அத்தியாயம் 1
சென்னை விமான நிலையம், பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. அறிவிப்புகளை ஒரு புறம் ஒலி பெருக்கீ மூலம் அறிவித்து கொண்டு இருந்தனர்.அதே நேரம், நண்பர்கள் அவள்,ஒருத்திக்காக காத்து கொண்டு இருந்தனர். சந்தியா, அர்ஜுன் என்னடா?இந்த ஜீவிக்காவ,இன்னும் காணல. டைம் வேற போயிட்டே இருக்கு. போன் பண்ணா பிஸினு வருது, என்று புலம்பிக்கொண்டு இருந்தாள். அர்ஜுன்,ஆமாடி எல்லாத்தயும் என்கிட்டயே கேளு, நேத்து நீயும் அவளும் பல மணி நேரமா.. பேசி கடலை போட்டீங்கள? அப்ப இதெல்லாம் பேசி இருப்பிங்க தானே, வந்துட்டா?புலம்பிகிட்டு என்றான்.
அதில் கோவம் கொண்ட சந்தியா, போடா தடியா, உன் கிட்ட போய் கேட்டேன் பாரு, என்ன சொல்லணும், நேத்து உன்ன, கட் பண்ணிட்டு நாங்க பேசின கடுப்புல தானே இப்படி பேசுற? எனக்கு தெரியும் டா எரும… என்றாள்.
அதான் தெரியுதுல போடி அங்கிட்டு, ஜீவிக்கா வரட்டும், அவளுக்கு இருக்கு, என்னய்ய விட்டுட்டு அப்படி, என்ன பேசினீங்கனு கேட்கணும். சொல்லலைனு வெச்சிக்க உன்னைய தாண்டி கொட்டுவேன். என்றவன், லேசாக அவள் தலையில் கொட்டினான். சந்தியா, ஸ்ஸ்… ஆ என தன் தலையில் வைத்து தேய்த்தவள் , இருடி மவனே அவதான் உனக்கு கரெக்ட், என்ன அடிச்சிட்டல.. உன்ன என்ன பண்றேன் பாருடா தடியா? என்றவள் தன் முகத்தை கோனி திரும்பி அமர்ந்து கொண்டாள்.
இது எப்பவும், அவர்களுக்குள் நடப்பது தான். அதிலும் இவர்கள் காதலர்கள். இவர்கள் தினம் தினம் போட்டு கொள்ளும் சண்டைகளை பார்த்தால் 1% சதவிகிதம் கூட யாரும் காதலர்கள்,என்று நம்ப மாட்டார்கள். அர்ஜுன் போன் பார்த்து கொண்டு இருந்தான். சந்தியா அவனை திட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் ஹாய் மச்சீஸ் சாரி, சாரி, கைஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு வீட்ல சொல்லிட்டு வரணும் ல அதான். வர வழில கொஞ்சம் டிராபிக் வேற அதான் லேட் ஆகிடுச்சு என்றவள், சந்தியாவின் அருகில் அமர்ந்து அவளை கட்டிக் கொண்டாள் . அவள் வேறு யாருமில்லை இவ்வளவு நேரம் யாருக்காக சண்டை போட்டார்களோ? அந்த ஜீவிகா தான். சந்தியா, போடி நான் உன் கூட சண்டை என்றாள். ஜீவி, அச்சோ!?.. என் பேபிக்கு என்ன ஆச்சி, டேய் படவா!.. அவளை என்னடா.. பண்ணி வெச்ச ஒரு 15 மினிட்ஸ் லேட்டா வந்துட்டேன், அதுக்குள்ள ஒரு பெரிய வாரே?..நடத்தி முடிச்சிட்டீங்களா? என்றாள் இடுப்பில் கை வைத்து,
அர்ஜு, ஜீவி நான் அமைதியா தான் இருந்தேன், இந்த தயிர் வடை தான் என்ன சீண்டி.., சண்டை வாங்கி னா? சந்தியா, உடனே போடா ஊசி போன பிரியாணி மண்டையா? நீதான் டா நான் கேட்டதுக்கு, பதில் சொல்லாம இருந்த, என மீண்டும் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். ஜீவி, இவங்களுக்கு வேற வேலையே இல்ல.. என மனதில் நினைத்தவள் ஸ்ஸ்.. பா முடியல உங்ககிட்ட,திரும்பவும் ஆரம்பிக்காதீங்க முடியல என்னால,.. வாங்க ரெண்டு பேரும் முதல்ல, பிலைட் டைம் ஆச்சி என்றவள், இருவரையும் அழைத்து கொண்டு விமானத்தில் மதுரை புறப்பட்டாள்.
