ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 7

அத்தியாயம் 7

வேணி,அம்மா நீங்க கதவை திறக்கலைன்னா.. தான் இன்னும் பெரிய பிரச்சினை ஆயிடும்,நான் சாப்பாடு கொடுத்துட்டு போயிடுறேன் என்றாள் . ஜீவிகா, தயங்கி, தயங்கி, கதவைத் திறந்தாள்.அங்கே 40 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் கையில் பெரிய கூடையுடன்,,

           உள்ளே வந்தவர் ஜீவிகாவின் நிலைய பார்த்து அதிர்ந்தார். கண்ணீருடன் தலைகுனிந்தபடி, அமர்ந்திருந்தாள் ஜீவி.வேணி சாப்பிடுங்கம்மா. என்று அவளுக்கு சாப்பாட்டை கொடுத்தார். 

          கூடவே ஒரு பையும், அதில் பாவாடை மட்டும் இருந்தது.உடனே வேணி நம்பருக்கு கால் வந்தது, வேணி,பேசியவர் ஜீவிகாவிடம் போனை நீட்டினார்,ஜீவிகா தயங்கியப்படி,போனை வாங்கி காதில் வைத்தாள்.

        எதிர்முனையில், “ஏய்”? என்னடி? குளிர் விட்டு போச்சா? சாப்பிட்டு சீக்கிரம் போய் வெளியே உட்காருடி… என சத்தமிட்டான்.ஜீவிகா, “ப்ளீஸ்” இப்படியே வெளியே போக சொல்லாதீங்க!? நா..நான் பாவாடை மட்டும் தான் கட்டி இருக்கேன், எனக்கு உடம்பெல்லாம் கூசுது,’ப்ளீஸ்’…. வெளி நிறைய பேர் வருவாங்க நான் உள்ளவே இருக்கேனே? ப்ளீஸ்” என்றாள்.

       அதில் கோபம் கொண்ட சக்தி, உடனே “ஓ” அப்ப நான் சொன்னா நீ செய்ய மாட்ட…ரைட், உனக்கு  உங்க அப்பா னா ரொம்ப பிடிக்கும் இல்ல? ‘அப்ப அவர முதல்ல தூக்குறேன்’, என்றான் ஆங்காரரமாய்…

           அதில் பதறிய ஜீவி,”ஐயோ”அப்படி மட்டும் பண்ணிராதீங்க? உங்கள கெஞ்சி கேட்கிறேன், அவர் வயசானவர் ஒன்னும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்…. என்றாள்.

      சக்தி, “ஹா”,”ஹா” அப்படி வாடி வழிக்கு, போய் உட்காருடி வெளியே என்றான். ஜீவிகா,அழுதபடி, வெளியே சென்று அமர்ந்தாள்.வேணிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது அவள்  நிலையை எண்ணி,

      இப்படி ஒரு நிலைமையில் வெளியே சென்று அமர்வதற்கு செத்து விடலாம் என்று தோன்றியது, ஆனால் சாவதற்க்கும் விடவில்லை அந்த ராட்சசன். அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். 

        பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத இடம்தான், ஆனால் போவோர் வருவோர்  தான் இருக்கும் நிலையை பார்த்தாள் !? வாய் பொத்தி அழுதாள்.

           அவன் சொன்னதும், தயங்கி தயங்கி, வெளியே வந்தாள்.100 மீட்டர் தூரத்திற்கு யாரும் இல்லை தான், எதிரே ஒரு மலை இருந்தது, நல்ல வெயில் ஆனாலும் குளிர் தெரிந்தது, வெளியே திண்ணையில் வந்து அமர்ந்தாள். ஜீவிகா விற்கு  அவமானமாக இருந்தது. 

       ” நெஞ்செல்லாம்வலித்தது” அழக் கூட தெம்பில்லை, அவளுக்கு கால்களை குறுக்கி, தலை கவிழ்ந்து  அமர்ந்து கொண்டாள்.ஒவ்வொரு முறையும், வாகனங்கள், மற்றும் மக்கள், தான் இருக்கும் இடத்தை கடந்து செல்லும்போது, தன்னை பார்த்து விடுவார்களோ?! என கூனி குறுகிப் போனாள்.

