ATM Tamil Romantic Novels

யாராலும் உன்னதே 3

யாயாவும்‌ 3

 

ஜிஷ்ணு தன் எதிரே அவனின் சிறுவயதை அப்படியே உரித்து வைத்தது போல இருந்த பாலகனை தான் கண் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

 

“எப்புறா??” நம்ப இயலாமல் பார்த்திருந்தான்.

 

ஆனால்.. நம்பி தான் ஆக வேண்டும் என்பது போல இருந்தது அச்சிறுவனின் பிரசன்னம்..!

 

இத்தனை துல்லியமாக ஜிஷ்ணு அவனின்‌ சிறுவயதை ஞாபகம் வைத்திருப்பதற்கு காரணம் இதே வயதில், ஜிஷ்ணுவை ராஜா உடையில் புகைப்படம் எடுத்து அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார் பைரவி அவர்களது ஹைதராபாத் மாளிகையில்..! அவர் ஒரு புகழ்ச்சி பிரியர்.‌.! 

 

அதே போல ஒரு புகைப்படம் இங்கே பெங்களூரிலுள்ள அவனின் வீட்டு ஹாலில் இன்றும் இருக்கிறது.

 

அந்த புகைப்படத்தில் இருந்த உருவம் எழுந்து வந்து நவ நாகரீக உடை அணிந்து அவன் முன் நின்றது போல உணர்ந்தவன் “ரே அஸ்வத்.. ஏமிரா இதி?” என்று‌ வியப்பு அகலாமல் வினவ..

 

அஸ்வத் ஜிஷ்ணுவின் உறவினன் தான். இருப்பினும் சிறு வயது முதல் இருவரும் சேர்ந்து வளர்ந்ததில்லை.‌ ஆனால் இப்பொழுது ஜிஷ்ணு பெங்களூரில் இருக்கும் அதே வீட்டில் தான் அஸ்வத்தும் தங்கி இருக்கிறான்.

 

அவ்வப்போது ஜிஷ்ணுவின் புகைப்படத்தை பார்த்து “உங்க தாத்தா உங்களுக்கு சரியான பெயர் தான் அண்ணைய்யா வைத்திருக்கிறார். அச்சு அசல் ராஜா தான் நீங்க போங்க..!” என்று அடிக்கடி பாராட்டி புகழ்வான். இப்போது அவனுமே உறைந்த பனியில் நின்றது போல தான் இருந்தான். 

 

ஆனால் ஜிஷ்ணு மற்றவர்கள் முன் எதுவும் காட்டிக் கொள்ளாமல் “எஸ் அர்ச்சனா..!” என்றதும்,

 

“சார்.. இந்த பையன் தான். பையன் சின்ன வயசு தான் பட் ரொம்ப சமர்த்து. எந்த டிஸ்டர்பும் பண்ணல.. அவங்க அம்மா இண்டர்வியூ முடியுற வரைக்கும் வெயிட்டிங் ரூம்ல அமைதியா தான் இருந்தான். இப்போ ஜாயினிங் ப்ராசஸ் முடிஞ்சதும் அம்மாவை தேடிட்டே இருந்தான். அப்பதான் இவன் அம்மா மயக்கம் போட்டாங்கன்னு நியூஸ்..‌” என்று கையை பிசைந்தப்படி ஜிஷ்ணுவை பார்த்தாள்.

 

அதிலிருந்து அவ்விஷயத்தை அவள் தான் கூறியிருக்கிறாள் என்பதை புரிந்தவன், அவளை கூர்ந்து முறைத்து பார்க்க “சாரி சார்..!” என்று நெளிந்தாள் அவள்.

 

“இட்ஸ் ஓகே..! இவனுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாங்க..” என்று அவளை பணித்தான். 

 

“சூர் சார்..!” என்று திரும்பி புன்னகை முகத்தோடு அங்கே நின்றிருந்த பாலகனை பார்த்தவள், “சோ சார்மிங் பாய்‌..!” என்று அவன் முன் உச்சி முடியை கலைத்து செல்ல.. 

 

பட்டென்று அவளது கையை தட்டிவிட்டவன்‌ “டோண்ட் டச் மீ..!” என்றான் முறைப்போடு..!

