அத்தியாயம் 15
சக்தி,அவர் வார்த்தையில், கலக்கம் கொண்டவன்,எழுந்து அமர்ந்து அவர் இரு கைகளிலும், முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவன் தொண்டைகுழி ஏறி இறங்கியது துக்கத்தில், மீனாட்சி, என்னப்பா..ஏதோ மனசுக்குள்ள.. வச்சுக்கிட்டு…வேதனைப்படுற சொன்னாதானே,என்னன்னு தெரியும். உனக்கும்… மனசு லேசாகும், சொல்லுப்பா என்றார்.
அவனை,இரண்டு நாட்களாய், கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார், எதையோ இழந்ததை போல், அல்லவா…? சுற்றிக் கொண்டிருக்கிறான். சரியாகவும் சாப்பிடுவதில்லை
சக்தி,அம்மா..என்னை மன்னிச்சிடுங்க…! அம்மா, முதல் முறையா நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்மா..,விசாரிக்காம…,
ரோஸ்லின் அழுததால,சம்பந்தமே இல்லாத.., ஒரு பொண்ணை தண்டிச்சிட்டேன்.ரொம்ப…. கொடுமை பண்ணிட்டேன் மா.
மீனாட்சி,என்னப்பாசொல்ற?!.. சக்தி, ஆமா மா,ரோஸ்லின், போட்டோல ஒரு பொண்ண காட்டினால, மீனாட்சி,ஆமா சக்தி!?,அந்த பொண்ண என்ன பண்ண நீ,
சக்தி,மா..என்ன மன்னிச்சிடுங்க?. நான் அவளை,கடத்திக்கொண்டு போய் வெச்சி கொடுமைப்படுத்தி அடிச்சு காயப்படுத்திட்டேன்மா!…
மீனாட்சி,அவனை வெறுமையான பார்வை பார்த்தாரே…. தவிர, பேசவில்லை..
சக்தி, அம்மா…? அப்படி?!… பாக்காதீங்க?! அம்மா என்னால முடியல? சத்தியமா, வேணும்னே பண்ணலாமா…, நம்ம மதுவுக்கு இப்படி ஆகி இருந்தா… என்ன பண்ணி இருப்பனோ? அதுதான் பண்ணினேன்.
ரோஸ்லின், சொன்னத கேட்டு, மடத்தனமா….ஒரு அப்பாவி. பொண்ணு கிட்ட என் கோபத்தை, அதிகமாக காட்டிட்டேன். சந்தோஷ கூப்பிட்டு, விசாரிச்சப்ப, தான் தெரிஞ்சது,அந்த பொண்ணு, இதுல, சம்பந்தமேபடலனு..
சந்தோஷ் அந்த பொண்ண, ஒரு தலையா,காதலிச்சு இருக்கான். அதை வைத்து….புருஷன், பொண்டாட்டி,சண்டை போட்டு, அதுல, என்னை கெட்டவனா… மாத்திட்டாங்க…நானும் என்னனு விசாரிக்காம முடிவெடுத்து, தப்பு பண்ணிட்டேன் என்றான் வேதனையுடன்,…
மீனாட்சி,அந்த பொண்ணு பக்கம் காணோம்னு..தேடலையாப்பா..?? கம்ப்ளைன்ட்… கொடுக்கலையா?? நீதான்னு….அவங்களுக்கு தெரியலையா? என்றார்.
சக்தி,அவளை, கடத்தினது முதற் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில், நடந்தவரை, அனைத்தையும் கூறினான். தன் தாயிடம்,
சக்தி,மா அவ என்ன காட்டியே!?கொடுக்கலமா…..!? போலீஸ்.. எவ்வளவோ, கேட்டாங்க அம்மா..
அவ நான் தான் கடத்தினேன்னு சொல்லவே இல்ல?!கேசையும் வாபஸ் வாங்க சொல்லிட்டா?. அவ என்றவன், கண்களில் ஒரு மின்னல்!!! அதையும் கவனித்தார் மீனாட்சி.
மீனாட்சி,ஏன்? சக்தி, நீ அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்கலையா?!
சக்தி, மா கேட்டேன்மா.., ஆனா எதுவும்,சொல்லாம,போயிட்டமா..,ராட்சசி…. என்றான். நீங்களாவது என்னைபுரிஞ்சுக்கோங்கமா…., என்றான். மீனாட்சி,நான்.. சொல்றதுக்கு என்ன இருக்கு….சக்தி, நான் மன்னிச்சாலும் அந்த பொண்ணு உன்னை, மன்னிக்கணும்ல, கடவுள்கிட்ட, வேண்டிக்க சீக்கிரம் அந்த பொண்ணு,உன்னை… மன்னிக்கணும்னு….என்றவர், அதுக்குதான்,கல்யாணம்னு..ஒன்னு கட்டி இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?நீ உன் குடும்பம்னு இருந்திருப்ப… என்றார்.
