16 மோக முத்தாடு அசுரா
சிம்மனின் அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடிவந்த வஞ்சி சமையல் கட்டுக்குள் சென்று நின்றவள் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.. தன் தேகத்தில் அவன் கை பட்ட இடமெல்லாம் இன்னும் குறுகுறுத்தது.. ஆத்தி ஏதோ ஒரு வேகத்துல பிடிச்சிருக்குன்னு சொல்லி தப்பிச்சு வந்தாச்சு.. ஆனா இப்பத்தான் ரொம்ப பயமாயிருக்கே!!.. ஆளு முரட்டு பிடி பிடிக்கிறாரு.. நான் தாங்குவேனா… அச்சோ இப்ப நினைச்சாலும் கண்ணு கட்டுதே.. என்று வஞ்சிக்கு கைகால் எல்லாம் உதறல் எடுத்தது.
அஜய், வஞ்சியின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தான். வஞ்சி வந்த அடுத்தநாளே அவளுக்கு தனியறை கொடுத்துவிட்டாள்.. சிலநேரம் வர்மன் தன்னுடன் இருப்பதாக எண்ணி பேசிக்கொண்டிருப்பாள்.. அவள் தன்னைப் பத்தி என்ன நினைப்பாளென அவளுக்கு தனியறை ஒதுக்கிக் கொடுத்தாள்..
“அக்கா எனக்கு தனிரூம் வேண்டாம்” என்று முல்லையிடம் சண்டைபோட்டும் கூட.. முல்லை தன்னுடன் தங்கிக்கொள்ள அவளை அனுமதிக்கவில்லை.
அஜய், வஞ்சியின் அறையில் தூங்கிக்கொண்டிருக்க.. முல்லைக்கு இன்னும் அஜய் வீட்டில் இருப்பது தெரியாது.. அதைவிட காளிங்கன் பையன் தான் அஜய் என்று தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று சிம்மன்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.. வீட்டுக்கு வந்தவுடன் முல்லை, இனியாவுடன் குளிக்கச் சென்றுவிட்டாள்.. சிம்மன், வஞ்சியிடம் அஜயை பற்றி முல்லையிடம் நான் சொல்லிக்குறேன் நீ சொல்ல வேண்டாமென்று கூறிவிட்டான்.
இத்தனை நாள் தாயின் கண்ணில் கண்ணீரை கண்ட இனியா இப்போது புதியதாக முல்லையின் முகத்தில் தோன்றிய சந்தோசத்தைக் கண்டு தாயோடு கொஞ்சிப்பேசி துள்ளிக்குதித்து முல்லையுடன் விளையாடிய படியே வெளியே வந்தது.
வஞ்சி டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.. அஜய் எழுந்து பார்க்க.. பக்கத்தில் வஞ்சி இல்லாது கண்டும் புதியதாக இருக்கும் அறையை ஒரு முறை சுற்றிப்பார்த்து அறையில் யாரும் இல்லையென்று பயந்து வெளியே ஹாலுக்கு ஓடிவர.. இனியா விளையாடிக்கொண்டே அஜயின் மீது மோதியது.
இரண்டு குழந்தைகளும் கீழே விழ போகும்முன் இருவரையும் ஒரு சேர பிடித்துக்கொண்டாள் முல்லை.
குழந்தைகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது.. அஜய், இனியாவை விட கொஞ்சம் பெரிய பையன் போல தெரிய இனியா “அண்ணா நீ யாரு எங்க வீட்ல என்ன பண்ணுற” என்று அஜய்யின் பக்கம் போய் அவன் கையை பிடித்துக்கொண்டது.
அஜய் என்ன பதில் கூறுவான் என்று அவனையே மென் சிரிப்புடன் ஆவலாய் பார்த்திருந்தாள்.. ஒருவேளை வஞ்சிக்கு சொந்தக்காரங்களா இருக்குமோ என்று எண்ணிவிட்டாள் முல்லை.. குழந்தை பேசட்டும் என்று காத்திருந்தாள்.
அதே நேரம் சிம்மன் அறையிலிருந்து வெளியே வர.. இனியா அஜயிடம் கேட்பது அவனுக்கு காதில் விழுந்தது.. காரை நிறுத்திவிட்டு இறங்கிய காளிங்கன் காலையில் அஜய் சிம்மன் வீட்டில் தான் இருப்பான் அவனை கூட்டிட்டு வரலாம்.. என்று அவன் வீட்டுக்குள் போக :நான் காளிங்கன் பையன் அஜய் காளிங்கவர்மன்” என்று இனியாவிடம் மெலிதாக சிரித்து கூறியவன்.. “நீதான் இந்த வீட்டு பாப்பாவ.. சிம்மன் அங்கிள் உன்னைப் பத்தி என்கிட்ட சொல்லியிருக்காங்க” என்று இனியாவின் தோளோடு கைப்போட்டுக்கொள்ள.
அஜய் கூறியதைக் கேட்ட முல்லைக்கு ஒரு நிமிசம் நெஞ்சுக்குள் வலி வந்தது உண்மைதான்.. ஆனால் வர்மன் எனக்கு துரோகம் செய்திருக்கமாட்டான்.. என்று வர்மனின் மீது மலைபோல் நம்பிக்கை இருந்தது.. அப்படியே அஜய் என் வர்மனின் மகனாக இருந்தாலும் இவனையும் என் மகனாக பார்த்துக்கொள்வேன்” என்று எண்ணியடி வர்மனின் சாயல் அஜய் முகத்தில் தெரிகிறதா என்று உற்று நோக்கினாள்.
அஜய், இனியாவுடன் தோளில் கைப்போட்டிருப்பதைக் கண்டு என் வளர்ப்பு சோடை போகலை இனியாவுடன் இணைந்து நின்றது காளிங்க ஆனந்தத்தை அளித்தது..
“அஜய்” என்று கூப்பிட்டுக்கொண்டு ஹாலுக்குள் காளிங்கன் வர.. தந்தையின் குரலைக் கேட்ட திரும்பிப் பார்க்க..
காளிங்கன் “வா” என்று புன்னகையுடன் கையை அசைத்து கூப்பிட..
அஜய் “அச்சா வந்துட்டீங்களா” என்று வர்மனை நோக்கி ஓட.. இனியாவும் அஜய் பின்னே ஓடி “அப்பா” என்று அவன் முன்னே நின்று வர்மனையே கண்ணை சிமிட்டி சிமிட்டி அன்னார்ந்து பார்த்தது.
இரு கைகளையும் ராஜாளி போல விரித்து குழந்தைகளின் உயரத்திற்கு குனிந்து உட்கார.. அஜய்யும், இனியாவும் அவன் கைகளுக்குள் பாந்தமாய் அடைந்து கொண்டது.. சிம்மனுக்கு புல்லரித்துவிட்டது.. முல்லையோ, வர்மனுக்குள் புகுந்து கொள்ள மாட்டோமா அந்த நாள் எப்போதும் வரும் என்று ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்.
