ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

14 மோக முத்தாடு அசுரா

காளிங்கனுக்கே நண்பன் என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து எப்படி வந்தது என்று தெரியவில்லை.. “நான் இப்ப என்ன சொன்னேன் உங்களை எதுக்கு நண்பா கூப்பிடணும்” என்று காளிங்கன் தலையை அழுத்திப்பிடித்து சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டான்.

சிம்மன், அஜய்யை இறங்கிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து “காளிங்கன் இந்தாங்க தண்ணீய குடிங்க” என்று அவனிடம்  தண்ணீர் பாட்டிலை நீட்ட.. பாட்டிலை வாங்கி தண்ணீரை குடித்துவிட்டு “உங்களை பார்த்தா எனக்கு ஏதோ மூளைக்குள் குடையுது.. உன்னை கட்டிபிடிச்சுக்கனும்னு தோணுது”

உடனே சிம்மன் காளிங்கனை கட்டிக்கொண்டு “எதையும் யோசிக்காத நண்பா நீங்க காளிங்கன் தான் அடிபட்டதிலிருந்து உங்களுக்கு ஏதோ அப்படி தோணுது” என்று அவனது முதுகை தடவிக்கொடுத்தான்.

காளிங்கன் நிதானத்துக்கு வந்து உட்கார.. “இது என்னோட வீடுதான் காளிங்கன்.. நண்பனுக்காக கட்டிவைச்சேன் அவன் இப்ப இல்லை.. அதான் உங்களை என் நண்பனா நினைச்சு இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்.. இதுக்கு மேல என்னைய எதுவும் கேட்கக் கூடாது.. உங்களுக்கு பிடிச்சா இருங்க.. இல்லைனா வேற வீடு பார்த்துக்கலாம்”

“இல்ல எனக்கு பிடிச்சிருக்கு” என்று இப்போது காளிங்கனாக பேசினான்.

“அச்சா” என்று அஜய் காளிங்கனிடம் வர.. சிம்மனை விட்டு பிரிந்தவன் “அஜய்க்கு பசிக்குதா”. என்று பார்சலை பிரித்து உணவை ஊட்டினான்..

அஜய் சாப்பிட்டு முடித்ததும் டிவியை போட்டு விட்டான் சிம்மன்.. அஜய் டிவியில் கார்ட்டுன் சேனல் பார்க்கத் துவங்கியது.

“சிம்மா அஜய ஸ்கூல சேர்க்கணும்” இங்க நல்ல ஸ்கூல் இருந்தா சொல்லுங்க”

“அப்ளிக்கேசன் வாங்கி வச்சிட்டேன்..நாளைக்கு அஜய்க்கு ஸ்கூல்ல அட்மிஷன் போட்டு விடலாம்” என்று கண்ணடித்தான் சிம்மன்.

“ஆமா நீ என்ன வேலை செய்யுற” என்று சாப்பிட்டு முடித்து கை கழுவி கொண்டு கேட்டான் காளிங்கன்.

சாப்பிட்டு முடித்த சிம்மன் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருக்க.. காளிங்கன் கேட்ட கேள்வியில் புரை ஏறியது.

“நா.. நானா சொல்றேன்”

“ம்ம்.. சொன்னா தான தெரியும்” என்று சோபாவில் சாய்ந்து கன்னத்தில் கை வைத்து கதை கேட்பது போல கேட்டான்.

“நான் கட்டப்பஞ்சாயத்து பண்றேன்” என்றான் கெத்து குறையாமல்.

“அப்போ ரவுடியா வேலை பார்க்குறீங்க” என்று பட்டென்று கேட்டான் காளிங்கன்.

காளிங்கன் சிம்மனை பற்றி தெரிந்து கொண்டு தான் வந்திருந்தான்.. இவ்வளவு நேரமும் அவனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நடித்துக்கொண்டிருந்தான்.. அவனது குடும்பத்தைப் பத்தி முழுதாக விசாரிக்கவில்லை அவன்..

“அப்போ என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுதான் வந்துருக்கீங்க.. என்று மீசையை முறுக்க..

“உன் குடும்பம் தவிர நீ செய்யுற கோல்மால் வேலையெல்லாம் எனக்குத் தெரியும்.. நீ யாருகூட லிங்க்ல இருக்க என்பது வரை எனக்குத் தெரியும்.. அவங்களுக்கு நீ என்னன்ன உதவி செய்யுற முதல் கொண்டு எனக்குத் தெரியும்.. ஆனா உன்ன பார்த்தா எனக்கு கோவமே வரல.. இனிமே உன்னை எந்த தப்பான வேலையும் செய்ய விடமாட்டேன்” என்று கன்னக்குழி விழ சிரித்தான் காளிங்கன்.

“நண்பா என் தொழில்ல தலையிடுற வேலை வச்சுக்காத.. என்னைய உன்னால தொட முடியாது” என்று இதழ் கோணலாக வளைத்து சிரித்தான் சிம்மன்.

“பார்க்கலாம்..டீலா” என்று கட்டைவிரலை தூக்கி இந்த காளிங்கனை பத்தி உனக்கு முழுசா தெரியல சிம்மன்.

காளிங்கன் கூறியது கேட்டு “யாருக்கு எனக்கா? உன்னைப் பத்தி முழுசா தெரியாதா  என்று அட்டகாசமாய் சிரித்தான்.

அஜய் இருவரையும் திரும்பி பார்த்து  கண்ணை சுருக்கி “ரெண்டு பெரும் சண்டை போடுறீங்களா” என்று ரிமோட்டை கையில் வைத்து  சோகமாக கேட்க.

“அப்பாவும் நானும் சும்மா விளையாடுறோம் கண்ணா நீ டிவி பாரு” என்று சிம்மன் குழந்தையை பார்த்து கண்ணைச் சிமிட்ட.

“ஓ.. சும்மாவா” என்று அஜய் டிவி பார்க்கத் துவங்கியது.

காளிங்கன் பேச்சை மாத்த எண்ணி “உன்னோட வீடு எங்கயிருக்கு சிம்மன்”

“பக்கத்து வீடு என்னோடதுதான்”

“அப்படியா உங்க பொண்ணு இனியாவ நாளைக்கு காலையில இங்க கூட்டிட்டு வாங்க” என்றதும்.

