ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 10

அத்தியாயம் 10

     வீட்டிலிருந்து, கிளம்பிய சக்தி நேரே ரைஸ்மிலுக்கு சென்றான். அங்கே ஒரு அறையில், சந்தோஷ் கைகள் கட்டி அமர வைக்கப்பட்டு, இருந்தான்.

   அவனைப் பார்த்ததும்,சக்திக்கு மறைந்திருந்த, கோபம் வெளியே வந்தது, பளார்…. என ஒரு அரை விட்டான். சந்தோஷ் வாயிலிருந்து, ரத்தம் வந்தது.  சக்தி, கோவமாய் டேய்!! உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வச்சா, நீ வேற எவளயோ லவ் பண்றேன்னு சொல்லி டிவோர்ஸ் கேப்பியோ?  அப்ப அவளுக்கும் உன் பிள்ளைக்கும் என்னடா?? பதில், சொல்லுடா?? என்றான்.

       உன்னால தாண்டா என் தங்கச்சி ஹாஸ்பிடல் கைய அறுத்துக்கிட்டு, சாக கிடைக்கிறாள். உயிர் போய் இருந்தா என்னடா பண்ணி இருப்ப?…பொறுக்கி.. பொறம்போக்கு….., 

       எவளயோ காதல் பண்ணிட்டு, ஏன்டா? என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்த சொல்லுடா?!! சொல்லு?… என்றான்,அவன் சட்டையை பிடித்து,

        சந்தோஷ் பயத்துடன் ,மச்சான் அவ டெய்லி என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கா மச்சான், அதான், அப்படி சொல்லி பயமுறுத்தினேன் என்றான்.

      சக்தி, “ஏய்”நடிக்காதடா?! நீ என்ன பேசின, எப்படி?பேசின,அவள அடிச்சது, எல்லாம் எனக்கு தெரியும் டா என்றான். உனக்கு ஒன்னு தெரியுமா?! “மாப்ள” உன் அருமை காதலி ஜீவிகா, இப்ப என் கஸ்டடியில் தான் இருக்கா, அதுவும் சும்மா இல்ல….மாப்ள சித்திரவதை அனுபவிச்சிட்டு இருக்கா…., என்றான் எகத்தாளமாய்,

           அவன் சொன்ன செய்தியில் பதறிய சந்தோஷ்,மச்சான்!! அவள என்ன பண்ணிங்க?அவளுக்கும் இதுக்கும் சம்மதம் இல்ல, அவள விட்டுடுங்க என்றான் பதட்டமாய்,

         சக்தி, ‘ஓ’காதலிய சொன்னதும் காதலனுக்கு கோபம் வருதோ!!? கொன்னுடுவேன்…! உன்னை… என்றான்.  சந்தோஷ்,மச்சான் ஜீவிகாவை நான் மட்டும்தான், லவ் பண்ணினேன். அவங்களுக்கு நான் யாருன்னு கூட தெரியாது. அவங்க என்னைய பார்த்ததும் கிடையாது, என்றான் அவசரமாய்,

          சக்தி, சந்தோஷ் சொன்னதில் புருவம் சுருக்கியவன் என்ன சொல்ற? நீ… என்றான் கோபத்துடன், சந்தோஷ், ஆமா மச்சான் இது ஒரு தலை காதல், நிறைவேறாத காதல்,என்னோட ஃபர்ஸ்ட் லவ், ரொம்ப ஆழமா விரும்பிட்டேன்….எப்பவும் ரொம்ப அமைதியான பொண்ணு,நாலு வருஷம் லவ் பண்ணினேன். பட் லவ் சொல்லவே இல்ல.

      நிறைய தடவை சொல்ல ட்ரை பண்ணி, கடைசில அவங்க தங்கச்சி மூலமா போனேன் அதுவும் முடியல, அப்புறம், அவங்க வீட்டை காலி பண்ணி போயிட்டாங்க நிறைய தேடினேன் கிடைக்கல.

            அப்புறம்தான் ரோஸ்லின் வந்து லவ் பண்றேன்னு சொன்னாள்,நான் ஏத்துக்கல… வீட்ல உங்க கிட்ட சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா… என்றான்.

      இதையெல்லாம் கேட்ட சக்தி,திரும்பவும் அவனை அடித்து இருந்தான், ஏன்டா? இதெல்லாம் எனக்கு முன்னமே சொல்லல….? என்றான் பல்லை கடித்த படி,

             சந்தோஷ், மச்சான் நீங்க என்னைய எங்க சொல்ல விட்டீங்க?பேசினாலே, அடிக்க தானே செஞ்சீங்க? என்றான். அவன் அப்படி சொன்னதும் தன் நெற்றியை தேய்த்தவன் சரி வீட்டுக்கு போய், அவ கூட வாழப்பார் என்றான். சந்தோஷ், சரி மச்சான் என்றவன் ஓடியே விட்டான்.

        அதே நேரம், பச்சை மலையில் இரண்டு நாள் நல்ல மழை வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வேணி தான் இரண்டு நாளும் அவளை பார்த்துக் கொண்டார்.

          ஜிவி கையில் கட்டுடன் தான் இருந்தாள். உடல் மெலிந்து 

கண்ணில், கருவளையத்தோடு இருந்தாள்,கையில் நடுக்கம் குறையவில்லை என்பதால், வேணி தான் ஊட்டி விட்டார் உணவை.  

