ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 3

 

அத்தியாயம் 3

மதிய உணவை, உண்டவர்கள் மஞ்சுவை பார்த்துவிட்டு, அறைக்கு வந்தனர்.ஜீவி, சந்து உங்க அம்மா எப்படி டி.. உன்னை இவ்வளவு தூரம் அனுப்பினாங்க, டீச்சர் அம்மா கொம்பை எடுத்து அடிக்கலையா? என்றாள். சந்தியா, ஆமா மச்சி, முதல்ல,திட்டினாங்க அப்புறம்,அப்பாகிட்ட அர்ஜுன் பேசினான். அப்புறம், தான் அனுப்பினாங்க. ‘ஓ’அப்படியா? மச்சி, இப்பவே மாமனார் கன்வின்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்டே ம்ம்.. நடத்து நடத்து என்றாள் அர்ஜுனை பார்த்து, அர்ஜுன், போடி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றான் வெட்கப்பட்டு, உடனே நித்தின், ரொம்ப வெட்கப்பட்டு, பூமிக்குள்ள போயிடாதடா… மாப்ள…., என்றான்.

            அடியே ஜீவி, எங்களை எல்லாம் கேக்குற இல்ல, நீ எப்படி வந்த, உன்னை எப்படி விட்டாங்க? சொல்லு ம்ம்… சொல்லு ம்ம்… என்றாள். உனக்கு அர்ஜு பேசுனான் எனக்கு, நித்தின் பேசினான் என தோளை உலுக்கினால், அர்ஜுன் நித்தியை பார்த்து, இது எப்ப நடந்தது சொல்லவே…. இல்ல….. என்றான். நித்தீன் ம்ம்…எஸ் மச்சி. ஜீவி அப்பா, இல்லப்பா… வேணா அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்க சோ வேணாம்னு சொன்னாரு. நான் தான் நான் பாத்துக்குறேன் அங்கிள்னு கூட்டிட்டு வந்தேன் என்றான்.

            ==============================

           அதே நேரம்,   திருச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் ஒரு பெண் கையில் ஆறு மாத குழந்தையுடன் ஹாலில் அமர்ந்து இருந்தாள் அழுகையுடன், சிறிது நேரத்தில், மாடியில் இருந்து, மீனாட்சி அம்மா இறங்கி வந்தார்.அவரைப் பார்த்ததும்,பெரியம்மா….என அழுது கொண்டே அவரைக் கட்டிக் கொண்டால், பெண்ணவள், மீனாட்சி, அச்சோ!! என்னடி… ரோஸ்லின் ஏன் அழற? கண்ண தொட மொதல்ல, என அவளை விலக்கி விட்டு கையில் இருந்த குழந்தை வாங்கிக் கொண்டார். ஏன் அழற? என்ன விஷயம் சொல்லுடி? என்றவர், பாக்கியம் தண்ணீர் எடுத்துட்டு வா, என கிச்சன் நோக்கி குரல் கொடுத்தார். பாக்கியம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

              அது வந்து… பெரியம்மா…சக்தி அண்ணா இல்லையா? என்றால் மாடியை பார்த்து,மீனாட்சி, இருக்குறாண்டி குளிச்சிட்டு இருக்கான். காலைல சீக்கிரமா போன தம்பி,இப்பதான் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து இருக்கான். களைப்பா இருக்குன்னு குளிக்க போய் இருக்கான், இப்ப வருவான் சாப்பிட என்றார். ரோஸ்லின் சரிங்க பெரியம்மா நான் அண்ணனை பார்க்க தான் வந்தேன், அவர்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என திரும்பவும் கண்கலங்கினாள். மீனாட்சி அடி பெண்ணே, அழாதன்னு சொல்றேன்ல கண்ணத்தொட என்றவர் மாடியை பார்த்தார்.

            அப்போது அவள் அண்ணன் “சக்தி என்கிற “சக்திவேல் பாண்டியன்” நல்ல உயரமாக,  கலர் வேஷ்டி கட்டி,மடித்துவிட்டு போட்ட சட்டை, முறுக்கிய புஜம்,கையில் காப்பு, என மீசையை முறுக்கு படி சோபாவில் அழுதபபடி அமர்ந்திருந்த ரோஸ்லின் திவ்யாவை, கண்களை சுருக்கி யோசனையாக பார்த்தபடி வந்தான். (இவன் தான் கதையின் ஹீரோ கொஞ்சம் ஆண்டி ஹீரோ அதுவும் தங்கைக்காக).அவன் வருவதைப் பார்த்தவள் ஓடி சென்று அண்ணா!?.. என்று அவனை கட்டிக் கொண்டு தேம்பி அழுதாள்,சக்தி அவன் அன்னையைப் பார்த்து கண்களால் அவளைக் காட்டி, என்னவென்று கேட்டான்,மீனாட்சி தெரியலப்பா புள்ள வந்ததிலிருந்து அழுதுகிட்டே இருக்கா, என்னன்னு கேட்டா அண்ணா கிட்ட தான் சொல்றேன் சொல்ற பா என்றார்.

