ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 22

அத்தியாயம் 22

  ஜீவிகா, சக்தியை….இழுத்துக் கொண்டு, ஓடினாள் அவர்களிடம். ஆனால்?..அவன் கை, அவளை அழுத்தமாகப் பற்றி இருந்தது. அவனை, அழுகையுடன் பார்த்த  வள், “ப்ளீஸ்”..என்றால் கெஞ்சும் குரலில், சக்தி, அவள் அப்படி? பார்த்ததும்…

அவள் கையை,விட்டான்.அவன் விட்டதும் தான்,மான்குட்டி.. போல் துள்ளி,குதித்து… போய், தாவி அவர்களை, கட்டிக் கொண்டாள்.

 ஜீவி, “டால்”?!..எப்படிடா? இருக்க..? என அவன் உடலை, ஆராய்ந்தா ள். அதில் சிரித்த, நித்தின், நல்லா இருக்கேன்டி? எனக்கு.. ஒன்னும் இல்ல?… என்றான்.

 மச்சி…அர்ஜு…என அழுதாள், அவர்களை கட்டிக்கொண்டு, அவர்களும்,இவளைவிடவில்லை

 

 இங்கே, ஒருவனுக்கு, வயிறு…. எரிந்தது. (யாரு நம்ம சக்தி தான்). சந்தியா, ஒரு படி மேலே போய், அவளின் கன்னத்தில் எச்சில் முத்தமிட்டாள், ஜீவியும் முத்தமிட் டால், இருவரும் கண்கலங்கி சிரித்தனர்.

  நித்தி, “பேப்”… எப்படி இருக்க? உனக்கு ஒன்னும் இல்ல, தானே? ரொம்ப பயந்துட்டேன்… ”பேபி” என்றான் அவள் நெற்றியில் முட்டி,

 அதில் விசும்பியவள், “ஆம்”என்று தலையாட்டினாள்.அர்ஜுன், மச்சி  உன்ன பாக்குற வரை, எங்களுக்கு உசுரே.. இல்லடி? இப்ப தான்டி……. நிம்மதியா… இருக்கு, என்றான் அவள் கையை பிடித்த படி,

  சந்து, மச்சி…அம்மா, அப்பா, இருக்காங்க பாரு?! என்றாள்.

  ஜீவி, ம்மாஆ..,அப்பா..,என இருவரையும் கட்டிக்கொண்டு, ஒரே.. அழுகை. அவளின் அப்பா அழாதம்மா!..மூச்சு, வாங்குது பாரு, தண்ணி குடி, இப்படி உட்காரு என்றவர்,

  நல்லா இருக்கியா மா? உடம்ப பாத்துக்க? சாப்டியா? என்றார்.

  ஜீவியும், ஆச்சுப்பா..நீங்க சாப்டீங்களா? என்றாள்.

 

ஜிவியின் அப்பா, சாப்பிட்டேன்மா, பிள்ளைங்க வாங்கி,கொடுத்தாங் க என்றார். சிறிது நேரம், அவர்களி டம் பேசிக் கொண்டிருந்தாள்.

  அதே நேரம், சத்தம் கேட்டு,அஜய், லல்லி, இருவரும்… இறங்கி, வந்தனர்.அஜய், மது.. யாருடி??அவங்க..எல்லாம்,என கேட்டான்.

மது,அவங்களா?அண்ணா..  அவங்க எல்லாம், அண்ணியோட ஃப்ரெண்ட்ஸ், அப்புறம், அவங்க அம்மா, அப்பா, என்றாள்.

   மீனாட்சி, அவள் அம்மா, அப்பா, உடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஜீவிகாவுடன், அவள் நண்பர்கள் கதை அளந்து கொண்டிருந்தனர். சந்து, இவர்தான்டா…நம்ம ஜீவிய கல்யாணம் பண்ணவரு என்றாள்.

அர்ஜு, “ஹான்” தெரியுது… டி? பாத்துட்டு… தானே இருக்கேன். நித்தின், ஜிவி,”பேப்” உனக்கு இங்க ஓகேவா..? எந்த பிரச்சனையும் இல்லல?..என்றான்.

 ஜீவி, இல்லடா… இங்க எனக்கு எந்த, பிரச்சனையும் இல்ல,நான் நல்லாதான் இருக்கேன்.

  சந்தியா, இப்பவாச்சும் சொல்லுடி? உன்னை யாரு கடத்தினாங்கனு, உங்க வீட்டுக்காரருக்கு தெரியுமா? உன்னை கடத்தினது யாருன்னு?.. இவர் ஏன்? உன்னை, கல்யாணம் பண்ணினாராம்? என்றாள்.

   ஜீவிகா, பெருமூச்சு விட்டவள் ம்ம்…, சொல்றேன் சந்து, என்னை மண்டபத்தில் கடத்தினதும், இவர்  தான். எனக்கு, கோவில்ல தாலி கட்டினது இவர்தான். இரண்டு பேரும், ஒரே ஆள் தான், என்றாள்.

