ATM Tamil Romantic Novels

28 மோக முத்தாடு அசுரா

28 மோக முத்தாடு அசுரா

வஞ்சிக்கொடி, சிம்மனையே நினைத்துக்கொண்டிருந்தவள்  இரவு வெகுநேரம்துங்காமல்  கண்விழித்திருந்தாள்.. காலை வேளையில் அசந்து தூங்கிவிட நேரம் கழித்துதான் எழுந்தாள்.. எழும்பும் போது அவளுக்கு மயக்கம் வருவது போலிருக்க.. தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.. வயிறு வேறு பசியெடுக்க ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமென்று  அவளுக்கும் தோன்ற மெல்ல எழுந்து வாஷ்ரூம் சென்றவள் முகம் கழுவி பல்துலக்க அப்படியே குமட்டிக்கொண்டு வந்தது.. வாந்தியும் எடுத்துவிட்டாள்.. தலை வேறு கிறுகிறுவென்று சுற்ற… கீழே விழுந்து விடுவோமா என்று பயந்தவள் பக்கவாட்டிலிருந்த சுவற்றை பிடித்து கொண்டு நிற்க.. அவளால் நிற்கவே முடியவில்லை.. சித்திஇஇ என்று கூப்பிட கூட அவளுக்கு உடலில் தெம்பு இல்லை பென்னவளுக்கு அப்படியே மயங்கிச் சரித்தாள்..

சித்தார்த் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.. சமையல் கட்டில் வேலையாக இருந்த சாந்தி “சித்து அக்கா எழுந்துட்டாளா பாரு.. எழுந்துட்டானா.. இந்தா அப்படியே இந்த பாலை அக்காகிட்ட கொடுத்துட்டு வா.. நான் உனக்கு லன்ஞ் பேக் பண்ணுறேன்” என்று சொல்லியபடி பாலை கொண்டு வந்து சித்தார்த்திடம் கொடுக்க.. அவனும் பாலை வாங்கிக்கொண்டு வஞ்சி அறைக்குள் சென்றான்.

கொஞ்சநேரம் முன்னே தான் சாந்தி, வஞ்சியை போய் பார்க்க.. அவள் அசந்து தூங்குவதை பார்த்து பாவம்  புள்ளத்தாச்சி பொண்ணு ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சத்தம் போடாமல் வெளியே வந்திருந்தார்.. இப்படி மயக்கம் போட்டுவிழுவாள் என்று சாந்தியும் நினைக்கவில்லை.

“வஞ்சி அக்கா” என்று அவள் பெயரை ஏலம் விட்டுக்கொண்டே உள்ள சென்ற சித்தார்த் படுக்கையில் அவளைக் காணாது குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்க.. ஓ.. அக்கா பாத்ரூம்ல இருக்கா.. “அக்கா பால் டேபிள்ல வச்சிருக்கேன் எடுத்து குடி” என்று சொல்லிவிட்டு வெளியே போக.. அவன் கால்கள் நின்றது.. அக்கா ஏன் பேசல.. நான் பால் வச்சிருக்கேன் சொன்னே.. ம்ம்” வைச்சுட்டு போன்னு சொல்லுமே என்று சந்தேகம் வந்தது சித்தார்த்துக்கு.. நல்லவேளை வஞ்சி குளியலறைக்கதவை லாக் போடவில்லை.. சும்மா மூடி வைத்திருந்தாள்.

“அக்கா என்ன பண்ணுற இன்னும் வெளிய வரல” என்று கதவை மெல்ல தட்ட கதவு தானாக திறக்க.. வஞ்சி கீழே விழுந்து கிடந்தாள்.. “அச்சோ அம்மாஆஆஆ இங்க சீக்கிரம் வாயேன் அக்கா கீழ விழுந்துடுச்சு” என்று சித்தார்த் சத்தம் போட.. லன்ச் பேக் செய்து ஹாலுக்கு வந்த சாந்திக்கு, சித்து கத்துவது அவர்  காதுக்கு கேட்க..

“என்னாச்சு” என்று பதறிக்கொண்டு வஞ்சி அறைக்குள் ஓடிப்பார்க்க வாஷ்ரூம் போய் பார்க்க வஞ்சி கீழே விழுந்து கிடந்தாள்..

அச்சோ புள்ள இப்படி விழுந்துட்டாளே.. நான் என்ன பண்ணுவேன்.. குழந்தைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதுகடவுளே.. என்று கவலைப்பட்ட சாந்தி குளியலறையிலிருந்து வஞ்சியை மெதுவாக தூங்கிட்டு வந்தார்.. சித்தார்த் பக்கத்துவீட்டு பெண்ணை ஓடி கூட்டுக்கொண்டு வர அவர்கள் உதவியுடன் காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுச் செல்ல.. வஞ்சியை செக் பண்ணிய டியூட்டி டாக்டர்  “ஸ்கேன் பண்ணனும் பெரிய டாக்டர் வரணும் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி சென்று விட சாந்தி பயந்துவிட்டார்..

ஸ்கேன் அறைக்கு முன்னே கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்த சாந்தி அச்சோ நேத்து வந்த பொண்ணுக்கிட்ட போன் நம்பர் கூட கேட்கலையே இப்போ அவங்ககிட்ட தகவல் சொல்லணுமே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்க.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தார்த்.. “அம்மா, அக்கா மயக்கம் போட்டுச்சு.. என்னாச்சு அக்காவுக்கு” என்று அழுக..

“அக்காக்கு ஒண்ணும்  ஆகாதுடா.. நீ அழாத.. அக்கா போன் எங்க வச்சாளோ தெரியலையே.. இப்ப அவங்களுக்கு நான் எப்படி போன் பண்ணுவேன்” என்று சாந்தி வருத்தப்பட..

“அம்மா அக்கா போன் பேக்ல இருக்கு” என்றான்.. நல்லவேளை வஞ்சியின் பேக்கை எடுத்து வந்திருந்தார் சாந்தி.

பேக்கை  செய்து பார்க்க அதில் அவளது போன் இருக்க.. போனை கையில் எடுத்து ஆன்செய்ய சிம்மனும், வஞ்சியும்  கன்னத்தோடு கன்னம் தொட்டு இருக்கும் படம் வர.. “ஓ.. இந்தப் பையனா? கூடத்தான் பழகி இருக்காளா வஞ்சி” என்று அதிர்ந்துதான் போனார் சாந்தி..

சிம்மன், ஆறுமுகம் ஒரு என்கவுண்டர் பண்ணும் சமயத்தில்.. சிம்மன் அங்கே சென்றவன்.. எதிர்பாரா வண்ணம் ஆறுமுகத்தை சுட்டுவிட்டான்.. ரவுடிகள் சுட்டதில் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்று நம்பிவிட்டனர்.. ஆறுமுகத்தின் பாடியை கொடுக்கும்போது சாந்தியை பார்த்தான் சிம்மன்.. சாந்தியின் சாந்த முகமும்.. அவரது முகத்தில் தெரிந்த வேதனையும் பார்த்தவன் மனம் நொடிந்து போய் விட்டான்.. ஒருவாரம் கழித்து ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றவன் சாந்தியிடம் ஆறுமுகம் சாருக்கு வேண்டியவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன்

“உங்களை இந்த நிலையில்  பார்க்க வருத்தமாயிருக்கு” என்றதும்

என் கணவர் செய்த தவறுக்கு தான் தண்டனை கிடைச்சிருக்கு..அவர் எல்லா ட்ரைனிங் போலீஸ் கிட்டயும் காசு வாங்குவது தப்புனு நான் எவ்ளோ தடவை சொல்லி இருக்கேன் .. உனக்கு ஒன்னும் தெரியாது என்று  மிரட்டிவிட்டார்..

“அவர் போகணும்னு விதி இருக்கு.. என்ன பண்ணுவது தம்பி” என்று சாந்தியும் அழுது விட்டார்.

அவர் கண்ணீரை காணமுடியாதவன் ஒரு பொண்ணோட பூவும் போட்டும் அழிக்க நான் காரணமா இருந்திருக்கேன் என்று வருத்தம் பட்டு அவருக்கு என்னால ஆனா உதவியை செய்யணும் என மனதில் எண்ணியவன்  “உங்களுக்கு எதாவது உதவி வேணும்னா சொல்லுங்க செய்யுறேன்.. எந்த நேரத்திலும் எனக்கு போன் பண்ணுங்க என்று தனது நம்பரை சாந்தியிடம் கொடுத்தான்..

“ரொம்ப நன்றி தம்பி.. எனக்கு உதவினா கூப்பிடுறேன்” என்று சொல்லியிருந்தார்.. சாந்திக்கு பணத்தேவை இருக்கவில்லை.. அதனால் சிம்மனையும் சாந்தி அழைக்கவில்லை.. இருந்தாலும் ஆறுமுகம் குடும்பத்துக்கு டிபார்ட்மெண்டிலிருந்து சேரவேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்க செய்தான் சிம்மன்.

இரவில் சிம்மன் நம்பருக்கு போன் செய்து பார்த்திருந்தாள்.. அந்த நெம்பர் முன்னால் இருக்க சாந்தி அந்த நம்பருக்கு போன் போட சிம்மன் எடுத்துவிட்டான்.. சிம்மனிடம், சாந்தி.. வஞ்சி மயங்கியதை கூற..பாதி சாப்பாட்டிலே எழுந்து வந்திருந்தான் ஹாஸ்பிட்டலுக்கு.

“இந்த முரட்டு பயல் ஹாஸ்பிட்டலுக்கு போனா வஞ்சியை ஏதாவது செய்தாலும் செய்துவிடுவான் முல்லை.. நான் முன்னே ஹாஸ்பிட்டல் போறேன்.. நீ பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு ஹாஸ்பிட்டல் வந்துடு” என்று கூறியவன் கார் கீயை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்குச் சென்றான்.

ஹாஸ்பிட்டலுக்கு அடங்காத கோவத்துடன் நுழைந்த சிம்மன் ரிசப்சனில் சென்று வஞ்சிக்கொடின்னு பேசன்ட் இங்க வந்திருக்காங்க அவங்க எந்த ரூம்ல இருக்காங்க” என்று கேட்க. 

“அவங்க ஸ்கேன் ரூம்ல இருக்காங்க போய் பாருங்க” என்று சிம்மனிடம் கூற.

“வரேன்டி” என்று சர்ட்டை மடக்கி விட்டவன் ஸ்கேன் ரூமை நோக்கி வேக எட்டு வைத்துச் சென்றான்.. அங்கே சாந்தி வியர்த்து விறுவிறுக்க சேலை முந்தானையில் முகத்தை துடைத்தபடி அமர்ந்திருந்தார்.. சாந்தியை பார்த்ததும் அவனது கோபம் சிறிது மட்டுப்பட.. “என்னாச்சு.. அவ எங்க. என் குழந்தைய என்ன பண்ணினா” என கணீர்குரலில் சாந்தியிடம் கேட்டிக்கொண்டிருக்க.

வர்மனும் பின்னேயே வந்துவிட்டான்..

“தம்பி காலையில ரெஸ்ட்ரூம் போனா.. மயங்கி விழுந்துட்டா.. சித்து பார்த்துட்டு என்கிட்ட சொன்னதும் நான் அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டேன்.. இன்னும் வஞ்சி கண் முழிக்கல.. என்று சாந்தி கண்ணீர் விட்டார்.

“ம்ம்.. அவ கண்ணு முழிச்சா என்ன முழிக்காட்டி எனக்கென்ன என் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது  என்று பொறுமிக்கொண்டிருந்தான் சிம்மன்.

