ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 6

மான்வியின் முகூர்த்தப்புடவையை கையிலெடுத்து நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டான். இருவரது உடைகளும் ஒரே கபோர்ட்டில்தான் அடுக்கி வைத்திருந்தனர். திருமணமான அடுத்த நாள் அவளது உடைகளை தனி கப்போர்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.

“ஏய் மானு டார்லு என்னடி பண்ணுற?” என்று கிறக்கமான குரலுடன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான் மயூரன்.

“ஒரு வாரம் காலேஜ்க்கு லீவு போட்டாச்சு மயூ! நாளைக்கு காலேஜ்ல ஜாயின் பண்ணனும். எங்க செகரட்டரி லீவு கொடுப்பதில ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் தெரியுமா! ஒரு நாள் எக்ஸ்ட்ரா லீவு எடுத்தாலும் எல்.ஓ.பி பிடிக்க சொல்லிடுவாரு அதான் என்னோட ட்ரஸ் எல்லாம் கபோர்ட்ல அடுக்கி வைச்சிட்டு இருக்கேன்” என்றாள் மலைப்பாக கண்ணை உருட்டி.

“அப்படியா உங்க செகரட்டரி ரொம்ப கெடுபிடியான ஆள்தானோ! அவன் கிட்ட எதுக்கு நீ வேலை பார்க்குற?” என்றபடியே துணிகளை அடுக்கி வைத்திருந்தவளை அலேக்காக தூக்கி மெத்தையில் போட்டு அவளது மேல் பாரம் போடாமல் படர்ந்து அவளது இதழ் ரேகையை விரலால் ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இது பகல் மயூ யாராவது வந்துட போறாங்க! டோர் கூட லாக் பண்ணலை! அதுவும் நேத்து நைட் முழுக்க என்னை தூங்க விடல நீங்க! இப்போ மறுபடியுமா ஆரம்பிக்குறீங்க!” என்று கண்ணைச்சுழட்டியவளின் இதழை ஆக்டோபஸாக தன் இதழ் கொண்டு அணைத்துக்கொண்டான மயூரன். ஆற்றில் புதுவெள்ளம் பாய்ந்து வருவது போல அவனது கைகள் அவளது பூந்தேகத்தில் சகட்டு மேனிக்கு மேய்ந்துக் கொண்டிருந்தது. 

சட்டென்று கதவு திறக்கும் ஓசையில் இருவரும் பிரிந்து உட்கார்ந்தனர். 

“அ.அத்தை மான்வியை கூட்டிட்டு வரச்சொன்னாங்க அதான் வந்துட்டேன் சாரி சாரி மாமா” என்ற யாழினியோ அந்த கணமே அந்த இடத்தை விட்டுச் சென்றிருந்தாள்.

“அச்சோ நான் தான் கதவு திறந்திருக்குனு சொன்னேன்ல மயூ! யாழினி பார்த்துட்டா அவ நம்மை பத்தி என்ன நினைப்பா” என்று செல்லமாய் மயூரனை முறைத்தாள் மான்வி.

“கிஸ் பண்ணினதை பார்த்துட்டா அவ்ளோதானே! அவ ஒண்ணும் தப்பா நினைச்சிருக்கமாட்டா நீ ரொம்ப வாசமா இருக்க வாடி” என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் நண்டுபிடி போட்டு.

“அச்சோ இப்படி கட்டிப்பிடிச்சா என்னோட எலும்பு நொறுங்கிபோய்டும்” என்று அவனது பிடியில் வலையில் சிக்கிக் கொண்ட மீனாய் துள்ளினாள்.

“டீப் கிஸ் பண்ணிட்டு விட்டிருவேன்! ரொம்ப துள்ளினா அப்புறம் மொத்தமா எல்லாம் முடிச்சிட்ட அப்புறம் தான் கீழே உன்னை அனுப்புவேன் எப்படி வசதி” என்று புருவம் உயர்த்தியவனை கண்டு அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

“ஆஆ விடுங்க மயூ” என்று சிணுங்கியவளை ஆலிங்கனம் செய்ய ஆரம்பித்தான். 

“மயூ கூசுது விடுங்க” என்ற மான்வியின் கொஞ்சல் மொழிகள் எல்லாம் காற்றில் கரைந்து போனது.

