ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 6

அத்தியாயம் 6

  சக்தி, என்னடி பாக்குற? இது சாம்பிள் மட்டும் தான்.இன்னும் நிறைய இருக்கு, தப்பிச்சு போகலாம்னு எண்ணம் இருந்தா இப்பவே அதை விட்டுடு, ஏன்னா? உன்ன கண்காணிக்க ஆள் போட்டு இருக்கேன். நீ தப்பிக்க முயற்சி பண்ணினா? உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சென்னைல தானே உன் குடும்பம் இருக்கு, அப்புறம் உன் உயிர் தோழன், தோழிகள், எல்லாரும் “கதம்”, “கதம்” எப்படி வசதி? நீயே முடிவு பண்ணிக்க, என்றவன், அவள் எவ்வளவு கதறியும், அவள் உடைகளை தீயிட்டு கொளுத்தினான். அதில் மனம் வெறுத்துப் போனால் ஜீவிகா.

       வாசல் வரை போனவன் அவளை திரும்பிப் பார்த்து வரட்டா…. என்று கேலியாக சொன்னவன், கதவை இழுத்து மூடி பூட்டு போட்டு கொண்டு சென்றுவிட்டான். புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ஜீவிகா, அழுது அழுது சோர்ந்து போனாள்.யார் இவர்கள்? இவன் யார்?என்று யோசித்து, யோசித்து, தலை வெடிப்பது போல் இருந்தது. கதவை கூட,பூட்ட மறந்து, சோர்வில், அப்படியே அமர்ந்தபடி கண்ணயர்ந்தாள்.காலை விடியல் யாருக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ???

************************************

இங்கே மதுரையில், தனியார் மருத்துவமனையில், காலையிலேயே கிளம்பி சந்தியா மருத்துவமனை வந்திருந்தாள், அர்ஜுனின் உடையை கையோடு எடுத்து வந்திருந்தாள் , அவசர பிரிவின் வெளியே அர்ஜுன், மருது,,நித்தின் அப்பாவும் மாமாவும் வந்திருந்தனர். நித்தின் அப்பா, கண் கலங்கியபடி அமந்திருந்தார்.நித்தினுக்கு புல்லட் எடுக்கப்பட்டிருந்தது. 

          காலை,சீப் டாக்டர் வந்து பார்த்தார் நித்தியை,வெளியே வந்த டாக்டரிடம் அர்ஜுன்,டாக்டர் என் பிரண்டுக்கு எப்படி இருக்கு?பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லல்ல!? என்றான். டாக்டர், நீங்க அவர் பிரண்டா? ஆமா டாக்டர்,என்றான். டாக்டர்,நேத்து கொஞ்சம், கிரிட்டிக்கல்லா தான் இருந்தாரு,புல்லட் ரிமூவ் பண்ணியாச்சு, பிளட் நிறைய லாஸ் ஆகி இருக்கு, கொஞ்சம் இறக்கி சுட்டு இருந்தாலும் ஹாட் டேமேஜ் ஆகி, ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிருப்பாரு. “காட் கிரேஸ்” உன் பிரண்டுக்கு தோள்பட்டையில் தான் காயம் ஏற்பட்டு இருக்கு. சோ 2, 3,வீக்ஸ்ல ரெக்கவர் ஆகிடுவாரு, இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். கண்ணு முழிச்சதும் போய் பாருங்க டிஸ்டர்ப் பண்ணாம, வரேன் என்று, அர்ஜுன் தோளை தட்டி விட்டு, சென்றார்.

                அதைக் கேட்ட அனைவரின் மனதிலும் நிம்மதி. அர்ஜுன், நித்தி அப்பாவிடம் அங்கிள், நித்திக்கு ஒன்னும் இல்ல னு, டாக்டர் சொல்லிட்டாங்க. நாளைக்கு ஒரு நாள், அவன் ஹெல்த் கண்டிஷன் பார்த்துட்டு, மண்டே டிஸ்டார்ஜ் கேட்டுக்கலாம் என்றான் . அவரும் சரி என தலையாட்டினார்.ஒரு 11 மணி அளவில் நித்தின் கண் விழித்தான்.அவன் எழுந்ததும் கேட்ட,முதல் வார்த்தை, என் “பேப்” பார்க்கணும்,என்னை விடுங்க…. அவளை,நான் ‘சேவ்’பண்ணனும். என ஒரே சத்தம் அறையில்.சத்தம் கேட்டு அர்ஜுன்தான் ஓடினான். அர்ஜுன்,டேய் ‘மச்சான்’ உனக்கு நினைவு வந்துருச்சா?! டேய் உனக்கு உடம்புக்கு சரியில்லடா? டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க. கை அசைக்காத டா,வலிக்க போகுது. என்றான் அவனை அணைத்த படி,

           நித்தின்,மச்சி..மச்சி..எனக்கு ஒன்னும் இல்லடா? வா நம்ப ஜீவியை போய் தேடுவோம். அவ வீட்ல,நான் என்ன பதில் சொல்லுவேன்? என் பேபி என்ன கஷ்டப்படுறான்னு தெரியலேயே? என கலங்கினான். (அர்ஜு,சந்தியா,அவன் அப்பா, மாமா, என அவனை மாற்றி மாற்றி போய் பேசி சிறிது நேரம் அமைதிப்படுத்தினர் ).

