அத்தியாயம் 12
லேடி ஆஃபீசர்,சந்தோஷ் நீங்க இங்க வாங்க என்றார்.அவன்வந்து நின்றான். எல்லாத்துக்கும்…. காரணம் இப்ப நீங்க தான்னு தெரியுது. அதுவும், இல்லாம… உங்களயும், உங்க வைப்பையும் காரணம் காட்டி தான், இந்த கடத்தல், பண்ணி இருக்காங்க, கடத்தப்பட்ட பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா? அவங்க குடும்பத்துக்கு,என்ன பதில்… சொல்லி இருப்பீங்க?..சொல்லுங்க உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டு விடலாமா? ஆன்சர் மீ?…. என்றார் கோபத்துடன்,
இதுல உங்க வைஃப் வேற, கம்ப்ளைன்ட்?..என் புருஷனை எனக்கு,காப்பாத்தி..கொடுங்கனு…ம்ம்… என்றார்.
சந்தோஷ்,சாரி மேடம்,.. என்னால தான் இவ்ளோ பிரச்சனையும், நான்தான் ஜீவிகாவை ஒருதடவை கவிதா கூட ஒரு தரம் பார்த்துட்டு, ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன், டெய்லி அவங்களுக்காக பஸ் ஸ்டாப்ல,வெயிட் பண்ணுவேன். அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.
அப்பதான் கவிதா மூலமா, அவ கூட பழகலாம்னு பிளான் பண்ணினேன், ரோஸ்லின் பிரண்டு கவிதானு தெரிஞ்சுச்சு டெய்லி ஸ்கூல் பக்கம் போவேன்.
அவங்க கவிதாவை கூட்டிகிட்டு போக வருவாங்க. ஆனால் நான் அவங்க கிட்ட பேசினது இல்ல பயம், கொஞ்ச நாள் கழிச்சு அவங்க ஸ்கூல் பக்கம் வரதில்ல,சோ, அவங்க காலேஜ் போகும்போது ஃபாலோ பண்ணுவேன், காதலிக்கவும் ஆரம்பித்து இருந்தேன். அதை சொல்லத்தான் முடியல, அதனால கவிதா மூலமா, என் காதுல ஜீவி கிட்ட சொல்லலாம்னு நெனச்சி,
கவிதா கிட்ட லவ் பண்றதா சொன்னேன்,பொய்யாய்,என்றான். கவிதா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.ரோஸ்லின்,அதிர்ச்சியுடன் தன் கணவனை பார்த்தாள். சந்தோஷ் தொடர்ந்தான்,
அவளுக்கு,டெய்லி சாக்லேட், கார்டு,கொடுப்பேன் ஆனால் அதுல அவ பேர போடாம,”வித் மை லவ்” னு மட்டும்தான் எழுதி கொடுப்பேன்,
ஜீவிகா,அப்பவாவது அதை பார்த்து,என்னன்னு…கேட்பாங்கன்னு,
பட், எந்த முன்னேற்றமும் இல்ல, நாளுக்கு, நாள், அவங்க மேல காதல்,அதிகமாச்சே….தவிர, குறையல, இப்படி இருக்க, எனக்கும் கவிக்கும் பிரேக்கப் ஆனது தெரிஞ்சி ரோஸ்லின் எனக்கு ப்ரொபோஸ் பண்ணா,… நான்..முடியாதுன்னு….சொல்லி அனுப்பிட்டேன்.
கொஞ்சநாள்,கழிச்சி,ஜீவிகா, வீட்டை காலி பண்ணிட்டு,.. போயிட்டாங்க, ரோஸ்லின் போன் காணாம.. போனதால, கவிதா நம்பரும் மிஸ் ஆயிடுச்சு.அவளை பார்க்க…. முடியாம,பைத்தியமே பிடிச்சிருச்சு,ஆனா இது,எதுவுமே அவங்களுக்கு,தெரியாது…. இது ஒரு தலை காதல்.
அதுக்கு பிறகு வீட்டில்… கட்டாயப்படுத்தி,ரோஸ்லின் கூட கல்யாணம் பண்ணி வச்சாங்க, அப்பவும் என்னால ஜீவியை மறக்க முடியல,
ரோஸ்லின்,அண்ணன் என்னை திட்டி திருச்சிக்கு அனுப்பி வச்சிட்டாங்க, ரோஸ்லின் ரொம்ப லவ் பண்றதா?!சொன்னா? நானும் கொஞ்சம் இறங்கி போய் அவளோடு வாழ ஆரம்பிச்சேன். கொஞ்சமா அவள(ஜீவி) மறந்திருந்தேன்.