அதே சமயம், ஜீவிக்கு போன் கால், யார் என்று எடுத்து பார்த்தவளுக்கு கண்களில் அத்தனை மகிழ்ச்சி. திரையில் பெயரை பார்த்தவள் போன்னை அட்டேர்ன் பண்ணி மகிழ்ச்சியுடன் நித்தீன் என்றாள். நித்தீன், ஹாய் ஜீவி பேபி எப்படி இருக்க? நல்லா இருக்கியா? மத்தவங்க எல்லாம் எங்க?என்றான். ஜீவீ , எஸ் நித்தீன் டால்ஸ், நீ எப்படி இருக்க? பிசினஸ் எப்படி போய்ட்டு இருக்கு என்றாள். நித்தீன், எஸ் ஜீவி பேபி எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு. என்றான். ஜீவி, ம்ம்.. நம்ப மஞ்சு கல்யாணத்துக்கு தான், மதுரைக்கு பிலைட்ல, போய்ட்டு இருக்கோம், நீயும் வருவ ல டால்.நித்தீன்,எஸ் பேபி கண்டிப்பா, உங்களை எல்லாம் பாத்து ரொம்ப நாள் ஆச்சி, so நாளைக்கு கல்யாணத்துல, இருப்பேன் என்றவன் அர்ஜுன் கிட்ட,போன் கொடு பேபி என்றான்.
ஜீவி, இப்பதான் சந்துவும், அர்ஜுவும் சண்டை போட்டு தூங்கிட்டு இருக்காங்க, இரு கொடுக்கிறேன் என்றாள். அதில் சிரித்த நித்தீன், இன்னும் “டாம் அண்ட் செர்ரி” யா தான் இருக்காங்களா? என்றான். ஜீவி, ஆமா நித்தி, திருத்தவே முடியாது ரெண்டையும் என்றவள், தூங்கி கொண்டிருந்த அர்ஜுன் கையில் நறுக்கென கிள்ளி எழுப்பி விட்டு, அர்ஜு…,நித்தி லைன் ல இருக்கான் பேசு என்றாள். அர்ஜுன், துக்கத்தில் இருந்து எழுந்தவன், தன் கைகளை தேய்த்து கொண்டு, ராட்சசி,… அதுக்கு இப்படியாடி கிள்ளுவ? போடி வலிக்குது என்றான். ஜீவி, ம்ம்கூம்.. லேசா கிள்ளினேன்,அதுக்கே மூஞ்ச தூக்குறடா தடியா? முதல்ல அவன் கிட்ட பேசு என்றவள், தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுன் சிறிது நேரம் நித்தீன் உடன் பேசியவன் சரி மச்சான் வெச்சிடுறேன். நேர்ல பேசிக்கலாம் என்று வைத்து விட்டான். மாலை 4 மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தனர். மஞ்சு இவர்களுக்கு கார் அனுப்பி இருந்தாள். அதனால் சிரமம் இல்லாது மஞ்சுவின் வீடு வந்து சேர்ந்தனர். அவள் ஊர் மதுரையில் செட்டிகுளம், அழகான ஊர், மஞ்சுவின் நண்பர்கள் என்பதால் அவர்கள் வீடு போலவே அருகில் இருந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.இரவு 7.30 மணியளவில் அவர்களை தேடி மஞ்சு வந்தாள். சாப்பாட்டு கூடையுடன், ஹாய் மச்சீஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க வாங்க சாப்பிடலாம் என்றாள். ஜீவி, வாடி கல்யாண பொண்ணே, எப்படி டீ உன்ன இங்க வர விட்டாங்க!?.. நாளைக்கு கல்யாணத்த வெச்சிகிட்டு ம்ம்.. என்றவள் அவளை அணைத்து கொண்டாள்.