“ம்ம்.. கூட்டிட்டு வரேன்.. நான் கிளம்புறேன் என் பொண்ண ஸ்கூலயிருந்து கூட்டிட்டு வரணும்” என்று சிம்மன் கிளம்ப.

“நானும் அஜய்க்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும் என்று காளிங்கன் அஜயை கூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

சிம்மன்.. காளிங்கனை, முல்லை பார்க்கட்டும்.. என்று முடிவு செய்துதான் காளிங்கனை இங்கே வரவைத்தான்.

வஞ்சி வெளியே வந்தவள் காளிங்கனையும், அஜய்யையும் பார்த்து “ஓ இவங்கதான் புதுவீட்டுக்கு வந்திருக்காங்களா? யாரா இருக்கும் இவங்க.. நம்ப ஆளுக்கு ரொம்ப வேண்டியவங்களா இருக்குமோ? நைட் விடிய விடிய சிம்மன் சாரு இங்கனதான கிடந்தாரு” என்று பேசியபடி அவர்கள் அருகே வந்தவள்..

அஜயை கண்டு “குட்டி பையா வாங்க” என்று குழந்தையின் கைபிடிக்க..

“ம்ஹும்” என்று தலையாட்டி அவள் கூட வர மறுக்க.

“நமக்கு வேண்டியவங்க தான்” என்று சிம்மன் அஜயிடம் கூற.

 அஜய் மெல்ல நடந்து சென்றான் வஞ்சியிடம்..

 “ம்க்கும்.. குழந்தை கூட சிம்மன் சொன்னாத்தான் கேட்குது” என்று வாய்க்குள் முணகினாள்.

வஞ்சியை இடிப்பது போல பக்கம் வந்தவன் அவள் தோளோடு உரசி நின்று “இங்க நான் சொன்னாத்தான் எல்லாம் கேட்பாங்க.. நீ நினைக்கறது எதுவும் நடக்காது” என்று நக்கலாக பேசியவன் “முல்லை எங்கயிருக்கா”என்று கேட்டுக்கொண்டு உள்ளே போக.

“சார் அவங்க காய்கறி வாங்க மார்க்கெட் போயிருக்காங்க”

“ஏய் என்ன சொல்ற அவ எதுக்கு தனியா மார்க்கெட் போயிருக்கா.. நீயும் கூட போக வேண்டியதுதான” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

காளிங்கன் முல்லை என்ற பெயரை கேட்டதும் அவனுக்கு உயிர் துடித்தது.. அஜயின் முகம் வாடுவதை கண்ட சிம்மன் கோவத்தை மறைத்து “நண்பா நான் கிளம்புறேன் முல்லைக்கு ஆபத்திருக்கு” இனியாவை ஸ்கூலயிருந்து கூட்டிட்டு வரணும்” என்று சிம்மன் கிளம்ப.

“சிம்மா இருங்க நானும் வரேன்” என்றவன்.. வஞ்சியிடம் திரும்பி “ஏங்க கொஞ்ச நேரம் அஜயை பார்த்துக்க முடியுமா? நானும் சிம்மனுக்கு ஹெல்ப்  பண்ண போறேன்..

“அண்ணே நீ கிளம்புங்க நான் தம்பிய பார்த்துக்குறேன்” என்று கூறியவள் மனதில் ச்சே” நாம முல்லை அக்காவ தனியே அனுப்பி தப்பு செய்துட்டோம்.. என்று வருத்தப்பட்டாள்.

எப்பவும் சிம்மன் தான் காய்கறி வாங்கிவந்து கொடுப்பான்.. முல்லைக்கு சந்தானத்தால் ஆபத்து ஏற்படும் என்று தனியே எங்கேயும் அனுப்ப மாட்டான்..நேற்றிருந்திலிருந்து சிம்மன் வீட்டில் அதிகம் இருக்கவில்லை.. வஞ்சியிடம் இனியாவுக்கு ப்ருட்ஸ் காய்கறிகளும் வாங்கி வரேன்.. என்று கிளம்பியிருந்தாள் முல்லை.

காளிங்கன் தன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.. சிம்மனும் பதட்டத்துடன் காரை ஓட்டினான்.

ஸ்கூலில் போய் இனியாவை பார்க்க.. அங்கேயிருந்த வாட்ச்மேன் “இப்பதான் பாப்பாவை அவங்க அம்மா கூட்டிட்டுப் போறாங்க”

ஓ  கடவுளே எப்படி இதை நடக்கவிட்டேன் என்று கோபத்துடன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து சந்தானம் உன் வேலையை காட்டிட்ட இல்ல.. என்று கார் கண்ணாடியில் கையை குத்த அவன் போன் அடித்தது.

சிம்மனின் போன் அடிக்க அதில் எம்.ஏல்.ஏ என்று வர.

“எங்கடா என் பொண்ண வச்சிருக்க.. கையில மாட்டின கொண்டே போடுவேன்.. உன் வம்சத்தையே அழிச்சிடுவேன்” என்ற ஸ்டேரிங்கில் குத்தினான்.

“டேய் யாருடா உன் பொண்ணு.. இனியா என் பேத்தி நான் என்னவேணா செய்வேன்.. இதோ என்னை அவமானப்படுத்திட்டு என்னை விட்டு ஓடிப்போனாலே என்னோட பொண்ணு அவளையும் சேர்த்து அடைச்சு வச்சிருக்கேன்.. உன்னால முடிச்சா அவங்கள காப்பாத்து.. அங்க  காளிங்கன் ஒருத்தன் வர்மன் உருவத்துல வந்திருக்கானாம்.. அவன் கூட என் பொண்ண சேர்த்து வைக்கலாம்னு நினைக்கிறியா.. அதை நடக்கவிடமாட்டான் இந்த சந்தானம்.. இப்பவே என் பொண்ணையும், பேத்தியையும் வெளிநாட்டுக்கு அனுப்ப போறேன்” என்று ஓலமிட்டான் சந்தானம்.

சிம்மன் காளிங்கன் வருவதையே எண்ணி முல்லையை கோட்டை விட்டான்.. சமயம் பார்த்து மகளென்றும் பாராமல் கடத்திவிட்டான்.