முல்லையை அணைத்துக்கொள்ள அவன் வர்மனாய் இல்லையே.. இப்போது அவன் காளிங்கனாக தானே இருக்கிறான்.. அது எப்படி சாத்தியமாகும்.. வர்மனை அடைய முல்லை தலைகீழாய் நிற்க வேண்டும் என்று அவள் அறியவில்லையே.
“வாங்க காளிங்கன்.. போன வேலை முடிஞ்சுதா” என்றபடி காளிங்கன் பக்கம் வந்தவன் இனியாவை தூக்கிக்கொண்டான் சிம்மன்..
“அஜய், நானும் உங்ககிட்ட வருவேன்” என்று கையை தூக்க
“வாங்க கிங்”என்று இருவரையும் தூக்கி இருபக்கமும் வைத்துக்கொண்டான்.
முல்லை வர்மனை (காளிங்கனை) பார்க்க.. அவனும் முல்லையை பார்த்தான்.. இருவரது பார்வைகளை கண்ட சிம்மன்
“தங்கம்ஸ் வாங்க சாப்பிடப்போகலாம்” குழந்தைகளை கூடிக்கொண்டு டைனிங் ஹால் போக.
அச்சோ இப்பவும் இந்த சிம்மன் என்னை கழட்டி விட்டுட்டு போறானே! என்று ஜர்க்கான காளிங்கன் “நண்பா நாங்க வீட்ல போய் சாப்பிட்டுக்கிறோம்” என்று நழுவ பார்த்தான்.
“நண்பா நாங்க உங்களுக்குன்னு தனியா சமைக்கல.. சேர்த்துதான் சமைச்சிருக்கோம் நீங்க சாப்பிட்டுத்தான் போகணும்” என்று கூறியவன் அங்கே நிற்கவில்லை.. குழந்தைகளுடன் டைனிங் ரூம் சென்றான்.
முல்லை கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.. அவள் கைகளில் போட்டிருந்த வளையல் சத்தம் தவிர வேறு எந்த ஓசையும் இல்லாமல் அமைதியாய் இருந்தது.. இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை..
“வா.வாங்க சாப்பிடலாம்” என்று முல்லை, காளிங்கனை கூப்பிட்டவளுக்கு அவன் தன்னுடன் வருவானா.. தன்னை ஏற்றுக்கொள்வனா.. என அவன் முகத்தை மலங்க மலங்க பார்த்து நின்றிருக்க.
“இப்போ உங்க கால்விரல் வலிபோயிருச்சா” என்று கேட்டுக்கொண்டே முல்லையின் பக்கம் வர.. பெண்ணவளுக்குள் அவன் காந்தமாய் தன்னை ஈர்த்து வருவது போல தோன்றியது.. அவள் இதயம் தாளம் தப்பியது.. எங்கே போய் அவனை வர்மாஆஆ..என்று அணைத்துவிடுவோமா என்று கை விரல்களை இறுக்கி வைத்துக்கொண்டாள் பாவை.
காளிங்கன் பக்கம் வந்ததும் முல்லைக்கு பேச்சு வரவில்லை.. உதடுகள் ஒட்டிக்கொண்டது.. நா பேசேவே எழுவில்லை..
“என்னங்க நான் பேசிட்டேயிருக்கேன் நீங்க எதுவும் பேசாம சிலையாட்டம் நிக்கறீங்க… ஓ நான் உங்க வீட்டுகாரர் போல இருக்கேனா? அதான் என்னையே பார்த்திட்டிருக்கீங்களா? சாரிங்க நான் காளிங்கன் வர்மன் காலையில சொன்னேன்ல.. எனக்கு ஒரு பையன் இருக்கான்.. என் மனைவி பார்வதி கொஞ்ச நாள் முன்ன இறந்துட்டாங்க” என்று அவன் வருத்தப்பட்டு சொல்ல.
காளிங்கன் கூறியதை கேட்டு மனம் சிதைந்து போனவள் “கடவுளே எந்தப்பொண்ணுக்கும் இந்த நிலைவந்திடக்கூடாது.. என்னோட வர்மன் அவன் வாயால எனக்கு மனைவி, மகன் இருக்கான்”என்று சொல்வதை என்னால ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.. என்று அவள் மனம் வெந்து புழுங்க.. முல்லையின் கண்களில் கண்ணீர் வந்தது..
காளிங்கனோ மனைவி இறந்து விட்டாள் என்று சொன்னதால்தான் அழுகிறாள் என்று நினைத்து “என்ன பண்றது பார்வதிக்கு யூட்ரஸ்ல ப்ராப்ளம் என்கிட்ட சொல்லாம விட்டுட்டா.. இப்ப நான் தனியா அஜய வைச்சு கஷ்டப்படுறேன்” என்று அவன் வருத்தமாகக் கூற.
“உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லைனு உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு” என்று முல்லை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கேட்க..
காளிங்கன் மௌனமாக இருந்தான்.. சில நொடிகள் கழித்து “மூணு வருசத்துக்கு முன்னால எனக்கு ஆக்சிடென்ட நடந்துச்சு.. அதுல நான் ஒருவருசம் கோமால இருந்தேன்.. எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.. கண்விழிச்சு பார்க்கும்போது பார்வதிதான் பக்கத்துல இருந்தா.. எனக்கு எதுவும் நினைவுக்கு வரல..
ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன்” என்று கூறிக்கொண்டிருக்க.. இருவரையும் காணவில்லையென வஞ்சி அங்கே வந்தவள் “அண்ணா சாப்பிட வாங்க சப்பாத்தி ஆறிடும்” என்று வஞ்சி காளிங்கனிடம் கூறியவள் “அக்கா நீங்களும் வாங்க இனியா அப்பதான் சாப்பிடுவா” என்று முல்லையையும் கூப்பிட
“ம்ம்.. வரேன் வஞ்சி” என்று முல்லை முன்னே நடந்தாள்..
இன்னும் கொஞ்ச நேரம் காளிங்கனிடம் முல்லை பேசியிருந்தால் அவனிடமிருந்த உண்மை அவளுக்கு தெரிந்திருக்குமோ என்னவோ?
டைனிங் டேபிளிலில் குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துக்கொண்டிருந்தது.. “ம்மா பசிக்குது சப்பாத்தி ஊட்டுங்க” என்று இனியா வயிற்றை தடவ..
அஜய் “எனக்கும் ஊட்டிவிடுவீங்களா” என்று முல்லையிடம் ஏக்கமாக கேட்க..
அஜய் அப்படி கேட்டதும் முல்லையின் தாய்மை கலங்கிப்போய் அவன் புறம் வந்தவள் “உனக்கும் அம்மா ஊட்டிவிடுறேன் ராஜா” என்று அஜயை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.. அஜய்க்கோ பார்வதியின் நியாபகம் வந்துவிட்டது.. இதழ் பிதுக்கி அழும் நிலைக்கு சென்றுவிட்டான்.. இனியாவோ “அண்ணா அழாத அம்மா உனக்கும் ஊட்டிவிடுவாங்க” என்று இனியாவும் அஜய்க்கு சமாதானம் கூறியது.
