- மோக முத்தாடு அசுரா
வர்மனும் ஜ.ஜி பிரேம் கூறுவதை நம்பினான்.. பார்வதி தன்னிடம் ஒருமுறை கூட மனைவியாக நடந்துகொள்ளவில்லை.. நானும் பார்வதியை மனைவியாக எண்ண தோணவில்லை.. ஒரு நண்பர்கள் போலவே இருவரும் இருந்தோமே.. கடைசியாக பார்வதி காளிங்கனை பற்றி கூறியது போதும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.. நான் யாரென குழப்பம் இப்போ தெரிந்தது என நிம்மதியாக இருந்தான் வர்மன்.
இப்போ இன்னொரு விசயம் சொல்லப்போறேன் “சிம்மனும்” என்று பேச ஆரம்பித்த பிரேமை சார் இப்போதைக்கு சொன்னதே போதும் பார்வையால் ஐஜிக்கு உணர்த்தியவன் “வர்மனுக்கு இன்னும் குழப்பம் இருக்கும் சார் போலாமே” என்று கூறியவன்.. இப்போ எதையும் சொல்ல வேணாமென்று தலையாட்டினான் சிம்மன்.
“ம்ம் சரி வர்மன் உங்க குழப்பம் எல்லாம் தீர்ந்து போச்சுல்ல.. ராதிகா கொலைகேஸ் சீக்கிரம் முடிங்க.. நீங்க வர்மன்தான்” என்ற உண்மையை வெளியில சொல்லிவிடலாம்..
“சார் என்னோட சர்டிபிக்கேட்ஸ் ஆறுமுகம் சார் கிழிச்சு போட்டுட்டாரே.. அப்புறம் எப்படி வர்மன்னு வெளியில சொல்றது” என்று வர்மன் சந்தேகத்துடன் கேட்க.
மெல்ல சிரித்த ஐ.ஜி “சிம்மனோட, உங்களோட சர்டிபிக்கேட்ஸ் எல்லாமே என்கிட்ட ஒர்ஜினலாக இன்னொரு காப்பி எடுத்து வைச்சிருந்தேன்” என்று என்று கூறியவர் தொடர்ந்து
“டிபார்ட்மெண்ட்டுக்கு நீங்க வர்மன்னு தெரியும்.. சோ டோண்ரி ஓர்ரி” என்று எழுந்தவர் வர்மனின் தோளைத் தட்டி சிம்மனை பார்த்து கண் சிமிட்டிச் சென்றவர் முல்லையை தாண்டி போக.. “அம்மாடி நான் உன்கிட்டதான் மன்னிப்பு கேட்கணும்.. வர்மன் இறந்துட்டான் தெரிஞ்சதும் நீ எவ்ளோ துடிச்சன்னு என் கண்ணால பார்த்தேன்.. அப்பவே என் மனுசு உன்கிட்ட ஓடிவந்து வர்மன் உயிரோடதான் இருக்கான்னு சொல்ல துடிச்சது.. ஆனா வர்மனுக்கு தலையில அடியும் பலமா பட்டிருந்துச்சு.. கூடவே ஆப்ரேசன் பண்ணினாலும் அவன் கோமா ஸ்டேஜ் போகவும் வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னதால உன்கிட்ட அப்போதைக்கு உண்மைய சொல்லல.. உன் மடியில் இருந்த குழந்தையை பார்த்து நீ தற்கொலைக்கு போகமாட்டேனு உறுதியா தெரிஞ்சுகிட்டேன்.. அதுமட்டுமா நீ சிம்மன் பாதுகாப்புல இருக்க.. சிம்மன் உன்ன கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவான்னு எனக்கு ரொம்ப நம்பிக்கைம்மா.. என்று முல்லையின் கையை பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.
