அத்தியாயம் 2
அதில் அதிர்ந்த, சந்தியா அது… அது…. ஒன்னும் இல்லடி இடிச்சிகிட்டேன் என்றாள். உடனே, ஜீவி மஞ்சு…பாருடி சந்தியா.. இடிச்சிகிட்டலாம் டி அச்சோ!! பாவம்…. என்றாள் உதட்டில் சிரிப்புடன், மஞ்சு, ரொம்ப ஸ்ட்ரோங் கா….. இடிச்சிகிட்டியாடி.. மச்சி.. சேதாரம் ஜாஸ்தி போலவே, என்றாள் கண்சிமிட்டி, அதில் வெட்கிய சந்து, ச்சீய்.. போங்கடி என்றாள். ஜீவி, அச்சோ மச்சி, உதட்ல ரத்தம் டி.. என்றாள். உடனே அர்ஜு, எங்க ரத்தம் வருது சந்து என்றான். அவன் அப்படி சொன்னதும் மூவரும் ஒரு சேர, அவனை முறைத்து பார்த்தனர். அதில் அதிர்ந்த அர்ஜு, முறைக்காதீங்க டி.. சும்மா லைட் டா? என இழுத்தான் வெட்கமாய்,..
அதில் கோவம் கொண்ட ஜீவியும் மஞ்சுவும் ஒரு சேர த்து….. உ இதெல்லாம் ஒரு பொழப்பு என அவனை துப்பினர். அதை,உடனேதுடைத்துக் கொண்டவன், போங்கடி, உங்களுக்கு பொறாமை.. நான் என் பேபியை கொஞ்சுறத பார்த்து என்றான். ஜீவி, போடா தடி மாடு எப்படியோ.. போங்க, என்ன ஆள விடுங்க, நான் தூங்க போறேன் என்றாள். சந்து, அடியேய்!! என்னை விட்டுட்டு போகாதடி? இவன் முழியே, சரி இல்ல டி.. என்றவள் அவளுடன் அறைக்குள் நுழைந்துகொண்டாள். அர்ஜு தனியாய் நின்றான் வெளியே, இப்படியே இனிமையாய் இரவை கழித்தனர். காலை விடியல் ஓவ்வொருவருக்கும் ஒரு மாதிரி விடிந்தது.மஞ்சுவின் வீடு விருந்தினார்களால் நிறைந்து இருந்தது. அவள் நண்பர்களும் அவளுடன் இருந்தனர். காலை முகுர்த்தம் என்பதால் மஞ்சு தயாராகி கொண்டு இருந்தாள். காலை 8 மணிக்கு நித்தீன் ஹைதராபாத்தில் இருந்து வந்து விட்டான். அதனை அறிந்த ஜீவி,சந்து, அர்ஜுன் அவனை காண வெளியே வந்தனர்.
ஜீவி, நித்தீ டால்… என்றவாரே ஓடிபோய்,அவனை அணைத்துக் கொண்டாள்.அவனும் ஜீவி பேபி, ஆர்ப்பாட்டமாய்,அழைத்து,அணைத்துக்கொண்டான்.அவளை தொடர்ந்து வந்த சந்து, அர்ஜு, அவனை அணைத்துக்கொண்டனர். அர்ஜு, டேய் மச்சி வாடா, என்றான். வரேன் டா “மாப்ள” என்ற நித்தீ, அர்ஜுவை அணைத்தபடி, உள்ளே திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றான்.
மேடையில் அமர்ந்து இருக்கும் மஞ்சுவிற்கு ஹாய் சொன்னவன், நண்பர்களோடு அமர்ந்து கொண்டான். பெரியவர்கள் ஆசிர்வாததோடு மஞ்சுவிற்கு திருமணமும் முடிந்தது. ஆங்கங்கே உறவினர்கள் அமந்திருந்தனர். மஞ்சு, தன் மாமனிடம் தன் தோழன் தோழிகளை அறிமுகம் செய்து வைத்தாள் சந்தோஷமாய், அவனும் அனைவரிடமும் சகஜமாய் பேசினான்.சிறிது நேரம் கழித்து ஜீவிகா தனியாக அமர்ந்திருந்தாள். அதை கவனித்த நித்தீன் ஹாய் பேப், ஏண்டி இங்க தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றான். அவள் தோளில் கை போட்டு, அதில் ஜீவி அவன் தோளில் சாய்ந்தவள், ஒண்ணுமில்ல டால் நேத்துல இருந்து ஏதோ தப்பா நடக்க போறதா? மனசுல தோணிட்டே இருக்கு, மனசும் கஷ்டமா இருக்கு? so யாருகிட்ட சொல்ல்றதுன்னு தெரியல, ஈசினு விடவும் முடியல, டால் என்றாள்.
