ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 8

அத்தியாயம் 8

   ஜிவி, யாரோ வரும், சத்தம் கேட்டு ஓடிப்போய்,கதவை சாற்றிக் கொண்டாள் பயத்தில்,சிறிது நேரத்தில்,கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது,திறக்கவில்லை,என்றதும் இன்னும் வேகமாக தட்டப்பட்டது,.. ஜிவி பயந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு யாரு ? யாரது?? என்றாள்.

   வெளியே, “ஏய்” கதவை திறடி.. என கர்ஜிக்கும் சத்தம், அவளுக்கு யாரென்று தெரிந்துவிட்டது? உடல் நடுங்கியபடி,கதவைத்திறந்தாள்.மேலே,ஒரு துண்டை போட்டு கொண்டு, இருந்தாள்.அவன் தான்(சக்தி) நின்றிருந்தான். அய்யனார் சிலை போல, இடுப்பில் கைவைத்து கண்களில் சிவப்புடன், அவன் நிற்கும் நிலையைப் பார்த்த அவளின் உடல் வெளிப்படையாக நடுங்கியது…..                    “இன்றைக்கு என்ன செய்ய காத்திருக்கானோ” என்று,

      அவள் நினைத்தது போலவே, அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்தவன், விட்டான் “ஒரு அறை” அதில் சுழன்று போய்,அவள் அமரும் இடத்தில் விழுந்தாள்.

     அவன் அடித்ததும், பயந்தவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே நகர்ந்தால் அழுகையில் தேம்பியபடி,

           சக்தி,எவ்ளோ?தைரியம் இருந்தா? நான் அவ்வளவு சொல்லியும், நீ வெளியே வராமல் உள்ளேயே இருப்ப என்றான். ஜீவிகா,நா…நான் வெளி…வெளியே இருந்து..,

         சக்தி,பேசாதே…வாய மூடுடி? மேல வேற துண்டு போட்டு இருக்க,அவ்வளவு தைரியம் வந்துருச்சா? என்றவன் சுற்றி முற்றிப் பார்த்தான், அவன் நியமித்திருந்த ஒரு ஆள் கையில் சிகரெட் உடன் நின்று கொண்டிருந்தான்.

      வேகமாக அவனிடம் எழுந்து சென்றவன், அவன் கையில் இருந்த, சிகரட்டை பறித்துக் கொண்டு அவளிடத்தில் வந்தவன்,அவள் கையைப் பிடித்து சிகரெட்டை நெருப்புடன் அவர் கையில் வைத்து அழுத்தினான். அதில் உயிர்வலி கொண்ட ஜீவிகா ஏன் இப்படி?பண்றிங்க, ம்மாஆஆ …!?வலிக்குது.. வலிக்குது…உ “ஆ” என்று வலியில் துடித்தவள் உதட்டை கடித்து,தேம்பி, தேம்பி,அழுதாள். ஏற்கனவே மனவலியில் இருப்பவளுக்கு உடல் வலியும், சேர்ந்து மயக்கத்திற்கு கொண்டு சென்றது.

          தொப்பென,தரையில் சரிந்தாள். மயங்கி ஒரு மணி நேரம், கழித்து லேசாக விடுப்பு தட்டியது, சுற்றி யாரும் இல்லை படுக்கையில் இருந்தாள்.காயம் எரிந்தது காயத்தை பார்த்தால், மருந்து தடவி இருந்தது. அவனை தேடினாள்,அவன் சென்று விட்டிருந்தான்.

           வேணி அப்போதுதான் நுழைந்தால் மதிய சாப்பாட்டுடன், அவரைப் பார்த்ததும் அழுகை திரும்பவும் வந்தது, குழந்தை போல தேம்பினாள்.

            வேணி, அழாதம்மா, எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்,இப்ப சாப்பிடு. காலையிலிருந்து சாப்பிடல? பார், என்றவர் உணவை எடுத்து வைத்தார். 

     உணவை வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை, ராட்சசன் அதற்கும், ஏதாவது சொல்லுவான். இல்லையென்றால், அடிப்பான் முகம் கழுவி வந்தவள், உணவை உண்டாள். உடல் மெலிந்து காணப்பட்டாள்.அதன் பிறகு மூன்று நாள், அவன் வரவே இல்லை, சற்று நிம்மதியாக இருந்தாள்.