 

“ம்மா.. வேர் இஸ் மை மாம்?” பெரிய மனித தோரணையோடு நெற்றி சுருங்க தன் எதிரே நின்றிருந்த இருவரையும் பார்த்து கேட்டான் அந்த பாலகன். 

 

“பார்றா..!” என்று வியந்த ஜிஷ்ணு அவனின் உயரத்திற்கு குனிந்து..  

 

“உன் மாம்.. சோ வீக்..! அதான் தொப்புன்னு மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க” என்றான்‌ உதட்டை பிதுக்கி ஆங்கிலத்தில். ஜிஷ்ணுவின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் இங்கே பெங்களூர் வாசத்தில் கன்னடமும் அத்துப்படி..!

 

மற்றப்படி இந்த குட்டி குண்டான் என்ன மொழி பேசுவான் என்று தெரியவில்லையே..!

 

“நோ..!! மை மாம் சோ ஸ்ட்ராங்..! யு லையர்” என்று கோபமாக அவனும் பதிலடி கொடுக்க..

 

“ஆஹான்..! சீ யுவர் மாம்.. ஷி இஸ் சோ வீக்” என்றவன் நகர்ந்து அங்கே பெட்டில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளை காட்ட… எக்கி பார்த்தவன் அன்னை கண்டு கலங்கினான். அடுத்த நொடி..

 

“ம்மா..” என்று பாய்ந்து ஓடினான் அன்னையிடம், தாயை பிரிந்த கன்று தாய் பசுவை கண்டது போல வேகமாக..!

 

“ம்மா.. ம்மா..” என்று அவளது கன்னங்களை தட்ட.. அப்போதும் விழிக்காமல் இருந்த அன்னையை‌ கண்டு பயம் பீடித்துக் கொண்டது பாலகனுக்கு. என்னத்தான் சமர்த்தான.. வயதுக்கு மீறிய முதுர்ச்சி இருந்தாலும் சிறுவன் தானே.. அன்னையை இப்படி மூச்சு பேச்சில்லாமல் பார்த்ததும் அரண்டவன், இடைவிடாமல் “ம்மா.. ம்மா..” அவளது கன்னத்தில் தட்டி இடைவிடாமல் கலங்கிய குரலில் அழைத்துக் கொண்டே இருந்தான். 

 

ம்ஹீம்.. அவன் அன்னையோ எதற்கும் பதிலளிக்கவில்லை. ஆழ்ந்த மயக்கம் கலந்த உறக்கம்..! விழித்திருந்தால் தன் கண்ணனை இப்படி அழவிட்டுயிருக்க மாட்டாளே..!

 

இதுவரை அவனின் பெரிய மனித தோரணையில் ஈர்த்த ஜிஷ்ணு இப்போது அவனது அழுகையை கண்டு “ஓஹ் நோ பாய்..! யுவர் மாம் கெட் வெல் சூன்..!” என்று சமாதானப் படுத்த முயன்றான். அவனை திரும்பி கூட பார்க்கவில்லை இவன்.

 

“என்னா அடம்..! என்னா அழுத்தம்..!” என்று அவனை வியந்து பார்த்தான் ஜிஷ்ணு.

 

அப்போது அங்கிருந்த செவிலியர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதாக ஜிஷ்ணுவிடம் கூறி, அப்பாலகனை நெருங்கியவர்,

 

“உங்க அம்மா.. கொஞ்சம் ஓய்வு எடுக்கணும். ஓய்வு எடுத்தா நல்லா ஆகிடுவாங்க” என்று கன்னடத்தில் உரைக்க.. அவன் புரியாமல் விழிக்க..

 

“அண்ணைய்யா.. அந்த பையனுக்கு கன்னடமும் தெரியல..” என்று கிசுகிசுத்தான்‌ ஜிஷ்ணுவின் காதில் அஸ்வத். 

 

‘இப்ப இது ரொம்ப முக்கியமா?’ என்றபடி அவனை திரும்பி முறைத்தான் ஜிஷ்ணு.

