பூ 10
“அச்சோ என் குழந்தைகள்” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்தாள் மான்வி.
குழந்தைகள் இரண்டும் காருக்குள் இருந்த டெடிபியரை அவர்கள் மீது போட்டுக் கொண்டு தங்களை மறைத்துக்கொண்டு படுத்துவிட்டனர்.
மயூரன் கண்ணுக்கு டெடி பியர் மட்டும் தெரிந்தது. குழந்தைகள் உடலை குறுக்கி படித்துக் கொண்டனர் இந்த டெடிபியரை இன்னுமா கட்டிபிடிச்சு தூங்குறா என்று பெரூம்மூச்சுவிட்டுக்கொண்டு திரும்பியவன் பிரம்மை பிடித்தவள் போல நின்ற மான்வியை ஒரு கணம் உறுத்து விழித்து “உன்னையே வேண்டாம்னு உதறி எறிஞ்சுட்டேன்… உன் டெடிபியரையா தூக்கிட்டு போகப்போறேன் ரொம்ப சீன் போடாதேடி” என்று அவளை மீண்டும் முறைத்து விட்டு காரில் ஏறினான் மயூரன்.
குழந்தைகள் மயூரன் பேச்சு சத்தம் இல்லாமல் இருக்க தங்கள் மேல் இருந்த டெடிபியரை எடுத்துப்போட்டு தலையை தூக்கி மயூரன் நின்றிருக்கிறானா என்று எட்டிப்பார்த்தது.
பிள்ளைகளின் அலைப்புற்ற முகத்தை கண்டு பதறிப்போனவள் கார் கதவை திறந்து உள்ளேச் சென்றதும் மான்வியை கட்டிக்கொண்டு “ம்மா அப்பா கோபத்தை பார்த்து எங்களுக்கு பயமா இருந்துச்சு” என்ற குழந்தைகள் இருவரும் குளிர் காய்ச்சல் வந்தது போல நடுங்கினார்கள்.
குழந்தைகளின் அச்சத்தை போக்க “பசங்களா பயப்படாதீங்க அம்மா உங்ககூடத்தான் இருக்கேன்” என்று இருவரையும் அடைக்காத்த கோழி போல அணைத்துக்கொண்டு குழந்தைகளின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.
நேகாவோ “எனக்கு அப்பாவை பிடிக்கவேயில்லைமா. நாம இந்த ஊர்ல இருக்கவே வேணாம் டெல்லிக்கு பாட்டாவையும் அழைச்சிட்டு போயிடலாம்” என்ற மயூரனை பிடிக்காதன்மையை முகத்தில் காட்டியது.
நேத்ரனோ “வேண்டாம் நாம இந்த ஊர்லதான் இருக்கணும் நேகா. அப்பா இனிமே அம்மாவை திட்டினா நான் சும்மா விடமாட்டேன் அவரை கிள்ளி வைக்கப் போறேன்” என்றவனது முகத்தில் கோபம் பொங்கி வழிந்தது.
“மயூரன் அண்ணா போல இவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதுப்பா… அண்ணா கோபத்துல எப்படி முகத்தை இஞ்சி தின்ன குரங்கு போல வச்சிருப்பாரோ அதே போல இருக்கான்டா சாமி” என்று இதழ் குவித்து ஊதிக்கொண்டான் கதிர்.
“மான்வி குழந்தைகளை ஸ்கூலுக்குள்ள அழைச்சிட்டு போய் அவங்களுக்கு ஏதாவது குடிக்க கொடுக்கலாம் வா” என்றாள் மாலதி.
நேகாவோ மான்வியின் இடுப்பை விட்டு இறங்கவில்லை. “அப்பா மறுபடியும் ஸ்கூலுக்கு வருவாரா அம்மா?” என பயத்தில் கண்ணைச் சிமிட்டியது.