“சார் பெரியவங்க நீங்க.. இப்படியெல்லாம் என்கிட்ட மன்னிப்பு கேட்காதீங்க.. நாட்டுக்காகத்தான இப்படி செய்தீங்க.. என் மூலமா நாட்டுக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான் சார்.. ஒரு தாய் பெற்ற மகனையே நாட்டுக்காக கொடுக்குறாங்க.. நான் என்ன கொஞ்ச வருசம் என்னோட வர்மனை விட்டு பிரிச்சிருந்தேன்.. என்னோட புனிதமான காதல் என் கணவரை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுச்சு.. நீங்க பீல் பண்ணாதீங்க.. என்கிட்டே நீங்க உண்மையை சொல்லி இருந்தா கண்டிப்பா நான் வர்மனை பார்க்க வந்திருப்பேன்.. அப்போ அவர் என்னை தெரியலைனு சொல்லி இருந்தா என்னால தாங்கி இருக்க முடியாது.. செத்தே போயிருப்பேன்.. நீங்க எனக்கு நல்லது தான் பண்ணி இருக்கீங்க என்று பிரேமின் மனதில் ரொம்ப நாளாக அரித்துக்கொண்டிருந்த கவலையை இன்று தீர்த்து விட்டாள் முல்லை.
“ரொம்ப நன்றிமா.. உன்னோட வர்மன உன்கிட்ட பத்திரமா கொடுத்திட்டேன்.. ஆனா காளிங்கன் மகனை உன் மகனா நினைச்சு வளர்த்தி விடுமா அதுவே போதும்” என்று அவளது கையை விட்டு வெளியே சென்றார்.
“வர்மன் நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று டாக்டர் கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறப் போக.
“தேங்க்யூ டாக்டர்” என்று கூறிய சிம்மன் டாக்டர் சென்றதும் வர்மனை அணைத்துக்கொண்டு என்னோட நண்பன் எனக்கு திரும்ப கிடைச்சுட்டான்” என்று சிம்மன் ஆனந்த கண்ணீர் விட..
சிம்மனும், வர்மனும் கட்டிக்கொள்வதை பார்த்து “பொண்டாட்டிய கூட மறந்திட்டு இந்த மனுஷன் நண்பனை கட்டிக்க வேண்டியதுதான்” என்று பொறுமை இழந்த முல்லை..
“போதும் ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு கொஞ்சிகிட்டது.. என்று கோபமாக பேசி வர்மனின் தோளைத்தொட..
இருவரும் அணைப்பிலிருந்து பிரிந்து “சாரி முல்லை” என்ற சிம்மன் வர்மனை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றான்.
சிம்மன் சென்றதும் முல்லையை பார்த்து “இரு கையை விரித்து வா” என்று வர்மன் மனைவியை அழைக்க.. அவன் அணைப்புக்காக காத்திருந்து ஏங்கியவள் தாயை தேடிய பசு போல வர்மனின் கரங்களுக்குள் அடங்கிக்கொண்டாள் முல்லைக்கொடி.
முல்லையின் கண்ணீர் அவனது மார்பில் பட.. அவள் மனசு ஆறும் வரை அழுது முடிக்கட்டும்.. இன்றோடு முல்லையின் கண்ணீருக்கு முற்றுப் புள்ளி வரட்டும்.. என்று அவளை சிறிதுநேரம் அழவிட்டான் இந்திர வர்மன்.. முல்லையின் முதுகை கைகளால் வருடிக்கொண்டேயிருந்தான்.. அவளது விசும்பல ஓய்ந்ததும்.. “ஓய்! பப்ளி உன்னை ரொம்ப தவிக்க வச்சிட்டேன்ல..” என தவிப்பான குரலில் பேசியவன்.. அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்ணீரை சுண்டு விரலால் துடைத்து விட்டு “இனி என்னோட பொண்டாட்டிய விட்டு எங்கேயும் போக மாட்டேன்டி” என்று அவளது பிறை நுதழில் இதழ் பதித்தான்..