“டேய் டேய் சந்தானம்” என்று பேசுவதற்குள் போன் கட் செய்தான்.

“சிம்மன் யாரு போன்ல.. நம்பர் சொல்லுங்க ட்ரேஸ் பண்ணலாம்.. போலீஸ்ஸ வரச்சொல்லுறேன்” என்று தன்போனை எடுத்து ஐ.ஜிக்கு போன் போட போக..

“உங்க போலீஸ் எனக்கு தேவையில்லை.. நீங்க இந்த ஊர்ல நிறைய ஆளைப்பத்தி தெரிஞ்சுக்கணும்.. அதான் உங்களையும் கூட்டிட்டு போறேன்” என்று கண்கள் சிவக்க பேசியவன்.. சந்தானத்தின் ஆட்களில் ஒருவனுக்கு போன் போட்டு “டேய் அந்த நாதாரி முல்லையை எங்கே வச்சிருக்கான்”என்று கேட்க.

“அண்ணே அவன் முல்லையையும், பாப்பாவையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க ப்ளான் போட்டு ஏர்போட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்க நீங்க சீக்கிரம் போங்க” என்று கூறியதும் போனை அணைத்தவன். காரை புயல் போல ஓட்டினான் சிம்மன்.

காளிங்கனுக்கு முல்லையின் பெயரை கேட்டதும் அவன் மனதில் அந்த பெயர் ஆழப்பதிந்து இருப்பது போல தோன்றியது.. நெற்றியை தேய்த்து கொண்டு “சிம்மா யாரு முல்லை” என்று கேட்க

“என் நண்பனோட மனைவி” என்று கூறிவிட்டு அவன் முகத்தில் எதாவது மாற்றம் தெரிகிறதா.. என்று ஒரு முறை பார்த்துக் கொண்டே காரை ஏர்போட்டிற்குள் விட்டான்.

சிம்மன் வருவது தெரிந்து கொண்ட சந்தானம் முல்லையையும், இனியாவையும் ஏர்போட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தான்.

எங்கே தப்பிக்க வழியிருக்கு என்று அறையை நோட்டமிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு இனியாவுடன் நடுங்கியபடி அமர்ந்திருந்தாள்.

“அம்மா சிம்மாக்கு போன் போட்டு வரச்சொல்லு.. இதோ இந்த தடிமாட்டு ஆள சிம்மா ஒரு அடில அடிச்சிடும்” என்று இனியா முல்லையிடம் கூற.

“ஏய் பாப்பா அதிகமா பேசாத.. ஒரே போடா கத்தியில போட்டிருவேன்” என்று அவன் கட்டை குரலில்   குழந்தையை மிரட்ட.

“இருடா என்னோட சிம்மன் வந்துருவான் அப்ப இருக்கு உனக்கு” என்று இனியா அவன் வேறு பக்கம் பார்க்கும் போது பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து மிரட்டியவனின் கால் மேல் போட்டது.

“ஆஆ குட்டி பிசாசு”என்று குழந்தையை அடிக்க வர.. முல்லை அவன் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவன் காலில் குத்தி விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

முதல் தளத்திற்கு வந்துவிட சந்தானம் வந்துவிட்டான்.. மறைந்து நின்று கொண்டாள்.. வேற்று விறுவிறுக்க நின்றாள் முல்லை.. தன்உயிர் போனாலும் வர்மனின் உயிரான இனியாவுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.. என்று மருங்கி நின்றாள் முல்லை.

சந்தானம் முல்லையை தாண்டிச்சென்றதும் அவள் வெளியே ஓட.. சந்தானத்தின் ஆள் அண்ணே “முல்லை ஓடுது” என்று கூற “டேய் அவள பிடிங்கடா” என்றான்.

முல்லை உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

சிம்மன் ஏர்போட்டில் பார்க்க அங்கே முல்லையும், பாப்பாவும் இல்லை.. சிம்மனுக்கு போன் போட்ட அவனின் ஆள்..

 “அண்ணே நீ வரது அவனுக்கு தெரிசிட்டுச்சு ஏர்போர்ட் பக்கத்துல தான் முல்லையை அடைச்சு வச்சிக்கணும்” என்று கூற.

ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே வந்தனர் சிம்மனும், காளிங்கனும்.

அன்று ஹோலிப்பண்டிகை.. வண்ணப்பொடிகள் தூவி விளையாடிச் சென்றனர் மாணவிகள்.

ஹோட்டலுக்கு வெளியே வந்த முல்லை சிம்மனை பார்த்து விட்டாள்.. முல்லையோ வெளிர் சந்தன நிறத்தில் கட்டியிருந்த புடவைகளில் காற்றில் பறந்து வந்த வண்ணப்பொடிகள் எல்லாம் அவள் சேலையில் பட்டது. அதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை.. குழந்தையை காப்பாற்றவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது.

“அண்ணா” என்று ஓடி வர.

முல்லையின் குரல் கேட்டு அவள் புறம் திரும்பிய சிம்மன் அவள் நீட்டிய இனியாவை வாங்கிக் கொண்டான் .

இனியாவை அவன் கையில் கொடுத்ததும் அவள் அப்படியே சரிய..

காளிங்கன், முல்லையை தாங்கிப்பிடிக்க மயக்கத்திலும் வேறு யாரோ என்று எண்ணியவள் அவன் கைகளை தட்டி விட.

“ஏய் விழுந்துடாத”என்று முல்லையை  தாங்கிப்பிடிக்க பேலன்ஸ் தவிர இருவரும் ரோட்டில் விழ அங்கேயிருந்த ஒரு கல்லில் காளிங்கனின் நெற்றி பட காயம் ஏற்பட்டு இரத்தம் வந்துவிட இருவருது முகமும் ஒட்டியிருந்தது..  அவன் நெற்றியிலிருந்து வந்த இரத்தம் முல்லைக்கொடியின் நெற்றியில் திலகமாக ஒட்டிக்கொண்டது.

சிம்மன் இனியாவை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு நண்பன் மனைவியோடு சேர்ந்துவிட்டான்.. என்று ஆனந்தப்பட்டு நின்றான். ஆனால், சிம்மனின் சந்தோசத்திற்கு ஆயுள் குறைவு என்று அவனுக்கு தெரியவில்லை.