   அதைக் கேட்ட, அனைவருக்கும் அதிர்ச்சி!.அர்ஜுன், என்ன மச்சி?சொல்ற?…, உண்மையாவா?….., என்றாள் சக்தியை, பார்த்துக் கொண்டே.

 

நித்தின்,உன்னை,கடத்திகொண்டு போனவருக்கு, உன் மேல எப்படி காதல் வந்துச்சாம்..?ஏன் உன்ன கல்யாணம் பண்ணி னாராம்?? என்றான் கோவமாய்..

 

ஜீவிகா, ம்ம்…சொல்றேன்டா என்ற வள், சக்தி, தன்னை கடத்தினது, முதல்,போலீஸ் ஸ்டேஷனில், சக்தி பேசியது,கல்யாணம் பண்ணினது. வீட்டிற்கு கூட்டி வந்தது, அவளை விரும்பியது,மன்னிப்பு கேட்டது,  என எல்லாவற்றையும்,தன் நண்ப ர்களிடம், கூறினாள்.

 

  ஜீவிகா நடந்த எல்லாவற்றையும், கூறி முடித்ததும், நண்பர்கள் மூவரும் சக்தியை பார்த்தனர். அவன், கண்களில்… அத்தனை காதல்.

  மது, அண்ணா… எங்கேயோ?… புகைற மாதிரி, ஸ்மெல் வரல…? என்றால் சக்தியை கைகாட்டிய படி, அஜய் அவள் காட்டிய….. திசையில் பார்த்தான்.

ஆம்,சக்தியின் முகம், கடுகடுவென இருந்தது. கண்கள் மட்டும், தன் மனைவியிடம் இருந்தது. கை கொண்டு, தன் பிடரியை தட்டிக் கொண்டே..,இருந்தான்.கோபத்தை அடக்கியபடி,

 

அஜய், மது தலையில் கொட்டியவ ன், அவருடைய “பீலிங்ஸ்”உனக்கு, காமெடியா? தெரியுதா? என்றவன், தன் தாயிடம் சென்று, அவர் தோளில் கை வைத்து, அண்ண னை பார்க்கும்படி, கண்களால் சொன்னான்.

 மீனாட்சி, சக்தியை அப்போது தான், கவனித்தார். அவன் தவிப்ப தை உணர்ந்தவர் ,ஜீவிமா அழுதது போதும், கண்ணை தொட,பாவம் ரொம்ப தூரத்தில் இருந்து, வந்தி ருக்காங்க. கொஞ்சம், ரெஸ்ட் எடுக்கட்டும்.

 

 ஜூஸ், காபி, ஸ்னாக்ஸ்,சாப்பிட்டு, பிறகு பேசு. இங்க வாம்மா,வந்து உட்காரு என்றார்.

 

ஜீவியும், அவர் சொல்லை தட்டாம ல் அவரிடம், வந்து அமர்ந்தாள். 

 

அவ்வளவு தான்,சக்தி, ஓடிவந்து… அவள், அருகில் நெருக்கமாக…., அமர்ந்துக்கொண்டான். அவன் செயலில், மீனாட்சி சிரித்துக் கொண்டார் தலையாட்டி,

    அஜய்யும், மதியும், கூட சிரித்துக் கொண்டனர்.

 மீனாட்சி, சம்மந்தி.. அப்புறம், எல்லாரும்  மன்னிக்கணும். என் புள்ள உங்க, பொண்ணு கழுத்துல தாலி…., கட்டிட்டான். ஜீவிகாவ, ரொம்ப பிடிச்சு… போய் விட்டுக் கொடுக்க முடியாமல், தவறு பண்ணிட்டான்.

   எப்பவும், எந்த விஷயத்தையும், நிதானமா.. பண்றவன்,ஜீவி விஷயத்தில் அப்படி பண்ணாம, அவசரமா முடிவெடுத்து, இப்படி பண்ணிட்டான். இதனால நீங்க, வருத்தப்பட வேண்டாம்.

   ஜிவி,இப்ப எங்க வீட்டு மருமக.. அதுவும் மூத்த மருமக, அவள நல்லபடியா..பாத்துக்க வேண்டிய து, எங்க கடமை. நீங்க எப்ப… வேணாலும் ஜீவியை பார்க்க வரலாம், இதுவும் உங்க வீடு தான் என்றார்.

 

 ஜீவிகா அம்மா,என் பொண்ணு நல்லா இருந்தா..எனக்கு அதுவே, போதும் சம்மந்தி.இப்பஎனக்கு எந்த,வருத்தமும் இல்ல….,ரொம்ப  பயந்துட்டே வந்தோம் சம்மந்தி, உங்கள எல்லாம் பார்த்தது ரொம்ப சந்தோஷம்.இப்ப நான் ரொம்ப நிம்மதியா.. ஊருக்கு, போவேன்  என்றார்.

