கா.. என்னை பத்தி இன்னும் உனக்கு முழுசா தெரியலடி” என்று மீசையை முறுக்கிக்கொண்டு நாளைக்கு காலையில மாமன் உன் வீட்டு ஆளுங்க முன்னாடி வைச்சு தூங்குவேன்.. என்று சொல்லி.. “நான் இப்ப கிளம்புறேன்.. எனக்கு முத்தம் கொடுத்து வழியனுப்புடி பப்லி” என அவள் கன்னத்தோடு கன்னம் உரச.. அவளுக்கோ எனக்கு எந்த நேரத்துல என்ன நடக்கும்னு பயமாயிருக்கு. இவன் முத்தம் வாங்குறதுலயே குறியாயிருக்கான்.. என்று எண்ணியவள் வர்மா ஏங்கிபோவானென்று அவன் கன்னத்தில் அழுத்தமிட்டு திரும்பி நின்று கொண்டாள்..
வர்மனை விட்டு பிரியமனமில்லை முல்லைக்கு..அவன் மடியில் படுத்துக்கிடக்கவே ஆசைப்பட்டாள்..
“ம்ப்ச்.. கீழ சிம்மன் வெயிட் பண்ணுறான்டி.. சின்னபிள்ள போல அடம்பிடிக்காத” என்று அவளை தன்புறம் திரும்பி அணைத்துக்கொண்டு “இன்னிக்கு ஒரு ராத்திரிதான் நீ இங்க இருக்கப் போற.. நாளைக்கு நைட் மாமன் வீட்டு மஞ்சத்துல இருப்படி” என்று அவள் கழுத்து வளைவில் முத்தம் கொடுத்து கிளம்புறேன் என்று கிளம்பினான்.. வர்மனை மனமேயில்லாம் அனுப்பி வைத்தாள் முல்லை.
வர்மன் கீழே சென்றதும் “சிம்மா சந்தானத்துக்கு எங்க லவ் தெரிஞ்சிடுச்சு போல முல்லைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கான் பன்னி பய.. பாவம்டா முல்லை பயந்து போய்ட்டா.. போதாகுறைக்கு அவ அண்ணன் முகேஷ் போனையெல்லாம் வாங்கி வச்சுக்கிட்டானாம்.. லூசு பயலுக.. நான் வீட்டுக்கு வந்து போறது கூட தெரியாத கூம்முட்டை பயலா இருக்கானுங்க.. அப்பனும் மவனும்” என்று கிண்டல் செய்து சிரித்தான் வர்மன்.
“டேய் வர்மா சந்தானத்தை அவ்வளவு எளிதா நினைச்சுராத.. அவன் எம்.எல்.ஏ பதவிக்கு வரதுக்கு அவனுக்கு மேல இருந்த ஆள போட்டுத்தள்ளிட்டுத்தான் வந்திருக்கான்.. ஊமகுசும்பன்.. கொஞ்சம் பார்த்து தான் மூவ் பண்ணனும்.. அவன் நாளைனைக்கு கல்யாணம்னு சொன்னா நாளைக்கு காலையில கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுவாங்க.. நான் ப்ளான் போடுறது போல செய்யலாம் வாடா” என்று சிம்மன் இருக்க வர்மன் கவலைபடக்கூடாது என்று வர்மனை அணைத்துக்கொண்டான்.
வர்மன் கீழே சென்றதும் கதவை திறந்து உள்ளே போக பட்டம்மா நின்றிருந்தார்.
“பட்டம்மா நான் அவர விரும்புறேன்.. அப்பா என்னை அந்த அமெரிக்காரனுக்கு கட்டிக்கொடுக்க பார்க்குறாரு.. அவன் கண்டிப்பா நல்லவனா இருக்க வாய்ப்பு இருக்காது” என்று கூறிவிட்டு அவரை அணைத்துக்கொள்ள..
“உன் மனசுக்கு பிடிச்சிருந்தா அந்த தம்பியையே கல்யாணம் பண்ணிக்க கண்ணு.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும் தாயி.. போ போயி படுத்து தூங்கு.. காலையில அந்த தம்பி வரேன் சொல்லிச்சுல்ல எனக்கு காது கேட்டுச்சு” என்று பட்டம்மா சிரிக்க.