            அதைக்கேட்ட சக்தி அவளை விலக்கி நிறுத்தியவன், சாப்டியா? ரோஸ்லின் என்றான். அவள் இல்லை, என்னும் படியாக தலையாட்டினாள். சக்தி சரி வா முதல்ல சாப்பிடு அப்புறம், என்னன்னு சொல்லு என்றான். ரோஸிலின் இல்லனா எனக்கு பசிக்கலை என்றாள். சக்தி, அதான் சொல்றேன்ல முதல்ல சாப்பிடு பிறகு பேசலாம் என்றான்,சற்றே  குரலை உயர்த்தி…. அதில் அவள் தலை தானாக சம்மதமாக அசைந்தது. மீனாட்சி, பாக்கியம் இன்னைக்கு பருப்பு வெச்சல்ல, ஆமாமா, என்றார் பாக்கியம்.சரி அதையும் சாதத்தையும் போட்டு மிக்ஸியில் ஒட்டி பிள்ளைக்கு ஊட்டு, நெய் விட மறந்துடாதே என்றார். பாக்கியமும் சரிமா என்றவர் பிள்ளை வாங்கிக்கொண்டார். மீனாட்சி தான் இருவருக்கும் பரிமாறினாள். சாப்பிடும்வரை யாரும் பேசிக்கொள்ளவில்லை சாப்பிட முடித்து சோபாவில் அமர்ந்தான் சக்தி.அம்மா.. மதி எப்ப வருவா என்றான். மீனாட்சி,உடனே அவளா,       அஞ்சு மணிக்கு வருவாப்பா, அஜய் ஜவுளி எடுக்க ஈரோடு போயிருக்கான், லல்லி டேப்லெட் போட்டு ரூம்ல தூங்குறா என்றார். சரிம்மா என்றவன், திவ்யா இப்ப சொல்லு என்ன ஆச்சு?.. ரோஸ்லின்,அண்ணா..! அவர் என் கூட வாழ மாட்டாராம், என்னை பிடிக்கலையாம், டிவோர்ஸ் பண்ண போறேன், நீ எனக்கு வேணாம் னு மூணு நாளா சண்டை பிடிச்சிட்டு இருக்காருன்னா… என்றாள் தேம்பலுடன்,

              சக்தி ஏன்? எதுக்காம்? என்றான் உறுமலுடன்….. அது வந்து, நான் யாரோ ஒரு பொண்ண ஸ்கூல் டேஸ்ல இருந்து லவ் பண்றாராம்,சென்னைல இருக்கும்போது அவளை மறக்க முடியவில்லையாம்.சக்தி, அப்புறம் எப்படி? உன் கூட வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டானாம்.ரோஸ்லின், அது,நீங்க மிரட்டினதால தான் பிடிக்காமல் குடும்பம் நடத்தினாராம், ஆனா நான் அவரை விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அண்ணா, உங்களுக்கே தெரியும். நான்தான் ஃபர்ஸ்ட் அவருக்கு ப்ரொபோஸ் பண்ணினேன் என்றாள் அழுகையை அடக்கியபடி,

          ஆனா அவரு என் ஃப்ரெண்ட் கவிதாவை லவ் பண்றதா.. சொன்னாரு நான் ரொம்ப மனசு உடைஞ்சுட்டேன், ஒரு வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் பிரேக்கப் பண்ணிக்கிட்டாங்க,அப்புறம், வீட்ல பேசி சந்தோஷுக்கும் எனக்கும் போன வருஷம் கல்யாணம் பண்ணி வச்சாங்க, நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சுன்னா, நடுவுல சண்டை வந்தப்ப கூட நீங்க வந்தீங்க இல்ல, அப்புறம் பாப்பா பிறந்து கூட நல்லா தான் பாத்துக்கிட்டாரு. போன மாசம் திருச்சில ஆபீஸ் பிரண்ட்ஸ் மேரேஜுக்குன்னு போயிருந்தார் அண்ணா… திரும்பி வந்ததிலிருந்து என்கிட்ட சண்டை, ரெண்டு தடவை அடிச்சிட்டார்னா என்றால் அழுகையுடன்.

