அத்தியாயம் 13
அவள்,அப்படி பயந்து அலறியதும்,அவள் நண்பர்கள், அவள் குடும்பம் என அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். பேபி,மச்சி, பேப்,ஜீவி,என்று அனைவரும் அவளை அழைத்தனர்.
அவள் அழுது கொண்டே இருந்தாள்.நடுக்கம் குறையவே இல்லை. சக்திக்கும்,அவளை ஓடி போய் அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.எல்லாம், அவனால் தானே….,தன் இயலாமையை எண்ணி,தன் தொடையில் குத்தி குறைத்துக் கொண்டான்.
லேடி ஆபிசர்,எல்லாரும் அவங்கள கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க என்றார். அவளுக்கு,தண்ணீர் கொடுக்கப் பட்டது, மெதுவாக குடித்தாள்.
நித்தீன்,அவளை அமர வைத்து தோளில்,சாய்த்துக் கொண்டான்.நடுங்கிய கரங்களை மிருதுவாக பற்றிக் கொண்டான்.
பேபி, பயப்படாத.. பேபி.. நாங்க எல்லாம் இருக்கோம்ல, நித்தி… வலிக்குது…,பயமா இருக்கு…டால் என்ன விட்டுப்போகாதே?!! என்றால் அவன் கையை இறுக பற்றிய படி,
நித்தீ, இல்ல “பேப்”உன்னவிட்டு எங்கேயும்? போகல பாரு..நம்ம ஃப்ரெண்ட்ஸ், உன் பேமிலி, எல்லாம் இருக்கோம்ல பயப்படாத.. பேப் என்றான். சந்தியாவும்,மஞ்சுவும்,ஓடிப்போய் அவளை,அணைத்தபடி,அமர்ந்தனர். அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம்!இப்படி,ஒருநண்பர்கள், இருக்கிறார்கள் என்று, எந்த நிலையிலும், அவளை விட்டு விலகாமல்,கூடவேஅமர்ந்திருந்தனர்.
தாய், தந்தையை…கூட அவள் தேடவில்லை,அவள்,நண்பர்களை தான் தேடி, அடைக்கலம் புகுந்தாள்.
அனைவரின் கண்களிலும் கண்ணீர். சக்தி, அவளை விழியகலாமல்,பார்த்துக் கொண்டே இருந்தான்.
சிறிது நேரம், யாரும் எதுவும் பேசவில்லை.உன்னை கடத்தினது யாருன்னு சொன்னாதானமா?மேற்கொண்டு பேச முடியும், என அதிகாரி கூறினார்.
ஜீவி,தன்னை,ஆசுவாசப்படுத்தியவள்,என்னை கடத்தினவங்கள காட்டிக் கொடுக்க விரும்பல…நான் யாரு.. மேலையும் கம்ப்ளைன்ட் பண்ணவும் விரும்பல,தவிர்க்க முடியாத…. சூழ்நிலையால, கூட இருக்கலாம். இல்லனா.. பாசத்தால கூட, என்னை கடத்திருக்கலாம், எனக்கு ஒன்னும் இல்ல,பிசிக்கலி, அண்ட், செக்ஸுவலி, நான் நல்லா தான் இருக்கேன். அதனால.. இதுக்குமேல இதை,தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லை,என்று கையெடுத்து கும்பிட்டவள்,மேடம், கேஸை வாபஸ் வாங்கிடுறேன்.
திரும்ப கோர்ட்டு,கேஸ்னு என்னால அலைய முடியாது. என் மனசும், உடம்பும்,ரொம்ப..சோர்ந்து போய் இருக்கு. ப்ளீஸ்….இதை இத்தோட முடிச்சுக்கலாம்.
அர்ஜுன்,நித்தி, சொல்லுங்க…? ப்ளீஸ்….என்றாள்.
அம்மா, அப்பா,.. வாங்க வீட்டுக்குபோகலாம்.வனி,கவி, நீங்களும் கிளம்புங்க,நாம எல்லாம் கிளம்பலாம் என்றால், சோர்வுடன்.
அர்ஜுன், ஏன்? பேபி கேஸ் வாபஸ் வாங்குறேன்னு சொல்ற?!.. உன்னை… கடத்தினவனை கண்டுபிடித்து தண்டிச்சா தானே, அடுத்த முறை இந்த தப்பை அவன் செய்ய மாட்டான் என்றான்.
ஜிவி, இல்ல மச்சி, அம்மா, அப்பா வயசானவங்க,உங்களையும் அடிக்கடி கூப்பிட்டு கஷ்டப்படுத்த முடியாது,… நித்தின் டாலுக்கு அடிபட்டதையே என்னால, தாங்கிக்க முடியல… குற்ற உணர்ச்சியா இருக்கு? அதனால எதுவும் வேணாம்…
கடவுள் பார்த்து கட்டும்.நீ என்ன ஃபார்ம லிட்டிஸ் னு போய் பாரு மச்சி என்றாள்.
