- மோக முத்தாடு அசுரா
காளிங்கனின் மௌனத்தை பார்த்த சிம்மன் “என்னாச்சு நண்பா ஏதோ ஒரு மாதிரி இருக்க” என்று அவன் கையை பிடிக்க
காலையில் நடந்தது முதல் முல்லை கழுத்தில் மாலை போட்டது வரை காளிங்கனாக இருந்த செய்ததை மட்டும் சிம்மனிடம் வருத்தப்பட்டு கூற.. வர்மனாக இருந்து அவள் கையை பிடித்து வாயில் வைத்ததை எல்லாம் அவன் நினைவில் இல்லை..
சிம்மனோ “நானே உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்.. உங்களுக்கு முல்லையை பார்த்தா என்ன தோணுது” என்று அவன் கண்களையே பார்த்தான்.
காளிங்கன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான்..
சமையலை முடித்து வெளியே வந்த முல்லை காளிங்கன் தலையை பிடித்திருப்பதை கண்டு “என்னாச்சு” என்று பதறிப்போய் அவனிடம் போக..
“ஒண்ணுமில்லை தலைவலிக்குது” என்று அறைக்குள் சென்றுவிட்டான் காளிங்கன்.
“அண்ணா அவருகிட்ட என்ன கேட்டீங்க அவரு முகம் ஏன் வாட்டாம இருக்கு.. நான் வந்ததும் எழுந்து போயிட்டாரு” என்று கணவனின் முகம் மாற்றத்தைக் கண்டு அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வருத்தப்பட்டு கேட்டாள்.
“எதுவும் ஆகலைம்மா அவனுக்கு உன்கூட வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வரும்னு நினைக்கிறேன்.. அவனை ஒரு சைக்காட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போகுறேன்.. கொஞ்சம் நீ பதட்டப்படாம இரு” என்று முல்லைக்கு ஆறுதல் கூறினான்.
அறைக்கு சென்ற காளிங்கன் போலீஸ் உடையுடன் கம்பீரமாக வெளியே கிளம்பி வந்தான்.. காளிங்கனை பார்த்து சிம்மன் எழுந்து நின்று விட்டான்.. முல்லைக்கு காளிங்கனை காக்கி உடையில் பார்த்து கண் கலங்கியது.
இந்த உடையில உன்ன பார்க்க நான் எத்தனை நாள் தவமிருந்தேன் நண்பா என்று எண்ணிய சிம்மனுக்கு கண்ணில் கண்ணீர் வரத்தொடங்கியது..
முல்லை காளிங்கனை அந்த உடையில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அதற்குள் குழந்தைகள் ஓடிவர.. “ஐ.. அப்பா போலீஸா” என்று இனியா காளிங்கனின் காலைப்பிடித்துக்கொள்ள..
“இனியா அப்பா யூனிப்பார்ம் கசங்கிடும் இங்க வா” என்று முல்லை குழந்தையை தூக்க போக.
“இருக்கட்டும்” என்றவன் இனியாவை தூக்கி இடுப்பில் வைக்க..
இனியாவோ காளிங்கனின் மீசையை முறுக்கிவிட்டு “இப்போ ரொம்ப நல்லாயிருக்கு” என்று கன்னத்தில் குழி விழச் சிரித்தது.
முல்லை எப்போதும் வர்மனின் மீசையை முறுக்கிவிட்டு இப்படித்தான் சிரிப்பாள்.. அதுபோல குழந்தையும் செய்து சிரிப்பதை கண்ட காளிங்கனுக்கு மூளைக்குள் ஏதோ வண்டு குடைவது போல இருந்தது.. அவனாக இன்று ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் போகணும் என்று முடிவு செய்தான்.
“சமையல் ரெடியாகிட்டுச்சு வாங்க சாப்பிட்டு போகலாம்” என்று வஞ்சி அனைவரது கவனத்தையும் கலைக்க
“இதோ வரோம்” என்று டைனிங் டேபிள் செல்ல வழக்கம் போல குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட்டாள்.. வர்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்திருந்தாள்..
முல்லை அஜய்க்கு பால் பாயசம் ஊத்திகொடுக்க.. “ஐ அப்பாக்கு பால்பாயாசம்னா ரொம்ப பிடிக்கும் முல்லையம்மா” என்று கணணைசிமிட்டி சிரிக்க.
“எனக்கும் பால் பாயசம் பிடிக்கும்” என்று இனியா அஜயிடம் ஹைபை அடித்துக்கொண்டது.
முல்லையின் பார்வை காளிங்கனின் மீது பட்டு மீள.. அவனோ பால் பாயசத்தைதான் குடித்துக்கொண்டிருந்தான்.. அவனுக்கு தன்யாரென்ற சந்தேகம் துளிர்விட துவங்கியது.
காளிங்கனுக்கு ஐஜி போன் செய்து ஸ்டேசனுக்கு கிளம்புங்க அங்க ஒரு ப்ராம்ளம்.. நீங்க போனத்தான் சரிசெய்ய முடியும் என்று கூற..
“இதோ சார் டென்மினிட்ஸ்ல கிளம்புறேன்” என்று கூறியவன்
“சிம்மன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா” என்று வாட்சை பார்த்துக்கொண்டே கேட்க.
“ம்ம் அஜயை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகணும் அவ்ளோதான” என்று அவன் தோளைத்தட்ட.
“நான் அவசரமா ஸ்டேசன் போகணும்..இல்லைனா நானே அஜய் ஸ்கூல சேர்க்க வந்துடுவேன்” என்று நெற்றிய தடவ.
