அத்தியாயம் 23
ஜீவிகா,அத்தை..அழாதீங்க? ஏன்? அப்படி பேசிட்டு போறாங்க? அவருக்கு என்ன ஆச்சு?.சொல்லு ங்க. அத்தை என்றாள் பதட்டமாய்,
மீனாட்சி,கண்களை துடைத்தவர் சொல்றேன்மா..,சக்தி,அப்ப காலே ஜ், மூணாவது வருஷம், படிச்சிட்டு இருந்தான். அப்போ… அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு.
பக்கவாதம்வந்து,படுத்த படுக்கை யா, ஆகிட்டாரு…
மில்லு,ஜவுளிக்கடை, எல்லாம் கடன்ல போக ஆரம்பிச்சிடுச்சு!.. ரொம்ப, திணற ஆரம்பிச்சுட்டோம். அவருக்கும்,செலவு,பண்ணிக்கிட்டு வீட்டையும் பார்த்துகிட்டு, எதையும்,எங்களால நடத்த முடியல.
கடைசியா!? வீட்ட அடமானம் வைத்து தான், கொஞ்சம் கடன் அடைச்சோம். கடையில, வேற நிறைய திருட்டு, பொய் கணக்குனு நிறைய தவறு, வேற நடந்தது, பிள்ளைங்க, சின்னவங்களா…. இருக்கவே…நிறைய ஏமாத்திட்டா ங்க?!
அப்பதான், சக்தி என்கிட்ட, பேசினான். அம்மா… ஏன்மா..? கலங்குறீங்க? நான் இருக்கேமா… என்றவன், கடைக்கு… போக ஆரம்பிச்சான் போலியான முகத்தை கண்டுபிடித்து, நண்பர் களோட உதவியுடன், நையப் புடைந்தான்.
வியாபாரத்திலும்,மில்லு வேலையி லும் இறங்கினான். இராப்பகலா… உழைச்சான்ம்மா.. என் புள்ள.
காலேஜ், போயிட்டு இருந்தவன், படிப்பை விட்டுட்டு,தொழில்ல இறங்கிட்டான்.தம்பி, தங்கச்சியை, படிக்க வச்சான். அப்பவே, சக்தி அய்யனார்!..கணக்கா இருப்பான். அவன் சந்தோஷத்தை, எங்களுக் காக, ஒதுக்கிட்டு, ஓட ஆரம்பிச்சா ன். நாலு வருஷம் ஆச்சு, எல்லாத் தையும் மீட்டு எடுக்க, நடுவுல அவங்க அப்பா இறந்துட்டார்.
குடும்பம் மொத்தமும், அவர் இறந்ததில், உடைஞ்சு போயிட்டோ ம். எல்லாரையும் தேத்தி,எடுத்துட்டு வந்தது..என் பெரிய பையன் தான்….
அஜ்ஜையும்,காலேஜ்,முடிஞ்சதும், கடையை பாத்துக்குவான். அப்ப தான் சக்திக்கு, ஒரு பொண்ணு பார்த்தோம்.
என் வீட்டுக்காரர், பங்காளி வீட்டு பக்கம் பொண்ணு. பார்த்து பேசி எல்லாம், முடிவு பண்ணிட்டோம்.
ஊர் கூடி, நிச்சயதார்த்தம், பண்றப்ப… பொண்ணு, எனக்கு மாப்பிள்ளையை…,பிடிக்கல? எனக்கு இதுல.. இஷ்டம் இல்லனு, என்று எழுதி, வைத்துவிட்டு ஓடிப் போயிடுச்சு.
என்ன?ஏதுன்னு?விசாரிக்கறது க்குள்ள, ஊரு முழுசும்,விஷயம் பரவி,தம்பியை வேறமாதிரி, பேச,ஆரம்பிச்சிட்டாங்கமா. தம்பி, ஒரு மாதிரி ஆகிட்டான். என்னால தானேனு…., நிறைய தடவை, வருத்தப்பட்டு இருக்கேன் ஜீவிமா
ஜீவி,ஏன்? ஓடிப்போனாங்களாம்? கண்டுபிடிச்சீங்களா? என கேட்டாள்.