அதில்,லேசாக புன்னகைத்தவன், கல்யாணம், கட்டிக்கிறேன்மா… ஆனால், இப்ப.. இல்ல, கூடிய சீக்கிரமே… அப்புறமா, உங்க பிள்ளை எது பண்ணினாலும் சரியா, பண்ணுவான் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு, இல்ல… அதனால, கொஞ்சம் எனக்காக காத்திருங்க…. உங்களுக்கு கண்டிப்பா… மருமக வருவாமா….
இப்பதான், என் மனசு லேசா இருக்குமா,நான்போய்,தூங்குறேன் நீங்களும் படுங்க காலையில, பேசலாம் என்றவன், எழுந்து சென்றான்.
***************************
இங்கே, சென்னையில்சந்தியா வீட்டில், ஜீவிகா மற்றும் அவள் நண்பர்கள் வந்தனர்.
சந்தியாவின் அம்மா, அவளை, நன்றாக கவனித்துக் கொண்டார். சந்தியாவும், ஜீவியும், ஒரே… அறையில் தங்கி கொண்டனர்.
அர்ஜுனும், நித்தியும், மாலை வரை அவளோடு,இருந்துவிட்டு, நித்தின், ஹைதராபாத் சென்று விட்டான், அர்ஜுன், அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
அவளிடம் யாரும் நடந்ததைப் பற்றி, இப்போதைக்கு கேட்க வில்லை, உடல்நிலை தேறி வரட்டும் என விட்டு விட்டார்கள்.
நான்கு நாட்கள் ஓடி இருந்தது, ஜீவிகா சற்று, உடல்நிலை தேறி இருந்தாள்.சந்தியா ஜீவிகா விற்காக வீடிலிருந்தே வேலை பார்த்துக்கொண்டாள்.
இன்று,சனிக்கிழமை,சந்தியாவிற்கு விடுமுறை நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.மணி ஏழரை தொட்டது, ஜீவிகாவிற்கு, முழிப்பு வந்து விட்டது.தன்னை, சுத்தப் படுத்திக்கொண்டவள்,சமையலறை நோக்கி சென்றாள்.
ஜீவிகா, “ஹாய் ஆன்ட்டி” ‘குட் மார்னிங்’ என்றாள்.
சந்தியாம்மா,குட்மார்னிங், டா உடம்பு எப்படி இருக்கு, நல்லா தூங்குனியா?!.. என்றாள்
ஜீவி, ம்ம்…தூங்கினேன் ஆன்ட்டி, நான் வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா?.. என்றாள்.
சந்தியாம்மா அச்சோ!வேண்டாம் உனக்கே உடம்பு முடியல.., நீ ரெஸ்ட் எடு நான் பாத்துக்குறேன், என்றார்.
ஜீவி, அச்சோ?!..ஆன்ட்டி,நான் நல்லா இருக்கேன் இப்ப, மண்டே வீட்டுக்கு போயிடுவேன். ஆன்ட்டி வேலைக்கு போகணும் இல்லையா நிறைய…லீவ் சொல்லியாச்சு. அதனால நாம இட்லி, பொங்கல், சாம்பார்,சட்னி னு ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணுவோம்.எனக்கு ரொம்ப போர்…. அடிக்குது, வாங்க.. பண்ணலாம் என இருவரும் பேசிக் கொண்டே, காலை உணவு செய்து முடித்தனர்.
காலை 9:00 மணி அளவில் நித்தி, அர்ஜுன், வீடு வந்து சேர்ந்தனர்.அர்ஜுவந்து,எழுப்பியதால் தான் எழுந்தாள். சந்தியா, அனைவரும் சாப்பாடு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
அர்ஜுன், ஏண்டி?!.. தூங்கு மூஞ்சி.. இவ்வளவு நேரமாவாடி தூங்குவ மணி என்ன ஆச்சு? பாத்தியா.. கும்பகர்ணி… என்றான்.
சந்தியா,போடா!..அரைமெண்டல்.. இன்னைக்கு தான் லீவு எனக்கு, நான்…ஒரு 12:00 மணிக்கா.. எழுந்துக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள வந்து எழுப்பி விட்டுட என்றாள் சோகமாய்,
அர்ஜுன், அடிப்பாவி…! கல்யாண கட்டி போனா,மாமியார் கொடுமை படுத்த போறாங்கடி?… என்றான்.
சந்து, அதான் காப்பாத்த… நீங்க,இருக்கீங்களே?!…நாதா..!? எனக்கு பதிலாக எழுந்து,சமைச்சு வச்சுடுங்க….,அர்ஜு.எப்படி?.. என்றாள்,புருவம் உயர்த்தி.