“நீங்க கிளம்புங்க.. அஜயை ஸ்கூல சேர்க்க நான் சிம்மன் அண்ணாகூட போறேன்” என்றவள் அஜயை புறப்பட வைக்க கூட்டிச்செல்ல
“தேங்க்ஸ் முல்லை” என்று அவன் உதடுகள் அசைய
“எனக்கு உங்க தேங்க்ஸ் வேண்டாம்” என்று கண்ணால் பேச.. இருவரது பார்வைகள் சங்கமித்தன.. காளிங்கனுக்குள் வர்மன் வெளிவரத்துவங்கினான். முல்லை வர்மனை வெளியே வரவைத்துக்கொண்டிருந்தாள்.
அஜயின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “அம்மா கூட வருவாங்க மோனே.. நீங்க சமத்தா ஸ்கூல்க்கு போகணும்.. இங்கேயும் உனக்கு ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க” என்று அஜயின் கன்னத்தின் தட்டிசெல்ல..
“இனியா எனக்கு முத்தம்” என்று காளிங்கன் முன்னே கன்னத்தை காட்டி நின்றது..
“உனக்கு முத்தம் இல்லாமலா சக்கரே” என்றவன் இனியாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தான்.
தந்தை மகள் பாசத்தை இரசித்து பார்த்தனர் சிம்மனும் முல்லையும்.. இதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்திருந்தாள் வஞ்சிக்கொடி.
காளிங்கள் எழுந்து நின்று தலையில் தொப்பியை மாட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் நடைபோட்டு வாசலுக்கு சென்றவன் கையசைத்து காரில் ஏறினான் காளிங்கனாக இருக்கும் வர்மன்.
“வர்மா நான் இந்தக்கோலத்துல உன்னை பார்க்க நான் எத்தனை நாள் தவம் கிடந்தேன். என்று எண்ணியவன் தூணைபிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான்.
ஆம் ஆறு வருடங்களுக்கு முன்பே சிம்மனும் வர்மனும் போலீஸ் டிரைனிங் முடித்திருந்தனர்.
சிம்மனும் வர்மனும் ஆனாதை இல்லத்தில் தான் வளர்ந்தனர்.. இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக சாப்பிடுவர் இணைபிரியாமல் இருப்பர்.. இருவரையும் அண்ணன் தம்பி என்று தான் நினைக்க முடியும் அந்தளவு பாசமாக இருப்பார்கள்.. அங்கே வர்மனை யாராவது ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் அவ்ளோதான் அவர்களை பிரித்து மேய்ந்துவிடுவான்.. இருவரும் ஸ்காலர்சிப்பில்தான் படித்தனர்.. ஸ்போர்ட்ஸில் இருவரும் சாம்பியன்.. வர்மனுக்கு போலீஸாக வேண்டுமென்று ஆசை.. சிம்மனையும் புறுத்தி போலீஸ் எக்ஸாமுக்கு படிக்க வைத்தான்.. இருவரும் எக்ஸாம் எழுதி முடிக்க எக்ஸாமில் பாஸாகியும்விட்டனர்.. அப்போதிருந்த ஐஜி நேர்மையானவர்.. இருவரையும் போலீஸ் டிரைனிங்கு வரச்சொல்லி லட்டர் வர.. வர்மன் சந்தோசமாக சிம்மனை கட்டிக்கொண்டான்.. இருவரது டிரைனிங் பிரியடு முடிய வர்மனை விட சிம்மன் தான் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தான்.
கடைசியில் வைத்த தேர்வில் இருவரும் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இருக்க.. யாரை செலக்ட் பண்ணுவது என்று மேலதிகாரிகளுக்கு குழப்பமே வந்தது.
கடைசியில் ஐஜி பிரேம் இருவரையும் செலக்ட் பண்ணிக்கலாம் என்று இருவருக்கும் ஒரே மதிப்பெண் போட்டுவிட்டார்.. அதில் பிரேம் சாருக்கு கீழே இருந்த ஆபிஸருக்கு தனக்கு வேண்டப்பட்டவனை செலக்பண்ணவில்லை என்ற கோவத்தில் வெளியே சென்றுவிட்டார்.
சிம்மன் சாதரணமாக நின்றிருந்தான்.. வர்மனோ ரிசல்ட் எப்போ சொல்வாங்க என்று எதிர்பார்த்திருந்தான்.
சிம்மனையும் வர்மனையும் ஐஜி வரச்சொல்வதாக கூற..
“நண்பா நாம செலக்ட் ஆகியிருப்போம்” என்று கட்டியணைத்து சந்தோசத்துடன் உள்ளே சென்றனர்.
ஐஜி எழுந்து நின்று “நரசிம்மவர்மன், இந்திரவர்மன் ரெண்டு பேரும் செலக்ட் ஆகியிருக்கீங்க என்றவர் கன்கிராட்ஸ்” என்று கைகொடுத்து “ரெண்டு பேரும் நாட்டுக்காக இரவு பகல் பார்க்கமா வேலைசெய்யணும்” என்று இருவரது தோள் தட்டிக்கொண்டு வாழ்த்து கூறினான்.
“தேங்க்யூ சார்” என்ற சல்யூட் அடித்த வர்மனோ ஆனந்தத்துடன் வெளியே வந்தான்.. சிம்மனுக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.
ஒருமாதம் கடந்த நிலையில் வர்மன் லட்டரை எதிர்பார்த்து காத்திருந்தான்.. லட்டர் வரவேயில்லை..
“சிம்மா என்னடா இன்னும் போஸ்டிங் லட்டர் வரலை” என்று வருத்தப்பட்டு கேட்க.
“அனுப்புவாங்கடா வெயிட் பண்ணு” என்று அவனோ வேலையை பார்க்கத்துவங்கினான்..
நாட்கள் நகர.. “சிம்மா வாடா ஐஜி ஆபிஸ் போய் பார்க்கலாம்” என்று ஐஜி ஆபிஸ் போக..