போன மாசம், திருச்சி கோவில்ல பிரெண்ட் கல்யாணத்துக்கு, போயிருந்தேன். அப்ப திரும்ப ஜீவிகாவ அவ பிரண்ட்ஸ் கூட பார்த்தேன், பழைய காதல் திரும்ப வெளிவர ஆரம்பிச்சுடுச்சு. அவ போற இடம் எல்லாம் பாலோ பண்ணி போனேன் என, கூறினான்.
அதைக் கேட்ட,ஜீவியின் பிரண்ட்ஸ் அனைவரும், அவளை ஒரு சேர பார்த்தனர். அன்று அவள் சொன்னது உண்மை என்று,
அதுக்குப் பிறகு அவங்கள பார்க்க முடியல,அன்னைக்கு வீட்டில் எதேச்சியா என் திங்ஸ் எல்லாம், கீழே விழுந்துடுச்சு. அப்பதான், கானா போன என் டைரி கிடைச்சது, அதுல அவங்களோட போட்டோவும் இருந்தது அதை நான் பார்த்துட்டு இருந்தேன். அத ரோஸ்லின் பாத்துட்டா.
இது யாருன்னு கேட்டு ஒரே சண்டை.அப்பதான், அவகிட்ட மறக்காம உண்மை எல்லாம் சொன்னேன்.வீட்ல,அதுக்கப்புறம்ஒரே சண்டை, அவளை மனசுல வச்சுக்கிட்டு.. தான் என் கூட வாழ்ந்தியான்னு ஒரே பிரச்சனை, வெளியே வேலை விஷயமா போயிட்டு வந்தாலே?… அவளை பாத்துட்டு வந்தியா?? கள்ள காதல் பண்றியான்னு?? ஒரே சண்டை,,
அதனாலதான் அன்னைக்கு அடிச்சேன்.அடிச்சதுக்கு என்ன டிவோஸ் பண்ணிட்டு, அவளை கட்டிக்க போறியானு கேட்டா??.. அதுவும் இல்லாம என்னவிட்டுட்டு எப்படி,போறிங்கனு…பார்க்கிறேன். அவளை கொன்னுட்டா?!.. நான் சந்தோஷமா இருப்பேன்?.. இதை இப்பவே அண்ணகிட்ட சொல்லி அவளை கொல்ல சொல்றேன்னு சொன்னா….
அப்பதான் கோவம் வந்து, இப்படியே பேசிட்டு இரு.ஒருநாள் உன்ன கொல்லபோறேன்,பாருனு சொன்னேன். ஆமாமா?!..என்ன கொன்னுட்டு, அவ கூட வாழ போறீங்களா?… அதுக்கு நான் விடமாட்டேன்னு சொன்னாள். நானும் கோவத்துல ஆமாடி…! அவளைத்தான்…கல்யாணம் பண்ணுவேன்.உன்னால,முடிஞ்சதபார்த்துக்கன்னு..சொன்னேன்.
அவ அழுதுகிட்டே, அவ பெரியம்மா வீட்டுக்கு போயிட்டா,… அதுக்கு பிறகு ஜீவியை நான் பாக்கல,பேசல,என்றான்.
அவன் இப்படியெல்லாம், பேசுவதை கேட்டு, சக்தி கையை இறுக மூடி கொண்டவன், கோபத்துடன் தன் தங்கை.. ரோஸ்லின் திவ்யாவை, அனல் கக்கும் பார்வையுடன் பார்த்தான்,
அதில் பயந்த திவ்யா, தன் அம்மாவின் பின்னால் மறைந்து கொண்டாள்.
சந்தோஷ்,ஜீவிகா மதுர வர்றத எப்படியோ,தெரிஞ்சுகிட்டு,மச்சான் கிட்ட சொல்லி இருக்கா, நான் எவ்வளவு சொல்லியும் என் மச்சான் கேக்குற நிலைமையில அப்ப இல்ல, கோவமா என்ன மதுரை கூட்டிட்டு போனாங்க, அதுக்கப்புறம் மண்டபத்துல கடைசியா அவங்கள பார்த்தேன். .
மச்சான், என்ன அங்கிருந்து அனுப்பி வச்சிட்டாங்க, அதுக்கு அப்புறம்,இன்னைக்கு தான்.. அவங்கள பார்க்கிறேன்.அவங்கள கடத்தினது கூட, இப்ப தான் தெரியும். நடந்ததுக்கு நான்தான், காரணம் எனக்கு என்ன தண்டனை வேணா குடுங்க மேடம்.
ஜீவிகாவை, விட்டுடுங்க…. என்றான் வேதனையுடன்,லேடி ஆபிஸர்,உங்களுக்கு உங்க மச்சான் மேல, சந்தேகம் இருக்கா சந்தோஷ் என்றார்.
சந்தோஷ்,இல்ல மேடம் என்றான், விஷயம் தெரிந்தும்.
