அத்தியாயம் 17
திருச்சி வரும் நாளும் வந்தது. ப்ராஜெக்ட் குழுவுடன் திருச்சி வந்தாள் ஜீவிகா.
ஹோட்டலி கம்பெனி சார்பில், அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.
மொத்தம் ஐந்து பேர், பெண்கள் இரண்டு பேர், ஒரு அறையிலும், ராஜேஷ் தனி ரூமிலும், மற்ற இரு ஆண்கள் ஒரு அறையிலும், தங்கிக் கொண்டனர்.
சக்தி வீட்டில், நெடுநாள் பிறகு, சக்தியை காண,அவன் தோழன், சங்கர் வந்திருந்தான். அவன் வேலை விஷயமாக, திருச்சி வந்திருந்தான்.
சக்தியின் பக்கத்து ஊர் இவன், பள்ளி நண்பர்கள், இருவரும். சங்கர், படிப்பு முடிந்து…. சென்னையில் செட்டில். சொந்தங்கள் எல்லாம் இங்கு இருப்பதால், மாதம் ஒருமுறை வருவான் .
சக்தி, வாடா!?..மச்சான்.. எப்படி இருக்க? வீட்ல எல்லாரும், நல்லா இருக்காங்களா? தங்கச்சியும், உன் மகன், எல்லாம் சுகமா?! என்றான்.
சங்கர், நல்லா…., இருக்கேன் மச்சான். வீட்லயும், எல்லாரும், நல்லா இருக்காங்க என்றவன், மீனாட்சியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.
மீனாட்சி,சிறிது நேரம் சங்கரிடம் பேசியவர், நல்லா இருப்பா…. பேசிட்டு இருங்க, இப்ப வரேன்.. என்றவர் உள்ளே சென்று விட்டார்.
சங்கர், மச்சான்… எப்படா?.. கல்யாண சாப்பாடு போட போற?, அதுக்கு தான் மச்சான் வெயிட்டிங். என்றான். அதில் சிரித்த, சக்தி பணிக்கலாம் டா.. என்றான்.
சங்கர், மச்சி….,போன தடவை, வந்தப்ப, ஏதோ பிரச்சினை ஆயிடுச்சுன்னு,.. சொல்லி, ஒரு பொண்ணு போட்டோ காட்டுன ஞாபகம் இருக்கா??? என்றான் யோசனையுடன்,…
சக்தி,யோசித்தவனாய்…, ஆமா மச்சி? அதுக்கு என்ன? என்றான்.
சங்கர்,இல்ல…மச்சான் வேலை விஷயமா, டவுன்ல இருக்குற பெரிய ஹோட்டலுக்கு ஒருத்தர பார்க்க போயிருந்தேன். அப்ப நீ போட்டோல காட்டின பொண்ணு, ஒரு நாலு, பேர் கூட பேசிட்டு போறத பார்த்தேன்டா?… என்றான்.
சக்தி, என்னடா…? மச்சான் சொல்ற உண்மையா?!..வா சொல்ற நிஜமா… அவள பாத்தியா?!… மச்சான்… ஜீவிகா திருச்சி, வந்து இருக்காலா?!.. என்றான் கண்கள் மின்ன….,
சங்கர், நான் ஏன்டா? பொய் சொல்ல போறேன்.ஆமாடா…. பார்த்தேன் என்றான்.
சக்தி, சரிடா, திரும்ப… அங்க போவியா?! என்றான்.
சங்கர், இல்லடா?….இதோட…. சனிக்கிழமை தான் போவேன். ஆனா மச்சான், அங்க சாப்பிட றதுக்கு,இடம்(டைனிங்),இருக்கு டா?… சாப்பிட போலாம்ல…? என்றான்.
சக்தி,அவனை இறுக அணை த்தவன் சூப்பர் மச்சான்,மதியம் அங்க போலாம், கண்டிப்பா?? அவ சாப்பிட வரணும்ல என்றான் ஆசையுடன்.