அங்கே ஜஜி பிரேம் இல்லை அதற்கு பதிலாக அவருக்கு கீழே இருந்த ஜஜி ஆறுமுகம் தான் இருந்தார்..
“என்னப்பா இந்தபக்கம்” என்று இருவரையும் ஏளனமாக பார்த்து கேட்க
“சார் பிரேம் சார்”
“அவரா இன்னேரம் தண்ணி இல்லாத காட்டுல இருப்பாரு” என்ற நக்கலாக பேச
சிம்மனுக்கு கோவம் வந்துவிட்டது.. “சார் எங்களை டிரைனிங்ல செக்லட் பண்ணியிருக்காங்க.. போஸ்டிங்கு லட்டர் இன்னும் வரலை” என்றதும்..
ஆறுமுகமோ.. “ஹாஹா உங்க போஸிட்டிங் வேற ஆள் எடுத்தாச்சு உங்களை போல ஆனாதைகளுக்கு போலீஸ் உத்யோகம்வேணுமா” என்று நக்கலாக பேச.
வர்மன் உடைந்து போனான்.. அவனது கனவே தான் ஏசிபி ஆகணும் என்றுதான் இப்போது போலீஸ் வேலையே இல்லையென்றதும் துவண்டு போய்விட்டான்.
சிம்மனுக்கு ஆறுமுகம் பேசியது கோபத்தை வரவழைக்க.. “நாங்க என்ன கேனையா டிரைனிங் முடித்து எக்ஸாம் எல்லாம் பாஸ் ஆகியிருக்கோம்” என்று சாட்பிட்கேட்ஸ் காண்பிக்க..
அதையெல்லாம் பிடுங்கி கிழித்து போட்டு “வெளியே போங்கடா” என்று இல்லை என்னை கொல்லப்பார்த்தீங்க என்று கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்ட..
“நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாலடா உன்னை கொல்லாம விடமாட்டேன்” என்று ஆறுமுகத்தின் கழுத்தை பிடித்தான் சிம்மன்.. தன் நண்பனின் ஆசையை நிராசை ஆகிவிட்டான் என்ற கோவத்தில் ஆறுமுகத்தை கொன்றுவிடும் அளவிற்கு துணிந்து விட்டான் சிம்மன்.
ஆச்சோ நம்மனால சிம்மன் ஜெயிலுக்கு போககூடாது என்று கவலைபட்டவன் “சிம்மா அவர விடு இது உன்னோட வர்மனோட கட்டளை” என்றதும் தான் ஆறுமுகத்தை கழுத்தை விட்டான்.
ஆறுமுகமோ இருமிக்கொண்டிருக்க.. தண்ணீரை எடுத்துக்கொடுத்த வர்மன் “சாரி சார் என் நண்பன் எங்களுக்கு வேலைகிடைக்கலனு ஆத்திரப்பட்டு உங்க மேல கையை வச்சிட்டான் எங்களை மன்னிச்சுடுங்க” என்று கையெடுத்து ஆறுமுகத்திடம் மன்னிப்பு கேட்க.
“உன் நண்பன் கிட்ட சொல்லிவை கஞ்சா கேஸ்ல பிடிச்சு வெளியே வரமுடியாம பண்ணிடுவேன்.. உன்னால உன் நண்பனை விட்டு வைக்கிறேன் பொழச்சுபோங்கடா” என்று இருவரையும் வெளியே போகச் சொன்னார் ஆறுமுகம்.
சிம்மன் திமிறிக்கொண்டு நிற்க.. அவனை அடக்கிக்கொண்டு வெளியே கூட்டிவந்த வர்மனோ.. “எனக்கு போலீஸாக விரும்பில்லைடா” என்று திரும்பி நின்று கண்ணிர்விட்டான்.
வர்மன் அழுகிறான் என்று தெரிந்து அவனை தன்புறம் திருப்பிய சிம்மன் “வர்மா உனக்கு நாட்டுக்கு நல்லது செய்யணும்.. தப்பு செய்றவனுக்கு தண்டனை கொடுக்கணும் அவ்ளோதான” என்று அவனை அணைத்துக்கொண்டு கேட்க.
“ஆமாம்” என்ற தலையசைத்தவனுக்கு கண்ணீர் வந்து விட்டது..
அவனது கண்ணீர் சிம்மனின் கழுத்தில் பட அவனை விட்டு விலகியவன் “நீயெல்லாம் என்னடா போலீஸ் டிரைனிங் முடிச்ச.. இந்தா நம்மள கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினான் பாரு.. அவன் நம்மளை பார்த்து சல்யூட் அடிக்க வைக்குறேன் “என்றவன்..
“நாம போலீஸா இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு இல்ல.. ரவுடியா இருந்து நாட்டுக்கு நல்லது செய்யலாம்” என்று கூறியவன் வர்மனைவீட்டுக்கு கூட்டிச்சென்றான்.