“அப்போ அவர் வந்தது உனக்கு தெரியுமா பட்டம்மா.. அந்த தம்பி டெய்லி வரது தெரியும் பாப்பா.. நல்ல பையனா இருக்கும்னு என் மனசுக்கு தோணுசு கண்ணு.. நாளைக்கு கல்யாணம் பண்ணினா இந்த பட்டம்மாவ மறக்காத கண்ணு” என்று கட்டிலில் அமர்ந்தார்.
“நான் உன்னையும் என்கூட கூட்டிட்டுப்போவேன் பட்டம்மா”
“கண்ணு நான் நாளைக்கு என்னோட ஊருக்குப் போக வேண்டியிருக்கு அங்க போய் என் பேத்தி கல்யாணம் முடிச்சதும் நான் உன்னோட வீட்டுக்கு வரேன்” என்று படுத்துக்கொள்ள..
காலையில் வர்மன் வருவானா? என்று முல்லையும் கண்ணை மூடிப்படுத்தாள்.. தூக்கம்தான் வரவில்லை விடியற்காலையில் கண்விழிப்பு வர.. எழுந்து உட்கார்ந்தவளின் காதுக்கு வீடே பரப்பரப்பாக இருந்தது.
பட்டம்மா தாம்பூலத்தில் பட்டுப்புடவை, நகை வைத்துக் கொண்டு வந்தவர் “கண்ணு அப்பா இந்த புடவையை கட்டிகிட்டு நகை போட்டு உன்னை கீழ வரச்சொன்னாரு” என்று அவள் முகத்தை பாவமாக பார்க்க..
“ஹா!! ஹா!! பட்டம்மா நீங்க கவலைப்படாதீங்க என்னோட வர்மன் வந்துடுவான் என்னை இந்த நரகத்திலிருந்து கூட்டிட்டுப் போக.. என்று துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச்சென்றாள்.. அவளுக்குப் பயம் சிறிது இருக்கத்தான் செய்தது.. ஆனால் வர்மன் சொன்ன சொல் மாறமாட்டான்.. என்று அவன் வார்த்தையில் நம்பிக்கையிருந்தது.. குளித்து விட்டு வந்தவள் பட்டுப்புடவை கட்டி.. நகையெல்லாம் போட்டு புன்னகையுடன் ரெடியானாள்.
இந்தப் பொண்ணு பயம் இல்லாம ரெடியாகுது என பட்டம்மாவுக்கு தான் கவலை வந்தது.
சந்தானம் முல்லை அறைக்கு வந்தவர்.. “முல்லை ரெடியாகிட்டயா” என்று சக்கரையாய் பேசி அவளருகே போக..
“ம்ம்.. ரெடியாகிட்டேன்பா” என்று எழுந்து நின்றாள்.. அவள் கழுத்தில் போட்டிருந்த நகைகளை பார்த்து “முல்லை நீ கழுத்துல போட்டிருக்கிற வைர நகையெல்லாம் உன்ன கல்யாணம் பண்ணப் போற பரத் வாங்கிக்கொடுத்தது தெரியுமா? இன்னும் நமக்கு சொத்து வரப்போகுது” என்று பல்லைக் காட்ட.
“ப்பா.. நம்மகிட்டதான் சொத்து இருக்கே.. எதுக்கு இப்படி அலையுறீங்க” என்று கேட்டேவிட்டாள் முல்லை.
முல்லை கேட்டதும் சந்தானத்திற்கு சுருக்கென்று கோபம் வர.. “வாயமூடு அதிகம் பேசாத எனக்கு என்ன பண்ணனும் தெரியும்” என்று அவளின் கையைப்பிடித்து அங்க வந்து நில்லு.. என தன்னுடன் இழுத்து கீழே ஹாலுக்கு வந்தார்.
ஹாலில் மணவறை டெக்கரேசன் செய்திருந்தனர்.. மணவறையைப் பார்த்ததும் முல்லைக்கு நெஞ்சுக்குள் திக்கென்றது.. “அப்போது கூட அப்பா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.. நான் தாலி கட்டும்போது எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலன்னு எழுந்துடுவேன்” எனச் சொல்ல..
“நீ இப்படி சொல்வேனு தெரியும் அப்படி சொன்னா உனக்குப் பிடிச்ச பட்டம்மா கழுத்துல கத்தி வச்சிருக்கேன்.. நீ தாலி கட்டிக்கலனா அவங்க கழுத்த அறுத்துடுவேன்” என்று நயவஞ்சகமாக பேசினார் சந்தானம்.