“மாமா” என்ற யாழினியின் குரலில் சட்டென புடவையை அவனது ஆடைகளுக்கு நடுவே வைத்து விட்டு துண்டை எடுத்து மேல போட்டுக்கொண்டு யாழினியை பார்த்தான்.

“மாமா அத்தை பூஜைக்கு வரச்சொன்னாங்க!” என்றாள் நிலத்தில் பார்வையை பதித்து அவன் வெற்று மேனியாக நிற்பான் என்று யாழினி எதிர்பார்க்கவில்லை.

“வரேன்மா” என்றவனோ அவள் தலைகுனிந்து நின்றிருந்ததை கண்டு கபோர்ட்டிலிருந்து அவசரமாக சட்டையை எடுத்து போட்டுக்கொண்டான் மயூரன்.

“மாமா நீங்க இன்னும் மான்வியை மறக்கலதானே?” என்று மயூரனை பார்த்தவளின் கண்ணில் நீர் கோர்த்திருந்தது.

“மான்வி என் மனசுக்குள்ள இப்போ இல்ல! உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு அம்மாவுக்கும் உனக்கு வாக்கு கொடுத்திருக்கேன்! நான் சொன்ன சொல் என்னைக்கும் மாறாது! நீ கிளம்பு” என்றிருந்தான்.

யாழினியின் உதடுகள் சந்தோசத்தில் மிளிர அங்கிருந்து பூஜை நடக்கும் இடத்திற்குச் சென்றாள். 

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பூஜை பண்ணிடலாம் மயூரா” என்றதும் கருணாகரன் அங்கே இல்லாமல் இருப்பதை கண்ட மயூரனோ “கதிர் அப்பாவை பூஜைக்கு வரச்சொல்லு” என்று படையலில் வைத்திருந்த தேங்காயை உடைத்து வைத்தான்.

“உங்கப்பா தாத்தாவை பார்க்க போயிருக்காரு! காணாம போயிருந்த அவரோட இரத்த சொந்தம் இப்போ வந்திருக்குல்ல அவங்களை பார்க்க கிளப்பிட்டாரு! ம்ம் நம்ம வீட்டுக்கு தினமும் வருவாரோ என்னவோ சந்தேகம்தான் நீ பூஜையை பண்ணுபா” என்றார்  விட்டேத்தியானா பேச்சில்.

“ஓ மருமகளை தேடிப்போயாச்சா! பெத்த மகனை விட பொண்டாட்டியை கொலை பண்ண பார்த்த கொலைகாரியை தேடிப்போயிருக்காரா!” என்று அவனது கண்கள் அக்னிப்பிளம்பாய் மாறியது.

கதிரோ ‘நீங்க பூஜையை சீக்கிரம் முடிச்சா நானும் அண்ணியை பார்க்க கிளம்பிடுவேன்’ என்று சொல்ல துடித்த நாவை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான்.

பூஜை முடிந்ததும் “ம்மா நான் என் ப்ரண்ட் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான் கதிர்.

“நீ அந்த கேடுகெட்டவளை பார்க்க போறியாக்கும்! அந்த வீட்டு பக்கம் காலை எடுத்து வச்ச உனக்கு கால் இருக்காது பார்த்துக்கோ” என்று மகனை விரல் நீட்டி எச்சரித்தார் சந்திரமதி.

கதிர் சந்திரமதியின் பேச்சுக்கு பயப்படுவானா என்ன? “ம்மா நான் அண்ணியை பார்க்க போகல தாத்தாவை பார்க்க போறேன்” என்று கிளம்பியவனை “சாப்பிட்டு போ கதிர்” என்ற மயூரனை பார்த்தவன் “அண்ணா ஒருநாள் நான் நல்ல சாப்பாடு சாப்பிடறேன் வள்ளியக்கா சாப்பாடு போர் அடிச்சிருச்சு” என்று மயூரனையும் சமாளித்துச் சென்றான் கதிர்.

மயூரனுக்கு பிடித்த பூரியும் பொங்கலும் இலையில் பரிமாறினாள் யாழினி.