காளிங்கனுக்கோ நெஞ்சம் பதைபதைத்து.. “அஜய் அப்பா ஊட்டிவிடட்டா”என்று அஜயின் பக்கம் செல்ல
“அஜய்க்கு நான் ஊட்டிவிடுறேன்.. நீங்க சாப்பிட உட்காருங்க” என்று கூற
“இல்ல எப்பவும் பார்வதிதான் அஜய்க்கு சாப்பாடு ஊட்டுவா.. அதான் அவன் உங்களை சாப்பாடு ஊட்டிவிட கேட்டுட்டான் சாரி” என்று முல்லையிடம் மன்னிப்பு கேட்க.
“இனியாவுக்கு ஊட்டும் போது அப்படியே அஜய்க்கும் ஊட்டிவிடுறேன்.. எனக்கு இதுல சங்கடம் இல்லைங்க.. இனியொரு முறை சாரி எல்லாம் கேட்காதீங்க” என்று கூறியவள் இரு குழந்தைக்கும் சாப்பாத்தியை ஊட்ட ஆம்பித்தாள்.. அஜயும், இனியாவும் போட்டி போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தது..
வஞ்சியோ சிம்மன் பக்கத்தில் போகவே இல்லை.. அவன் எதாவது தன்னிடம் வம்பு செய்தால் என்ன செய்வது என்று எட்டி நின்று சப்பாத்தியை சிம்மன் தட்டில் வைத்துவிட்டு காளிங்கனுக்கு பரிமாற ஆரம்பித்தாள்.. “குருமா ஊத்து” என்று வஞ்சியை பார்க்க.. அவளோ “உங்க பக்கத்துலதான் இருக்கு ஊத்திக்குங்க” என்று சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டாள்..
ஏய் உன்னோட ஜல்ஜாப்பு வேலையை என்கிட்ட காட்டுறீயா.. நான் நரசிம்மன்டி.. என்கிட்ட உன்னோட பப்பு வேலைக்காகாது.. என்று சீக்கிரம் சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவ சமையல்கட்டுக்கு சென்றவன் சிங்கில் கைகழுவி வந்தவன் அடுப்பில் பால் காயவைத்துக் கொண்டிருக்கும். வஞ்சியை பார்த்தான்.. அவளோ கொஞ்ச நேரம் முன்னே சிம்மன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதையே எண்ணி பால் பொங்குவது கூட தெரியாமல் நின்றிருந்தாள்.. “ஏய் பால் பொங்குது” என்று வஞ்சியை தன்புறம் இழுத்து அடுப்பை அணைத்து விட்டு “எங்க உன்னோட சிந்தனையை வச்சிருக்க.. இப்படித்தான் சமையல்கட்டில அசால்ட்டா இருப்பியா.. உன்னை நம்பி நாங்க எப்படி வீட்டுக்குள்ள இருக்கறது.. கேஸ் வெடிச்சிருச்சுனா எல்லாருக்கும் ஆபத்துதான” என்று அவளை கைவளைவில் வைத்துக்கொண்டே பேச.
“பால் பொங்கினா கேஸ் வெடிக்காது” என்று அவனை நிமிர்ந்து பார்க்க.. சமையல் கட்டின் கதவை காலால் லேசாக மூடியவன் அப்படியே அவள் முகத்தை அழுந்தப்பிடித்து “நான் உன்னை குருமா ஊத்த சொன்னேன்ல நீ ஏன் வரல” என்று அவள் இதழ் நோக்கி குனிய.
“அ.அது. நீ..உங்க பக்கம் வந்தா எ.என்னை ஏதாச்சும் பண்ணுவீங்கன்னு தான் வரல” என்று இதழ் நடுங்க பேச..
நடுங்கிய இதழை அப்படியே கவ்விக்கொண்டு இதழ் அமிழ்தம் அருந்தத்துவங்கினான்.. ஆண்மகனின் முதல் இதழ் முத்தம் அவளுக்கு உடலில் அதிர்வலையைக் கொடுத்தது.. யாராவது வந்தால் என் நிலைமை என்னவாகும்.. என கவலைப்பட்டவளின் கண்ணில் கண்ணீர் மாலையாக வந்தது..
அவள் இதழைக் கடித்து மென்று தின்று கொண்டிருந்தான் சிம்மன்.. அவளது கண்ணீர் கன்னம் வழியே பயணித்து இதழில் பட சிம்மனுக்கு இனிப்பு சுவை போய உவர்ப்பு சுவை வர.. சுயம்வந்து ஓ அழறா போல.. என்று அவளை விட்டுப் பிரிந்து.. “எதுக்கு அழற” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கேட்க.
“இப்படி யாராவது முத்தம் கொடுப்பாங்களா?” நீதானே என்னை லவ் பண்ணுறேன் சொன்ன.. அதான் முத்தம் கொடுத்தேன்.. ஏன் நான் நல்லாத்தானே முத்தம்கொடுத்தேன்.. சரியா கொடுக்கலையா.. என்று மீண்டும் அவள் இதழைக் கவ்விக்கொண்டான்..
வஞ்சிக்கோ ,சிம்மன் தலையில் நாலு கொட்டு வைக்கவேண்டும்.. என்று தோன்றியது.. இப்போது இதழ் முத்தத்தோடு நிற்காமல் அவனது முரட்டுக்கரங்கள் அவளது தாவணியை தள்ளி இடுப்பை ஆராய்ச்சி செய்வதில் மும்மரம் ஆனது.
“சிம்மாஆஆ” என்று இனியாவின் குரல் கேட்டது சட்டென்று அவளை விட்டுப் பிரிந்து ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துக்கொண்டிருந்தான்.
வஞ்சியோ அப்படியே பனிச்சிற்பம் போல உறைந்து நின்றாள்.. இருகுழந்தைகளையும் கைகழுவிவிட சமையல்கட்டிற்குள் கூட்டிட்டு வந்த முல்லை.. வஞ்சி பீரிஸாகி நிற்பதைக் கண்டு வஞ்சியின் தோளை தட்டி “என்னாச்சு வஞ்சி இப்படி நடுவழியில நிற்குற.. பிள்ளைங்களுக்கு பால் காய்ச்ச சொன்னேனே பால் காய்ச்சிட்டீயா” என்று கேட்டுக்கொண்டே குழந்தைகளுக்கு வாய் கழுவிவிட்டு முந்தானையால் துடைத்துவிட்டாள்.
அப்போதும் வஞ்சி அப்படியே நிற்க.. “ஹலோ வஞ்சி” என்று இனியா அவளது தாவணியை பிடித்து இழுக்க..
“அச்சோ எல்லாம் வந்துடுவாங்க விடுங்க” என்று கத்தியே விட்டாள் வஞ்சி.
தண்ணியை குடித்துக்கொண்டிருந்த சிம்மனுக்கு புரையேறி விட்டது.. தலையை தட்டிக்கொண்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.
