ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 11

அத்தியாயம் 11 

     சக்தி,அவளை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டவன், மேலே ஃபஸ்ட் ப்லொர் போ வரேன், என்றான் அமைதியாய்,

      முதல் முறை அவன் அமைதியாய் பேசி பார்க்கிறாள். ம்ம்… என்று தலையசைத்தவள், மேலே ஏறினாள் மெதுவாக, வாசலில் அவள் நுழைவதை பார்த்ததும்,அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

       சந்தியா,நித்தின், அர்ஜுன், மஞ்சு, ஏன்? மருது,கூட வந்து  இருந்தார். அவளின் அப்பா அம்மா இருந்தனர். அவளின் அக்காவும், தங்கச்சியும் வந்து கொண்டிருந்தனர். 

     சந்தியா, ஜீவிகாவை கட்டி அணைத்தவள் மச்சி..?! எப்படி இருக்க?..உனக்கு ஒன்றும் இல்லையே…? என்றால் கலங்கிய விழிகளோடு, 

    அர்ஜு,பேபி எப்படி இருக்க? வா உட்காரு என்றான். நித்தின், ஒரு படி மேலே போய் ‘பேப்’….?!என அவளை கட்டிக்கொண்டான். அதே நேரம், சரியாக தன் மாமன் கமிஷனருடன் உள்ளே நுழைந்தான் சக்தி. 

    அவன் பார்வையில், நித்தி அவளை கட்டிக்கொண்டு, நிற்கும் காட்சி பட்டது. நித்தீ,ரொம்ப பயந்துட்டேன் “பேபி…!! என்றான்.

        அவள் உடல் வலியிலும், கை வலியிலும்,ஸ்ஸ்..ஆ என்றாள் கண்ணீருடன், அப்போதுதான் பார்த்தனர் அவள் கைகளில் கட்டை.நித்தி, அதிர்ச்சியாக!! என்ன ஆச்சு?…பேப் ஏன்? இவ்ளோ பெரிய,கட்டு போட்டு இருக்கு!!??… என்றான்.

   அதில் பதறிய, அவளப்பா ஐயோ!!ஜீவிமா, எப்படி ஆச்சுமா? வலி தாங்க மாட்டியேடா… ரொம்ப வலிச்சுதா?… என்றார் அழுதப்படி, அவள் அம்மா இதையெல்லாம் பார்த்துவிட்டு, ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டு அழுதார்.

      அந்தப் பக்கம், ரோஸ்லின் அவள் அம்மா அப்பா சந்தோஷ் அமர்ந்திருந்தனர் சந்தோஷ், ஜீவிகாவை பார்த்தபடி இருந்தான். அதே நேரம், சக்தியும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் 

   நித்தின், அவளது அடிபட்ட கையைதடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். அர்ஜுன், அவளை அனைத்து பிடித்து இருந்தான். அவள் நித்தின் மீது சாய்ந்து,அமர்ந்திருந்தாள். சந்தியாவும், மஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தனர், மருது போன் பேசிக்கொண்டு இருந்தான். 

    சிறிது நேரத்தில், விசாரணை ஆரம்பித்து…,இருந்தது. கம்ப்ளைன்ட் பைல் கொண்டு வந்து,மேஜை மீது வைக்கப்  பட்டது. 

       சக்தி, அவளை தாங்கி பிடித்து இருக்கும் தோழர்களை கோபம் கொண்டு பார்த்தான். அதுவும் அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த சேலையை மாற்றி இருந்தாள்.வேறு புடவை அணிந்து இருந்தாள், அதுவே அவனுக்கு கோபத்தை…. உண்டாக்கியது. அதே நேரம் ஒரு லேடி கான்ஸ்டபிள் மூலம் ஒரு கவர்,அவனிடம்,கொடுக்கப் பட்டது, அதை.. பிரித்து பார்த்தான்.அதில் அவன்  அவளுக்கு வாங்கிக் கொடுத்த, சேலை இருந்தது. அதில் இன்னும் கடுப்பானான் சக்தி. 

