பூ 9
அடுத்த நாள் காலையில் குழந்தைகள் இருவருக்கும் சாப்பாடு ஊட்டி முடித்து “புது ஸ்கூல் போறோம்ல பாட்டாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம் வாங்க” என்று இருவரின் கைபிடித்து அழைத்துச் செல்ல அங்கே ஜெயசீலன் அருணாச்சலத்திற்கு மாத்திரைகளை கொடுத்துக்கொண்டிருந்தார். ஜெயசீலனை மகனாக பாவித்து நெருங்கி பழகினார் அருணாச்சலம்.
ஜெயசீலனும் சாந்தியும் மிலிட்டரியிலிருந்து ரிட்டையராகி வந்ததால் சொந்தங்கள் யாரையும் தேடிப்போகவில்லை. ஜெயசீலனின் கூடப்பிறந்த தம்பிமார்களின் பசங்களும் ஜெயசீலனிடமிருந்த பணத்தை தான் கொள்ளையடிக்க பார்த்தனர். பாசத்துக்கு ஏமாந்து பல லட்சம் செலவழித்தவர் ஒருகட்டத்தில் அவர்களின் தேவை பணம் தான் என்று தெரிந்ததும் எங்களை யாரும் பார்க்க வரவேண்டாம்… எங்களை நாங்களே பார்த்துக்குறோம் என்றதும் ஒரு ஈ காக்கா கூட அவர்களை பார்க்க வரவில்லை.
அவர்களுக்கு சொந்தமென வந்த உறவு மான்விதான் அவள் இந்நாள் வரை ஜெயசீலனிடம் காசை எதிர்பார்த்து நின்றதில்லை. பிரசவத்திற்கு கூட தனது அகௌண்டில் இருந்த பணத்தை தான் எடுத்துக் கொடுத்திருந்தாள் சாந்தியிடம்.
“உன்னை என் மகளாக நினைச்சுதான் உனக்கு பிரசவ செலவு பார்த்தோம்! நீ பணத்தை கொடுத்து எங்களை அந்நியப் படுத்தாதே மான்வி” என்று சாந்தி கண்ணீர் விட்டதும் “அச்சோ அம்மா நான் உங்களை என் தாயாகதான் நினைக்குறேன்! நீங்களே எனக்கு பிரசவ செலவு முழுக்க பாருங்க” என்று கூறிவிட்டாள்.
மான்வி வேலைக்கு போன நாளிலிருந்து ஜெயசீலன், சாந்தி இருவருக்கும் தீபாவளி, பொங்கல் பண்டிகை எதாவது வந்துவிட்டால் இருவருக்கும் ட்ரஸ் எடுத்து கொடுத்து விடுவாள் பெற்ற மகளை போல.
மான்வியை பிரிந்து கூட இருந்து விடுவார்கள் பெரியவர்கள்… ஆனால் நேகாவையும் நேத்ரனையும் விட்டு ஜெயசீலனாலும் சாந்தியாலும் இருக்க முடியாது. இருவரும் மான்வியுடன் தனது வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து விடுவது என்று மான்வி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.
அருணாச்சலமோ சாந்தியை “என் குடும்பத்துக்கு ஏற்ற குணமான மருமகள் எனக்கு கிடைச்சுட்டா நான் டீ வேணும்னு கேட்ட அடுத்த நொடி டீயோடு வந்து நிற்குது மருமக சாந்தி” என்று சந்தோசப்பட்டுக்கொண்டார்.
“பாட்டா நாங்க புது ஸ்கூல் போக போறோம் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” இரண்டும் அருணாச்சலத்தின் காலை பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டது.
“நீங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்” என்று இருவரின் தலையிலும் கைவைத்து ஆசிர்வாதம் செய்து குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டார் அருணாச்சலம்.
“தாத்தா நீங்களும் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று ஜெயசீலன் காலிலும் விழுந்தது.
“ரெண்டு பேரும் சமத்தா குறும்பு பண்ணாம கிளாஸ்ல இருக்கணும்” என்றார் கண்ணைச்சிமிட்டி. டெல்லியில் படித்த பள்ளியில் தினம் ஒரு பிரச்சனையை இழுத்து வருவாள் நேகா. மாலதியிடம் கையை கட்டி நின்று “ஆன்ட்டி நான் இவனை அடிக்கல இவன் என் சடையை பிடிச்சு இழுத்தான்” என்று பொய் அழுகையுடன் இதழ் பிதுக்கி நிற்கும்.
