- மோக முத்தாடு அசுரா
வர்மனின் தேவைகள் போதவேயில்லைஆண்மகனுக்கு.. மீண்டும் மீண்டும் பெண்ணவளுக்குள்ளிருக்கும் புதையலை தேடிக்கொண்டேயிருந்தான் நடுநசிவரை.. முல்லையை ஆட்கொண்ட மயக்கத்தில் அவளை தன்மேல் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டான்..
ஆனால் பெண்ணவளுக்கோ இனியா, அஜய் பற்றிய கவலை இருக்க.. அவனிடமிருந்து எழப்பார்க்க.. “ஏய் பப்லி போகாதடி..” என்று உறக்கத்திலேயே உளறியவன் அவளை எழவிடவில்லை.. அவளை, அவன் கை அணைப்புக்குள் வைத்துக்கொண்டான்.. அப்படியே கணவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த முல்லைக்கோ காலையில் எழும்போது வர்மனாக இருப்பனோ இல்லை காளிங்கனாக இருப்பனோ ..என்ற அச்சம் வேறு அவளை படாய் படுத்தியது.. எது நடந்தாலும் கடவுளின் சித்தம்.. அவன் பார்த்துக்கொள்வானென்றும், குழந்தைகளை சிம்மனும், வஞ்சியும் பார்த்துப்பார்களென இந்த நிமிடத்தை சந்தோசமாக எண்ணி வர்மனின் மார்பில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
வீட்டுக்குப் போன சிம்மனோ சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தக்கொண்டு இருந்த, இனியாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள் வஞ்சி.. “சிம்மாவ எங்க இன்னும் காணோம் வஞ்சி” என்று வஞ்சியை பெயர் சொல்லி கூப்பிட..
“ஏதே நான் உன்ன விட பெரியப் பொண்ணு அம்மா போல.. என்ன பெயர் சொல்லி கூப்பிடாத” என்று சொல்லியவள் சாப்பாட்டை ஊட்டிக்கொண்டேயிருந்தாள்.
“நான் உன்ன அம்மானு கூப்பிட மாட்டேன்”
“சரி சித்தினு கூப்பிடு” என்று சிம்மனை சித்தா என்று இனியா கூப்பிடுவதால் தன்னை சித்தி என்று அழைக்கச் சொல்ல.
“அஸ்க்கு புஸ்க்கு” நான் உன்ன ஆன்டினுதான் கூப்பிடுவேன் என்று பழிப்பு காட்டியது.
“போடி வாயாடி” என்று உணவை ஊட்டி முடித்து இனியாவுக்கு வாய் துடைத்துவிட்டவள்.
“என்னை சித்தினு கூப்பிடேன்” என கெஞ்சி கேட்க.
“முடியாது என்று இருபக்கமும் தலையை ஆட்டி.. என் சிம்மனோட வொய்ப்பதான நான் சித்தினு கூப்பிடனும்.. உன்னை எதுக்கு நான் சித்தினு கூப்பிடுறேன்” என்றும் வஞ்சியை முறைத்து பார்த்து பேசிக்கொண்டிருந்தது..
“சரிடியம்மா நீ என்ன வஞ்சினு பேரு சொல்லியே கூப்பிடு” என்று இனியா பேசும் பேச்சை சமாளிக்க முடியாமல் நிற்கும் வஞ்சியை பார்த்து சிரித்தபடி அஜயுடன் ஹாலுக்குள் நுழைந்தான் சிம்மன்.
அஜய், இனியாவுடன் போய் அமர்ந்து கொள்ள.. இனியா.
சிம்மனை பார்த்தவுடன் “சித்தா இந்த வஞ்சி ஆன்ட்டி என்னை அவங்கள சித்தினு கூப்பிட சொல்றாங்க” என்று சிம்மனிடம் புகார் அளிக்க.
வஞ்சியோ சிம்மனின் முகத்தை பார்த்து இதழை கோணித்து தட்டை எடுத்துக்கொண்டு “அஜய் நீயாவது என்னை சித்தினு கூப்பிடேன்” என்று அஜயை பார்க்க..
“என் அண்ணனும் உங்களை சித்தினு கூப்பிட மாட்டேன்.. இப்ப அண்ணாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு வாங்க” என்று சிம்மனை போல அதிகாரம் செய்தது வஞ்சியிடம்..
முளைச்சு மூணு இழை விடல.. எப்படி பேசுது இந்த வாண்டு என்று சிலிப்பிக்கொண்டு சமையல் கட்டுக்குச்சென்றாள்.
வஞ்சியின் ஆதங்கத்தை அவதானித்த சிம்மன்.. “இனி தங்கம்” என்று இனியாவைத்தூக்கி மடியில் உட்கார வைக்க..
“என்ன சித்தா முத்தம் கொடுக்கணுமா” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க..
“நீ என்னோட செல்லக்குட்டிதானா.. சிம்மா சொன்னா கேட்பதானா?” என்று இனியாவின் தலையை தடவியவாறு கேட்க.
“ம்ம் கேட்பேன்” என்று தலையை ஆட்டியது.. அஜய் டிவியில் கார்ட்டூன் சேனலை மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“வஞ்சியை பார்க்கும்போது பாவமா இருக்கு.. போனா போகுது அவள சித்தினு கூப்பிடு செல்லம்.. அவளுக்கும் நம்மள விட்டா யாரும் இல்லைல” என்று கூறிக்கொண்டிருக்க..
இனியாவோ தாடையில் கைவைத்து யோசித்து.. நம்மள விட்டா யாருமில்லைனு சொன்னதும்.. என்ன எண்ணியதோ “ம்ம் சரி சித்தா நான் வஞ்சியை சித்தினு கூப்பிடுறேன்.. பக்கத்தில் டிவியை பார்த்துக்கொண்டிருந்த அஜயிடமும் அண்ணா வஞ்சியை நீயும் சித்தினு கூப்பிடு” என்று அஜயின் தோளை தொட்டுச் சொல்ல.
“சரி பாப்பா” என்று தலையாட்டினான்.. வஞ்சி சோகமாக தட்டில் உணவைப்போட்டு கொண்டு வந்தாள் அஜய்க்கு ஊட்ட..
இனியாவோ வஞ்சியின் முகம் வாடியிருப்பதைக் கண்டு “வாங்க சித்தி உட்காருங்க” என்று அஜய்க்கு உணவு ஊட்ட இடம் விட்டு அமர்ந்தது..
இனியா தன்னை சித்தி என்று கூப்பிட்டதும் வஞ்சிக்கு கண்ணீர் கரித்துக்கொண்டு வந்துவிட்டது.. “அழுவாத வஞ்சி நான் தான் உன்ன சித்தினு கூப்பிடுறேன்ல” என்று அவள் கண்ணீரை துடைத்து விட.. அஜயும் “வஞ்சி சித்தி அழாதீங்க” என்று இருவரும் வஞ்சியின் கன்னத்தை தாங்கி “ப்ளீஸ் சிரிங்களேன்” என்று இரு குழந்தைகளும் கோரசாக கூற..