வர்மன் சுயநினைவோடு கொடுக்கும் முதல் முத்தம் இது.. அவனது முகத்தை அணுஅணுவாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.. அவன் இதழ் நோக்கி குனிய அப்படியே கண்ணை மூடிக்கொண்டாள்.. அவளது இதழ்கள் துடித்துக்கொண்டிருந்தது.. துடிக்கும் இதழ்களை அப்படியே கவ்விக்கொண்டான்.. நேற்றிரவு நடந்தது எல்லாம் அவனுக்கு நியாபகம் இல்லை.. இன்றோ அப்படியில்லையே.. அவளது இதழை விட்டு பிரிய மனமேயில்லை அவனுக்கு.. முல்லைக்கும் இப்போது இந்த முத்தம் முடிவுக்கு வரக்கூடாதென்றே இருந்தாள்.. இனி கணவன் என்னைவிட்டு பிரியவேக் கூடாது.. என்று பெண்ணவளும் ஆணவனிடம் முத்த பரிமாற்றத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.. இருவரும் மெய்மறந்து இந்த உலகத்தை விட்டு வேறு ஒரு சொர்க்க உலகத்திற்கு சென்றுவிட்டனர் என்றே கூறலாம்.. அந்த அளவிற்கு இருவரும் தன்னிலை மறந்திருந்தனர். வெளியே நின்றிருந்த சிம்மனுக்கு, வஞ்சிக்கொடி போன் போட..
அட நம்மாளு என்றவன் போனை ஆன் செய்து “சொல்லு வஞ்சி பசங்க என்ன பண்றாங்க.. அவங்கள உன்னால சமாளிக்க முடியலதான” என்று சிம்மன் நக்கலாக சிரிக்க..
“ம்ம்.. அதெல்லாம் இன்னும் ரெண்டு பசங்க இருந்தாகூட நான் பார்த்துப்பேன்” என்று அவள் குரல் நாணத்துடன் வந்தது.
அவள் குரல் நெளிவை கேட்டவன் “அச்சோ உன்னோட முகத்துல வர வெட்கத்தை என்னால பார்க்க முடியலையே” என்று ஏங்கிய சிம்மன்.. அப்படியே இன்னிக்கும் மஜா பண்ணலாமா.. என்று மீசையை தடவியபடி யாரும் பக்கத்தில் இல்லையென்பதை உறுதி செய்து போனில் வஞ்சிக்கு முத்தம் கொடுக்க..
அவன் கொடுக்கும் முத்த வேகம் தெரியுமல்லவா வஞ்சிக்கு.. போனை சிறிது தள்ளிப்பிடித்து அவன் முத்தம் ஓய்ந்ததும்… “ச்சீ போயா உனக்கு எப்பவும் அதே நினைப்புதானா” என்று சிணுங்கிக்கொண்டு “இப்ப வர்மன் அண்ணா எப்படி இருக்காங்க” என்று சீரியஸ் மோடுக்கு வந்து கேட்க.
“ம்ம் இப்ப என் நண்பன் வர்மன் வெளியே வந்துட்டான்டி. எனக்கு இந்த உலகத்தையே ஜெயிச்சிட்ட ஒரு பீல் வந்துடுச்சு.. இனி நானும் என்னோட வர்மனும் கலக்கப்போறோம் பாரு” என்று பெருமையாக சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.
“ஆமா இனி உங்க ரெண்டு பேரோடு கொட்டம் ஜாஸ்திதான் ஆகும்.. அதை நான் அடக்குறேன்” என்று என்று மனதில் எண்ணிக்கொண்டிருக்க.. “ஏய் வஞ்சி லைன்ல இருக்கியா” என்று கத்திக்கொண்டிருந்தான் சிம்மன்.
“ஹாங் சொல்லுங்க இருக்கேன்” என்றாள் சுரத்தையில்லாமல்
“சமையல் பண்ணி வச்சிடு.. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவோம்” என்று போனை வைத்தவன்.. சிம்மன் வர்மனின் அறைக்கதவை தட்ட இருவரும் கதவு தட்டும் ஓசையில் பிரிந்து விட்டு முல்லை தலையை குனிந்து கொள்ள.. முல்லையின் கன்னத்தில் உண்டான வெட்கச் சிவப்பை பார்த்த வர்மன் “என் பப்ளியோட வெட்கத்தை பார்த்து எத்தனை நாளாச்சு” என்று பெரும்மூச்சு விட்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகினான்..