மீனாட்சி,ரெண்டு நாள்லயே, விஷயம் என்னன்னு தெரிஞ்சிரு ச்சி.. இப்ப பேசினாங்க இல்ல.. அத்தாச்சி.. அவங்க பையன் தான், இத பண்ணி இருக்கான்.
அவங்க,அப்பாக்கு அப்புறம், என் குடும்பம், தலை தூக்காதுன்னு, நினைச்சவங்க, என்புள்ள, எல்லா த்தையும் தூக்கி நிறுத்திட்டான்ல, அதனால,விரோதம் வளர்த்துக்கி ட்டு, பொண்ணு வீட்ல..ஏதேதோ?? பேசி மிரட்டி.. நிச்சயதார்த்தத்தை நிறுத்திட்டான்.அந்த படுபாவி….
அவன், தொழில்ல,சுத்தம் கிடை யாது. பித்தலாட்டம், கலப்படம், தரம்,இல்லாத,பொருளைவித்தான் மக்கள் கண்டுபிடித்து, நம்ம கடை பக்கம், வர ஆரம்பிச்சாங்க….
அந்தக் கோபத்தில், பொண்ணு வீட்ல ஏதேதோ? பேசி பயமுறுத்தி, என் புள்ள வாழ்க்கைய கெடுத்து ட்டான்.
இப்ப கூட, இந்த அத்தாச்சி அப்படி பேசினது,என்பிள்ளைக்கு தெரிஞ்சா?அவ்வளவுதான்… அதுக்கப்புறம், என் புள்ள நிறைய ஓட, ஆரம்பிச்சான்.எவ்ளோ….. பொண்ணு பார்த்தேன், எல்லாத் தையும் தட்டி கழிச்சுட்டான்.
எங்களுக்காகவே…, இத்தனை வருஷம் வாழ்ந்திட்டான். இப்ப தான்,அவனுக்குனு,ஒருவாழ்க்கையை, தேடி கண்டுபிடிச்சி இருக்கா ன், உன் மூலமா. அவன,சந்தோஷமா..வச்சுக்கிறது, உன் கையில தான், இருக்கு ஜீவிமா…
சக்திக்கு, உன்ன, ரொம்ப… புடிச்சிருக்குன்னு.. நினைக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு,என் புள்ள முகத்துல, சந்தோஷத்தை பாக்கு றேன். என் புள்ளைய மன்னிச்சி டுமா?!.. என்றார் கைகூப்பி….
அவர் செயலில்,அதிர்ந்த ஜீவிகா, அத்தை?! என்ன பண்றீங்க?… பெரியவங்க நீங்க போய்,என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு…
உங்க பிள்ளைய, பத்தின கவலை இனி உங்களுக்கு வேணாம், அவர் இனி சந்தோஷமா… இருப்பார். அதுக்கு நான் கேரன்டி சரியா? அத்தை… நீங்க கலங்காதீங்க…
மீனாட்சி,இது போதுமா, எனக்கு. வா வீட்டுக்கு போலாம்.அவன் கிட்ட, எதுவும் சொல்ல வேணாம், என்று அழைத்து சென்று விட்டார்.
அன்று நல்ல மழை, இரவும் மழை தொடர்ந்தது. அனைவரும் சாப்பிட்டு உறங்க சென்றனர். ஜீவிகா,முதலில் மேலே, சென்று விட்டால் குளிப்பதற்கு, சக்தி, கிழே அமர்ந்திருந்தான்.போன் பேசியபடி,
திடீரென, கரண்ட், கட் ஆகி விட்டது . அதே நேரம், மேலே சக்தி அறையில், “ஆ”… என சத்தம் கேட்டது. சக்தி, பயந்துவிட்டான் அந்த சத்தத்தில், ஜீவி… ஜீவிகா… ஏன்? கத்துறா? இவ! என்றவன் மொபைலில் டார்ச் அடித்தபடி, மேலே ஓடினான்.
