ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 5

அத்தியாயம் 5 

       ஜீவி, யார் நீங்க? எதுக்காக என்னை இப்படி பண்றீங்க? விடுங்க.. எனக்கு வலிக்குது… என்றாள். அவன் பிடியில் இருந்து கொண்டு, சத்தம் கேட்டு கீழே இருந்தவர்கள் மாடிக்கு ஓடி வந்தனர். அர்ஜு, மச்சி…. என்றான்.சந்து, பேபி யார்?இவங்க என்றாள்.அவள் தெரியலடி? என்றாள், அழுகையுடன் உதட்டை பிதுக்கி, நித்தின் ஏய்?!..அவளை விடுடா?அவளைவிடு.அவளுக்கு வலிக்க போகுது, “இடியட்” யாருடா? நீங்க எல்லாரும்? “ஐ கால் தெ போலீஸ்” என்று,போனை காதில் வைத்துக் கொண்டு, அவளை விடுடா,முதல்ல,” பேப்” கவலைப்படாதடி,நான் இருக்கேன் என்றான் பதட்டமாய், 

          அவளைப் பிடித்திருந்தவன் “ஓ” போலீசுக்கு போன் பண்றியா?பண்ணு..என்னை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது டா? உன்னால ஆனத பாத்துக்கோ? என்றான் ஆணவமாய், அவன் பேசியதில் கோபம் கொண்ட நித்தின், நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இருடா? என் பேபியை விடுடா? என அவனை நோக்கி சென்றான். அதில் கோபம் கொண்ட சக்தி, அவன் வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான். இன்னும் ஒரு அடி முன்ன வெச்சாலும்,உன் உயிர் உன்கிட்ட இருக்காது என்றான். அவன் முன் துப்பாக்கியை தூக்கி பிடித்து காட்டி, சந்து,டேய்!! போகாதடா? பேசிக்கலாம் என்றாள்.அர்ஜுன், டேய்! மாப்ள போலீஸ்க்கு,சொல்லியாச்சு டா? நீ வா என்றான். நித்தின், அர்ஜுன் அவளை விட சொல்லுடா??  என்றான்,அவனை நோக்கி நடந்த படி,

                உடனே சக்தி முடியாதுடா? என்றான், நித்தின், கோபம் கொண்டவன், பல்லை கடித்து, ஜிவியை நோக்கி,கையை நீட்டியவன் அவளை பிடித்து இழுத்தான். அதில், கோபம் கொண்ட சக்தி, அவனை பிடித்து தள்ளியவன், தன் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அவனை சுட்டு இருந்தான். “”ஒரு நிமிடம்” தான் சுட்டு விட்டான் சக்தி. நித்தின் “ஆ” என அலறலுடன் கீழே விழுந்தான் 

            இதைப் பார்த்த ஜீவி, அலறியவள்,நித்தின்!!,இல்ல! இல்ல!! என் நித்தின் “ஐயோ”நான் என்ன பண்ணுவேன்,என்னால உனக்கு இப்படி ஆயிடுச்சே “டால்” என கதறி அழுதாள் ,யாராச்சும் அவன காப்பாத்துங்களே?!ஜீவி, சக்தியிடம் இருந்து, திமிறியவள், ஏய்! என்னை விடு, விடு…என் நித்தீன் கிட்ட போகணும், அவனை காப்பாத்தணும்.. என கதறி அழுதாள்.

    நித்தின்,”பேப்”அழாதடி…”பேப்” என்றான்,அதற்குள், அர்ஜுன் வந்து,அவனைத் தாங்கிக் கொண்டான்.   சக்தி,அனைவரையும் பார்த்தவன் யாராச்சும் கிட்ட வந்தீங்க? உங்களுக்கும் இதான் நிலைமை, புரிஞ்சி இருக்கும்னு….. நினைக்கிறேன் என்றவன், ஏய்! நீ வாடி?…உனக்கு  இருக்குடி….? இனிமேதான்,நரகம் னா என்னனு பார்க்க போற,என்றவன்,அவளை தர,தரவென, இழுத்துக்கொண்டு பின்பக்கமாய், காரில் ஏறி சென்றிருந்தான் தன் கூட்டாளிகளோடு,