“சிம்மா உள்ள வாடா” என்று சிம்மனை கூப்பிட்ட
வர்மன் தன் தலைமுடியை அழுந்தக் கோதினான்.. முல்லை ஆடையை சரிசெய்து கொண்டு நின்றாள்.
“நண்பா வீட்டுக்கு போலாம்டா” என்று வர்மனுக்கு கைக்கொடுக்க..
“நான் இப்ப போலீஸ்டா.. ரௌடி பயலுக்கெல்லாம் கைக்கொடுக்க மாட்டேன்” என்று கிண்டல் செய்து கண்ணடிக்க..
“அடிங்” என்று வர்மனின் வயிற்றில் குத்தியவன் “இறங்கிவாடா” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து கூட்டிச்சென்றான்.
முல்லை இருவரின் நட்பை வியந்து பார்த்து அவர்கள் பின்னே நடந்து சென்றாள்.
வீட்டுக்குச் சென்றதும் வர்மனை கண்ட குழந்தை அஜய் “அச்சா என்றும் இனியா அப்பா” என்றும் வர்மனை கட்டிக்கொண்டது..
இரு குழந்தைகளையும் தூக்கி கொஞ்சிக்கொண்டே சோபாவில் அமர்ந்தான்.. பாரு யாராவது என்கிட்ட அம்மானு ஆசையா வராங்களானு.. என்று இரு குழந்தைகளையும் பார்த்து விட்டு அறைக்குள் குளிக்கச் சென்றாள்.. சிம்மன் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தவன் சோபாவில் அமர.. “சிம்மாஆஆ” என்று இனியா, வர்மனின் மடியிலிருந்து சிம்மனின் மடியில் தாவி அமர்ந்துகொண்டது..
- மோக முத்தாடு அசுரா
வர்மனுக்கு பொசுக்கென்று ஆனது.. பின்னே இத்தனை நாளாய் இனியாவை மார்பிலும், தோளிலும் வளர்த்தவன் சிம்மன் ஆயிற்றே.. அந்த பாசம் குழந்தைக்கு மறந்து போகுமா என்ன?
ரொம்ப தேங்க்ஸ்டா சிம்மா.. நான் உனக்கு போன ஜென்மத்துல நிறைய செய்திருக்கேன் போல.. அதான் நான் இல்லைனாலும் என்னோட பொண்டாட்டியையும், பிள்ளையையும் உன்னோடையே வச்சிருக்க.. என்று அவன் நினைத்தபடி அமர்ந்திருக்க..
சிம்மன், இனியாவுடன் கிச்சு கிச்சு மூட்டி விளையாடிக்கொண்டிருந்தான்.. அஜய், இனியாவை பார்க்க.. “வா அண்ணா விளையாட தோட்டத்துக்கு போகலாம்” என்று கூப்பிட.. முல்லை குளித்து தலையை துவட்டிக்கொண்டு வெளியே வந்தவள்.. இனியா விளையாட போலாம் என்று சொன்னது அவள் காதுக்கு கேட்டுவிட “இனியா நாளைக்கு ஸ்கூல் இருக்கு.. சாப்பிட்டு தூங்க போலாம்” என்றவள் சிம்மனின் மடியில் அமர்ந்திருந்த இனியாவையும், வர்மனின் மடியில் இருந்த அஜயையும் கையை பிடித்து எழுப்பிவிட்டு “அண்ணா நீங்களும் சாப்பிட வாங்க.. என்னங்க உங்களுக்கு தனியா சொல்லணுமா என்ன போய் குளிச்சிட்டு வாங்க” என்று ஆர்டர் போட்டு விட்டுச் செல்ல..