அதேபோல், வெள்ளிக்கிழமை மதியம்,ஹோட்டலுக்குசாப்பிட,போனார்கள்.அவனை,ஏமாற்றாமல் ஜீவிகாவும், அவளுடன், மற்ற நான்கு பேரும் வந்தனர்.
சக்திக்கு, ஒரே மகிழ்ச்சி! இவர்கள் அமர்ந்திருக்கும்,உணவுமேடையில் இருந்து, சற்று…தள்ளியே, அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
அன்று ஜீவிகா,ஜீன்ஸ்,ஷாட் குர்த்தா, அதற்கேற்ப,ஹேர்ஸ்டைல் என கால் மேல் கால் போட்டு கொண்டு ஸ்பூனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பேசியபடி,
சக்திக்கு, அவள் இந்த உடையில் வேறுமாதிரி,அழகாய்தெரிந்தாள்.அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
சங்கர்,, மச்சான் சாப்டுட்டுகிட்டே சைட்,அடிடா,அப்புறம்,பாக்குறவங்க, ஏதாச்சும் நினைக்க போறாங்க என்றான்.
சக்தி,ம்ம்ச்…,மச்சான்…,அமைதியா சாப்பிடு…, எனக்கு பசிக்கல.. என்றான்.
சங்கர், அது சரி…பசிக்காதுடா… பசிக்காது?..அதுவும் அழகான பொண்ண பார்த்தா…சுத்தமா பசிக்காது தான். ஆனா எனக்கு பசிக்குதுடா…நான் சாப்பிடுறேன். நீ உன், வேலையை கன்டினியூ பண்ணுப்பா.. என்று சாப்பிட ஆரம்பித்தான்.
அவள் சாப்பிடும் இடத்தில்,, ராஜேஷ், ஜிவி,இந்த டிஷ், ட்ரை பண்ணிப் பாருங்க நல்லா இருக்கும். தண்ணி வேணுமா? நான் எடுத்து தரேன், என்று அவளிடம் வழிந்து கொண்டு இருந்தான்.
ஜீவிகா,வேண்டாம் சார்.. இருக்கட்டும் சார்… என சொல்லிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம்,பார்த்துக் கொண்டிருந்த,சக்திக்கு,ஆத்திரமும், கோபமும் சேர்ந்தே வந்தது, அந்த ராஜேஷை அடித்து வெளுக்கும் அளவிற்கு,
சிறிது நேரம் கழித்து, அவள் சென்று விட்டாள். இதுவே மறுநாளும், தொடர்ந்தது.
இவர்கள் சாப்பிடும் மேஜைக்கும் அடுத்த மேஜைக்கும், மறைப்பு இருந்ததால், அந்த பக்கம் சக்தி அமர்ந்து கொண்டான். அவளுடன்… அமர்ந்திருந்த அனைவரும் சாப்பிட்டு எழுந்து விட்டனர். அப்போது சந்தியா தான் கால் செய்திருந்தாள்.
ஜீவி, ஹாய் மச்சி.. ‘ஹவ் ஆர் யூ’ டி சாப்பிட்டியா? என்ன பண்ற?.. என்றாள்.
சந்து, எஸ் மச்சி… ‘குட் ‘ப்ராஜெக்ட் எப்படி போகுது… என்றாள்.
ஜீவி, இன்னைக்கு சைன் ஆகிடும் அல்மோஸ்ட், எல்லாமே…. முடிஞ்சிடுச்சு. நாளைக்கு காலைல கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு, வீட்டுக்கு, கிளம்ப வேண்டியது தான் என்றாள்.
சந்து, சரி மச்சி, போன வாரம் மாப்பிள்ளை, வீட்டில் இருந்து வந்திருந்தாங்க இல்ல, என்ன மாப்ள ஓகேவா?! உனக்கு…
ஜிவி, ஆமா… மச்சி…வந்து பார்த்துட்டு போனாங்க…, எனக்கு தெரிஞ்ச இந்த சம்பந்தம், ஓகே ஆகிடும்,நினைக்கிறேன்,என்றாள்.இதையெல்லாம்,அந்த பக்கம் அமர்ந்திருந்த சக்தி, கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் முகம் இறுக்கமாக இருந்தது.
