- மோக முத்தாடு அசுரா
“ச்சே.. நீயெல்லாம் ஒரு அப்பனா?”
“நீதான் அப்பானு கூப்பிடுற” என்று கேலியாக சிரித்து மணவறையில் பரத் உட்கார்ந்திருக்க முல்லைய பரத் பக்கத்தில் உட்கார வைத்தார் சந்தானம்..
வர்மன் இன்னும் வரவில்லையே என்று முல்லை வாசலையே பார்த்திருந்தாள்..
“ஹாய் பேபி என்ன வெளியே வேடிக்கை பார்க்குற.. நம்ம கல்யாணத்தை என்ஜாய் பண்ணலாம்.. நேத்து தான் உன் போட்டோ பார்த்தேன் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.. போட்டோவ விட நேர்ல செம பிகரா இருக்க.. நீ யாரையோ லவ் பண்ணுறையாமே.. அவன்கிட்ட கெட்டு போயிருந்தாலும் பரவால.. டேக் இட் ஈஸி” என்று அவன் அவள் காதோரம் போய் ஏதோ பேச.
“போடா கொய்யால.. கழுத்த கடிச்சு துப்பிடுவேன்டா.. போடா சப்ப வாயா.. நீ கட்டுற தாலியை நான் ஏத்துக்கமாட்டேன்டா” என்று முகத்தை திருப்பிக்கொண்டு வர்மா வந்துருடா.. வர்மா வந்துருடா.. என்று மந்திரம் போல சொன்னாள்.
சந்தானமும் முகேஷும் அவன் பக்கத்தில் சில அரசியல் புள்ளிகளும் பரத் அப்பா முருகேசனும் பரத் முல்லையுடன் பேசுவதை பார்த்து கிண்டல் செய்து உட்கார்ந்திருந்தனர்..
சந்தானத்திற்கு மட்டும் மகள் பரத்துடன் கோபமாக பேசுகிறாள் என்று தெரிந்தது.. அவர் முல்லையை பார்த்து முறைக்க.. அவரை சட்டை செய்யாமல் வாசலையே பார்த்திருந்தாள்.
ஐய்யர் கெட்டி “மேளம் கெட்டி மேளம்” என்று கூற..
பரத் பல்லை காட்டிக்கொண்டு முல்லை கழுத்தில் தாலி கட்ட வர. அவளோ கழுத்தை பின்னோக்கி வர.. பக்கத்தில் நின்ற பெண்ணொருவர் அவளை பிடித்து பரத் பக்கம் சாய்க்க..
தாலியை கழுத்துக்கு கொண்டு போக… கடவுளை கூட கூப்பிடாத முல்லைக்கொடி.. வர்மா.. வர்மா.. என்று கூப்பிட்டவளின் இதயம் எகிறி குதித்துவிடும் போலிருந்தது.. முல்லை கண்ணை இருக மூடி அமர்ந்திருந்தாள்.. இப்போது கூட எழுந்துவிடுவாள் தான் பாவம் பட்டம்மா என்னை வளர்த்து ஆளாக்கியவர்.. என்று அவருக்காக பல்லைக்கடித்துக்கொண்டு வர்மன் வந்துவிடுவான் என்று நம்பிக்கையில் அமர்ந்திருந்தாள்.
வர்மனுக்கு விடியற்காலையில் முல்லையின் திருமண செய்தி அவன் காதுக்கு போக.. சிம்மன் வெளியே சென்றிருந்தான்.
எப்படியும் இன்னிக்கு காலையில் முல்லை வீட்டுக்கு போய் என் பொண்டாட்டிய தூக்கித்தான் வரப்போறேன்.. என்ன இப்ப சண்டை போட்டு தூக்கி வரணும் அவ்ளோதான் என எண்ணியவன் சிம்மனுக்கு போன் போட்டு விசயத்தை கூறி.
“நான் முன்னே போறேன்டா.. நீ சீக்கிரம் வந்துடு” என்று காரை எடுத்துக்கொண்டு பறந்து சென்றான்.
சந்தானம் வீட்டைச் சுற்றிலும் காவலுக்கு ஆள் போட்டிருக்க.. அத்தனை பேருக்கும் கல்தா கொடுத்து.. மீறி வந்து தடுத்தவர்களை அடித்து போட்டுவிட்டு முல்லை கழுத்தில் தாலி கட்டும் நேரம் பாய்ந்து சென்று தன் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து முல்லையின் கழுத்தில் கட்டிவிட்டான்.
“வர்மாஆஆஆ” என்று சந்தானம் எழுந்து நின்று அவன் பக்கம் வந்தவர் வர்மன் கழுத்தில் கத்தியை வைத்து அவனை இழுத்து வந்தார்.
“ஹேய் முல்லை அவன் கட்டிய தாலியை கழட்டுடி” என்று எந்த தந்தையும் சொல்லாத வார்த்தை சந்தானம் கூற.
“முடியாது என்னையும் சேர்த்து அவரோடு கொன்னுடுங்க” என்று முல்லை, வர்மனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
“டாட் எனக்கு முல்லை வேணாம்” என்று மாலையை கழட்டினான் பரத்..