               அவள் சொல்ல, சொல்ல, சக்தியின் கைமுட்டி இறுகியது.அவளும் அவள் தங்கை மதி போலத்தான், சக்தி,அந்த பொண்ணு கூடத்தான் பிரேக் அப் ஆயிடுச்சு இல்ல அப்புறம், ஏன்? திரும்பவும் பேசுறானா? என்றான் பல்லை கடித்த படி, ரோஸ்லின், இல்லனா அவளுக்கு மூணு மாசம் முன்னாடி தான், கல்யாணம் ஆயிடுச்சு.என்ன கூப்பிட்டா நான் தான் போகல,இவரும் எதுவும் சொல்லல, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டலனா, என்றாள்.சக்தி, அப்போ உன்கிட்ட ஏதாச்சும் சண்டை போட்டானா?என்றான்.

             ரோஸ்லின், இல்லனா நான் விஷயம்சொன்னதும்அப்படியா மட்டும்தான் கேட்டார் என்றாள். சக்தி, அப்புறம் ஏன்? சண்டை பிடிக்கிறான். ரோஸ்லின்,நானும் கேட்டேன்ணா, அப்ப என் காதலியை கல்யாணம் பண்ண போறேன், அவ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல, அவ எனக்கு னு இருக்கு, அதான் இன்னும், அவளும் கல்யாணம் பண்ணிக்கலனு சொன்னார் அண்ணா. அவ யாருன்னு கேட்டேன், முதல்ல முடியாதுன்னு சொன்னார். நான் உங்ககிட்ட சொல்லுவேன் சொன்னதும் பீரோல இருந்து,ஒரு போட்டோவையும், ஒரு டைரியும், எடுத்துக் காட்டினார் என கூறியவள், அவனுக்கு தெரியாமல் அவன் தூங்கும் போது, அவனிடத்தில் இருந்து எடுத்த போட்டோவை அவனிடம் காட்டினாள்.

              சக்தி, அதை அவளிடம் இருந்து வாங்கி,புகைப்படத்தை பார்த்தான். புடவையில் அழகாக சிரித்தபடி நின்று இருந்தால் பெண்ணவள். ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான், அந்த புகைப்படத்தை,பின் பெயர் சொன்னானா?என்றான். ரோஸ்லின்,ஆமாண்ணா,பெயர் ஜீவிகா என்றாள். அவள் அப்படி சொன்னதும், அவனும் ஒரு முறை ஜீவிகா….என அழுத்தமாக உச்சரித்தான். ரோஸ்லின், அண்ணா….போட்டோவ திருப்பி பாருங்க அண்ணா என்றால் கலங்கியபடி, அவள் சொன்னதும் போட்டோவை திருப்பி பார்த்தான்.

          அதில் ஒரு இதயம் வரையப்பட்டு, இருந்தது,அதில் “சந்தோஷ் லவ் ஜீவி” ‘ஷி இஸ் மை லைப்’ என எழுதி இருந்தது. சக்தி அதைப்பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் தொடர்ந்தால், சென்னையில் இருக்கும் போது பழக்கமா அண்ணா.. எனக்கு…என்ன பண்றதுன்னு, தெரியல,இன்னும் ரெண்டு நாள்ல அவங்க ஏதோ கல்யாணத்துக்கு மதுரைக்கு வராங்களாம். அங்க வச்சு பேச போறாகலாம், நான் இருந்தா தடையா இருக்குமாம்,அதான் என்னை விட்டுட்டு,போக சொல்றாங்க, என சொல்லி ஓவென அழுதாள்.

  1.                  சக்தி, தன் தாய்க்கு கண் ஜாடை செய்தான்.உடனே மீனாட்சி, அம்மாடி அழாத, அண்ணன் எல்லாத்தையும் பாத்துக்குவான், நீ பயப்படாதே, என்றார்.சக்தி,நீ கெளம்பி வீட்டுக்கு போ, ரோஸ்லின். அண்ணா நான் இருக்கேன். அவன் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டான், என்றவன் ஒரு முடிவெடுத்து அடுத்தடுத்து செய்ய வேண்டியதை யோசித்தான். இதில் சிக்கி தவிக்க போவது யாரோ?

 

          தொடரும்….

 

 

 

1 thought on “முகவரிகள் தவறியதால் 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top