அதற்குள், மேலே சத்தம் கேட்டு, அனைவரும் ஓடி வந்தனர். ஜீவிகா,பயத்தில் ம்மா…ஆ பயமா இருக்கு, “ப்ளீஸ்” யாராச்சும்…. வாங்களேன்!?.. என காதை பொத்திக் கொண்டு அழுதாள்.
சக்தி ஓடிப்போய், அவளை அணைத்துக்கொண்டான். அம்மு.. என்னடி ஆச்சு?! சொல்லுடி!?…. சொல்லுமா.. என்றான் பதட்டமாய், ஆனால், அவள் பயமா… இருக்கு? நித்தி.. அர்ஜுன்.. வலிக்குது? அம்மா…ஆ என அலறினாள்.
சந்து.., வெளியே சத்தம், கேக்குதுடி பயமா இருக்கு.. என மேல் மூச்சு வாங்கினாள். காதைமூடிக் கொண்டு,
சக்திக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை,அவளை கட்டிக் கொண்டு கதறி விட்டான். சாரி டி… என்னை மன்னிச்சிடுடி, அம்மு.. உன்னை…. தனியா, விட்டுட்டு, வந்திருக்கக் கூடாது? தப்பு…. பண்ணிட்டேன் டி.. தப்பு…… பண்ணிட்டேன். என்று தலையில், அடித்துக் கொண்டு அழுதான்.
அவள் உடல்,வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது.உடலை குறுக்கி அமர்ந்திருந்தாள்.
சக்தி, அம்மு? என்னை பாருடி?ஒன்னும்,இல்லடி.நான்இருக்கேன்டி, உன் கூட, யாரும்…..உன்னை, நெருங்க முடியாது என இன்னும், இறுக அணைத்து கொண்டான்.
சிறிது நேரத்தில்,கரண்ட் வந்து விட்டது.
மது, அவள் செயலில், அழுது விட்டாள். அம்மா…, அண்ணி பாவம்மா, ஏதாச்சும் பண்ணுங்க அம்மா.. என்றாள்.
மீனாட்சி, அஜய், நீ டாக்டர் வர சொல்லுப்பா..சக்தி, நீ அவளை தூக்கி, படுக்கையில் படுக்க வை பா என்றார் .
சக்தி, அம்மா..! டாக்டர் வந்ததும், கதவை தட்டுங்கம்மா. கொஞ்சம், நான்… அவ கூட இருக்கேன் என்றான், குரல் கமற.
மீனாட்சி, சரிப்பா.. மதுமாவா? போலாம் என்றவர், சென்று விட்டார்.
சக்தி,கட்டிலில் அவளை, அணை த்துக்கொண்டு படுத்துக் கொண் டான். அவளுக்கும்,அந்த அணை ப்பு தேவைப்பட்டது. அவன் அவளை மென்மையாக, தடவிக் கொடுத்தான். சிறிது நேரத்தில், நடுக்கம் குறைந்து, அவள் உறங்கி இருந்தாள்.
டாக்டர் வந்து,பரிசோதித்தார். மேலோட்டமாக, நடந்ததை…. கூறினான்.டாக்டர், தனிமையிலே யே, இருந்ததால, ரொம்ப…பயந்து போய், இருக்காங்க? கொஞ்ச நாள்ல, அதுவே…. சரி ஆயிடும். பாசிட்டிவா.. பேசுங்க,கொஞ்ச நாளைக்கு, தனியா விட வேண்டா ம் என்றார்.
சக்தி, உறங்கும் அவளையே, பார்த்து இருந்தான்,ஒரு முடிவுடன்.
காலை உறக்கம், கலைந்து எழுந்திருந்தாள். ஜீவிகா, பக்கத் தில் சக்தி இல்லை, ஆனால் கடிதம், ஒன்று இருந்தது.