பெயருக்கு சாப்பிட்டவன் “போதும்” என்று கைகாட்டி எழுந்து விட்டான் மயூரன்.

மயூரன் அவனது அறைக்குச் செல்ல மாடி படியில் காலை வைத்தான்.

“மயூரன் உன்கிட்ட பேசணும்பா இப்படி வந்து உட்காரு” என்று சோபாவை காண்பித்தார் சந்திரமதி.

“நீ மான்வியை உன் மனசுல இருந்து தூக்கியெறிஞ்சிட்டனு எனக்கு தெரியும்பா! இருந்தாலும் நாம முறையா அவக்கிட்ட விவாகரத்து வாங்கணும்! நாள பின்ன உன்னோட வாழ்க்கையில அந்த சிறுக்கி குறுக்க வந்து கட்டையை போட்டு உன் நிம்மதியை கெடுப்பா கண்ணு! நம்ம குடும்ப வக்கீல்கிட்ட சொல்லி விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்றார் வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல மயூரனை முளையை சலவை செய்தார் சந்திரமதி.

“அம்மா மான்வி என்னோட வாழ்க்கையில குறுக்கே வரமாட்டா அப்படி வந்தாலும் அவளை எப்படி வெளியே அனுப்பறதுனு எனக்கு தெரியும்! நீங்க நிச்சயத்திற்கான வேலைகளை மட்டும் கவனிங்க” என்றவனோ அவனது அறைக்குச் சென்றான்.

“இந்த விவகாரத்து பத்திரத்தில கையெழுத்து போடுடி” என்று பத்திரத்தை அவளை பார்க்காது நீட்டியிருந்தான்.

“நா.நான் கையெழுத்து போட மாட்டேன் மயூ நீங்க என்மேல இருக்க கோபத்துல இப்படியெல்லாம் பேசுறீங்க ஒரு நாள் எனக்கு டைம் தாங்க நா.நான் என்ன நடந்துச்சுனு உங்களுக்கு புரியவைக்குறேன்” என தவிப்பாய் பேசியவளின் வார்த்தைகளை காதில் கூட வாங்கிக்கொள்ளாதவன் “கையெழுத்து போட்டு கிளம்புனு உன்னை சொன்னதா ஞாபகம்” என்று அவன் அழுத்தமாய் கூறவும்

அவனது கையிலிருந்த பத்திரத்தை கைகள் நடுங்க வாங்கி கையெழுத்து போட்டுக்கொடுத்திருந்தாள்.

கபோர்டிலிருந்து விவாகரத்து பத்திரத்தில் அவளது கையெழுத்தை பார்த்தான். 

“ஐ லவ் யு மயூ” என்றுதான் கையெழுத்து போட்டிருந்தாள். அன்று அவள் மேல் இருக்கும் கோபத்தில் அவள் கையெழுத்து போட்டிருந்த பத்திரத்தை கவனிக்காமல் அப்படியே கபோர்ட்டில் கொண்டு வந்து வைத்திருந்தான் மயூரன்.

“திமிரு புடிச்சவ ஐ லவ் யு வாம்… ஐ ஹேட் யூ டி” என்று பத்திரத்தை கிழித்துப்போட்டு ஹாலுக்கு வந்தவன் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்த சந்திரமதியிடம் “ம்மா வெளியே போயிட்டு வந்துடறேன்” என்று கார் கீயை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

சந்திரமதியோ “மயூரன் வக்கீலை பார்க்க போவான்னு நினைக்குறேன் யாழுமா! அந்த வெள்ளை கழுதையை என் மகன் வாழ்க்கையிலிருந்து முழுமையா தலை முழுகணும்! மயூரனை பிடிச்ச பீடை ஒழியட்டும்” என்று மான்வியை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார்.

“பிரசாத் எனக்கு அவசரமா டிவோர்ஸ் வேணும்!” 

