அத்தியாயம் 16
அதில் சிணுங்கிய, சந்தியா போடா! லைட்போஸ்ட்..ஹெய்ட்டா இருக்கோம்கிற திமிரு… போடா??? என திரும்பிக் கொண்டாள். இப்ப டியே,சிரித்து பேசி பொழுதை கழித்தனர்.
அர்ஜுன்,அடுத்து என்ன பண்ண போற?! ஜிவி…. என்றான். ஜீவி, அடுத்து என்ன அர்ஜுன்.. நடந்த எல்லாத்தையும் கொஞ்சம்… கொஞ் சமா…?! மறக்கணும். வேலைக்கு ஜாயின் ,பண்ணனும்.அப்புறம் எதுவும் இப்போதைக்கு யோசிக்கல என்றவள்,பின், உனக்கு எப்போ மேரேஜ் என்றாள்.
உடனே, நித்தி..நீ ஓகே சொன்னா இப்பவே, கூட பண்ணிக்கலாம் “பேபி”என்றான் இருகரங்களையும் விரித்து..,அவன் கூறியதில்,லேசாக அவன் தோளில் அடித்தவள்,ஏய் ‘டால்’ விளையாடாத சொல்லு?!.. என்றாள்.
நித்தி, ஒரு 4 மந்த்க்கு அப்புறம் வீட்ல..முடிவு, பண்ணி, இருக்கா ங்கடி . எனக்கு intereste இல்லடி.
ஜீவி, அடி வாங்குவ?? படவா!! சரியான வயசு தான், சோ,மேரேஜ் பண்ணிக்கலாம் சரியா, அப்புறம் எப்படி?!..நாங்க…ஹைதராபாத் சுத்தி பாக்குறது அதுவும், உன் செலவில் என்றாள்.
உடனே நித்தி,, அதுக்கு என்னடி சூப்பரா பண்ணிரலாம், ஓகேவா!.. என்றான். ஜீவி, அர்ஜுன், நித்தி, நாளைக்கு..நான் வீட்டுக்கு கிளம் புறேன், சந்தியாவையும், அர்ஜூன யும், அடிக்கடி பார்ப்பேன். ஆனா,நித்தி..உன்னரொம்ப..மிஸ்,பண்ணுவேன்.அதனால , அடிக்கடி போன் பண்ணு என்றாள்.
நித்தி, நான் வேணா.. ஒரு ஐடியா, சொல்றேன். பேசாம நீயும் என் கூட ஹைதராபாத் வந்துடு? ” ப்ராப்ளம் சால்வ்டு “என்றான்.
ஜீவி, அப்பா?!.. போதும்டா சாமி?!இரண்டு வாரத்துக்கே…கண்ண கட்டிருச்சு!இன்னும்,அங்க வந்தேன் உன் முறை பொண்ணு, என்னை”கதம்”,”கதம்”பண்ணிடுவா?!…
அதனால “எஞ்சாய் யுவர் லைப்” ஓகே,என்ன விட்டுட்டு… என்றாள்.
இப்படியே, சிரிப்பும் கேலியுமாய், இரண்டு நாளும் சென்றது. ஞாயிறு மாலையில் ஜீவியும், நித்தீயும் கிளம்பிவிட்டனர்.
மறுநாள்,ஜீவிகா தன்,வேலையில் சேர்ந்து கொண்டாள். யாரும் கேட்டால், சின்ன ஆக்சிடென்ட் என கூறி சமாளித்தாள்.அப்படி? இப்படி? என இரண்டு மாதம் சென்றிருந்தது.
***—***–******—***—-***-***–***
இங்கே திருச்சியில், காலை சக்தி சோபாவில் அமர்ந்திருந்தான். அஜய், லலிதா, மதுமதி, மீனாட்சி, அனைவரும் ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்து வந்திருந்தனர்.
மீனாட்சி, சக்தி லல்லிக்கு ஆறாவது மாசம் நடக்குது,அடுத்த மாசம்,ஏழாம்மாசம்,ஆரம்பிக்குதுப்பா?..பூ முடிக்கணும்.சொந்தக்கா ரங்களுக்கு, சொல்லனும் சக்தி என்றார்.
சக்தி, என்ன அஜய், உனக்கு அம்மா சொன்னது ஓகேவா?.எப்ப வளைகாப்பு வச்சுக்கலாம்னு, நீயும், லல்லியும், ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?? என்று கேட்டான்.
அஜய், பேசிட்டோம்ணா,இவ்ளோ பெரிய வீடு இருக்குல்ல,எதுக்கு வெளிய,மண்டபம் எடுத்துக்கிட்டு அதனால,வீட்டிலயே,வச்சுக்கலாம்னா.., என்றான்.