ஜீவிகா, தொடர்ந்தாள், அம்மா அப்பா,ஓகே சொல்லிட்டாங்க, போட்டோஅனுப்புறேன்,பாரு. நித்தி, மஞ்சு, அர்ஜுனுக்கும் அனுப்பினேன். இன்னும் பதில் வரல, நாளைக்கு 9மணிக்கு ரூம் வெக்கேட்,பண்ணிட்டு,மலைக் கோவில் போய் சாமி கும்பிட்டு, கிளம்ப வேண்டியதுதான் என்றவள்,
எழுந்து நடந்து, கொண்டே நீ எப்ப வர மச்சி, நாளைக்கு என்றாள்.
சந்து,நாளைக்கு மார்னிங் 11 மணிக்கு வந்திடுவேன் டி,
ஜீவி,சந்து,ஒன்னு சொல்லவா?… திரும்பவும், யாரோ?என்னை ஃபாலோ… பண்ற மாதிரியே இருக்குடி??… என்றாள்.
சந்து, அடியே!… கிறுக்கி!… நல்லா பாரு…அந்த ராஜேஷ், தடியனா.. இருக்க போகுது என்றாள்.அதில் சிரித்த ஜீவிகா, சரிடி நான் வெச்சிடுறேன்,
ரூம் போறேன், நாளைக்கு பாத்துக்கலாம், என்று வைத்து விட்டாள்.
சக்தி,போகும் அவளையே,பார்த்து கொண்டே இருந்தான், ஒரு முடிவுடன்.
மறுநாள் காலை அழகாய் விடிந்தது . அன்று ஞாயிற்று க்கிழமை, ஜீவிகாவும் அவள் கூட வந்தவர்களும், எல்லாவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டி ருந்தனர்.
ஜீவிகாவின்,போன் அடித்தது. எடுத்து பார்த்தாள்,அவள் அப்பா.அவரின் அழைப்பை ஏற்றவள்,காதில் வைத்து சொல்லுங்கப்பா…என்றாள்.
அவள், அப்பா, என்னமா.. கிளம்பிட்டியா? எப்ப வருவ? பாத்து வாம்மா?! அம்மா, இப்ப தான் கேட்டா? எப்ப வருவன்னு, என்றார்.
ஜீவி, ஹோட்டல் ரூம் வெக்கேட் பண்ணியாச்சுப்பா… கோவில் போய்,சாமி கும்பிட்டு..கிளம்ப வேண்டியதுதான்.
சாயந்திரம்,வீட்டுக்கு வந்துருவேன் என கூறி போனை வைத்தாள்.
ஜீவிகா, தன் நண்பர்களுக்கு, போன் செய்து தான்,கிளம்புவதாக கூறினாள்.ஆயிரம் பத்திரம் சொன்னார்கள் நால்வரும்.
மஞ்சு, ஏன்டி? திருச்சி வரை வந்தவ, என் வீட்டுக்கு,வந்துட்டு போலாம்ல.. போடி.. உன் பேச்சு… டூ….என்றாள்.
அதில் சிரித்த ஜீவிகா,!அடியேய்! நான் ப்ராஜெக்ட், விஷயமாக, வந்து இருக்கேன் டி, அடுத்த மாசம்,ப்ரண்ட்ஸ், கூட கண்டிப்பா வரேன்… கோச்சுக்காத மச்சி, சரியா? உடம்ப பாத்துக்க, சீக்கிரம் மீட் பண்ணலாம், என கூறியவள் சிறிது நேரம் பேசிவிட்டு,போனை வைத்தாள்.
தொடரும்….
super sis
Thank you da ❤️
rendu epi ethirpathen oru epi pottu emathitinkale
🙏❤️ night update pandrean pa
facebook la story potalamla sis
❤️🌹Facebook la story ya. Epi update poda soldringala
Платная наркологическая клиника: профессиональная помощь на пути к выздоровлению
частная наркологическая клиника в санкт петербурге [url=https://platnaya-narkologicheskaya-klinika.ru/]https://platnaya-narkologicheskaya-klinika.ru/[/url] .