சித்தார்த்துக்கு.. சிம்மன், தாயிடம் கோவமாக பேசுவதை கண்டவனுக்கு சிம்மன் மேல் கோவம் வந்தது.. இவரு யாரு நம்ம அம்மாகிட்ட இப்படி கோவமாக பேசுறாரு என்று சிம்மன் மேல் வெறுப்பு வந்தது சிறுவனுக்கு..

வர்மன், சிம்மனின் கையை பிடித்து “பொறுமையாய் இருடா” என்று அவனை சமாதானப்படுத்த 

“டேய் பாருடா இந்த சிறுக்கி இன்னும் கண் முழிக்கலையாம்.. என் குழந்தைய ஏதோ பண்ணிட்டா போல.. குழந்தைக்கு ஏதாவது ஆகட்டும் அப்படியே கழுத்தை நெரிச்சு கொன்னு போடுறேன்” என்று அவனிடம் எகிறிக்கொண்டிருந்தான்.

பெரிய டாக்டர் வந்துவிட “என்ன இங்க கூச்சல்.. இது ஹாஸ்பிட்டல்.. சந்தக்கடையில்லை” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்த சிம்மனிடம் சத்தம் போட்டு விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்த நர்ஸ் “பேசண்டோட ஹஸ்பண்ட உள்ள வரச்சொல்றாங்க” என்று கூறியவர் உள்ளே சென்றுவிட அடுத்த நொடியே வேகமாக கதவு திறந்து உள்ளே சென்றான்.

டாக்டர் உள்ளே சென்றபோது வஞ்சிக்கு மயக்கம் தெளிந்து விட்டது.. ஸ்கேன் பண்ணிக்கொண்டிருக்க.. “டாக்டர் என் குழந்தை” என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க.. அவள் முகத்தில் தெரிந்த அச்சத்ததை பார்த்தவர்.. “கரு நல்லாயிருக்குமா.. பயப்படாதீங்க.. கரு நல்லா வளர டைம்ல மயக்கம் வரும்.. நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மென் சிரிப்புடன் ஸ்கேனிங் முடித்து அவளுக்கு டேபிளிலிருந்து இறங்க உதவி செய்தார்.

டாக்டர் அவரது சீட்டில் உட்கார.. வஞ்சி அவருக்கு எதிரே வந்து உட்கார்ந்தாள்.. பெண்ணவள் மனதில் என் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.. (ஏதாச்சும் ஆகியிருந்தது உன் உசிரை எடுத்திருப்பான் சிம்மன் தப்பிச்சிட்ட) என்று ஆனந்தப்பட்டுக்கொண்டு டாக்டர் அடுத்து என்ன சொல்வர்.. என்று காத்திருந்தாள் வஞ்சி.

கதவு திறந்த வந்த சிம்மன் டாக்டரை பார்த்தவன்.. “மேடம் என் குழந்தை எப்படியிருக்கு” என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க.

டாக்டரோ  “முதல உட்காருங்க சார்.. நீங்க என்ன வேலை செய்யுறீங்க.. பார்த்தா படிச்சவர் போல இருக்கீங்க வெளியே நின்று அப்டி சத்தம் போடுறீங்க.. என்று சிம்மனை கண்டித்து பேச

“நா.நான். போலீஸ் ஆபிசர்” என்று நெஞ்சை நிமிர்த்தி பட்டென்று பதில்சொல்ல..

“அதான் இத்தனை கோவம் பரபரப்பு உங்க முகத்தில தெரியுது”என்றவர் தண்ணீர் பாட்டிலை எடுத்து சிம்மன் கையில் கொடுக்க. அவனுக்கும் தண்ணீர் குடிக்க தோன்றியதால் வாங்கி குடித்தவன்..

“இப்ப சொல்லுங்க டாக்டர் என் குழந்தை எப்படியிருக்கு” ”என்றவன் மறந்தும் கூட வஞ்சியை பார்க்கவில்லை.. அப்படி ஒரு ஜீவன் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியாததுபோல டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“உங்க குழந்தை ஆரோக்கியமா வளருது சார்.. உங்க மனைவி மனசுதான் சரியில்லை போல.. அவங்க ஏதோ மனுசுக்குள்ள பாரம் வச்சிருக்காங்க போல தெரியுது.. அவங்க முகத்துல தெளிவு இல்ல.. கர்ப்பமாயிருக்குற நேரத்துல சந்தோசமா இருக்குனும்.. ஆனா இவங்க வந்ததிலிருந்து என் குழந்தை நல்லாயிருக்கா என்ற வார்த்தையை தவிர வேற எதுவும் பேச மாட்டேங்கிறாங்க என்று வஞ்சியை பார்த்தபடி சிம்மனிடம் பேசிக்கொண்டிருந்தார். எத்தனை பெண்ணகளுக்கு பிரவசம் பார்த்திருப்பார் அந்த மூத்த டாக்டர்.. வஞ்சியின் முகத்தை வைத்தே சரியாக கணித்து விட்டார் போலும்.

“சரிங்க டாக்டர் என் குழந்தையை நான் பார்த்துக்குறேன்” என்றதும் இந்த பதில் தான் வரும்னு நான் எதிர்பார்த்தேன்.. மாமா குழந்தைய தான பார்த்துக்குறேன்னு  சொல்றாரு.. என்னை இல்லையே என்றவளுக்கு முணுக்கென்று கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்ட வர.. முகத்தை வேறு பக்கம் திருப்பி கண்ணீரை துடைத்தவள் வெற்றுப்புன்னகையை சிந்தினாள்..

டாக்டர் மாத்திரை மருந்துகள் எழுதிக்கொடுத்து “அடுத்த முறை செக்கப் வந்திடுங்க” என்றதும் சிம்மன் மாத்திரை சீட்டை கையில் வாங்கிவிட்டு வஞ்சியின் முகம் கூட பார்க்காமல் எழுந்து கதவருகே போக..

“ஒரு நிமிசம் சார்” என்று டாக்டரின்  குரல் கேட்டு திரும்பியவன்

“சொல்லுங்க மேடம்” என நெற்றியைத் தேய்த்தான்.

29 மோக முத்தாடு அசுரா

“குழந்தை உண்டாயிருக்கற நேரத்துல கணவன் மனைவிகிட்ட சந்தோசமா இருக்கணும்.. நீங்க வந்ததிலிருந்து ஒருமுறை கூட உங்க வொய்ப்ப திரும்பி பார்க்கல.. ரெண்டு பேருக்கும் சண்டையாயிருக்கலாம் அது உங்க பர்சனல்.. ஏஸ் ஏ டாக்டரா சொல்றேன்.. கர்ப்பமாயிருக்கும் போது உங்க மனைவிகிட்ட பாசமா நடந்துக்குங்க.. அது உங்க குழந்தைக்கும் நல்லது.. உங்க வொய்ப் ஆரோக்கியத்துக்கும் நல்லது” என்று மருத்துவராக அவர் சிம்மனுக்கு அறிவுரை கூற..

“ஒ.கே டாக்டர்” என்று ஒற்றை வரியில் பதில் கூறி விட்டு கதவு திறந்து வெளியே வந்தான்.. சிம்மன் தலை மறைந்ததும் “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் நான் எதுவும் உங்க கிட்ட என் பிரச்சனையை சொல்லல.. என் முகத்தை வச்சே எனக்கு என்ன ப்ராப்ளம்னு கண்டுபிடிச்சி.. என் ஹஸ்பண்ட் கிட்ட என்னை பாசமா பார்த்துக்க சொன்னதுக்கு நான் காலம் முழுக்க உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று டாக்டர் காலில் விழப்போக..

“என்னம்மா மாசமா இருக்கப் பொண்ணு என் காலில் விழற” என்று சங்கடப்பட்டு வஞ்சியை தூக்கி நிறுத்தி அவள் தோளை பிடித்துக்கொண்டு..” என்னைப் பார்க்க எத்தனை பேசண்ட் வராங்க.. அவங்கள நான் என் பொண்ணு போலதான் பார்க்குறேன்ம்மா.. நீ அடுத்த முறை வரும்போது ஹேப்பியாத்தான் வருவ” என்று வஞ்சி கன்னம் தட்ட..

“என் ஹஸ்பண்ட் என்கிட்ட பேசினாலே நான் சந்தோசப்படுவேன் மேடம்.. நான் வரேன்” என்று வெளியே வந்தாள்..

முல்லையும் பிள்ளைகளை பள்ளியில் விட்டு ஹாஸ்பிட்டலுக்குள் வந்திருந்தாள்.

சிம்மன் வெளியே வந்ததும் நேராக சாந்தியிடம் சென்றவன் அவர் முகத்தை பார்த்து “அம்மா உங்கப் பொண்ண நான்  என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்.. என் குழந்தை என் கண்ணு முன்னால வளரணும் என்று என்று கூறியவன் அவர் முன்னே நெஞ்சை நிமிர்த்தி நின்றான்..

“தம்பி அவ கழுத்துல தாலி இல்ல.. தாலிகட்டி கூட்டிட்டுப் போங்க” என்று இதுதான் சமயம் என்று மகளுக்காய் வேண்டி பேசினார்.. கழுத்தில் தாலியில்லாமல் குழந்தையை சுமக்கிறாள்.. என்று பெரும் கவலை சாந்தியை குடைந்து கொண்டிருந்தது.

வர்மன், சிம்மனின் பதிலுக்காய் அவனையே பார்த்திருந்தான்.. அவனும் இதைத்தான் நினைத்திருந்தான்.. வயதில் மூத்தவர் சொல்லும்போது சிம்மனால் மறுக்க முடியவில்லை.. இருந்தாலும் வஞ்சி செய்த தப்பை அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

“என்னால அவ கழுத்துல தாலி கட்ட முடியாதும்மா மன்னிச்சுடுங்க” என்றான் எங்கோ வேடிக்கை பார்த்தபடி..

“அப்ப என்னாலயும் என் பிள்ளையை உங்க கூட அனுப்ப முடியாது தம்பி.. எனக்கு என் பொண்ணையும் பேரனை வளர்க்கத் தெரியும்” என்று சாந்தியும் பிடிவாதமாய் பேசினார்.

“டேய் குழந்தைக்காக வஞ்சியை கல்யாணம் பண்ணிக்கோடா” என்று வர்மன் அவன் காதோரம் போய் கிசுகிசுக்க.. திரும்பி வர்மனை எரித்துவிடுவது போல பார்த்தான்.

“என்னடா முறைக்கிற அடிச்சு பல்லை பெத்துருவேன் பார்த்துக்க” என சினம் கொண்ட வர்மன் சிம்மனை அடிக்க கையை ஓங்கி விட்டான்

“அண்ணா ப்ளீஸ் வஞ்சி கழுத்துல தாலி மட்டும் கட்டுங்க.. பாவம் வயித்துல குழந்தையிருக்குல்ல” என்று முல்லையும் வஞ்சிக்காக சிம்மனிடம் பரிந்து பேச.

“தாலிகட்டுறேன் ஆனா ஒரு நிபந்தனையோட.. அதுக்கு நீங்க எல்லாம் கட்டுப்படணும்” என்று அனைவரையும் ஒரு முறை பார்த்தான்.

தாலி கட்டுறேன் சொன்னதே போதும்.. என்று நினைத்தவர்கள்

பெரும்மூச்சு விட்டு கொண்டனர் “சொல்லுங்க தம்பி” என்றார் சாந்தி, மகள் வாழ்வு இனியாவது சந்தோசமாக இருக்கட்டுமென்று.