“இத்தனை நாளாய் இந்த அதிகாரம் இல்லாம வீடே விரிச்சோடி போச்சுடா.. இப்பதான் வீட்டுக்கே வெளிச்சம் வந்தது போல இருக்குடா” என்று சந்தோசத்துடன் சிரித்த சிம்மன்.. போடா குளிச்சிட்டு வா.. இல்லை முல்லைகிட்ட பழையபடி நீதான் அடிவாங்குவ” என்று வர்மனை எழுப்பி முல்லையின் அறைக்குள் குளிக்க அனுப்பினான்.
சிம்மன் டைனிங் டேபிளுக்கு வர.. வஞ்சி சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு டைனிங் டேபிளில் சமைத்ததை அடுக்கிக்கொண்டிருந்தாள்.. அவள் இருந்த கோலத்தை பார்த்து பல்லைக்கடித்தவன்.. சரியான பட்டிக்காடு இடுப்பு தெரிய நிற்குறா.. சேலையை ஒழுங்கா கட்டத்தெரியுதா பாரு.. இவ்ளோநாள் நான் மட்டும்தான் இருந்தேன்..இப்ப வர்மன் வந்துட்டான்.. இனி முல்லைக்கிட்ட சொல்லி வஞ்சிக்கு சேலைகட்ட சொல்லிதரச்சொல்லணும்.. என்று எண்ணியவன் முல்லை அஜய்க்கும், இனியாவுக்கும் உணவூட்டுவதில் மும்மரமாக இருக்க.. சிம்மன் பக்கம் வந்த வஞ்சியின் இடுப்பில் சொருகியிருந்த பாவாடையை இறங்கிவிட்டு அவளது விலகிய தாவணியை சரிசெய்து விட்டான்..
சிம்மன் அவளது இடுப்பை தொட்டதும் கூச்சத்தில் “அச்சோ என்று குழம்பு பாத்திரத்தை கீழே போட்டு சிம்மனை முறைக்க.. சிம்மனோ “என்னடி டிரஸ் பண்ணியிருக்க” என்று பல்லைக்கடித்தான்..
“எனக்கு இப்படித்தான் கட்டத்தெரியும்.. என் இதழை கோணி காட்ட
“நான் வேணா புடவை கட்ட சொல்லித்தரட்டா” என்று அவளிடம் எக்குத்தப்பாய் பேச..
“யாரு நீங்க புடவை கட்ட சொல்லித்தரீங்கநீங்க என்ன பண்ணுவிங்கனு எனக்குத்தானே தெரியும்” என்று சிம்மனை முறைத்து பார்த்து “ஆளை விடுங்க சாமி.. நான் முல்லை அக்காக்கிட்டேயே இந்த ஊரு வழக்கப்படி கட்டி பழகிக்கிறேன்”. என்று சிம்மனை இடித்து விட்டுச்சென்றாள்.
சிம்மன் சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றவன் சமையல்கட்டில் வர்மனுக்காக தோசை சுட்டுக்கொண்டிருந்த வஞ்சியின் பின்னிருந்து அவளது முதுகில் சாய்ந்து நின்றவன் கழுத்தில் முகம் புதைத்து “சீக்கிரம் வேலை முடிச்சுட்டு நம்ம ரூமுக்கு வந்துடுடிமஜா பண்ணலாம்” என்று கிறக்கமாக பேசியவன் அவனது முரட்டு இதழை அவளது வெற்று முதுகில் பதிக்க.. “ஸ்ஸ்ஆஆ போயா சமையல்கட்டில நின்னு என்ன வேலை பண்ணுற” என்று திரும்பி நின்று அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டாள்..
“என்னடி தள்ளிவிடுற” என்று சற்று ஜர்க்கானவன் போல நின்றவன்.. “சும்மா சொல்லக்கூடாது சிம்மனோட பொண்டாட்டினு அடிக்கடி நிரூப்பிக்குறடி” என்று அவள் கன்னம் தட்டி கொஞ்சியவன் மாமன் உனக்காக காத்துக்கிடப்பேன் வந்திருடி” என்று கண்ணடித்துச் சென்றான்.