“மாப்ள கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. இந்த வர்மன என் கையால போட்ட தள்ளிட்டு என் தங்கச்சி கழுத்துல தாலியை நான் கழட்டி எறியுறேன் அப்புறம் நீங்க தாலி கட்டலாம்” என்று விகாரமாக சிரித்த முகேஷ் கத்தியை எடுத்துக்கொண்டு வர்மனை வெட்டப் போக.
வர்மனை நாலு பேர் சேர்ந்து பிடித்திருந்தனர்.. அதுமட்டுமா அவன் கழுத்தில் சந்தானம் வேறு கத்தியை வைத்திருந்தார்.. அவன் திமிறி திமிறி நின்றான்.
வர்மன் சந்தானத்தின் பிடியிலிருந்து திமிறி முகேஷ் கையிலிருந்த கத்தியை வாங்கி அவன் கழுத்தில் வைக்க.
“டேய் வர்மா என் மகன் கழுத்திருந்து கத்தியை எடு இல்லனா உன் பொண்டாட்டி கழுத்துல கீறல் போடுவேன் பாரு என் பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்” என்று முல்லை கழுத்தில் கத்தியை வைத்தான்.
முல்லை நீயெல்லாம் அப்பனா என்று ஒரு பார்வை பார்க்க “நீ எப்ப அந்த வர்மன் கட்டிய தாலிய கழட்ட மாட்டேன் என்று சொன்னியே அப்பவே என் பொண்ணு இல்லடி” என்று கழுத்தில் கத்தியை வைத்தார் சந்தானம்.
வர்மன் அனைவரையும் அடித்து போட்டு இருப்பான்.. அதற்குள் முல்லை கழுத்தில் சந்தானம் கத்தியை வைப்பான் என்று அவன் நினைக்கவில்லை.
வர்மன் முல்லையை பார்த்துக்கொண்டு கத்தியை கீழே போட முகேஷ் கத்தியை கையில் எடுத்து “டேய் என்னைய எப்படியெல்லாம் அடிச்ச என்று முகேஷ், வர்மனின் கழுத்துக்கு பக்கம் கத்தியை கொண்டு போக..
“அண்ணா வேண்டாம் விட்டுடு ப்ளீஸ்” என்று முல்லை, முகேஷ் காலை பிடித்துக் கெஞ்ச.. முல்லையை தள்ளி விட்டு கத்தியை வர்மன் கழுத்தில் கீறல் போட வர்மன் அவனைப் பார்த்து கோணலாக சிரித்தான்..
“என்னடா சிரிக்குற” என்று முகேஷ் நக்கலாக சிரிக்க.
“சிம்மன் முகேஷை பின்னிருந்து எட்டி ஒரு எத்து விட அவனோ குட்டிக்கரணம் போட்டு விழுந்தான்.
முல்லைக்கு இப்போது தான் மூச்சே வந்தது.
“யாரு மேலடா கத்தியை வைச்சு மிரட்டுற.. வர்மன் என் நண்பன்டா.. என்னைய மீறி வர்மனை தொட்டதுக்கே உன் கையை கண்ட துண்டமா வெட்டியிருக்கணும்.. முல்லையோட அண்ணான போய்ட்ட.. இல்லை இன்னேரம் உன் கைகால உடைச்சு ஹாஸ்பெட்டல படுக்க வச்சிருப்பேன்” என்று மீசையை முறுக்கி கொண்டு வர்மனை தூக்கிவிட்டான்.
சிம்மனை பற்றி சந்தானத்திற்கு தெரியும் சிம்மனை வெளியே அனுப்பி வைத்ததும் சந்தானம் தான் அவன் இங்கே இப்போதைக்கு வரமாட்டான்.. என்று நினைக்க அவனோ வர்மன் செய்தியைக் கூற.. காற்றாக பறந்து வந்திருந்தான்.
சிம்மனை கண்டதும் சந்தானம் அமைதியாக நின்று கொண்டார்.. முருகேசனுக்கு சிம்மனை பத்தி தெரியும் அதனால் அவரும் அடக்கி வாசித்தார்.
“என்ன சந்தானம் என்னைப்பத்தி தெரிஞ்சும் நீரு உன் குள்ளநரித்தனத்தை என்கிட்ட காட்டுறீயா.. கூண்டோட அழிச்சிடுவேன்.. நீ பண்ணின கோல்மால்கள் அனைத்தும் என் கையில இருக்கு.. அதை போலீஸ்ல சொன்னேன் வையி.. காலம் முழுக்க ஜெயில்தாண்டி” என்று சந்தானத்தின் காதருகே போய் மிரட்ட.
“நான் மாட்டினா நீயும்தான் மாட்டுவ சிம்மா” என்று சந்தானமும் பேச..
“அய்யோ இவர் எல்லாம் செய்ய சொன்னாரு நான் ஜகா வாங்கிடுவேன்.. எனக்கு எப்படி வெளியே வரணும்னு தெரியும் சந்தானம்.. இனிமே என்கிட்ட வச்சிக்காதே என்னோட நண்பன் …ர உன்னால பிடுங்க முடியாது” என்று சிரிக்க.