“சரி” அழலஎன்று குழந்தைளை பார்த்து சிரித்தவள் சிம்மனை பார்க்க.. சிம்மனோ “எப்படி” என்று சட்டை காலரை தூக்கி விட்டு கண்ணடிக்க..
“ம்ப்ச்.. குழந்தைங்க இருக்காங்க” என்று அவள் சிம்மனை முறைத்து அஜய்க்கு உணவூட்ட இனியா டிவி பார்த்துக்கொண்டே கண் சொருகியது.. சிம்மன் இனியாவை மடியில் போட்டுக்கொண்டு தட்டிக்கொடுக்க.. அஜயும் சாப்பிட்டு முடித்து இனியா தூங்குவதை பார்த்து “எனக்கும் தூக்கம் வருது” என்று கூற இருசெல்லம் என்ற வஞ்சி அஜய்க்கு வாய் சுத்தம் செய்துவிட்டு தட்டில் கைகழுவி அஜயை மடியில் போட்டுக்கொண்டு தட்டிக்கொடுக்க அஜயும் தூங்கிவிட்டான்.
“என்னடி இப்பவே ப்ராக்டீஸ் பண்ணுறியா” என்று அஜயை தட்டிக்கொண்டிருப்பதை பார்த்துக் மெதுவாக கேட்க.
“எனக்கு ஏற்கனவே ப்ராக்டீஸ் இருக்கு” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டாள்..
“யாரும் இல்லைனு சொன்ன இப்ப ப்ராக்டீஸ் இருக்குன்னு சொல்ற” என்று புருவம் இடுக்கி கேட்டான் சிம்மன்.
“ஹா..அ.அது பக்கத்து வீட்டு குழந்தையை தூங்கவைப்பேன் அதான்” என்றவள்.. சிம்மனிடம் அப்படியே நகர்ந்து நெருக்கமாக உட்கார்ந்து.. “சிம்மன் சார் நமக்கும் இது போல பாப்பா வரணும்” என்று சிம்மனை கேட்டவள் அவனை ஆசையாகப் பார்க்க.
“என்னடி ஒரு மார்க்கமா பார்க்குற” என்று இனியாவை தூக்கிக்கொண்டு அறைக்குச்சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.. அஜயை தூக்கிக்கொண்டு வஞ்சியும் சிம்மன் பின்னே சென்றவள் இனியாவையும் அஜயுடன் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு திரும்ப.. வஞ்சியை பின்னிருந்து கட்டிக்கொண்டு அப்படியே வெளியே தூங்கிட்டு வந்தவன் பிள்ளைகள் உறங்கும் அறையை கொஞ்சமாக மூடிவைத்து விட்டு அங்கேயிருந்த சோபாவில் வஞ்சியை மடியில் அமரவைத்துக்கொண்டான்..
“வஞ்சி உனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்குமா? அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து கேட்க”
“ம்ம் ரொம்ப பிடிக்கும்”
“அப்போ அதுக்கான வேலையை பார்ப்போமா” என்று அவளது தாவணியை விலக்கி இடையில் அவனது கைகளை உலாவ விட.. பெண்ணவளுக்கு பெண்மை விழித்துக்கொண்டு..
“தாலி கட்டிட்டு அப்புறமா எல்லாம் முறையா நடக்கணும்..
என்னை எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க சிம்மன்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க..
அவள் மூக்கின் நுனியை கடித்து.. “வர்மன் ப்ராப்ளம் சால்வ் ஆகட்டும்டி அடுத்த நாள் உன் கழுத்துல தாலி கட்டுறேன்” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
“அதுவரை நீங்க என்கிட்ட எல்லைமீறாம இருக்கணுமே” என்று அவன் மார்பில் சாய்ந்து அவன் மார்பில் சுருள் முடிகளை விரலால் சுருட்டிக்கொண்டு பேச.
“இப்படி என்னை உசுப்பேத்தினா.. எனக்கு உன்னை எடுத்துக்கத்தான் தோணும்” என்று அவள் காதை நுனிநாக்கால் உரசிட..
“ம்ம்” என்று சிம்மனை அணைத்துக்கொண்டாள்.. அவளது ஆடைகள் விலகி அவளது அங்க வளைவுகள் அவனது கண்ணுக்கு விருந்து படைக்க.. இப்போது அவளை ஆண்டுவிட துடித்தது அவனது ஆண்மை.. அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு எடுத்துக்கொள்ளலலாம் என்று சிம்மன் இருக்க..
வஞ்சியோ வஞ்சியோ அவன் திண்ணிய மார்பில் முத்தம் கொடுத்து அவனது உணர்வுகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தாள்.. சிம்மன் ஒன்றும் புத்தன் இல்லையே.. அப்படியே பெண்ணவளை அள்ளிக்கொண்டு ஹால் லைட்டை அணைத்து அவளது சேலையை உருவியவன் நிலத்தில் அதை விரித்து மஞ்சமாக்கினான்.. பெண்ணவளோ சட்டென்று அவன் புடவையை உருவிட.. பெண்களுக்கு உரித்தான் வெட்கம் வந்து மார்புக்கு குறுக்கே கையை வைத்து மறைத்துக்கொண்டு குழந்தைகள் அறையைகை நீட்டி காட்ட.. இனியா நைட் இடையில எழும்ப மாட்டா.. அவ எழும்ப இன்னும் நேரம் ஆகும்..அஜயும் அசந்து தூங்குறான்டி.. என்னை உசுப்பேத்திவிட்டு இப்படி முட்டுக்கட்டை போடாதடி” என்று அவளது கைகளை விலக்கி அவள் இரட்டை ரோஜாக்களில் முகம் வைத்து புரட்டி அதில் தேன் எடுக்கத் துவங்கி அப்படியே நிலத்தில் படுக்க வைத்து அவன் கைகள் பூபறித்துக்கொண்டே பெண்ணவளின் வெல்வெட் இதழ்களை தன் இதழ்கள் கொண்டு பூட்டுபோட்டுக்கொண்டான் நரசிம்மவர்மன்.. பூவைப்போல கையாளத்துவங்கி அவள் ஆப்பிள் கன்னத்தை கடித்து வைத்து.. அவள் கழுத்து வளைவில் முகம் புரட்டி “என்னடி எடுத்துக்கவா.. ரொம்ப டெம்பட் பண்ணுற” என்று கழுத்தை செல்லக்கடி கடித்து வைக்க.. வஞ்சியோ அவன் கண்களை பார்த்து “உங்க கழுத்துல இருக்க செயினை கழட்டி எனக்கு போட்டு விடுங்க போதும் அதுவே என்னோட தாலியா நினைச்சுக்குறேன்” என்றதும் அவனது முகம் கடுகடுவென ஆக.. அவனின் முக மாறுதலை கண்டு “ஏன் சிம்மன் என் கழுத்துல தாலி கட்ட மாட்டிங்களா.. இல்ல இந்த செயினை எனக்கு கொடுக்க விரும்பமில்லையா?” என்று முகத்தை குழந்தை போல வைத்து கேட்க..