அப்போதுதான் சந்தானத்தின் பழக்கம் சிம்மனுக்கு ஏற்பட்டது.. சந்தானத்திற்கு சிம்மன் ஒரு வேலையை முடித்துக்கொடுக்க.. துடிப்பான அதேசமயம் விவேகமாகவும் இருக்கும் சிம்மனை கண்ட சந்தானத்திற்கு இவனை வைத்து பல காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்று எண்ணய சந்தானம் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்துவது போல வேலையெல்லாம் செய்ய சொல்ல முதலில் தயங்கிய சிம்மன் எல்லாம் நல்லதுக்குத்தான் என்று செய்ய ஆரம்பித்தான்.. அதில் வர்மனை முதலில் சேர்த்துக்கொள்ளவில்லை சிம்மன்.. நெற்பயிரில் களை இருப்பது போல கெட்டவர்களையும் அழிக்கத்தொடங்கினான் சிம்மன்.. சந்தானம் கொடுக்கும் பணத்தில் பாதியை அனாதை விடுதிகளுக்கு கொடுத்துவிடுவான்.. நாளடைவில் ஊருக்குள் ஏற்படும் பிரச்சனைகளை சிம்மனும் வர்மனும் தீர்த்துவைக்கத் துவங்கினர்.. வர்மனுக்கு போலீஸ் ஆகமுடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்தது.. காளிங்கன் உருவத்தில் இருக்கும் வர்மனை போலீஸ் உடையில் பார்க்க அத்தனை ஆனந்தமாய் இருந்தது தூணை பிடித்து நின்ற சிம்மனிடம் இனியா ஓடிவந்து சிம்மா ஸ்கூல்க்கு போகலாம் என்றதும்தான் சுயம் வந்தான்.
- மோக முத்தாடு அசுரா
சிம்மன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு முல்லையுடன் பள்ளிக்குச் சென்றான்.. முதல்வர் அறையில் “பேரண்ட்ஸ் வந்திருக்காங்களா” முதல்வர் கேட்க
“ஆமா சார் நான் தான் அவன் அம்மா.. என்று அஜய் தோளில் கைபோட்டு கூறிய முல்லை அப்ளிகேசனில் அவன் அப்பாவின் பெயர் காளிங்கவர்மன் என்றும் அம்மா பெயர் பார்வதி என்றும் போட்டு அஜய்யோட அப்பா அடுத்த முறை வரும் பொழுது சைன் போடுவாரு என்று அப்ளிகேசனை நிரப்பிக் கொடுக்க. முதல்வரும் அப்ளிகேசனை கையில் வாங்கி சிம்மனை பார்க்க அவன் முதல்வரை பார்த்து கண்ணசைத்தான்.. சிம்மன் முன்னேயே அஜயை பற்றி கூறியிருந்தான்.. பீஸ் கட்டிவிட்டு அஜயை இனியாவின் வகுப்பில் விட்டு “அஜய் அப்பாவும் நானும் ஈவ்னிங் வந்து உங்களை கூட்டிட்டுப் போவோம்” என்று அவன் கன்னம் பற்றிக் கூற.. பக்கத்திலிருந்த இனியாவோ, “சித்தா நான் அண்ணாவ பார்த்துக்குவேன்..” என்றது.. இருவருக்கும் 3 மாத வித்தியாசங்கள் தான் இருக்கும் அஜய் கொஞ்சம் உயரமாக இருப்பதால் இனியா அஜயை அண்ணா என்று கூப்பிட்டு பழகியது.. கிளாஸ் டீச்சரிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு சிம்மனும், முல்லையும் வீட்டுக்கு வந்தனர்.
ஸ்டேசனுக்கு சென்ற வர்மன் நெஞ்சை நிமிர்த்தி மிடுக்குடன் ராஜ நடை போட்டு ஸ்டேசனுக்குள் போக.. அங்கேயிருந்த சந்தானத்தின் ஆட்கள் இன்ஸ்பெக்டர் ரவியிடம் “இன்னிக்கு புது ஏ.சி.பி வரானாமே அவன எங்க தலைவர் முகேஷ் சார் வரச்சொன்னாரு சொல்லிட்டு போலாம்னு வந்தோம்”. என்று டேபிளில் காளிங்கனை வரவேற்பதற்காக ரோஜா மாலை வாங்கி வைத்திருக்க மாலையிலிருந்து ரோஜா இதழ்களை பிய்த்துப்போட்டிருந்தான் ஒருவன்.
பின்னால் நின்றிருந்த மீசையை முறுக்கிக்கொண்டிருந்த காளிங்கனை கவனிக்காமல் முகேஷுன் ஆட்கள் ரவியுடன் சவடால் விட்டு பேசிக்கொண்டிருக்க.. “இதோ பாருங்கப்பா ஏ.சி.பி சார் இன்னும் வரல அவர் வந்ததும் நான் சார் கிட்ட சொல்லுறேன்.. வம்பு பண்ணாம ஸ்டேசனை விட்டு கிளம்புங்க” என்று அவர்களிடம் தன்மையாக கூறினான் ரவி.
முகேஷின் ஆட்களை பகைத்தாள் தன் வேலைக்கு வெட்டு வைத்து விடுவர் என்று அவர்களிடம் அடங்கி பேசிக்கொண்டிருந்தான்.
“யோவ் இன்ஸ் உங்க ஏ.சி.பி வராம நாங்க போக மாட்டோம்..” என்று நாற்காலியை தூக்கிப்போட்டு ஒருவன் கால் மேல் கால்போட்டு உட்கார..
காளிங்கன் கோபக்கணலுடன் அந்த சவடால் பேசியவனை பார்த்திருக்க.. இன்ஸ்பெக்டர் ரவி காளிங்களை பார்த்து எழுந்து நின்று சல்யூட் அடிக்க..
“ஸ்ஸ்” என்று வாயின் மேல் விரலை வைத்த காளிங்கன் நாற்காகாலியில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தவனை பின்னாலிருந்து எட்டி உதைக்க அவனோ குட்டிக்கரணம் போட்டு தரையில் போய் விழுந்தான்..
“அய்யோ அம்மா” என்று கீழே விழுந்தவன் சத்தம் கேட்டு இன்னும் ரெண்டு பேர் திரும்பி பார்க்க.. காளிங்கன் பீமனை போல நின்றிருந்தான்.. அவன் நின்றிருந்த கோலத்தைக் கண்டவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.. ஆள் தெரியாம பேசிட்டோமே.. என்று நினைத்திருக்க..