காளிங்கன் சுதாரித்து எழுந்தவன் முல்லையை தூக்கிக்கொள்ள..

காளிங்கனை பார்த்த இனியா “ஐ அப்பா அப்பா” என்று காளிங்கனை பார்த்து கை நீட்ட.

காளிங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“சிம்மா இவங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்” என்று காருக்குள் படுக்க வைத்து முல்லை பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டான்.

முல்லையை அடையாளம் தெரிந்து கொள்வான்.. என்று நினைத்திருந்தான் சிம்மன்.. ஆனால் காளிங்கனுக்கு முல்லையை அடையாளம் தெரியவில்லை.

சிம்மன் இனியாவை காளிங்கனிடம் கொடுக்க.. “அப்பாஆஆ” என்று அவனிடம் தாவியது..

“சக்கரே”என்று ஆசையாக இனியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.. இனியாவும் காளிங்கனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.. முல்லைக்கொடியை பக்கத்திலிருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப்போய் செக் பண்ண.. பயத்துல மயங்கியிருக்காங்க டிர்ப்ஸ் போட்டிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்ணு விழிச்சிடுவாங்க என்று கூறிவிட்டு செல்ல.

“ஏம்மா நீ அடிக்கடி மயக்கம் போடுற” என்று கேட்டுக்கொண்டே இனியா, முல்லையின் பக்கம் நின்றது.

“அம்மா ரொம்ப வீக்கா இருக்காங்கடா.. இனிமே உன்னோட அம்மா மயக்கம் போட மாட்டாங்க பாரு” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்.

காளிங்கனுக்கு போன் வர வெளியே போன் பேச சென்றுவிட்டான்.. போன் பேசி முடித்ததும்.. அறைக்குள் வர..

 “காளிங்கன் பாப்பாக்கு பசிக்குதுன்னா.. அவள கேண்டீன் கூட்டிட்டு போய்ட்டு வந்துடறேன். நீங்க முல்லை பக்கத்துல இருங்க.” என்று சிம்மன் கிளம்ப.

“சிம்மன் இருங்க அவங்க கண்விழிச்சா என்ன பண்றது”

“அவங்களையே கேளு” நான் வந்துடறேன் என்று வேகமாக சென்றுவிட்டான்.

கொலைக்கேஸ் கண்டுபிடிக்க வந்தவனை குழப்பி விட்டுட்டான் இந்த சிம்மன்.. என்னடா இது எனக்கு மண்டைக்குள்ள இரயில் ஓடுது.. நாளைக்கே இந்த சிம்மனை விட்டு வேற வீட்டுக்கு போயிடணும்.. ஸ்சப்பா என்று முல்லையின் அறைக்குள் சென்று அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான். முல்லையை பார்க்கவில்லை.. அவளை பார்த்தாலும் அவன் மண்டைக்குள் ஏதோ வண்டு குடைகிறது என்று போனை நோண்டினான்.

முல்லை மெல்ல கண்விழித்து பார்க்க.. புடவை மாராப்பை விட்டு தள்ளி போயிருக்க அதை சரி செய்ய புடவையை பார்க்க புடவையில் வண்ண சாயம் ஒட்டியிருக்க.. இது எப்படி என்று எழுந்து உட்கார்ந்தாள்..

அவள் எதிரே காளிங்கன் உட்கார்ந்திருக்க.. அவள் கண்ணுக்கு வர்மனாக தெரிய.. இது கனவா இருக்கக் கூடாது.. என்று தன் கையை கிள்ளிப்பார்க்க அது நிஜமென்று தெரிய

 “வர்மாஆஆஆ” என்று அவள் இதழ்கள் அசைய  அப்படியே நெஞ்சில் கைவைத்து கொண்டாள்.. இது யாரு? யாரு? என்று தனக்குள் கேள்வி கேட்டு அவள் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அவள் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகியது.. என்னோட வர்மனா இருந்தா அங்க உட்கார்ந்திருக்க மாட்டான்.. என் பக்கத்துல இருந்திருப்பானே இது வேற யாரோ.. என்று கண்ணை இருக்க மூடி திறந்தவள்  மீண்டும் காளிங்கனை பார்க்க துவங்கினாள்.. எந்தப் பெண்ணுக்கும் செத்து போனவ கணவன் தன்  கண் முன் வந்து உட்கார்ந்தால் அவள் நிலைமை எப்படி இருக்கும்..  காளிங்கனையே விடாமல் பார்த்திருந்தாள்.. முல்லைக்கு, வர்மனுடன் வாழ்ந்த நாட்கள் கண் முன்னே தோன்ற வர்மாஆஆ என்று கத்திவிட்டாள். 

காளிங்கன், முல்லையின் குரலைக் கேட்டு அதிர்ந்து போய் எழுந்து அவள் பக்கம் போக அவனுக்கும் இதயம் எக்குத்தப்பாய் எகிறி துடித்தது..

முல்லை முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்து அவளுக்கு என்னோமோ ஆகிவிட்டது போல.. என்று அச்சப்பட்டு “என்னாச்சு” என்று அவளது கையை பிடிக்க போக

முல்லையோ “நீ.. நீங்க யா யாரு?” என்று தொண்டையில் எச்சில் விழுங்கிக் கொண்டு அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க அவன் கையை பிடிக்காமல் பதட்டத்துடன் கேட்க.

“நான் இந்த ஊருக்கு புதுசா வந்த ஏ.சி.பி காளிங்க வர்மன்”என்றான்.

15 மோக முத்தாடு அசுரா

“நான் இந்த ஊருக்கு புதுசா வந்த ஏ.சி.பி காளிங்க வர்மன்”  கூறிய காளிங்கன், மேற்கொண்டு  முல்லையிடம் ஏதோ பேச வாயெடுக்க சிம்மன், இனியாவுடன் உள்ளே வந்தான்.. அங்கே அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்கும் முல்லையையும், அவளையே புருவ முடிச்சுக்களுடன் பார்த்திருக்கும் காளிங்கனையும் பார்த்தபடி நின்றிருந்தான்.. இனி அவர்கள் பாடு என்று விட்டுவிட்டான்..

“அம்மா” என்று இனியா முல்லையிடம் போக..

கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டு குழந்தையை மார்போடு சாய்த்துக்கொண்டாள்.

காளிங்கனால் அங்கே நிற்கமுடியவில்லை.. அவன் கால்கள் முல்லையின் அருகே போக சொல்லியது.. அவள் கண்ணீரை துடைத்துவிட அவன் கைகள் துடித்தது.. பார்வதி கடைசியாக கூறிய வார்த்தைகள் அவன் காதில் கோவில் மணி போல ஒலித்துக்கொண்டிருந்தது.. அந்த வார்த்தைகள் உண்மையானதா என்று குழம்பிப்போய் அவனுள் தோன்றும் உணர்வுகளை அடக்கமுடியாமல் ஜன்னல் கம்பிகளை இறுக பிடித்து நின்றான்.

 

சிம்மன், காளிங்கனின் முகத்தில் தோன்றும் சிந்தனைகளை அவதானித்துக்கொண்டுதான் நின்றிருந்தான்.. அவன் தன் நண்பன் வர்மன்தான் என்று ஆணித்தரமாக உணர்ந்தான்.. இடையில் ஏதோ குழப்பம்  நடந்திருக்கு அதை சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்.. இதற்காகத்தான் முல்லையை சந்திக்க வைத்தான்.. கண்டிப்பாக வர்மனாக இருந்தால் முல்லையின் மீது வர்மன் வைத்திருந்த காதல் வர்மனை வெளியே கொண்டு வந்திடும் என்று நம்பிக்கையில் இருந்தான்.. ஆனால் அது எந்தளவு சாத்தியம் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

“ம்மா.. இ..இதுஊ அப்பாதான.. ஏன் என்கிட்ட பேசாம இருக்காரு” என அவள் காதோரம் சென்று இனியா கிசுகிசுவென்று கேட்க.

முல்லை என்ன பதில் சொல்வாள்.. அது உங்கப்பா இல்லை.. அப்பா உருவத்தில் வேறு யாரோ என்று குழந்தையிடம் சொன்னால் அது ஏத்துக்குமா? என்று எப்படி சொல்வதென்று தெரியாமல் கண்ணில் கண்ணீர் துளிகள் சிந்தி சிம்மனை பார்க்க.

இனியா, முல்லையிடம் கேட்டது காளிங்கன் காதுக்கும் விழத்தான் செய்தது.. ஜன்னல் கம்பிகள் இரும்பால் செய்திருந்தது.. மரத்தால் செய்திருந்தால்  இன்னேரம் ரெண்டாக உடைத்திருப்பான். அவ்வளவு அழுத்தமாக ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்திருந்தான்.

சிம்மன் முல்லையை  பார்த்து கண்ணை மூடித்திறந்து நான் பார்த்துக்குறேன் என்றவன் “தங்கம் அவரு அது” என்ற சிம்மன் இனியாவை தூக்கப் போக..

“சக்கரே நீ என்ட மவள்தான்” என்று சிம்மனுக்கு முன் சென்று குழந்தையை தூக்கியவன் இனியாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான்.. அவன் குழந்தைய கொஞ்சி முத்தாடுவதை கண்ணில் நிறைத்து பார்த்திருந்தாள் முல்லை..

 

“அப்பா நீங்க ஏன் என்னையும் அம்மாவையும் விட்டு வெளியூர் போயிட்டிங்க.. அம்மா பாவம் தெரியுமா? டெய்லி அழுவா.. அதை பார்த்து நானும் அழுவேன்” என்று இதழ் பிதுக்கி  அவன் கன்னம் பிடித்து கேட்டது.

“சக்கரே நான் வந்துட்டேன்ல உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் என்னோடையே உன்னை வச்சிக்குறேன்” என்று குழந்தையை நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

“இனியா அவரு உங்க அப்பா..இ.இல்” என்று வாயெடுக்க

“முல்லை பேசாத” என்று கண்ணைக்காட்டினான் சிம்மன்..

இனியா காளிங்கனுடன் தனி உலகத்தில் இருப்பது போல கொஞ்சி கொஞ்சி இத்தனை நாள் பேசாததையும் சேர்த்து தன் அப்பாவிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தது.

சிம்மன், முல்லையின் அருகே சென்றவன் சன்னக் குரலில் “முல்லை இனியாவுக்கு நான் என்னதான் பாசத்தை கொட்டிக்கொடுத்தாலும் அவளுக்கு அப்பா வேணும் ப்ளீஸ் குழந்தைக்காக.. கொஞ்சம் பொறுத்து போ.. அவ எத்தனை தடவை வர்மன் போட்டோவை காட்டி அப்பா எப்ப வருவாருன்னு என்கிட்ட ஏக்கத்தோட கேட்டிருக்கா தெரியுமா? ப்ளீஸ்மா” என்று கண்ணால் கெஞ்சினான் சிம்மன்.

“அதுக்காக வேற யாரோவ அவ அப்பானு கூப்பிடலாமா அண்ணா?” என்று சிம்மனை முறைக்க.

 

“உருவத்துலதான் அவன் காளிங்கன் முல்லை.. அவன் உனக்கு வர்மனா தெரியலையா?”

“நான் ஏ.சி.பி காளிங்கன் சொல்றாரு.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று தலையை அழுந்தபிடித்துக்கொண்டாள்.

“அவன் கண்டிப்பா வர்மன்தானென என்னோட மனசு சொல்லுது முல்லை.. நீ அவன் கூட இருந்து காளிங்கனுக்குள்ள இருக்கும் வர்மன வெளியே கொண்டுவரணும்”

“நோ! நோ! என்னால அது முடியாது.. ஊர் உலகம் என்ன சொல்லும்.. என் காதலுக்கு நான் செய்யும் துரோகம் அண்ணா.. என்னோட வர்மன மட்டும்தான் இந்த நெஞ்சுல சுமந்திருக்கேன்.. இது வேற யாரோ” என்றாள் உள்வாங்கிய குரலில்

“இல்ல முல்லை இவன் வர்மன்தான்.. ஏதோ குழப்பம் நடந்திருக்கு.. ஊர் ஆயிரம் சொல்லும் முல்லை.. அதுக்கு கவலைபட்டிருந்தா நீ வாழவேண்டிய வாழ்க்கை இல்லாம போய்டும்மா.. இப்ப விவரமா பேசவேண்டாம்.. குழந்தை அவன அப்பானே கூப்பிடட்டும் விட்டுரு.. அப்புறம் இனிமேலாவது இந்த கோலத்தை மாத்தி நெத்தியில பொட்டு தலை நிறைய பூவும் வைக்கணும் முல்லை.. என் நண்பன் உயிரோடு நிற்குறான் பாரு” என்று வர்மனை காட்ட.