“இல்லடா வரமாட்டாரு அப்படியே அப்பா வந்து உங்களை பார்த்து நீங்க யாருனு கண்டுபிடிச்சாலும் அப்பா உங்களை மிரட்டவோ அடிக்கவோ மாட்டாரு! உங்களுக்கு குட் அப்பாவா இருப்பாரு சோ நீங்க பயப்பட தேவையில்லை தங்கம்” என நேகாவின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
நேத்ரனை மாலதி தூக்கிக் கொண்டாள். “கதிர் நீ வேணா காலேஜ்க்கு கிளம்புப்பா ஃபர்ஸ்ட்ஹவர் கிளாஸ் கட் ஆகிடும்” என்றவளிடம் “அண்ணி ஒருநாள் எனக்கு லீவு போட்டாலும் பரவாயில்லை நான் உங்களை கூட்டிட்டுதான் போவேன்” என்றான் திடமாக.
அட்மிஷன் புரோசீஜர் முடிந்ததும் “பசங்களா அம்மா காலேஜ் கிளம்புறேன் நீங்க சமத்தா இருக்கணும்… கிளாஸ் மிஸ் சொல்லிக்கொடுக்கறதை கவனிக்கணும் உங்க ரெண்டு பேர் மேலயும் ஒரு கம்ப்ளைண்ட் வரக்கூடாது சரியா” என குழந்தைகளின் கன்னத்தில் முத்தமிட்டதும் குழந்தைகள் இருவரின் தலை தானாக ஆடியது.
“பார்த்துக்கோடி” என்று மாலதியிடம் உதடசைத்து குழந்தைகளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேச் சென்றாள் மான்வி.
கல்லூரிக்குள் சென்றபோது மணி பதினொன்றாகியிருந்தது. மீனுக்காக காத்திருக்கும் கொக்கை போல மான்வியை நிற்க வைத்து கேள்வி கேட்பதற்காகவே அவளது அறையில் சுழல் நாற்காலியில் முதுகு காட்டி உட்கார்ந்திருந்தான் மயூரன்.
கதிரை கிளாஸுக்குள் விடவில்லை. “ஹெச்ஓடியை பார்த்துட்டு வா கதிர்” என கிளாஸ் லெக்சரர் கூறிவிட அவனோ அண்ணாவோட வேலையாத்தான் இருக்குமென்று யூகித்தவன் அலட்டிக்கொள்ளாமல் “ஓ.கே மேம்” என்று தோளைக்குலுக்கிக் கொண்டு ஹெச்ஓடியை பார்க்கச் சென்றான்.
“தம்பிக்கே இந்த நிலைமை மயூரன் அண்ணா அண்ணிக்கு என்ன பனிஷ்மெண்ட் வச்சிருக்காரோ தெரியலை மனுசன் தையா தக்கானு கதகளி ஆட போறாரு எப்படித்தான் அண்ணி அண்ணாவை சமாளிப்பாங்களோ” என்று தலையை குலுக்கிக்கொண்டு ஹெச்ஓடி அறைக்கு முன் நின்று “எக்ஸ்கீயூஸ் மீ சார்” என்றான் பவ்யமாக “வா கதிர்” என்றார் நோட்டில் சைன் போட்டுக்கொண்டே.
கதிர் உள்ளேச் சென்றதும் “நினைச்ச நேரத்துக்கு காலேஜ் வரனு உங்க அண்ணா என்னை கேட்கச் சொன்னாருப்பா நான் இல்லை” என்று கதிரின் ஹெச்ஓடி நரேன் ஜகா வாங்கினார்.
நரேன் தனது டிப்பார்ட்மெண்டில் இருக்கும் சங்கரிக்கு லவ்வை புரோப்போஸ் செய்த போது கதிர் பார்த்துவிட்டான். நரேன் நல்ல குணமானவன்தான் இருந்தாலும் லவ் என்ற வார்த்தையை காதில் கேட்டால் மயூரன் சாமியாடிவிடுவானே! அதுவும் கல்லூரிக்குள் காதல் என்று தெரிந்து விட்டால் வேலையை விட்டு தூக்கிவிடுவான் என்ற அச்சத்தில் வெடவெடத்துப்போனான் நரேன்.