“என்னடா குழந்தை சாக்லேட் வேணும்னு கேட்கறது போல டிவோர்ஸ் கேட்கற. டிவோர்ஸ் என்ன கடையில விக்கிற கடலை மிட்டாயா! உடனே கிடைக்கிறதுக்கு” என்று அவன் எகிறி விழவும்

“எனக்கு அதெல்லாம் தெரியாது நீ ஊருக்குள்ள பெரிய லாயர்னு பேரு உனக்கு இருக்குல்ல! எனக்கு மான்வி கிட்டயிருந்து டிவோர்ஸ் வேணும். மான்விகிட்ட கையெழுத்து வாங்கிட்டு வரேன் டிவோர்ஸ் பாண்டு எனக்கு கொடு!” என்றான் இறுக்கமான குரலில்.

“நீதான் மான்விகிட்ட டிவோர்ஸ் பாண்டில் கையெழுத்து வாங்கிட்டுதானே அவளை துரத்தி விட்ட” என்று எரிச்சலாய் பேசினான் பிரசாத்.

“ஆமா அந்த இடியட் ஐ லவ் யூ மயூனு கையெழுத்து போட்டு பத்திரத்தை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கா! அவ நான் யாழினியை கல்யாணம் பண்ணிக்க போறேனு தெரிஞ்சு என்னோட நிம்மதியை கெடுக்கணும்னு பக்கா பிளான் போட்டு வந்திருக்கா!” என்று பற்களை கடித்தான் மயூரன்.

“போடா ஃபூல் மான்வி நல்ல பொண்ணு அவளை நீ தவறா புரிஞ்சி வச்சிருக்க இன்னிக்கு காலையில மான்வி எனக்கு மயூரன்கிட்ட டிவோர்ஸ் வாங்கிக்கொடுங்கனு போன் பண்ணியிருந்தா நீ என்ன மான்வியை டிவோர்ஸ் பண்ணுறது மான்வியே உனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைப்பா அதுவும் என் மூலமா” என்றான் ஏளனச்சிரிப்பில்.

“நீயெல்லாம் எனக்கு ப்ரண்டாடா… அவளுக்கு சப்போர்ட்டா பேசுற என் நிலமையில நீ இருந்து நின்னு பாரு என்னோட வேதனை புரியும் அவ என்னோட நெஞ்சில குத்திட்டாடா” என்று அவனது நெஞ்சில் குத்திக்கொண்டான்.

“பைத்தியக்காரன் போல பிஹேவ் பண்ணாதே மயூரா. கோபத்துல எடுக்கற முடிவு எல்லாம் அதல பாதாளத்துல கொண்டு போய் விட்டிரும்! என்று நண்பனை எச்சரித்தான் பிரசாத்.

பிரசாத் பேசுவதை கொஞ்சம் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் “அவளா எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப முன்னே நான் அவளுக்கு அனுப்புறேன்டா நீ எனக்கு டிவோர்ஸ் டாக்குமெண்ட்ஸ் கொடு” என்று கையை நீட்டினான்.

“பட்டுத்தான் நீ திருந்தவனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது மயூரா” என்று சலித்துக்கொண்டு டிவோர்ஸ் பாண்டை மயூரனின் கையில் வைத்தான் வெறுப்பான முகத்துடன்.

“தேங்க்ஸ்டா நண்பா” என்று பத்திரத்துடன் மான்வியை பார்க்க கிளம்பினான்.

அவனது மனசாட்சியோ ‘டேய் உன் மானுவை ஒருநாள் பார்க்காம உன்னால இருக்க முடியலை போல!’ என்று இகழ்ச்சி செய்து சிரித்தது.

‘டிவோர்ஸ் பத்திரத்தில கையெழுத்து வாங்கப்போறேன் அவளை விட்டு நிரந்தரமாக பிரியறதுக்கு’ என்று மனசாட்சியை எதிர்த்து பேசிக்கொண்டே அருணாச்சலத்தின் பங்களாவிற்குள் காரை விட்டான்.

தோட்டத்தில் பொங்கலை வைத்து சாமி கும்பிட்டு முடித்து குழந்தைகளுக்கு பொங்கலை ஊட்டிக்கொண்டிருந்தாள்.

தன்னவனின் கார் சத்தம் அவள் காதில் கேட்கவும் “மயூ வந்திருக்காரா!” என்று அதிர்ந்தவள் தோட்டத்திலிருந்து புடவையை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓடி வந்து போர்ட்டிக்கோவை எட்டி பார்த்தாள். மயூரன் கார் கதவை திறந்து கைகாப்பை ஏத்திவிட்டுக்கொண்டு திமிர்நடையுடன் வேக எட்டு வைத்து வந்துக் கொண்டிருந்தான்.