“நண்பேன்டா” என்று சிம்மனை அணைத்துக்கொண்டான் வர்மன்.. “போதும்டா வா” என்று வர்மனையும், முல்லையையும் கூட்டிட்டு வெளியே வர..
“என்னங்க பட்டம்மாவ உள்ளே அடைச்சி வச்சிருக்காங்க” என்று வர்மன் காதில் சொல்ல..
“போய் பட்டம்மாவ கூட்டிட்டு வா முல்லை” என்று வர்மன் கூற..
முல்லை தன் அறைக்குப்போய் தன் கழுத்தில் போட்டிருந்த நகையெல்லாம் கழட்டி ஒரு பெட்டியில் போட்டுவிட்டு கட்டியிருந்த புடவையை கழட்டிவிட்டு போன வாரம் அவுட்டிங் போயிருந்த சமயம் வர்மன் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு பட்டம்மாவை கூட்டிக்கொண்டு வந்தவள்..
“இந்தாங்க நீங்க கொடுத்த நகை புடவை எல்லாம்.. என் புருசன் என் கழுத்தில் கட்டின தாலியோட தான் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன்.. என்னை தேடி வராதிங்க” என்று சந்தானத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு சென்றாள்.
சந்தானத்திற்கு மகளை கொன்று போடும் அளவிற்கு கோபம் இருந்தது.. சிம்மன் முன்னால் எதுவும் செய்ய முடியாது.. என்று கையை கட்டிக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி நின்றார்.
“நன்றி தம்பி என்று பட்டம்மா” வர்மனுக்கு நன்றி சொல்ல..
“அம்மா என் நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றவன் பட்டம்மாவையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்தனர்.
நால்வரும் காரில் ஏறப் போக.. வெளியே வந்த சந்தானம் “சிம்மா உன் நண்பன இப்ப காப்பாத்திட்ட ஆனா எப்பவும் இதே போல காப்பாத்த முடியாது.. அவன் சாவு என் கையிலதான்” என்று கத்தி சொல்ல..
அது இந்த ஜென்மத்துல நடக்காதுடா.. என்று சிம்மன் கர்ஜித்து காருக்குள் ஏறினான்.
முல்லை வர்மனின் கையை பற்றிக்கொண்டாள்.. அவனும் பயப்படாதே என்று அவள் கையில் இறுக பிடித்து கொண்டான்
பட்டம்மாவை பஸ்ஸில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் போகும் போது முல்லை, வர்மனின் கழுத்தில் வடிந்த இரத்தத்தை புடவை முந்தானையில் துடைக்க.. “சும்மா கீறல்தாண்டி ஒண்ணுமில்ல” என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
“நண்பா நான் முன்னாடி கார் ஓட்டணும்டா.. நீங்க உங்க ரொமான்ஸ வீட்டில போய் வச்சிக்கிங்க” என்று அவர்களை கிண்டல் செய்ய.
முல்லை வர்மன் மார்பில் நிம்மதியாக தலைசாய்த்தாள்.. அவள் தலையை வருடிக்கொடுத்து இடுப்போடு கைப்போட்டு அணைத்துக்கொண்டான்.
வர்மன் வீட்டுமுன்பே கார் நிற்க.. காரைவிட்டு இருவரும் இறங்க பக்கத்தில் இருக்க பெருமாள் கோவிலுக்கு போய்ட்டு போலாம் வாங்க.. என்று சிம்மன் அவர்கள் இருவரையும் கூட்டிச்சென்றான்.. அங்கே பூஜைக்கு காரில் ஏறும் போதே ஏற்பாடு செய்துவிட்டான்.. “நண்பா இந்தா இந்த பட்டுவேட்டி சட்டையை போட்டு வா.. இந்தாம்மா உனக்கு பட்டுப்புடவை” என்று முல்லையிடம் கொடுத்து இருவரையும் அனுப்பி வைக்க..
“டேய் இதெல்லாம் எப்படா செய்த” என்று வர்மன் கண் கலங்கிவிட்டான்..
“போடா! போடா!! சின்ன பிள்ளை போல அழுதுகிட்டு இதெல்லாம் கார்ல வரும்போதே நம்ம பயல்க கிட்ட சொல்லியிருந்தேன் அவனுங்க எல்லாம் வாங்கி வச்சிட்டாங்க” என்று இருவரையும் கிளம்பி வரச்சொன்னான்.
இருவரும் ரெடியாகி வர.. தங்கத்தாலியுடன் சேர்ந்த மஞ்சள் கயிறு இருந்தது.. வர்மன் வெறும் கயிறு மட்டும் கட்டியிருந்தான்.. “என்னோட நண்பன் என் கண்ணு முன்னாடி தாலி கட்டணும்” என்று தாம்பூலத்திலிருந்த தாலிக்கொடியை எடுத்து கோவில் ஐய்யரிடம் கொடுத்து “சாமி பாதத்துல வச்சி எடுத்துட்டு வந்து கொடுங்க” என்றவுடன்.
