அத்தியாயம் 21
இரவு அறைக்கு வரும் போது, இரவு உடையில் இருந்தாள்.லலிதா தான் அவள் புது உடை ஒன்றை கொடுத்திருந்தாள். இரவு இருவரும், எதுவும் பேசவில்லை.
இரவின் இனிமையை,கெடுத்து க்கொள்ள சக்தி, விரும்பவில்லை. அவள் கொண்டுவந்த பாலை குடித்தவன், அமைதியாக படுத்தான்.
ஜீவிகா, தயங்கி நின்றாள்,சிறிது நேரத்திற்கு பின்,நான் வேணும்னா .சோபால படுத்துக்கவா.. என்றாள் தயங்கியபடி,
சக்தி உடனே, சரி வா ரெண்டு பேரும் சேர்ந்து,சோஃபாவுல.. தூங்கலாம் என அவள் கையை பிடித்தான்.
அதில் அதிர்ந்த, ஜீவிகா.. பயத்தில் கண்களை உருட்டி, என்னது..!? ரெண்டு பேரும் சோபா ல..படுக்கலாமா?!..என்றவள் சோபாவை பார்த்தால், அது அவன் ஒருவனுக்கே பத்தாது. அவள் அதிர்ந்த பார்வையில், கள்ள சிரிப்பு சிரித்தான் உதட்டில்,
ஜீவி அது..அது எப்படி முடியும்?சோஃபா, சின்னதா…. இருக்கு, ஒருத்தர் தான், படுக்க முடியும் என்றாள்.
சக்தி, அதெல்லாம்… எனக்கு தெரியாது?தூங்குறதா.. இருந்தா.. ரெண்டு பேரும் ஒரே இடத்தில் தூங்கணும். என்று தோளை உலுக்கியவன்,அட்ஜஸ்ட் பண்ணி படுக்கலாம் வா…என அவள் கையை பிடித்தான்,
இதில், பயந்த ஜீவி இல்ல.. வேணா ம்? நீங்க பெட்ல படுங்க..நான் இங்கேயே… என்றவளை,
ஷ்ஷ்…. அங்க ரெண்டு பேரும் படுக்க முடியாதுனு தெரியுதில்ல, வா கட்டில்ல நிறைய இடம், இருக்கு. அங்கே படுத்துக்க என்ற வன்,அவள் பேசுவதற்கு முன், அவளை கட்டிலில், அமர வைத்து விட்டான்.
பேச வந்தளை,எனக்கு தூக்கம் வருது, லைட் ஆஃப் பண்ணிட்டு, படு என்றான்.
ஜீவிகா தயங்கியவள்,இல்ல… லைட் இருக்கட்டுமே.. என்றாள்.
அதில் சிரித்த சக்தி,சரி என்றவன், அமைதியாக உறங்கி விட்டான். ஜீவிதாவுக்கு, தான் உறக்கம்…. வருவேனா? என்றது, கட்டில் முழுவதும், அவன்வாசம்.பிரண்டு, பிரண்டு, படுத்தவள் எப்போது உறங்கினால், என்று தெரியவில் லை.
காலைப் பொழுது அழகாய் விடிந்தது.ஒருபுறம், பறவைகள் சத்தம், சில்லென்ற காற்று, விடிந்து விடியாமலும் ஒரு காலை பொழு து புது இடம் என்பதால், ஜீவிகா விற்கு விழிப்பு,தட்டி விட்டது….
கண்களை திறந்து பார்த்தால், அருகில் தனக்கு தாலி கட்டியவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தை, உற்றுப்பார்த்தா ள்,அவன் உயரம் கட்டிலை, நிரப்பி இருந்தது. உறங்கும் போதும்கூட முகத்தில் கெம்பீரம் குறையவில் லை. அலை, அலையாய்,கேசம். கழுத்தில், புலிநகம்…. வைத்த ஜெயின், முரட்டுக்கரங்கள், உடம்பை, உடற்பயிற்சி செய்து, அழகாய்….. வைத்திருந்தான்.
ஜீவிகா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அசைவை கண்டு, தான் செய்த காரியத்தை நினைத்து, நாக்கை கடித்தவள், குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
(அவள் மனதில்,ஏன்? நீங்க நல்லவங்களா ? இல்லாம போனீ ங்க?என கேட்டுக் கொண்டாள் )
காலை உணவை, உண்டு விட்டு அனைவரும், கூடத்தில் அமர்ந்தி ருந்தனர்.கடையிலிருந்து ஜவுளி வந்து இருந்தது. மீனாட்சி, ஜீவி இங்க வாம்மா.., உனக்கு பிடிச்ச, சேலை, சுடிதார், எல்லாம் எடு.. என்றார்.