நித்தீன், dont worry பேபி பயப்படாத, நான் இருக்கேன் கூடவே நம்ப பிரண்ட்ஸ் உம் இருக்காங்க. டென்ஷன் ஆகாத டி வா சாப்பிடலாம், என்றவன் அவளை சாப்பிட அழைத்து சென்றான். ஜீவிகாவிற்கு இவர்கள் 4 பேர் தான் ஊன்று கோல். PG படிக்கும் போது அறிமுகம் ஆனார்கள் மஞ்சு சந்தியா இவளோடு ஒரே படிப்பை எடுத்து படிப்பவர்கள், சந்தியாவின் ஸ்கூல் பிரண்ட் அர்ஜுன். அப்போதிலிருந்தே இரண்டும் “டாம் அண்ட் ஜெர்ரி” இது அனைவரும் அறிந்ததே. நித்தீன் ஹைதராப்பாத்தை சேர்ந்தவன், அர்ஜுன்,நித்தீ, ஒரே படிப்பை எடுத்து MBA படித்தார்கள். ரெண்டு வயது பெரியவர்கள் பெண்கள் மூவருக்கும். பெண்கள் மூவரும் MA படித்தார்கள்.
அர்ஜு ஜோயல் type. நித்தீன் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டான். அவன் முழு பெயர் “ஷாருக் நித்தீன்”அவன் அப்பா ஹைதராப்பாத்தில் பெரிய பிசினஸ் மேன், ஆனால் அவனுக்கு தாய் இல்லை. 13 வயது இருக்கும் போது விஷ காய்ச்சல் வந்து இறந்து விட்டார். அதிலிருந்து, நித்தீன் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். அவனிடம் எல்லாரும் பாசம் காட்டினாலும் தாய் போல் வராது அல்லவா? நித்தீன் அப்பா ஒரு மாற்றத்திற்காக சென்னை அனுப்பி படிக்க வைத்தார். அர்ஜுன் தான் வழிய போய் அவனிடம் பேசுவான்.
தன்னுடன் ஊர் சுத்த அழைத்து செல்வான். சந்தியாவும் தன் இரு தோழிகளையும் இவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். முதலில் தயங்கியவன் இவர்கள் செய்யும் அரட்டையில் இணைந்து இவர்களை போலவே மாறிப்போனான். நான்கு வருடத்தில் இணை பிரியா நண்பர்கள் ஆகினர் ஐவரும். ஜீவி, அவன், வெள்ளையாக இருப்பதால், அவனை டால், என்று அழைப்பாள். மற்றவர்கள் மைதா மாவு, அவிச்ச முட்டை, என அழைப்பார்கள்.அதுவும் சந்தியாவுக்கு கோவம் வந்தால், போடா அரைவேகாடு, பால் பன்னு, வெள்ளை பண்ணியாரம், என பயங்கரமாக திட்டுவாள். அவளை சீண்டி வம்பிழுத்து வாங்கி கட்டி கொள்ளுவான்.
கல்யாணம் முடிந்து வெளியே சுற்றலாம் என முடிவெடுத்து வயலை சுற்றி பார்க்க கிளம்பினார்கள். அப்போது சந்து ஜீவிகா வை பார்த்து, ஜீவி மஞ்சு கல்யாணம் பண்ணிட்டா, நானும், அர்ஜுவும், இன்னும் ஒரு வருஷத்துல, marriage பண்ணிப்போம். நித்தீன் க்கு அவன் மாமா பொண்ணு ரெடியா இருக்கா? So நீ எப்ப சரி கல்யாண சாப்பாடு போடப்போற என்றாள். அதில் லேசாக சிரித்த ஜீவி, இப்ப அத பத்தின ஐடியா எதுவும் இல்லைடி,நடக்கும் போது பாத்துக்கலாம் என்றாள்.உடனே அர்ஜுன், ஏய் சந்து, அவளை அவன் ஆளு கடத்தி கொண்டு போய் தாலி கட்டுவாரு பாரு, நாம எல்லாம் அப்ப அவ கூட இருப்போமான்னு கூட தெரியல,அப்படி தானே ஜீவி என்றான்.
உடனே ஜீவி, என்ன பேசுற அர்ஜுன், நீங்கல்லாம் இல்லாம எப்படி என் கல்யாணம் நடக்கும் எனக்கு நினைக்கவே கஷ்டமா இருக்குடா?
எரும,ப்ளீஸ் இப்படி பேசாத டா தடியா..
என அவன் தலையில்,கொட்டினாள். அதில் சிரித்த நித்தீன், பேப் அவன் கெடக்குறான் விடு, யார் இல்லனாலும் உன் கல்யாணத்துக்கு நான் வருவேன். அப்படி எதுவும் தடங்கல் வந்தால், நானே உன்ன கல்யாணம் பண்ணிக்குவேன், பேப், so, நான் இருக்கேன் உனக்கு என்றான். இதை கேட்ட அர்ஜுன், அவன் முதுகில் மொத்தியவன், டேய்!! வெள்ள எலி.. உன்ன என்னமோ? நெனச்சேன்டா. நீயா டா? இப்படியெல்லாம் பேசுறது என்றான்.