நித்தி, ஏன்?! “பேப்” இப்படி பேசுற!? அப்ப நான் உனக்கு வேத்து ஆளா தெரிஞ்சு இருக்கேன் இல்ல!?.. போடி…! என்றான்.
அதில் சிரித்த ஜீவி, டேய் மச்சான் என்றாள்.நித்தின்,என்னடி… என்றான் கோபமாய்,
ஜீவி,கோபமா.. இருக்கியா?என்றாள். எப்படி தெரியுது? என்றான் நித்தீ.
ஜீவி,பார்த்தா காமெடியா? தெரியுது டா..
உனக்கு இந்த மூஞ்சி செட் ஆகல டால்.. என்றாள் மெல்ல சிரித்து,
பின், அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்,எனக்கு நீங்க நாலு பேரும் எனக்கு வேணும்,அதுவும் நித்தின் டால், எனக்கு பேபி போல, சோ பேபிக்கு அடிபட்டா, இந்த ஜீவிக்கு வலிக்கும் இல்ல,அதான், சரியா? என்றாள் செல்லம் கொஞ்சி…
அதில்,அழகாய் சிரித்தான் நித்தீன். அவள்,அவன், இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டியவள், இப்படியே இரு,இந்த மூஞ்சி தான் நல்லா இருக்கு, என்று மூக்கை சுருக்கினாள்.
எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிக்கப்பட்டுகேஸ்,வாபஸ், வாங்கப்பட்டது.ரோஸ்லினும் கேஸ்சை வாபஸ் வாங்கி இருந்தாள்.
ஜிவி, அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த சந்தோஷை அழைத்தால்.ஜிவி, சந்தோஷ் என்றாள்.
சந்தோஷுக்கு, அதிர்ச்சி!! முதல் முறை தன்னை பெயர் சொல்லி, அழைக்கிறாள். சந்தோஷ், சொல்லுங்க.. ஜீவி என்றான்.
ஜீவி, நான், உங்க மனசை எந்த விதத்திலயாவது காயப்படுத்தி… இருந்தாலோ?உங்களை கஷ்டப்படுத்தி இருந்தாலோ?என் மூலமா உங்க வாழ்க்கை,சரி இல்லாம….போய் இருந்தாலோ? என்னை மன்னிச்சிடுங்க…. என்னையும் மறந்துருங்க…. என் மேல வச்ச காதலையும் மறந்திருங்க…..
உங்களுக்குன்னு ஒரு குடும்பம், குழந்தையும் இருக்கு.இதுக்கு பிறகு சந்தோஷமா வாழ பாருங்க,எதுக்கு முன்னாடி உங்களை நான் பார்த்தது கூட இல்ல, இருந்தாலும் சொல்றேன்,”ப்ளீஸ்”என் பின்னாடி வரத விட்டுட்டு உங்க லைஃப் வாழ பாருங்கள். என்றவள் போய் சேரில் அமர்ந்து கொண்டாள்.
எல்லாம், கையெழுத்து இட்டு முடிந்தது. சக்தி வெளியே நின்று இருந்தான். முதல் முறை அவன் செய்த காரியம் தவறாக முடிந்து இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, அவன் பின்னால், அண்ணா…?! என ரோஸ்லின்,அழைத்த அடுத்த நொடி,”பளார்”… என அறைவிட்டு இருந்தான்.
என்னை..அப்படி?…கூப்பிடாத….?கூப்பிடாதே..என்றான்,ரௌத்திரம் தெறித்த கண்களுடன்,
ரோஸ்லின்,பயத்துடன்,அண்ணா! அது தெரியாம?… அவர் என்ன விட்டு போயிடுவாரோ னு.. பயந்து.. தான் நான் என இழுத்தால்…..
இதற்கிடையே, சத்தம் கேட்டு வந்த ரோஸ்லின் அம்மா, அவளை தூக்கி நிறுத்தி இருந்தார்.
அவர்,என்னப்பா என்னாச்சு, என்றார்.
சக்தி,நீங்க சும்மா இருங்க… அவளநம்பி,நான்,பண்ணதுக்கு.. என்றவன் அழுத்தமாக…. தன் சிகையை கோதிக் கொண்டான்.
ரோஸ்லின் கன்னத்தைப் பிடித்தபடி அண்ணா..என்னை மன்னிச்சிடுங்க.என்றவளை கண்ணில்,அனல்,கக்க..முறைத்தவன்,பேசாத..?பேசாத..?. வாய மூடு?!.. பொய் அழுக அழுது காரியம் சாதிச்சு கிட்ட ம்ம்…..,
என் மூஞ்சில முழிக்காத, சித்தி இவள கூட்டிட்டு போங்க…. என்ன கொஞ்சம்,தனியா விடுங்க… “ப்ளீஸ்” என்றான்.
தாயும்,மகளும்,இதற்கு மேல் பேச முடியாது என்று, எண்ணியவர்கள் சென்றுவிட்டனர்.