“அவ என் ரூம்ல தங்கக்கூடாது.. என் கூட பேசக்கூடாது.. எனக்கு எதுவும் செய்யக்கூடாது.. அப்புறம் என்றவன் குழந்தை பிறந்ததும் என்னை விட்டுப் போய்டணும்.. டைவர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்துப் போடணும்.. இன்னிக்கே இப்பவே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று அவன் திட்டவட்டமாக பேசிவிட்டு..

வர்மனை பார்த்து “நான் மெடிசன் வாங்கிட்டு வரதுக்குள்ள உன் தங்கச்சிட்ட நான் சொன்னதை சொல்லி சம்மதமான்னு கேட்டு சொல்லு” என்று தன் பின்னே நின்றிருந்த வஞ்சியை திரும்பிப் பார்த்து உனக்கு இவ்ளோ தான் நான் கொடுக்கும் இடம் என்று முறைத்துவிட்டு இனிதான் நீ என்கிட்ட படவேண்டியிருக்கு என்று முணுமுணுத்து மெடிசன் வாங்கச் சென்றான் சிம்மன்.

“தம்பி என்ன உங்க ப்ரண்ட் இப்படி பேசிட்டு போறாரு.. இது நடைமுறைக்கு சாத்தியமில்லை.. குழந்தை பிறந்ததும் என் பொண்ண நான் கூட்டிட்டுப் போகணுமா.. அதுக்கு நான் இப்பவே கூட்டிட்டுப் போறேன்.. வா வஞ்சி போகலாம்” என்று மகளின் கையைப்பிடிக்க.

“அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க.. பெரியவங்க நீங்க அவசரப்படாதிங்க.. என் நண்பன் முரட்டு பிடிவாதக்காரன்.. அவன் போக்குல போய்தான் விட்டுப்பிடிக்கணும்.. இப்ப வஞ்சி கழுத்துல தாலிகட்டி அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம்.. இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இப்போதைக்கு குழந்தைதான் பாலமா இருக்கப் போகுது.. பளீஸ் அவன் வஞ்சியை டைவர்ஸ் பண்ணமாட்டான்.. அதுக்கு நான் முழுப்பொறுப்பு.. சும்மா வஞ்சி ஒரு பார்மாலீட்டிஸ்க்கு கையெழுத்து போடட்டும்.. என்னை நம்பி வஞ்சியை என் நண்பனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க” என்று சாந்தியிடம் மன்றாடி கேட்க.

சாந்தி, வஞ்சியை பார்க்க.. அவளோ சம்மதம் என்று தலையை ஆட்டினாள்.

மெடிசன் வாங்கிக்கொண்டு வந்த சிம்மன் “என்னடா உன் தங்கச்சி என்ன சொன்னா” என்று சிம்மக்குரலில் திமிராக கேட்க.

“நீ வஞ்சி கழுத்துல தாலிகட்டினா எங்களுக்கு போதும்டா.. என்று கூறிய வர்மன்,

வஞ்சியை பார்த்து “வாமா போலாம் என்றவன் “முல்லை நீ வஞ்சியை கூட்டிட்டு வா” என்றதும் வாஞ்சியின் கையை பிடித்துகொண்டாள் முல்லை.. ஹாஸ்பிட்டலை விட்டு அனைவரும் வெளியே வர.. பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் முன்னே வைத்து வஞ்சியின் கழுத்தில் தாலிகட்டினான்.

. தாலி கட்டும்போது கூட அவன் விரல் அவள் கழுத்தில் படாது கட்டினான்.. வஞ்சி கண்ணில் கடகடவென்று கண்ணீர் வந்தது.

வஞ்சி அழுவது எல்லாம் பொருட்டாக எண்ணாமல் தாலி கட்டி அடுத்த நொடியே இந்தா டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போடு. என்று விறைத்து கொண்டு சண்டை கோழி போல நின்றான்.. சாந்தியும், முல்லையும் வாய் மேல் கைவைத்து அதிர்ந்து நின்றனர்.

வர்மனுக்கு சிம்மன் பத்திரத்தை வாங்கிக்கொண்டுதான் வருவான் என்று தெரியும்.. வஞ்சியின் மனதை  காயப்படுத்த ஆரம்பித்துவிட்டான்..இவ்ளோ சீக்கிரம் கொண்டுவந்து விட்டானே என்று அவனுக்கும் கவலைதான்.. ஒரு காரியத்தை எண்ணிவிட்டால் அதை முடித்துதான் அடங்குவான் என்பது வர்மனுக்கு தெரியுமல்லவா.. அவன் வாயைத் திறக்கவில்லை.. வஞ்சி வீட்டுக்குள் வரட்டும் சிம்மனின் மனதை மாற்றலாம் என்று எண்ணிவிட்டான்.

பத்திரத்தை வஞ்சி முன் நீட்ட.. அவளோ கையெழுத்து போட்டுத்தான் ஆகணுமா.. என்ற ரீதியில் சிம்மன் முகம் பார்க்க..

போட்டுத்தான் ஆகணும்.. என்று அவளை எள்ளளுடன் பார்த்திருந்தான் சிம்மன்.. தாலி கட்டிய மறுநிமிடமே டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டாள் வஞ்சிக்கொடி.. வஞ்சி கையெழுத்து போட்டதும்.. பத்திரத்தை வாங்கியவன் “வா என் பின்னால” என்றவன் அவளை காரில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டான்..

 

வர்மனோ இருபுறமும் தலையை ஆட்டிக்கொண்டு முல்லையை ஏற்றிக்கொண்டு “அம்மா நீங்களும் வீட்டுக்கு வாங்க போகலாம்” என்று சாந்தியை கூப்பிட..

அவரோ “என்பிள்ளையை என்கண்ணு முன்னால இப்படி இழுத்து கூட்டிட்டு போறாரு.. என்னால அங்க வந்து என் மக கஷ்டப்படுறத பார்க்கமுடியாது.. நீங்க என் பொண்ணை பார்த்துக்குவிங்க என்ற நம்பிக்கையில் போறேன்” என்று கையெடுத்து கும்பிட..

“அம்மா என் நண்பன் மனசு தங்கம்.. வஞ்சி மேல உள்ள கோவத்தால தான் இப்படி நடந்துக்குறான்.. நீங்க கவலைப்படாம போங்க” என்றவன் காரை வீட்டுக்குச் சென்றான்..

சிம்மன் செய்வது அனைத்தையும் சித்தார்த் பார்த்துக்கொண்டேயிருந்தான்.. சிம்மன் வஞ்சியை இழுத்துபோகும்போது அவன் மண்டையில் கள்ளை எடுத்து போட்டுவிடலாமா என்று கூட நினைத்தான் சிறுவன் சித்தார்த்.

வர்மன் சென்றதும் சாந்தி ஆட்டோ பிடித்து சித்தார்த்தை கூட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.. போகும் வழியில் சித்தார்த் “அம்மா எனக்கு அக்காவை கல்யாணம் பண்ணிய  மாமாவை கொஞ்சம் கூட பிடிக்கலை.. அக்காவ ரொம்ப திட்டுறாரு.. முறைச்சு வேற பார்க்குறாரு.. நாம இப்பவே அக்காவ போய் கூட்டிட்டு வந்திடலாம்” என்று சாந்தியிடம் சண்டையிடுவது போல கூற

:அக்காவ நாம இப்ப கூட்டிட்டு வரமுடியாது ராஜா” என்று கூறியவர் மகளை நினைத்து கண்ணீர் விட்டு சித்தார்த்தை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டார்..

“அம்மா நீங்க அழாதீங்க நான் பெரியவனாகி.. அந்த மாமாவ அடிக்கிறேன்” என்று என்ன விசயம் நடந்ததென்று தெரியாமல் சிம்மன் மீது சினம் கொண்டு பேசினான்.

சிம்மன் காரில் போகும் போது காரை வேகத்துடன் ஓட்ட.. பெண்ணவளோ வயிற்றை பிடித்துக்கொள்ள.. அவளது செயலை கண்ணாடியில் பார்த்தவன் அச்சோ நான் என்ன செய்ய பார்த்தேனென்று காரை மெதுவாக ஓட்டினான்.. வர்மன் சிம்மனுக்கு முன்னே வீட்டுக்கு வந்து நின்றிருந்தான்..

வீட்டின் முன் காரை நிறுத்திய சிம்மன்.. வர்மன் வெளியே நிற்பது பார்த்து “வந்து கொஞ்சநாளில எல்லாரையும் மயக்கி வச்சிட்ட” என்று விசமமாய் பேசி

“இறங்குடி” என்றவன் காரை விட்டு இறங்கி வர்மன் முன்னே வந்து நின்று “இனிதான் உன் தங்கச்சி என்கிட்ட பட போறா” என்றவன் உள்ளே செல்ல.. முல்லை ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தாள்.

வஞ்சியை திரும்பிப் அவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தவன் “ஆமா இவளுக்கு ஆரத்தி ஒண்ணுதான் குறைச்சல்” என்று ஆரத்தி தட்டை தட்டிவிட்டு போனான்.. அந்த தட்டோ வஞ்சிக்கொடியின் காலில் லேசாக பட்டுவிட இரத்தம் வரவில்லையென்றாலும் தட்டு பட்டதும் வலி உயிர் போனது.. கண்ணீருடன் வர்மனையும் முல்லையையும் பார்த்து நின்றாள்.

“அவன் கிடக்கிறான் நீ வாடா” என்று வஞ்சியின் கையை பிடித்து வர்மன் வீட்டுக்குள் கூட்டிவர..

அச்சோ அண்ணாவோட கோவத்தை என்னால பார்க்கமுடியலப்பா என்று முல்லை பெருமூச்சுவிட்டுக்கொண்டு கீழே கிடந்த ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு சென்றாள்.

சிம்மன் வஞ்சிக்கென்று தன் அறையை ஒட்டி இருந்த அறையை ஒதுக்கி வைத்துவிட்டான்.. வர்மன் வஞ்சியை அந்த அறையில் கூட்டிக்கொண்டு விட.. “அண்ணா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்றவள் இருக்க கட்டிலில் படுத்துவிட்டாள்..

சிம்மன் கையில் பழச்சாறுடன் வஞ்சி அறைக்குள் வந்தான்.. சிம்மனை பார்த்த வஞ்சி அடித்துபிடித்து எழுந்து அமர்ந்தாள்..

பக்கத்தில் நின்ற வர்மனிடம் “டேய் அவ எதுக்கு இப்படி வேகமா எழும்புற.. என்குழந்தைக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்று பல்லைக்கடித்தவன்.. பழச்சாறை வர்மனிடம் நீட்டி “அவளுக்கு கொடு..மயக்கம் வருது கீழ விழப்போறா” என்று வெடுக்கென பேசினான்..

“புருசன் பொண்டாட்டி நடுவுல நான் எதுக்குடா இந்தா நீயே கொடு” என்று வர்மன் வம்பு வேண்டாம் என்று ஓடிவிட்டான்..

“போடா போ.. என்னால எதையும் தனியா சாதிக்க முடியும்” என்றவன் அவள் முகம் எதிரே பழச்சாறை நீட்ட.. பேசாமல் வாங்கிக் குடித்து விட்டு டம்ளரை பக்கத்து டேபிளில் வைத்து கட்டிலில் சுருண்டு படுத்துவிட்டாள்.

