ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 4

அத்தியாயம் 4 

     மதுரையில்,இரவு 7:00 மணி மஞ்சு மற்றும் மருதுவுக்கு மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி,  தோழர்கள், தோழிகள், உற்றார், உறவினர்,என இடமே கலைகட்ட ஆரம்பித்து இருந்தது. அசைவ விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் டி ஜே இசைத்து, கொண்டிருந்தது, மணமேடையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தி,பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிகா, நால்வரும் சந்தோஷமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தியா லெகங்காஅணிந்திருந்தாள். ஜீவிகா, புடவை அணிந்து இருந்தாள். நித்தியும் அர்ஜூவும் வெஸ்டன் உடையில் இருந்தனர்.

       அர்ஜுன்,அடியே! சந்து.. நீயும் புடவை, கட்டி இருக்கலாம் இல்ல, அவளை பாரு பொண்ணு மாதிரி அழகா இருக்கா, நீயும் இருக்கியே ஆயாவுக்கு,நைட்டி போட்ட மாதிரி, என்றான் அவள் உடையை பார்த்து,அதில் கோபம் கொண்ட சந்தியா, நான் உனக்கு ஆயா மாதிரி இருக்கேனா?!… சொல்லுடா? சொல்லுடா?என்றாள்,ஹை வாய்ஸில் அவனின் காதை திருகி,அதில் துடித்த அர்ஜுன்,ஏய்? ராட்சசி?! விடுடி… என்னைய விடுடி.. வலிக்குதுடி என்றான். ஜீவி,டேய்! ஏன்டா?அவகிட்ட வம்பு இழுக்கிற,அவ சும்மா தானே இருந்தா, அர்ஜுன், அடியே நான் சும்மா தாண்டி சொன்னேன், அதுக்குள்ள இந்த பிசாசு..! என் காத கிள்ளிட்டா!? என்றான். நித்தின், மாம்ஸ்.. வாடா அந்த பக்கம் நெறைய பிகருங்க இருக்கு, நாம போய் சைட் அடிக்கலாம் என்றான்.

      அர்ஜுன், ஆமா மாப்ள வாடா.. போகலாம்,மச்சி.. அங்க பார்டா…அந்த கிரீன் கலர் தாவணி. ஆமா மாப்பிள்ளை சூப்பர் பிகர் டா என்றான். சந்தியா, டேய்! டேய்! எரும மாடு, என்ன தவிர யாரையாவது பார்த்த உன் கண்ணு,முழிய,தோண்டிடுவேன்டா என காதில் விழும்படி கத்தினாள். அர்ஜு, காதை குடைந்தவன், நக்கலாக அவளை பார்த்து “சோ மெனி டிஸ்டர்பன்ஸ் மாப்ள” ச்சூ.. ச்சூ…என கையை அசைத்துக் கொண்டே, நித்தின் தோள் மேலே, கை போட்டு, வேறு பக்கம் அழைத்து சென்றான். அதில் கடுப்பான சந்தியா, நான் உனக்கு தொந்தர வாடா…!? கருவாயா? எப்படி இருந்தாலும் இங்க தானே வந்து ஆகணும் அப்போ உன்ன சூப்பு வச்சு குடிக்குறேன் ‘ஆ’ என காலை தரையில் உதைத்து கோபமாக அமர்ந்து கொண்டாள். ஜீவி, அடியேய்! மச்சி..ஏன்டி?அவன் தான் கிண்டல் பண்றான்னா, நீயும் ஏட்டிக்கு போட்டியா? பண்ற, என சிரித்தாள், சந்து,போடி நீயும் சிரிக்கிற என்றாள்.

          உடனே ஜீவி, அச்சோ..          என் பேபிஇல்ல..அவனுங்க கிடக்குறானுங்க, வரும் போது, அவங்கள வச்சு செய்யலாம், ஓகேவா.. என்றாள்.சந்தும்” டபுள் ஓகே” என்றவள்,ஜீவி எனக்கு பசிக்குது வாடி நம்ம சாப்பிட போலாம்.ஜீவி, ஏய்! டைம் எட்டு தாண்டி ஆகுது, அதுக்குள்ள எப்படிடி இப்பதான், ஐஸ்கிரீம், பாப்கான், பஞ்சுமிட்டாய் னு முழங்கின திரும்பவும் எப்படி பசிக்குது. சந்து,அது அப்படித்தான், இப்ப அவன் கிட்ட சண்டை போட்டேன் இல்ல, அதுல எல்லாம் செரிச்சிடுச்சி.. சோ வா, போகலாம் என ஜீவிகாவை இழுத்துக் கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வந்தாள்.அவளும் சிரித்தபடி அவளுடன் சென்றாள். (இதையெல்லாம் மறைவில் நின்று இரு கண்கள் சந்தோஷத்துடனும் இரு கண்கள் வன்மத்துடனும் பார்த்துக் கொண்டு இருந்தது), இருவரும் சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். இடம் பிடித்து அமர்ந்தும் விட்டனர்.

