ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 9

அத்தியாயம் 9

   இப்படியே ஒரு வாரமும் மூன்று நாட்களும் சென்றிருந்தது. சக்தி, ஹாலில்அமர்ந்திருந்தான். மீனாட்சி,ப்பா சக்தி சொல்றேன்னு கோச்சிக்காத, எவ்வளவு நாள் தான் நீ தனியாவே இருப்ப உனக்குன்னு துணை வேண்டாமாபா? பக்கத்து ஊர்ல இருந்து ஒரு சம்மதம் வந்திருக்கு,பொண்ணுக்கு 28 முடிஞ்சு 29 ஆக போகுதாம்.

     ஒரு டிகிரி முடிச்சிருக்கா? ஜாதகம்   செட் ஆகுதுன்னு, சொல்லி பார்க்க வர சொன்னாங்க, நீ சொன்னா நம்ப போய் ஒரு நாள், பார்த்துட்டு வரலாம். உன் பேர சொன்னதும், சம்மதம் சொல்லிட்டாங்க பா என்றார்.

       மீனாட்சி சொன்னதை எல்லாம் சக்தி காதில் கேட்டானே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை, பேப்பர் படிப்பதில் மும்முரமாக இருந்தான். மீனாட்சி,என்னப்பா நான் சொல்லிட்டே இருக்கேன், நீ எதுவும் பேசலையே என்றார். சக்தி, கேட்டுச்சிமா நீங்க சொன்னது, இந்த ஆடி,முடிஞ்சா உனக்கு 34 வயசாகுதுப்பா… அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்,

     நேரம் கூடி வருது, வேணாம்னு சொல்லாதப்பா.. என்றார்.சக்தி, அம்மா எனக்கு தோணும்போது சொல்றேன்,ஜோசியத்தை,எடுத்துக்கிட்டு என்கிட்ட வராதீங்க?? என்று சொன்னவன்,விறுவிறுவென, வெளியே சென்று விட்டான். 

           வெளியே சென்றவன்,  நேரே மில்லுக்கு சென்று கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் போன் அடித்தது, திரையில் சித்தி என ஒளிர்ந்தது,யோசனை உடன் புருவம் சுருக்கி, போனை ஆன் செய்து காதில் வைத்தான். 

          அந்த பக்கம், ஒரே அழுகை, எப்பா சக்தி?!.. உன் தங்கச்சி ரோஸ்லின் கைய அறுத்துக்கிட்டு, ஹாஸ்பிடல்ல கிடக்குற பா,அவ புருஷன் செத்துப்போன்னு சொன்னான்னு, இந்த பொண்ணு இந்த காரியம் பண்ணி வச்சிருக்கா பா என ஓவேனா அழுதார்.

      அதைக்கேட்ட சக்திக்கு, கைமுட்டி இறுகியது. சித்தி பாப்பாக்கு ஒன்னும் ஆகாது, நான் வரேன் அங்கே, என்றவன் தன் தாய்க்கு தகவலை, சொல்லி ஹாஸ்பிடல் வரும்படி அழைத்தான்.

          அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடல் அடைந்தான். வெளியே குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சித்தி அழுகையுடன் நின்றிருந்தார். சக்தி,அவ எங்க இருக்கா? சித்தி என்றான்.

      அவன் சித்தி, இதோ இந்த ரூம்ல வலது பக்கம்,பெட்ல பா.

       உள்ளே அறையில், கைகளில் கட்டு போட்டு, ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.கண்மூடி படுத்து இருந்தாள்,ரோஸ்லின். அவளைப் பார்த்தவன்,வெளியே வந்து அவ புருஷன் எங்க ? என்றான் கோபமாய்…

           அவன் சித்தி, அவன் வேலை விஷயமா,…சென்னைக்கு போயிருக்கான். இவகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான். ஏதோ டீலர் மீட்டிங்னு…. சொன்னானாம். அவன் அப்படி போயிருக்கான்,அதுக்குள்ள இந்த பொண்ணு,கையஅறுத்துக்கிட்டா! காயம் ஆழமில்லன்னு  டாக்டர் சொல்லிட்டாங்க, இல்லனா?உயிரே போய் இருக்கும்ல தம்பி….என அழுதார்.

      அதில் இன்னும் ஆத்திரம் கொண்டவன், வண்டியை பச்சை மலையை நோக்கி விட்டான்.

          அவன் வரும்போது, இரவு 8 மணியை தொட்டிருந்தது.  போனில் அவனை புடிச்சு வைங்கடா…. வந்து அவனை நைய்யபுடைறேன்என்றபடி, நடந்தான்,ஜீவி இருக்கும் வீட்டை நோக்கி,

   ஜீவி,அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரத்தை கழுவி வைத்தாள்.வெளியே இந்த நேரத்தில் பேச்சுகுரல்,கேட்கிறது என, யார்?என ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தாள்.

       அவளின் ராட்சசன் தான், கண்ணில் வெறியுடன்,வந்து கொண்டிருந்தான். அவனை இந்த நேரத்தில் பார்த்ததும் பயந்துவிட்டாள் ஜீவிகா.

      நெஞ்சுக்கூடு, பயத்தில் வேகமாக ஏறி இறங்கியது.. தன் கைக்கொண்டு ‘நெஞ்சை அழுத்தமாக’..பற்றிகொண்டாள். அப்போதும்….நடுக்கம்… குறையவில்லை.

        வெளியே, கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டது, ஆனால் குரல் வரவில்லை ஜீவிகா, நடுக்கத்துடன் கதவைத் திறந்தாள்.