“நான் குறும்பு பண்ணமாட்டேன் தாத்தா இந்த நேகாதான் குறும்பு பண்ணி அம்மாகிட்ட அடிவாங்குவா” என்று நேகாவை ஓரக்கண்ணால் பார்த்து வாய் பொத்தி சிரித்ததான் நேத்ரன்.
“டேய் அண்ணா நான் புது ஸ்கூல்ல யார்கிட்டயும் சண்டை போட மாட்டேன் பாரு!” என்று இதழ் சுளித்தது.
“சரி சரி இப்ப ரெண்டு பேரும் சண்டை போடாம வாங்க” என்று இருவரின் தோளில் பேக்கை மாட்டிவிட்டாள் மான்வி.
ஜெயசீலனோ “குழந்தைகள் ரெண்டு பேரையும் தனியா அழைச்சிட்டு போக உனக்கு சிரமமா இருக்கும்ல… நான் ஐஞ்சு நிமிசத்துல ரெடியாகி வந்துடறேன்மா” என்றவரை “அப்பா கதிர் வரேனு சொல்லியிருக்கான் நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் “ஹாய் குட்டீஸ்” என்று இரு கைகளையும் விரிக்க நேகாவும் நேத்ரனும் “ஐ சித்தா வந்தாச்சு” என்று துள்ளிக்குதித்து கதிரின் கால்களை கட்டிக்கொண்டதும் இருவரையும் தூக்கிக்கொண்டு “சித்தாவை பொங்கல் அன்னிக்கு பார்த்தப்ப கன்னத்துல முத்தம் கொடுத்தீங்கல்ல இப்பவும் முத்தம் கொடுங்க” என்று கன்னத்தை காட்டினான் ஆசையாய்.
“அப்போ நீங்களும் பொங்கல் அன்னிக்கு எங்களை ஊஞ்சலில் வைச்சு வேகமாக ஆட்டிவிட்டீங்கல்ல அதுபோல இன்னிக்கும் ஆட்டிவிடுறீங்களா?” என்று தலைசாய்த்துக் கோரசாக கேட்டது இருகுழந்தைகளும்.
“உங்க சித்தாவுக்கு உங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிடுவதுதான் வேலையே ஆனா நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டு வந்ததும் நாம மூனு பேரும் சேர்ந்து விளையாடலாம் சரியா இப்ப ஸ்கூலுக்கு கிளம்பலாமா?” என்று இருவரின் கன்னத்தில் முத்தமிட்டான் கதிர்.
“தேங்க்ஸ் சித்தா” என்று இருவரும் கதிரின் கன்னத்தில் எச்சில் முத்தம் கொடுத்தனர்.
“ரெண்டு பேரும் என் கன்னத்தை எச்சி பண்ணீட்டீங்க” என்று இருவரையும் பார்த்து கண்ணைச்சிமிட்டினான் கதிர்.
நேகாவோ வேண்டுமென்றே கதிரின் கன்னத்தில் எச்சில் தெறிக்க முத்தம் கொடுத்தது. “நீ கொடுடி செல்லம்” என்று மாறி மாறி முத்தமிட்டு குழந்தைகளை காருக்கு தூக்கிச் சென்று விட்டான்.
மான்விக்கு கதிரிடம் குழந்தைகள் ஒன்றி போவதை கண்டவளுக்கு கண்ணில் கண்ணீர் நீர் கோர்த்தது. பெரியவர்கள் பார்க்கா வண்ணம் கண்ணீரை துடைத்துக்கொண்டு “தாத்தா நான் கிளம்புறேன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“இங்க வா கண்ணு” என்று அவர் கையை அசைத்து அழைக்கவும். மான்வியும் அருணாச்சலம் பக்கம் சென்றாள்.
“மான்வி இன்னிக்கு நீ காலேஜ்ல ஜாயின் பண்ணுறதானேமா!”
“ஆமாங்க தாத்தா வெங்கட் அண்ணாவுக்கு ஒரு வாரம்தான் லீவு மெயில் அனுப்பியிருக்கேன்! உங்க பேரனுக்குத்தான் ஸ்டாப் யாரும் அதிகமா லீவு போட்டா பிடிக்காதே எனக்கும் அதே ரூல்ஸ்தான் போட்டு வச்சிருப்பாரு” என்று குறுநகை புரிந்தவளின் கையை பிடித்த அருணாச்சலமோ “நீ காலேஜ் ட்ரெஸ்ட் மெம்பர்டா அவன் உன்னை மிரட்டுவதற்கு இப்போ நீ அவன் பொண்டாட்டி கிடையாது” என்றதும் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது மான்விக்கு.