“சார் எங்கண்ணாவுக்குத்தான் லவ் பண்ணறவங்களை பிடிக்காது… ஆனா எனக்கு லவ்வை ரொம்ப பிடிக்கும் நீங்க ஜாலியா இருங்க. ஆனா உங்க லவ்வை வெளியே போய் வச்சிக்கோங்க எங்க அண்ணாகிட்ட மாட்டிக்காதீங்க! அப்புறம் என்னை அடிக்கடி கவனிக்கணும்” என்றான் நரேன் முன் இருந்த நாற்காலியில் ஒய்யாரமாக உட்கார்ந்துவிட்டான்.
“என்ன கவனிக்கணும் மார்க்கெல்லாம் சேர்த்து போட்டா உன் அண்ணன் கண்டுபிடிச்சிருவான் எமகாதகபயல்” என்றான் நரேன்.
“எனக்கு மார்க்கெல்லாம் வேண்டாம் சார்… என் படிப்பு முடிச்சதும் எப்படியும் எனக்கு இந்த காலேஜ்ல எதாவது ஒரு போஸ்ட் போட்டு கொடுத்துடுவாங்க என் பேருக்கு பின்னால் ரெண்டு டிகிரி இருந்தா கெத்தா இருக்கும் அதுக்குத்தான் வராத படிப்பை மெனக்கெட்டு படிக்குறேன்” என்று சலித்துக்கொண்டவன் “ம்ம் பாய்ண்ட்டுக்கு வரேன் நான் காலேஜ்க்கு லேட்டாத்தான் வருவேன் நீங்க கண்டுக்க கூடாது. என்னை எங்கண்ணாகிட்ட மாட்டிவிடக்கூடாது அப்போதான் உங்க லவ்வை பத்தி எங்க அண்ணாகிட்ட வத்தி வைக்க மாட்டேன் என்னோட டீலுக்கு ஓ.கேவா சார்?” என்று நரேனுக்கு கொக்கிபோட்டான் கதிர்.
“டேய்! டேய்! ஏன் டா அண்ணனும் தம்பியும் என்னை போட்டு பாடாய் படுத்துறீங்கடா. ஒருகாலத்துல மயூரன் மான்வி பின்னாடி விழுந்து விழுந்து லவ் பண்ணினான். இப்போ என்னோட அத்தைபொண்ணை லவ் பண்ண கூட விடமாட்டேன்கிறான் உன் நொண்ணன்… உன்னோட டீல் எனக்கு ஓ.கே” என்று கட்டை விரலை உயர்த்தினான் நரேன்.
“தேங்க்யூ சார் நாளையிலிருந்து ஃபர்ஸ்ட் ஹவர் கிளாஸ் கட் அடிப்பேன் நீங்கதான் எனக்கு அட்டன்டென்ஸ் போடணும்” என்று மந்தகாத புன்னகையுடன் கிளம்பியிருந்தான்.
மயூரன் காலேஜ்க்குள் வந்ததும் ஹெச்ஓடி நரேனை தனது அறைக்குச் வரச்சொல்லியிருந்தான்.
நரேனோ ‘அச்சோ கதிர் இன்னும் காலேஜ்க்கு வரலையே எப்படி வந்துட்டான்னு மயூரன்கிட்ட பொய் சொல்றது’ என்று புலம்பிக்கொண்டே மயூரனின் அறைக்குச் சென்றான்.
“குட் மார்னிங் சார்” என்ற நரேனுக்கு “குட்மார்னிங் சார் உட்காருங்க” என்று தன் எதிரே இருக்கும் நாற்காலியை காட்டினான் வருகை பதிவேட்டை பார்த்துக்கொண்டே
மாட்டிக்கிட்டோம் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்க போறான்… காதுல ரத்தம் வர அளவு திட்டு வாங்க ரெடியா இரு நரேன் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான் நரேன்.