அருணாச்சலமோ கருணாகரனிடம் பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகளின் கைகளை அங்கிருந்த பைப்பில் கழுவிவிட்டு “நேகா, நேத்ரா வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என்று அவசரமாக பின் வழியாக வீட்டுக்குள் வந்தவள் மயூரன் வீட்டுக்குள் நுழையும் வேளையில் தன் அறைக்குச் சென்று கதவை தாழிட்டு மெத்தையில் குழந்தைகளை அணைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். 

குழந்தைகளை மயூரன் பார்த்து விட்டால் அடுத்த கணம் குழந்தைகள் இருவரையும் அழைத்துச் சென்றுவிடுவானே என்று மனதில் திக்கு திக்கு என்றிருந்தது மான்விக்கு.

நேகாவோ “ம்மா தோட்டத்துல விளையாடலாம்னு இருந்தோம் ஏன் இப்படி எங்களை வேகமாக கூட்டிட்டு வந்தீங்க உங்க முகம் ஏன் இப்படி வியர்த்துக்கொட்டுது?” என்ற நேகாவோ மான்வியின் வியர்வை பூத்த முகத்தை மெத்தையில் போட்டிருந்த துண்டை எடுத்து துடைத்து விட்டது.

“அ.அது ஒண்ணுமில்லை அம்மாக்கு தலைவலிக்குதுடா அதான் உங்களை அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றாள் கண்ணைச்சிமிட்டி.

“தலைவலிக்குதா நான் தைலம் தேய்ச்சு விடறேன்” என்று மான்வியின் அணைப்பிலிருந்து விலகிய நேத்ரனை இறுக்கி அணைத்துக்கொண்டு “அம்மாக்கு நீ பக்கம் இருந்தாலே தலைவலி போய்டும் நேத்ரா நீ என் பக்கமே இரு” என்று குழந்தைகளின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். தாயின் பதட்டத்தில் குழந்தைகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 

“அம்மா நம்ம வீட்டுக்கு அப்பா வந்திருக்காரா! கார் சத்தம் கேட்டதும் நீங்க ஓடிப்போய் பார்த்துட்டு வந்து எங்க ரெண்டுபேரையும் அவசரமா அறைக்குள்ள கூட்டிட்டு வந்திட்டீங்க” என்றது நேகா அசராமல். இந்த காலத்து குழந்தைகள் பெரியவர்கள் என்ன நினைக்கிறோம் என்று கூட கணித்து விடும் அளவிற்கு புத்திசாலிகளாக இருக்கின்றனர்.

மான்வியோ “அப்பா உங்களை கூப்பிட்டா என்னை விட்டு போயிடுவீங்களா செல்லங்களா?” என்றவளின் குரலில் அப்பட்டமான வேதனை ததும்பிக்கிடந்தது.

“மாட்டோம்” என்று இரண்டும் சிண்டு ஆட தலையை இருபக்கமும் ஆட்டியது. “இவ்ளோ நாளா எங்களை பார்க்க வராத அப்பா இப்போ மட்டும் எதுக்கு வந்தாராம். ஒருநாள் கூட பேரண்ட்ஸ் மீட்டிங்கு வரலையேம்மா! நீங்க அழாதீங்க உங்களை விட்டு நாங்க போகமாட்டோம் இல்ல நேத்து” என்று அண்ணனை பார்த்து தலையை அசைத்து கேட்டது.

“ஆமா! ஆமா! நானும் அப்பா கூட போகமாட்டேன்” என்றான் நேத்ரன். 

இருகுழந்தைகளின் முகத்தில் முத்தத்தை மாறி மாறி கொடுத்தவள் “ஒருவேளை உங்க அப்பா உங்களை பார்க்க நேர்ந்து உங்ககிட்ட பேசினா பேசணும் பேசாம இருக்க கூடாது. அவர் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கணும் அவர்கிட்ட மரியாதையா பேசணும் சரியா” என்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது போல கற்பித்தாள்.