             அன்று சக்திவேல், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மீனாட்சி தான் பரிமாறிக் கொண்டிருந்தார். கிச்சனில் மதுமதி சத்தம்,அக்கா எனக்கு அப்பளம் வேணும்,போட்டு தாங்க, என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

           பாக்கியம், சரி மதுமா, நீங்க போங்க நான்,கொண்டு வரேன் என்றார். 

     மது,அதெல்லாம்,முடியாது… நீங்க போட்டுக் கொடுங்க, நான் போறேன், என்றாள் அடமாய்,

    அவள் சத்தம் கேட்ட மீனாட்சி, மதி வா இங்க?அவ தருவா உனக்கு என்றார்.

    மதி, இருமா, வாங்கிட்டு வரேன் என்று தனக்கு, பிடித்த கலர் அப்பளம், பொரிப்பதை பார்க்க,பக்கத்தில் நின்றாள்.

     சற்று நேரத்தில், சமையல் அறையில் இருந்து அம்மா… ஆ.. என ஒரே சத்தம் மது தான் அலறிக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சக்தியும், மீனாட்சியும், சமையலறைக்கு ஓடினர், அங்கே மது, தன் வலது கையை, பிடித்து ஊதிக் கொண்டிருந்தாள்.

           சக்தி, உடனே அவள் கையைப் பிடித்து, பார்த்தான், சூடான அப்பளத்தை கையில், எடுத்ததில் கைவிரல் சூடு பட்டு சிவந்திருந்தது, அந்த வலியே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அண்ணா…. எரியுது னா.. என்றால் அழுதபடி,

   அப்போது,’ஒரு நிமிஷம்’ ஜீவிகா, அம்மா… ஆ…என்று அலறியது கண்முன் வந்து போனது, கண்களை இறுக்கமாக, மூடிக் திறந்தான். 

              மீனாட்சி, அடியே!சாதாரண வலி தான்,இதுக்கே அழுது,ஊர கூட்டுற, நானும் என்னவோ? ஏதோனு…பயந்துட்டேன், சக்தி நீ வாப்பா… என்றார்.

       அதில் தெளிந்தவன் கைகளை கழுவிக்கொண்டு தன்அறைக்கு சென்று விட்டான்.

          **——-*****——*****

இங்கு சென்னையில் சந்தியா, அர்ஜுன்,ஜீவிய பத்தி, ஏதாவது தகவல் கிடைச்சுதா? என்றால் சோகமாய்?

     அர்ஜுன்,இல்லடி, ட்ரை பண்ணிட்டு இருக்கோம், போலீஸ் ஒரு பக்கம் தேடுது.சந்து,அவங்க வீட்ல போன் பண்ணி, ஒரே அழுகை, ஜீவி அப்பாக்கு உடம்பு சரி இல்லாம,போயிடுச்சாம், அவங்க அம்மா, கால் பண்ணாங்க டா?அழுதுகிட்டே, என்றாள். 

    அர்ஜு,எனக்கும் தெரியும்டி, எப்படி போனாலும்,முட்டு சந்தா இருக்கு, நித்தியும், ஒரு பக்கம் தேடிட்டு,இருக்கான் கண்டுபிடிக்க முடியல, ஆனால் அவள கடத்தினவன், மட்டும் என் கையில கிடைச்சான்,அவனுக்கு என் கையால தான் டி சாவு…? “ப்ளேடி சீட்” என பல்லை கடித்துக் கொண்டு கத்தினான்.

    சந்தியா அஜு, கோபப்படாதே, அதுக்கான நேரம்,இது இல்ல டா ஃபர்ஸ்ட் அவள கண்டு பிடிப்போம்.அப்புறம்,பேசிக்கலாம், என்றாள்.அவள் சொன்னதும், அவளை அனணத்தவன் பாவம் டி அவ,எங்க இருக்கா?எப்படி இருக்கான்னு தெரியல? சாப்பிட்டாலான்னு ஒன்னும் தெரியலடி? என்றான் அவள் தோளில் முகம் புதைத்து, சந்தியா, அவனை அனணத்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

      ****************************

    இங்கே பச்சை மலையில், காலை வந்த வேணி ஜீவிதாவிடம் சாப்பிடுங்க,, என்றாள்.ஜீவி,வேணி அக்கா உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் சொல்லுவீங்களா? என்றால் தயங்கி, வேணி,சொல்லுமா என்றாள். 