 

பின் அந்த செவிலியர் அதையே ஆங்கிலத்தில் உரைக்க அம்மாவின் கன்னத்தை தனது பிஞ்சு கரத்தால் வருடியவன், ஆரணியின் கன்னத்தில் மென்மையாக முத்தம் கொடுத்து “ம்மா.. நான் சமத்தா வெயிட் பண்றமா. சீக்கிரம் வேக் அப் ஆகு ம்மா” என்று மெல்லிய குரலில் அவள் காதில் உரைத்தவன், அவளுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

 

அப்போது செவிலியரிடம் ஜிஷ்ணு கண்ணை காட்டி, அவனை அப்பெண்ணிடம் இருந்து தள்ளி அமர வையுங்கள் என்றான்.

 

“உன் அம்மா கொஞ்சம் வீக்கா இருக்காங்க கண்ணா. தூங்கி எழுந்ததும் நல்லாகிடுவாங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது. இங்க வாயேன்.. இங்கே டிவி கூட இருக்கு நான் உனக்கு கார்ட்டூன் போட்டு விடுறேன்.. வா கண்ணா..” என்று நயமாக பேசி அவனை அங்கிருந்த பௌவுச்சில் அமர வைத்து அவனுக்கு பிடித்த கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுவிட்டாள் அந்த செவிலியர். 

 

அவனிடம் ரிமோட்டையும் கொடுத்து “வால்யூம் அதிகம் வச்சு டிஸ்டர்ப் பண்ண கூடாது. அம்மா நல்லா தூங்கட்டும். உனக்கு வேற சேனல் பிடிக்கும்னா மாத்திக்கோ..!” என்று அன்பாக கூறி‌ கையில் கொடுக்க ஒரு தலையசைப்போடு ரிமோட்டை வாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ஜிஷ்ணுவையோ அஸ்வத்தையோ கிஞ்சிற்றும் கண்டு கொண்டான் இல்லை.

 

ஜிஷ்ணு அவனை தான் அவதானித்தான். அவனிடம்

கடல் போல ஆழ்ந்த அமைதி. கூடவே அலட்டல் இல்லை புது இடத்தில் அம்மா தன்னை விட்டு விட்டு இப்படி படுத்து இருக்கிறாளே என்ற பயம் எதுவுமே இல்லை..!

 

அமைதியாக அந்த சூழ்நிலையை உள்வாங்கி அதற்கு தக்க போல் நடக்கும் இந்த ஐந்து வயது பாலகனை கண்டு அதிசயத்து தான் போனான் ஜிஷ்ணு.

 

உண்மையில் தான் இந்த வயதில் இவ்வளவு பொறுப்புணர்வோடு இருந்திருப்போமா என்று கேட்டால் வாய்ப்பே இல்லை..!

 

“இவனுக்கு வாலு ஒன்னு தான் டா இல்லை பாலா..” 

 

“இவனுக்கு ஏன்டா ஜிஷ்ணுனு அர்ஜுன் பெயர வச்ச? மாருதினு அந்த ஆஞ்சநேயர் பெயரை வைத்திருக்கலாம் தானே?” என்று அவனின் தந்தையிடம் கேட்காதவர் கிடையாது.

 

ஒரு நிமிடம் கடந்த பழைய நிகழ்வுகளை நினைத்து தலையை உலுக்கி கொண்டவன், இப்பொழுது அந்த குட்டி குண்டானை தான் குறுகுறுவென்று பார்த்தான்.

 

இருவருக்கும் உருவம் மட்டுமே ஒற்றுமை..! மற்றப்படி ஆர்ப்பரிக்கும் அலை அடிக்கும் கடலுக்கும்.. அலைகள் இல்லா அமைதியான ஆழ் கடலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருவருக்கும்.

 

“என்ன நடந்திருக்கும்? இந்த கதையில் எல்லாம் வர்ற மாதிரி போதையில தப்பா நடந்திருப்பேனா? இல்லை இந்த கே டிராமாவுல காட்டுறானுங்களே லாஜிக்கே இல்லாம ஒன் நைட் ஸ்ட்ராண்ட் மூலமா ஒரு டஜன் புள்ளைங்க பொறக்குறது போல… அது போல நடந்திருக்குமா?? ஒன்னுமே புரியலையே??” என்று தனக்கு எதிரே சின்ன பௌச்சில் அமர்ந்து தன்னை குறுகுறுவென பார்க்கும் அந்த குட்டி குண்டானை தான் வெறித்து பார்த்தான் ஜிஷ்ணு..!!