இரு குழந்தைகளும் தலையை ஆட்டவில்லை. மான்வியை முறைத்து பார்த்து “நான் அப்பா கூட பேசமாட்டேன்” என்று இதழை சுளித்தது நேகா.

“ஏய் கதவை திறடி” என்று மான்வியின் அறைக்கதவை உடைத்து விடும் அளவிற்கு தட்டிக்கொண்டிருந்தான் மயூரன்.

அருணாச்சலமும் கருணாகரனும் வீட்டுக்குள் வந்தவர்கள் “மயூரா உனக்கு இங்க என்ன வேலை அதுவும் மான்வியின் அறைக்கதவை தட்ட உனக்கு என்ன உரிமை இருக்கு?” என்றார்  அதட்டல் குரலுடன்.

அவனோ “உங்க பேத்தி கூட கொஞ்சி குலாவ நான் வரல தாத்தா டிவோர்ஸ் பாண்ட்ல கையெழுத்து வாங்க வந்திருக்கேன்” என்றான் எகத்தாளத்துடன்.

“மயூரா நீ உங்கம்மா பேச்சு கேட்டு ஆட்டம் போடாதே!” என்று மகனிடம் காய்ந்தார் கருணாகரன்.

“எனக்கு சுயமூளை இருக்குங்கப்பா யார் பேச்சும் கேட்டு நான் இங்க வரலை. ஏய் வெளியே வாடி” என்று கதவை காலால் எட்டி உதைத்தான்.

மயூரன் கையெழுத்து வாங்காமல் போகமாட்டான் என்று தெரிந்து கண்ணை மூடித்திறந்த மான்வியோ “நேத்ரா, நேகா ரெண்டு பேரும் அப்பா இங்கிருந்து கிளம்பும் வரை வெளியே வரக்கூடாது சரியா! ப்ராமிஸ்” என்று கையை நீட்டினாள் மெல்லிய புன்னகையுடன்.

“பிராமிஸா வரமாட்டோம் மா” என்று இரு குழந்தைகளும் மான்வியின் கையில் சத்தியம் செய்தனர்.

“குட்” என்று இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு கதவைத்திறந்து வெளியே வந்தவள் மறக்காமல் கதவை வெளியே தாழ் போட்டிருந்தாள்.

மாம்பல நிறத்தில் சாஃப்ட் சில்க் பட்டுப்புடவையில் முடியை கிளிப் போட்டு அடக்கி தலையில் சாந்தி வைத்து விட்ட மல்லிகைப் பூவுடன் தன்னருகே நடந்து வந்த மான்வியின் வாசத்தை நாசியில் நுகர்ந்துக் கொண்டிருந்தான் மயூரன்.

மயூரனோ அவளை வைத்த கண்மாறாது ஒரு நிமிடம் பார்த்ததும் “டேய் மயூரா சைட் அடிக்கிறயா?” என்று அவனது மனசாட்சி வந்து அவன் மனநிலையை கலைக்கவும் “டிவோர்ஸ் பாண்ட்ல கையெழுத்து போட்டுக்கொடு” என்று மான்வியிடம் பாண்டை நீட்டினான் கறார் குரலில்.

மான்விக்கு பத்திரத்தை வாங்கும்போது அவளது கைகள் லேசாக நடுங்கியதுதான். ஆனால் மயூரனின் சந்தோசம்தான் முக்கியமென்று பத்திரத்தில் கையெழுத்துப்போட்டு மயூரனிடம் கொடுத்திருந்தாள்.

மயூரனோ மான்வி கையெழுத்து போடமாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு சற்று ஏமாற்றம்தான். 

பத்திரத்தை வாங்கியவன் “தாத்தா நாளன்னைக்கு எனக்கும் யாழினிக்கும் நிச்சயதார்த்தம் வந்துடுங்க” என்றிருந்தான் மான்வியை ஓரப்பார்வை பார்த்தபடி

அருணாச்சலமோ “முதல் ஆளா நான் வந்து நிற்பேன் பேராண்டி இப்ப இங்கிருந்து கிளம்பலாம்” என்று வாசலை காண்பித்தார்.

“நான் இங்க வாழை இலை போட்டு சாப்பிட வரலை போகத்தான் போறேன் தாத்தா!” என்று ஏளனச்சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினான்.