          வெளியில் இருந்து, யாரும் உள்ளே வராதபடி, இரு பக்கமும் பூட்டி இருந்ததான் மண்டபத்தை, அதனால் வெளியில்,இருந்து யாரும் உள்ளே வர முடியவில்லை. வெளியே,மஞ்சுவும்,மருதுவும், வெளியில் இருந்து,கதவை தட்டிக் கொண்டே இருந்தனர். வெளியே சத்தம் கேட்டு,நிகழ்விற்கு வந்தவர்கள், ஓடிப்போய் கதவை திறந்தார்கள்.அதற்குக்குள் ஆம்புலன்ஸ்,வந்திருந்தது.. போலீசும்,வந்துவிட்டார்கள். சந்தியா,கதறிக் கொண்டு,                  இருந்தாள்,’நித்தி’ எந்திரிடா? ஐயோ!! எவ்ளோ ரத்தம்? மச்சி…. என்னை பாருடா?அர்ஜு!,அவன எந்திரிக்க சொல்லுடா?… என அழுதாள்.

              வெளியில் இருந்து ஓடி வந்த மஞ்சு, ஐயோ! நித்தி..நித்தி.. என்னடா ஆச்சு உனக்கு? என்னங்க,நித்திக்கு என்ன ஆச்சு பாருங்க, யார்? உன்னை இப்படி பண்ணா நித்தி?!.. என்ன கதறி அழுதாள். மருது அவளை தூக்கி நிறுத்தியவன், நித்தியை ஆம்புலன்ஸின் ஏற்றினார்கள். அர்ஜு “மாப்ள”உனக்கு ஒன்னும் ஆகாதுடா… என அவனோடு ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டான் அழுதபடி, போலீஸ் வந்து விசாரித்தார்கள் சிசிடிவி ஃபுட்டேஜ் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. அழைத்து சென்றவன் யார் என்னவென்று தெரியவில்லை. கூட வந்தவர்கள் ஆறு பேர் அவனோடு சேர்த்து 7 பேர் என்ன கம்பிளைன்ட் கொடுக்கப்பட்டது.

         மருது,மஞ்சு உன் பிரண்டு ஜீவிக்கு, விரோதிங்க, லவ் ஃபெயிலியர்னு ஏதாச்சும் இருந்தா சொல்லு,மஞ்சு என்றான். மஞ்சு, அப்படியெல்லாம் இல்லைங்க? எனக்கு தெரிஞ்சி, நெக்ஸ்ட் வீக் அவளை, பொண்ணு பார்க்க வராங்கனு,சொன்னா.அப்படியே இருந்தாலும்,எங்களுக்கு தெரியாம இருக்காது. எதிரிங்கனு அவளுக்கு யாரும் இல்லை,எங்களை சுத்தி தான் அவளுடைய வாழ்க்கை . அப்புறம் அவளோட ஃபேமிலி, நாங்க அஞ்சு பேர், அவளோட ஃப்ரெண்ட்ஸ், அவ வீட்ல அவளோட சேர்த்து ஆறு பேர்,அப்பா retried ஆபிசர், அம்மா ஹவுஸ் வைஃப்,அக்காக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு, இவ ரெண்டாவது தங்கச்சிக்கு இப்பதான் மூணு மாசத்துக்கு முன்னாடி மேரேஜ் ஆச்சு. தம்பி இருக்கான் அதுவும் படிச்சிட்டு இருக்கான்.

      ஃபேமிலியை இவதான் இப்ப பாத்துக்கிறாங்க,ரொம்ப அமைதியானவ எங்க கேங்குல, பிரெண்ட்ஸ்னா உயிரையே விட்டுட்டுவாங்க, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க வீட்டுக்கு எப்படி விஷயத்தை சொல்லப் போறேன்னு தெரியல…. என அழுதாள் . மருது, அவளை அணைத்து கொண்டவன், அழாதடி.. சீக்கிரம் ஜீவிய கண்டுபிடிச்சிடலாம்,சந்தியாவ உன் கூட தங்க வச்சுக்கோ, நான் அம்மா கிட்ட சொல்லிக்கிறேன் சரியா, நீ போய் படு நான் ஹாஸ்பிடல் வர, போயிட்டு வரேன் என்றான்.

           மஞ்சு, என்னங்க? அத்தை ஏதாவது?..மருது,ஒன்னும் சொல்ல மாட்டாங்க அம்மா.நான் பாத்துக்குறேன் சரியா, என்றவன் வேட்டியை மடித்து கட்டியவன் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான். மஞ்சு அவனை அனுப்பிவிட்டு அறைக்கு வந்தாள்,அங்கே சந்தியா, அழுது கொண்டே இருந்தாள்.