 

“ரே அஸ்வத்.‌.. ஏம் ஜரிகேரி உந்தேதி? (என்ன டா நடந்திருக்கும்?)” என்று புலம்பலோடு கேட்க..

 

ஜிஷ்ணுவுக்கு அருகில் அமர்ந்து “அண்ணையா.. மூக்கு முழி அன்ட நீவே..!” என்று இருவரையும் டேபிள் டென்னிஸ் பார்ப்பது போல மாறி மாறி பார்த்து இருவருக்கும் இருக்கும் ஆறு ஒற்றுமைகளை கணக்கெடுத்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணுவின் பிஏ அஸ்வத்.

 

“ரே.. குட்டி குண்டான்.. நீ பேரு ஏமிட்டி?” என்று ஜிஷ்ணு அவனை கேட்க..

 

அந்த ஐந்து வயது பாலகனோ இவர்கள் இருவரையும் ஒரு பொருட்டு கூட மதிக்காது, எதிரே இருந்த தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த நருடோவை வெகு தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“கொஞ்சம் அத்தனு கௌரவிஸ்தாடா?” (கொஞ்சமாச்சும் அவன் மதிக்கிறானாடா?) என்று ஜிஷ்ணு அஸ்வத்திடம் எகிற..

 

“அண்ணையா.. இப்பட பூர்தி நம்பக்கண்டு உண்டானு? (இப்ப தான் அண்ணே முழுசா நம்பிக்கை வருது) என்றான் அஸ்வத்.

 

“ஏமிட்டி?”

 

“இ சின்ன பிள்ளவாடு நீ கொடுக்கு” (இந்த சின்ன புள்ள உங்க பையன் தான் என்கிறதுல) என்றவனை பார்த்து முறைத்தான் ஜிஷ்ணு..!

 

“அறிவிருக்கா டா உனக்கு? என்ன பேச்சு பேசுற? நான் வெர்ஜின் டா..!” என்றவனை நம்பாமல் பார்த்தான் அஸ்வத்.

 

இருவரும் தங்களை ஒருவன் பார்க்கிறான் என்பதை மறந்து விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க.. 

 

“கோ அவுட் அண்ட் டிஸ்கஸ்.. டோண்ட் டிஸ்டர்ப் மை மாம்” என்று முகத்தை மட்டும் திருப்பி இருவரையும் பார்த்து பேசியவன் மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கி விட்டான்.

 

“நான் சொன்னேன்ல..” என்று நமட்டு சிரிப்போடு அஸ்வத் ஜிஷ்ணுவை பார்க்க…

 

ஜிஷ்ணுவோ அந்த அறையின் ஓரத்தில் சிலைன் கையில் ஏறிக் கொண்டிருக்க.. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளைத் தான் கூர்ந்து பார்த்தான்.

 

இவளையும் இதற்கு முன் எங்கேயும் பார்த்ததாக கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. அப்புறம் எப்படி இந்த குட்டி குண்டான்?? என்று யோசித்தான்.

 

முதலில் அவள் கண் விழிக்கட்டும் என்று‌ எண்ணியவன் செவிலியரை அழைத்து அவளை‌ பார்த்துக்க சொன்னான். அப்போது அர்ச்சனா பையனுக்கு ஸ்நாக்ஸ் அடங்கிய ப்ளேட்டை கொண்டு வந்து தர…

அதனை சாப்பிட மறுத்தான் அவன்.

 

அர்ச்சனா இப்போது ஜிஷ்ணுவை பார்த்து என்ன செய்வது என்று கேட்க..

 

“ஆர் யூ நாட் ஹன்கிரி?” என்று கேட்ட ஜிஷ்ணுவை பார்த்தவன், “ஐ ஹேவ்..” என்று அவனுடைய‌ குட்டி பேக்கை காட்டியவன் அன்னையை திரும்பி ஏக்கமாக ஒரு‌ பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தொலைகாட்சியில் கவனம் பதித்தான்.

 

அடுத்து வந்த பத்து நிமிடத்தில் அன்னையை‌ பார்ப்பதும் திரும்பி தொலைக்காட்சியை பார்ப்பதுமாக இருந்தவனை கண்டு இரக்கம் சுரந்தது ஜிஷ்ணுவுக்கு‌.