அவனோ இனியாவுடன் விளையாடி சிரித்துக்கொண்டிருந்தான்..

 “அண்ணா” என்று முகத்தை பொத்திக்கொண்டு “என்னோட வர்மன்தானு தெரிஞ்ச பிறகுதான் நான் என்னை அலங்காரம் செய்துப்பேன்.. ப்ளீஸ் அதுவரை என்னை கம்பல் பண்ணாதீங்க” என்று தலையசைத்தாள்.

 

“அப்படியா.. இரு” என்று தன் மொபைலை ஆன் செய்து கேமராவை காட்டினான்.. அவள் அதில் தன் முகம் பார்க்க தன் நெற்றியில் திலகம் இருந்தது..

இது எப்படி என்று அதை கைத்தொட்டு தேய்க்கப் போக.. அவள் கைகளில் பிசுபிசுப்பாக இரத்தம் ஒட்ட.. “பாரு முல்லை.. இது நீ மயங்கி கீழே விழும்போது காளிங்கன் நெத்தியில அடிப்பட்டு அவன் இரத்தம்தான் உன்னோட நெத்தில திலகமா ஒட்டியிருக்கு.. இனி இதுதான் நிரந்தரம்.. இனி பொட்டு வைக்காம இருக்காத” என்று அவளிடம் மன்றாடினான்.. நண்பன் உயிரோடு இருக்கிறானே.. ஆனால் முல்லை நெற்றியில் பொட்டில்லாமல் இருப்பது  சிம்மனுக்கு ஆதங்கத்தை தந்தது.

முல்லை நெற்றியில் உள்ள திலகத்தை அழிக்க மனமில்லாமல் தவித்துப்போனாள்..

“அப்பா என்னை கார்ல லாங்டிரைவ் கூட்டிட்டு போறீங்களா.. சிம்மன் கூட போய் போரடிச்சு போச்சு” என்று சிம்மனை பார்த்து கண்ணை சிமிட்ட.

“ஓ.. உன்னோட அப்பன் வந்தததும் நான் உனக்கு போரடிச்சு போய்ட்டேனா?” என்று கோவமாக இருப்பது போல திரும்பி நின்று கொண்டு ஆனந்தப்பட்டான் சிம்மன்.

“அச்சோ.. அப்பா சிம்மன் கோவிச்சுகிச்சு.. நீங்க இல்லாதப்ப என்னை சிம்மன்தான் பார்த்துகிச்சு தெரியுமா? வாங்க சமாதானப்படுத்தலாம்” என்று சிம்மனின் தோளைத்தொட்டு

“சிம்மா சாரி இந்த பாப்பாவ மன்னிச்சுடு.. எனக்கு சிம்மா, அப்பா ரெண்டு பேரும் வேணும்” என்று இருவரின் தோளில் கைப்போட்டு நின்றது.. (இனியாவை வைச்சு பார்ட் 2 கதை எழுதலாம் போலவே)

 

“கடவுளே இது எப்படி சாத்தியம்.. நான் இவர என்னோட வர்மதானு என் கண்ணுக்கு காட்டிக்கொடுக்கணும்” என்று கடவுளை வேண்டினாள்.

காளிங்கனுக்கு ஐ.ஜி ஆபிஸிலிருந்து போன் வர.. குழந்தைய ஒரு பக்கம் இடுக்கிக்கொண்டு போனை எடுத்தவன் “குட்மார்னிங் சார்” என்றான்.

“மிஸ்டர் காளிங்கன் இமிடியேட்டா நீங்க ஆபிஸ் வாங்க.. கேஸ் சம்பந்தமா பேசணும்” என்றிட.

“10 மினிட்ஸ்ல வந்துருவேன் சார்” என்று போனை அணைத்து விட்டு.. “சக்கரே அப்பாக்கு வேலை வந்துடுச்சு நீங்க சிம்மாவோட வீட்டுக்கு போங்க” என்று வெளியே கிளம்ப ஆய்த்தமானான்.

“காளிங்கன் நான் பில் கட்டிட்டு வரேன்.. நீங்க முல்லையை கூட்டிட்டு வந்திடுங்க” இருவரும் பேசட்டும் என்று இனியாவுடன் பில் செக்க்ஷனுக்கு வந்துவிட்டான் சிம்மன்.

இவனுக்கு இந்த பொண்ணுகிட்ட என்னை மாட்டிவிட்டு போறதே வேலையா போச்சு.. என்று சிம்மனை திட்டிக்கொண்டு “போலாமா” என்று முல்லையிடம் கேட்க.

“ம்ம்.. போலாம்” என்று தலையாட்டியவள் மெல்ல கீழே கால் வைக்க.

முல்லை கீழே விழுந்தத்தில கால் விரலில் லேசாக அடிப்பட்டிருந்தது.. சின்ன கட்டு போட்டுத்தான் இருந்தது.. அவள் காலை ஊன வலி உயிர் போனது.. “ஸ்ஸ்” என காலை ஊன்றி நடக்க.. தடுமாறி கீழே விழப் போக..

 

“ஏய் பப்லி” என்று அவள் அருகே சென்ற காளிங்கன் முல்லையின் இடையோடு கைப்போட்டு அழுந்த பற்றி லாவகமாக தாங்கிப்பிடித்தான்.. அவன் நெஞ்சில் மோதி நின்றாள் பெண்ணவள்.. இருவரின் பார்வைகளும் நேருக்குநேர் ஒன்றோடு ஒன்று கலக்க.. அவனது பார்வை வீச்சை கண்டு இது இது என்னோட வர்மாஆ தான்.. என்று அவளுக்கு ஆனந்த கண்ணீர் நிற்கவேயில்லை.. அவனுக்கோ வலியில்தான் அழுகிறாள் என்று நினைத்தவன்.. “உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லைனா நான் பிடிச்சுக்குறேன்.. நீங்க என்னை பிடிச்சு நடங்க” என்று கூற..