      அவள் கதவை திறந்த அடுத்த நொடி  தரையில் இருந்தாள். “ஆம்” சக்தி,அவளை அடித்திருந்தான் ஜீவிகாவை,அவன் அடித்ததில், உதட்டிலிருந்துரத்தம்வழிந்தது, கண்களில் கண்ணீர், அவள் முடியை பிடித்து தூக்கியவன். என்னடி வலிக்குதா?!! நல்லா வலிக்கட்டும் டீ,வலிக்கட்டும், என் தங்கச்சிக்கும் இப்படித்தானே?, வலிச்சி இருக்கும் இப்ப உனக்கும் வலிக்கட்டும் டீ… என்றான் ஆங்காரமாய்…..?!

           ஜீவி, என்னை விடுங்க, எனக்கு வலிக்குது….! யார் உங்க தங்கச்சி? உங்க தங்கச்சிக்கு வலிச்சா போய் மருந்து போடுங்க,… ஏன்? என்னை அடிச்சி…  சித்திரவதை பண்றீங்க…. இப்படி கொடுமை பண்றதுக்கு, என்னைய ஒரேடியா!? கொன்னு போட்டுடுங்க..

என்றாள்,அவனிடமிருந்து விலகப் போராடி, வலி தாங்க முடியயாமல், 

         சக்தி,என்னடி நடிக்கிறியா? உன்னால தான்,என் தங்கச்சி சாக கெடக்குறாடி…!என்றவன், மேஜை பக்கத்தில் வைத்திருந்த, கத்திரிக்கோலை எடுத்தவன், அவள் இடக்கையை பிடித்து கதற, கதற, அவள் கையில் சராலென வெட்டி கிழித்து இருந்தான். அவள் எதிர்பார்க்கவில்லை இந்த செயலை,

      அவள் கையில், ரத்தம் கொட்ட ஆரம்பித்து இருந்தது, இப்படி?தானடி என் தங்கச்சிக்கும் ரத்தம் போயிருக்கும் என்றவன், அவளை கீழே தள்ளி விட்டிருந்தான். 

         ஜீவிகா,ஐயோ?!!.. …ம்மா…ஆ வலி தாங்க முடியலையே!! ம்மா…ஆ…வலிக்குது…உ,வலிக்குது,ஏன் இப்படி?என்னை கொடுமை படுத்துற!! அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடு!!.. “ப்ளீஸ்” என்றவள், திரும்பவும் மயங்கியிருந்தாள்.

            அவனும் தான், இப்படி செய்வேன் என்று, அதுவும் ஒரு பெண் பிள்ளையிடம் வன்முறை காட்டுவேன், என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபத்தில் நடந்து முடிந்து இருந்தது.

        தரையெல்லாம் ரத்தம்,கை ஆழமாக வெட்டியிருந்தது. கோபத்தில் தான் செய்ததை எண்ணி தலையில் அடித்து இப்படி பண்ணிட்டேனே!!?.. கொஞ்சம் பொறுமையா சொல்லி இருக்கலாம், என நினைத்தவன் அவன் கூட்டாளிகளுக்கு போன் செய்து மருத்துவச்சியை அழைத்து வர சொன்னான் .

     இரவு, மருத்துவச்சி ஊரில் இல்லை,என்பதால் மருத்துவரை அழைத்து வந்திருந்தனர், விஷயத்தை சொல்லி,

    அவளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.  டாக்டர்,நாலு தையல் போட்டார் கையில், முணங்கிக் கொண்டே இருந்தாள் வலியில்,  அவளை திரும்பி பார்த்தவன் வெளியே சென்று நின்று கொண்டான்.

      வேணியை அழைத்து,இரண்டு நாளைக்கு இங்கேயே தங்கும் படி சொல்லிவிட்டு கையில் பணத்தை கொடுத்து விட்டு,,வெளியே வந்தான்.வந்தவன்,ஏன்? இவ எதை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றா?! நம்ப தான் சரியா விசாரிக்கலையா?!.. என்றவன் வெளியே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

               அன்று, அவளுக்கு சூடு வைத்த,சிகரெட் துண்டு கீழே இருந்தது, அதை பார்த்துக் கொண்டே இருந்தான். தன் கூட்டாளிகளிடம் சொல்லிக் கொண்டு திருச்சி நோக்கி பயணம் ஆனான்.காரில், சென்று.. கொண்டிருந்தான் ஆனால் நினைவெல்லாம், அவள் வலியில் கத்தியது,

        ரத்தம் வடிய மயங்கி சரிந்தது, என மாறி மாறி வந்தது.கோபத்தில் ஸ்டேரிங்கை ஓங்கி அடித்தான். தலைவலியே வந்து விட்டது.

          விடியற்காலை வீடு வந்து சேர்ந்தவன், அறையில் போய் படுத்து விட்டான். தலைவலி உயிர் போனது. காலை நேரம் கடந்து எழுந்திருந்தான். பாக்கியம் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்,

           சிறிது நேரத்தில் போன் கால் ஒன்று வந்தது. சாப்பிடாமல் கூட, நேரே தன் அரிசி கோடோன்க்கு சென்றான். அதற்கு முன், மருத்துவமனை சென்று ரோஸ்லின் காயத்தை பார்த்தான். லேசாக கிழித்து இருந்தாள் கையை,

 

தொடரும்…

 

            

 

 

1 thought on “முகவரிகள் தவறியதால் 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top