         பெரிய அசைவ விருந்தே நடந்து கொண்டிருந்தது. சந்து, மச்சி,செம்மடி, வாசனை ஆள தூக்குதடி… செமையா வெளுத்து கட்ட போறேன் என்றாள், ஜிவி யும் சரிடி சாப்பிடலாம் என்றாள். இலை போடப்பட்டது சாப்பாடு, கறி குழம்பு, மீன் குழம்பு, மீன் வருவல், தலைக்கறி, முட்டை, என நிறைய பதார்த்தங்கள் இருந்தது. சந்தியா,ஆசையுடன் உணவை பிசைந்து வாயில் வைக்கப் போனால், ஆனால், அதே நேரம், அங்கு வந்த அர்ஜூன், அவள் கையில் இருந்த உணவை, தன் வாய்க்குள், மாற்றிக் கொண்டான். மாப்பிள்ளை, சாப்பாடு செம டா? என்னா? ருசி என்றான் சந்தியாவை பார்த்துக்கொண்டு, பசியில் இருந்தவள் தன் கையில் இருந்த உணவு பறிக்கப்பட்டதில் கோபம் கொண்டவள், டேய்! குரங்கே,, அங்கதான் அவ்ளோ இடம் இருக்குல்ல போய் உட்கார்ந்து கொட்டிக்க வேண்டியது தானே? ஏண்டா என் சோத்தை பிடுங்கி தின்ன, மல குரங்கே, ஐயோ!! முதல் சோறு போச்சே.. என்றாள்.

             அதேநேரம், அவள் அருகில் ஒருவர் சாப்பாட்டில், கை வைத்த போனார்,உடனே அர்ஜுன், சார்.. என்றான். அவரும் என்னப்பா என்றார்.உங்க வைஃப் இப்பதான் வெளியே..யார் கூடவோ? பைக்ல ஏறி போனாங்க சார். நீங்க என்னனா இங்க உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கீங்க என்றான். அச்சோ!? என்ன தம்பி சொல்றீங்க? என்றார் அதிர்ச்சியாய், அர்ஜு, அட ஆமா அண்ணே உங்க மனைவி ப்ளூ கலர் புடவை தானே கட்டி இருந்தாங்க, ஆமாப்பா!!ஆமா… அப்ப, கன்பார்ம் அவங்களே தான் என்றான்  அவரை பார்த்து,

            உடனே அவர், அடியேய்! ஜானகி!! இருடி..வரேன், வந்து உன்னை வெட்டிப் போடுறேன் என்றவர்,நீங்க சாப்பிடுங்க தம்பி, ரொம்ப நன்றி, என்றவர் மனைவியை தேடி போய்விட்டார். அதை கண்ட ஜீவி, அடப்பாவி!! ஏன்டா உனக்கு அவர் மேல இவ்வளவு கொலவெறி,! சாப்பிட உட்கார்ந்த மனுஷனை எழுப்பி விட்ட எருமை..என்றாள். அர்ஜுன்,பின்ன என்னடி.., பொண்ணுங்களை சைட் அடிச்சா, இவருக்கு என்னடி வந்துச்சு. தம்பி இதெல்லாம் தப்புப்பா, போலீஸ் கேஸ் ஆகிடும், பார்த்துகோங்கனு  சொல்றாருடி.என்னவோ.. இவர் பொண்டாட்டியை, பார்த்த மாதிரி, என்னடா மாப்ள என்றான்.

    நித்தின், உடனே கரெக்ட் மச்சி,என்றான் அர்ஜு, அதான் செஞ்சிட்டேன் என்றான். (தனுஷ் பட பானியில்).