காளிங்கனோ இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவ.. எட்டி உதைச்சவனே இன்னும் எழும்பவேயில்லை.. இதுல பெல்ட்டை கழட்டி அடிச்சா என்னாகும்.. என்று நினைத்து பார்த்தவன் ஒருவன் காலோடு போனான்.
விடுவானா காளிங்கன் “நான் தாண்டா புதுசா வந்திருக்க ஏ.சி.பி காளிங்கன்” என்று சிம்மக்குரலில் கர்ஜித்து பேசியவன் ஒவ்வொருத்தரையும் பெல்டில் அடிக்க ஆரம்பித்து.. அவர்களை கை ஓய அடித்து முடித்து. “ரவி லாக்கப்பை திறந்து விடுங்க இந்த நாய்கள் எல்லாம் உள்ளே போகட்டும்” என்று ஒவ்வொருத்தரையும் பேண்ட் கிழிய கிழிய அடித்து பெண்ட் எடுத்தான்..காளிங்கன் அடிக்கு பயந்து அனைவரும் லாக்கப்பில் நுழைந்துகொண்டனர்.. அவர்கள் லாக்கப்புக்குள் சென்றதும் “ரவி செல்லுக்கு பூட்டு போடுங்க இவனுங்கள தப்பிக்க விடக்கூடாது.. ஸ்டேசனுக்குள் வந்து ரவுடித்தனம் பண்ணினாங்கனு எப்.ஐ.ஆர் போடுங்க” என்று டேபிளை தட்டினான் காளிங்கன்..
அப்பா முதல் நாளே சரவெடிதான் என்று மனதிற்குள் எண்ணிய ரவி.. “ஓ.கே சார்” என்று செல்லுக்கு பூட்டு போட்டான்.
காளிங்கனுக்கு கோபம் குறையட்டும் என்று எண்ணிய ரவி..
“உங்களுக்கு வாங்கி வச்ச ரோஜா மாலையை இதோ நிற்குறான் பாருங்க முட்டை கண்ணன் இவன் மாலையை பிச்சுப்போட்டான் சார்..” என்று கூறியவன் “வெல்கம் சார்” என்று கைக்கொடுக்க.. கான்ஸ்டபிள் சாமியும் கை கொடுத்தார்.. அவரது பார்வை சரியில்லை என்பதை காளிங்கன் வந்த நிமிடமே கண்டு கொண்டான்..
“ம்ம்” வாழ்த்து சொன்னது இருக்கட்டும் என்றவன் சற்று குரலை உயர்த்தி லாக்கப்பில் நின்ற போக்கிரிகளை காட்டி “இந்த ராஸ்கல்ஸ் போலீஸ் ஸ்டேசனில வந்து ரவுடித்தனம் பண்ணுறாங்க நீங்க எல்லாம் கைக்கட்டி அவனுங்களுக்கு பதில் சொல்லிட்டிருங்கீங்க.. உங்களுக்கு வெட்கமா இல்லை.. போலீஸ்காரனுக்குனு ஒரு திமிரு இருக்கணும்” என்று சட்டையை தூக்கிவிட்டுக்கொண்டான் காளிங்கன்.. அவனது பேச்சில் அணல் பறந்தது.. லாக்கப்பில் இருப்பவர்கள் வாயை மூடிக்கொண்டு நின்றிருந்தனர்.
முகேஷுக்கு அவனது ஆட்களை லாக்கப்பில் அடைத்து வைத்துவிட்டான்.. என்று கேள்விபட்டவன்.. “யாரவன் புதுசா வந்திருக்க ஏ.சி.பி” என்று பக்கத்தில் நின்றவனிடம் கேட்க.. சந்தானம், முகேஷுடம் வர்மன் உருவில் இருக்கும் காளிங்கனை பற்றி வெளிநாட்டில் இருந்த மகனிடம் கூறவில்லை.. அதனால் முகேஷுசுக்கு காளியங்கன் யார் என்று தெரியவில்லை.. ஸ்டேசனுக்கு புதியதாக எந்த ஏசிபி வந்தாலும் முகேஷுசை பார்த்து அவன் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவன் ஆட்கள் செய்யும் களவாணித்தனத்தை கண்டு கொள்ளக்கூடாது என்று ஒரு திட்டத்தை போட்டு வைத்திருந்தான் முகேஷ்.. இன்று அவனது ஆட்களை அடித்து லாக்கப்பில் போட்டதும் நானே வரேன்.. என்று வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டி ஸ்டேசனுக்கு கிளம்பினான்.. அங்கேயிருப்பது வர்மன் என்று தெரிந்தால் போயிருக்கமாட்டான் முகேஷ்.. வர்மனிடம் அவன் ஏற்கனவே இரண்டு முறை அடிவாங்கியிருக்கிறான் அல்லவா?
“யாருடா என் ஆளுங்களை அடித்துப் போட்டது” என்று எகிறிகொண்டு ஸ்டேசனுக்குள் போக.. டேபிள் மீது கால்மேல் போட்டு ஸ்டெயிலாக உட்காரந்திருந்தான் காளிங்கன்.
காளிங்கனை கண்ட முகேஷ் பின்னால் வந்த நபர்களை கையை நீட்டி தடுத்து “டேய் இவன் வர்மன்டா” என்று அவர்களிடம் கூற.. அவனது முகமோ வியர்வையில் குளித்தது.. தான் தானே வர்மனை காரை ஏற்றி கொன்னதைப் பார்த்தேன்.. என் கண்ணு முன்னே தான் இவன் உயிர் போனதே.. என்று எண்ணியவன் ஒரு நிமிடம் நின்றுவிட்டான்.