          அவளை அங்கே கண்காணிக்க மூன்று பேரை நியமித்திருந்தான் சக்தி.அவர்கள் இவள் பக்கம் வரவில்லை என்றாலும் தூரத்தில் இருந்து அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

                ஜீவி,அழுது கொண்டே மாலை வரை வெளியே அமர்ந்திருந்தாள்.சற்று இருட்ட தொடங்கியதும் திரும்பவும் வேணி வந்தார், சாப்பாட்டை எடுத்துக்கொண்டு,

        வேணி, வாம்மா உள்ள போலாம் இருட்டுடிச்சு பாரு ஒரு மணி நேரத்துல கரடி, யானை, ஏதாச்சும் வரும் உள்ள வா…சாப்பிட்டு படுத்துக்கோ என்றார். அதில் பயந்தவள், அவர் கையை இறுக்க பிடித்துக் கொண்டு, அக்கா நீங்க சொன்னது போல யானை, கரடி எல்லாம் வருமா? என்றாள் வெளியே ரோட்டை பார்த்தபடி, 

           வேணி,ஆமாமா? அப்பப்போ வரும், வெளிய மட்டும் வராத ராத்திரி என்றார்.அதைக் கேட்டு பயந்து அழுதவள், அக்கா “ப்ளீஸ்” எனக்கு பயமா இருக்கு!?என் கூடவே தங்கிருக்கீங்களா? என்றாள். வேணிக்கு அவள் பயப்படுவது பாவமாக இருந்தாலும் மன்னிச்சிடுமா? சாப்பாடு மட்டும் தான் கொடுக்க அனுமதி எனக்கு, கொடுத்ததும் வெளியே போக சொல்லிட்டாங்க என்றார்.

      ஆனால் ஜிவிக்கு சாப்பாடு இறங்கவில்லை, சாப்பிட்டு முடித்த பின் கதவு பூட்டப்பட்டது. அவளும் கதவை சாத்தி படுத்தாள். வேணி சொன்னது போல், தூரத்தில் யானை ‘பிளிரும்’சத்தம் கேட்டது, கூடவே நாய்கள் குறைத்தது. அந்த சத்தத்தில் அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கி தூக்கி போட்டது… கடவுளே!! என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது சாமி….நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினேன் என்று நினைத்தாள் 

       திரும்பவும் தூரத்தில் சத்தம், காதை பொத்திக்கொண்டு அம்மா! அப்பா! ‘எனக்கு பயமா இருக்கு’ யாராச்சும் வாங்களேன்.ப்ளீஸ்….

     அர்ஜுன்… நித்தி… மச்சீஸ் ரொம்ப பயமா இருக்கு… எனக்கு,ரொம்ப பயமா இருக்கு… என நடுங்கியபடி அமர்ந்திருந்தாள் கண்ணீர் விட்டபடி, 

          பயத்தில் அப்படியே மயங்கியும் இருந்தாள்.இப்படியே இரண்டு நாட்கள் பயத்துடனே சென்றது.

  ********************************

இங்கே, மதுரையில் திங்கட்கிழமை, காலை நித்தினை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். நித்தின் சற்றே உடல்நிலை தேறி இருந்தான். அர்ஜுன், நித்தி.. உடம்ப பாத்துக்க நல்லா ரெஸ்ட் எடு,இப்போ உனக்கு தேவை ரெஸ்ட்.சோ,நெக்ஸ்ட் வீக் நான் வந்து பார்க்கிறேன், இப்ப அப்பா கூட, வீட்டுக்கு போ என்றான்.