சிம்மனோ “இல்லடி.. இந்த செயின் எனக்கு வர்மன் ஆசையா போட்டுவிட்டது.. இந்த செயினை எப்பவும் கழட்டமாட்டேன் உனக்கு வேணா என்னோட மோதிரத்தை போட்டு விடுறேன்” என்றவன் அவளை அணைப்பில் வைத்தவாறு தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி வஞ்சிக்கொடிக்கு போட்டு விட்டு “இப்போ நீ என் பொண்டாட்டி ஆகிட்ட போதுமா” என்று பெண்ணவளை மோகத்தோடு முத்தாடி அவளை கொள்ளை கொள்ளத் துவங்கினான் நரசிம்ம வர்மன்.. அவள் ஆடைகளை மெல்ல அகற்றியவன் அவள் மேனியெங்கும் விரல்களும் இதழ்களும் செய்த வித்தைகளில் கட்டுண்டு மகுடிக்கு மயங்கும் பாம்பு போல அவனுடன் இயைந்து நடந்துக்கொண்டாள்.. பெண்ணவளுக்குள் நுழைந்து கொள்ள சம்மதம் கேட்க.. அவளுக்கோ பயம் தொற்றிக்கொள்ள.. “நானிருக்கேன்டி” என்று மெல்ல கிசுகிசுப்பு குரலில் பேசியவன் பெண்ணவளுக்குள் நுழைந்து விட்டான் அவளோ வலியை பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்து அவனது முதுகில் நகம் பதிய வைத்தாள்.. இருவரும் ஓருடலாய் பிண்ணி பிணைந்து சேர்ந்து விட்டனர்.. முதன் முறை என்பதால் அவளுக்கு சோர்வு வந்து விட அப்படியே அவனது திண்ணிய மார்பில் படுத்துக்கொண்டு கண்ணை மூடினாள்.. அவளது தலையை வருடிக்கொடுத்த சிம்மன் “ஏய் வஞ்சி என்னடி பேசல.. ஏதாச்சும் உடம்பு வலிக்குதா.. எண்ணெய் போட்டுவிடவா” என்று அவளது பிறை நெற்றியில் முத்தம் வைத்து கேட்க.. “இல்லை” என்று அவனது படிக்கட்டு தேகத்தில் முத்தம் வைத்தாள்..
“போதும்டி தாங்கமாட்டா” என்று அவளை முதுகை வருடியபடி இருக்க.. “ஆமா வர்மன் அண்ணாவுக்கு நியாகபம் வந்துருச்சா.. இப்ப எப்படி ரெண்டு பேரும் தனியா இருக்காங்க” என்று அவளது சந்தேகத்தை கேட்க..
“காளிங்கனுக்குள் இருக்க வர்மனை முல்லையால மட்டும்தான் கொண்டு வரமுடியும்.. அதான் ரெண்டு பேரையும் தனியே விட்டு வந்திருக்கேன்.. வர்மன் முல்லை ரொம்ப விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான்.. சோ கண்டிப்பா முல்லையை தனியே பார்க்கும் போது வர்மன் வெளியே வருவான்” என்று உறுதியாக கூறினான்.. அங்கே நடந்ததும் அதுதானே.
“சரிடி போய் குளிச்சிட்டு வா.. நான் இங்கயே படுத்திருக்கேன்.. குழந்தைகங்க சிணுங்கினா நான் பார்க்குறேன்” என்றதும் அவள் சிம்மனை விட்டு எழும்ப ஆடையில்லாமல் இருப்பதை கண்டு அவளை மீண்டும் ஒருமுறை இருக்கிகட்டிக்கொண்டு முத்தம் கொடுத்து விட.. அவளோ கீழே கிடந்த புடவையை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று குளிக்கச் சென்றாள்..
சவரை திறந்து விட தண்ணீர் உடம்பில் பட்டதும் சிம்மனின் பற்தடங்கள் அவள் மேனியில் இருக்க.. அதில் நீர் பட்டவுடன் எரியத்துவங்கியது.. முரட்டு பயல் எப்படி கடிச்சு வச்சிருக்கான் என்று குளித்து முடித்து வெளியே வந்து கண்ணாடியில் பார்க்க.. அவளது மனசாட்சி வெளியே வந்தது.. நீ எதுக்கு வந்திருக்க.. வந்த வேலையை பார்க்காம இப்ப என்ன வேலை செய்திருட்டிருக்க என்று அவளது மனசாட்சி கேட்க.. சீக்கிரம் செய்து முடிப்பேன் என்றவளது முகம் இறுக்கமாக மாறியது..
“வஞ்சி என்று குளிச்சிட்டியா” என்று சிம்மனின் குரல் கேட்க.. முகத்தை சிரித்தது போல வைத்து “இதோ வந்துட்டேன்” என்று தலைதுவட்டிக்கொண்டு சிம்மனிடம் வந்து வெட்கத்துடன் தலைகுனிந்த நின்றாள்.. “அச்சோ உனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியுமாடி” என்றவன் அவள் கூந்தலில் வாசம் பிடித்தான்..
“ம்ம் இது நல்லாயில்ல சிம்மன் குழந்தைங்க விழிக்க போறாங்க” என்று குழந்தையிருக்கும் அறைக்கு ஓடினாள்.. ஆனால் பின்னாளில் அவள் செய்யும் துரோகத்தை சிம்மன் மன்னிப்பானா? வஞ்சியின் நிலை அப்போது என்னாவாகயிருக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
சிம்மன் குளித்துவிட்டு வந்து மணியை பார்க்க நான்கை காட்டியது.. ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல என் நண்பன் எழுந்துக்க போறான் முல்லைய என்ன படுத்த போறாருனு தெரியல.. நாம அதுக்குள்ள வர்மன் வீட்டுக்கு போகணும் வஞ்சியிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று உள்ளே வர வஞ்சியோ அவன் கொடுத்த சுகமான வலியில் உறங்கிவிட்டாள்..
வெளியே வந்தவன் விடியும் வரை காத்திருந்தான்.. சிறிது நேரத்தில் வஞ்சி எழுந்து வெளியே வந்தவள் “என்னங்க நீங்க தூங்கலையா” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு கேட்க..
“நான் வர்மன் வீட்டுக்கு போறேன்.. அவன் இப்ப காளிங்கனாதான் எழுந்திருப்பான்.. என்ன கலாட்டா செய்வானோ தெரியாது நீ கதவை லாக் பண்ணிக்கோ.. குழந்தைகளை வெளியே விடாது” என்றதும்
”ஏதும் பிரச்சனை வராதுல்ல”
“வரக்கூடாது என்றுதான் நானும் நினைக்குறேன்.. பார்க்கலாம்” என்றவன் வஞ்சியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து சென்றான்..