முல்லை அறைக்குள் வர.. “முல்லை அவள காலைநீட்டி படுக்கச் சொல்லு.. புள்ளைக்கு வலிக்கும்” என்றும் அதற்கும் வஞ்சியை வாட்டி எடுத்தான் சிம்மன்.

“முல்லை புள்ளைங்கள ஸ்கூலயிருந்து கூட்டிவரணும வாபோலாம்” என்று வர்மன் சத்தம் போட

“அண்ணா அவரு கூப்பிடறாரு நான் கிளம்புறேன்.. நீ உங்க பொண்டாட்டிய பார்த்துக்குங்க” என்று முல்லையும் வெளியே சென்றாள்.

சிம்மனிடம் வஞ்சிகொடி மாட்டிக்கொண்டாள்.. பெண்ணவளை வாட்டி வதைப்பானா? இல்லை அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வானா? அடுத்த எபிக்கு காத்திருங்கள்

 

வஞ்சியிடம் பேசாமல் அவளை கொல்லாமல் கொன்றான்.. அவள் எழுந்து நின்றால் உள்ளே போய் பேசாமல் அவளை வெறித்து பார்த்து எதுக்கு எழும்புற என்ற ரீதியில் அவளையே பார்த்திருப்பான்..

சிம்மனின் காதல் பார்வையை தானே பார்த்திருக்கிறாள் வஞ்சி ..இந்த உக்ர பார்வை அவளுக்கு அவனிடம் பயத்தை கொடுத்தது.. அவள் தான் ஒரு போலீஸ் என்பதே அவளுக்கு மறந்து போனது..

தெரியாமல் ஒரு தவறை செய்து விட்டு பெண்ணவள் சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டிருக்கிறாள் பெண்ணவள்.

“நா..நா..வாஷ்ரூம் போகணும்” என்று எச்சில் விழுங்கிக்கொண்டு சிம்மனின் பார்வையை பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றாள்.

கதவை திறந்து வைத்து “போ” என்று சுவற்றிடம் பேசுவது போல எங்கோ பார்த்து பேசினான்..

கணவனின் செயல் பெண்ணவளுக்கு தாங்க முடியாத வருத்தத்தை கொடுத்தது.. என்னைப் பார்க்கக்கூட பிடிக்கலையா? என்றவள் அங்கே நின்றால் அழுதுவிடுவோம் என்று குளியறைக்குள் புகுந்துகொண்டாள்..

அவள் குளியலறைக்குள் சென்றதும் வஞ்சியின் கண்ணில் கண்ணீரை கண்டவனுக்கு மனம் இளகித்தான் போனது.. மறுநிமிடமே அவனது மனசு மாறிவிட்டது.. கதவு பக்கம் போய் நின்றுகொண்டான்.. அவன் நிற்பது நிழலாக தெரிய.. உன் பிள்ளை மீது தான் அக்கறையை காட்டுவியா.. ஏன் உன் பிள்ளையை சுமக்கும் அம்மா என் மீது அக்கறை காட்ட மாட்டியா மாமா.. என்று விரக்தியாக சிரித்துக்கொண்டாள் பெண்ணவள்.

கதவு திறந்து வெளியே வர.. வெளியே சென்று அவளுக்கு காவலனாய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிவர.. வஞ்சி அறையின் முன் சிம்மன் உட்கார்ந்திருப்பதைக் கண்டவர்கள்.. அங்கே ஓடிவர.. “சிம்மா இங்க என்ன உட்கார்ந்திருக்க” என்றதும்

சிம்மனோ  “வஞ்சி வந்திருக்கா.. நீ கூட்டிட்டு வரச்சொன்னில கூட்டிட்டு வந்துட்டேன்.. அப்புறம் அஜய் நீயும் கிட்ட வா” என்றதும் அஜயும் கிட்ட வர “உங்க ரெண்டு பேர் கூட விளையாட ஒரு பாப்பா வரப்போகுது” என்று சந்தோசமாக கூறியவன் மெதுவாக இதழ் விரித்தான்..

சிம்மன் பேசுவது வஞ்சி காதில் விழத்தான் செய்தது.. அப்படியே படுத்திருக்க.. “எங்க வஞ்சி” என்று இனியா கண்ணை விரித்து கேட்க..

“இதோ இந்த அறையில” என்று சிம்மன் கண்ணைக் காட்ட.

அஜயும், இனியாவும் உள்ளே ஓடியது.. வஞ்சியை பார்த்தும் இனியா..

“ஐ சித்தி வந்துட்டியா? இனி உன்கிட்ட சண்டை போடல இங்கிருந்து போகாதா” என்று அவள் படுத்திருந்த கட்டிலில் ஏறப்பார்க்க.. சரியாக முல்லை வீட்டுக்குள் வந்தாள். வர்மன் ஸ்டேசன் வரை போய் வரேன்.. என்று மூவரையும் இறங்கி விட்டு சென்றிருந்தான்.

குழந்தைகள் சத்தம் வஞ்சி அறையில் கேட்க.. வேகமாக அறைக்குள் சென்று பார்க்க.. இனியா வஞ்சியின் பக்கம் போய் அவள் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தது.. அஜய் ஒருபக்கம் உட்கார்ந்து வஞ்சியிடம் சிரித்து பேசிக்கொண்டிருக்க.. “இனியா, வஞ்சி சித்திகிட்டயிருந்து தள்ளி உட்காரு” என்று அதட்டினாள்.

“ஏன்மா நான் சித்தி கூடத்தான் இன்னிக்கு தூங்கப்போறேன்” என்று அவளை வயிற்றோடு கட்டிபிடிக்க..

“ஏய் இனியா என்னடி பண்ணுற.. சித்தி வயித்துக்குள்ள பாப்பா இருக்கு” என்று இனியாவை அடிக்க கையை ஓங்கிவர.

“அக்கா இனியாவ அடிக்காதீங்க நான் பார்த்துக்குறேன்” என்று இனியாவை தன்னுடன் வயிற்றில் மேல் படாமல் நெஞ்சோட அணைத்துக்கொண்டாள்..

உள்ளே வந்த சிம்மன்.. “முல்லை நீ போ நான் இங்கேயிருந்து குழந்தைகளை பார்த்துக்குறேன்” என்று முல்லையை அனுப்பிவிட்டு.. அறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்து “இனியா இங்க வாங்க என்கிட்ட வந்து உட்காருங்க” என்று இனியாவை கூப்பிட..

“நான் வரல சிம்மா சித்தி கூடவேயிருக்கேன்.. நீங்க வேணா வந்து இங்க உட்காருங்க” என்று இடம் விட்டு அமர்ந்து சிம்மனை கூப்பிட..

வஞ்சிக்கோ தொண்டைக்குள் பயபந்து உருண்டது.. இதற்கும் தான் காரணமென்று திட்டுவானோ.. என்று சிம்மனை பார்க்க.

சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து இனியா பக்கத்தில் உட்கார்ந்தான்..

அவன் கண் இப்போது அவள் நெஞ்சோடு சாய்ந்திருக்கும் இனியாவை பார்க்க.. வஞ்சி கழுத்தில் சிம்மன் கட்டிய தாலி சரடு மின்னிக்கொண்டிருந்தது.. கழுத்தோடு நிற்காமல் அவள் கைவிரல்களை பார்த்தான்.. அவன் போட்டு விட்ட மோதிரம் இருக்காவென்று.. மோதிரம் அவள் கைகளில் இருந்ததைக் கண்டு நிம்மதியுற்றான்.. அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. தாய்மை பூரிப்பில் பெண்ணவளின் முகம் பௌர்ணமி நிலாவை போல அழகாய் இருந்தது.. ஆனால் அதில் வெளிச்சம் மட்டும் குறைவாக இருந்தது.. இவ எதுக்கு இப்படி மூச்சியை உம்முனு வச்சிருக்கா.. என் குழந்தையும் இவள போலவே உம்முனு இருக்கும் என்று எண்ணியவன் “இனியா உங்க சித்தியை சந்தோசமா இருக்கச்சொல்லு.. அப்பதான் பாப்பா ஹேப்பியா இருக்கும்னு.. அதுக்குத்தான் அவளை  நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேனு தெரியாத எதையோ பரிகொடுத்த மாறி இருக்கா” என்று அவளை கடிந்து கொள்ள..

 

“சித்தி சிரியேன்” என்று அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட.. வஞ்சி வெகுநாட்கள் கழித்து வாய் விட்டு சிரித்தாள்.. அவளது சிரிப்பை கண்டவனுக்கு மனதில் பாரம் இறங்கியது போல இருந்தது.. சிம்மன் எந்தப் பெண்ணையும் கோவமாய் பேசிக்கூட இருக்கமாட்டான்.. வஞ்சியிடம் அளவுக்கு அதிகமாய் பாசமும், காதலும் வைத்தான்.. அந்த காதலுக்கு அவள் மரியாதை கொடுக்காமல் தூங்கி எரிந்துவிட்டாள்.. இப்போது காதல் வேண்டும் என்று வந்திருக்கிறாள்.. அந்தக் காதலை அவளுக்கு தர தயங்குகிறான் காதலன்..

குழந்தைகள் விளையாடிக்கொண்டே அவர்கள் கண்சொருக.. சமையல் வேலையை முடித்து வந்த முல்லை “இனியா,அஜய் ரெண்டு பேரும் தூங்காதீங்க” என்று இருவரையும் அழைத்துச்சென்று சாப்பிட வைத்து தூங்க வைத்து. வஞ்சிக்கு சாப்பாடு கொடுக்க டைனிங் டேபிள் வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.. சிம்மன் தட்டில் இட்லியும், தோசையும் போட்டு எடுத்துக்கொண்டு போனான்.. அண்ணா சீக்கிரம் மனசு மாறிவிடுவார்.. என்று எண்ணி மௌனமாய் புன்னகைத்து அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சிம்மன் சாப்பாட்டு தட்டுடன் அறைக்குள் போக வஞ்சி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.. சாப்பிடாம தூங்குறாளா.. இவள எப்படி எழுப்புவது குழந்தைக்காக எழுப்பலாம் என்று தட்டை டேபிளில் வைத்தவன் அவள் அருகே சென்று அவளை தொட அவனது கையை கொண்டு போக.. அவளை தொடுவதற்கு அவனுக்கு விருப்பமில்லை.. அவள் செய்ததே அவன் கண்முன்னே வந்து இம்சை பண்ணியது.. அவளை பேசவேண்டாம்.. தன்னை பார்க்கக்கூடாது.. என்று கோவமாய் பேசியவன் அவள் பக்கம் இருந்து சேவகம் செய்கிறான் ஆண்மகன்.

 

“வ..வஞ்சி” என்று அவன் மெதுவாக கூப்பிட.. அவள் எழும்பாது தூங்கிக்கொண்டிருக்க. குழந்தைக்கு பசிக்குமே என்று கவலைப்பட்டவன் அவளது தோளைத் தொட.. மன்னவன் கைப்பட்டதும் மங்கைக்குள் காதல் ஊற்று எடுக்க.. அது கனவென்று எண்ணியவள் “சிம்மா நான் வேணும்னு எதையும் செய்யல என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்” என்று உறங்கிக்கொண்டிருந்தவள் கண்ணில் கண்ணீர் வர.. அப்படியே அவளை அள்ளி எடுத்துக்கொண்டு உன்னை மன்னிச்சிட்டேன்டி என்று அவனுக்கு  கதறி அழத்தோன்றியது.. வேண்டாம்.. நீ செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணியவன் அறையில் இருந்த ப்ளவர் வாஷை தூக்கி கீழே போட்டான்..