ஐய்யர் தாலிக்கொடியை சாமி பாதத்தில் வைத்துக் கொண்டு வந்து வர்மன் கையில் கொடுக்க சிம்மனை ஒரு முறை கட்டிக்கொண்டு “நீ தாண்டா எனக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நண்பனா வரணும்” என்று கூறிவிட்டு முல்லையின் கழுத்தில் தங்கத்தாலியை போட்டு விட்டான்.
முல்லை சிம்மன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.. “அட எழுந்திருமா” என்று அவள்தோள் தொட்டு தூக்கி “என்னோட நண்பனை உன்கிட்ட கொடுக்குறேன்.. நீ அவன பத்திரமா பார்த்துக்கணும்” என்று கூறி நகைக்க.
ம்ம்” சரிங்கண்ணா” என்று புன்னகையுடன் தலையாட்டினாள் முல்லை.
மூவரும் வீட்டுக்குப் போக.. மணமக்களுக்கு பக்கத்து வீட்டுப்பெண்கள் ஆரத்தி எடுக்க உள்ளே சென்றனர்..
இத்தனை நாள் பூட்டியிருந்த பூஜையறையை கொஞ்ச நேரம் முன்தான் சுத்தம் செய்தனர் சிம்மனின் ஆட்கள்.. முல்லை விளக்கேற்றி முடித்ததும் பால் பழம் கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்ல.. அப்படியே முல்லையை தூக்கிச்சென்றான் வர்மன்.
பய ரொம்ப காய்ச்சு கிடக்கான் போல.. என்று தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான் சிம்மன்.. கட்டிலில் படுத்துக்கொண்டு சந்தானத்தை பற்றி யோசித்திருந்தான் சிம்மன்.. இனி வர்மன தனியா விடக்கூடாது என்று எண்ணியபடி சற்று கண்ணயர்ந்தான்.
வர்மன் அறையில் முத்தச் சத்தம் தான் கேட்டது.. அவளை பாடாய் படுத்தி எடுத்தான்.. வர்மா விடு.. நைட் நல்லநேரம் பார்த்து தான் மத்ததெல்லாம் நடக்கணும்.. என்று அவன் கையை தட்டிவிட.
“பப்லி ரொம்ப சாப்டா இருக்கேடி.. எல்லாம் மெத்து மெத்துன்னு இருக்கு” என்று அவள் அங்கங்களில் விளையாட ஆரம்பித்தான்.
வர்மன் செய்யும் லீலிகளை சுகமாக ஏற்றவள் ஒரு கட்டத்துக்குமேல் “வர்மா ப்ளீஸ் எல்லாம் முறைப்படித்தான் நடக்கணும் பட்டம்மா சொல்லிட்டு போயிருக்காங்க” என்று அவன் கைகளுக்கு அணைபோட்டுத்தடுத்தாள்.
ஆனால் அன்றிரவு முதல் இரவு நடக்கவில்லை.. நாள் நல்லா இல்லை என்று ஜோசியர் சொல்லிவிட அன்று வர்மனை தன்னுடன் படுக்க வைத்து கொண்டான் சிம்மன்..
சிம்மனை முறைத்து கொண்டு வர்மன் தலையணையை கட்டி பிடித்து கொண்டு படுத்துக்கொண்டு “டேய் உனக்கெல்லாம் முதல் இரவு நடக்கவே கூடாதுடா” என்று கோவத்தில் கூற
“எனக்கு முதல் இரவு நடுத்துருச்சுடா” என்று சிம்மன் சிரிப்பை அடக்கி கொண்டு சொல்ல..
“போடா!! போடா! எல்லாம் இந்த ஜோசியரை சொல்லணும்” என்று தூக்கம் வராமல் சிம்மன் தூங்கிய பிறகு மெல்ல சென்று முல்லை படுத்திருந்த அறைக்கு பூனை போல சென்று அவளை அணைத்துக்கொள்ள “முல்லை வேண்டாம்ங்க நல்ல நாள்” என்று கூற “பப்லி சும்மா கட்டி மட்டும் பிடிச்சுகிறேன் வேற எதுவும் செய்ய மாட்டேன்” என்று முல்லையை அணைத்து கொண்டு தூங்கினான்.
அடுத்த நாள் தான் முதல் இரவு நடந்தது.. அன்றிரவு அவர்களுக்கு இனிதாகவே எல்லாம் நடந்தது.. நாமதான வர்மன் முல்லை பர்ஸ்ட் நைட் பர்ஸ்ட் எபிசோட்ல பார்த்தாச்சுல..
அடுத்த மாதமே முல்லை வாந்தியெடுக்க.. வர்மனும் முல்லையை ஒரு வேலை செய்ய விடவில்லை.. பட்டம்மா வந்து கொஞ்ச நாள் அவளுக்கு உதவியாக இருந்தார்.. பேத்தி மாசமாகிவிட விட.. அவரும் ஊருக்கு சென்று விட்டார்.. சிம்மன் முல்லைக்கு தினமும் பழங்கள் வாங்கி வந்துவிடுவான்..