டேய் விளங்காதவனே, உனக்கு பொறாமை டா அதான் அடிக்கிற என்றான். அர்ஜுன், போடா.. டேய் போடா வந்துட்டாரு,என் பொறாமைய கண்டுபிடிச்சிட்டு இரு உன் வீட்டு போன் பண்ணி, உன் மாமா மக கிட்ட சொல்றேன் நீ பேசினதை என்றான்.நித்தீன், தோளை உலுக்கியவன், no problem மச்சி, சொல்லு நான் வேணா போன் போட்டு தரட்டுமா பேசுறியா? அவகிட்ட, எனக்கு என்ன பிடிக்குதோ, அதான் மச்சி நான் செய்வேன். என்றான். ஜீவி, விடு டால் அவனை, எப்பவும் ஏதாச்சும் சொல்லிகிட்டே இருப்பான். நீ வா நாம அந்த பக்கம் போய் போட்டோ எடுக்கலாம் என்று, வயலின் பக்கத்தில் மரத்தடியில் ஒரு சிறிய கோவில் இருந்தது. அங்கே நித்தீனை அழைத்து சென்றாள்.
சந்து, அடியேய், என்னடி போட்டோ எடுக்குறேன் னு கோவில் கிட்ட வந்துட்ட, நித்தீன், மச்சி பேப்க்கு தன் வெயில் பிடிக்காதே so இங்கேயே போட்டோ எடுக்கலாம்,என போட்டோ எடுக்க ஆரம்பித்தனர். ஜீவி, சந்து, நாம ப்ராஜெக்ட் விஷயமா திருச்சி போய் இருந்தோம் ல லாஸ்ட் மந்த், அங்க கூட மலை கோவில், ஹோட்டல், பார்க் னு சுத்தினோம் ல, சந்து, ஆமாடி… ஏன்?என்ன ஆச்சி என்றாள். ஜீவி, இல்ல மச்சி போனது சுத்தி பார்த்தது எல்லாம் ok, ஆனா யாரோ என்ன நம்ம போன எல்லா இடத்துலயும் follow பண்ண மாதிரி இருந்துச்சி டி, நான் நித்தீன் கிட்ட கூட அத சொன்னேன் அவனும் போய் செக் பண்ணினான், பட் அப்படி யாரும் இல்லடி, ஒரு கட்டத்துல எனக்கு தான் அப்படி தோணுது னு நெனச்சி விட்டுட்டேன் என்றாள் ஜீவி.
உடனே நித்தீன், எஸ் சந்தியா, அவ சொன்னதும் தேடி பார்த்தேன், பட் அப்படி யாரும் இல்ல. அர்ஜுன், அது ஒன்னும் இல்ல மச்சான் ஜீவி நைட் அடிச்ச சரக்கு இறங்கி இருக்காது அதான் மச்சி உளறி இருப்பா, விடு மச்சி பாத்துக்கலாம் என்றான். நித்தீன், அவளை பார்த்து அப்படியா மச்சி? என்றானே பார்க்கலாம், அவன் அப்படி சொன்னதும்,ஜீவி கோவம் கொண்டவள், டேய் பனைமரம்!!?, என்னை பார்த்தா சரக்கு அடிச்சேன்னு.. சொன்ன எரும மாடே.. உன்ன என்ன பண்றேன் பாருடா?!.. என்றவள் அருகில் இருந்த செங்கலை எடுத்து கொண்டு, அவனை அடிக்க துரத்தினாள். அர்ஜுன் அலறிய படி மரத்தை சுற்றி ஓட ஆரம்பித்தான். சந்து, சந்தியா பேபி.. என்ன காப்பாத்து டி. இவ என்ன கொல்ல பாக்குறாடி!!! சந்து போடா தடி மாடு.. என்ன எவ்வளோ? பண்ணி இருக்க, இப்ப ஜீவி கிட்ட மாட்டுனியா? ஜீவி நல்லா போடு இன்னும் ரெண்டு செங்கல் வேணா, எடுத்து தரேன் என்றாள். அர்ஜுன், அடி பாதகத்தி, உன்ன போய் ஹெல்ப் க்கு கூப்பிட்டேன் பார்த்தியா? ராங்கி போடி,என்ன மூச்சி வாங்க கிழே குனிந்து நின்றான். நித்தீன், போதும் பேப், வா வெயில் ஜாஸ்தியா இருக்கு என்றான் சிரித்தபடி, மற்றவர்களும் சரியென கிளம்பினர் சந்தோஷமாய்.
இந்த சிரிப்பும், சந்தோஷமும் இரவுவரை நீடிக்குமா???
தொடரும்….