அவன் சொல்லி முடித்ததும், நித்தி மற்றும் அர்ஜு பாய்ந்து வந்து அவனை அடித்தனர். “ப்ளடி சீட்”… அங்க பாருடா என் பேப் எப்படி இருக்கானு?? எல்லாம் உன்னால தாண்டா..உன்னை கொன்னாலும் என் கோபம் அடங்காதுடா?!.. என்றான்.
அர்ஜுன்,காதலை…சொல்ல தயங்குற கோழையெல்லாம், எதுக்குடா?லவ் பண்றீங்க?.. பாருடா?!.. உன்னால ஜிவி பேபி, காயப்பட்டு….நிற்கிறா.. என அவனை அடித்தான்.
அங்கிருந்தவர்கள் சுதாரித்து அவர்களை மடக்கி நிறுத்தினர்.
ஜீவி, அர்ஜு!, நித்தி!, விடுங்க? விடுங்க?.. யாரையும் அடிக்க வேண்டாம்…வாங்க….இங்க என பலவீனமாக அழைத்தாள். அவள் அப்படி கூப்பிட்டவுடன் இருவரும் சென்று விட்டனர் அவளிடம்.
சக்தியுடன், வந்த அவர் மாமா என்ன சக்தி நீ என்னமோ சொல்லி கூட்டிட்டு வந்த, இங்க கேஸ் வேற மாதிரி போகுது.. எனக்கு தெரிஞ்சு, உன் தங்கச்சி தான், அவளோட வாழ்க்கைக்காக, உன்னை யூஸ் பண்ணிக்கிட்டான்னு,தோணுது. சோ ஏதாச்சும் னா கூப்பிடு, நான் வரேன் என்றவர் சென்று விட்டார்.
அதுவே,அவனை இன்னும், கோபத்துக்கு உள்ளாகியது,
லேடி ஆபிசர், என்னம்மா ரோஸ்லின்,நீதான கேஸ் கொடுத்தது. இப்ப உன்ன தூக்கி உள்ள போட்டு விடலாமா?.. என அதட்டினார். ரோஸ்லின் அழுத படி நின்றிருந்தாள்.
லேடி ஆபிசர், ஜீவிகா விடம் திரும்பியவர், ஜீவிகா உங்களை யார் கடத்தினாங்கன்னு தெரியுமா?, உங்க பிரண்ட்ஸ் பேரு, யாரு,என்னன்னு தெரியலன்னு சொல்றாங்க?? எப்படி??….. இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா??.. என்றவர்,அல்ரெடி ஆறு பேர், சரண்டர்…ஆகி இருக்காங்க , நீங்க…அடையாளம் சொன்னீங்கன்னா.. கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும் என்றார். ஜீவிகா,அமைதியாக இருந்தாள். உங்களை,கடத்தி கொண்டு போய் வெச்சிருந்தவங்க … ரொம்ப கொடுமை படுத்தினாங்களா?.. கையில, தலையில, வாயில, எல்லாம் அடிபட்டு இருக்கு, உங்கள கடத்திக்கொண்டு போனவங்க, உங்களுக்கு ஏதாவது செக்ஸுவல், அண்ட் பிஸிக்கல் அரெஸ்ட்மென்ட், எதாச்சும் பண்ணாங்களா?!…
நீங்க சொன்னாதான்..கேசை மேற்கொண்டு, ஸ்ட்ராங்,பண்ண முடியும் சொல்லுங்க என்றார். அவர்கேட்டதில்,உடல்நடுங்கியள்,தன் காதை பொத்திக்கொண்டு, இல்ல….என்னை ஒன்னும்… கேட்காதீங்க! “ப்ளீஸ்” பயமா இருக்கு… பயமா இருக்கு…என அலறினால் நடுக்கத்துடன், அவள் அலறியதில் அதிர்ச்சி அடைந்து அப்படியே பார்த்திருந்தனர். (சந்தோஷும், ஜீவியும் சக்தியை காட்டி கொடுக்கவில்லை).
தொடரும்….
super sis next epi please…..
Стоимость металлокерамического имплантанта.
Стоимость коронки на зуб из металлокерамики [url=belfamilydent.ru/services/metallokeramicheskie-koronki]belfamilydent.ru/services/metallokeramicheskie-koronki[/url] .
Как сэкономить на протезировании зубов и остаться довольным, не теряя в качестве и комфорте.
Стоматология зубное протезирование [url=http://www.belfamilydent.ru/services/protezirovanie-zubov]http://www.belfamilydent.ru/services/protezirovanie-zubov[/url] .
Надежные контрактные моторы для иномарок с минимальным пробегом
контрактные двигатели из европы [url=https://kontraktnye-dvigateli-moskva-1.ru/]контрактные двигатели из европы[/url] .