வரேன் சிம்மன் இன்னிக்குதான் நீ சந்தோசமா இருக்க கடைசிநாள் என்று ஆக்ரோசமாய் காளி போல நின்றிருந்தாள் வஞ்சிக்கொடி.. தோசை கருகும் வாசத்தில் முல்லை சமையல்கட்டுக்குள் வந்து பார்க்க.. வஞ்சி அப்படியே மரம் போல நின்றிருந்தாள்.
அடுப்பை அணைத்துவிட்டு “வஞ்சி என்னடியாச்சு உனக்கு தோசை கருகுவது.. தெரியாம நின்னுடிருக்க என்று வஞ்சி தோளைத்தொட்டு உலுக்க..
“ஹா! அக்கா அம்மா நியாபகம் வந்திடுச்சி” என்று கண்ணைக் கசக்கியவள்.. “எங்க ஊருக்கு ஒரு முறை போய்ட்டு வரணும்க்கா” என்று வராத கண்ணீரை சிந்தினாள்.
“ஏய் எதுக்கு இப்ப அழற.. உனக்குத்தான் யாரும் இல்லைன்னு சொன்னில.. இப்ப யார பார்க்கப் போற”
“ம்ம்.. என்னை வளர்த்தவங்க அக்கா..இத்தனை நாள் வெளியூர் போயிருந்தாங்க.. இப்ப ஊருக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணினாங்க.. நான் போயிட்டு வரேன் அக்கா.. சிம்மன் சார்கிட்ட சொல்ல வேண்டாம்.. அவருக்கு எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு தெரிஞ்சா இந்த வீட்ல என்னை இருக்க விடமாட்டாரு” என்று முல்லையிடம் அழுதுகொண்டே கெஞ்சி கேட்டாள்.
“அச்சோ என்னால சிம்மன் அண்ணாகிட்ட பொய் சொல்ல முடியாது வஞ்சி அண்ணாகிட்ட நான் பேசுறேன் நீ உண்மையை சொல்லிட்டு ஊருக்கு போ” என்று முல்லை, வஞ்சி சொல்வதை கேட்காமல் மறுத்தாள்.. முல்லை ஒருநாள் கூட சிம்மனிடம் பொய் பேசியது இல்லை..
“அக்கா.. அக்கா.. ப்ளீஸ்க்கா” என்று முல்லையிடம் கெஞ்சிக்கேட்டாள்.. ஒருமனதாக முல்லை சம்மதித்தாள்.
இனியா.. சிம்மனை தாஜா செய்து விளையாட கூட்டிச்சென்றது.. அஜயும், இனியாவும் சிம்மனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வர்மனின் பார்வை முல்லையை வட்ட மடித்துக்கொண்டேயிருந்தது.. முல்லை வர்மனை பார்த்து “ச்சு குழந்தைங்க இருக்காங்க” என்ன இப்படி ஆளை முழுங்கிவிடுவது போல பார்க்குறீங்க.. என்று வர்மனின் நெஞ்சில் சாய்ந்து கிசுகிசுக்க.
வர்மனோ “ஏய் உன்னை பார்க்கும்போது நாடி நரம்பெல்லாம் முறுக்குதுடி.. சீக்கிரம் பசங்களை தூங்க வைடி” என்று மோகமாக முல்லையிடம் கூறிய வர்மன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கண்காட்ட.
“ம்ம்.. உங்க பிள்ளை இனியா இருக்காளோ தூங்கவே மாட்டா.. ரொம்ப அடம் பிடிப்பா.. அவள தனியா என்னால சமாளிக்க முடியாது.. சிம்மன் அண்ணா மட்டும் இல்லைனா நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்.. இல்ல எங்கப்பா என்னை கூட்டிட்டு போய் என் வாழ்க்கையை அழிச்சிருப்பாரு.. அண்ணாக்கு நாம ஏதாவது நல்லது செய்யணும் வர்மன்” என்று கணவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க..