“யாரு வருவாங்க வஞ்சி எதுக்கு இவ்ளோ பதட்டம்” என முல்லை கேட்க
“ஒண்ணும் இல்லக்கா இனியா தாவணியை இழுக்க.. பதட்டத்துல ஏதோ உளறிட்டேன்” என்று நாக்கை கடித்தாள்.
“சரி சரி பாலை ஆத்தி கொண்டுவா நான் தோட்டத்துல இருக்கேன்” என்று வெளியே வந்து விட்டாள் முல்லை.
“அப்பா” என்று அவள் நெஞ்சை பிடித்து நிற்க..சிம்மன் சமையல்கட்டுக்குள் மீண்டும் வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.
“ஆத்திஇஇ” என்று கன்னத்தில் கைவைத்து நிற்க..
“வஞ்சி பால் கொண்டு வா” என்று முல்லையின் சத்தம் கேட்டு
“இதோ ஊத்தி கொண்டு வரேன் அக்கா” என்று இரண்டு கிளாசில் பாலை ஊத்தி கொண்டு சென்றாள்.
குழந்தைகள் இருவரும் தோட்டத்தில் விளையாட முல்லை அவர்கள் பக்கம் இருந்தாள்.. சிம்மனும், காளிங்கனும் தனியே நின்றிருந்தனர்.. காளிங்கன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.. போன் பேசி முடித்து வந்தவன் “சிம்மா முல்லையை கடத்தின சந்தானம் இப்போ ஹாஸ்பிட்டல முடியாம படுத்திருக்காராம்.. அதுக்கு நீங்கதான காரணம்” என்று புருவம் தூக்கி கேட்க.
“ஆமா நான் தான் காரணம்.. இத்தனை நாளாய் அந்த நாய சும்மா விட்டுவச்சது தப்பாப் போச்சு.. இன்னிக்கு என்னோட பொண்ண கடத்தி சித்ரவதை செய்திருக்கான்.. சும்மா விடுவேனே.. அதான் அவன் உசிர மட்டும் உடம்புல இருக்கட்டும்.. என்று மத்தது எதுவும் வேலை செய்யாதபடி பண்ணினேன்” என்று இதழ் வளைத்து சிரித்தான்.
“நீங்களே தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால்.. நாங்க போலீஸ் எதுக்கு இருக்கோம் சிம்மா.. நீங்க பண்றது சரியில்லை. அப்புறம் உங்க மேல நான் ஆக்சன் எடுக்க வேண்டியிருக்கும்” என்று கடுமையாக பேசி விரல் நீட்ட..
“ஹா ஹா” என்று சிரித்து “அப்படியா நண்பா.. உன்னால முடிஞ்சா என் மேல ஆக்சன் எடு பார்க்கலாம்” என்று கண்ணடித்து சிரித்தான் சிம்மன்.
“கண்டிப்பா நான் உங்க மேல ஆக்சன் எடுப்பேன் சிம்மன்” என்றவன் “சரி நான் கிளம்புறேன்.. நாளைக்கு புது வீட்டுல பால் காய்ச்சணும் சிம்மா.. நீங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுங்க” என கூறியவன்.
அஜயை கூப்பிட பார்க்க.. அவனோ முல்லையின் மடியில் அமர்ந்து பால் குடித்துக்கொண்டிருந்தான்.
இப்போ எப்படி அஜயை கூப்பிடுவது என்று தயங்கி நின்றான்..
சிம்மன் அவன் தயக்கத்தைப் போக்க.. “காளிங்கன் அஜய் இன்னிக்கு முல்லைகூடவே இருக்கட்டும்.. நீங்களும் இங்கேயே படுத்துக்குங்க.. காலையில நேரமே போகலாம்” என்று காளிங்கன் கையை பிடித்துக்கொண்டு அவனறைக்குச் செல்ல.
“சிம்மன் கையை விடுங்க.. என் நைட்டிரஸ் எல்லாம் எங்க வீட்ல இருக்கு” என்று கூறிக்கொண்டே சிம்மன் பின்னால் சென்றான்.
சிம்மன் அறைக்குச் சென்று தன் கபோர்டில் வைத்திருந்த வர்மனின் டிசர்ட்டை எடுத்துக்கொடுத்தான்..
டீசர்டை கையில் வாங்கியவன் அதை தடவிப் பார்த்தான்.. அந்த டீசர்ட் வர்மனின் பிறந்தநாளுக்கு சிம்மன் ஆசையாக வாங்கிக்கொடுத்தது.. அவனுக்கு நியாபகம் வருகிறதா.. என்று சிம்மன் அவன் முகத்தையே பார்க்க.. அவனோ “டீசர்ட் கலர் நல்லாயிருக்கு.. இந்த கலர்ல என்கிட்ட இல்ல” என்று சட்டையை கழட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.. சிம்மன் தலையை இருபுறமும் ஆட்டி.. என் வர்மன வெளியே கொண்டு வரேன் காளிங்கன் என்று நகைத்துக்கொண்டான்.
அதே வேளை சந்தானத்தை வைத்திருந்த ஹாஸ்பிட்டலில் முகேஷ் .. மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்த சந்தானத்தை பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.
“டேய் சிம்மா உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று கத்திக்கொண்டிருந்தான்.
சிம்மனின் முடியை கூடத் தொடமுடியாது.. என்று முகேஷு அறிந்திருக்கவில்லை.
17. மோக முத்தாடு அசுரா
குழந்தைகள் ஆசை தீர விளையாடிவிட்டு முல்லையின் அறைக்குள் வர.. இருவரையும் ஹாட் வாட்டரில் குளிக்க வைத்தவள் மெத்தை விரிப்பை சரி செய்து கொண்டிருக்க.. “அண்ணா நீயும் என்கூடவே படுத்துக்க.. அம்மா கதை சொல்லுவாங்க கேட்டுக்கிட்டே தூங்கிடலாம்” என்று அஜயின் கைப்பிடித்துக்கொண்டு கட்டிலுக்கு பக்கம் சென்றது.
“ஓஓ.. முல்லை அம்மா கதை சொல்லுவாங்களா.. என்னோட பார்வதி அம்மாவும் நான் தூங்கும் போது கதை சொல்லுவாங்க.. ஆனா அவங்கதான் சாமிகிட்ட போய்ட்டாங்களே?” தலை சாய்த்து இதழை பிதுக்கியது.
அண்ணா.. நீ கவலைப்படாத இனிமே உனக்கும் எனக்கும் “முல்லையம்மா கதை சொல்லுவாங்க.. வா கட்டில படுத்துக்கலாம்” என்று பெரியமனுசி போல பேசிய இனியா, அஜயுடன் கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டது..
முல்லை இருவர் பேசுவதையும் பார்த்து இந்த காலத்து குழந்தைங்க பெரியவங்க போல பேசுறாங்கப்பா.. என்று நினைத்தப்படி நின்றிருக்க..