சிம்மன் சென்றதும் கதவை லாக் செய்துவிட்டு சோபாவில் சாய்ந்து சித்தப்பா நான் உங்களுக்காக எதையும் செய்வேன்.. என்று யோசித்தவளுக்கு அப்புறம் ஏண்டி அவனுடன் இழைந்து குலைந்த என்று அவளது மனச்சாட்சி அவளைகாறித்துப்ப.. அதற்கு அவளிடம் பதில் இல்லை.. கண்ணீர் மட்டும் வழிந்தோடியது.. உன்னை பற்றிய விசயங்கள் சிம்மனுக்கு தெரிந்தால் உன்நிலை.. இப்போது அவன் மனதில் ராணியை போல சிம்மாசனம் இட்டு இருக்கும் உன்னை குப்பையில் தூக்கி போட்டுவிடுவான் என்ற அவளை சாடியது.. இல்ல நான் செய்யபோறது சரிதான் என்று மனச்சாட்சியிடம் கூறிக்கொண்டிருந்தாள்.
இனியா சிணுங்கும் சத்தம் கேட்டு அறைக்கு சென்றவள் இரு குழந்தைகளையும் அணைத்துப்படுத்துக்கொண்டாள்.. இன்று பள்ளி விடுமுறை என்பதால் வேலையும் இருக்காது என்று குழந்தைகளை தட்டிக்கொடுத்து அவளும் உறங்கினாள்.
சிம்மன் வர்மன் வீட்டு கதவை தான் வைத்திருக்கும் சாவி கொண்டு திறந்து உள்ளே போக அங்கே நிசப்தம்தான்.. அப்பாடா என்று பெரும்மூச்சுவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் தலைசாய்த்து படுத்தான்.
வர்மன் கண்ணைத்திறந்து பார்க்க அவனது நெஞ்சத்தில் மஞ்சமென கொண்டு முல்லை படுத்திருக்க.. “ஹேய் அச்சோ என்ன காரியம் பண்ணிட்டேன்” என்று பதறி அடித்து எழுந்தவன் சத்தம்போட.. முல்லை கண்விழித்துபார்க்க அங்கே காளிங்கனாக அவள் கண்ணுக்கு தெரிய.. அப்படியே கூனிக்குருகி விட்டாள்.. அவனிலிருந்து பட்டென்று எழுந்து போர்வையை போர்த்திக்கொண்டு கண்ணீருடன் குளியறைக்குள் புகுந்துகொண்டாள். அவனோ தான் தான் அவளிடம் தவறாக நடந்துகொண்டோமோ அதனால்தான் அழுதுகொண்டு போகிறாளோ என்று தலையில் அடித்துக்கொண்டு அவனின் கன்னம் கன்னமாக மாறி அறைந்து கொண்டான்..
குளித்து முல்லை வெளியே வர.. “என்னை மன்னிச்சிடு முல்லை” என்று காலில் விழ போக..
“அச்சோ என்னங்க இது” என்று தள்ளிநின்றவள் “வர்மாஆஆ ப்ளீஸ் நீங்க இப்படி நடந்துக்காதீங்க.. நீங்க என்னோட கணவனாத்தான் என்னைய எடுத்துக்கிட்டிங்க.. நீங்க வர்மன் தான்” என்று அவனை அணைக்க வர..
வர்மனோ “இல்ல இல்ல நான் காளிங்கன் தான்” என்று கதவு திறந்து வெளியே ஓடிவர.. சிம்மனோ அப்போதுதான் நிம்மதியாக கண்ணை மூடினான்.. வர்மன் சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்து அவன் வந்த கோலத்தை கண்டவன் இரவு இருவரும் சந்தோசமாக இருந்திருக்கின்றனர்.. இப்போது இவன் காளிங்கனாக வந்திருக்கிறான் என்று எண்ணி அவனிடம் பேசியாக வேண்டுமென்று “வர்மாஆஆ” என்று அவனை கூப்பிட.
“நண்பா நான் காளிங்கன்தான்.. அய்யோ நான் இந்த பொண்ணு முல்லைகிட்ட தப்பாநடந்துகிட்டேன்” என்று அவன் தவறு செய்து விட்டதாக எண்ணி குற்ற உணர்வு கொண்டு சிம்மனை கட்டிக்கொண்டான்.
சிம்மனும் வர்மனின் நிலையை புரிந்து கொண்டு அவனை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.
சிறிது நேரம் அப்படியே நின்றவன் அவனை விட்டு பிரிந்து “டேய் இங்க பாரு நீ வர்மன் தான் என்கிட்ட ஆதாரம் இருக்க”
“இல்ல நான் காளிங்கன்” என்று முல்லையை பரிதாபமாக பார்க்க.
“அண்ணா என்நிலைமை யாருக்கும் வரக்கூடாது” என்று சிம்மன் தோளில் சாய்ந்து அழுக..
ஒருநிமிடம் வர்மனாக “பப்லி அழாதடி” என்று சிம்மன முன்னாலே அவளின் கண்ணீரை துடைத்துவிட.. சிம்மனுக்கு கண்ணீர் வந்து விட்டது.. “வர்மாஆஆஆ” என்று அவனை ஆசைத்தீர கட்டியணைக்க.. காளிங்கனாக மாறிவிட்டான்.. (இவன் அந்நியன் போல நம்மளை குழப்பிவிடுறானே) சிம்மன் என்று காளிங்கனாக அவன் முகம் பார்க்க..
பொறுமை இழந்த சிம்மன் வர்மன் கன்னத்தில் ஓங்கி அறைந்து “நீ என்னோட வர்மன்தாண்டா காளிங்கன் இறந்துவிட்டான்” என்றதும் வர்மன் அப்போ நான் யாருடா என்று தலையை பிடித்து அப்படியே மயங்கிச் சரிந்தான்.. வர்மன் மயங்கியதை கண்ட முல்லை “என்னங்க என முல்லை ஓடி வர்மன் பக்கம் போக.. “வர்மாஆஆ” என்று சிம்மன் வர்மனை தாங்கி கொண்டவன் அப்படியே வர்மனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே நின்ற காரின் பக்கம் ஓடினான்.. முல்லையும் அவன் பின்னே பதறி அடித்து ஓடி கார் கதவை திறந்து விட.. வர்மனை படுக்க வைக்க முல்லை கண்ணீருடன் காருக்குள் உட்கார வர்மனின் தலையை எடுத்து மடியில் வைத்து அழுது கரைந்தாள்.
காருக்குள் ஏறியவன் “முல்லை அழாத அவனுக்கு இப்போதான் நியாபகம் வந்திட்டிருக்கு” என்று காரை மருத்துவமனைக்கு ஓட்டினான்.. அங்கே சிம்மனுக்கு தெரிந்த சைக்காட்ரிஸ்ட் வர்மனை பரிசோதித்துகொண்டிருந்தார்.. சிம்மன் ஐஜி பிரேம்க்கு போன் போட்டு விசயத்தை கூற.. பிரேம் உடனே சிம்மன் கூறிய மருத்துவமனைக்கு வந்தார்.
21 மோக முத்தாடு அசுரா
கயவர்களை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டும் வர்மன் கண்மூடி மயக்கத்தில் படுத்திருந்தான்.. சிம்மன், வர்மனின் இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணமா.. என்று நினைத்தான். அன்றைக்கு எனது நண்பனை நான் தனியாக விட்டுச் செல்லவில்லையென்றால் வர்மனுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காது.. எப்போதும் சந்தோசமாக இருக்கும் நண்பனை இப்படி அவன் புத்தி மறந்து.. தான் சில நேரம் யாரென்று தெரியாத நிலைமைக்கு வந்துவிட்டானே என்று வருத்தப்பட்டு வர்மனின் கையை பிடித்துக்கொண்டு நின்றான் சிம்மன்.