  மீனாட்சி, சிரித்தவர்,சக்தி என் முதல் பையன். இரண்டாவது, அஜய் ஜவுளி கடை வச்சிருக்கான். மூணாவது மதுமதி, காலேஜ்… செக்கண்டியர் படிக்கிறா. அவங்க, தவறிட்டாங்க.பஞ்சுமில்,அரிசிமில்தோட்டம்,துரவுனு,எல்லா வசதியும் இருக்கு. எல்லாத்தையும்,என் ஆம் பள ,பிள்ளைங்க தான், பாத்துக்கு றாங்க…அதனால நீங்க?கவலைப் பட வேண்டாம். என் பையன், எந்த அளவுக்கு, முக்கியமோ!?..அதே… அளவுக்கு, என் மருமகளும் எனக்கு முக்கியம்?

  அப்புறம்,இது இரண்டாவது, மருமக லல்லி.கர்ப்பமா,இருக்கா என்றார். லல்லியும்,அவர்களைப் பார்த்து வணக்கம்,வைத்தாள்.

சிறிதுநேரம், பேசிக் கொண்டிருந்த வர்கள்,அப்ப நாங்க கிளம்புறோம். சம்பந்தி என்றார்கள்.

மீனாட்சி, சாப்பிட்டு போங்க… என்றார்.

அவர்கள்,சம்பந்தி.. இருக்கட்டும்,  தம்பி தனியா வீட்டுல இருக்கான். கண்டிப்பா இன்னொரு நாள், வந்து விருந்தே சாப்பிடுறோம் என்று கிளம்பினர்.

கிளம்பும்போது, அவள் நண்பர் கள்,ஆயிரம் பத்திரம் சொன்னவர் கள், அவளை… கட்டிப்பிடித்து, அழுது, அவர்கள் காரில் ஏறும் போது, ஜீவிதாவை இழுத்து  தன் பக்கமாக அணைத்தப்படி,நிற்க வைத்துக் கொண்டான் சக்தி.

  அதைக் கண்ட சந்தியா, சிரித்த படி,அர்ஜு,நித்தி, அவர் ஜிவிய, விடவே,மாட்டிக்கிறார்டா.அவளை எப்படி? இறுக்கி,பிடிச்சிட்டு, இருக் காரு பாரு? அவ்வளவு காதல்… அவமேல என்றாள்.

  அர்ஜுன் அவ,இப்படியே?? நல்லா இருந்தா, போதும்டி என்றான்.நித்தி பேபி பாய்டி ஹேப்பியா இரு “மிஸ் யூ” என்றவன், காரில் ஏறி புறப்பட் டான்.

 அதன்பிறகு,அஜயும் ,சக்தியும்       இருவரும், கடைக்கும்,மில்லுக்கும் புறப்பட்டனர்.

 

அப்படியே, ஒருமாதம் சென்று இருந்தது. இருவருக்குள்ளும், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

  அன்று வெள்ளிக்கிழமை, மீனாட்சி ஜீவியை, அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு வந்தார். சாமியை கும்பிட்டவர்கள்,  சிறிது நேரம், அமர்ந்திருந்தனர்.

 அப்போது ,அங்கே வந்த, வயதான பெண்மணி, என்ன மீனாட்சி? உன் புள்ள, சக்திக்கு. கல்யாணம்…. பண்ணிட்டியாம்?அதுவும் யாருக் கும்.. சொல்லாம…? சென்னை பொண்ணாம்ல..கட்டி இருக்கியாம் என்றார் .

 

  மீனாட்சி, உள்ளே போன குரலில், ஆமா, அத்தாச்சி..சென்னை புள்ள தான், சக்தி ஆசைப்பட்டு, கட்டிக் கிட்டு, வந்துட்டான் என்றார்.

  அவர், ஜீவிகாவை பார்த்தவர், பொண்ணு சின்னவளா?இருக்கா ளே?வயசு வித்தியாசம், ஜாஸ்தியா இருக்கும் போலவே?.. மீனாட்சி. ஏதாச்சும்….மிரட்டி கல்யாணம் பண்ணியலோ!?…என்றார் நக்கலாய்…

மீனாட்சி, பதட்டமாய்..அப்படி  யெல்லாம், ஒன்னும் இல்ல?…. அத்தாச்சி..ஜிவி,வாமா போலாம் என்றார்.

   உடனே அவர், என்னடி?! ஓடுற.. விஷயம்… உன், மருமகளுக்கு தெரிஞ்சிட…, போகுதுன்னு, ஓடுறி யோ!?.. என்றார்,எகத்தாளமாய்,..

 

அவர் அப்படி.. கேட்டதும் மீனாட்சி க்கு. கண்களில் கண்ணீரே…. வந்துவிட்டது.
  

தொடரும்….

   

  
  

4 thoughts on “முகவரிகள் தவறியதால் 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top