வர்மனை சம்பவத்திற்கு கூட்டிட்டு செல்வதை நிறுத்தியிருந்தான்.. வர்மன் வருவேன் என்று அடம்பிடித்தால் “உனக்கு குழந்தை குட்டியாச்சு அதனால தொழில் வைச்சு தாரேன் அதை மட்டும் பாரு” என்று ஆர்டர் போட்டுவிட்டான்.. வர்மனுக்கும் இப்போது முல்லையை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.. ஒன்பதாம் மாதம் ஊரே மெச்சும் படி வளைகாப்பு நடத்தினான்.
பத்தாம் மாதம் முல்லைக்கு இடுப்பு வலி வர.. ஹாஸ்பிட்டலில் முல்லையை சேர்க்க.. இனியா பிறந்தாள்.. “நம்ம வீட்டுக்கு மஹாலட்சுமி வந்துவிட்டா வாழ்த்துக்கள் வர்மா” என்று நண்பனை கட்டிக்கொண்டான்.
“ஆமாடா நண்பா நமக்கு புதுசொந்தமா எனக்குப் பொண்ணு பொறந்திருக்கு.. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா நம்ம வீட்டுக்கு இன்னொரு மஹாலட்சுமி வரட்டும்” என்று சந்தோசமாக கூற.
“போடா டேய் நானெல்லாம் கல்யாணம் பண்ணமாட்டேன்.. என்னோட தேவதையே எனக்கு போதும்” என்று இனியாவை பார்க்க முல்லை அறைக்குள் வர்மனும், சிம்மனும் சென்றனர்.. இனியா கையை காலை ஆட்டிக்கொண்டு விரலை சப்பியபடி படுத்திருந்தது..
சிம்மன் “ஹேய் குட்டி சித்தப்பா வந்திருக்கேன் பாரு” என்று விரலை நீட்ட குழந்தை சிம்மனின் கையை பிடித்துக்கொண்டது.. சிம்மனிடம்தான் தான் வளர போகிறோம் என்று தெரிந்து கொண்டு குழந்தை கையை நீட்டியதோ என்று என்னோவோ?
சிம்மன் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றுவிட.. “தேங்க்ஸ்டி பப்லி பாப்பா ரொம்ப அழகாயிருக்குடி.. நான் அனாதை என்று நினைப்பே என் நண்பன் வரவிட்டதில்லை.. இப்போ எனக்கு நீ பெண் குழந்தையை கொடுத்து என்னை அப்பா ஆகிட்ட” என்று அவள் இதழில் மென் முத்தம் கொடுத்தான்.
மூன்றாம் நாள் வீட்டுக்கு வந்து விட.. குழந்தைய பார்த்துக்க மங்கா என்ற நடுத்தர வயதைக்கொண்ட பெண்ணை வேலைக்கு வைத்தனர்.. மூன்றாம் மாதம் இனியா என்று பெயர் சூட்டுவிழா நடத்தினான் வர்மன்.
குழந்தையை விட்டு நகரவில்லை வர்மன்.. கணக்கு வழக்குகளை மட்டும் பார்த்துக்கொண்டான் வர்மன்..
“அந்த நாள் வந்திருக்க கூடாது வஞ்சி.. என்னால மறக்க முடியாத நாள்” என்று கண்ணீருடன் கூறிக்கொண்டிருக்க..
“அம்மா” என்று ஓடிவந்தது இனியா..
கண்ணீரை துடைத்துக்கொண்டு “இனியா வந்துட்டியா” என்று குழந்தையை தூக்கி முகம் முழுவதும் முத்தம் இட்டாள் முல்லை.
“அம்மா பசிக்குது” என்று குழந்தை வயிற்றை தடவ..
“வாடி தங்கம் அம்மா பால் ஆத்தி தரேன்” என்று இனியாவை கிச்சனுக்கு கூட்டிச்சென்றாள்.
இனியாவின் பின்னே வந்த சிம்மன் என்ன முல்லை எதுக்கு அழுதா.. என்று எண்ணியபடி வந்தவன் வஞ்சி அப்படியே சிலைபோல அமர்ந்திருந்ததைக் கண்டவன்.
“ஏய் வஞ்சி என்னடி முல்லைக்கிட்ட கேட்ட.. உனக்கு தேவையான பதில் அவகிட்ட கிடைச்சுதா என்ன” என்று அவளிடம் அதட்டிக்கேட்க.
“ஹா என்ன சொல்றீங்க.. அ..அக்கா லைப்ல நடந்ததை கேட்டேன் அவ்ளோ தான்” என்று பம்மிக்கொண்டு சமையல்கட்டுக்கு சென்றாள்.
அதே நேரம் காளிங்கன் சென்னைக்கு காரில் அஜய்யுடன் கிளம்பி வந்துகொண்டிருந்தான்.
13 மோக முத்தாடு அசுரா
காளிங்கவர்மன் சென்னைக்கு வந்து விட்டான்.. அவனுக்காக போலீஸ் குவாட்டர்ஸில் வீடு கொடுத்திருந்தனர்.. காளிங்கனுக்கு குவாட்டர்ஸில் தங்க பிடிக்கவில்லை.. இரண்டு நாள் மட்டும் குவாட்டர்ஸில் தங்கிக்கொள்ளலாம்..என்று முடிவெடுத்திருந்தான்.