ஜீவிகாவும்,தலையாட்டியவள், கொஞ்சமாக சேலையும், சுடிதா ரும், இரவு உடை, இன்னர்ஸ் என எடுத்தாள். சக்தி, அவள் எடுப்ப தை தான், பார்த்துக் கொண்டிருந் தான்.
மீனாட்சி, என்னம்மா… இவ்ளோ கம்மியா?…, கையில வச்சிருக்க.. டெய்லி போட, டிரஸ் வேணும் இல்ல. இன்னும் எடுத்துக்கமா… என்றார்.
ஜிவிகா , தயங்கியவளாய்,அது.. இதுவே போதும் அத்தை.அப்புறம், தேவைனா வாங்கிக்கிறேன் என் றாள். அவள் கூற்றில் சிரித்தவர், சக்தியை பார்த்தார்.
உடனே அவன், ஜார்ஜெட்ல பத்து சாரீஸ், சிபான்ல 10 சரி, பட்டுல 5 புடவை, வெளியே போனாகட்டுற மாதிரி ஒரு பத்து புடவை எடுத்து வைங்க, ராமலிங்கம் என்றவன், அப்புறம் நியூ மாடல் வந்ததும் வீட்டுக்கு, அனுப்பி வைங்க என்றான். அவரும், சரிங்க.. ஐயா, என்றவர், சொன்னபடி,எடுத்து வைத்தார்.
ஜீவிகா, அவனையே பார்த்திருந் தாள். அவள், பார்ப்பதை பார்த்த வன், இரு கண்களையும் , சிமிட்டி அழகாய், புன்னகைத்தான்.
அவன் செயலில் ஜீவிகா தலை குனிந்து, கொண்டாள். புடவை மற்ற எல்லாருக்கும் எடுக்கப்ப ட்டது. அவள் எதுவும் கூறவில் லை.
மறுநாள், காலை 9 மணி, திருச்சி கோவில். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிதாவின் அம்மா, அப்பா. ஜீவிகாவை தேடி திருச்சி கோவில் வந்திருந்தனர், அவளை பற்றி விசாரிக்க.
கோவில் அலுவலக அதிகாரியி டம், அர்ஜுன், சார்.. நாங்க சென் னையில இருந்து, வந்திருக்கோம். ரெண்டு நாளைக்கு, முன் னாடி இந்தக் கோவில்ல, வச்சு… ஒரு கல்யாணம் நடந்துச்சு… அதோட சிசிடிவி,கேமரா புட்ஏஜ், வேணும் சார்… என்றான்.
உடனே அதிகாரி , யார் நீங்க? கேட்ட உடனே எல்லாம்… எடுத்துக் காட்ட முடியாது… என்றார்.
நித்திஷ், உடனே சார்,இந்தாங்க சார், நாங்க கமிஷனர்… கிட்ட இருந்து லெட்டர் வாங்கிட்டு தான், வந்திருக்கோம். இதை படிச்சிட்டு, பதில் சொல்லுங்க?.. என்றான்.
அவர் அதை வாங்கிப் பார்த்தவர், கொஞ்ச நேரம், இருங்க… தம்பி, என்றவர், கேமரா புட் ஏஜ் காட்ட, அவர்களை அழைத்துச் சென்றார். அதிகாரி,அவர்களுக்கு வீடியோ வை காட்டினார்.
அதில் சக்தி, கண்மூடி கொண்டி ருக்கும் ஜிவிகாவின், கழுத்தில், தாலி கட்டிக் கொண்டிருந்தான். நித்தி, மச்சான்.. இங்க பாருடா?! என்றான். அதிகாரி,வீடியோவை பார்த்துவிட்டு, அட நம்ம, சக்தி தம்பி… அவங்கள தான், பார்க்க வந்தீங்களா? அவர் உங்களுக்கு, என்ன வேணும் என்றார்.
சந்தியா, அவர்தான் என் பிரண்டை, கல்யாணம் பண்ணி இருக்காரு,
உடனே அவர், ‘ஓ’ அப்படியா…? என்றார் .
சந்து, சார் அவருடைய வீடு தெரியுமா? உங்களுக்கு, தெரிஞ்சா அவருடைய அட்ரஸ்,கொஞ்சம் குடுங்க சார், என்றாள்.
அவரும், பேப்பரை எடுத்தவர், இந்த தெருவுக்கு போங்க, பெரிய வீடு ஒன்னு இருக்கும். அதான் அவர் வீடு,போய் பாருங்க என்றார்.
அதை வாங்கிக் கொண்டவர்கள், அந்த வீட்டை நோக்கி சென்றனர். 10 நிமிடத்தில் வீட்டை அடைந்து விட்டனர்.சொன்னது போலவே வீடு, பெரிதாக தான் இருந்தது.
