ATM Tamil Romantic Novels

தலைவனிடம்  தூது போவதரடியே 26



இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா 

ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..

 

அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..

 

டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம் சொல்லலானா இருக்குற நாலு முடியும் கொட்டிரும்…ஷ்ஷ்..ப்பா.. முடில..

 

என்ன டா நடக்குது..நானும் ஒரு மணி நேரமா  கத்துறேன்.. ஒன்னும் சொல்லாம போண்டாவ முழுங்கின மாதிரி இருக்க…வாய தொற டா பண்ணி என்கவும்

 

ஒரே சந்தகடை போல சத்தம் போடவும்..



ஐயோ.., கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா ..

 

உனக்கு ஏன் டா நோகுது..என் பொண்ணை நைட்ல இருந்து காணும்னு சொல்லும் போது இந்த கிழவி எங்களை எண்ணலாம் பேசிச்சு தெரியுமா ..



என்னது கிழவியா..

 

யாரை பார்த்துடி கிழவி ன்னு சொன்ன..நா கலா டி..சூரிய கலா. அவ்ளோ பெரிய ஜமீனே என்ன பார்த்து பயப்படுவாறு, நீ என்னன்னா என்ன கிழவினு சொல்றியா ..ம்ம்ம் என்று சண்டைக்கு நிற்க..

 

ஆமா ஆமா குமரி தான்..ஹுக்கும்.. 

 

டேய் ரிஷி இவுங்க கிட்ட என்ன பேச்சு எனக்கு வேண்டிக்கிடக்கு…

 

அர்ஜுன், அனா எங்க இருக்காங்க அதை சொல்லு பஸ்ட்.. அப்புறம் வச்சுக்குறேன் இதுங்களுக்கு..

 

இரு பாட்டி..,அர்ஜுன் அண்ணா வேற போன் அட்டன் பண்ண மாட்டேங்குறான்..கடுப்பா இருக்கு ..

 

அட அறிவு கெட்டவனே.., புருஷன் பொண்டாட்டியா நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரட்டும் ..அப்போ பேசிக்கலாம் ..இப்போ வீட்டுக்கு போவோம் ..வாங்க எல்லாரும்..



பாட்டி சும்மா இரு ..அண்ணி பாவம் அண்ணா கூட சண்டைல இருக்காங்க ..பேசி சமாதானம் பண்ணுவோம்..

 

அட கருமமே ..டேய் பெரியவனே இவன் சரியான நைன்ட்டி கிட் ஆஹ் வே இருக்கானே..

 

ஏன் பாட்டி?

 

அடேய்..புருஷன் பொண்டாட்டி பிரச்சனை எல்லாம் அவங்களே பேசி தீர்த்துப்பாங்க …நாம தலை இட கூடாது..அவனே வருவான்.. புரியுதா..




ஹி.. ஹி.. புரியுது பாட்டி..

என்ன புரிஞ்சதோ போ..அவுங்க ரெண்டு பேரும் இங்க தா இருக்காங்கன்னு நீ சொல்லும் போதே புரிஞ்சுருச்சு டா..எல்லாரும் வீட்டுக்கு போவோம் ..அவுங்க சந்தோசமா வாழ அரம்பிச்சுருப்பாங்க..அத நாம கெடுக்க கூடாது..

இப்போ கிளம்பலாம்..என்று வெளியேறினர்

 

1 thought on “”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top