                சந்தியாவும், ஜீவியும், தலையில் அடித்துக் கொண்டனர்.இதுங்க திருந்தாத கேஸ், நீ சாப்பிடுடி,என சாப்பிட்டனர். நித்தின் ஜிவி பக்கத்திலயும் அர்ஜுன் சந்தியாவின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். பின்,மணமேடையில் ஏறி, மஞ்சுவை வாழ்த்தி விட்டு, அவளை இழுத்து,ஒரு டான்ஸ் ஆடி விட்டு, களைப்பாக அமர்ந்தனர். ஜீவி,நான் அம்மாக்கு, ஒரு கால் பண்ணிட்டு வரட்டுமா? மனசு,ஒரு மாதிரி இருக்கு என்றாள்.நித்தி, என்ன மச்சி.. விடு நாங்களாம் இருக்கோம்ல என்றான். ஜீவி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.தன் தாயிடம் பேசிவிட்டு வந்தாள். சந்தியா,என்னடி பேசுனியா?இப்போ..ஓகேவா என்றாள். ஜிவி,ஓகே டி.. அங்க எந்த பிரச்சனையும் இல்ல இப்ப ஹாப்பி என லேசாக சிரித்தாள்.அர்ஜு, விடு மச்சி.. நீ கவலையாய் இருக்கன்னு நினைப்பு,இருக்கா..இவளுக்கு ஐஸ்கிரீம் ம எப்படி மொக்குறா பாரு? இதோட கணக்கு எட்டு உள்ளே போய் இருக்கு.. இந்த குட்டி சாத்தானுக்கு,,

           சந்து, ஏன்டா தடியா! நீதானடா? இந்த பிளேவர் நல்லா இருக்கும்,அந்த பிளேவர் நல்லா இருக்கும்னு, வாங்கி கொடுத்த, இப்ப மாத்தி பேசுற, ப்போ… எனக்கு வேணாம்… இதை நீயே சாப்பிடு என்றாள் கோவமாய், அர்ஜுன் அவளை இழுத்து அவள் காதில் அஸ்கி வாய்ஸில் அடியே, என் செல்ல ராட்சசி! எனக்கு கையால கொடுக்காதடி, உன் உதட்டாலே எனக்கு ஊட்டி விடு டி.. கிக்கா இருக்கும் என்றான் அவள் காது மடல் உரசி,

       அவர்கள் பேசுவதை கண்டவர்கள் நித்தியும், ஜீவியும் இடத்தை காலி பண்ணி விட்டனர். ஏனெனில், அடுத்து  நடக்கப்போவதை,பார்க்க அவர்களால் முடியாது அல்லவா? அதனால் இரண்டு பேரும் எஸ்கேப்.. ஜிவி, நித்தி நான் போய் மஞ்சு ரூமில் கபோர்டுல,என் பர்ஸ் இருக்கு எடுத்துட்டு வரேன். வந்தவங்க எல்லாம் கிளம்பி இருப்பாங்க, நாமளும் ரூம் போகலாம். அவங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் வர சொல்லுடா? என்றவள் ரூமுக்குள் திரும்பினாள்.அப்போதுதான் பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட சென்றார்கள் அவர்களைப் பார்த்து சிரித்தவள், புன்னகையுடன் மாடி ஏறினாள். அவளை பின்தொடர்ந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நித்தின் வந்து கொண்டிருந்தான். ஐந்தாறு பேர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். மணி பத்தைத் தொட்டு இருந்தது வாசலில் சந்தியாவும் அர்ஜுனும் உள்ளே நுழைந்தனர். திடீரென ஏழு எட்டு பேர் தட தடவென, நித்தின்ஐ இடித்து தள்ளிவிட்டு,மாடியை நோக்கி ஏறினர்.அதில் நித்தின் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.

                 நித்தின், டேய் தடிமாடுகளா? ஏன்? டா என்னை தள்ளிவிட்டுட்டு இவ்ளோ அவசரமா…ஓடுறீங்க? என கத்தினான். மேலே ஏறியவர்கள் அறைக்கதவை திறக்கப் போன ஜீவிகாவை, சூழ்ந்து கொண்டனர்.அதில் பயந்த ஜீவி, யாரு?யாரு நீங்க எல்லாம்? எதுக்காக? என்னை கார்னர் பண்ணி இருக்கீங்க? என அழுதவள் கீழே அமர்ந்து கொண்டாள். “ப்ளீஸ்”தள்ளுங்க, நான் போகணும் நித்தி, சந்து,அர்ஜுன், கத்தினாள்.

      அப்போது கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து, அவள் முடியை பிடித்து தூக்கி, என்னடி?சவுண்டு பலமா இருக்கு,  கத்தின கொன்னுடுவேன்.. உன்னை.. என்றான் கெர்ஜெனையாக…..,,(அவன் முகத்தில் கர்ச்சீப் கொண்டு கட்டி இருந்தான் ).

 

 

4 thoughts on “முகவரிகள் தவறியதால் 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top