  1. மோக முத்தாடு அசுரா

வஞ்சி சத்ததில் கண்விழித்துப் பார்க்க சிம்மன் கையில் உணவுத்தட்டுடன் நின்றிருந்தான்.. அவளாக மெல்ல எழுந்து உட்கார.. உணவுத் தட்டை நீட்ட பேசினா என்னவாம் என்று முணங்கிக்கொண்டு தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.. சிம்மன் வெறுப்பை காண்பித்தாலும் தான் செய்த தவறுக்கு தண்டனையாக எண்ணி அவன் பக்கத்தில் இருந்தாலே போதும் என்று வயிறு நிரம்ப சாப்பிட்டு பார்க்க தண்ணீரை நீட்டினான்.. தண்ணீரை கொண்டு கைகழுவிக்கொண்டு எழும்ப.. கையை நீட்டி எழும்ப வேண்டாமென்று சைகை செய்தவன் தட்டை வாங்கி எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குச் சென்று தட்டை வாஷ் பண்ணி வைத்து அவள் அறைக்குள் வந்து சோபாவில் அமர.. வஞ்சிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. கணவன் கொடுத்த உணவை அமிர்தமாக உண்டுவிட்டாள்.. வாயை பொத்திக் கொண்டு எழுந்து வாஷ்ரூம் போக.. “ஏய் என்னாச்சுடி” என்று பதறி எழுந்து அவள் பின்னே சென்றான்..

பேசாமல் இரு என்று சொன்னவன் குழந்தைக்காகவென அவள் பின்னே சுற்றிக்கொண்டேயிருந்தான் சக்கரம் போல.

வாந்தி முழுவதும் எடுத்து முடித்து எனக்கு மயக்கமாயிருக்கு என்று சொன்னவள் அப்படியே கீழே விழப் போக.. அவளை பூபோல தாங்கிக்கொண்டான்.. பலநாட்கள் கழித்து கணவனின் கையில்  இருப்பது மங்கையை மலரச்செய்தது.. அப்படியே சிம்மனின் தோளை பிடித்துக்கொண்டாள்.. அவன் கைகள் நடுங்கியது.. வஞ்சியை தூக்கி வந்தவன் கட்டிலில் உட்கார வைத்து தன் நெஞ்சில் சாய வைத்து தண்ணீர் குடிக்க வைத்தான்.. இந்த நெஞ்சில் சாய்ந்து கொள்ள இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாந்தி எடுக்கலாமென்று பெண்ணவள் மனதில் எண்ணினாள்.

சிம்மன் நெஞ்சில் சாய்ந்தபடியே கண் உறங்கிவிட்டாள்.. அப்படியே அவன் கைகள் வைத்து அவளது முதுகில் வருடிக்கொடுத்தான்.. அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்ததும் மெல்ல அவளை தன்னிலிருந்து பிரித்து தலையணையில் படுக்க வைத்து கட்டிலை விட்டு இறங்கி சோபாவில் போய் தலைசாய்த்து படுத்துவிட்டான்.. அவளை விடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான்.. அவனது கோபம் எல்லாம் எங்கே போனதென்று அவனுக்குத் தெரியவில்லை.. ஜன்னல் வழியே வந்த காற்றில் அவளது இடுப்பு சேலை விலகி அவளது இடை தெரிய.. அவனது மகவை தொட்டுப்பார்க்கத் தோன்றியது சிம்மனுக்கு..

மெல்ல எழுந்து சென்றான் கட்டில் பக்கம்.. அவள் தூக்கம் கலைந்து விடுமா என்று பயந்தவன்.. மெல்ல சேலையை விலக்கி இதழால் வயிற்றில் முத்தம் கொடுத்தான்.. அவனுக்கு இன்னொரு முத்தம் கொடுத்தால் என்ன என்று தோணியது.. மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தான்.. அவள் அசைவு தெரிய சேலையை இழுத்து விட்டு சோபாவில் வந்து படுத்துக்கொண்டான்.

வர்மன் வீட்டிற்குள் வர.. வஞ்சி அறை கதவு திறந்திருக்க.. “சிம்மா”என்று மெல்ல கூப்பிட்டான் வர்மன்..

“இதோ வரேன்டா” என்று எழுந்து சென்றவன் அறைக்கதவை மெல்ல மூடிவிட்டு வெளியே வந்தவன்..

“என்னடா ப்ராளம் இவ்ளோ நேரம் வரல.. உன் முகம் ஏதோ கலவரம் போல தோன்றுது”

“ஆமாடா அந்த முகேஷ் நாய் மீண்டும் பிரச்சனை” என்று சலிப்பாக கூறினான் வர்மன்.

“பேசாம அவன போட்டுத்தள்ளிரலாம்டா விடு நான் பார்த்துக்குறேன்” என்றான் சிம்மன்.

“ம்ம் இப்ப அவனுங்க போதை மருந்தை காலேஜ் மாணவர்களுக்கும் விற்குறாங்கனு நீயூஸ் வந்திருக்கு” என்றான்..

“எனக்கும் இப்போதான் மெசேஜ் அனுப்பியிருக்காரு ஐ.ஜி.. நான் நாளைக்கு டியூட்டியில் ஜாயின் பண்ணனும்னு சொல்லியிருக்காரு.. போதை பொருள் விற்குறவங்களை பிடிக்கணும்னு போன்ல பேசினாருடா” என்றான்.

“அப்பாடா என் கூட நீ வந்துருவியாடா.. எனக்கு கொஞ்சம் பர்டன் குறையும்.. ரெண்டு பேரும் சேர்ந்து தங்கதுரையையும், முகேஷையும் போட்டுதள்ளணும்டா.. அப்பதான் இந்த ஏரியாவே அமைதியாகும்” என்றான் வர்மன்.

“ப்ளான் போடலாம்டா” என்று தலையை ஆட்டியவன் “நீ சாப்பிட்டியா சிம்மா”

“இல்லைடா இனிமேதான்”

“நான் குளிச்சிட்டு வரேன்” சாப்பிடலாம் என்றவன் வஞ்சி அறையை பார்த்து “வஞ்சியை திட்டினியாடா” என்று அவன் பக்கம் போய் தோளைத் தொட..

“டேய் போய் குளிடா உன் தங்கச்சிக்கு சாப்பாடு ஊட்டி விட்டிருக்கேன் போதுமா” என்று முகத்தை உர்ரென்று வைத்துப் பேச.

“அதுபோதும்டா” என்று சிரித்துக்கொண்டே அறைக்குச் செல்ல இரு குழந்தைகளுடன் முல்லை அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள்..

வஞ்சி கர்ப்பமாய் இருப்பதால் எல்லா வேலைகளும் முல்லையே செய்வதால் சோர்ந்துபோய் உறங்கிக்கொண்டிருக்கிறாள்..

முல்லை நெற்றியில் முத்தம் கொடுக்க.. 

“வந்துட்டீங்களா..” என்று கண்விழித்தவள் “குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என்று கலைந்திருந்த முடியை கொண்டை போட்டு எழுந்து உட்கார..

“அடியேய் அழகு இராட்சசி தூங்குடி நான் சாப்பிட்டுக்குறேன்” என்றவன் அவள் இதழில் முத்துக்குளித்துவிட்டே குளிக்கச் சென்றான்.

வர்மன் குளித்து வர.. முல்லை தூங்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்..

“பப்ளி நீ இன்னும் தூங்கலையா என்று அவள் பக்கம் வந்து அவள் கழுத்தில் வளைவில் முகம் புதைக்க.. பசங்க இருக்காங்க” என்று வர்மனின் மார்பில் கைவைத்து தள்ளி எழுந்து வெளியே போக..  கதவு வரை சென்றவளை அப்படியே இழுத்து அணைத்துக்கொண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன் அவள் இதழில் தேன் எடுத்தபிறகே பெண்ணவளை விட்டுப் பிரிந்து ரொம்ப டேஸ்டி என்று உச்சுக்கொட்டினான்..

“ம்ம் இருக்கும் இருக்கும்” என்று வர்மனை செல்லமாக அவன் தோளில் அடித்து விட்டு டைனிங் டேபிள் சென்று இட்லியும், தோசையும் எடுத்துவைத்தாள்..

வர்மன் சாப்பிட கூப்பிட.. சிம்மன் டைனிங் டேபிளில் வந்து “வர்மா முல்லையை எதுக்கு எழுப்பின.. பாவம் காலையிலிருந்து முல்லைக்கு வேலை அதிகம்” என்று வர்மனை போலியாக முறைத்துப்பார்த்தான்.

“அண்ணே வீட்டு வேலை ஒண்ணும் பெருசா இல்லை.. ஒரு மாசம் போனா சரியாபோய்டும் பர்ஸ்ட் ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று இருவருக்கும் உணவைப் பரிமாறினாள்..

சிம்மன் சாப்பிட்டு முடித்து “முல்லை வீட்டு வேலை செய்ய ஒரு ஆள் கிடைக்குமா பாரு” என்று அறைக்குச் சென்றுவிட்டான்..

வர்மனும், முல்லையும் சாப்பிட்டு அறைக்குச் சென்று படுத்தவர்கள்.. “என்னங்க அண்ணா வஞ்சியை ஏத்துக்குவார் தானே”

“நானும் அதைத்தான் நினைச்சிட்டிருந்தேன்டி.. அவன் மனசு மாற கொஞ்சநாள் மாறும்.. டைவர்ஸ் எல்லாம் பண்ணமாட்டான்.. வஞ்சி மனசு நோகடிக்கத்தான் அப்படி பேசினான்.. எனக்கு என் நண்பனை பத்தி தெரியும் என்று ஒருபோதும் வஞ்சியை விட்டு பிரிய மாட்டான்.. இன்னும் கொஞ்ச நாளுல வஞ்சியை எப்படி பார்த்துக்க போறானு பாரு”என்று கூறிச் சிரிக்க..

“ஆமாங்க அண்ணாவோட லைப் செட்டில் ஆனத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.. என்னை அவர் கூடப்பொறந்த தங்கச்சியா பார்த்துக்கிட்டாரு.. அவர் லைப்ப நாமதான் சரி பண்ணனும்” என்றவள் அப்படியே கண்ணை மூட..

“அடியேய் என்னை கொஞ்சம் கவனிடி” என்று முல்லையின் இதழில் தஞ்சம் புகுந்தவன் சத்தம் போடாமல் மனைவியை ஆட்கொண்டான் இந்திரவர்மன்.

சிம்மன் அறைக்கு வெளியே நடைபோட்டுக்கொண்டிருந்தான்.. வஞ்சிக்கு இடையே விழிப்பு வர.. அவளுக்கு ஆடை மாற்ற வேண்டும் என்று தோணியது.. அதும் இல்லாமல் இப்போது வயிறு பசிக்க வேறு செய்தது.. சிம்மனின் வாரிசுக்கு பசிக்கத் துவங்கியது.. அவள் சாப்பிட்டதில் பாதி வாந்தியாக வந்திருக்க இப்போது மீண்டும் அவளது வயிறு பசியில் கத்தியது..

சிம்மன் அறையை எட்டிப்பார்க்க அவளது அசைவு கண்டு உள்ளே சென்றான்.. அவளோ பசிக்குது என்று சொல்லாமல் வயிற்றை தடவிக்கொண்டிருக்க.. டைனிங் டேபிள் சென்று அங்கே வைத்திருந்த ஆப்பிளை எடுத்து வந்து கட் செய்து தட்டில் வைத்து அவளுக்கு கொடுக்க ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டு மீண்டும் படுக்க..