மீனாட்சி தான், கூடத்தில் அமர் ந்திருந்தார்..ஐவரும்,வீட்டின் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைப் பார்த்த மீனாட்சி, யார் நீங்க? என்றார். அவருக்கு வணக்கம், வைத்தவர்கள்,
ஆண்ட்டி, நாங்க.. ஜீவிகா, ஓட ஃப்ரெண்ட்ஸ், இது அவளோட அம்மா, அப்பா,என்றனர்.
மீனாட்சி, வாங்க.. வாங்க..வந்து உட்காருங்க.. என்றவர், பாக்கியம்.. தண்ணி, கொண்டு வா என்றார். பின் மதுவை அழைத்தார். மதுமதி சொல்லுங்கம்மா, என்றாள்.
மீனாட்சி, மதுமா.. நீ போய் அண் ணாவையும், அண்ணியயும் கூட்டிட்டு வா என்றார். மதுமதி வந்தவர்களை…. ஒரு முறை பார்த்தவள்,மேலே ஓடினாள்.
நித்தி, மாப்ள, பொண்ணு அழகா இருக்குல்ல… என்றான்.
அர்ஜுன், மச்சான்… கொஞ்சம் அமைதியா இரு நம்ம பேபி எப்படி இருக்கான்னு, முதல்ல.. தெரிய ணும்.சோ, கொஞ்ச நேரம் அமைதி யா இரு என்றான். நித்தினும், சரி என்றவன், அமைதியாக இருந்து கொண்டான்.
மதுமதி, மேலே சக்தி அறைக்கு சென்றவள், கதவை தட்டினாள் , சில நிமிடங்கள், கழித்து கதவு திறக்கப்பட்டது. சக்தி, வா மதுமா என்றான்.
மது, அண்ணா, அண்ணியையும், உங்களையும்,அம்மா உடனே, கீழே வர சொன்னாங்க…யாரோ உங்கள? பார்க்க வந்திருக்காங்க? என்றாள்.
அவள் கூற்றில், புருவம் சுருக்கி யோசித்தவன், சரிம்மா.. நீ போ…. நாங்க வர்றோம் என்றான்.
மதுவும் சரிண்ணா, சீக்கிரம் வாங்க, நான் கீழே போறேன் என்று இறங்கி விட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து, சக்தி மேலிருந்து படியில் இறங்கி கொண்டிருந்தான். ஒரு கையால் மீசையை முறுக்கியப்படி, வேட்டி யை..லேசாக தூக்கிப் பிடித்தபடி கீழே… அமர்ந்திருந்தவர்களை நோக்கி வந்தான்.
அவன் பின்னாலயே, ஜீவிகா வந்து கொண்டிருந்தாள்.
பார்க்கவே,அவ்வளவு அழகாக இருந்தது. தன் பின்னால் வந்தவ ளை, இழுத்து.. தன் கைகளோடு கோர்த்துக் கொண்டான். ஜீவிகா தலை நிமிரவே இல்லை.
அவளைப் பார்த்த சந்தோஷத் தில்,அவள்,நண்பர்கள், அப்பா, அம்மா, அனைவரும் ஒன்று சேர, மச்சி.., பேபி..,ஜீவிமா.., ஜீவி.., என அழைத்தனர். அவர்கள் அழைப் பில் ஒரு நிமிடம், அவள் உடல் சிலிர்த்து, அடங்கியது. அதை சக்தியும்,அவள் கையில் உணர் ந்து கொண்டான்.
ஜீவிகா, ஆனந்த கண்ணீருடன், உதடுகடித்து சிரிப்புடன் அழுதாள். அர்ஜுன்.., நித்தி…, சந்து..,அம்மா!.. அப்பா!..என கத்தியவள்,அவனை இழுத்துக் கொண்டு ஓடினாள் அவர்களிடம்.
ஆனால்?..அவன் கை, அவளை அழுத்தமாக… பற்றி இருந்தது.
தொடரும்…..
super sis waiting for next epi please sis koncham big epi podugga sis
எழுதும் போதும் சின்ன eipsode டா எழுதிட்டேன் டா டெய்லி ரெண்டு எபி போடுறேன்
Где найти информацию о ценах в стоматологии Минска?, ознакомьтесь с информацией на нашем сайте.
Услуги стоматолога в Минске цены [url=https://dentistblog.ru/]https://dentistblog.ru/[/url] .
Быстрая доставка алкоголя: шампанское, крепкие напитки и коктейли для вашего отдыха
доставка алкоголя на дом москва [url=http://www.dostavka-alcogolya-nochyu-lux7.ru/]http://www.dostavka-alcogolya-nochyu-lux7.ru/[/url] .