அவன் டிரைவர், அண்ணா.. நீங்க இந்த பையை,மேலேயே வச்சிட்டு வந்து ட்டீங்களாம். சந்தோஷ் தம்பி கொடுத்துச்சு… என்று அவனிடம் கொடுத்தார்.
அது வேறு எதுவும் அல்ல, அவன் கொடுத்து, அவள், அணிந்திருந்த புடவை, அதை வாங்கியவன், அதையே பார்த்துக் கொண்டிருந்தான். புடவையில் அவள் வாசம்.
இங்கே சந்தியா, அம்மா, அப்பா, நான் ஜீவிய,என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.ஒரு வாரத்துக்கு என் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் அவளுக்கு ஈசியா இருக்கும். எங்க கூட இருந்தா அவ எல்லாத்தையும் சீக்கிரம் மறந்துடுவாமா..
அதனால நான் கூட்டிட்டு போறேன் என்றாள்.
ஜீவி அம்மா, இல்லம்மா…. அவ இப்ப உடம்பு முடியாம இருக்கா, உங்களுக்கு எதுக்கு சிரமம் வீட்ல, ஏதும் சொல்ல போறாங்கடா… என்றார்.
சந்தியா,அச்சோ!..அம்மா… அதெல்லாம் சொல்ல மாட்டாங்க? டீச்சர் அம்மாக்கு ஜிவினா ரொம்ப பிடிக்கும்.அதனால கவலை படாதீங்கம்மா என்றாள்.
அர்ஜுனும்,நித்தினும், ஆமாமா… நாங்க இருக்கோம் பார்த்துக்கிறோம், என்றனர். அதன்படி அனைவரும் கிளம்பி கார் பக்கத்தில் நின்றனர்.
ஜீவி, தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தால், அவள் அம்மா உடல்நிலை,பார்த்துக்கொள்ளும் படி கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற்று காரை நோக்கி நடந்து கொண்டிருந்த போது,
பின்னாலிருந்து ஒரு கரம், அவள் கரத்தை பற்றியது. அந்த கரம் யாருக்கு சொந்தமானது என அவளுக்கு தெரியும்.
ஆனால்,அவள் திரும்பி பார்க்கவில்லை, சக்தியும் அவள் கரங்களை விடவில்லை.
சக்தி, என்ன மன்னிச்சிடு!? இதை கேட்க எனக்கு அருகதை இருக்கான்னு எனக்கு தெரியல. விசாரிக்காம,தப்புபண்ணிட்டேன்.ரோஸ்லின், அப்படி வந்து, அழும்போது, என்னால தாங்க முடியல.. எனக்கும் கூட பிறந்த தங்கச்சி இருக்கு அதான்.
ரோஸ்லின் வந்து அழுததும், என்னால தாங்க முடியாம உன்னை கஷ்டப் படுத்திட்டேன்,
ஜீவி,பேசிமுடிச்சிட்டீங்கனா?…என் கைய விடுங்க,நான் போகணும் என்றாள்,அவனை பார்க்காமல்.
சக்தி, உன்னை கஷ்டப்படுத்தி காயப்படுத்தினதுக்கு என்னை மன்னிச்சிடு.ஏன்? இவ்வளவு நடந்தும் என்னை, அங்க காட்டிக் கொடுக்கல நீ?என்றான். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, என் கையை விடுங்க.., நேரம் ஆச்சு நான் போகணும்…,என்றாள் திரும்பவும்,
அதில், சற்றே கோபம் கொண்ட சக்தி, அவளை இழுத்து தன் பக்கமாக திரும்ப செய்தான். அவள் அதில் தடுமாறி அவன் மீதே மோதி,பின் தள்ளி நின்றாள்.
அந்த ஒரு நிமிடம் தான்,சக்தி அடி வயிற்றில் சொல்லென்ன… உணர்வு அதை வெளி காட்டாதவன்,
ஏய்!.. என்னடி… கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாமல், திமிரா!.. நிற்கிற, என்றான்,அவன் இயல்பான பானியில்,
அதில் கோபம் கொண்ட ஜீவி, என்னை என்ன சொல்ல சொல்றீங்க?.. யார் நீங்க? உங்களை எனக்கு யாருனே தெரியாது? நான் ஏன்? உங்களுக்கு… பதில் சொல்லணும்,… என்றாள் கண்களில் திமிருடன்,
சக்திக்கு, இவளின் புதிய பரிமாணம் ஆச்சரியத்தை கொடுத்தது. இவள் இப்படி பேசுவாளா?!!..என்று,
அவள் யார்? என்று கேட்டதிலும், தெரியாது,என்ற கூற்றிலும், கோபம்கொண்டவன்,ஏய்!.என்னடி பேசுற நீ?
என்னை தெரியாதா?உனக்கு என்றான், கோபத்துடன். அப்புறம், ஏன்டி என்னை காட்டிகொடுக்கல. சொல்லு? சொல்லுடி …என்றான் திரும்பவும்,
தொடரும்…
super sis