        அன்று மதியம் மூன்று மணி இருக்கும், வேணி பால் காய்ச்சிக் கொண்டு வந்து ஆற்றி கொண்டு இருந்தார்.அதே சமயம் அவளை அழைத்து செல்ல சக்தி வந்தான் வீட்டை நோக்கி,கதவில் கை வைத்து திறக்க முயற்சித்தவன் அவள் பேசியதில், அப்படியே நின்று விட்டான். 

        ஜீவி, அக்கா நான் ஒன்னு கேட்பேன் எனக்கு செய்வீங்களா?? என்றாள் அவர் கையைப் பிடித்த படி, வேணி, சொல்லு ஜீவிமா, என்ன வேணும்? ஏதாச்சும் சூடா செஞ்சு தரவா? என்றார்.

(இடைப்பட்ட நாளில் வேணி ஜீவிகா உடன் நன்றாக பழகி இருந்தார்.)

     ஜீவிகா, அக்கா எனக்கு விஷம் வாங்கி தர முடியுமா?? என்னால வலி தாங்க முடியல… என் வீட்டிலேயும்,என் பிரண்ட்ஸ்ம் என்னைய இந்த நிலைமையில பார்த்தா, மனசு உடைஞ்சு போய்டுவாங்க. அதனால,எனக்கு விஷம் வாங்கி கொடுங்க,, அக்கா “ப்ளீஸ்”… கண்டிப்பா நான் உங்களை,காட்டிக் கொடுக்க மாட்டேன்… என்றாள் கண் கலங்கி, 

       வேணி, அச்சோ!! என்னமா…! பேசுற விஷம் எல்லாம் கேக்குற, வாழ வேண்டிய பொண்ணுமா நீ, மனசு விட்றாத, எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றார்.

     அதில் விரக்தியாக, சிரித்த ஜீவிகா அக்கா..எதுக்கு?… அடிக்கிறாங்கன்னு சொல்லிட்டு, அடிச்சாளாவது மனசு ஆறும் . ஆனா எதுக்கு அடிக்கிறாங்க?.. சித்திரவதை பண்றாங்கன்னு?….. தெரியாமலே..அடிவாங்குவது, கொடும… அக்கா என்றாள். கண்ணீரை துடைத்தபடி, கதவு திறக்கப்பட்டது,சக்தி தான் நின்று கொண்டிருந்தான் கையில் பையுடன், 

        ஜீவி அவனைப் பார்த்ததும் பயந்து எழுந்து நின்றாள். அவளால்,நிற்கக்கூட முடிய வில்லை. சக்தி, அவளையே பார்த்திருந்தான். பின்,வேணி அக்கா இந்த டிரஸ் போட்டுட்டு ரெடியா?இருக்க..சொல்லுங்க, திருச்சி போகணும் என்றான். ஆனால் பார்வை, முழுவதும் அவள் மேல் தான்,இருந்தது. அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

           சக்தி, அக்கா நான் வெளியே நிக்குறேன் என்றவன் வெளியே சென்று விட்டான். ஜீவி, அக்கா நான்… போகல,’எனக்கு பயமா இருக்கு’ என்றாள்.

      வேணி முதல்ல,இந்த உடுப்பை உடுத்திட்டு,வா மா, பேசலாம் என்றார். அவளும் குளித்து, அவன் கொடுத்த புடவையை கட்டியிருந்தாள்.அத்தனை பொருத்தம் அவளுக்கு அந்தபுடவை , ஆனால் இப்போது, சற்று தளர்வாக இருந்தது உடை . 

      வெளியே வந்தாள் ஜீவிகா.சக்தி அவளை பார்த்தான் அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது உடை.ஆனால், மெலிந்திருந்தாள்.ரவிக்கை லூசாக இருந்தது,முகம் வாடி கலை இழந்து காணப்பட்டது. சக்தி, வண்டியில ஏறு கிளம்பனும் என்றான்.

     வேணி,தம்பி…..என்றார்.

                 சக்தி, அக்கா கேஸ் பைல் பண்ணி இருக்காங்க, சோ, ஸ்டேஷன் போகணும் என்றான். உடனே. ஜிவி அக்கா நான் வரேன், பார்த்துக்கோங்க என்றாள். சரிமா,சரி பத்திரமா இரு என்றார்.அவள் விடை பெற்று காரில் ஏறினாள். 

         காரின் சீட்டில், அவள் போன் இருந்தது ஆனால் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. கார் புறப்பட்டது.எதுவும் பேசவில்லை திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஆறுபேர் சரண்டர்ஆகியிருந்தனர், இவள் கடத்தப்பட்ட கேசில்,

      சம்பந்தப்பட்ட,அனைவருக்கும் தகவல் சொல்லப்பட்டது, அனைவரும் திருச்சி போலீஸ் ஸ்டேஷனில்,காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

          வண்டி திருச்சி நோக்கி சென்றது. சக்தி அவளை பார்த்தான். அவள்,அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். பெருமூச்சு விட்டவன் வண்டியை ஓட்டினான். காலை பதினொன்று முப்பது, அளவில் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர்.

 

தொடரும் 

    

 

 

 

           

 

 

4 thoughts on “முகவரிகள் தவறியதால் 10”

  1. Построим каркасный дом под ключ в СПб по вашему индивидуальному проекту
    каркасный дом под ключ [url=https://spb-karkasnye-doma-pod-kluch0.ru/]https://spb-karkasnye-doma-pod-kluch0.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top