வர்மனின் இன்னொரு பக்கவாட்டில் அமர்ந்திருந்த முல்லையோ அவன் கைவிரல்களை பிடித்தபடி.. கண்விழித்து எழும்போது என்னோட வர்மனா தான் எழுந்து வரணும் கடவுளே.. என்று கடவுளிடம் விண்ணப்பம் வைத்து.. அவளது கண்ணீர் அவனது விரல்களில் விழ.. அவனது கை விரல்களும் கால்விரல்கள் அசைந்தது.
டாக்டரோ, சிம்மன் இன்னும் கொஞ்ச நேரத்துல வர்மனுக்கு மயக்கம் தெளிஞ்சிடும் வெயிட் பண்ணுங்க.. என்று அவரது இருக்கையில் போய் அமர்ந்தார்.
ஐ.ஜி பிரேம் கேரளாவிலில் காளிங்கனுடன் பணிபுரிந்த கான்ஸ்டபிள் கந்தனை வரவழைத்திருந்தார்.. கந்தன், காளிங்கனுக்கு விஸ்வாசமானவர்.. விபத்து நடந்த அன்று காளிங்கனுடன் கூட இருந்தது அவர்தான்.. காளிங்கன் இறந்தது டிபார்ட்மெண்ட் ஆட்களுக்குத் தவிர இவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.. சிம்மன், வர்மனின் குழப்பத்தை தீர்க்க கந்தனை கேரளாவிலிருந்து பிளைட்டில் வரவழைத்திருந்தார். ஐ.ஜியுடன், கந்தனும் மருத்துவமனைக்குள் வர்மன் இருந்த அறைக்குள் சென்றனர்.
ஐ.ஜி பிரேமை கண்டவுடன் “வாங்க சார்” என எழுந்து நின்றான் சிம்மன்.
“என்னாச்சு சிம்மன், வர்மாவுக்கு” என்ற கேட்டபடி சிம்மனின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“சார் அவன் முல்லை கூட இருக்கப்ப, அவன் வர்மனா வெளியில வந்துட்டான்.. இப்ப அவன் எந்த நிலையில இருக்கான்னு எழுந்த பிறகுதான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லிட்டார்” என மனம் வலிக்க கூறினான்.
வர்மன் சிறிது நேரத்தில் கண்திறந்து அவனாகவே எழுந்து உட்கார்ந்தான்.. இப்போது யாராக இருக்கிறானென்று யாருக்குமே தெரியவில்லை.. அப்படியொரு அமைதி அவன் முகத்தில் குடிகொண்டிருந்தது.
முல்லையோ கணவனின் முகத்தையே ஆழ்ந்து நோக்கி பார்த்திருந்தாள்.. சிம்மனோ வர்மனின் பக்கத்தில் நெருக்கமாய் நின்றுகொண்டான்.. எங்கே மறுபடியும் மயங்கி விடுவனோ என்ற அச்சத்தில்.. முல்லையையும், சிம்மனையும் ஒரு முறை அவன் பார்வை தீண்டிச் சென்று ஐ.ஜி பிரேமை பார்த்தான்.
வர்மா என்னை யாருன்னு தெரியுதா?
“ம்ம்” என்று கண்ணை மூடித்திறந்தவன் “ஐ.ஜி பிரேம் சார்.”
“என்னை எத்தனை நாளாய் தெரியும் உங்களுக்கு?”
“நான் போலீஸ் டிரைனிங்கல ஜாயின் பண்ணியது முதல் தெரியும் சார்” என்றவன் பக்கத்தில் நின்ற கந்தனை பார்த்து கந்தன் “நீங்க இங்க என்ன பண்றீங்க” என்று புருவம் சுருக்கி கேட்க..
அனைவரும் வர்மனை ஆச்சரியமாக பார்த்தனர்.
“சார் ஐ.ஜி என்னை வரச்சொல்லியிருந்தாரு அதான் வந்தேன்.. கேரளாவுல நீங்க இல்லாதது எங்களுக்கு வருத்தம் தான் சார்” என்றார் கந்தன்.
“என்னங்க இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு” என்று கவலையாக கேட்டவள் வர்மனின் கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக்கொள்ள.. இப்போது அவன் முல்லையிடமிருந்து கையை எடுத்துக்கொள்ளவில்லை.. அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டோமென்று தான் நினைத்தான்.. தனக்குள் யாரு இருக்காங்க.. என்று போராட்டம் அவனுக்குள்ளே நடந்தது கொண்டுதான் இருந்தது.. அவன் தலைக்குள் எரிமைலைக்குழம்பு வெடிக்கத்துவங்கியது.. குழம்பிப் போனவன் நெற்றியை அழுந்த தேய்த்து கொண்டு “டாக்டர் நான் வர்மனா? இல்ல காளிங்கனான்னு எனக்கு தெரியல” என்று தலையை பிடித்தான்.
டாக்டர் வர்மனின் அருகே வந்தவர் “ரிலாக்ஸ் வர்மன்” என்று அவனது நாடியை பிடித்து செக்பண்ணி அது வேகமாக துடிக்க கையை தடவிவிட்டு “ரிலாக்ஸா இருங்க பதட்டம் உங்களை எந்த நிலைக்கு வேணா கொண்டு போகலாம் சோ கன்ட்ரோலா இருங்க” என்று வர்மனை அமைதிப்படுத்த பார்த்தார்..
வர்மனோ “எனக்குள்ள என்ன என்னமோ தோணுது சார்” என்று அழுதுகொண்டிருக்கும் முல்லையை பார்த்து “இவங்க எனக்குள்ள அடக்கமுன்னு தெரியுது.. முல்லை என் மனைவின்னு என்னோட மூளை சொல்லுது ஆனா, என் மனசு அதை ஏத்துக்கலையே.. இதோ சிம்மன பார்க்கும்போது கூட என் உயிர் ஜீவன் அவனுக்குள்ள இருக்குன்னும்.. அவனோட நான் ஜென்மம் ஜென்மமா பழகினது போல இருக்கு” என்று சிம்மனின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு.. ஆனா பார்வதி, அஜய் இவங்களையும் என்னால மறக்க முடியல” என்று தலையை பிடித்துக்கொண்டான்.
டாக்டர், ஐ.ஜியை திரும்பி பார்க்க.. ஐ.ஜி பிரேம், டாக்டரிடம் கண்ணசைத்துவிட்டு.. “வர்மன் நான் உங்களுக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லுறேன்.. ஏதாவது நியாகம் வருதான்னு பாருங்க” என்ற ஐ.ஜி அன்று நடந்ததை கூற ஆரம்பித்தார்..