          மஞ்சு,மச்சி.. அழாதடி, எல்லா சரியாயிடும், அர்ஜூனும் என் வீட்டுக்காரரும் போயிருக்காங்க டி எல்லாம் நல்லதா நடக்கும் விடுடி.சந்தியா, மஞ்சு..மஞ்சு? அவன் உடம்பெல்லாம் ரத்தம் டி , ரொம்பவலிச்சி…இருக்கும்ல… அவனுக்கு,ஒன்னும் ஆகாது இல்ல, என்றவள் அச்சோ?!அப்புறம், நம்ம ஜீவி? யாருடி?அவனுங்க?! அவளை அடிச்சு, முடிய பிடிச்சு இழுத்து,அவ எப்படி துடிச்சா தெரியுமா?எனக்கு கதறி அழுதாள்.மஞ்சுவும் அவள் சொல்வதைக் கேட்டு ஓவென அழுதாள்.

            இங்கே ஹாஸ்பிடலில் நித்தின், அவசரபிரிவில், அட்மிட் செய்யப்பட்டு இருந்தான். அவன் என் அப்பாவிற்கு,தகவல் சொல்லப்பட்டது.உள்ளே அவனுக்கு,ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு இருந்தது.

        அர்ஜுன், அவனை வெளியே கண்ணாடி வழியாக, பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் கண்ணீர், மருது தான் கூட இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

            அதேநேரம், இரவு 12 மணி. ஜீவிகாவை, கடத்திக்கொண்டு சென்ற கார், பச்சை மலையை நோக்கி சென்றது,டிரைவர் சீட்டின் பக்கத்தில் சக்தி அமர்ந்திருந்தான். பின் சீட்டில்,, ஜீவிகாவின் கை, கால்கள்,கட்டப்பட்டு,மயங்கியபடி இருந்தாள்.அவர்கள் அழைத்துச் சென்றது,ஆம்னி வேன் என்பதால், ஆம்புலன்ஸ் மாதிரி செட் செய்து அவளை கடத்தி இருந்தனர். ஜீவிகாவின், வீட்டிற்கு அர்ஜுன் மூலம் தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் அனைவரும் கதறி அழுதனர். ஜிவி அப்பா, ஐயோ!!என் பொண்ணுக்கு என்னப்பா ஆச்சு?அவ யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணலையே!.. குடும்பத்துக்காக, உழைத்த பொண்ணு பா! என் பொண்ண கண்டு பிடிச்சு… என்கிட்ட கொடுத்துடுங்கப்பா.. ஜீவிமா என்றவர், சத்தம் இல்லை, அந்த பக்கம், “ஐயோ”!!என்ன ஆச்சு அப்பா என்னாச்சு? எந்திரிங்க என்ன பல குரல்கள்,, அர்ஜுன் மீண்டும் உடைந்து போனான், இவ்வளவுவிற்கும் காரணமானவனை கொல்லும் வெறி வந்தது.

            அதிகாலை 3:30 மணி அளவில் சக்தியின் கார் பச்சை மலையில் ஒரு ஓட்டு வீட்டில் நிறுத்தப்பட்டது, அவன் கூடவே ஆறு பேரும் இறங்கினர். காரின் பின் சீட்டில் இருந்தவளை, கால் கட்டை மட்டும் பிரித்து, தர,தரவென இழுத்துச் சென்றான் வீட்டின் உள்ளே, ஜீவிகாவால் நடக்கக்கூட முடியவில்லை. உடல் சோர்வு, மனசோர்வு, என இரண்டும் சேர்ந்து அவளை பலவீனப்படுத்தியிருந்தது. அந்த சோர்விலும் ப்ளீஸ்… நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல, நான்.. நான் போய் என் பிரண்ட்ஸ பாக்கணும், என் வீட்டுக்கு போகணும், விடு நித்தின் டால் எப்படி இருக்கான்னு தெரியல? ப்ளீஸ்… என்ன விடு,. என்னை விடு…என தன்னை அவனிடமிருந்து விலக்கிக் கொள்ளப் போராடினாள்,ஆனால் அவன் தான் உடும்பு பிடித்து இருக்கிறானே?!.