      பெண் கடத்தல் கேஸ்,மற்றும் ரோஸ்லின், ஜீவிகா மீது கொடுத்த கேஸ் என்பதால், லேடி ஆபீஸர் தான் விசாரணை நடத்தினார். 

   லேடி ஆபிசர்,இங்க யாருமா? ஜீவிகா என்றார்.ஜீவி,உடனே நான் தான் மேடம் என்றாள்.ஆபீஸர், ஏம்மா?…. உன் மேல தான், ரோஸ்லின் என்ற பொண்ணு கேஸ் போட்டு இருக்கு, அதோ அந்த பொண்ணு தான், ஏம்மா நீல சுடிதார், முன்னாடி வாம்மா? என்றார். 

   அவளும் முன்னாடி வந்து நின்றாள்.அவர், ஜீவிகா,இந்த ரோஸ்டின் உனக்கு தெரியுமா? என்றார். ஜீவிகா, அவளை உற்றுப் பார்த்தவள், இல்லை மேடம், இது யாருன்னு எனக்கு தெரியாது… இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லை இவங்கள… என்றாள்.

    லேடி ஆபிஸர், அப்புறம் ஏன்மா இவங்க உங்களால தான், இவங்க புருஷன் அவங்க, கூட வாழ மாட்டேன்னு… சொல்றார்னு .. கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க என்றார்.

  ஜீவி, தெரியல மேடம்… எனக்கு தெரிஞ்சு என் கூட, ரோஸ்லின்னு ஒரு கேர்ள் படிச்சா, அவளும் எய்த் ஸ்டாண்டர்ட் ஓட வேற ஸ்கூல் மாறிட்டா, இந்தப் பொண்ணு எனக்கு யாருனு…தெரியல.. என்றாள். அவள் சொன்னதை ஆபிஸர் நோட் பண்ணி கொண்டார்.

     ஆபீஸர்,சரி சந்தோஷ் னு யாராச்சும் தெரியுமா?.. என்றார். ஜீவி,அப்படி எனக்கு யாரையும், தெரியாது மேடம் என்றாள்.

     ஆபிஸர், இதோ இங்க நிற்கிறாரே? இவர்தான் சந்தோஷ், ரோஸ்லின் ஹஸ்பண்ட் இவரை தெரியுமா? உனக்கு என்றார்.

      ஜீவி, இல்ல மேடம் இவர பார்த்தது கூட கிடையாது யார்? இவர்? என்றாள்.

   சந்தோஷ், ஜீவிகாவை மன வேதனையுடன் பார்த்தான். சக்தி இதையெல்லாம்,பார்த்துக் கொண்டு, இருந்தான்.அப்போது ஜீவிகாவின் அம்மா, மேடம், மத்த ரெண்டு பொண்ணும் நாங்க இருந்த இடத்துல, எல்லார்கிட்டயும் பேசுவாங்க,..ஆனால்?!என் இரண்டாவது பொண்ணு ஜீவிகா, யார்கிட்டயும்,அதிகமா,பேசமாட்டாஎல்லாம் அவ பிரண்ட்ஸ் மட்டும்தான்,  இப்பதான் நாலு வருஷமா மேல்படிப்பு படிக்கும் போது பிரண்ட்ஸ் என்று சொல்லி இவங்கள கூட்டிட்டு வருவா, பிள்ளைகளும் நல்லவங்க மேடம் என்றார்.

      சக்தி புருவம் சுருக்கி, ஜீவிகாவை பார்த்தான். ஆனால், ஜீவிகா அவனை தெரியாதது போல்,நின்று கொண்டாள். நிமிர்ந்தும் பார்க்கவில்லை, சக்திக்கு தான், ஒரு மாதிரியாகி போனது.

    அப்போது ஜீவிதாவின், அக்கா வனிதாவும், அவள் தங்கை கவிதாவும் உள்ளே நுழைந்தனர். அதிகாரியை பார்த்து வணக்கம் வைத்தனர்..