உடனே சந்தியா, ஏய்! சந்து.. என்னடி உன் மாமாவ எங்க கண்ணுல காட்டாம வெச்சி இருக்க, எங்களுக்கு எல்லாம் indro பண்ண மாட்டியா மச்சி….?என இழுத்தாள். அர்ஜு,அடியேய் தயிர் டப்பா,… ரொம்ப வழியாதடி, நீ ரொம்ப ஜொள்ளுனு தான்,மஞ்சு அவ மாமன உன் கிட்ட, காட்டமா..மறச்சி வெச்சி இருக்கா…. நீ சைட் அடிச்சி, அவ மாமனை கண்ணாலையே கரைச்சிட்டா?!..அதான், என்றவன், நக்கலாய் சந்தியாவின் தோளில் கையை போட்டு, சரியாடி நான் சொன்னது, என்றான் புருவத்தை உயர்த்தி,அதில் கோவம் கொண்ட சந்தியா, ‘ஏய் ‘என்னடா சொன்ன?!நானாடா? ஜொள்ளு விடுறேன். அவர் என்ன சக்கரையா?! தண்ணில போட்டு கரைக்க, எரும என்னையா? கிண்டல் பண்ற, உன்ன என்ன பண்றேன் பாருடா பன்னி..,?!என்றவள் அவன் தலை முடியை பிடித்து ஆவேசமாக ஆட்டினாள். அர்ஜு, அடியேய் பேயே, என் முடிய விடுடி, தயிர் சாதம் அச்சோ ஜீவி, மஞ்சு, காப்பாத்துங்கடி, இந்த ராட்சசி என்ன கொல்ல பாக்குறா? என கூச்சல்லிட்டான்.
இவர்கள், சேட்டையை பார்த்த ஜீவி, மஞ்சு,இருவரும் சிரித்தபடி,சந்தியாவை இழுத்தனர். ஆனால் அவர்கள் இழுத்ததும் சந்தியா அவன் தோள் பட்டையில் கடித்துவிட்டாள். அர்ஜு, ஐயோ!! பையித்தியக்காரி.. என்ன கொல்ல பாக்குறாளே,? என்றவன் அவளை தள்ளி விட்டு ஓடினான் வெளியே,சந்தியா விடாமல் அவனை துரத்தி கொண்டு ஓடினாள். அவர்கள் செய்யும் அலம்பல்களை கண்டு மஞ்சுவும், ஜீவியும், வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் அமைதியாக உள்ளே வந்தனர். அதை கண்ட மஞ்சு,என்னடி சந்து சண்டையெல்லாம் முடிஞ்சதா? இப்பவாச்சும் சாப்பிடுறிங்களா? என்றாள்.
சந்தியா, மௌனமாக ம்ம்…. சாப்பிடலாம் என்றாள தலை நிமிராமல்,அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஜீவி, என்னடி மஞ்சு நீ சாப்டியா? என்றாள். மஞ்சு, இல்லடி கொஞ்சம் நேரம் பொறுத்து சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுங்க என்றாள். சந்தியா சாப்பாட்டை வாயில் வைத்தவள் ஸ்ஸ்ஸ்… ஆ என்றாள். ஜீவியும்,மஞ்சுவும், ஒரு சேர என்னடி ஆச்சி!?.. என்றனர் சிரித்தபடி,
தொடரும்….
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 🙏…..
super