          சக்தி,ஏய்!என்னடி? ரொம்ப துள்ளுற?நீ எப்படி பட்டவனு எனக்கு தெரியாது… இன்னும் எத்தனை பேரை, மயக்கி உன் கைக்குள்ள வச்சிருக்க,உன் கூட இருந்தவன் எல்லாம் ஜிவி.. ஜீவி னு உருகுறானுங்க இன்னும் யார்? யார்?குடும்பத்தை எல்லாம் கெடுக்க,இருக்க…என்றவன், அவளை மேலிருந்து, கால்வரை பார்த்தவன், இப்படி, தழுக்கு, மினுக்குன்னு, டிரஸ் பண்ணி, ஆம்பளைங்களை,மயக்குவியோ? என்றான் நக்கலாய் சிரித்தபடி,

                அதில் அதிர்ந்த ஜீவி, குனிந்து, தன்னுடைய,உடையை பார்த்தால் ஆம்,உடை, சற்று விலகி இடை,மற்றும் புடவை மூடி இருந்த மாராப்பு சிறிதாக விலகி இருந்தது, அதை கண்டவள், சடாரென… திரும்பி, நின்று கொண்டாள் கண்ணீருடன்,                                  அதில் மேலும் கோபம் கொண்டவன், என்னடி நடிக்கிற? பெரிய பத்தினி போல, திரும்பி நின்னா? நீ நல்லவ னு….நான் நம்பிடுவேனா? என கர்ஜித்தான் கண்களில் சிவப்புடன்.

          அதில் துடித்துப் போனவள் ப்ளீஸ்… ஏன் இப்படி பேசுறீங்க? நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல? என கதறி அழுதவள் என்ன விட்டுடுங்க…? என்றாள்.

              சக்தி, ஏய்! உன்ன விட வாடி கூட்டிட்டு வந்தேன்,என்றவன் அவளை பிடித்து, திருப்பியவன் கண்ணிமைக்கும் நேரத்தில், அவள் அணிந்திருந்த,புடவையை உருவி இருந்தான்.அதில் பதறியவள் கண்ணீருடன், “ஐயோ”!!என் புடவை, ப்ளீஸ்.. ஐயோ?? விடுங்க..என தன்னை காக்கும் பொருட்டு, ஓடிப்போய்.. சுவரோடு, ஒட்டி நின்று கொண்டாள்,உடல் நடுங்க.சக்தி அப்போதும், விடவில்லை. ரோஸ்லின் அழுதது, அவள் இறந்து விடுவேன் என்று சொன்னது,தான் அவனுக்கு நினைவில் தோன்றியது. கூடவே மதுமதியின் முகமும்.

           உடனே நடிக்காதடி? உன் நடிப்புக்கு உன் கூட இருக்கவங்க வேணா,நம்பலாம் நான் நம்ப மாட்டேன்டி என்றவன், அவள் ரவிக்கையின், பின்பக்கம் பிடித்து இழுத்தான் வன்மத்துடன், அது அவன் கையோடு வந்தது. அதில் அலறிய ஜீவிகா,”ஐயோ”!! யாராச்சும் காப்பாத்துங்களே!! ஏன் இப்படி??காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கிறீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன். இதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்தது கூட கிடையாது, என மூலையில் சென்று,தன் உடலை மறைத்து, கூனி குறுகி, அமர்ந்து கொண்டு, தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்,ஆனால் ஜீவிகா,இவ்வளவு கதறியும், மன இறங்கவில்லை ராட்சசன்…..

           சக்தி, ச்சீ.. வாய மூடுடி… அழாதே, அழுத கொன்னுடுவேன்… இனி இங்க தாண்டி, இருக்க போற, அவளின் தாடியை பற்றி, தன்னை பார்க்க செய்தவன், இனி உனக்கு உன் பாவாடை மட்டும் தாண்டி, உனக்கு உடையாய் இருக்க போகுது.அவள் அழுது கொண்டே இருந்தால் தன் நிலையை எண்ணி, அவன் தொடர்ந்தான் நக்கலாக அவளைப் பார்த்து, இந்தப் பாவாடையோட தான் தினமும் காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் வெளியில உட்கார, போற. போறவங்க எல்லாம் உன்னைத்தான் பார்ப்பாங்க… எப்படி?..என தன் புருவத்தை உயர்த்தினான். அதில் அதிர்ந்தவள், கண்ணீருடன் அவனை, வெறுமையான பார்வை ஒன்றைப் பார்த்தாள். அவள் உடல்,நடுங்கியது.

 இப்ப யாரு ஹீரோயின் னு தெரிஞ்சி இருக்கும். ஆமாங்க ஜீவிகா தான் கதையின் நாயகி.

தொடரும்….

 

             

                  

 

 

1 thought on “முகவரிகள் தவறியதால் 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top