    நித்தி,என்ன மச்சான்? இப்படி பேசுற, ஜீவி,என்ன ஆனா?எங்க இருக்கா? எப்படி இருக்கா? யார் கடத்தினா? னு ஒண்ணுமே தெரியல டா? அப்புறம் நான் எப்படி வீட்டுக்கு போக முடியும்? இந்த நிலைமையில,”இடியட்” மாதிரி பேசுற…. என பல்லை கடித்தான். 

      அர்ஜுன், மச்சான் எனக்கு புரியுது கமிஷனர் கிட்ட பேசியாச்சு, அப்பா ஆள் வச்சு தேடிட்டு தான் இருக்காங்க, காலைல,கிடைச்ச இன்ஃபர்மேஷன் படி ஜிவி போன், கடைசியா, திருச்சி கிட்ட சிக்னல் காட்டி இருக்கு, 

    அதுக்கப்புறம், எங்கன்னு தான் தெரியல, அதான் கண்டுபிடிச்சுட்டு இருக்காங்க டா கூடிய சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம்டா. சோ நீ போ நான் பாத்துக்குறேன். உடம்பு சீக்கிரமா குணமாகி வா. ஜிவி உன்னை இப்படி பார்த்தா, ரொம்ப வேதனை படுவா சரியா? இப்ப கிளம்பு நான் உனக்கு தகவல்  கிடைக்க,  கிடைக்க உனக்கு இன்போர்ம் பண்றேன், ‘டேக் கேர் மாப்ள’ என அவனை அணைத்து விடுவித்தான். 

       சந்தியாவிற்கு, மனசே இல்லை நேற்று வரை சிரித்து,பேசிக் கொண்டு இருந்தவர்கள், ஒரே இரவில் அத்தனையும் தலைக்கீழாக மாறி இருந்தது, ‘என்னால முடியல’ பேபி எனக்கு ஜிவி பேபிய பாக்கணும் போல இருக்கு, அவ இல்லாம எதையோ இழந்தது போலவே இருக்கு டா!?என அழுதால் அவன் தோள் சாய்ந்து, 

      அர்ஜுவுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால், எல்லாரும் சோர்ந்து போனால் தேற்ற ஆள் இல்லாமல் போய்விடும், அதனால் அவன் தன்னை திடப்படுத்திக் கொண்டு மற்றவர்களை தேற்றிக் கொண்டும் இருந்தான் 

             மஞ்சுவிற்கு, போனில் தகவல் சொல்லிவிட்டு மருது விடவும் விடை பெற்று தங்கள் ஊரை நோக்கி பயணமானார்கள் மனதில் வேதனையுடன்,

            ——————————–

இங்கே ஜீவி, இருந்த இடத்தில் நல்ல மழை ஏற்கனவே குளிர் அதிகமாக இருக்கும், இப்போது மழை வேறு பெய்கிறது. வேணி வந்து சாப்பாடு வைத்து விட்டுப் போனால், பாதி சாப்பாட்டு குப்பைக்கு தான் போகும். வேணி, ஏன் மா?சாப்பிடவே மாட்டேங்குற?இந்த மூணு நாள்ல இளைத்து போயிட்டோமா நீ? என்றாள்.

பசிக்கல அக்கா, என்ற தோடு நிறுத்திக் கொண்டாள்.மழை கொஞ்சம் விட்டிருந்தது. மண்வாசனை, குயில் சத்தம், காற்றில் மரங்களின் இலைகள் சத்தம்,என கொஞ்சம் வேதனையில் இருந்து,வெளியே வந்து அதில், லாய்த்து போயிருந்தாள். 

        சரியாக சாப்பிடாததால் உடல் சோர்வு கண்டிருந்தது, அப்போதுதான் அந்த சத்தம் தூரத்தில், யாரோ தன்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அதில் பயந்தவள்,”சாமி காப்பாத்து” என்றபடி,எழுந்து வீட்டினுள் ஓடி கதவை சாத்திக் கொண்டாள் வந்தது யாரோ???

 

தொடரும்…

 

       

 

 

1 thought on “முகவரிகள் தவறியதால் 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top