ஆறுமுகம் அரசியல்வாதிகளின் செல்வாக்கை கைக்குள் போட்டுக்கொண்டு என்னை கேரளாவுக்கு மாற்றலாகி போக வைத்தார்.. போகும் போது சிம்மனையும், உங்களையும் போலீஸ் வேலையில சேரமுடியாதபடி பண்ணுவேனு என்கிட்ட சொன்னதும்.. எனக்கு கோவம் வந்து அவரது சட்டையைப் பிடித்து கன்னத்துல அறைஞ்சு.. நாட்டை பாதுகாக்க ரெண்டு நல்ல பசங்க டிபார்ட்மென்ட்க்கு கிடைச்சிருக்காங்க ஆறுமுகம் அவங்களுக்கு வேலை கிடைக்காம பண்ணிடாதீங்க.. என்று அவரை எச்சரித்து விட்டுத்தான் போனேன்.. அப்போதே மேலிடத்துக்கு நான் உங்க ரெண்டு பேரோடு போலீஸ் டிரைனிங்கல நீங்க எடுத்த மதிப்பெண்களை கொடுத்துவிட்டுதான் போனேன்..
ஆறுமுகம் உங்க ரெண்டு பேரையும் மிரட்டி அனுப்பியதை கேள்விப்பட்டு என்னால வருத்தப்படத்தான் முடிந்தது.. கேரளாவில நான் ஐ.ஜியா இருக்கும்போது காளிங்கன் எனக்கு பழக்கம்.. குட் ஜென்டில்மேன்.. காளிங்கனுக்கு போலீஸ் என்ற திமிர்.. யாருக்கும் அவன் அடங்கிப்போன பழக்கம் இல்லை.. ரவுடிகள் காளிங்கனின் பேரை கேட்டாலே மூத்திரம் போய்விடுவார்கள்.. அந்த அளவுக்கு டெரர் ஆளு காளிங்கன்.. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்.. போதை மருந்தை அவன் ஏரியாவில் ஒரு ஆள் கூட விற்க முடியாது.. அந்த அளவுக்கு அவனது ஏரியாவை பாதுகாத்து வந்தான்.. ஒரு பார்டியில் குடும்பமாக வந்தார் காளிங்கன்.. காளிங்கன் குடும்பமாக இருக்கும்போது அவனது கம்பீரம் மட்டுமே பார்க்க முடிந்தது.. அவன் மனைவியிடம் அத்தனை பாசமாக நடந்துகொண்டார்.. பார்வதி கர்ப்பிணியாக இருக்க என்னிடம் பேசிக்கொண்டிருந்த காளிங்கன்.. சார் என் வொய்ப்க்கு உடம்பு முடியல நாங்க கிளம்புறோம் என்று கிளம்ப..
காளிங்கன் நெக்ஸ்ட் மன்த் ஒரு என்கவுண்டர் இருக்கு.. என்று அவர் காளிங்கன் காதில் கூற.
“ம்ம்” ஓ.கே சார்” என்று பிரேமை புன்னகையுடன் பார்த்து மனைவியுடன் வெளியேறினான்.. அன்றிரவே பார்வதிக்கு பிரசவம் நடக்க.. காளிங்கனை போலவே அவன் மகன் அஜய் பிறந்து விட்டான்.. என்னோட சிங்கக்குட்டி பிறந்துட்டான்..
என்றவன் பார்வதியின் நெற்றியில் முத்தமிட்டு.. “பாரு இவனை என்னை போலவே போலீஸ் ஆபிசராக்கணும்.. ஒருவேளை நான் இல்லாம போனாலும்” என்று வார்த்தையை கூற..
“என்னங்க இந்த சந்தோசமான வேலையில என்ன பேசுறீங்க” என்ற காளிங்கனை, பார்வதி செல்லமாக சாட..
“ஏய்! பொண்டாட்டி!” என பார்வதியின் கன்னம் பற்றி “நெருப்புனு சொன்னா வாய் சுட்டுறாதடி.. என்னோட உயிர் நாட்டுக்கு போனா நெஞ்சை நிமிர்த்தி உயிரை கொடுப்பேன்” என்று மார்தட்டி கூறிய காளிங்கன் உயிரை விடுவான் என்று எள்ளவும் நினைக்கவில்லை காளிங்கனும் பார்வதியும்..
பார்வதிக்கு அப்போதே கர்ப்பப்பையில் ப்ராப்ளம் இருந்தது தெரியாமல் போயிற்று.. பார்வதி கண்ணீர் விட.. பார்வதியின் நெற்றியில் முத்தம் கொடுத்த காளிங்கன்.. “பாரு.. நீ காளிங்கன் பொண்டாட்டி அழக்கூடாது.. என்னோட பையன் இந்த காளிங்கனை விட பெரிய ஆபிஸரா வருவான்.. நான் இவனை எப்படி வளர்ப்பேன் பாரு” என்று மீசையை முறுக்கி விட்டான். மூன்றாவது நாளில் வீட்டுக்கு கூட்டிட்டுப்போனதும் அடுத்த நாளே டியூட்டியில் ஜாயின் பண்ணினான்..
ஒவ்வொரு நாளும் இரவு வீட்டுக்கு வந்தால் போதும் மகனுடன் “நீ போலீஸ்டா” என்று பிஞ்சு குழந்தை அஜையின் காதில் சொல்லிக்கொண்டிருப்பான்..
காளிங்கனின் செய்கையை பார்த்த பார்வதி “என்னங்க குழந்தைக்கு என்ன தெரியும்னு அவன்கிட்ட போய் போலீஸ் அது இதுன்னு பேசிட்டிருக்கீங்க” என்று காளிங்கனை கிண்டல் செய்தாள் பார்வதி..
“பாரு பால் கொடுக்கும்போது கூட என் பையன் போலீஸாகணும்கிற நினைப்புல கொடுடி.. என் புள்ளைக்கு என்னோட வீரம் ஜாய்தியா வரும்” என்று கண்ணடித்தவன் பார்வதியை இழுத்து மடியில் வைத்து அவளது வாசத்தை பிடித்தான்.. இருவரும் சந்தோசமாய் கழித்தது அன்றிரவு மட்டுமே..
அடுத்த வந்த நாட்கள் எல்லாம் காளிங்கன் என்கவுண்டர் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.. அந்த என்கவுண்டர் நடந்த இடத்துக்கு தான் வர்மன் நீங்களும் வந்தீங்க.. அப்போ அந்த என்கவுண்டர் நடந்த போது குற்றவாளியை சுட்டு கொன்றுவிட்டு திரும்பும் போது தான் அந்த பயங்கர ஆக்சிடன்ட் நடந்துச்சு.. அந்த நேரத்தில் காளிங்கனுடன் கூட இருந்தது கந்தன் தான்.. அவர் காளிங்கனுக்கு உணவு பார்சல் வாங்க போயிருந்த நேரம்தான் ஆக்சிடன்ட் நடந்துச்சு.. காளிங்கனின் போலீஸ் ஜீப் தார் சாலையில் ஓரமாக நிறுத்தியிருக்க.. வர்மனின் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.. எதிரே வந்த ஒரு லாரி வர்மனின் காரின் மேல் மோத வர.. காளிங்கன் ரோட்டில் திரும்பி நின்று பார்வதியிடம் போன் பேசிக்கொண்டிருந்தான்.. வர்மன் கார் மீது லாரி மோதியதும், அது காளிங்கனின் ஜீப் மீது மோதி போன் பேசிக்கொண்டிருந்த காளிங்கன் மீது மோத அவனும் அருகேயிருந்த கரண்ட் கம்பத்தில் மோத காளிங்கனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு அப்படியே மயங்கிவிட்டான்.