அர்ஜுன், அடியே!! பிசாசு.. அப்ப கூட நீ எழுந்து, சமைக்க மாட்ட… நான்தான்,செய்யணுமா முடியாது? போடி…, என சண்டையிட்ட்டனர்.
அதைக் கண்ட,சந்தியா அம்மா, இப்ப ரெண்டு பேரும் சண்டை போட்டீங்கன்னா..ரெண்டு..பேருக்கும் டிபன் கட்,எப்படி?வசதி?? என்றாள்.அதற்குப் பிறகு, பேச்சு எது? அமைதியாக இருவரும் உண்டனர்.
சந்தியாவின்அறையில்,நித்தி, “பேப்” இப்ப உடம்பு எப்படி இருக்கு. கைவலி, பரவாயில்லையா? கட்டு பிரிச்சாச்சா?? என்றான்.
ஜீவி, ஆமா டால்… நேத்துதான் பிரிச்சேன். வலி லைட்டா இருக்கு, சீக்கிரம்,சரியாயிடும்,என்றவள்கையைப் பிடித்து காயத்தை பார்த்தான். காயம் ஆழமாக இருந்தது.நான்கு தையல், போடப்பட்டு இருந்தது. அதை பார்த்த மூவருக்கும், கண்ணீரே வந்துவிட்டது.
இப்பவாவது,சொல்லு?சொல்லு.? பேபி, என்ன நடந்ததுன்னு… சொல்லு….என்றான் நித்தின். ஜீவிகா,நான்,சொல்லுவேன்… என்னை யாரும் திட்டவோ? அடிக்கவோமாட்டேன்னு…சத்தியம்பண்ணுங்க.,சொல்றேன்,என்றாள்.அவளின் பிடிவாதத்தை அறிந்த மூவரும், சத்தியம் செய்தனர்.
அதன் பின், இரண்டு வாரம் தனக்கு நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள்,தன்நண்பர்களிடம். மூவருக்கும், நெஞ்சே விடுத்து விடும் போல் இருந்தது. எப்படி?? இவள் தாங்கினால், என்று தான் நினைத்தார்கள்.
ஜீவி,உங்கள கொன்னுடுவேன்னு மிரட்டினாங்க டா…,அதான் அமைதியாஇருந்தேன்,எல்லாத்தையும்…பொறுத்துக்கிட்டு,எனக்கு நீங்க எல்லாரும்…முக்கியம் என்றாள் கண்கலங்கி.
நித்தின், அவன் மட்டும்,என் கைல,கண்ணுல..மாட்டினான். அவ்வளவு தான் என்றான், கோபத்தில். சந்தியா, உடனே துடுக்காக ஏன் இன்னொரு நெஞ்சிலே குண்டு காயம் வாங்கவா??? என்றாள்.
அர்ஜுன், அடியேய்,சும்மா இருடி காமெடிக்குபண்ணிக்கிட்டு,அப்புறம் அவன்,ஏதாச்சும் கலாய்ப்பான், சப்போர்ட்டாக்கு,என்னை.. கூப்பிடாதே?! என்றான்.
அர்ஜுன்,சரிடி…நீ எங்களை, கலாய்க்கிறல அம்மணி என்ன பண்ணி இருப்பீங்க?!… என்றான்.
சந்தியா, எனக்குவர கோபத்துக்கு அவன் தலையிலேயே,நங்கு…. நங்குன்னு கொட்டி…, முடிய பிடிச்சு.. ஆட்டிவிட்டு இருப்பேன்… என்றாள்.
அவள் கூறியதில், சிரித்தார்கள் மற்றவர்கள், அர்ஜு,ஆமா..ஆமா எப்படியோ?? அவன் இருக்கிற ஹைட்டுக்கு, நீ ஸ்டூல் போட்டு தான், கொட்டணும்.ஹீல்ஸ்… போட்டாலும், எட்டாதுடி.. குள்ளச்சி..! என்றான்.
தொடரும்….
Продажа фронтальных погрузчиков: мощность и надежность для вашего бизнеса
фронтальный погрузчик китай [url=https://xn—-7sbkqfclcqchgmgkx0ae6eudta.xn--p1ai/]фронтальный погрузчик китай[/url] .
Решение психоэмоциональных проблем в психиатрической клинике Петербурга
психиатрическая клиника спб [url=https://www.psihiatricheskaya-klinika-spb-1.ru/]https://www.psihiatricheskaya-klinika-spb-1.ru/[/url] .
Услуги сантехника с гарантией: быстрый ремонт водопровода и замена труб
услуги сантехника в спб [url=https://www.sanmontazh1.ru]https://www.sanmontazh1.ru[/url] .