காளிங்கன் கேரளாவிலிருந்து கிளம்பியதும் சிம்மனுக்கு நியூஸ் வந்துவிட்டது.. காளிங்கன் போலீஸ் குவாட்டர்ஸில்தான் தங்கப்போகிறான் என்ற விபரமும் அவனுக்கு தெரிய வர.. அவனை தன்னுடன் அழைத்து வந்து விட வேண்டுமென்று போலீஸ் குவாட்டர்ஸ் முன் போய் நின்று விட்டான்.
“என்ன சிம்மா இந்தப் பக்கம் எஸ்.பி.ய பார்க்கனுமா” என்று இன்ஸ்பெக்டர் ஒருவர் கேட்க.
“இல்ல இன்ஸ் என்னோட நண்பனுக்காக காத்திருக்கேன்.. அப்புறம் எப்படி போகுது.. உங்க போலீஸ் ஸ்டேசனுக்கு புது ஏ.சி.பி வராருன்னு கேள்விப்பட்டேன்.. அதுவும் கை சுத்தமாமே.. உனக்கு அவரு சரிப்பட்டு வரமாட்டாரே” என்று தலைக்குமேல் கைத்தூக்கி நெட்டி எடுத்துக்கேட்க.
“அப்படித்தான் சொல்லிங்கராங்க சிம்மா.. எப்படியும் ஒரு ஆறுமாதம் இங்க கொலை கேஸ்ல சம்பந்தபட்டவன கண்டுபிடிக்கற வர இங்கதான் இருப்பாரு… கொஞ்சநாள் அடக்க ஒடுக்கமா இருக்கணும்.. எப்படியும் ஆறு மாசத்துல அந்த ஏ.சி.பி கிளம்பிடுவாருன்னு சொன்னாங்க” என்று இன்ஸ்பெக்டர் ரவி பெரும்மூச்சுவிட.
சர்ரென்று கார் அவர்கள் முன்னே நிற்க.. கண்ணில் சன்கிளாசுடன் இறங்கினான் காளிங்கவர்மன்.
அங்கே நின்ற இன்ஸ்பெக்டர் காளிங்கனை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான்.. “சிம்மா இ..இது நம்ம வர்மன் தான” என்று அவரது வாய் குளற.
“ஹலோ நான் ஏ.சி.பி காளிங்கவர்மன்” என்று சன்கிளாஸை கழட்டி இன்ஸ்பெக்டரிடம் சாதாரணமாக கைக்கொடுக்க..
“கு.குட்மார்னிங் சார்” என்று அவன் சல்யூட் அடிக்க.
“ம்ம்.. குட்மார்னிங் ரவி” என்று அவனின் பெயரைச் சொல்ல.
“சார் என் பேரு உங்களுக்கு எப்படித்தெரியும் சார்”
“ஐ நோ மேன்” என்று ரவியின் தோளில் தட்ட.
“நீ..நீங்க வ..வர்மன்தானே அப்புறம் எப்படி போலீஸா” என்று திக்கி திணறி கேட்க.
“ஆமா நான் காளிங்க வர்மன்தான்” என்று மென் நகையுடன் கூறியவன் சன்கிளாசை போட்டு சிம்மன் பக்கம் திரும்பினான்.
வர்மனின் தலைமுடி காற்றில் பறக்க கையால் கோதிவிட்டுக் கொள்ள சிம்மன் புன்னைகையுடன் கைக் கட்டி நண்பனின் மிடுக்கை கண் இமைக்காமல் பார்த்திருத்தான்.
“ஹலோ சிம்மன் எப்படி இருக்கீங்க.. என்ன இந்தப் பக்கம் யாரையாவது பார்க்க வந்திருக்கிங்களா? என்று நெற்றி தழுப்பை தடவியபடி அவன் பக்கம் போக.
“பைன் காளிங்கன்.. வெல்கம் டு சென்னை.. நான் உங்கள பார்க்கத்தான் வந்திருக்கேன்” என தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டு “இதோ இன்ஸ்பெக்டர் ரவியை பார்க்க வந்தேன்” என்று ரவியை ஒரு பார்வை பார்த்து நமட்டு சிரிப்புடன் கண்ணடித்தான் சிம்மன்.
சிம்மன் பார்த்த பார்வையின் அர்த்தம் கண்டு இல்லையென்று சொன்னால் சிம்மனிடம் யார் அடிவாங்குவது. என்று எண்ணியவன் “ஆமா சார் சிம்மன் என்ன பார்க்கத்தான் வந்தாரு “என்று கூறிவிட்டான்.
“சிம்மன் வாழ்த்துக்கள் காளிங்கன்” என்று கை கொடுக்க.
“ம்ஹும்” என தலையசைத்தவன் சிம்மனைக் கட்டிக்கொண்டான்.
