ATM Tamil Romantic Novels

தலைவனிடம் தூது போவதரடியே 23

தலைவனிடம் தூது போவதாரடியே 23

 

நீ என்ன சொன்னாலும் நா இதை வீட்ல சொல்லாம விட போறது இல்ல அண்ணா.

“போ போய் சொல்லு அண்ணா இங்க வந்துட்டான்  எல்லாரும் வந்து இருக்கிற கொஞ்ச நிம்மதியும் கெடுத்து விட்ருங்க னு சொல்லு டா போ”

 

அஜு அண்ணா.. நீ ஏன் இப்படி பேசுற..அண்ணி பாவம் உன்ன நினைச்சு நினச்சு ஏங்குறது உனக்கு தெரியுமா.. அதுவும் இப்படி ஒரு நேரத்துல நீ அவங்க கூட இருக்கணும்னு உனக்கு தோணலையா எவ்வளவோ ஆசை படுவாங்க  அண்ணி..நீ என்னன்னா திருடன் மாதிரி வீட்டுக்கு வர 

 

ரிஷி கேட்கும் கேள்விக்கு அர்ஜுனிடம் அமைதி மட்டுமே ..

“ரிஷி என் தர்பூஸ் கிட்ட தா என்னோட மொத்த வாழ்க்கையும் இருக்கு ..அவளும் குழந்தையும் தான் என்னோட சந்தோசம்..இதுக்கு மேல என்னோட காதலை எப்டி புரிய வைக்கிறது .

 

ஆனா என்னோட தர்பூஸ் வாழ்க்கையை நா தா கெடுத்துட்டேன்.. அவ நல்லருக்கணும் எங்கூட இருந்தா நா தினமும் அவளை காயப்படுத்துவேன்.. என்னால அவளுக்கும் குழந்தைக்கும் கஷ்டம் கொடுக்க முடியாது.. அதனால நா இன்னைக்கு நைட் லண்டன் போறேன்..திரும்பி எப்போ வருவேன்னு தெரியாது.. வராமலும் போகலாம்.. என்று கூறியவனின் கண்களில் வலி மட்டுமே..

 

அஜு ப்பேசியதெல்லாம்  ரிஷிக்கு போன் வரவும் ஆப் பண்ணுவதற்கு பதில் ஆன் செய்து பாக்கெட்டில் போட்டு விட்டான்..

 

அர்ஜுன் பேசிய அனைத்தும் அனன்யா கேட்டாகிவிட்டது ..அவள் நிலைமை சொல்லவா வேண்டும் கண்களில் இருந்து அருவியாக கொட்டிய நீரை துடைக்காமல் அத்தான் ,என்னோட அஜு அத்தான் எனக்காக வந்திங்களா, என் மேல இவ்வளவு அன்பா ..நா உங்களை இழந்து விட கூடாது ..எவ்வளவு நாட்கள் கடந்து போய்விட்டது நம் வாழ்வில் ..இனி நம் வாழ்க்கை நாம வாழனும்..கண்ணீரை துடைத்து விட்டு ஒரு சில முடிவு எடுத்து வைத்திருந்தாள்..(அஜுக்கு அடி உறுதி)

கலா பாட்டியிடம் அனன்யா ..இங்க பாருங்க பாட்டி நா என் தோழி ஸ்ருதி வீட்டுக்கு போறேன்.. வர ரெண்டு நாள் ஆகிடும்..

 

என்ன டி முகம் எல்லாம் ஒரே ஒளிவட்டம் தெரியுது போல..என்னாச்சு

 

ம்ம்ம் ..அதெல்லாம் ஒன்னுமில்ல எனக்கு ஸ்ருதி கிட்ட ஒரு முக்கியமான வேலை இருக்கு..

 

இவ போக்கே சரி இல்லையே…ம்ம் ஒரு வேல அஜு பேசிட்டானோ இவகிட்ட.. எப்படியோ பேசி ரெண்டும் வாழ்ந்தா போதும்..கொஞ்சம் வெறி ஏத்தி விடுவோம்.. புருஷன பாக்க என்னவெல்லாம் சொல்லிட்டு இருக்கா இந்த அனா குட்டி…

அது வந்து அனா..

 

இந்த மாதிரி நேரத்துல வெளில எங்கயும் போக கூடாது…எந்த முக்கியமான வேலையா இருந்தாலும் போக கூடாது.. வேணுனா அந்த வெள்ளெலிய இங்க வர சொல்லி பாரு..அவ்ளோ தான் என்பது போல சொல்லிட்டு ஆள் உள்ளே போயாச்சு..

அனா க்கு கோவம் வந்தது “நா எங்கயும் போக கூடாதா.. அதை சொல்ல இந்த கிழவிக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கணும்.. இரு கிழவி உன் ஒயிட் மண்டையில என் புருஷன் வச்சு ஆணி அடிக்க வைக்கிறேன்.. என்று புசு புசு மூச்சு எடுத்து கலா பாட்டி அறையை ஒரு பார்வை பார்த்து விட்டு ஓடி விட்டாள்..

அனா விற்கு அஜுவை பாக்கணும் பேசனும் எல்லாம் எண்ணம் இல்லாமலில்லை ..அவளையும் குழந்தையும் விட்டுட்டு போனதற்காக  அவனே வந்து அவளை வருந்துவான் என்று நினைத்திருந்தாள்..

ஆனால் அர்ஜுனோ …அவனின் செல்ல தர்பூசிடம் மட்டும் அடம் பிடித்து அவளை பார்க்க இரவில் மட்டும் வருவதும் போவதுமாக இருக்க ..,இந்நிகழ்வு கலா பாட்டியின் கண்களில் மாட்டி கொண்டது ..

அப்படியென்ன உனக்கு திமிரு.. உன் பொண்டாட்டிய  நீ பகல் பொழுதில் பார்க்க வர வேண்டியதுதானே.. அனா எப்பொழுது வெளியில் செல்ல வேண்டும் என்று கேட்டாலோ அப்போதே கண்டு பிடித்து விட்டார்..(பேத்தியின் தன்மானமும் முக்கியம் ஆயிற்றே)

இந்த கிழவி நம்மள போக விடாது..நைட் எல்லாரும் தூங்குனத்துக்கு அப்பறம் அஜு அத்தான பார்க்கணும்..என்ன விட்டுட்டு போக கூடாது அத்தான்.. நீங்க இல்லாம நாங்க எப்டி வாழ்வது என்று மனதினுள் மறுகினாள்..

இங்கு இவள் இப்படி நினைக்க அவள் அத்தானோ அவனின் தர்பூசின் போட்டோவையும் தன் சிசுவின் ஸ்கேன் யும் பார்த்து கொண்டிருந்தான்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top