அதில், ஜீவிமா..,அம்மு.., என்னை மன்னிச்சிடு!என்னால, உனக்கு ரொம்ப கஷ்டம். நேத்து உன்ன, அந்த நிலைமைல பார்த்ததும்,என் உயிர் என்கிட்ட இல்லடி? நான் ரொம்ப கெட்டவன் ஜீவிமா? நான் உனக்கு வேண்டாம் அம்மு.. (அதில் கண்ணீர் துளி பட்டு தெறித்து இருந்தது)
நீ நல்லபடியா? புது வாழ்க்கைய அமைச்சிக்கோ டி… என்னோட ஆசைக்காக,உன்னை பலிக்காடா? ஆகிட்டேன். இனி உன் முன்னாடி வரமாட்டேன்டி.நீ நல்லா இருக்க ணும், “ஐ லவ் யூ” டி!! என்று வார்த்தைக்கு… வார்த்தை ‘டி’ போட்டு உரிமையாய் அழைத்து இருந்தான்.
ஜீவிகா, அந்த கடிதத்தை…, படித்தவள் சிரித்துக்கொண்டாள், உங்களுக்கு இருக்கு, நேர்ல மாட்டும் போது, என்று சொல்லிக் கொண்டாள்.
இடைப்பட்ட நாட்களில்,அவனின் ஆசை பார்வையும், தனக்காக துடித்ததையும், தனக்கென ஒவ்வொன்றையும், பார்த்து பார்த்து செய்வதையும், நினைத்து, பார்த்தவளின்… நெஞ்சத்தில், சிறிதளவு நேசம், அவனுக்காக, துளிர் விட ஆரம்பித்து இருந்தது. மீனாட்சியை, தேடி போனாள்.
ஜீவிகா, அத்தை அவர் எங்கே? என்றாள்.
மீனாட்சி, அது வந்து..மா, அவன் வேலை… விஷயமா? வெளியூர் போயிருக்கான். இரண்டு நாள்ல, வந்துடுவான். நீ, தூங்கிட்டு….. இருந்ததால, உன்ன தொந்தரவு பண்ண வேண்டாம்னு, என்கிட்ட, சொல்லிட்டு போனான். உனக்கு, இப்ப எப்படி இருக்கு,உடம்பு என்றார்.
ஜீவி,”ஓ” அப்படியா?… அத்தை, அவர், போன் நம்பர் வேணுமே..?தர்றீங்களா?… என்றாள்.
மீனாட்சி,ஜீவிமா.. சக்தி,வெளியூர் போகும் போது, போன் கொண்டு, போக மாட்டான்.என்கிட்ட தான் இருக்கு. வந்ததும் பேசிக்கடா… என்றார்.
அவர், அப்படி சொன்னதும், ஜீவிகா, மனதில் சிரித்தவள், அப்படியா? அத்தை சரி, என்று விட்டு,சமையலறை சென்றாள். இரண்டு நாட்கள், சக்தி வீட்டுக்கு வரவில்லை.
மீனாட்சி அறையில், ஜீவிகா தங்கி கொண்டாள். மூன்றாவது நாள், காலை அத்தை, அவர் எப்ப வருவார், என்றாள்.
மீனாட்சி, அது.. தெரியலம்மா?… வேலை முடியல போல, அதான் இன்னும் வரலை,என்றார் தயக்க மாய், அவள் முகம் பார்க்காமல்….
ஜீவிகா, அத்தை… உங்களுக்கு நடிக்க வரல, இப்ப அவர், எங்க இருக்காருன்னு…. சொல்ல…., போறீங்களா? இல்ல, நானே தேடி போகட்டுமா? என்றால் இடுப்பில் கை வைத்து.
அதில் சிரித்த மீனாட்சி , அடி சேட்டை பிடிச்சவளே! அவன், ரைஸ் மில்லுல தான் இருக்கான். வெளியூர்லாம்,போகல.. அன்னை க்கு நைட், உன்ன அப்படி பார்த்து ட்டு, அழுதுட்டான். அதான் ஐயா, போய் அரிசி மில்லுல… தங்கி இருக்கார், உன்னை பார்க்காமல் என்றார்.
தொடரும்….
wow super sis next epi
Semma sis
Next episode pota innum semmaya irukum
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