     ஜீவி, இது எந்த ஊர்,அக்கா… என்றாள்.வேணி,அவள் கேட்டதில் திருதிருவென விழித்தார், ஜீவிதா விரக்தியாக,சிரித்தவள்,என்னக்காதப்பிச்சு… போயிடுவேன் னு நினைக்கிறீர்களா?? என்றாள். 

          வேணி,அப்படி இல்லமா… என்றாள்.ஜீவி, தன்னை காட்டியவள், நான் இருக்கிற நிலைமையில் தப்பிச்சு போக முடியும் னு நினைக்கிறீர்களா??? என்றாள்.

    வேணி,உடனே அது இல்லம்மா… சொல்லக்கூடாதுன்னு,உத்தரவு. இருந்தாலும் சொல்றேன், என்ன காட்டி கொடுத்திடாதீங்க மா,, என்றவர் அவள் கைகளில், மருந்தை பூசி கொண்டே, இந்த இடம் பெயர் “பச்சை மலை”மா என்றாள்.

  ஜிவி,”ஓ”அதான் எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு இருக்கோ என்றாள்.

        வேணி, நான் ஒன்னு கேட்பேன் சொல்லுவிங்களா?….என்றாள் பீடிகையோடு,ஜீவி,என்னன்னு கேளுங்க அக்கா, தெரிஞ்சா சொல்றேன் என்றாள்.

     வேணி, ஏன்? மா ஐயா உங்கள கடத்திக் கொண்டு வந்து வச்சு, காவலுக்கு மூணு நாள் போட்டு இருக்காங்க?? என்று கேட்டாள்.

கடத்திக் கொண்டு, வந்தது தெரியும் ஆனால், காவலுக்கு, ஆள் இருப்பது புது தகவல் ஜீவிக்கு.

      ஜீவி, என்னக்கா சொல்றீங்க? எனக்கு காவலுக்கு ஆளா?தப்பிக்க கூடாதுன்னு போட்டு இருப்பாங்க அக்கா.. என்றாள். 

      வேணி,ஆமாமா?? நீங்க உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, நூறு மீட்டர்,தள்ளி 3 பேர் இருக்காங்க, உங்கள கண்காணிக்க என் வீட்டுக்காரர், சொன்னார்.

     அப்புறம், இன்னொன்னு கேட்கவா? என்றாள்.ஜீவி, இன்னுமா, சரி என்றாள்.

    வேணி, அது இல்லம்மா ஐயா, உங்கள காதல் பண்றாங்களா? நீங்க, அவரோட காதல… ஒத்துக்கலையா ?அதனால கடத்தி வைத்து,கொடுமை படுத்துறாங்களா?என்று கேட்டார் வெள்ளந்தியாய்.

    அதில் விரக்தியாக சிரித்த ஜீவி, ‘காதல்’அது மட்டும் தான், குறைச்சல் எனக்கு, எதுக்கு கடத்தி, கடத்திட்டு வந்தாங்கன்னு, இதுவரைக்கும்,தெரியல அக்கா, திடீர்னு,வருவாங்க கத்துவாங்க?, அடிப்பாங்க?,காயப்படுத்துவாங்க,போயிடுவாரு…..

வேணி, ஏம்மா நீங்க கேட்கலையா? ஜீவி,கேட்டேன்கா? என்னை… பேசவேவிடல..அடிச்சிட்டாங்க… என்னை  என அழுதாள். 

 

தொடரும்….

     

 

            

            

 

 

3 thoughts on “முகவரிகள் தவறியதால் 8”

  1. Энергоэффективные каркасные дома – уют для вашей семьи
    каркасные дома цены [url=http://www.karkasnye-doma-pod-kluch1.ru]http://www.karkasnye-doma-pod-kluch1.ru[/url] .

  2. Индивидуальный стиль через текстильные изделия
    печать рисунка на ткани на заказ [url=https://www.studiya-pechati-na-tkani.ru/]https://www.studiya-pechati-na-tkani.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top