முல்லைக்கோ இவன் என்ன கொஞ்ச நேரம் வர்மன் போல பேசுறான் கொஞ்ச நேரம் காளிங்கன் போல பேசுறான்.. என குழம்பித்தான போனாள்.. ஆனா அந்த பப்லி என்ற வார்த்தை அவளுக்கு அது தன் வர்மன்தான் என்று உறுதி செய்து விட்டாள்.. கணவனின் தொடுகை ஒரு பெண்ணுக்கு தெரியாமல் போய் விடுமா என்ன? அவனுக்குத்தான் எதுவும் நியாபகம் இல்லையே? இப்போதே அவனிடம் உரிமை எடுத்துக்கொள்ள கூடாது.. இன்னும் எனக்கு இவன் என் வர்மன் தான் என்று உறுதியாக தெரிய வேண்டும்.. என்று அவள் மனம் எண்ணியபடி காளிங்கன் உருவத்தில் இருக்கும் வர்மனை பார்த்திருந்தாள்.

இருவரும் இன்னும் வரவில்லையென்று காளிங்கன் முல்லையின் மனதை நோகடித்து பேசிவிடுவானோ என்று அச்சம்கொண்டு அறைக்குள் வர.. காளிங்கன் தோளைப்பிடித்து முல்லை நின்றிருந்தாள்.

 

இதுதான எனக்கு வேணும் என்று மனதில் குதூகலித்த சிம்மன் “என்னாச்சு முல்லை” என்று எதுவும் தெரியாதது போல அவளிடம் கேட்க.

நல்லவேளை சிம்மன் வந்துட்டான் நான் தப்பிச்சேன்.. இந்தப் பொண்ணு கண்ணு என்னைய என்னமோ பண்ணுது என்று நினைத்த காளிங்கன்.. “சிம்மா நான் அர்ஜென்டா ஐ.ஜி ஆபிஸ் போகணும் நீங்க இந்தப் பொண்ண கூட்டிட்டு போங்க” என்று எஸ்கேப் ஆகிச்சென்றான்.

காளிங்கன் சென்றபிறகு “அண்ணா இவரு என்னோட வர்மன் தான்” என்று அவள் கண்கள் சந்தோசத்தில் ஜொலித்தது.. “இத்தனை நாளாச்சு முல்லை.. உன் சிரிப்ப பார்த்து” முல்லையின் கைப்பிடித்து கூட்டிச்சென்றான்.

ஐ.ஜி ஆபிஸ் சென்றவன் ஐ.ஜி அறையின் உள்ளே போக.. “வாங்க காளிங்கன் வெல்கம் டு சென்னை.. கொலை செய்யப்பட்ட பொண்ணோட போட்டோ.. கொலை கேசில் சந்தேகப்படற நபரின் போட்டோ இது” என்று முகேஷின் போட்டோவையும் இன்னொரு நபரின் போட்டோவையும் காண்பித்து இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தன் தான் இந்தப் பொண்ண கொலை செய்திருக்கணும்.. என்று ஜ.ஜி சில வீடியோ புட்டேஜ்களை போட்டு காண்பித்தார்.

வீடியோஸ் பார்த்து முடித்து “கூடிய சீக்கிரம் கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்கிறேன் சார்” என்று எழுந்து நின்று சல்யூட் அடிக்க.

“ஒரு நிமிஷம் காளிங்கன் உட்காருங்க” என்றார் ஐ.ஜி.

“சொல்லுங்க சார்” அவனும் சீட்டில் உட்கார்ந்தான்.

வர்மாவின் போட்டோவை எடுத்து போட்டு “இதுல இருக்க வர்மா கொஞ்ச நாள் முன்ன ஆக்சிடன்டல இறந்துட்டாரு.. நீங்க அவர போலவே இருக்கீங்க.. இந்த வர்மா ஒரு ரவுடி.. இவனுக்கு சிம்மன் என்று உயிர் நண்பனும் இருக்கான்.. இவங்க ரெண்டு பேர் மேலயும் கேஸ் இருக்கு.. ஆனா அது எப்படியோ க்ளியர் பண்ணிடுவான் சிம்மன்.. அவனுக்கு நிறைய அரசியல் செல்வாக்கு சிம்மனுக்கு உண்டு.. அப்புறம் நீங்க அவன் கூடத்தான் தங்கியிருக்கீங்க என்ற நியூசும் எனக்கு வந்திடுச்சு” என்று ஐ.ஜி சிரிக்க.

ஐஜி கூறுவதை தாடையில் கைவைத்து கேட்டுக்கொண்டிருந்த காளிங்கன் புருவத்தை நிவி விட்டு “சிம்மன் கூட இருப்பது நமக்கு சாதகம்தான சார்.. தப்பு பண்ணறவங்கள என்னால ஈசியா பிடிக்க இன்னும் வசதியா இருக்கும்.. நான் சிம்மன் கூடவேயிருக்க எனக்கு பர்மிசன் கொடுக்கணும்” என்று ஒரு புருவத்தை மட்டும் தூக்கி கேட்க.

“ஓ ஸுயர் காளிங்கன்.. அப்புறம் உங்க மனைவி இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்” என்று வருத்தப்பட்டு கூற.

“ஆமாம் சார் அவங்களுக்கு  யூட்ரஸ்ல சின்ன ப்ராப்ளம்.. என்கிட்ட சொல்லாம விட்டுடாங்க.. கடைசியா அவங்கள என்னால காப்பாத்த முடியல” என்று தலையை அழுந்தக்கோதினான்..

“ஓ.கே மிஸ்டர் இப்ப உங்க கடமையை செய்ய பாருங்க ஆல் தி பெஸ்ட்” என்று கைக்கொடுக்க..

“தேங்க்யூ சார்.. கொலையாளிய கண்டுபிடிச்சிட்டு உங்ககிட்ட வரேன்” என்று வெளியே வந்தான்.