“ஏய் அறிவு வேண்டாம் எதை சாப்பிட்டாலும் உடனே தூங்குற.. மறுபடியும் வாந்தி வர்றதுக்கா.. எழுந்து உட்காரு.. உனக்கு சேவகம் செய்துட்டே இருக்கணுமா?” என்று வார்த்தையை அள்ளி வீசினான்.

வஞ்சிக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.. உதடு கடித்து அழுகையை அடக்கியவள் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு முகம் திருப்பிக்கொண்டாள்.. சிறிது நேரத்தில் நெளிந்து கொண்டேயிருக்க.. அவனது அறைக்குச் சென்று அவளுக்காய் எடுத்த வைத்திருந்த நைட்டியை எடுத்து வந்து அவள் கையில் கொடுக்க.

“எனக்காக எடுத்து வச்சிங்களா” என்று பொறுக்கமாட்டாமல் கேட்டுவிட்டாள்..

உனக்காக ஒண்ணும் எடுத்துட்டு வரல.. நீ டைட்டா இன்ஸ்கர்ட் கட்டினா என் குழந்தைக்கு டிஸ்டப்பா இருக்கும்னு இந்த நைட்டியை கொண்டு வந்தேன்” என்று வெடுக்கென பேசி வெளியே சென்றான்.

வஞ்சி கண்ணீருடன் ஆடை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்.. அவளை வார்த்தையால் வதைத்துவிட்டு வெளியே வந்தவனுக்குத்தான் மனது தாங்கவில்லை.. மனைவியை கஷ்டப்படுத்துகிறேன் என்ற பேரில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டான் சிம்மன்.. ஒவ்வொரு வார்த்தையும் பேசிவிட்டு அவன் படும் அவஸ்தை பெரிது.. மனதை கல்லாக்கிக்கொண்டு அவள் முன்னே நின்றான்.. அவளை பக்கத்தில் பார்க்கும்போது அவன் மனம் தானாக கசிந்து உருகுகிறது.

வஞ்சி தூங்கியதும் அறைக்குள் வந்தவன்.. ஏண்டி அவசரப்பட்டு என் வர்மனை சுடப்பார்த்த.. அதை என்னால மறக்கமுடியலடி.. என்று அவள் நெற்றியில் முத்தமிட போய் மறுநொடியே விலகி சோபாவில் வந்து படுத்துவிட்டான்.. வஞ்சி தூக்கத்தில் சிம்மா என்னை மன்னிச்சிடு மன்னிச்சிடு என்று உளற.. எழுந்து சென்றவன் அவள் கைவிரல் பிடிக்க.. இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.. அவள் விரலை விட்டுப் பிரிய பார்க்க முடியவில்லை அவனால்.. அப்படியே அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான்.. அவள் உளறிக்கொண்டே இருக்க.. அவள் தலையை வாஞ்சையாக தடவிக்கொடுத்தான்.. சத்தம் வராமல் உறங்க சிம்மனும் கட்டிலில் உட்கார்ந்தபடியே உறங்கிவிட்டான்..

காலையில் சிம்மன் எழுந்து பார்க்க வஞ்சி அவன் நெஞ்சில் படுத்திருக்க.. அவனது கை அவளை அணைத்துப்பிடித்திருந்தது.. அவனும் கண்மூடி இரசித்திருந்தான்.. சிறிதுநேரத்தில் சுயம் வந்தவன் அவளை தன்னிலிருந்து பிரிந்து தலையணையில் படுக்க வைத்து குளியலறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு வந்தான்.

அப்போதும் வஞ்சி தூங்கிக்கொண்டிருந்தாள்.. அவள் தூங்கட்டும் என்று வெளியே வர.. வர்மன் ஸ்டேசனுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.. இன்று சிம்மனும் ஸ்டேசன் போகணும்.. நானும் கிளம்பி வரேன்டா என்றவன் தனது அறைக்கு சென்று யூனிபார்ம் போட்டு ஹாலுக்கு மிடுக்குடன் வந்து நின்றான்.

“வரே வா இந்த யூனிப்பார்ம்ல பார்க்கும் போது என் சிம்மன் தனி அழகுதான் “என்று வர்மன், சிம்மனை கட்டிக்கொண்டான்.. அஜயும் இனியாவும் சிம்மனை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தது.. சிம்மனும் இரு குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தான்..

அப்போதுதான் வெளியே எழுந்து வந்த வஞ்சியின் கண்களுக்கு முத்தக்காட்சி கண்ணில் பட அவளுக்கும் முத்தம் கொடுத்தால் சந்தோசம் என்று பார்த்தபடி நின்றிருந்தாள்.. கணவனை முதல் முறை போலீஸ் யூனிபார்ப்பில் பார்த்தவள் அப்படியே கண் இமைக்காமல் நின்றிருந்தாள்.. அவனை விட்டு கண்ணை அகற்றவில்லை அவள்.

“க்கும்” என்று தொண்டையை கணைத்து.. வஞ்சி பக்கம் வந்தவன்.. “சாப்பாடு சாப்பிட்டு ஒழுங்கா டேப்லெட் சாப்பிடு முல்லையை தொந்தரவு பண்ணாத” என்று ஆர்டர் போடுவது போல போட்டு வர்மனிடம் வந்தவன் கிளம்பலாமாடா என்றான்.

  1. மோக முத்தாடு அசுரா

“ம்ம் கிளம்பலாம்” என்று இரு சிங்கங்களும் வேட்டைக்கு கிளம்பியது.. இருவரும் ஸ்டேசனுக்கு சென்றவர்கள் கேஸ் பைலை பார்த்து முடித்து போதை பொருட்கள் விற்பவர்கள் லிஸ்ட் எடுத்துக்கொண்டனர்.. காலேஜ் வாசல் முன்னே நின்றனர்.. சிம்மனை கண்டதும் தங்கதுரை ஆட்கள் நைசாக நழுவிச் சென்றனர்.. அதேபோல் மற்றொரு காலேஜ்க்கு சென்று பார்க்க வர்மன் அங்கே நின்றிருந்தான்.. பொருட்களை விற்க முடியாமல் தங்கதுரையின் முன்னால் போய் நின்றனர்.. அண்ணே அந்த சிம்மனும், வர்மனும் எந்த காலேஜ்க்கு பொருள் விற்க போனாலும் அங்க வந்து நிற்குறானுங்க.. என்று தங்கதுரையிடம் புலம்ப.. முகேஷ் அவனுங்க ரெண்டு பேரையும் சத்தம் இல்லாம கொன்னுபோடணும் என்று வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைக்க ஏற்பாடு செய்தான் தங்கதுரை.

ஐந்து மாதங்களாக சிம்மனும் , வர்மனும் இடைவிடாது காலேஜ் முன்னாள் இருந்துகொண்டேயிருந்தனர்.. மாணவர்கள் நாட்டின் முதுகெலும்பு அவர்களை பாதுகாப்பது போலீஸ்காரர்களின் கடமை என்று எண்ணயவர்கள்.. தங்கதுரையின ஆட்களை காலேஜ் முன்பு பார்த்தாள் அடி வெழுத்துவிடுவர்..

வஞ்சியை பார்க்க சாந்தி சித்தார்த்துடன் சிம்மன் வீட்டுக்கு வர.. சிம்மனும் சரியாக வீட்டுக்குள் வந்தான்.. வாங்கம்மா என்றான்.. சாந்தி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தார்.. சித்தார்த்தோ சிம்மனை முறைத்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான்.. சிம்மனுக்கு, சித்தார்த்தின் செயல் சிரிப்பை வரவழைத்தது..

வஞ்சிக்கு வயிறு வெளியே தெரிய ஆரம்பித்தது.. சிம்மன் இப்போது வஞ்சியை அதிகம் திட்டுவதில்லை.. அவளுக்கு என்ன தேவையோ அதை செய்துகொண்டிருந்தான்.. அதிகம் நெருங்கவும் இல்லை.. விலகவும் இல்லை.. இரவு அவளை அணைத்துக்கொண்டு உறங்கவும் மறக்கவில்லை அவன்.. வஞ்சிக்கும் அவன் தன்னை அணைத்துக்கொண்டு உறங்குவது தெரியும்.. ஏன் என்று அவள் காரணம் கேட்டாள்.. குழந்தைக்காக என்று கூலாக சொல்லிமுடிப்பான் இது நமக்கு தேவையா என்று வஞ்சிதான் கஷ்டப்படணும்.. அவளும் தெரியாதது போலவே நடந்துகொண்டாள்.

வஞ்சிக்கு வளைகாப்பு போடணும் என்று சாந்தி வந்திருந்தார்.. முல்லை அவருக்கு காபி கொண்டு வந்து கொடுக்க வாங்கி குடித்தவர் சிம்மனிடம் “தம்பி வஞ்சிக்கு வளைகாப்பு பண்ணணும் அதுக்குதான் வந்திருக்கேன்” என்றதும்.

“அதெல்லாம் வேண்டாம்” என்று வெடுக்கென பதில் பேசினான்.

வர்மன், முல்லையை பார்க்க.. அவள் பேசுறேன் என்று கண்ணசைத்து “அண்ணா வளைகாப்பு போடலைன்னா குழந்தைக்கு ஆகாது” என்றதும்.

“என்ன குழந்தைக்கு ஆகாதா” என்று கலங்குபவன் போல கேட்க..

“ஆமா தம்பி வளைகாப்பு போடலைன்னா குழந்தைக்கு காதுல சீழ் பிடிக்குமாம்” என்று சாந்தியும் அவருக்கு தெரிந்ததைக் கூற..

சிம்மனும் வேறு வழி இல்லாமல் வளைகாப்பிற்கு சம்மதித்தான்.. வர்மன் அவன் பங்குங்கு தங்க வளையல் செய்து கொண்டு வந்திருந்தான்.. சாந்தி ,அவளுக்கு தங்கள் பரம்பரை நகைகயை கழுத்தில் போட்டுவிட்டார். முல்லை அவளுக்காக பட்டுபுடவை எடுத்துவந்தவள் அவள் கையில் கொடுத்து பிடிச்சிருக்கா என்று கேட்க.

அவளுக்கு பிடித்த பச்சை நிறத்தில் ரோஸ் பார்டர் வைத்து அன்னம் பறவை புடவையெங்கும் இருக்க.. ஆசையாய் தடவி பார்த்து “இது யாரு எடுத்துக்கொடுத்தா” என்றதும் “ம்க்கும் என்று தொண்டயை கணைத்து உள்ளே வந்தான் சிம்மன்.

“யாரு எடுத்தா உனக்கென்ன புடவையை கட்டிட்டு வா எனக்கு ஸ்டேசன் போகணும் நேரமாச்சு ” என்று அவளை கடிந்து கொள்ள..

“டேய் நல்ல நாள் அன்னிக்கு வஞ்சியை எதுக்கு வார்த்தையால வறுக்கற” என்று வர்மன் திட்டிக்கொண்டே உள்ளே வர..

“ஆமாடா நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்று கோவமாய் பேசி வெளியே வந்து நின்றான் சிம்மன்.

