ATM Tamil Romantic Novels

தலைவனிடம் தூது போவதரடியே 24

தலைவனிடம் தூது போவதரடியே 24




யுகம் கடந்தாலும் உன் மீது நான் கொண்ட நேசம் மாறாது..



இரவை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தாள் அனா..

 

அத்தான் என்ன பாக்காம லண்டன் போய்டுவாங்களா.. நாம அதுக்குள்ள போய்டனும் ..குட்டி இப்போ நீயும் அம்மாவும் அப்பாகிட்ட போறோம்.. என்று கூறியதும் குழந்தை அசைவு தெரிய மனது ஆனந்தத்தில் திளைத்தது..



அவர்கள் வீட்டின் பின்புறம் பெரிய பெரிய மதில் சுவர் உள்ளது அதன் மீது மழையின் போது அதன் மேல் விழுந்த மரத்தின் மீது  அனா மிகவும் சிரம பட்டு தான் போட்டிருந்த மேட்டர்னிட்டி கௌனை தூக்கி பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறி மெயின் ரோட்டில் சில குதிக்கவும் அங்கு வைக்கோல் அடுக்கி வைக்க போட்டிருந்தது

 (அதெப்படி திமிங்கலம் அனா விழ போரான்னு வைக்கோல் கொட்டி வச்சுறுப்பா?..எனக்கென்னமோ அந்த தாய்கிழவி மேல தான் டவுட்டு)

 

அதன் மேல் விழுந்து லேசான அதிர்வோடு இறங்கி வேக வேகமாக நடந்தாள்..நடு இரவு என்பதால் அங்கு ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை ..அஜு எங்கே தன்னை தவிக்க விட்டு போய்விடுவனோ என்று அழுகையுடன் செல்லவும் அவளது தோழி ஸ்ருதி யின் தந்தையும் அனா வின் பெரியப்பாவுமான  தர்மலிங்கம் அங்கே வர இவளை பார்த்து கொண்டார்..

 

அனன்யா.. நீ எப்படி இந்த நேரத்துல என்னாச்சு எங்க போற.. வா அப்பா உண்ண வீட்ல விடறேன்.

 

அது வந்துப்பா நா வாக்கிங் வந்தேன் 

 

இந்த நடு ரத்திரில வாக்கிங் போவாங்க அத நம்பனும் அப்டித்தான .அவள் முகமும் கண்ணும் சரி இல்லை என்பதை உணர்ந்தாலும் .சொல்லு அனா எங்க போற குரலில் கண்டிப்பு வரவும்

 

பெரியப்பா அது வந்து நா.. என்னோட அத்தான பாக்க போறேன்..என்ன ******ஹோட்டல் ல ட்ராப் பண்றிங்களா என்று கேட்கவும் மகளின் வாழ்க்கையும் அவள் இப்போது என்ன நிலையில் இருக்கிறாள் என்று தெரிந்து மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் அவள் சொல்லிய ஹோட்டல் முன்பு இறக்கி விட்டவர்..

 

அனா இது உன் வாழ்க்கை ..நீ நல்லாருக்கணும் எந்த பிரச்சனை னாலும் என்கிட்ட சொல்லு உனக்காக அப்பா நா இருக்கேன் என்று தலையை தடவி விட்டவர்..அர்ஜுனை பார்க்க தானும் வருவதாக கூற இல்லப்பா இப்போ வேண்டாம் நாளைக்கு உங்க மருமாகனோட வரேன்.. என்று சென்றவளை பார்த்துவிட்டு அவன் தங்கியிருக்கும் அறை எதுவென்று கேட்டு அவளை அனுப்பி விட்டு  ஒரு பெரு மூச்சு விட்டு கிளம்பினார்.




“மூன்றாவது மாடியில் லிஃப்ட் நிற்கவும் அறை என்ன 777 அவன் எப்போதும் தங்கும் அறையில் காலிங்பெல் அழுத்த .,முதலில் எரிச்சலுற்றவன் கோவத்தோடு இந்த நேரத்துல யார் வந்து இப்படி டிஸ்டப் பண்றது ச்சே., நிம்மதியா தூங்க கூட முடில.. நானே இப்ப தாண்டா என் பொண்டாட்டிய மறக்க முடியாம உருண்டு பிரண்டு படுத்து தூக்கத்தை கொண்டுவந்தா எரிச்சல் பண்றாங்க என்று கதவை படார் என்று திறக்கவும் அனா அவன் யோசிக்கும் முன்பு கட்டி பிடித்திருந்தாள்..



அர்ஜுன் யோசிக்க முடியாத படி அவளை இறுக்கி அணைத்து தன் கைவளைவில் வைத்திருந்தான்.. மெல்லிய விசும்பல் சத்தம் மட்டும் அவளிடம்..அர்ஜுன் ,”தர்பூஸ் அழுதா எனக்கு இங்க வலிக்கும் டி..அழாத டி எனக்காக வந்தியா அம்மு என்று அவழிதலில் மென்மையாக முத்தம் வைத்தவன்.. கிஸ் மீ தர்பூஸ் உன்னோட ஸ்பரிசர்த்திற்காக ஏங்கிட்டு இருக்கேன்..