சக்தி,மீனாட்சியிடம்,திரும்பியவன்,உங்களுக்கு ஏதாவது,யோசனை இருக்காமா? என்றான்.
மீனாட்சி,இல்லப்பா..நீங்கரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணுங்க, மேல் வேலை எல்லாம், நான் பார்த்துக்குறேன் என்றார்.
உடனே மது, அய்யா!? ஜாலி?! இது கொண்டு காலேஜுக்கு மூணு நாள் மட்டம் போடுவேன் என்றாள்.
அஜய்,அவள் தலையில், கொட்டியவன், காலேஜுக்கு மட்டம் போடுறதுனா..என்னகுஷி..பாருங்க கணா,இவளுக்கு என்றான்.
மது,அவன்அடித்ததில்,சிணுங்கியவள்,.தன் காலை,தரையில் உதை த்து, சக்திணா? பாருணா?…இந்த தேவாங்க,என்னைகொட்டுறான்.அம்மா…. வலிக்குதே…என பொய் யாய் அழுதாள்.
மீனாட்சி, ஏய்?! சின்ன வாண்டு, மரியாதை கொடுத்து பழகு, அது என்ன?! உன்னை விட மூத்தவன போய், மரியாதை இல்லாம பேசுற!?தொடப்பக்கட்ட அடி விழும் என்றார்.
அதன் பிறகு, அவள் கப்சிப், அஜய் அவளைபார்த்து,நக்கலாக சிரித்தான். அதை கண்டவள், கோபம் கொண்டு எனக்கு இங்க இருக்க பிடிக்கல…நான் வெளி நடப்பு செய்கிறேன் என்றவள், போகும்போது அஜய் தலையில் நங்கென கொட்டி விட்டு, மேலே ஓடி விட்டாள்.
அஜய், ‘ஆ’பல்லி மிட்டாய்..?இருடி வரேன் உனக்கு இருக்கு.. என தன் தலையை தேய்த்துக்கொண்டான்.
அதை கண்ட சக்தி,சிரித்துக் கொண்டான். மீனாட்சி, சரிப்பா எல்லாத்துக்கும்….அட்வான்ஸ், கொடுத்துடு.அஜய் மற்ற ஏற்பாடு எல்லாம் பண்ண சொல்லுப்பா என்றார்.அவனும் சரி என்றான்.
மீனாட்சி,சரிப்பா.., உனக்கு பின்னாடி பிறந்த அஜய்,பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுக்கப் போறான். நீ எப்பப்பா கல்யாணம் பண்ண போற? எல்லாரும் கேக்கு றாங்கப்பா பதில் சொல்ல முடியல என்றார்.
அவர் அப்படி கேட்டதும் ,சக்தி தன்னையும், ஜீவிகாவையும் மணகோலத்தில் இணைத்து பார்த்து…தானாக சிரித்துக் கொண்டான்.
மீனாட்சி, என்னப்பா சிரிக்கிற!? என்றார்.
சக்தி,ஒன்னும் இல்லம்மா.. என தலையை கோதியவன்,, மேலே சென்று விட்டான். மீனாட்சி சிரித்துக்கொண்டார் அர்த்தமாய்,…
****************************
சென்னையில், ஒரு வாரம் சென்றிருந்ததது.ஜீவிகாவின் கம்பெனியில், திரும்பவும் நாலு பேரை ப்ராஜெக்ட் விஷயமாக, செலக்ட் செய்து இருந்தது. அதில் ஜீவிகாவும் ஒருவள்.அவள் போக வேண்டிய ஊர் திருச்சி.!!
ஜீவிகா,தனியாக போக பயந்து தன் பிராஜெக்ட் ஹெட் கிட்ட போய் பேசினாள்.
ஜிவி, ‘மே ஐ கம் இன்’ சார், என்றாள்.ப்ராஜெக்ட் ஹெட்,’எஸ் கம்மின்’ஜீவிகா என்றார்.ஜீவிகா, ‘குட் மார்னிங்’ சார் என்றாள்.
ப்ராஜெக்ட் லீட்,வெரி குட்மார்னிங் ஜீவிகா,சொல்லுங்க..?என்ன… விஷயம் திருச்சி போக,ரெடி ஆகிட் டீங்களா? என்றார்.
ஜீவிதா, சார், சாரி டு சே, ஐ அம் டிட் நாட் இன்டெரெஸ்டேட் டு கோ திருச்சி பிளேஸ் ப்ராஜெக்ட் சார் “ப்ளீஸ்” வேற யாரையாச்சும் அனுப்புங்க என்றாள்.