“அதான் அவன் கையெழுத்து கேட்டதும் என்னை கூட கேட்காம டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்தல்ல” என்றார் லேசான கோபத்தில்.
“என்னை விட்டு பிரிந்து இருந்தா தான் மயூரனுக்கு சந்தோஷம் கிடைக்கும் அதான் கையெழுத்து போட்டு கொடுத்தேன் தாத்தா” என்றவளின் குரல் சுருதி குறைந்தது.
“சரி அந்த பேச்சை விட்டு தள்ளு நீ அருணாச்சலம் பேத்தி அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கணும்னு அவசியம் கிடையாது. ஆனாலும் அவன் கிட்ட எதிர்த்து பேசி உன்னை அடிச்சிடுவானோனு எனக்கு கொஞ்சம் கலக்கமா இருக்கு! என் உடம்பு சரியா இருந்திருந்தா நான் உன்கூடவே வந்திருப்பேன். நான் உன்கூட இருக்கும்போது மயூரன் உன்னை எதுவும் அதட்ட முடியாம பார்த்திருப்பேன்! இப்ப என்னால வரமுடியாம போச்சேடா” என்று அவர் முகம் வாட்டமாய் மாறியது.
“நான் மேனேஜ் பண்ணிப்பேன் தாத்தா நீங்க என்னை நினைச்சு கவலைப்படவேணாம்” என்று அருணாச்சலத்தின் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு வெளியேச் சென்றாள் மான்வி.
குழந்தைகள் காருக்குள் கதிருடன் விளையாடிக்கொண்டிருந்தனர். “போலாமா?” என்று காரில் மான்வி ஏறவும் “போலாம் ரைட்” என்று நேகா மான்வியின் மடியில் ஏறி அமர்ந்தது.
பள்ளி வந்ததும் “புது ஸ்கூல் வந்தாச்சு” என்று இருவரும் குத்தாட்டம் போட்டனர்.
கதிரோ காரிலிருந்து இறங்கியவன் “அண்ணி எல்லா குழந்தைங்களும் ஸ்கூலுக்கு போக அழுவாங்க இவங்க என்னடானா ஸ்கூலை பார்த்ததும் துள்ளி குதிக்குறாங்க” என்று ஆச்சரியமாய் குழந்தைகளை பார்த்தான் கதிர்.
“நேகாவும் நேத்ரனும் என் கூட ஸ்கூலில் தான் வளர்ந்தாங்க கதிர்” என்றவளின் குரலில் மாறுபாடு தெரிய “சாரி அண்ணி” என்றான் கதிர்.
மாலதி மான்வியின் போனில் வந்துவிட்டாள்.
“பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு வந்திட்டியா? இல்லை நான் வந்து உன்னை பிக்கப் பண்ணவா?” என்றவளிடம் “நான் ஸ்கூல் கேட் கிட்ட இருக்கேன்டி பைஃவ் மினிட்ஸ்ல உன்னோட ரூம்க்கு வரோம்” என்று போனை கட் பண்ணியவளின் முன்னே மயூரனின் கார் நின்றது.
மயூரன் கார் கண்ணாடியை இறக்கவும் மான்வி மூச்சுவிடவும் மறந்தாள்.
மயூரனோ மான்வியை பார்த்தாலும் பார்க்காதது போல மான்வியின் பக்கம் நின்ற கதிரின் பக்கம் திரும்பியவன் “காலேஜ் போகாம இங்க என்ன பண்ணுற அதுவும் இவ கூட பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல” என்று கண்ணால் மிரட்டினான்.
இதுவரை மயூரனை எதிர்த்து பேசாதவன் “அண்ணா மான்வி என்னோட அண்ணி அது மட்டுமில்லாமல் என்னோட அத்தை பொண்ணு பேசாம இருக்கமாட்டேன்” என்று தைரியமாக மயூரனிடம் பேசிவிட்டான் கதிர்.
“உன் அண்ணாவை விட உன் அத்தை பொண்ணுதான் முக்கியமா போய்ட்டாளா! நீ இப்ப காலேஜ் வர என்னோட கார்ல ஏறு” காரை விட்டு இறங்கிவிட்டான்.
அச்சோ குழந்கைள் என்று மான்வி காரை திரும்பிப்பார்த்தாள். கார் கண்ணாடிகள் மூடியிருந்தது. அப்பாடா என்று நெடுமூச்சை இழுத்துவிட்டு “கதிர் நீ உங்க அண்ணாகூட கிளம்பு மாலதியை பார்த்துட்டு காலேஜ் வந்துடறேன் என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது” என்றவள் கார் கண்ணாடிக்குள் குழந்தைகள் தெரிகின்றனராவென்று அடிக்கடி பார்த்துக்கொண்டாள் பதட்டத்தை மறைத்துக்கொண்டு.