வஞ்சி கண்ணில் கண்ணீர் வர.. விசேஷ நாளில் கண்ணீர் வரக்கூடாதென கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டாள்.. புடவையை கட்டி தலைநிறைய மல்லிகையை சூட்டிவிட்டாள் முல்லை. இனியா அறைக்குள் வந்து “சித்தி இன்னிக்கு ரொம்ப அழகாயிருக்கீங்க” என்று சிரித்து வெளியே சென்ற இனியா “சிம்மா இன்னிக்கு சித்தி ரொம்ப மேக்கப்போட்டு கலக்குறாங்க” என்று சிம்மன் காதில் கிசுகிசுக்க.. சிம்மன் உள்ளே எட்டிப்பார்த்தான்..

அவள் தேவதை போல ரெடியாகி வெளியே வந்தாள்.. யாரையும் கூப்பிடவில்லை.. சாந்தியும் முல்லையும் சேர்ந்தே சமையலை செய்து முடித்தனர்.. ஒன்பது வகை சாப்பாடு செய்து இனிப்பு மூன்று வகை செய்து மனையில் வைத்தனர்.. வர்மன் பழத்தோட்டத்தையே வாங்கி வந்து விட்டான் போல.. தட்டுகளில் அடுக்கி வைத்திருந்தான்.

வஞ்சியை மனையில் உட்கார வைத்து “தம்பி நீங்களும் வந்து உட்காருங்க” என்றார் சாந்தி.. சிம்மனை ஏன் வரச்சொன்னோம் என்றிருந்தது சாந்திக்கு..

“ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ்வோம்னா வளைகாப்பு அன்று மனையில் ஜோடியா உட்காரலாம்.. குழந்தை பிறந்த பிறகு அவ உங்க வீட்டுக்கு வந்துடுவா நான் அவ பக்கத்துல உட்காரலை” என்று முகத்தில் அடித்தாற்போல பேச  வஞ்சிக்கு அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் வெளியே வந்து விட்டது..

சித்தார்த்க்கு கோவம் வந்துவிட “மாமா நானும் பார்த்திட்டேயிருக்கேன்.. நீங்க என் அக்காவ குத்தம் சொல்லி திட்டுறீங்க.. நான் இன்னிக்கே என் அக்காவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன்” என்று அவன் முன்னே நின்று தைரியமாக பேச.. சிம்மனுக்கும் , வர்மனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.. இனியா, சித்தார்த்தின் வாயை பார்த்தபடி அமர்ந்திருந்தது.. அஜய்க்கு கூட இன்று சிம்மன் பேசியது பிடிக்கவில்லை.. அங்கிள் நீங்க ஆண்டிய திட்டினது தப்பு.. என்று இன்று அஜயும் பேசிவிட்டான்.

வஞ்சிக்கோ தனக்காக இத்தனை குழந்தைகள், சிம்மனுடன் வாதாடுவதைக் கண்டவள் அழுகையை நிறுத்தி சிம்மனை மெச்சுதல் பார்வை பார்த்தாள்.. எனக்காக எத்தனை பேர் இருக்காங்க பாருங்க என்றிருந்தது அந்த பார்வை..

சிம்மன் அமைதியாக உட்கார்ந்துவிட்டான்.. சிறுவர்களுக்கு சரி சமமாக அவன் பேச விரும்பவில்லை.. அது என்று சட்டையை தூக்கிவிட்டு சித்தார்த், வஞ்சி பக்கம் போய் நின்றான்.

தனியா வாடா உன்னை என்று நாக்கை கடித்தான் சிம்மன்.. போயா என்று தலைசாய்த்து பேசினான் சித்தார்த்.

 

முல்லையும், சாந்தியும் வஞ்சிக்கு சந்தனம் தடவி  கைகளில் வளையல் போட்டு விட கண்ணீருடன் முல்லைக்கு நன்றி கூறினாள்.. வர்மன் அவன் பங்குங்கு தங்க வளையல் போட்டு விட்டு வஞ்சியை ஆசிர்வாதம் செய்தான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் அவளுக்கு பரிசு கொடுக்க பரிசு கொடுப்பவன் எதையும் கொடுக்காமல் அமைதியாய் சிலைபோல உட்கார்ந்திருந்தான்.. வஞ்சியின் மனமோ..அட்லீஸ் எனக்கு பிடித்த கண்ணாடி வளையல் வாங்கிக்கொடுத்திருக்கலாம்.. என்று சிம்மனை பார்க்க அவனோ யாருக்கோ வந்த விருந்து என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்.

“வளைகாப்பு முடித்து சாப்பிடவாவது சேர்ந்து உட்காருடா” என்று வர்மன் கெஞ்சியே விட்டான்.. டைனிங் டேபிளில் அவள் பக்கத்தில் வெறுப்பாய் வந்து உட்கார்ந்தான் சிம்மன்.

சாப்பிட்டு முடித்ததும் ஸ்டேசன் கிளம்பிவிட்டான்.. சாந்தி டெலிவரி டேட் நெருங்க சிம்மன் வீட்டில் தங்கி விட்டார்.. சிம்மனை, சித்தார்த் முறைத்துக்கொண்டேயிருப்பான்.. சிம்மன் சின்ன சிரிப்புடன் கடந்து சென்றுவிடுவான்.. இனியா அண்ணா அண்ணா என்று அஜயுடன் பேசுவது போல சித்தார்த்துடன் பேச. அவனும் இனியாவுடன் நன்றாக பழகிக்கொண்டான்.. அஜயுடன் சேர்ந்து விளையாடத்துவங்கினான்..

தங்கத்துரையின் வீட்டில் போதை பொருள் இருப்பது தெரிந்து சிம்மனும், வர்மனும் சென்று பார்க்க.. அங்கே பாக்கெட் பாக்கெட்டாக பொருட்களை வைத்திருந்தான் தங்கதுரை.. அதே நிமிசம் தங்கதுரையை கைது செய்து ரோட்டில் அடித்து இழுத்து வந்தான் சிம்மன்.. “டேய் சிம்மா என்னை அடிச்சு இழுத்துட்டு போறீல இதுக்கு சீக்கிரம் உன்ன அழவைப்பேன்டா” என்றவனை எக்கி உதைத்தான் வர்மன்..

“யாருகிட்ட குரலை உயர்த்திப் பேசுற” என்று இன்னொரு உதை உதைத்தான்.

“டேய் ரெண்டு பேரும் என் தொழிலை முடக்கிப்போட்டீங்கள்ள.. உங்களை கதற வைக்குறேன்டா” என்றான். அவனை ஜெயிலில் அடைத்த பிறகுதான் இருவரும் நிம்மதியாக இருந்தனர்.

ஐ.ஜி பிரேம் சிம்மனையும், வர்மனையும் பாராட்டி பேசினார்.. நீங்க ரெண்டுபேரும் சாதிச்சீட்டிங்கப்பா என்று இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்தார்.. ரொம்ப புகழாதீங்க சார்.. இன்னும் நாங்க கண்டுபிடிச்சிகிட்டேயிருப்போம் என்றான் சிம்மன்.

“உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க செய்ய நான் ரெடியா இருக்கேன்.. உங்களை சி. எம் கூட பார்க்க ஆசைப்பட்டார்” என்றதும் நண்பர்கள் இருவருக்கும் சந்தோசம்.. “தேங்க்யூ சார்” என்றனர்.. “உங்க கடமையை நீங்க செய்தீங்க என் கடமையை நான் செய்தேன் அவ்ளோதான்” என்று தோளை குலுக்கினார் ஐ.ஜி.

இறுதி செக்கப்பிற்கு அழைத்து செல்ல வேண்டிய நாள்.. சிம்மன் நானே உன்னை கூட்டிட்டுப் போறேன் என்று வீட்டிலேயே இருந்தான்.. அவளது மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் நடந்து வர.. சட்டென்று கால் தடுக்கி கீழே விழப்போக  “வஞ்சிஇஇ” என்று முதல் முறை அவள் பெயரை கூப்பிட்டு அவளை தாங்கியவன் “என்னடி பார்த்து வரமாட்டியா” என்று அவளை செல்லமாக கடிந்தான்.

“இல்லங்க கால் தடுக்கிடுச்சு.. இன்னிக்கு என்னமோ எனக்கு பயமாயிருக்கு” என்றதும்.

தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு “பயப்படாத பிரசவம் ஆகிடும்” என்றவன் ஏதோ அவளை குத்திப் பேச வாயெடுக்க இன்று அவளின் நிலைமையை பார்த்து வாயை அடைத்துக்கொண்டான்.

தங்கதுரை ஜெயிலில் இருந்து கொண்டே அவனது ஆட்களிடம் சிம்மனை முதலில் போடுங்க.. அப்புறம் வர்மனை போடலாம் என்று வஞ்சகமாக கூறிக் கொண்டிருந்தான்.

சிம்மன் வஞ்சியை செக்கப்பிற்கு அழைத்துச்  சென்றான்.. காரில் போய் கொண்டிருக்க ஹாஸ்பிட்டல் பக்கம் போய் விட்டான்.. ஹாஸ்பிட்டல் வந்தவன் காரை நிறுத்தி வஞ்சி இறங்க அவளுக்கு கைக்கொடுக்க மெல்ல எழுந்து வஞ்சி வெளியே வந்தாள்.. அப்போது சிம்மனை நோக்கி தங்கதுரை ஆள் கத்தியை தூக்கி விசிற..

“என்னங்க” என்று சிம்மனை தள்ளிவிட சரியாக வஞ்சியின் கையில் பட்டுவிட துடித்துப்போனாள்.. இரத்தம் வந்து கொண்டேருக்க.. சிம்மன் பதறிவிட்டான்..

“வஞ்சி! வஞ்சி!” என்று அவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டான் பதட்டத்தில் என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.. கத்தியை வீசியவன் நின்று எட்டிப்பார்க்க..அசந்த சமயத்தில் சிம்மன் மேல் வீசுவதற்கு ஓடிவந்தான்.. சிம்மன் துப்பாக்கியை எடுத்து அவனை சராமாரியாக சுட்டுவிட்டான்.

வஞ்சியை தூக்கிக்கொண்டு  ஹாஸ்பிட்டலுக்குள் ஓடினான்.. “டாக்டர் என் வொய்பை பாருங்க” என்று கத்தினான் அந்த ஹாஸ்பிட்டலே அதிரும்படி.. கத்தி கையில் ஆழமாக படாமல் மேலாகத்தான் பட்டிருந்தது.. வஞ்சிக்கு குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தில் அவளுக்கு வேறு பனிக்குடம் உடைந்துவிட்டது.. சிம்மன் கையில் பிசுபிசுப்பு ஏற்பட குனிந்து பார்த்தவனுக்கு ஏதோ நீர் போல தெரிய என்னமோ ஏதோவென்று எண்ணியவன் “வஞ்சி வஞ்சி உனக்கு ஒன்னும் ஆகாதுடி.. பயப்படாத.. குழந்தை சீக்கிரம் வந்திடும்” என்று அவளை  சமாதானப்படுத்த..

“என்னங்க எனக்கு பயமாயிருக்கு.. நான் செத்திருவேனா.. நான் உங்க கூட வாழ ஆசைப்படுறேன் மாமா.. என்னை மன்னிச்சிட்டேனு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.. என்று அவளுக்கு வார்த்தை வர தடுமாற.”