“ம்மா.. என்ன கனவு கண்டுட்டு நிக்குற.. வா சீக்கிரம் எங்களுக்கு கதை சொல்லு தூக்கம் வருது” என்று முல்லையை இனியா கூப்பிட.
“இதோ வரேன்டி பெரிய மனுசி” என்று இருவருக்கும் போர்வையை போர்த்திவிட்டு தானும் அவர்களுடன் படுத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்க.
வஞ்சி சமையல்கட்டில் பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்து விட்டு இன்னிக்கு நாம நம்ம அறையில தூங்கக் கூடாதுப்பா.. சிம்மன் சார் அங்க வந்தாலும் வந்துடுவாரு என்று முல்லையின் அறைக்குச் செல்ல.. அங்கே இரு குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்க வஞ்சியும் கட்டிலுக்கு கீழே பாய் விரித்து படுத்து கதை கேட்கத் துவங்கினாள்.
சிம்மனும், காளிங்கனும் அறையில் படுத்திருக்க.. சிம்மன் வர்மனுடன் இருந்த பொன்னான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்..
காளிங்கனோ.. அஜய், பார்வதியின் அணைப்பில் தூங்கியவன் அவள் இறந்தபிறகு தன்னை அணைத்துக்கொண்டு தூங்குவான்.. இப்போ தன்னை தேடுவான் என்று எண்ணியவன் பக்கத்தில் படுத்திருந்த சிம்மனிடம் “நண்பா அஜய் என்னை அணைச்சுகிட்டு தூங்கினாதான் தூக்கம் வரும்.. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்” என்று எழும்ப..
வர்மன் தூங்கும் போது தன்னை அணைத்துக்கொண்டு தான் உறங்குவான்.. இப்போது காளிங்கனை சோதித்து பார்க்க எண்ணி “காளிங்கன், அஜயை முல்லை பார்த்துப்பா நீங்க கவலைப்படாம தூங்குங்க” என்று அவன் கையில் கை வைத்து இழுக்க
“இல்லப்பா முல்லையோட இனியா பாப்பா இருக்கா.. இரண்டு பேரையும் முல்லை எப்படி தனியா சமாளிக்க முடியும்.. நான் போய் அஜய என்கூட கூட்டிட்டு வரேன்..” என்று எழுந்தவன் முல்லையின் அறைக்குப் போக.
“இரு நண்பா நானும் வரேன்” என்று சிம்மனும் எழுந்திருந்து அவன் பின்னே செல்ல.
முல்லையின் அறைக்குள் இருவரும் போக.. அங்கே இரு குழந்தைகளும் முல்லையின் வயிற்றில் கை போட்டு அணைத்துக்கொண்டு கதை கேட்டுக்கொண்டிருந்தனர்.. வஞ்சியோ சிம்மனை கண்டவள் அடித்து பிடித்து எழுந்து கலைந்திருந்த மாராப்பை சரிசெய்து அமர்ந்துகொண்டாள்.
சிம்மனோ அவளது செயலைக் கண்டு சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு அவளைப் பார்த்திருந்தான்.
இனியா காளிங்கனை பார்த்துவிட “அப்பாஆஆ” என்று எழுந்து உட்கார.. முல்லை காளிங்கனை பார்த்து சங்கடப்பட்டு மெதுவாக போர்வையை விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
காளிங்கன் தன்னை கூட்டிக்கொண்டு போக வந்துவிட்டான் என்று நினைத்த அஜய்.. “அச்சா நான் முல்லை அம்மா கூடவே படுத்துக்குறேன்” என்று முல்லையின் முந்தானை சேலையை கையில் பிடித்துக்கொண்டது.
“அஜய் நீ முல்லையை தொந்தரவு பண்ணுவ.. வா போகலாம்” என்று கட்டில் அருகே வர..
காளிங்களின் உயரத்திற்கு அண்ணார்ந்து பார்த்த இனியா “எனக்கு கழுத்து வலிக்கும் என் பக்கம் வந்து உட்காருங்க” என்று கூற
கட்டில் நுனியில் உட்கார்ந்த காளிங்கன் “சக்கரே அண்ணாவ காலையில கூட்டிட்டு வரேன்” என்று இனியாவின் கன்னம் தட்டி கூற
“அப்பாஆஆ அண்ணா தான் இங்கயே தூங்குறேன்னு சொல்றாங்கள.. விடுங்களேன்” என்று காளிங்கனிடம் கோவமாக பேசிய இனியா.. தாடையில் கை வைத்து யோசித்து “ஹா! ஜடியா நீங்களும் இங்கயே படுத்துக்குங்க” என்று இடம் விட்டு உட்கார.
“மக்கும்” என்று தொண்டையை செரும்பியவன்.. முல்லையை பார்க்க.. அவளோ வெட்கத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.. அச்சோ இதென்ன வம்பாயிருக்கு.. என்று சிம்மனை பார்க்க..
“எல்லாம் சிம்மன் வளர்ப்பு நண்பா என்னைப் போலத்தான் துடிப்பா யோசித்து பேசும் இனியா” என்று கண்ணடித்தான் சிம்மன்.
“சக்கரே அப்பா சிம்மன் கூட நிறைய பேச வேண்டியிருக்கு அஜய் இங்கயே தூங்கட்டும் என்றவன் அப்பாடா தப்பிச்சா போதும்.. என்று அறையை விட்டு அந்த கணமே வெளியேறியிருந்தான்.
வஞ்சியோ அப்பாடா நம்மள யாரும் தொந்தரவு செய்யல என்று போர்வையை போத்திக்கொண்டு படுக்க கொள்ள.
தூங்குறியாடி நீ.. அதெப்படி நான் உன்னை அவ்வளவு சீக்கிரம் விடுவேனா என்று இருகையையும் தேய்த்துக்கொண்டு.. வராத இருமலை வரவழைத்து இருமிக்கொண்டு “வஞ்சி ஒரே இருமலா வருது எனக்கு இஞ்சி தட்டிப்போட்டு டீ வச்சு கொடேன்”. என்று வஞ்சியை கூப்பிட.
அதான பார்த்தேன் சிங்கம் பதுக்கி நிற்குதேனு.. “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு சார் தூக்கம் வருது.. முல்லை அக்காவ போட்டு தரச்சொல்லுங்க” என்று போர்வைக்குள்ளேயிருந்தே பேச.
“அண்ணா அவ காலையிலிருந்து வேலைசெய்யுறா.. இருங்க நான் வந்து போட்டுத்தரேன்” என்று எழும்ப..
ம்மா நீங்க இருங்க.. எங்களுக்கு கதை சொல்லணும்.. என்று முல்லையின் கையை பிடித்து தடுத்த இனியா.. போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் வஞ்சியிடம் “ஆன்ட்டி நீங்க சும்மா தூங்காம படுத்திருக்கிங்கதான சிம்மாக்கு டீ போட்டுக்கொடுங்க” என ஆர்டர் போடுவது போல பேச.