 

வீட்டிற்கு சென்ற முல்லை குளித்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வர்மன் ஆசையாக எடுத்துக்கொடுத்த புடவையை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டாள்.. பின்னிருந்து பப்லி என்று அவள் கன்னத்தில் வர்மன் முத்தமிடுவது போல மாயை தோன்ற அவளுக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.. எங்கோ வர்மன் இங்கே வந்துவிட்டானோ என்று சுற்றி பார்க்க அவன் அங்கேயில்லை.. எனக்கு ஏதோ ஆகிடுச்சு என்று வெகுநாட்கள் கழித்து பெண்ணவள் முகத்தில் வெட்கம் தோன்றியது..

அறைக்குள் வந்த இனியாவோ “அம்மா நீ இப்பதான் ரொம்ப அழகாயிருக்க” என்று அவள் கன்னம் பற்றி முத்தமிட்டு அப்பா வந்துட்டாருனு பொட்டு வச்சுக்கிட்டயா” என்று இனியா தலைசாய்த்து சிரித்து கேட்க.

“ஆமாடி உங்க அப்பா வந்துட்டாருல அதான் பொட்டு வைச்சுகிட்டேன்” என்று சந்தோசமாக இனியாவை தூக்கிச் சுற்றினாள்.

சிம்மன் அறையில் குளித்துவிட்டு வர குளியலறைக்குள் இருக்க.. சிம்மன் அறையை வெளியே போகும் போது பூட்டிவிட்டுத்தான் போவான்.. வஞ்சி சமையல் வேலையை முடித்து விட்டு சிம்மனை அறையை பார்க்க அது திறந்திருந்தது..

சார் ரூம கீளின் பண்ணிரலாம் என்று சிம்மனின் அறைக்குள் போய் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.. அப்போது டிராவில் அவள் கைக்கு ஒரு பென்டிரைவ் அவள் கையில் கிடைக்க அதை எடுத்த போது சிம்மன் சரியாக குளியலறையிலிருந்து தலையை துவட்டியபடி வெளியே இடுப்பில் டவலுடன் வெளியே வந்தான்.

 

வஞ்சி பதட்டத்துடன் “சாரி சார்” என்று திரும்பி அவன் வந்த கோலத்தை கண்டு தலையில் அடித்துக்கொண்டாள்.

சிம்மன் அழுத்தமான காலடிகளுடன் அவள் பக்கம் வந்தவன் அவளை இடையோடு கைபோட்டு தன்புறம் திரும்ப.. அவளோ கண்களை மூடிக்கொண்டு “சார் இதெல்லாம் தப்பு” என்று பட்டுக் குரலில் பேச.

“எதெல்லாம் தப்பு வஞ்சி.. நீ டிராவலயிருந்து பென்டிரைவ் எடுத்தையே அது தப்புதான்.. பென்டிரைவ் நீயா கொடுத்திட்டா.. நல்லது இல்ல நான் கைவிட்டு எடுப்பேன்”  என்று அவள் தாவணியை விலக்கி இடுப்பில் கை வைக்க.. ஆண்மகனின் முதல் தொடுகையில் ஆழந்த முச்செடுத்த வஞ்சி..

“சார் நான் எடுக்கல.. கை..கைய எடுங்க” என்று அவள் குரல் நடுங்கி வந்தது.

“அப்ப கைய விட்டு எடுத்திறவேண்டியதுதான்”

 என அவள் இடுப்பில் கையை விட.. எக்குத்தப்பாய் பல இடங்களில் அவன கைபட்டு பென்டிரைவை கையிலட எடுத்து பெண்ணவளை சிவக்கவும் வைத்து அதே சமயம் பென்டிரைவை எடுத்துவிட்டான் என்று அவளை கோபபடவும் வைத்தான் நரசிம்மவர்மன்.. சிம்மனின் உடல் வஞ்சியின் உடலோடு ஒட்டியிருந்தது.. அவனோடு இடுப்போடு துண்டு மட்டும் கட்டியிருக்க.. அவளோடு அத்தனை நெருக்கமாய் இருந்தது பெண்ணவளை கூசச் செய்து. வஞ்சிக்கு பல சோதனைகளை கொடுத்தான்.

பென்டிரைவை வெளியே எடுத்து “இத எதுக்கு எடுத்து மறைச்சு வச்ச” என்று தலைகுனிந்து நின்றிருந்தவளின் கன்னத்தை அழுந்தப்பற்றி தன்முகம் பார்க்கச் செய்து. அவளை எரித்துவிடும் அளவிற்கு பார்த்தான்.

வஞ்சியோ சமாளிப்பாக “அது அது வந்து புதுசா ரீலிசான படம் ஏதும் இருக்கும்” என்று எச்சில் விழுங்கி அவள் சிமிட்டி சிமிட்டி பேச.

“இத என்னை நம்பச்சொல்றீயா.. எதுக்காக என் வீட்டுக்குள்ள வந்த” என அவளை இறுக் கட்டியணைத்தான்.

“உண்மைய சொல்லட்டுமா?”

“சொல்லுடி” என்றான் அவள் முகம் நோக்கி குனிந்து கொண்டே போக..

”நான் உங்கள நிறைய தடவை பார்த்திருக்கேன்.. நீங்க ஸ்டைலா சண்டைபோடுறதையும் பார்த்திருக்கேன்.. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுபோய்தான் இங்க வந்தேன்.. வேற எதுக்காகவும் இல்லை என்று வஞ்சி சிம்மனின் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. அவன் பிடி லேசாக விட.. இதுதான் சமயம் என்று முயல் போல துள்ளிக்குதித்து வெளியே ஓடிவிட்டாள்.

காரில் வரும்போது பார்வதி வேண்டுமென்ற தான் தனக்கு இருக்கும் ப்ராப்ளத்தை தன்னிடம் மறைத்துவிட்டாள்.. என்கிட்ட அவ சொல்லியிருந்தா கண்டிப்பா நான் அவள காப்பாத்தியிருப்பேன்.. என்று வருத்தப்பட்டு அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் எண்ணிக்கொண்டு நான் அதன்படி நடப்பேன் பார்வதி.. உன்னோட பையனை நான் பெரிய போலீஸ் ஆபிசராக வளர்ப்பேன்.. என எண்ணிக்கொண்டே காரை வீட்டின் முன்னே நிறுத்தினான்.

1 thought on “மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top