” என்னடி எந்த நேரத்துல என்ன பேசுற.. அடிச்சி கொன்னிருவேன்டி.. உனக்கு எதுவும் ஆகாது.. நான் தாண்டி உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. உங்க சித்தப்பாவ நான் கொன்னிட்டேனு தான என்னைக் கொல்ல  வந்த.. உன் இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்டி” என்று அவளை சாந்தப்படுத்தி நீ குழந்தையோட வா நாம சந்தோசமாய் வாழலாம் என்று கூறிக்கொண்டிருக்க

டாக்டர் வஞ்சியை பிரவச வார்டுக்குள் கூட்டிக்கொண்டு போக.. சிம்மனும் அறைக்குள் சென்றான்.. வஞ்சி வலியில் கத்திக்கொண்டிருக்க.. அவள் காயத்துக்கு கட்டுப்போட்டிருந்தனர்.. சிறிது நேரத்தில் நரசிம்ம வர்மனின் தவப்புதல்வி பூவுலகிற்கு “ங்கா ங்கா” என்று கத்திக்கொண்டு வெளியே வந்தது.

சிம்மன் ஆனந்தத்தில் வஞ்சியின் நெற்றியில் முத்தம் கொடுத்து “தேங்க்ஸ்டி.. இந்த அனாதை பயலுக்கு மகள பெத்து கொடுத்துட்டே” என்று சந்தோசத்தில் சொல்லிவிட..

“அப்ப நான் வேண்டாமா” என்றாள் சோகமாக வஞ்சி..

“நீயும் தாண்டி பொண்டாட்டி எனக்கு வேண்டும்.. உன்னை திட்டிப்புட்டு நான் தவிச்சது எனக்குத்தான் தெரியும்டி” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..

டாக்டர் “போலீஸ் தம்பி நாங்க இங்க இருக்கோம் உங்க ரொமான்ஸ வீட்டுக்குப் போய் வச்சிக்கோங்க” என்றதும் வஞ்சி வெட்கத்தில் சிம்மன் வயிற்றில் புதைந்துகொண்டாள்.

சிம்மன் பிரசவ அறையிலிருந்து வெளியே வந்து வர்மனுக்கு தன்னை தாக்க வந்த விசயத்ததைக் கூற.. தங்கதுரையை ஜெயிலில் வைத்தே போட்டுத்தள்ளினான்.. முகேஷை, முல்லையின் அண்ணன் என்ற முறையில் விட்டு வைத்திருந்தனர்.. அவன் ஒரு கொசு.. அவனால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று அவனை விட்டுவிட்டனர்.. முல்லையின் அண்ணன் என்ற முறையில் முகேஷ் தப்பித்துவிட்டான்..அவனிடம் எங்காவது உன் சேட்டையை காட்டின தங்கதுரை போன இடத்துக்கு உன்னை அனுப்பி விடுவேன் என்ற வர்மன் மிரட்டிவிட்டான்..

“அய்யோ சார் நான் எந்த தப்பும் செய்யமாட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டு விட்டான்.

வஞ்சி மூன்றாம் நாள் குழந்தையுடன் வீட்டுக்கு வர.. இப்போது முல்லை மூவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு வந்தாள்..

சிம்மன் அறையில்தான் வஞ்சியும் குழந்தையும் இருக்கிறார்கள்.. குழந்தையை விட்டு சிம்மன் பிரியவேமாட்டான் ஸ்டேசன் சென்றாலும் மதியம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போவான் 30 நாட்கள் ஆகிவிட இதோ இன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா.. வஞ்சி குழந்தைக்கு பசியாற்றிக்கொண்டிருக்க.. சிம்மன் மகிழ்ச்சியுடன் அறைக்குள் உள்ளே வந்தான்.. அங்கே குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்க சிம்மனை கண்டதும் முந்தானையால் மூட “ஆமா நான் பார்க்காததா” என்று தலைகோதி திரும்பி நின்றான்..

இருவரும் சேர்ந்து படுத்திருப்பர் குழந்தை நடுவில் படுத்திருக்கும்.. மனதால் இணைந்து விட்டனர்.. குழந்தை இருவரையும் சேர்த்து வைத்தது.. ஆனால் இருவரும் உடலால் இணையவில்லை.. அவள் பசியாற்றி முடித்ததும் குழந்தைக்கு உதடு துடைத்து சிம்மன் கையில் கொடுக்க பெருமூச்சுடன் குழந்தையை வாங்கிக்கொண்டான்.. வஞ்சி புடவையை சரிசெய்து கொண்டு கிளம்ப.. “ஏய் நில்லுடி” என்றான்.. குழந்தையோ பசியாறியதும் தூங்கிவிட.. படுக்கையில் போட்டு விட்டு அவள் பக்கம் வந்தவன் டிராவில் இருந்து நகைப்பெட்டியை எடுத்தான்.. அதில் தங்க காசுமாலை இருக்க அதை ஆசையாய் அவள் கழுத்தில் போட்டுவிட்டான்.. அவள் கண்ணீருடன் திரும்பி என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டிங்களா? என்று வார்த்தைகள் வதங்கி வர..

“உன்னை நான் மன்னிச்சுட்டேன்டி” என மோகத்துடன் வஞ்சிக்கொடியை முத்தாடித்தான் நரசிம்மவர்மன்.

குழந்தை சிணுங்க.. இருவரும் விலகி நிற்க வஞ்சி வெட்கத்தில் தலைகுனிந்து குழந்தையை தூக்கி தட்டிக்கொடுத்து “என்னங்க வெளியே நமக்காக வெயிட் பண்ணுறாங்க” என்றதும்.

“வா போலாமென்று” குழந்தையுடன் குடும்பமாய் சிம்மன் ஹாலுக்கு வந்தான்.. அங்கே ஐய்யர் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்க.. சிம்மன் மடியில் வைத்து “அபிநயா” என்று பெயர் சூட்டினர்.. சித்தார்த் மட்டும் இன்னும் சிம்மனை முறைத்துக்கொண்டிருக்க..

“டேய் சித்தார்த் இங்க வந்து பாப்பா பேரு சொல்லு” என்று சிம்மன் கூப்பிட நான் வரலை என்றான்.

“சித்து மாமா வரச்சொல்றாங்கள்ள வா” என்று வஞ்சிக்கொடி கூப்பிட.. வேறு வழியில்லாமல் குழந்தையின் காதில் “அபிநயா.. அபிநயா.. அபிநயா” என்று மூன்று தரம் சொல்லியவன் குழந்தையின் விரல் பிடித்து இழுத்துவிட்டான்..

அது சிம்மனின் தவப்புதல்வியாச்சே.. அவன் முகத்தில் மூத்திரம் பெய்து அவனது கையில் காலால் உதைத்து விட அனைவரும் சிரித்தனர்..

சிம்மன், சித்தார்த்  பக்கம் சென்று “டேய் என் பிள்ளையோட விரலை பிடிச்சி இழுக்கிறயா.. என் பொண்ணு என்ன பண்ணினா பார்த்தியா” என்று அவனை கிண்டல் செய்ய..

சாந்தியின் அருகே போய் நின்று கொண்டான் சித்தார்த். இனியாவும், அஜயும் அபிநயாவை விட்டு நகராமல் இருந்தது.. அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

வர்மன் அறையில் குழந்தைகள் அசதியில் தூங்கிவிட வர்மன் முல்லையை பார்த்து “ஏய் நாமளும் இன்னொரு பாப்பா கொண்டு வரலாமா” என்று கேட்க..  தலையணைக்கு உரை மாத்திக்கொண்டிருந்த முல்லை தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை காண்பித்து இவங்க ரெண்டு பேரே போதும் என்று சிரிக்க..

“ஏய் என்னடி எனக்கு இன்னொரு குழந்தை வேணும்” என்று பிள்ளைகள் படுத்திருந்த கட்டிலுக்கு நடுவே ஸ்கீரினை இழுத்துவிட்டு முல்லையை அணைத்து அவள் இதழில் கவிபாடினான் இந்திரவர்மன். அவன் கைகளோ ஆடைகளைந்து அவள் அழகியல்களில் விரல்களை விளையாடவிட பெண்ணவள் புதிதாய் பூத்தாள்.. ஆண்மகன் கையில் உருகினாள் தங்கமாய்.. முல்லை மலரில் தேன் எடுக்கும் வண்டாய் மாறினான் இந்திர வர்மன்.. கூடல்முடித்து ஏய் இன்னொரு முறை லிப் கிஸ் பண்ணுறேன் என்று வஞ்சியின் இதழில் மோகத்துடன் முத்தாடினான்.. எத்தனை முறை முத்தம் கொடுத்தானோ தெரியாமல் முல்லையின் கன்னத்தில் தொடங்கி பாதம் வரை கொடுத்துக்கொண்டே இருந்தான் இந்திரவர்மன்.

சிம்மன் அறையில் குழந்தை சிணுங்க குழந்தைக்கு பசியாற்றி தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு, வஞ்சி சத்தம் கேட்டு திரும்ப சிம்மன் கதவடைத்தான்.. அவள் அருகே மோகப்பார்வையுடன் நடந்து வர..வஞ்சிக்கு வெட்கம் வந்து தலையை குனிந்து கொண்டாள்.. வஞ்சி கட்டிலில் படுத்துவிட.. சிம்மன் குழந்தைக்கு முத்தம் கொடுத்து அவனும் கட்டிலில் படுத்துவிட.. யார் முதலில் ஆரம்பிப்பது என்று இருவரும் போட்டி போட சிம்மன் கை அவளது இடுப்பில் தவளவிட.. பெண்ணவள் ஆண்மகனை திரும்பி பார்க்க மோக பித்துக்கொண்டு பெண்ணவளை இறுக்கி அணைத்துக்கொண்டவன் அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான்.. சங்குகழுத்தில் பற்தடம் பதித்தான்.. இத்தனைநாள் பிரிவை அவளிடம் காட்டினான் சிம்மன்.. ஆழிப்பேரலையாய் பெண்ணவளை தன்னுள் சுருட்டிக்கொண்டான்… பெண்மை பெட்கத்திற்குள் புகுந்து முத்தெடுத்தான் சிம்மன்.. கூடல் முடிந்த பிறகும் முத்தமோ முத்தம் என்று கொடுத்துக் கொண்டேயிருந்தான்..

“எத்தனை முத்தம் கொடுப்பீங்க” என்று வஞ்சிக்கொடி சிணுங்க..

“நான் 1001 கிஸ் கொடுப்பேன்” என்றவன் அவள் தேகம் முழுவதும் மோகத்துடன் அசுர வேகத்தில் முத்தாடினான் சிம்மன்..

சிம்மனும், வர்மனும் தனித்தனியாய் பிறந்திருக்கலாம் ஆனால் அவர்கள் இருவரும் நட்பெனும் தோட்டத்தில் பூத்துக்குழுங்கினர்.. அவர்கள் தோட்டத்தை இன்னும் வாசம் மிக்க மலர்களாக முல்லைக்கொடியும், வஞ்சிக்கொடியும் சேர்ந்து சிம்மனுடனும் வர்மனுடனும் வாசம் மிக்க மலர்களாக குழந்தைகளுடன் சந்தோசமாய் வாழ்ந்தனர்..

சித்தார்த் அஜய் இனியா அபிநயா இவர்களை வைத்து இரண்டாம் பாகம் எழுதுவேன்..

நாமும் விடைபெறும்

வாழ்க வளமுடன்.

நன்றி..

3 thoughts on “28 மோக முத்தாடு அசுரா”

  1. Технологии будущего для оборудования переговорных комнат сегодня
    оборудование для переговорной комнаты [url=https://oborudovaniye-peregovornykh-komnat1.ru/]оборудование для переговорной комнаты[/url] .

  2. Сувенирная продукция с логотипом: стильные подарки для вашего бизнеса
    заказать сувениры с логотипом [url=https://suvenirnaya-produktsiya-s-logotipom.ru]https://suvenirnaya-produktsiya-s-logotipom.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top