கதிரோ “பாதியில நான் யாரையும் விட்டு போக மாட்டேன்!” என்றான் மயூரன் மண்டையில் உரைக்கும்படி.
மயூரனோ “இவ என்கிட்ட இப்படி பேசுனு சொல்லி உனக்கு கிளாஸ் எடுத்தாளா இதுவரை என்னை எதிர்த்து பேசாதவன் இப்போ என்கிட்ட எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்ட டா! ஒழுங்கா கார்ல ஏறி உட்காரு” என்று மயூரன் விரலை நீட்டி எச்சிரித்தான்.
நேத்ரனோ காருக்குள் உட்கார்ந்து மயூரன் பேசுவதை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். நேத்ரனுக்கோ மயூரன் மான்வியை முறைத்துப்பார்ப்பது அவனுக்கு பிடிக்கவேயில்லை.
நேகாவோ “பேட் அப்பா நாம அப்பாகூட பேசவே கூடாது” என்று நேத்ரனின் தோளில் சாய்ந்துக் கொண்டது.
தன் உயிரில் ஜனித்த குழந்தைகள் அவன் பக்கத்தில் தான் இருக்கின்றனர் என்று தெரியாமல் “தாத்தாவை உன் பக்கம் இழுத்து வச்சிக்கிட்டது பத்தாதுனு என் தம்பியை உன் பக்கம் இழுத்துக்கிட்டியாடி” வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கெண்டிருந்தான்.
“போதும் மயூ இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது அவங்களாத்தான் நான் தப்பு ஏதும் பண்ணலனு என்னோட உறவு வேணும்னு வந்திருக்காங்க. நான் யாரையும் இழுத்து பிடிச்சு வைக்கல” என்று கையை தூக்கி காட்டியவளின் கண்ணில் கண்ணீர் இப்போதே விழுந்து விட இருந்ததை உள்ளிழுத்துக்கொண்டாள். மயூரன் முன்னால் அழவே கூடாது என்று கங்கணம் கட்டி நின்றிருந்தாள் மான்வி.
“அண்ணி உங்க கூட பேசியதற்காக என்னை வீட்டை விட்டு அனுப்பினாலும் பரவாயில்ல நான் உங்களை விட்டு போகமாட்டேன்” என்று உறுதியாக பேசியவனை கண்டு காது சிவக்க கோபம் வந்தவன் “உன் கொழுந்தனை உன் பக்கம் வரவெச்சிருக்கலாம் இந்த புலியை புல்லை தின்ன வைக்க முடியாதுடி! டிவோர்ஸ் நோட்டீஸ் கூடிய சீக்கிரம் உனக்கு வரும் நாம கோர்ட்ல சந்திப்போம் குட்பை” என்று கார் கதவை திறந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று திரும்பவும் கார் கண்ணாடியை குழந்தைகள் திறந்திருந்தனர். அவன் தலை திரும்பியதும் குழந்தைகள் கீழே குனிந்துக் கொண்டனர்.
மான்விக்கோ மயூரன் குழந்தைகளை பார்த்துவிடுவானோ என்று இதயம் திக் திக் வெளியே எகிறி வந்துவிடும் போல துடித்தது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு நெருப்பில் நிற்பது போல உணர்ந்தாள்.
மான்வியின் பக்கம் நெருங்கமாய் வந்தவன் மான்வி பக்கம் நின்ற கதிரை “கொஞ்சம் தள்ளிப்போய் நில்லுடா உன் அண்ணிக்கிட்ட பேசணும்” என்று அவன் பார்த்த பார்வையில் கதிர் விதிர்விதிர்த்துப்போய் தள்ளி நின்றுக் கொண்டான்.
“நா.நான் மாலதியை பார்க்க போகணும் எதுவாயிருந்தாலும் காலேஜ்கு வந்த பிறகு பேசிக்கோங்க” என்று அவள் ஸ்கூல் கேட்டுக்குள் செல்லப்போனவளின் கையை இறுக்கிபிடித்தவன் “நான் சொல்றதை கேட்டுட்டுப் போடி” என்று பற்களை கடித்தான் மயூரன்.
“நீங்க சொல்றதை கேட்க நான் உங்க பொண்டாட்டி இல்ல மிஸ்டர் கையை விடுங்க” என்று அவனிடமிருந்து திமிறினாள்.