பக்கத்தில் நின்ற ரவி போச்சுடா ரவுடியும் போலீஸ்சும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.. ரெண்டு பேரும் ரவுடியா இருந்தப்பவே இவனுங்க அலப்பறை தாங்கமுடியாது.. இப்ப ஒருத்தன் போலீஸா உருமாறி வந்திருக்கான்.. இந்த சிம்மன் ஏற்கனவே சீறிக்கிட்டுதான் இருக்கான்.. இப்பவே கண்ணை கட்டுதே ரவி.. இனி உன்கையில சம்பளக் கவர் மட்டும்தான் என்று திரும்பி நின்று புலம்ப ஆரம்பித்தான் ரவி.
அஜய் காரில் உட்கார்ந்தது போர் அடிக்க கார் கதவை திறந்து வெளியே வந்தது.
“அச்சா” என்று ஓடிவந்து காளிங்கனின் காலைப்பிடிக்க.
“மோனே” என்று அஜயை தூக்கிக்கொள்ள”
“ஹாய் அங்கிள்” என்று சிம்மனை பார்த்து புன்னைகை செய்தது அஜய்.
“ஹாய் மை கிங் எப்படி இருக்க” என்று அவன் கன்னம் தட்ட.
“பைன் அங்கிள் நான் உங்களை பார்க்கத்தான் காத்திருந்தேன்..
நீங்களே வந்துட்டீங்க.. என்ன எப்ப உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போவீங்க” என்று தலையை ஆட்டி கேட்க.
“இப்பவே போலாம் வர்றீயா” என்று கைநீட்ட ஒரே தாவில் சிம்மனிடம் சென்றான் அஜய்.
“நோ அஜய் இன்னொருநாள் போகலாம்.. இப்ப திங்க்ஸ் எடுத்து வைக்கணும் வா” என்று கூப்பிட.
“அச்சா ப்ளீஸ் அச்சா” என்று அஜய் அடம்பிடிக்க.
சரி போய்ட்டு வா என்றதும்.. ஐய் ஐய் என்று துள்ளிக்குதித்தான் அஜய்.
இரவெல்லாம் பார்வதியை கேட்டுக்கொண்டே இருந்தான் அஜய்.. அவன் மனது வெளியே போனால் மாறுமென்று சிம்மனுடன் போக அனுமதி கொடுத்தான்.
“சிம்மா இவன் கொஞ்சம் வாலு பார்த்துக்கோங்க.. இவன் ஐஸ்கீரிம் கேட்பான் வாங்கிக்கொடுத்துராதிங்க.. உடம்பு சரியில்லாம போகும் இவனுக்கு.. அப்புறம் நைட் உங்கவீட்டுக்கு தூக்கிட்டு வந்துடுவேன்” என்று சிம்மனிடம் எச்சரிக்கை விடுத்து கூற.
“ஓ.கே. நான் பார்த்துக்குறேன் காளிங்கன்” என்றவன் அவனை கூட்டிக்கொண்டு போகும் எண்ணத்தில் ”நீங்க குவாட்டர்ஸ்ல தங்க பிடிச்சிருக்கா.. இல்லைனா சொல்லுங்க எனக்கு தெரிஞ்ச வீடு இருக்கு..நீங்க அங்க கூட தங்கிக்கலாம்”என்று காளிங்கனை தன்னுடன் அழைத்துச் செல்ல அடிபோட்டான்.
“ஹோ தேங்க்யூ சிம்மா.. நானே நல்ல வீடா பார்க்கணும்னு நினைச்சேன்.. நல்லவேளை நீங்க இப்பவே வீடு இருக்குன்னு சொன்னீங்க.. இப்பவே அந்த வீட்டை பார்க்கலாமா.. நாளைக்கு டியூட்டியில் ஜாயின் பண்ணனும்”
“ஓ பார்க்கலாம் வாங்க”என்று சிம்மன் கார் கதவை திறந்து விட.
“சிம்மன் நான் என்னோட கார்ல வரேன்” என்று காளிங்கன் அவனது காரில் ஏறியவன் நடப்பதெல்லாம் கனவா? நனவா? என்று வேடிக்கை பார்த்திருந்த ரவியிடம் “ஹலோ ரவி நாளைக்கு காலையில ஸ்டேசன்ல பார்க்கலாமென கையசைத்து விட்டு இப்படியே சிலை போல நின்னுட்டிருந்தா தண்ணி லாரி மேல வந்து மோதிடுவான் ஓரமா நில்லுங்க” என்று சிரித்தபடி காரை எடுத்தான்.
“இன்ஸ் நான் கிளம்புறேன்” என்று ரவியை இடித்து விடுவது போல காரை ஓட்டிச் சென்றான் சிம்மன்.
“டேய் என்னங்கடா நடக்குது நான் பாட்டுக்கு சாப்பிடலாம்னு கடைக்கு போய்ட்டு இருந்தவன ரவுடியும் போலீஸும் சேர்ந்து கலாய்க்கீறீங்க” என புலம்பிக்கொண்டு சாப்பிடச்சென்றான்.
சிம்மன் வர்மனுக்கென்று தனியாக ஒரு வீடு கட்டி இருந்தான்.. அந்த வீடு இத்தனை நாளாய் பூட்டியிருந்தது.. காளிங்கன் சென்னை வருகிறான் என்று தெரிந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தான்.