ப்ராஜெக்ட் லீட்,வாட் யூ ஸ்பீக்கிங் ஜீவிகா,இது எவ்ளோ?!, பெரிய ப்ராஜெக்ட் தெரியுமா?!.. லாஸ்ட் டைம், உங்க டீம் சக்சஸ் புல்லா, இந்த ப்ராஜெக்ட்ட முடிச்சீங்க…. இல்ல.., சோ உங்களையும் இந்த முறை அனுப்ப சொல்லி’சி இ ஓ’ சைட்ல, இருந்து மெயில் வந்தி ருக்கு.சந்தியா வேற ப்ரா ஜெக்ட்ல கமிட் ஆகி இருக்கிறதால,
உங்க கூட அனுப்ப முடியல, அதனால அவாய்ட் பண்ணாம போங்க..இதனால,உங்க பியூச்சர்ல நல்ல, ஒரு வளர்ச்சி இருக்கும். அதனால,போய்ட்டு வாங்க என் றார். ஜீவிகா, சோகமாக.. வெளியே வந்தாள்
சந்து,என்ன மச்சி பேசினியா?!.. அந்த”பிளேகிரவுண்ட்”மண்டையன்,என்ன சொன்னான். ஓகே சொல்லிட்டானா?!..என்றாள்
அதில் சோர்ந்த,ஜீவிகா,இல்லடி கண்டிப்பா போக சொல்லிட்டாரு?எவ்வளவுகெஞ்சினேன்?”இம்பார்டன்ட்” போய் தான் ஆகணும்னு சொல்லிட்டாருடி என்றாள்.
சந்தியா, எல்லாம் அந்த ராஜேஷ் பன்னியோட…வேலையா தாண்டி, இருக்கும். என்கூட தாண்டி உன்ன போடுறதா இருந்துச்சு.. நேத்து ஈவினிங் வரை,
திடிர்னு மார்னிங், இந்த ராஜேஷ், அந்த சொட்ட மண்டையன் கிட்ட, என்ன பேசினான்னு தெரியல?..
மார்னிங், உன்னை அவனோட ப்ராஜெக்ட்டுக்கு,மாத்திட்டாங்கடி.., என்றாள் கடுப்புடன்.
ஜீவிகா,மச்சி இப்ப என்னடி பண் றது? வேற வழியே இல்லையா? என்றாள்.
சந்து, சரி ஒரு ஐடியா?? கம்மிங் வெட்னஸ்டே, தானே.. திருச்சி கிளம்புற. வியாழன், வெள்ளி, ப்ராஜெக்ட் முடிங்க. சனிக்கிழமை எப்படியும்,மீட்டிங்.. இருக்கும். எனக்கு சேலம் போட்டு இருக்கா ங்க. சோ சனிக்கிழமை, வேலை முடிச்சிட்டு, சண்டே நான் திருச்சி வந்துடறேன்.ரெண்டு பேரும்… சேர்ந்து சென்னை போயிடலாம் ஓகேவா?? என்றாள்.
ஜீவியும் அவள் சொன்னதுக்கு சரி என்றவள்,விஷயத்தை,கால்பண்ணி அர்ஜுன் மற்றும் நித்தீயிடம் கூறினாள்.
அர்ஜு,மச்சி.. அவன் இருக்கறது சம்திங் ஏதோ கிராமம். நீ சிட்டிக் குள்ள அதுவும் ஹோட்டல்ல, ஸ்டே பண்ண போற?, சண்டே கிளம்ப போற?.. அங்க இருந்து,
அதனால,கவலைப்படாத,”கூல்”பாத்துக்கலாம். நித்தின், பிசினஸ் விஷயமாடெல்லி வர போயிரு க்கான். என்னாலையும் இப்ப இருக்க சூழ்நிலையில் எங்கேயும் வர முடியல.
அப்பாவுக்கு கொஞ்சம் முடியலடி. அதனால,பத்திரமா போடி,எல்லாம் நல்லபடியா.. நடக்கும். ஆனா?! வெளியே எங்கேயும்.. தனியா போகாத.. ஓகே பாத்துக்க..மச்சி… என்றான்.
ஜீவிகா, திருச்சி போகும் நாளும் வந்தது.ஜீவி அரைமனதாகவே கிளம்ப ஆயத்தமானாள்.
(வரும்போது மிஸ் ஜீவிகாவாக வருவாளா?? இல்லை,மிஸ்டர்ஸ் ஜீவிகாவாக வருவாளா?? முதல்ல திருச்சியில் இருந்து சென்னை வருவாளா??? வெயிட் அண்ட் சி )
தொடரும்….
👌👌👌👌👌👌👌👌👌🥰👌👌
super sis