காளிங்கனுக்கோ, முகேஷை பார்த்ததும் இவனையும் எங்கோ பார்த்தது போல இருக்கே..அதுவும் இவனை என் கையில் போட்டு புரட்டி எடுத்தது போல இருக்கே என்று நெற்றியை தடவியவன் டேபிளிலிருந்து எட்டிக்குதித்து நீ தான் இந்த கூட்டத்துக்கு தலைவனா.. என்று லத்தியை சுழற்றிக்கொண்டு அவன் பக்கம் போக..
முகேஷோ பின்னால் நகன்று கொண்டிருந்தான்.. “எங்கடா ஓடப்பார்க்குற” என்று அவனது சட்டையை இழுத்துப்பிடித்து அடிக்க கையை ஓங்க..
“நிறுத்துங்க காளிங்கன்” என்று புதிதாக வந்த ஐ.ஜியின் குரல் கேட்டு திரும்பினான் அவர்.. ஐ.ஜி பிரேம் காளிங்கனை பார்த்துவிட்டு போக வந்தார்.. “ஒரு எம்.எல்.ஏ வை கைநீட்டி அடிக்க கூடாது மிஸ்டர் காளிங்கன்” என்று பிரேம் முன்னே வர.. காளிங்கன், முகேஷீன் சட்டையை விட்டு பிரேமின் முகத்தையே பார்த்திருந்தான்..
“என்ன காளிங்கன் நீங்க கோவக்காரன்னு கேள்விபட்டேன்.. இப்படி ரொம்ப கோவம் வரக்கூடாது காளிங்கன்” என்று அவன் அருகே சென்று “பர்ஸ்ட் லாக்கப்ல இருக்கவங்கள திறந்து விடுங்க” என்றதும்.
இவரு நல்லவருனு நினைச்சேன் என்று புருவத்தை இடுக்கி “என்னால விடமுடியாது சார்” என்று திமிராக பதில் வந்தது காளிங்கனிடமிருந்து.
காளிங்கன் அருகே சென்றவர் “மேலிடத்திலிருந்து இவங்கள விடச்சொல்லி உத்தரவு.. இப்ப நீங்க இவங்கள விடலனா.. உங்க போஸ்ட்டிங்கு ப்ராப்ளம் வரும்” என்று அவன் காதோரம் சென்று பேச.
பிரேமை ஓரக்கண்ணால் பார்த்த காளிங்கன் “என்ன சார் மிரட்டுறீங்களா? இந்த நாய்கள நான் விடமாட்டேன்.. யார் வந்து என்ன பண்ணுறாங்கனு பார்க்குறேன்” என்று காளிங்கன் கையை கட்டிநின்றான்.
“காளிங்கன் விளையாடுறீங்களா.. இங்க நான் தான் உங்களுக்கு சீனியர் ஆபிஸர் நான் சொல்றத கேளுங்க” என்று அவர் அதட்டல் போட.. அப்போதும் அவன் “விடமாட்டேன்” என்று தலையாட்ட.. இவனிடம் பேசி பிரயோஜனம் ஆகாது என்று “ரவி செல்லை ஓபன் பண்ணிவிடுங்க” என்றதும் அவனோ காளிங்கனை கண்கள் வெளியே வந்து விடும் பிதுக்கி பார்க்க.. விரலை நீட்டி கொன்னிடுவேன் பார்த்துக்க என்று மிரட்ட.
“காளிங்கன் விளையாடாதீங்க மேலிடத்தில் நான் தான் கைக்கட்டி பதில் சொல்லணும்” என்று காளிங்கனிடம் பிரேம் வாதாடிக்கொண்டிருந்தார்.
“சரி இவனுங்கள உங்களுக்காக விடுறேன் இவங்க எல்லாரும் என் கால்லையும், இதோ இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு கான்ஸ்டபிள் எல்லார் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்கட்டும் விடுறேன்”.. என்று மீசையை தடவயபடி கம்பீரமாக நின்றான்.
முகேஷுக்கு, காளிங்கனிடம் தளர்ந்து போவதை தவிர வேறு வழி கிடைக்கவில்லை.. “லாக்கப்ப திறந்து விடச்சொல்லுங்க.. என் ஆளுங்க ஏ.சி.பி சார்கிட்ட மன்னிப்பு கேட்பாங்க” என்று காளிங்களை முறைத்துக்கொண்டே பேசினான்.. அவன் முறைப்பதைக் கண்டு நக்கலாக சிரித்தான் காளிங்கன்.. ரவியோ இந்த ஏ.சி.பி இவன் காலில மட்டும் விழச் சொல்ல வேண்டியது தானே? என் காலில நான் விழச்சொன்னேனா.. இவரு ஆறு மாசத்துல கேரளாவுக்கு போய்டுவாரு.. என்னை வம்புல இழுத்து விடுறாரு.. இங்க ஸ்டேசன்ல நான்தான் குப்பைக் கொட்டணும் என்று பின்னாளில் வரும் கஷ்டத்தை எண்ணி புலம்பிக்கொண்டு லாக்கப்பை திறந்துவிட்டான்.
அனைவரும் திபு திபுவென்று கூட்டமாக வெளியே வர.. முகேஷ் அவர்களை பார்த்து காளிங்கன் காலில் விழுமாறு கண்ணசைக்க.. “சாரி சார் எங்களை மன்னிச்சுடுங்க” என்று காளிங்கன் காலில் விழ..
“ம்ம்.. இனியொரு முறை உங்களை ஸ்டேசன் பக்கம் பார்த்தேன் வெட்டிபுதைத்துடுவேன்” என்று கண்களை உருட்டினான்
அவர்கள் அரண்டு போய் முகேஷ்பக்கம் போய் நின்று கொண்டனர்..