    லேடி ஆஃபீஸ், யார் நீங்க?என்றார்.உடனே அவர்கள் நாங்க ஜீவிகா வோட “சிஸ்டர்ஸ்” என்றனர் இருவரும் 

    கவிதா, அப்போதுதான் ரோஸ்லீனை பார்த்தால், ஹாய்… ரோஸ்லின், எப்படி இருக்க? என்ன இங்க  நின்னுட்டு இருக்க? என்ன ஆச்சு? இதுதான் உன் பாப்பாவா? நான் என், அக்கா  ஜீவிகா, கெடச்சிட்டானு தகவல் வந்துச்சுடி அதான் வந்தேன். உனக்கு என்ன ஆச்சி டி? சந்தோஷ் ஏதாவது பிரச்சனை பண்றானா!?.. எங்க அவன் என தேடினாள்.

     எல்லாரும் கவிதாவையே பார்த்திருந்தனர். இது என்ன புது கதை என்று, சக்தி, ரோஸ்லின் யார்? இந்த பொண்ணு?..என்றான். ரோஸ்லின்,அண்ணா நான் சொன்னேன்ல கவிதா, அவர் “எக்ஸ் லவ்வர்” என்றாள்.

    சக்தி, “ஓ” இவதான் கவிதாவா?… குள்ள கத்திரிக்கா மாதிரி இருக்கா? என்றான் அவள் காதில், 

     கவி,ஜீவி என்ன ஆச்சு…யாரு உன்ன கடத்தினாங்கன்னு… தெரிஞ்சுச்சா…எதுக்காக? கடத்தினாங்களாம் என்றாள். ஜீவி, தெரியலடி?!….என உதட்டை பிதுக்கினால்,அழுகையுடன் அவளை கட்டிக்கொண்டு,,

     ஆபிஸர், உனக்கு இந்த ரோஸ்லின  தெரியுமா? என்றார் கவிதைவிடம்,

     கவிதா, தெரியும் மேடம்,இவ என் கிளாஸ்மேட் தான்….

   ஆபிஸர், அப்ப சந்தோஷ்?? கவி, சந்தோஷா?தெரியும்,இவளோட புருஷன் முன்னாடி என்னோட எக்ஸ் லவ்வர் என்றாள்.

     லேடி ஆபிஸர்,என்னமா சொல்ற? கவிதா, ஆமாம் மேடம்… ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி சந்தோஷ் வந்து லவ் சொன்னாரு, எனக்கும் பிடிச்சிருந்தது நானும் அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்.. ஒரு வருஷம் லவ் பண்ணினோம். நிறைய சாக்லேட் கிப்ட் எல்லாம் வாங்கி தருவாரு அதுல எல்லாம் “வித் மை லவ்” னு எழுதி இருக்கும். என் பெயரை எழுதிக் கொடுங்கன்னு சொல்லுவேன்,நீயே….. எழுதிக்கோன்னு சொல்லுவார் என்றாள்.நல்லாத்தான் போயிட்டு இருந்தது, திடீர்னு ஒரு நாள் வந்து என் வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கல,அம்மா,செத்துடுவேன் னு சொல்றாங்க, அப்படின்னு சொன்னாரு. 

    நான் வந்து பேசுறேன்னு… சொன்னேன், வேணாம்,பிரச்சனை ஆகிடும் பிரிஞ்சிடலாம்னு சொன்னாரு, நானும் பிரச்சனை வேணாம்னு ‘ப்ரேக் அப்’ பண்ணிட்டேன் என்றாள்.

   அதுக்குப் பிறகு, கொஞ்ச நாள் கழிச்சு ரோஸ்லின் போன் பண்ணி,எனக்கும்,சந்தோஷுக்கும்,கல்யாணம்னு சொன்னா ஊர்ல, நான்தான் போகல என்றாள்.

      இதையெல்லாம் கேட்ட சக்திக்கு முதல் முறை குற்ற உணர்ச்சியாய் இருந்தது, விசாரிக்காமல் காரியத்தில் இறங்கி இருக்கக் கூடாதோ??என்று, தங்கையை கண்ணீரை கண்டதும்…அவள் வாழ்க்கையை சரி செய்ய போய்,தப்பு நடந்து விட்டதோ?… என மனம் வருந்தினான்.

 

தொடரும்….

 

   

 

 

1 thought on “முகவரிகள் தவறியதால் 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top