வர்மன் உங்க வண்டிய ஆக்சிடன்ட் பண்ணியது சந்தானம் மகன் முகேஷ் தான்.. கந்தன் அக்சிடேன்ட் ஆனதை எனக்கு கூறிவிட்டு காளிங்கனையும், வர்மனையும் ஒரே ஹாஸ்பிட்டலில் தான் சேர்த்தார்.. ஒரே ஐ.சி.யுவினுள் இருவரும் அட்மிட் ஆகியிருந்தீங்க.. அப்போ நான் ஹாஸ்பிட்டலுக்குள் வந்ததும் காளிங்கனுக்கு முழிப்பு இருந்துச்சு.. ஆனா காளிங்கன் உயிர் கொஞ்சம் கொஞ்சமா பிரியத்துவங்கிய நேரம் “சார் என்னோட மனைவி பார்வதியும், மகனையும் பார்க்கணும்” என்று உடலில் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல் பேசினான்..
ஐ.ஜி.. பார்வதியையும், அஜயையும் உடனே வரவழைத்தார்.. பார்வதி வெளியே மகனுடன் நின்று அழுதுகொண்டிருந்தாள்.. நர்ஸ் வெளியே வந்து பார்வதியை கூட்டிச்செல்ல..
பார்வதியை பக்கம் வரச்சொன்ன காளிங்கன்.. பார்வதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து.. அஜய்யை கிட்ட வரச்சொல்லி அஜய்யின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட காளிங்கன்.. “பாரு நான் இல்லைன்னு நீ சோர்ந்து போயிடக்கூடாதுடி..
நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினேன் என்னால முடியாத போயிடுச்சு” என்று கூறும் போதே அவனது குரலில் பிசிறு தட்டியது..
“என்னங்க என்று பார்வதி அவன் நெஞ்சில் சாய்ந்து அழ”
“அழக்கூடாதடி நீ காளிங்கன் பொண்டாட்டி” என்று மீசையை தடவியன்.. “நான் சொல்றத நீ செய்யணும்.. நாட்டுக்காக”என்றவன்.. சற்று முன் நடந்ததை எண்ணிப்பார்த்த காளிங்கனுக்கு விழிப்பு வந்ததும் பக்கத்தில் படுத்திருந்த வர்மனை பார்க்க அச்சு அசலாக தன்னைப் போல இருக்கும் வர்மனை பார்த்து விழி உயர்த்தி பார்த்தான்.. அதே நேரம் வர்மனை செக் பண்ண வந்த டாக்டர்ஸ் இவரும் டிப்பார்ட்மெண்ட் ஆளுதான்.. என்று ரகசியத்தகவல் வந்திருக்கு.. இவங்க மறைமுகமா போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல வேலை செய்யுறாங்க என்ற பேசிக்கொண்டிருந்தனர்.. ஆனா இவருக்கு ஹார்ட் பங்கன் கம்மியா இருக்கு.. சீக்கிரமா வேறொரு ஹார்ட் வைக்கணும்.. அதுக்கு இம்மீடியட்டா ஒரு ஹார்ட் கிடைக்கணும்.. அண்ட்.. ஐயும் டேமேஜ் ஆகியிருக்கு.. ஐயும் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.. ஆப்ரேசன் சக்ஸஸா பண்ணினாலும் இவர் கோமா ஸ்டேஜ் போக வாய்ப்பிருக்கு.. பார்க்கலாம் என்ற டாக்டர்ஸ் பேசிக்கொண்டிருந்ததை கேட்டான் காளிங்கன்.. தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்தவன் தனது கண்ணையும், ஹார்ட்டையும் வர்மனுக்கு கொடுக்க தயாராக இருந்தான்..
“பார்வதி நான் பொழைக்கமாட்டேன்டி” என்று சொல்ல அவனது வாயை பொத்தியவள் விசும்பிக்கொண்டே “உங்களுக்கு எதுவும் ஆகாதுங்க” என்றவள் கண்ணீர்துளி காளிங்கன் முகத்தில் பதிக்க.. “பாரு நான் இன்னொன்னும் சொல்லப் போறேன்.. என் மேல ஆணையாக எனக்காக நீ அதை செய்யணும்” என கடினப்பட்டுத்தான் பேசினான்..
“சொல்லுங்க” என்றாள் பார்வதி கண்ணில் கலங்கிய விழிகளுடன்..
“என்னோட ஹார்ட், என்னோட ஐ ரெண்டையும் இதோ பக்கத்துல என்னைப்போலவே படுத்திருக்க அவருக்கு கொடுக்கணும்.. அண்ட் இதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்” என்று மூச்சு விடவே சிரமாயிருக்க.. விட்டு விட்டு பேசினான்..
“ஐ.ஜி சார் டிப்பார்மெண்டை தவிர நான் இறந்தது யாருக்கும் தெரியக்கூடாது.. இவர் தான் இனி காளிங்கன்” என்றவன்..
“பாருஊ நீ நெத்தியில குங்குமம் அழிக்க கூடாது.. நாட்டுக்காக இதை செய்துதான் ஆகணும்.. என்மேல் ஆணை” என்றவன் இவரை நீ அண்ணணாக நினைச்சுக்கோ.. கண்டிப்பா இவன் நல்லவனாகத்தான் இருப்பான்.. அவருக்கு சுயநினைவு வந்ததும் ஒரு நாள் அவருக்கு உண்மையை கூறி விடு.. காலம் பதில் சொல்லும்.. என்ட குருவாயூரப்பன் உனக்கு துணையா இருப்பார்.. என்ற நம்பிக்கையில் அப்படி கூறினான்.. “என்னங்க என்னால முடியாது” என்று அவள் விசும்ப..
“ப்ளீஸ்டி” என்று அவள் கையை அழுத்தமாக பிடித்தவன் அவள் கைகளுக்கு முத்தம் கொடுத்து.. அஜய்யின் கன்னத்தில் முத்தம் இறுதியாக கொடுத்து அவனது உயிர் பிரியத்துவங்கியது… “சத்தியம் பண்ணு” என்று மெல்ல காளிங்கன் கையை நீட்ட பார்வதி கண்ணில் கண்ணீர் வழிய கையை நீட்டி சத்தியம் செய்தாள்.. “அஜயை போலீஸா ஆக்கணும்” என்று மெல்ல சொல்லி கண்மூடியவன் அதே நொடி கண் திறந்து அந்த நேரத்தில் அவனது வாய்மொழி ஜெய்கிந்த் என்று சொல்லியே அவன் உயிர் பிரிந்தது.. “என்னங்க” என்று பார்வதி கத்தி அழ.. ஜ.ஜி பார்வதியை மகள் போல எண்ணி அஜய்யை வாங்கிக்கொண்டு “உன்னோட புருசன் காளிங்கனை போல ஒரு சின்சியர் போலீஸை நான் பார்க்கலமா” என்றவர் பார்வதியை தன்னுடன் அணைத்து கொண்டார்.. காளிங்கனிடமிருந்து கண், இதயம் எடுக்கப்பட்டு வர்மனுக்கு வைக்கப்பட்டது..