          ஆனால் இங்கே பச்சை மலையில், காலை நல்ல குளிர் கண்களை திறக்கக்கூட முடியவில்லை, உடலில் அத்தனை சோர்வு, எழுந்தபோதுதான், தன் நிலையைப் பார்த்தால், அதிர்ந்து தன் பாவாடையை ஏற்றி கட்டி தன்னை காத்துக் கொண்டாள். தன் நிலையை எண்ணி,’ஓ’வென அழுதாள் ஜீவிகா.பின் இரவு நடந்த நிகழ்வு ஒவ்வொன்றாக நினைவில் வந்தது அவளின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்து நடுங்கியது, நித்தின் ஞாபகம் வேறு, அச்சோ!? நித்தீ..எப்படி? இருக்கான்??என்ன ஆச்சுன்னு தெரியலையே… கடவுளே? என் நித்தி, டாலுக்கு… ஒன்னும் ஆகியிருக்கக்கூடாது. என் உயிரை கூட எடுத்துக்க, அவனை காப்பாற்றி கொடுத்துடுங்க ப்ளீஸ்… என கண்ணீரோடு கதறினாள்.

           ஏன் கடத்தினார்கள்? யார் இவர்கள்? என ஒன்றும் தெரியவில்லை. அதுவும் மதுரையில் வைத்து, ஏனெனில், அவள் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னையே, சொந்தம்,என இந்த பக்கம் யாரும் இல்லை, ப்ராஜெக்ட் விஷயமாக ஒருதரம்,நண்பர்களோடு திருச்சி வந்திருக்கிறாள்.மஞ்சு திருமணம் என்ற பெயரில்,இரண்டாம் முறை பயணம்,அவ்வளவுதான். மற்றபடி நண்பர்கள், வேலை,தன் குடும்பம்,என்று தான் இருப்பாள். அவள் தன்னை கடத்தியது யாராக இருக்கும்?!! என்று யோசித்து, யோசித்து தலைவலி வந்துவிட்டது. தலையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் தன் இயலாமையை எண்ணி.

    இங்கே திருச்சியில், சக்தியின் வீட்டில் மீனாட்சி,என்னப்பா? சக்தி நைட்டெல்லாம் எங்க ராசா… போயிருந்த?வீட்டுக்கு வரலையே நீ?என்றார்.சக்தி, சற்று தயங்கியவன், அது வந்துமா… மில்லு விஷயமா?பக்கத்து ஊரு  வரை போயிருந்தேன், இனி அடிக்கடி போய் வருவேன் என்று, அவர் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு, விறு விறுவென, மாடி ஏறி விட்டான். முதல் முறை தாயிடம் பொய் கூறியிருக்கிறான் அதனால் வந்த தயக்கம்.

             மீனாட்சி,போகும் தன் மகனை உற்று கவனித்தார். ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கான், என்னவோ பிள்ளை இந்த குடும்பத்துக்காக உழைக்கிறான். அவனுக்குன்னு, ஒரு பொண்ணு பார்த்து, கட்டி வைக்கலாம்னா.. பிடியே கொடுக்க மாட்டேங்கிறான். கடவுளே!! நீ தான் என் பிள்ளைக்கு ஏற்ற,மருமகளா! கொண்டு வரணும், என வேண்டிக் கொண்டார்.

         பச்சை மலையில், ஜீவிகா அறையை,சுற்றி நோட்டமிட்டாள். ஒரு,இரும்பு கட்டில்,ஒரு தலையணை, ஒரு பானை, அதில் தண்ணீர்,ஒரு துடைப்பம்,வீட்டை ஒட்டினார் போல் பாத்ரூம், புதியதாக கட்டியது போல் இருந்தது. ‘தனியாக இருக்கிறாள்’ தனியாக இருப்பது, இதுதான் முதல் முறை. பயம் வேறு ஒரு பக்கம், எழுந்து ஜன்னல் வழியாய், எட்டிப் பார்த்தாள்.

            சுற்றிலும் காடு போல் இருந்தது, விடிந்து இருந்தது. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை, பூச்சுகளில் ரிங்காரமும், பறவைகளின் சத்தமும், தான் அதிகமாக இருந்தது. எழுந்து குளியலறை புகுந்தவள், பல்பொடி,கொண்டு பல்லை தேய்த்தாள்.சின்னதாக ஒரு சோப் ஒன்று இருந்தது, அதைக் கொண்டு குளித்துவிட்டு,தான் அணிந்திருந்த பாவாடையை அணிந்து கொண்டாள் குளிர் வேறு ஒரு பக்கம்,பாடாய் படுத்தியது.10மணியளவில் கதவு தட்டப்பட்டது.

                 ஜீவிதா பயந்துவிட்டாள், யாராக இருக்கும்?இந்த நேரத்தில், யாராவது ரவுடி?!குடிக்காரர்கள்!? நினைக்கவே….நடுக்கமாக இருந்தது. இப்படியே… இறந்தால் கூட நன்றாக இருக்கும், என்று எண்ணினாள் உதடு கடித்து, தேம்பி தேம்பி அழுதாள் , திரும்பவும் கதவு வேகமாக தட்டப்பட்டது… ஜீவிகா, நடுங்கிய குரலில் யா…யாரது…??உங்களுக்கு யார் வேணும்? என்ன வேணும்?என்றால் பயத்துடன்,

             வெளியே ஒரு பெண் குரல், அம்மா என் பேரு வேணி, சக்தி ஐயா உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. எடுத்துட்டு வந்துருக்கேன். கதவை திறங்க என்றாள்.ஆனால் ஜீவிகாவுக்கு பயம் போகவில்லை. எனக்கு.. எனக்கு….ஒன்னும் வேணாம்… எனக்கு பசிக்கல? நான் இருக்கிற நிலைமைல,யாரையும் நான் பார்க்க விரும்பல?! என்றாள் கண்ணீருடன், தன் நிலையை எண்ணி.

தொடரும்…..

            

 

 

5 thoughts on “முகவரிகள் தவறியதால் 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top