 

“நாம இருந்தா இவன் சாப்பிட மாட்டேன்.. வா..” என்று அஸ்வத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் ஜிஷ்ணு.

 

நேரமோ மதியம் கடந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. எதுவும் சாப்பிடாமல் இருக்கையில் இடமிருந்து வலமாக ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருந்தான் ஜிஷ்ணு. அவனை தொந்தரவு செய்யாமல் ஆனால் குறுகுறுப்பாக அவனை பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வத்.

 

ஒரு கட்டத்தில் மேல் அஸ்வத்தின் பார்வை வீச்சை தாங்காமல் கையில் இருந்த பேப்பர் வயிட்டை எடுத்து அவன் மீது தூக்கி எறிந்தான் ஜிஷ்ணு. 

 

“என்ன அண்ணைய்யா.. இப்படி பொசுக்கென்னு தூக்கி போடுறீங்க? படாத இடத்துல பட்டா என்ன பண்றது? என் நிலைமை என்ன? எனக்குனு ஒரு வாரிசு கூட இல்ல..! உங்களுக்காவது பரவாயில்லை..!” என்று கண்ணடித்து சிரித்தபடி ஜிஷ்ணு தூக்கி போட்ட பேப்பர் வெயிட்டை லாவகமாக பிடித்தான்‌ அஸ்வத்.

 

“என்கிட்ட நெஜமா மிதி வாங்குவ டா..” என்று‌ எரிந்து விழுந்தான் ஜிஷ்ணு.

 

“அண்ணைய்யா??” என்று மெதுவாக அழைத்தான்‌ அஸ்வத்..

 

“நெஜமா ஒண்ணுமே புரியலடா.. அந்த பொண்ணு யாரு என்னென்னு ஒன்னும் புரியல.. இந்த பையன் யாரு? இவ யாரு? நினைக்க நினைக்க எனக்கு மண்டை வெடிக்குது” என்று தலையை பிடித்துக் கொண்டான் ஜிஷ்ணு.

 

“எல்லாரும் சீக்கிரம் சரியாகும். எல்லாம் நமக்கு தெரிஞ்சிருந்தானே? நீங்க மொதல்ல சாப்பிடுங்க.. பசியில் இருக்கிற வயிறு கண்டபடி யோசிக்கும்” என்ற அஸ்வத் அவன் தனது வயிற்றை தடவிக் கொள்ள..

 

“வயிறு எப்படி டா யோசிக்கும் மடையா??” என்று ஜிஷ்ணுவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது. தன்னால் அவனும் பட்டினியாக இருக்கிறான் என்பதை கண்டு அவன் மீது அன்பு சுரந்தது.

 

பட்டினி எதற்கும் தீர்வில்லை என்பதை இத்தனை வருட அனுபவத்தில் புரிந்து கொண்டவன், உணவினை இருவருக்கும் வரவழைத்தான். இருவரும் மாலை நேரத்தில்தான் மதிய உணவை முடித்தனர்.

 

அப்போது அர்ச்சனா வந்து “சார்.. ஆரணி வெண்பா முழிச்சிட்டாங்க..!” என்றதும் இருவரும் பரபரப்பாக அவர் இருந்த அறையை நோக்கி ஓடினர்.

 

“ஆரவ் கண்ணா.. மம்மாஸ் பாய்.. என் சமர்த்து குட்டி.. என் சக்கர கட்டி” என்ற இளம் பெண்ணின் கொஞ்சல் குரல் கேட்க..

 

சமைந்து அப்படியே நின்றான் ஜிஷ்ணு.

 

“இக்குரல்.. இக்கொஞ்ச

ல்.. அன்று ஏர்போர்ட்டில் கேட்டது அல்லவா?” என்று யோசித்தப்படி அவ்வறையை நோக்கி அழுத்தமான அடிகளை எடுத்து வைத்தான் ஜிஷ்ணு.

 

தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “யாராலும் உன்னதே 3”

  1. Современные технологии для оснащения ситуационного центра вашего офиса
    оборудование ситуационных центров [url=http://osnascheniye-situatsionnogo-tsentra1.ru/]http://osnascheniye-situatsionnogo-tsentra1.ru/[/url] .

Leave a Reply to osnashcheniye_situatsionnogo_tsentra_gyEr Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top