“என் தங்கக்கட்டி பாப்பா நான் என்ன மனசுல நினைக்கிறனோ.. அதை தான் என் செல்லம் நடத்திக்கொடுக்கும்” என்று மனதிற்குள் இனியாவை கொஞ்சிய சிம்மன்.. இனியாவை பார்த்து கண்ணடித்தான்.
இனியாவும் கண்ணைசிமிட்டி சிரித்தது.. அறுந்த வாலு இனியா என்னை சிம்மன் கிட்ட மாட்டிவிட்டிருச்சு.. என்று புலம்பிக்கொண்டு போர்வையை விட்டு எழுந்து இனியாவை முறைப்பது போல பார்க்க..
“ஆன்டி பார்த்தது போதும் போங்க” என்று கதவு பக்கம் கையை காட்டியது.
“போறேன்.. போறேன்” என்று சலித்தபடி சமையல்கட்டுக்குச் சென்றாள்.
“பை தங்கம்” என்று இனியாவின் கன்னத்தில் முத்தம்கொடுத்து.. இனியாவின் முத்தத்தையும் வாங்கிக்கொண்டு சென்றான் சிம்மன்.
“ச்சே.. நான் அவசரப்பட்டு லவ் பண்ணுறேன்னு சொல்லியிருக்க கூடாது.. வந்த நாளிலிருந்து என் பக்கம் தலைவைத்து படுக்காத மனுசன்.. நான் லவ் பண்ணுறேனு சொன்னதும் முத்தம் எல்லாம் கொடுக்குறாரு.. அல்லு விடுது எனக்கு” என்று தனக்குள் பேசிக்கொண்டே சமையல்கட்டில் இஞ்சியை தட்டி டீயை வைத்துக்கொண்டிருந்தாள்.
அவள் புலம்பும் போதே சிம்மன் வந்தவன் அவள் முதுகுக்கு பின்னே நின்றிருந்தான்.. “ஆமா.. ஆமா.. நீ லவ் பண்ணுற சொன்ன பிறகுதான் இந்த சிம்மன் உனக்கு முத்தம் கொடுத்தான்” என்று அவள் காதோரம் சென்று பேச..
“ஆத்தி” என்று நெஞ்சில் கை வைத்து திரும்ப அவள் மோதி நின்றது சிம்மனின் திடகாத்திரமான அவனின் நெஞ்சில் தான்..
“அப்பா ரொம்ப ஸ்மூத்தா இருக்குடி” என்று கண்சொருகி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தக் காவியம் நடத்த.. அவளோ சிம்மனின் டீசர்ட்டை இறுக பிடித்துக்கொண்டாள்.
“டீசர்ட் டிஸ்டர்ப்பா இருக்கா.. கழட்டிருட்டா”
“இது சமையல்கட்டு” என்று எச்சில் விழுங்கிப் பேச..
“அப்போ பெட்ரூம் போலாமா” என்று அவள் இதழில் மென் முத்தம் பதித்து கைவிரலால் முகவடிவை அளந்தான்.
“பெட்ரூம் போறதுக்கு நீங்க என் கழுத்துல தாலி கட்டுங்க.. அப்புறம் பெட்ரூம்க்கு வரேன் இப்ப விடுங்க”. என்று அவன் உடும்பு பிடியிலிருந்து திமிறி ஓடப் பார்க்க.
“ஏய் ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன்.. நீ அடம்பிடிச்சினா.. அப்புறம் மொத்தமா உன்னை எடுத்துக்குவேன் எப்படி வசதி ” என்று அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்த்தபடி பேச.
“சரி முத்தம் மட்டும் கொடுங்க” என்று கண்ணை மூடிக்கொண்டாள் பெண்ணவள்.
“கண்ணை திறந்து பாருடி உன் கண்ணை பார்த்துட்டே கொடுத்தா தான் முத்தத்தை இரசித்து கொடுக்க முடியும்” என்று அவனது விரலால் இதழை வருடிய படி கூறினான்.
பட்டாம்பூச்சிபோல கண்ணை விரித்து விரித்து மூட.. அதில் சொக்கிப்போனவன் பெண்ணவளின் சிறகு இல்லாமல் படபடக்கும் இமைகளுக்கு முத்த ஒத்தடம் கொடுத்தான்.. மெல்ல பட்டு கன்னங்கள் இரண்டிலும் முத்தம் கொடுத்து தேனூறும் இதழில் முத்தம் பதிய போட ஆரம்பித்தான்.
அறைக்கு சென்ற காளிங்கனுக்கோ “இந்த இனியா பாப்பா என்னை முல்லையிருக்கும் கட்டில படுக்க சொல்லுது.. இதுல முல்லை வேற வெட்கப்பட்டு என்னை பாடாய் படுத்துறா.. என்று தலையில் தட்டிக்கொண்டவனுக்கு தொண்டை வரண்டு தான் போனது.. தண்ணீர் ஜக்கை எடுத்துப் பார்க்க அதில் தண்ணீர் இல்லை என்றதும் ஹாலுக்குப் போக.. சமையல் கட்டில் முனகல் சத்தம் கேட்டு என்னது சமையல் கட்டுல எலி சத்தம் போடுறது போல இருக்கே என்று சமையல் கட்டிற்கு போய் எட்டிப்பார்க்க.. அவன் கண்ட காட்சியில் ஜக்கை கீழே போட்டிருந்தான்.
ஏதோ விழுந்த சத்தம் முத்த சஞ்சாரத்தில் இருந்தவர்களுக்கு கேட்க.. அவசரமாக வஞ்சியை விட்டுப் பிரிந்து நின்று பார்க்க.. காளிங்கன் சிம்மனை முறைத்துப் பார்த்திருந்தான்.
வஞ்சி தலையை குனிந்து கொண்டு காளிங்கனை தாண்டி ஓடிவிட்டாள்..
சிம்மனோ தலையை கோதிக்கொண்டு “இருமல் வந்துச்சு அதான் டீ போட்டு குடிக்கலாம்னு வந்தேன்” என்று வஞ்சி போட்டு வைத்த டீயை எடுத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல வெளியே வந்தான்.
“டேய் ரவுடி பயலே இது எல்லாம் நல்லாவே இல்லை பார்த்துக்கோ” அவன் முதுகில் கையால் குத்து விட்டான்
“இல்லையே எனக்கு முத்தம் கொடுத்தது நல்லாத்தான் இருந்துச்சு” என்று டீயை குடித்து முடித்து சிங்கில் டம்ளரை கழுவி வைத்து திரும்பியவன்.. “நான் வஞ்சியை விரும்புறேன் அவளுக்கும் என்னை இருக்கு நண்பா.. அதான் முத்தம் கொடுத்தேன்” என்று காளிங்கனை தள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றான்.
சிம்மன் பின்னே சென்ற காளிங்கன்.. “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க.. எக்கு தப்பா நடக்குறதுக்குள்ளே” என்று கட்டிலில் படுத்துக்கொண்டு “காலையில நேரமே எழுந்திருக்கணும்” என்று கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.. சிம்மனிடம் பேசினால் அவனை திட்டிவிடுவோமா.. என்று அவனுக்கு தோன்ற எதுவும் பேசாமல் உறங்கிவிட்டான் காளிங்கன்.. சிம்மனும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டான்.