சிறிது நேரம் அழுதவள் ..அவன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவனை அடி வெளுத்து வாங்கி விட்டாள்..அவனும் அவள் கொடுக்கும் அடிகளை தாங்கி நின்றான்.. அவள் மூச்சு வாங்கி பேச ஆரம்பிக்கும் போது அவளை மென்மையாக அனைத்து அழுத கண்களில் முத்தம் வைத்து அவள் இதழில் நெருங்கி இருவர் உதடும் உரசும் படி இருக்க ..அவளுக்கு வார்த்தைகள் பஞ்சமாகி போனது ..சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்தவன் அவள் பொன்னிதழ்களில் தன் இதழை பொருத்தி மென் முத்தம் கொடுக்க அது கடைசியில் வன்முத்தமாக மாறியது..அவள் பிஞ்சு இதழ் கடித்து சுவைத்தவன் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத்தவாறு அள்ளி அனைத்து கொண்டு சுவற்றில் சாய்த்து முத்தம் கொடுத்து கொண்டிருந்தான்..கைகள் இரண்டும் அவளது பின் மேனியை கசக்க ஹக் என்று துல்லியவளை கட்டிலில் படுக்க வைத்தவன் ..அவள் காதில் தர்பூஸ் எடுத்துகட்டுமா டி உன்னை..இந்த அத்தான ஏத்துப்பியா டி..என்று அவள் சம்மதம் சொல்ல காத்து நின்றவன்..

 

அவள் மௌனமாக இருக்கவும் ..இன்னும் நம் மேல் நம்பிக்கை வரவில்லை போலும் என்று அவளிடம் இருந்து விலகியவன் அந்த அறையினை விட்டு வெளியில் செல்ல எத்தனிக்கும் பொழுது 

 

ஏன் டா அத்தான்.. எங்களை விட்டு போக போறியா..இவ்ளோ நாள் என்ன பாக்காம எங்க போன நீ..

இப்போ கூட நாங்க வேண்டானு போறல்ல போ டா என்று முகத்தை மூடி அழுதவள் 



அவள் அழுத அழுகை அவனை ஒரு நொடி எதையும் யோசிக்க விடாமல் தர்பூஸ் உன்ன விட்டு நா எங்கயும் போக மாட்டேன் டி..

 

அப்போ நேத்து நீங்க நம்ம ரூமுக்கு வந்திங்க தான ..



கொஞ்சம் அதிர்ந்தவன்..அது வந்து டி ..,

 

சொல்லுங்க அத்தான்



ஆமாடி, உண்ண பாக்காம இருக்க முடியல அதோட நீ படுற கஷ்டத்தை என்னால தாங்கிக்கொள்ள முடியல அதா வந்துட்டேன்..இப்போ என்ன அதுக்கு அதா கண்டுபிடிச்சுட்டியே என்று காய்ந்தான்.

 

அத்தான் நீங்க வந்திங்க சரி .எனக்கு எப்படி தெரியும்னு நீங்க யோசிக்கவே இல்லையே..நீங்க என்னைய காதலிக்கிறீங்க ஆனா உங்க ஈகோ அத தடுக்குது.. நீங்க எங்கூட இருந்துட்டு போகும் போது உங்களோட லவ் பைட்டை யும் கொடுத்துட்டு போய்ட்டீங்க..

 

இருந்தாலும் காலையில நம்ம வீட்ல எல்லார்ட்டையும் சொல்லி உங்க கூட வரலாம்னு நினைச்சேன் ..அந்த பாட்டியும் என்ன சொல்ல விடல..பேரனும் என்னையும் என் புள்ளையும் விட்டுட்டு லண்டன் ஓடி போக போறார்.கரெக்ட் ஆஹ் அத்தான் என்று விரக்தியாக சிரித்தவள் ..,எழுந்து உங்களுக்காக நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்.அதை மறந்துடாதீங்க ..



தர்பூஸ்…

 

என்னாச்சு அத்தான் ,கிளம்புங்க மார்னிங் பிலைட் எப்போ டைம் ஆய்ட போகுது…ம்ம்ம் கெட் ரெடி நானும் குட்டியும் உங்களை வழி அனுப்பி வைக்கிறோம்.. என்று சொன்னவளை அதிர்ந்து பார்த்தவன் ..ஏதும் பேச முடியாத நிலமையில் அமர்ந்து விட்டான்…




அவள் வந்து விட்டாள்.. இனி அவன் மட்டும் தான் என்று..அவன் தான் யோசிக்க வேண்டும்..உண்மையான அன்பா இல்லை ஈகோவா என்றா?



சட்டென அவளருகில் வந்து அணைத்தவன் அணைப்பு சொல்லியது இனி எல்லாம் இவளே என்று ..



இவ்ளோ என்னைய புரிஞ்சு வச்சுறுக அப்பறம் ஏன் டி என்ன பார்த்தாலே ஒடுன..

 

ம்ம் அது வந்து நீங்க பயில்வான் மாதிரி இருக்கீங்களா உங்களை சின்ன வயசுல இருந்து பார்த்தாலே பயமா இருக்கும்..கல்யாணம் ஆனதும் ஏதோ சொல்ல வந்தவளை நீ ஏதும் சொல்ல வேண்டாம் டி என் பொண்டாட்டி நானே புரிஞ்சுகிட்டேன்..இனிமே அதெல்லாம் மறந்து விடுவோம் கண்மணி என்று மன்மதனுக்கு அழைப்பு விடுத்தனர்.. இருவரும்.



1 thought on “தலைவனிடம் தூது போவதரடியே 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top