அவனோ அவள் பேசுவதை காதில் வாங்காமல் “எனக்கும் யாழினிக்கும் அடுத்தவாரம் நிச்சயதார்த்தம் முதல் அழைப்பு உனக்குத்தான் சொல்லுறேன் ஆனா நீ நிச்சயதார்த்ததுக்கு வந்துடாதடி” என்றான் குரூர புன்னகையில்.
“நீங்க யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோங்க எனக்கு கவலை கிடையாது” என்றாள் புன்னகை முகத்துடன்தான் ஆனால் அவள் மனதிற்குள் இருக்கும் வேதனையை மறைக்க அரும்பாடு பட்டாள்.
அவன் அவளுக்கு வலிக்க வேண்டுமென்று பேசியும் அவளது சிரிப்பை கண்டு அவனுக்கு சினம் தலை தூக்கியது.
மாலதியோ ‘மான்வி நம்மகிட்ட போன் பேசி வெகுநேரம் ஆச்சே இன்னும் வரலையே?’ என்று கேட் செக்யூரிட்டிக்கு போன் அடித்தாள்.
செக்யூரிட்டி வெளியே நடப்பதை அவளிடம் கூறவும் “நான் வரேன் போனை வைங்க” என்றவள் விறுவிறுவென கேட்டிற்கு வந்தவள் மயூரன் மான்வியின் கையை பிடித்திருப்பதை கண்டு “மயூரன் மான்வி கையை விடுங்க பப்ளிக்ல இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா? நீங்க ஒரு பேமஸ் காலேஜ் செகரட்டரி மறந்துடாதீங்க” என்று மாலதி கடுப்புடன் பேசவும்
“எங்களுக்குள்ள நீ மூக்கை நுழைக்காதே மாலதி!” என்றவனை
“இப்போ மான்வி உங்க மனைவி கிடையாது நீங்கதான் டிவோர்ஸ் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டீங்களே மயூரன் அப்புறம் எப்படி என்னை வரவேண்டாம்னு நீங்க சொல்ல முடியும் அவளுக்கு ஏதும்னா நான் தட்டி கேட்பேன்” என்று மார்புக்கு குறுக்கே கையை கட்டி மயூரனை முறைத்தபடி நின்றாள் மாலதி.
“இன்னும் சட்டப் பூர்வமா நானும் மான்வியும் பிரியல. பிரியும்வரை அவளை நான் மிரட்டிக்கிட்டுதான் இருப்பேன் மாலதி! உனக்கும் சொல்றேன் ஒழுங்கா எங்களால நீ உன் வாழ்க்கையை இழந்து நிற்காம உன் ஈகோவை விட்டு வெங்கட்டை கல்யாணம் பண்ணிக்கோ… அடுத்தவங்க வாழ்க்கையில மூக்கை நுழைச்சு மறுபடியும் உன் வாழ்க்கையில் கேள்விக்குறி போட்டுக்காதே” என்றான் அடங்காமல்.
“மயூ என்னை என்ன வேணா பேசுங்க நான் பொறுத்துப்பேன் என் ப்ரண்ட் மாலதிக்கு அட்வைஸ் பண்ண நீங்க யாரு… அண்ட் ஈகோ முழுக்க உங்களுக்கும் உங்க ப்ரண்ட் வெங்கட் அண்ணாவுக்கும்தான் இருக்கு” என்று பொறுமையிழந்து பேசிவிட்டாள் மான்வி.
“உன்கிட்ட ரெண்டு நிமிசம் தனியா பேசணும் வாடி” என்று மான்வியின் கையை பிடித்து கார் கண்ணாடியில் மான்வியை சாய வைத்து “நானும் யாழினியும் சேர்ந்து வாழ்வதை கண் குளிர பாருடி” என்று எக்காளமாக சிரித்தவன் மான்வியை தள்ளி நிறுத்தி “நானும் அப்போ இருந்து பார்த்துட்டேன் இருக்கேன் காருக்குள்ள ஏதோ பொக்கிஷம் இருக்கறது போல காரையே அடிக்கடி பார்த்துட்டே இருக்க” என்றவனோ காருக்குள் எட்டிப்பார்த்துவிட்டான்.
“கடவுளே!” என்று அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்து நின்றாள் மான்வி.
Продажа кабин для бульдозеров и другой тяжелой спецтехники
купить кабину для спецтехники [url=https://xn—–6kceqhatfamjizg3a7au2dr1h5d.xn--p1ai/]https://xn—–6kceqhatfamjizg3a7au2dr1h5d.xn--p1ai/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Niceepi.