“தின்னிப்பண்டாரங்களா வாங்கடா.. பேசி கூட்டிட்டு வாங்கடானா.. இவன்கிட்ட அடிவாங்கி என்னையே ஸ்டேசன் வரவச்சிட்டீங்க” என்று தன் ஆட்களை திட்டிக்கொண்டே வெளியே போனவன் காளிங்கனை திரும்பி பார்த்து “மறுபடியும் பொழைச்சு வந்துட்டியா.. உன்னை போடுறேன் பாரு” என்று உதடசைக்க.
“அதுக்கு முன்னே நான் உன்னைப் போடுவேன்” என்று பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை முகேஷுடம் நீட்ட வாயை மூடிக்கொண்டு அவன் ஆட்களுடன் சென்றான்.
முகேஷ் சென்றதும் வர்மன் என்று அவன் தோளில் தட்டிய ஐ.ஜி “பிரேம் ரொம்பநாள் கழிச்சு ஒரு வீரமான போலீஸ பார்த்திருக்கேன். கலக்குங்க காளிங்கன்”. என அவன் தோளைத்தட்டி புன்னகையுடன் சென்றார்.
“சார்” என்று காளிங்கன் கூப்பிட
“என்ன காளிங்கன்” என்று அவன் அருகே செல்ல.
“சார் இப்ப வந்தவன் கொலைகேசில் இருக்கான் அவனுக்கு எப்படி எம்.எல்.ஏ போஸ்ட் கொடுத்திருக்காங்க”
“அவன் அப்பா சந்தானம் இப்ப கோமால இருக்கார்.. அதான் அடுத்து இவனுக்கு போஸ்ட் கிடைச்சிருக்கு.. நீங்க தான் இவன் கொலையாளியான்னு கண்டுபிடிக்கணும் வர்மன்”. என்று கண்ணைச் சிமிட்டிச் சென்றார்.
ஸ்டேசனில் அவனது அறைக்குச்சென்றதும் ரவி கிரிமினல்ஸ் பைல் எடுத்துட்டு வாங்க.. என்று நெற்றியை தேய்த்துக் கொண்டு கூற.
ரவியும் அனைத்து பைல்ஸ்களையும் எடுத்துட்டு வந்து காட்டினான்.. “இப்போ பக்கமா கொலையான பொண்ணு ராதிகாவை பத்தின டீடெய்ல்ஸ் கொண்டு வாங்க” என்றதும் அனைத்தும் எடுத்துக் கொண்டு வர.. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஒவ்வொன்றையும் பார்த்திருந்தான்.. இரவு ஏழுமணியாகிவிட சிம்மன் போன்போட.
“சொல்லுங்க சிம்மன்”
“என்ன ஸ்டேசன் போன அன்னிக்கே சரவெடி வெடிச்சீங்க போல”
“ம்ம்” ஆமா கொஞ்சம் விளையாடினேன்.. உங்களுக்கு எப்படித்தெரியும்”
“நான் சிம்மன், வர்மா எனக்கு நீங்க என்ன பண்றீங்கனு எல்லாம் அப் டு டேட் தெரியும்” என்று சத்ததுடன் சிரிக்க.
“ம்ம்.. அஜய் என்ன பண்ணுறான்.. அதுக்குத்தான் உங்களை கூப்பிட்டேன்.. உங்களை கேட்டுட்டே இருக்கான் வரமுடியுமா?”
“இதே கிளம்பிட்டேன் என்றவன் ரவி பைல்ஸ் எல்லாம் எடுத்து பீரோல வைங்க என்றவன்” வெளியே கிளம்ப.
“சார் உங்களுக்கு ஜீப் இருக்கு.. நீங்க வந்த காரை நான் உங்க வீட்ல விடுறேன் நீங்க ஜீப்ல போங்க” என்றதும்.
“ம்ம்.. என்று தலையசைத்து கார் சாவியை ரவியிடம் கொடுத்துவிட்டு ஜீப்பில் ஏறி உட்கார்ந்தான்.
ஜீப் வீட்டு வாசலில் நிற்க சிம்மன், அஜயுடன் காளிங்கனுக்காக காத்திருந்தான்.. காளிங்கன் ஜீப்பிலிருந்து இறங்கி வருவதை மனம் குளிர பார்த்திருந்தான்.
“அச்சா” என்று ஓடி காளிங்கன் காலைப்பிடிக்க.. அவனோ “குளிச்சிட்டு வந்து தூக்குறேன் ராஜா” என்றவன் வீட்டுக்குள் போக..
“காளிங்கன் நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்குப் போறோம் அங்கதான் சமையல் வந்துடுங்க”என்று சொன்னவன் காளிங்கன் வேண்டாம் என்று வாயெடுக்க.. அவன் பேச்சை காதில் போடாமல் “நீ வர நண்பா” என்று சென்றுவிட்டான் சிம்மன்.
வீட்டுக்குள் சென்ற காளிங்கன் அறைக்குள் சென்றவன் யூனிபார்மை கழட்டி வைத்து இடுப்பில் துண்டைக்கட்டி கொண்டு குளியலறைக்குள் போக.. அங்கே சேலையில் பின்னை கழட்டி கொண்டு நின்றிருந்தாள்.
சற்று முன் சமையல் கட்டில் காலையில் செய்த சமையல் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வீட்டை சுத்தப்படுத்தி விட அவளுக்கு வியர்த்துவிட்டது.. அஜயும், சிம்மனும் தான் அங்கேயிருந்தனர்.. “அண்ணா நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு வந்துடறேன்.. அதுவரை அஜய் கூட இருங்க” என்று கூறிவிட்டு வெளியே போக..