அந்த புதிய வீட்டின் முன் கார் நிற்க.. இருவரும் காரை விட்டு இறங்கினர்.. காளிங்கன் வீட்டை உற்று பார்த்துக்கொண்டே நிற்க..
“என்ன காளிங்கன் வீடு பிடிச்சிருக்கா” என்று அவன் தோளை தொட..
“ஹா! பிடிச்சிருக்கு.. வீடு புதுசு போல இருக்கு.. என்று கேட்டுக்கொண்டே கேட் அருகே சென்றவன் கேட்டை திறக்க..
“சாவி என்கிட்டே இருக்கு என்று சிம்மன் காளிங்கன் கையில் சாவியை கொடுத்து திறக்கச் சொல்ல..
“இந்த வீட்ல ஏற்கனவே குடியிருந்தாங்களா” என்றவன் சாவி போட்டு கேட்டை திறந்து உள்ளே போக.. மரத்திலிருந்த பூக்கள் அவன் மேல் தூவியது.
“இல்ல காளிங்கன்.. நீங்கதான் முதன்முறை குடிவறீங்க.. அஜய் குட்டி, வீடு பிடிச்சிருக்கா.. இங்க உங்களுக்கு விளையாட மினி பார்கே இங்கே இருக்கு” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து சொல்ல.
“ஐ பார்க்கா!! ஜாலி!! இப்பவே விளையாட போலாம்.. எங்க அங்கிள் இருக்கு..” என்று ஆசையாக கேட்டது அஜய்.
“காளிங்கன் நீங்க வீட்டைதிறந்து உள்ள போங்க.. நான் அஜய பின்னால் இருக்க பார்க்குக்கு கூட்டிட்டுப் போறேன்” என்று வீட்டின் பின்னே இருந்த பார்க்குக்கு போக..
“அஜய் ஈவ்னிங் விளையாட போகலாம்.. இப்ப வேண்டாம் வெயிலா இருக்கு” என்று கூறியவன்.
“சிம்மா இப்ப வீட்டுக்குள்ள போகலாம் வாங்க”
அஜய் முகம் வாட.. “கொஞ்ச நேரம் விளையாடிட்டு கூட்டிட்டு வரேன்” என்று அஜயை தூக்கி வேகமாக தோட்டத்துப் பக்கம் சென்றான்.
வீட்டுக்குள் சென்ற காளிங்கனுக்கு சிம்மனிடம் பேச பேச நெடுநாட்கள் பழகியது போல தோன்றியது.. அது எப்படி சாத்தியம் என்று யோசித்துக்கொண்டே ஹாலுக்குள் சென்றான். இரண்டு அடுக்கு கொண்ட வீடு அது.. சமையல் கட்டு பக்கத்தில் டைனிங்.. பெரிய ஹால்.. ட்ரிபில் பெட்ரூம்.. மேலேயும் கீழே உள்ளது போலவே கட்டியிருந்தான் சிம்மன்.
சமையல்கட்டில் எட்டிப்பார்க்க.. சமையல் கட்டில் இருக்க வேண்டிய அனைத்தும் வாங்கி வைத்திருந்தான் சிம்மன்.. ஆச்சரியத்துடன் ஒவ்வொரு அறையாக போய் பார்க்க.. அஜய் விளையாட ஒரு ரூம் முழுவதும் விளையாட்டு பொருட்கள் இருந்தது.. பெட்ரூமில் பெரிய சைஸில் மரக்கட்டிலும் மெத்தையும் என்று எல்லாமும் இருந்தது.. பிரிட்ஜை திறந்து பார்க்க காய்கறிகளும் நிரம்பி வழிந்தது.. இந்த வீடு யாருதா இருக்கும்.. என்று நினைத்தவன்.. சிம்மன்தான் இதையெல்லாம் வாங்கி வைத்திருக்கணும் எனக்காக எதுக்கு இவ்ளோ மெனக்கெட்டு செய்யனும் நான் யார் அவனுக்கு.. என்று அவனது போலீஸ் மூளை யோசிக்கத் தொடங்கியது… அதற்குள் காலிங் பெல் அடிக்க.. வெளியே சென்று பார்க்க “சார் புட் ஆர்டர் பண்ணியிருக்காங்க” என்று உணவு பார்சலை நீட்ட.. சிம்மன்தான் சொல்லியிருக்கணும் என்று எண்ணியவன் பார்சலை வாங்கி. வீட்டுக்குள் வர.. சிம்மன் அஜயுடன் வீட்டுக்குள் வந்தான்.
“என்ன காளிங்கன் வீடு பிடிச்சிருக்கா?”
“பிடிச்சுருக்கு! இந்த வீடு யாரோடது சிம்மன்.. எல்லா பொருளும் இருக்கு.. இந்த வீடு உங்களோடதுதானே.. எனக்காக எதுக்கு இவ்ளோ செய்யுற நண்பா” என்று வர்மன் பேசுவது போல கேட்க.. சிம்மனுக்கு கண் கலங்கிவிட்டது.