வெளியே காத்திருக்கும் சிம்மனிடம் ஜ.ஜி அப்போது உண்மையை கூறவில்லை.. சிம்மன் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.. சமயம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்.. என்று உண்மையை மறைத்துவிட்டார்..
இது மிகக்பெரிய குற்றம்தான் என்றாலும் நாட்டுக்காக இதை செய்தார் ஐ.ஜி பிரேம்.. காளிங்களின் உடலை சிம்மன் வீட்டுக்கு கொண்டு போக அங்கே அழும் முல்லையை பார்த்து உள்ளம் கலங்கி பதறியதுதான் ஜ.ஜி பிரேம்க்கு.. ஆனால் காளிங்கனின் விருப்பத்திற்காகவும், நாட்டுக்காகவும் பார்வதி எப்படி கணவனுக்காக நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறாளோ அதுபோல முல்லை கொஞ்சநாள் சிரமப்படட்டும்.. என்று எண்ணியவர் தனது மனசாட்சியை தொலைத்துவிட்டு காளிங்கனின் இறுதி காரியங்களில் நின்றார்..
நாட்டுக்காவும் கணவன் சொன்ன ஒற்றைச் சொல்லுக்காகவும் வர்மனின் பக்கத்தில் நின்றாள்.. தன் அண்ணன் என்று நினைத்து.. வர்மனுக்கு காளிங்கனின் இதயமும் கண்ணும் வைத்ததில் காளிங்கனாகவே உயிர்பெற்று வந்தான்.. வர்மனுக்கு ஆப்ரேசன் நடந்த உடனே அவன் எழும்ப வில்லை.. கோமாவில்தான் இருந்தான்.. அவன் எழும்ப ஆறுமாதம் ஆனது.. அவனுக்கு கண்விழித்தபோது குழந்தையுடன் அமர்ந்திருந்தாள் பார்வதி.. அந்தநேரத்தில் ஐ.ஜி பிரேம் அங்கேயிருக்க.. நான் எங்கயிருக்கேன்.. நீங்க எல்லாம் யாரு.. என்று அவன் தலையை பிடித்து… கண் கலங்க.. பார்வதி கணவனுடைய கண் என்று எண்ணியவள் வர்மனின் அருகே அஜயுடன் போய் நிற்க..
காளிங்கன் இவங்க உன்னோட மனைவியும், குழந்தையும் என்று கூற.. அவனுக்கு முல்லையும் கைக்குழந்தையும்தான் ஞாபகத்தில் வர.. ஆனால் முல்லை முகம் மட்டும் நினைவில் இல்லை.. பார்வதி கைக்குழந்தையுடன் இருக்க அவன் தான் காளிங்கன் என்று ஒப்புக்கொண்டான்.. காளிங்கனாக நடந்து கொண்டான்..வீட்டுக்கு வந்த கொஞ்ச நாட்கள் அவனுக்கு கூடப்பிறந்த தங்கையை போலத்தான் காளிங்கனுக்கு உதவிசெய்தாள்.. மற்றபடி அவனுக்கு உடம்பால் உதவிசெய்ய கந்தனை அனுப்பியிருந்தார் ஜ.ஜி.. பார்வதி கைக்குழந்தையுடன் இருப்பதால் அவள் தனக்கு எதுவும் செய்யவில்லை என்று வர்மனும் எண்ணிக்கொள்ள.. அவனுக்கும் பார்வதியை மனைவியாக ஒரு முறை கூட அவளை பார்க்கவில்லை.. அவனுக்குள் வைத்த கண்ணும், இதயமும் இருக்க முழுதாக புதியதாக உதித்த சூரியன் போல வர்மன், காளிங்கனாக உருமாறினான்.. வர்மன் போலீஸ் டிரைனிங் முடிந்திருந்ததால் அவனுக்கு வசதியாய் போயிற்று..
“கந்தன், சார் நீங்க பெரிய சாகஷம் எல்லாம் செய்திருக்கீங்க என்றெல்லாம்” கூற.. அவனுக்குள் ஆயிரம் யானை புகுந்த கொண்டது போல வீரம் இன்னும் வந்தது.. அப்படியிருக்கையில் தான் ராதிகா கொலை கேஸ் வர.. வர்மன் தமிழ்நாடு வர நேரிட நிர்பந்தம்.. அதே வேளையில் பார்வதிக்கு கர்ப்பையில் கட்டியும் பெரிதாக அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர அங்கே நடந்த விபத்தில் பார்வதிக்கு அடிபட.. அவள் உயிர் பிரியும் வேளையில்தான் வர்மனுக்கு, காளிங்கனின் உண்மையை வர்மனிடம் கூறியவள்.. “என்னோட பையனை போலீஸ் ஆபிசரா கொண்டு வந்திருங்க அண்ணா” என்று கூறி அவள் உயிர் பிரிந்தது.. அப்போதும் வர்மனுக்கு தான் யார் என்பதில் குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது.. ஏனா.. காளிங்கனின் இதயம் வர்மனுக்குள் இருந்தது.. அதனால் வர்மன் குழம்பிக்கிடந்தான்..
வர்மனை உயிருடன் பார்த்த சிம்மனுக்கு சந்தேகம் வர.. “என்னிடம் வந்து என்னோட நண்பன் உயிரோட இருக்கான் ஐ.ஜி உண்மையை சொல்லுங்க” என்று கண்ணீருடன் சிம்மன் கேட்க.. ஐ.ஜி காளிங்கன் கூறியதை சிம்மனிடம் கூற..
“ஏன் சார் என்கிட்ட மறைச்சீங்க” என்று ஆத்திரத்துடன் அவரின் சட்டையை பிடித்து சண்டைக்கு போய் விட்டான்.
“இதனால் தான் சொல்லவில்லை சிம்மன்.. இது போலீஸ் டிபார்ட்மெண்டோட ஆர்டரும் கூட” என்று சிம்மனின் கையை தன் சட்டையிலிருந்து எடுத்துவிட்டார்..
முல்லையை பார்த்து “என்னைய மன்னிச்சுடுமா” என்று அவர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.. முல்லைக்கு கண்ணீர் மட்டுமே வந்தது.. பார்வதியை எண்ணி பெருமை கொண்டாள்.. எப்படியோ என்னோட வர்மன் வந்துவிட்டான் என்று கணவனின் கையை பற்றியதை இன்னும் அவள் விடவில்லை.. வர்மனோ இப்போது முல்லையின் கையை அழுந்தப்பற்றிக்கொண்டான்.. இதையெல்லாம் சொல்லி முடித்தார்.
super sis