“ம்ம் செய்யணும்டி.. வஞ்சியை சிம்மன் விருப்புறான்.. ரெண்டுபேருக்கும் கல்யாணம் செய்து வைச்சி அவனையும் குடும்பஸ்தனாக ஆக்கிடணும்” என்று கூறியவன் முல்லையின் நெற்றியில் முத்தமிட்டான்.. குழந்தைகள் சிரிப்பு சத்தத்தை கேட்டு இருவரும் பிரிந்து அமர்ந்தனர்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு போக..
“இனியா சிம்மாகூட வரியா தூங்கலாம்” வர்மன் முல்லையுடன் தனிமையில் இருக்கட்டுமென்று நினைத்து கேட்க.. அஜய் சமத்து பையனாக தூங்கிவிடுவான் என்பதால் இனியாவை கூப்பிட
“நான் வரேன் சித்தா.. என்று சிம்மனிடம் தாவிய இனியா.. “ப்பா இங்க வாங்க” என்று வர்மனை கூப்பிட வர்மனுக்கு இனியாவை தன்னுடன் படுக்க வைக்க ஆசை.. “என்னடா சக்கரே என்றவன் இனியா பக்கம் போக.. வர்மன் கன்னத்தில் முத்தம் கொடுத்து.. சிம்மா தனியா இருக்கும்பா நான் சித்தா கூட இருக்கேன்” என்று பெரிய மனுசியாய் பேசியது..
“சரி இன்னிக்கு சித்தப்பா கூட தூங்கு.. நாளைக்கு அப்பா கூடத்தான் தூங்கணும் சக்கரே” என்று மகளை கொஞ்சி கன்னத்தில் முத்தம் கொடுத்து சிம்மனிடம் தூங்க அனுப்பி வைத்தான்.
அஜய் அறைக்குச் சென்றவுடன் வர்மனுடன் பேசிக்கொண்டே தூங்கிவிட்டான்.. சிம்மன் வர்மன் அறையில் குட்டி கட்டில் வாங்கி போட்டுவிட்டான்.. அஜய்யை தூக்கி குட்டி கட்டிலில் படுக்க வைத்து அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் உன் அப்பா காளிங்கன் ஆசை பட்டது போல உன்னை போலீஸ் ஆஃபீஸ்ர் ஆக்குவேண்டா தங்கம் என அஜய் நெற்றியில் முத்தமிட்டு கட்டிலுக்கு கொசுவலையை இறக்கிவிட்டான் வர்மன்..
முல்லை தலைநிறைய மல்லிகைப்பூவை வைத்து கட்டிலுக்கு வந்தாள்.. ஆனால் அவள் கழுத்தில் இன்னும் தாலி போடவில்லை.. வர்மன் கையால் போட்டு விடணும் என்று ஆசையாய் காத்திருந்தாள்.. முல்லை ரெடியாகி வரும் வரை கேஸ் பைலை பார்த்துக்கொண்டிருந்தான்.. முல்லை வந்ததும் வர்மன் வாட்ரோப்பில் பைலை வைக்க போக தாலிச்செயினும் மெட்டியும் அவன் கையில் அகப்பட.. இரண்டையும் கையில் எடுத்து வந்து முல்லையின் முன் தாலிசெயினை கொண்டு வர.. முல்லை கண்ணில் கண்ணீர் வெளியே வர பார்க்க..
“ம்ஹும்” அழக்கூடாது என்று தலையசைத்து அவள் கழுத்தில் மாங்கல்யத்தை போட்டுவிட்டான்.. “வர்மா தாலியை கழட்டும்போது என் உயிர் போயிடுச்சுடா” என்றவளின் குரலில் அத்துனை வலி நிரம்பி இருந்தது..
“சரிடி அழாத நான்தான் வந்துட்டேன்ல” என்று அப்படியே முல்லையை இருகைகளால் தூக்கியவன் மெல்ல கட்டிலில் படுக்க வைத்து அவளது காலை பிடிக்க.. “அச்சோ என்னங்க இது என் காலை பிடிக்கிறீங்க” என்று அவள் சங்கடப்பட்டு நெளிய..