“ஏன்மா வீட்டுக்கு போகணும் புதுசா பால்காய்சின வீடு இங்கேயே குளிச்சிட்டு இரு.. நான் வீட்டுக்கு போய் வஞ்சியை புடவையை எடுத்து வரச்சொல்லுறேன்” என்று வெளியே வந்தான் சிம்மன். சரியாக காளிங்கனை பார்த்துவிட்டு இருவரும் தனிமையில் இருந்தால் வர்மனுக்கு நினைவுகள் வரும் என்று அஜயை கூட்டிக்கொண்டு சென்றான் சிம்மன்.
குளியறையில் லாக் சரியாக போடவில்லை முல்லை.. காளிங்களின் முரட்டு கையை கதவில் வைத்ததும் கதவு திறந்துகொண்டது.. முல்லையோ பயத்தில் சேலையை நழுவ விட்டாள்.. முல்லையை அரைகுறை ஆடையில் பார்த்தவனுக்கு காளிங்கனுக்குள் இருக்கும் வர்மன் வெளியே வந்துவிட்டான்.. எச்சிலை விழுங்கிக்கொண்டு நிற்க.. முல்லை கையை மார்பில் வைத்து மறைத்துக்கொள்ள.. “அவனோ பப்லி என்னடி” என்று மோகமாக அவளை பார்த்து அவளருகே நடந்து வர.. அவளோ மூச்சை இழுத்துவிட்டு நின்றாள்.
அவள் பின்புறம் போய் நின்றவன் “ஏய் பப்லி” என்று கிறக்கமாக பேசி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வெற்று முதுகில் முத்தம் பதிக்க.. வெகுநாட்கள் கழித்து கணவனின் ஸ்பரிசம் அவளுக்கு கிடைக்க.. பூனை முடிகள் சிலிர்த்து எழுந்து நிற்க.. கண்ணை மூடி நின்றாள்.. அவனும் பெரும்மூச்சுடன் அவளை திருப்பி இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.. அவளோ இப்ப என்னவா இருக்காரோ என்று பயந்து பயந்து அவனின் அணைப்பில் நின்றிருந்தாள்.. “பப்லி.. பப்லி” என்று நொடிக்கொருமுறை அவளைக் கொஞ்சியவன் அப்படியே சவரை திறந்து விட்டான்.. அவளது ஆடைகள் தண்ணீரில் நனைய அங்க வளைவுகள் அப்பட்டாக கண்ணாடி போல தெரிய அவளது பட்டு இதழ்களில் தண்ணீர் பட்டு மினுமினுக்க அப்படியே இதழ்களை கவ்விக்கொண்டான்..
முல்லைக்கு கணவனை தடுக்க மனம் வரவில்லை.. எத்தனை வருடங்கள் ஆயிற்று அவனின் இதழ் அணைப்புக்கு.. அவளும் அவன் கொடுக்கும் முத்தத்தில் லயித்திருந்தாள்.. அவனோ இதழை பிய்த்து எடுத்துவிடுவது போல முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.. அப்படியே அவளை பூபோல அள்ளிக்கொண்டு கட்டிலில் போட பெண்ணவளுக்கோ நடக்க போகும் சங்கமத்தை எண்ணி பயம்தான் வந்தது.. ஆனால் வர்மனுக்கோ அவளை ஆண்டுவிட துடித்துக்கொண்டிருந்தான்.. கதவை காலால் எட்டி உதைத்து லாக் செய்தவன் அப்படியே அவள் மீது படர்ந்துவிட்டான்.
முல்லையோ அவன் கண்களை பார்க்க.. வர்மனின் கண்களில் தோன்றும் மோகபித்து அவளுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.. தன்னை தன் கணவன்தான் எடுத்துக்கொள்கிறான்.. என்று கண்மூடி அவனது தொடுகைக்கு இயைந்து கொண்டிருந்தாள் முல்லைக்கொடி.
முல்லை “ஐ நீட் யூடி.. எனக்கு நீ வேணும்” என்று அவள் காதோரம் சென்று மீசை முடியால் உரசி கேட்க.. அவனுக்கு வாய்மொழியாக பதில் பேசாமல் உடல்மொழியால் சம்மதம் கூறினாள்.. அவளது கைகள் அவனது மார்பில் உலாவ விட.. அப்படியே வர்மனின் உடலை பல வருடங்கள் கழித்து தொட்டுப் பார்க்கிறாள்.. அவளுக்கோ கண்ணீர் நிற்கவேயில்லை.. கண்ணீரை நாவுக்கொண்டு துடைத்துவிட்டு அவள் இதழில் முத்தம் கொடுத்து சங்குகழுத்தில் பற்தடம் பதித்து அவளை சிவக்க வைத்தான்.. அவளுக்கு கழுத்துக்கு கீழ் மேடு பள்ளங்களில் அவன் முகம் புரட்டி.. அவன் கைகளை அவளது ஆடைகளை களைந்து அவளுக்கு மோகத்தீயை மூட்டிக்கொண்டிருந்தான்.. இப்போது போர்வைக்குள் ஆதிவாசியாய் இருவரும் இருக்க.. அவளது மேனி முழுவதும் இதழ் ஒத்தடம் கொடுத்து அவளை கிறங்க வைத்தான்.. அவளது விரல்கள் கொண்டு அவளது மேனியை வீணையென மீட்ட துள்ளி எழுந்தாள் பெண்ணவள்.. இருவரும் வெகுவருடங்களுக்கு பிறகு இணைய அவளுக்கோ அவனது வேகத்தை தாங்க இயலாது “ப்ளீஸ் மெதுவா வர்மாஆஆ” அவனது முதுகில் கீறல் போட.. அவனுக்கு அதெல்லாம் கொசு கடிப்பது போல எண்ணியவன் அவளுள் மூழ்கி முத்தெடுத்து அவளை விட்டு பிரிந்து வியர்வை வழிய அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.
super sis
Super sema super super super super ❤❤❤❤❤