இரு குழந்தைகளும் சாவி துவாரம் வழியாக தந்தையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

“டேய் அண்ணா அப்பா உன்னை போல இருக்காருல்ல” என்று நேகா நேத்ரனின் தோளை சுரண்டியது.

“அப்பாவை போல நான் இருக்கேன் நேகா” என்று திருத்தி கூறினான் நேத்ரன்.

“அம்மாவை மிரட்டின அப்பாவை பிடிக்கல” என்று இருகுழந்தைகளும் முகத்தை அஷ்டகோணலாக்கினர்.

மயூரனோ வாசற்படியில் காலை வைத்தவன் திரும்பி நின்று மான்வியின் அறையை பார்த்தான். 

மான்விக்கோ திக்கென்றது. இதயம் ஹைஸ்பீடில் துடிக்க ஆரம்பித்தது.

“குட்பை” என்று விரலை துப்பாக்கி வைத்துச் சென்றான் மயூரன்.

காரில் ஏறி உட்கார்ந்தவன் மான்வியின் அறை ஜன்னலை பார்த்தான். இருகுழந்தைகளும் தந்தையை ஜன்னல் வழியே பார்த்தனர். மயூரன் பார்ப்பது தெரிந்து திரைச்சீலையை இழுத்து முடிவிட்டனர்.

“என்னை உன்னால மறக்க முடியாது மான்வி! ஆனா நான் உன்னை மறந்துட்டேன்” என்று எக்காளமாக சிரித்தான்.

“அட போடா பைத்தியக்காரா நீ மட்டும் மான்வியை மறந்துட்டியா?” என்று அவனது மனசாட்சி அவனை கேலி செய்தது.

காரை வேகமாக ஓட்டினான் வீட்டிற்கு.

விடிந்தால் நிச்சயதார்த்தம் யாழினியின் கைக்கு முழங்கை வரை மெஹந்தி வைத்துவிட்டுக்கொண்டிருந்தனர்  ப்யூட்டிஷியன்.

அடுத்த நாள் விடியற்காலையில் யாழினிக்கு மேக்கப் முடிந்து நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாகிவிட்டாள்.

சந்திரமதியோ “தாம்பூலத்தட்டை எடுத்துட்டு வா வள்ளி” என்று வீட்டு வேலைக்காரர்களிடம் வேலைகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.

மயூரன் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரம் குறையாமல் அமர்ந்திருந்தான் சபை நடுவே. ஆனால் அவனது இதயத்தில் ஏதோ குத்திக்கொண்டேயிருந்தது.

கருணாகரனின் போன் அடிக்கவும் “ஹலோ” என்றிருந்தவர் போனை அப்படியே கீழே போட்டிருந்தார்.

“அப்பா என்னாச்சு?” என்று பதறி கீழே கிடந்த போனை எடுத்து காதில் வைத்தான்.

“மா.மாமா த.தாத்தா நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்துட்டாரு ஹாஸ்பிட்டல சேர்த்திருக்கேன்” என்றாள் திக்கி திணறி மான்வி.

யாழினியை சந்திரமதி ஹாலுக்கு அழைத்து வரவும் “அம்மா தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை நான் கிளம்புறேன்” என்றவனை 

“நிச்சயம் முடிச்சிட்டு கிளம்பலாம் மயூரா” என்றவரை கருணாகரன் “நீயெல்லாம் மனுச பிறவியே கிடையாதுடி” முகம் சுளித்தவரிடம்   

“நீங்க கிளம்புங்க மாமா” என்றிருந்தாள் யாழினி நல்லவள் போல நாடகப்பேச்சுடன்.

மான்வியோ அருணாச்சலம் இருந்த ஐசியுவின் முன்பு கண்ணீருடன் நின்றிருந்தாள்.

3 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

  1. Try all the platforms for gambling entertainment: for successful wins

    live online gambling [url=https://casinoroyalspins.com/casino-reviews/live-casinos]https://casinoroyalspins.com/casino-reviews/live-casinos[/url] .

  2. Топовые бренды дизайнерской мебели премиум-класса.
    Мебель премиум-класса [url=https://www.byfurniture.by]https://www.byfurniture.by[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top