“ஏய் மெட்டி போட்டுவிடுறேன் பப்ளி” என்று அவளது கால் விரல்களை பதமாக பிடித்து காதலுடன் முத்து வைத்த மெட்டியை மாட்டிவிட்டு மெட்டியிட்ட விரலுக்கு முத்தம் கொடுத்தான்.. அவளது உடல் சிலிர்த்து அடங்கியது.. அவளது கண்ணை ஆசையுடன் தாபத்துடன் பார்த்தபடி கட்டிலுக்கு வந்தவன்.. ஒரு முறை பக்கத்தில் படுத்திருக்கும் அஜயின் மீது படிந்தது.. அவன் இடையில எழும்ப மாட்டான்.. இனியா போல இவன் வாலு கிடையாது குட் பாய் என்றவள் பக்கத்திலிருந்த லைட்டை அணைத்துவிட்டு வர்மனின் மார்பில் தலைசாய்த்து.. “டேய் வர்மா எத்தனை நாளாச்சு இப்படி உன் மார்பில சாய்ந்து படுத்து” என்று அவனது படிக்கட்டு தேகத்தில் முத்தம் கொடுக்க.. அஜய் திடீரென எழுந்தால் தப்பாய் போகும் என்று எண்ணிய வர்மன் கட்டிலுக்கு இடையேயுள்ள ஸ்கிரினை இழுத்து விட்டான்..
“முல்லை” என்று தாபமாய் அவளது கூந்தலில் வைத்திருந்த பூவின் வாசத்தை நுகர்ந்தபடி கூந்தல் காட்டில் முகம் புதைத்து அவளது முகத்தை விரலால் கோடு இழுத்து அவளது கீழ் இதழை விரலால் பிடித்து இழுத்து நசுக்கி “இது என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது” என்று கூறியவன் அடுத்த நொடியே இதழ் ரேகை அழியும் அளவிற்கு முத்தமிடத் துவங்கினான்.. முத்தமிட்டுக்கொண்டே அவன் கைகள் அவளது தேகத்தில் அலைபாய விட்டான்.. கைகளை போன இடமெல்லாம் இதழ்களும் சென்றது.. “ரொம்ப அழகா இருக்கடி” என்றவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன் இப்போதும் கூட அவளை முழுதாக எடுத்துக்கொள்ள கண்களால் சம்மதம் கேட்டான்..
“ம்ம்.. என்று கண் மூடி சம்மதம் தெரிவிக்க அப்படியே அவளுள் மூழ்கி முத்தாடி அவளை களைத்து போக வைத்தான்.. கூடல் முடிந்து அவளை அள்ளி எடுத்து மார்பில் போட்டுக்கொண்டவன்.. “பப்ளி நாளை முதல் நான் கேஸ் விசயமா பிஸியா இருப்பேன்.. உன்னை கண்டுக்க முடியாது.. சோ இன்னிக்கு உன்கிட்ட தேடிக்கிட்டே இருக்கணும்னு தோணுது” என்று பெண்ணவளை அள்ளி அணைக்க.. அவளும் அமுத சுரபியாய் அள்ளி கொடுக்க வர்மனும் அவள் கொடுக்கும் இன்பத்தில் சுகித்து போனான்.. விடியும் வரை இருவரும் சத்தம் இல்லாமல் மன்மதயுத்தம் நடத்தினர்.. இந்த கட்டில் போரில் தோற்றும் வென்றும் இருந்தனர்.
Современные решения мультимедийной интеграции: стиль и функциональность
мультимедийная интеграция [url=http://multimediynaya-integratsiya1.ru]http://multimediynaya-integratsiya1.ru[/url] .
super sis
Оснащение переговорной комнаты: надёжные решения для вашего бизнеса
оснащение переговорных комнат под ключ [url=https://osnaschenie-peregovornoy-komnaty1.ru/]https://osnaschenie-peregovornoy-komnaty1.ru/[/url] .
Профессиональное оснащение актового зала: оборудование для выступлений и концертов
звуковое оборудование для актового зала школы [url=https://oborudovaniye-aktovyh-zalov1.ru]https://oborudovaniye-aktovyh-zalov1.ru[/url] .