காலையில் வஞ்சி எழும்பும் முன்னே முல்லை எழுந்து இரு குழந்தைகளையும் ஓரமாக படுக்க வைத்து கட்டிலின் ஓரத்தில் தலையணையை வைத்து குளியலறைக்குள் சென்றாள் முல்லை.. குளித்துவிட்டு வந்தவள் மெல்லிய கரை வைத்த பட்டுப்புடவை கட்டிக்கொண்டு தலையை துவட்டி விட்டு இருபக்கமும் முடியெடுத்து கிளிப்போட்டு அடக்கி.. பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி தீபாரதனை காட்டி கடவுளே “என்னோட வர்மன் என்னை அடையாளம் கண்டுகொள்ளணும்” என்று கடவுளிடம் பிராத்தனை வைத்து நெற்றியில் வழமை போல திருநீறு இட்டுக்கொண்டு பூஜையறையிலிருந்து வெளியே வர.. காளிங்கன் எழுந்து புதுவீட்டுக்கு பால் காய்ச்சுவதால் பக்கத்திலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அஜயை எழுப்பி வீட்டுக்கு கூட்டிட்டுப்போகலாம்.. என்று வீட்டுக்குள் வேகமாக வர..
பூஜையறையிலிருந்து சமையல்கட்டிற்கு சென்ற முல்லையின் மீது காளிங்கன் மோதிவிட பதட்டத்தில் அவளின் கால்கள் தடுமாறி கீழே விழப்போக.. “ஏய் பப்லி” என்று முல்லையின் இடுப்பை வளைத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.. அவளோ கூச்சப்பட்டு அவனிலிருந்து விலக.. அவனது சட்டை பட்டனோடு அவளது தலைமுடி சிக்கிக்கொள்ள.. முல்லை நடுங்கியபடி பட்டனிலிருந்து முடியை எடுக்கப் பார்க்க.. “இருங்க இருங்க முல்லை நான் எடுத்துவிடுறேன்” என்றவன் அவளது முடியை மெல்ல எடுத்துவிட.. அவள் தலையை சாய்க்க.. இருவரின் நெற்றியும் முட்டிக்கொள்ள.. கோவிலில் காளிங்கன் நெற்றியில் வைத்த குங்குமம் முல்லையின் நெற்றியில் ஒட்டிக்கொண்டது.. அவனது கைகள் அவளை அணைக்க தோன்றியது.. அவளது இதழில் முத்தம் கொடுக்க எண்ணம் வர.. ச்சே என்ன மடத்தனம் என்று தன்னை திட்டிக்கொண்டவன் முல்லையின் முடியை பட்டனிலிருந்து எடுத்துவிட்டு சாரி முல்லை என்று கூறியவன் திரும்பி நின்று கொண்டான்.. முல்லைக்கு அவனது நெருக்கம் பழைய நினைவுகளை அவளுக்குள் தோன்ற விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
“அச்சோ.. இந்தப் பொண்ண நாம தொட்டோம்னு அழுதோ” என்று திரும்பி நின்று
“சாரி முல்லை நான் வேணும்னு உன் நெத்தியில பொட்டு வைக்கல” என்று அவன் கைகள் நடுங்கியது.
“ஏங்க என்னை சித்ரவதை பண்ணுறீங்க.. நீங்க என் வர்மன்” என்று அவனது தோளில் சாய்ந்து கொள்ள தோன்றிய எண்ணத்தை கைவிட்டு என்னோட வர்மனாக என்னை அவனின் முல்லைக்கொடியாக என்றைக்கு நினைத்து கட்டி அணைக்கிறானோ அன்று அவனை அணைத்துக்கொள்வேன்..
என்று எண்ணியவள்.. தப்பு பண்ணிட்டோமா என்று நின்றிருந்தவனிடம் “சாரி எல்லாம் வேண்டாங்க.. ஏதேச்சையா நடந்திருச்சு விடுங்க” என்று சமையல்கட்டுக்குள் சென்றாள்.
முல்லை போவதையே பார்த்துக்கொண்டிருந்த காளிங்கனின் மனதில் முல்லையை பார்த்தால் அவனது கைகள் அவளை அணைக்கசொல்கிறதே.. அதையும் தாண்டி அவளுக்கு முத்தம் கொடுக்க வேறு தோணுது.. இந்தப் பொண்ணு பக்கம் இனி போகக்கூடாது.. எனக்கு பையன்வேறு இருக்கான் இது தப்பு என்று தப்பாக யோசித்து முடிவெடுத்தான்.. ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அவன் செய்த சபதம் எல்லாம் தவிடு பொடியாகப்போவது என்று காளிங்கனுக்கு தெரியவில்லை.
முல்லையை அடுப்பில் பாலை ஊற்றிவைத்துவிட்டு சற்று முன்பு காளிங்கனுடன் அவள் இருந்த கோலத்தை எண்ணி அவன் நெற்றியில் இருந்த குங்குமம் அவள் நெற்றிக்கு இடம் மாறியதை எண்ணி சந்தோசமாக குங்குமத்தை தொட்டு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.. பால் பொங்கி வர.. அச்சோ என்று பால் குண்டாவை அப்படியே தொட்டு விட.
சூடாக இருக்கும் பாத்திரம் அவள் கையை சுட்டு விட..”ஆஆஆ” என்று பெண்ணவள் கத்திவிட்டாள்.. ஹாலில் நின்றிருந்த காளிங்கனுக்கு முல்லையின் சத்தம் கேட்டு ஓடி போய்ப்பார்க்க.. அவளோ கையை உதறிக்கொண்டிருந்தாள்.. காளிங்கனுக்குள் இருக்கும் வர்மன் வெளியே வந்துவிட்டான்..
“பப்ளி என்னாச்சுடி” என்று பதறி அவளது கைவிரலை பிடித்து வாயில் வைத்துக்கொண்டான்.. அவளோ அவனது செயலில் மதி மயக்கிபோய் இப்போது என்ன வார்த்தை கூறினான்.. இவன் என்னோட வர்மன்தான் என்று நினைத்தவள் அப்படியே ஆண்மகனின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.. அவள் சாய்ந்ததும் அவளை அணைத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் பிரிட்ஜை திறந்து மாவை எடுத்து அவள் கைவிரலை அதில் விடவைத்தான்.. அவளோ கண்ணீருடன் என் வர்மன் என்கிட்ட வந்துட்டான் திரும்ப வந்துட்டான்.. மாவிலிருந்து கையை எடுத்து சிங்கில் இருந்த பைபில் கையை கழுவிவிட்டு திரும்பி “வர்மாஆஆ” என்று கூப்பிட அங்கே காளிங்கன் நிற்கவில்லை.. அவன் அப்போதே சென்றுவிட்டான்.
கடவுளே இது என்ன சோதனை சில நேரம் என்னை மனைவியாக பார்க்கிறான்.. சிலநேரம் என்னை அந்நிய பொண்ணாக தீண்டாமல் விரதம் காக்கிறான்.. என் நிலைமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது.. என்று கண்ணீருடன் நிற்க.. வஞ்சி குளிந்து விட்டு சமையல் கட்டுக்குள் வர.. முல்லை கண்ணீரை துடைத்துக்கொண்டு பால் சிந்திய அடுப்பை துடைத்துவிட்டாள்.. “அக்கா பால் சிந்திடுச்சா விடுங்க நான் சுத்தம் பண்ணுறேன்.. நீங்க போய் இனியாவ எழுப்பி குளிக்க வைங்க.. காளிங்கன் அண்ணா வீட்டுக்கு பால்காய்ச்ச போகணும்ல” என்று பிரிட்ஜிலிருந்து வேறு பால்பாகெட்டை எடுத்தாள்.
“அஜய் எழுந்துட்டானா”
“அக்கா இப்போதான் காளிங்கன் அண்ணா அஜயை தூக்கிட்டு போறாங்க” என்றதும்
“ஓஓ. போயாச்சா” என்று வெறுமையாக பேசியவள் அவள் மனதில் தோன்றியதை மறைத்து விட்டு “நான் இனியாவ குளிக்க வைக்கப் போறேன்” என்று அறைக்கு சென்றவளுக்கு அழுகை நிற்கவில்லை.. கண்ணீரை துடைத்து கொண்டு
இனியாவை எழும்பி குளிக்க வைக்க அவளது கவுனை கழட்டி விட.. “ம்மா” அண்ணா எங்கே” என்று கேட்க.. “அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க” என்று இனியவை குளியறைக்குள் தூங்கிக்கொண்டு போக
“அப்ப நாமளும் அப்பா வீட்டுக்கு போகலாம்” என்ற
இனியாவிடம் போலாம்டி என்றவள் இனியாவுக்கு புது டிரஸ் போட்டுவிட்டு..
“நீ சிம்மா சித்தப்பா எழுந்துட்டாங்களான்னு பாரு” என்று இனியாவை வெளியே அனுப்பிவிட்டு தலைவாரி நெற்றியில் குங்குமம் வைத்து வெளியே வந்தாள்..
இனியாவுக்கு சிம்மன் மடியில் வைத்து பாலை புகட்டிக்கொண்டிருந்தான்.
முல்லை வந்ததும் “போலாமா முல்லை” என்று இனியாவின் முகத்தை பார்க்க
“அண்ணா நீங்க போய்ட்டு வாங்க நான் வரலை” என்று அவள் அறைக்குள் போக.
“முல்லை நீதான் அந்த வீட்ல பால் காய்ச்சப் போற.. நீயில்லாம எப்படிமா” என்று கூறியவன் இனியாவை பார்த்து கண்ணசைக்க.
“ம்மா வாம்மா போலாம்” என்று முல்லையின் கையைப்பிடித்து காளிங்கன் வீட்டுக்கு கூட்டிச்சென்றது..
முல்லையின் பின்னேயே “அக்கா இருங்க நானும்.. வரேன்” என்று புது சேலை கட்டிக்கொண்டு ஓடினாள் வஞ்சிக்கொடி.. சிம்மன் சிரித்தபடி காளிங்கன் வீட்டுக்குச் சென்றான்.
காளிங்கன் பூஜையறையில் சாமிபடங்கள் ஒருபக்கம் மாட்டிவிட்டு கொஞ்ச தூரம் தள்ளி பார்வதியின் போட்டோவை மாற்றி மாலையை போட்டுக்கொண்டிருந்தான்.
முல்லை வீட்டுக்குள் வர.. பார்வதி போட்டோவிற்கு போட்ட மாலை அவன் கைதவறி முல்லையின் கழுத்தில் மாலையாக விழுந்தது.
கழுத்தில் மாலை விழுந்ததும் நிமிர்ந்து பார்க்க.. காளிங்கன் நின்றிருந்தான்.
“சாரி முல்லை” என்று சேரிலிருந்து இறங்கி வர..
இனியா “அப்பாஆஆ” என்று ஓடிவந்து காளிங்கன் காலைக்கட்டிக்கொண்டது.
“சக்கரே” என்று முல்லையை ஒரு பார்வை பார்த்தவன் குழந்தையை கொஞ்ச துவங்கினான்..
முல்லையே பார்வதியின் போட்டோவை முதல் முறை பார்க்கிறாள்.. இவன் உன்னோட வர்மன்தான் என்று போட்டோவில் சிரித்துக்கொண்டிருப்பது போல முல்லைக்கு தோன்றியது அவளுக்கு.. மாலையை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு சமையல்கட்டுக்கு சென்றாள்.. அங்கே பால் பாகெட் இருக்க கடவுளை வேண்டி பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள்..
வஞ்சி சமையல் கட்டுக்குள் வர.. “வஞ்சி குழந்தைகளுக்கு ஸ்கூல் போக நேரமாகிவிடும் சிம்பிளா வெஜிடபிள் பிரியாணி மட்டும் செய்துவிடலாம் நீ காய்கறி வெட்டு நான் பால் காய்ச்சிட்டு டீபோட்டு சிம்மன் அண்ணாக்கு அவருக்கும் கொடுத்துவிடறேன்” என்றதும்
“எவருக்கு” என்று முல்லையை வினோதமாக பார்த்தாள் வஞ்சிக்கொடி.
“ஓ காளிங்கன் அண்ணாவுக்கா” என்றதும்
“ம்ம் ஆமா” என்று மௌன புன்னகையை மட்டும் வீசினாள் முல்லை
வஞ்சி காய்கறி நறுக்க.. முல்லை டீ போட்டு இரு கப்பில் ஊற்றிவிட்டு பாலை இரண்டு கப்பில் ஊற்றி எடுத்துச்சென்றாள்.
குழந்தைகள் சிம்மனிடம் விளையாடிக்கொண்டிருக்க..
காளிங்கனோ பார்வதி படத்தையே பார்த்திருந்தான்.. “ம்க்கும்” என்று தொண்டையை செரும காளிங்கன் நிமிர்ந்து பார்த்து டீ கப்பை எடுத்துக்கொண்டு அமைதியாக குடிக்கத் துவங்கினான் சிம்மனுக்கு டீயை கொடுத்துவிட்டு.. அஜய்க்கும் இனியாவுக்கு பாலை அவர்கள் கையில் எடுத்துக்கொடுக்க.. அஜய் பால்கப்பை வாங்கிக்கொண்டு குடிக்க.. இனியாவோ “நான் வீட்டிலேயே குடிச்சிட்டேன்” வேண்டாம் என்க.
“இங்க கொஞ்சமா குடி” என்று முல்லை இனியாவுக்கு கொஞ்சமாக குடிக்க வைத்து மீதியை அவள் குடித்துவிட்டாள்.
super sis