சிசிடிவி ஃபுட்டேஜை நரேனுக்கு காண்பித்து “கதிர் தினம் தினம் பர்ஸ்ட்ஹவர் முடிச்சுதான் காலேஜ்க்கு வந்திருக்கான்..ஆனா நீங்க ஃபர்ஸ்ட்ஹவர்ல அவன் இருந்ததா அட்டன்டென்ஸ் போட்டிருக்கீங்க காரணம் சொல்லுங்க!இப்படி அட்டன்டென்ஸ் போடறது எவ்ளோ தப்புனு உங்களுக்கு தெரியாம போச்சு” என்று மாணவர்கள் வருகை பதிவேட்டை டேபிளில் பொத்தென்று தூக்கிப்போட்டான்.
“பையன் சூடா இருக்கானே சமாளிப்போம்” என்று வியர்த்த முகத்தை துடைத்த நரேனோ “சார் கதிர் உங்க தம்பி அதான்” என்று பேச முடியாமல் எச்சிலை மென்று விழுங்கினான்.
“என் தம்பிங்கிறதெல்லாம் வீட்டோட மட்டும் தான் அவன் இப்போ இந்த காலேஜ்ல படிக்கற ஸ்டுடன்ட் தான்! அவனுக்கு எந்த சலுகையும் கிடையாது அவனுக்கு செமஸ்டர் ஃபீஸ் கொண்டு கட்டிட்டு வரேன்! இனிமே கதிர் காலேஜ்க்கு வராம அந்த ஹவர் அட்டன்டென்ஸ் போட்டிருந்தா உங்களை வேலையிலிருந்து தூக்கிடுவேன் இதுதான் லாஸ்ட் வார்னிங் பார்த்துக்கோங்க” என்று நரேனை மிரட்டியே அனுப்பியிருந்தான்.
அழுகாத குறையாக மயூரன் கடுப்பாக பேசியதை நரேன் கதிரிடம் கூறி முடித்தான்.
“சாரிங்க சார் என்னால உங்களுக்குத்தான் கெட்ட பேரு” என்று வருத்தப்பட்டு நரேனிடம் மன்னிப்பு கேட்டான் கதிர்.
“உங்க குடும்ப அரசியல்குள்ள இருக்க குழப்பத்தால என்னை உங்க அண்ணன் வறுத்துக்கொட்டினான் நானும் உனக்கு அட்டன்டென்ஸ் போட்டதும் தப்புதான் இனிமே கிளாஸ்க்கு சரியான நேரத்துல வந்து கதிர்” என்று பெரும்மூச்சுவிட்டான் நரேன்.
“சரிங்க சார்” என்று முகத்தில் சோக ரேகை பதித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் கதிர்.
மான்வியோ குழந்தைகளை மயூரன் பார்க்கலை சாமி என்று சுழற்நாற்காலியின் பக்கம் வந்தவள் நாற்காலியை திருப்ப நாற்காலி 85 கிலோ வெயிட்டை சுமந்துக் கொண்டு இருக்க அவளால் திருப்ப முடியவில்லை.
சட்டென்று சுழற்நாற்காலி சுழன்று அவள் பக்கம் முகத்தை காண்பித்து “என்ன மேடம் காலேஜ்க்கு வர நேரமா! ட்ரஸ்ட் மெம்பரா இருந்தாலும் இங்க பன்சுவாலிட்டி கீப்அப் பண்ணனும்னு உங்களுக்கு தெரியாதா இல்லை மறந்து போயிட்டீங்களா” என்று இதழை கோணலாக வைத்து எகத்தாளமாக பேசினான்.
மான்வியோ மயூரன் தனது அறையில் இருப்பானென்று எதிர்பார்க்காது இருந்தவள் ஒரு நிமிடம் அலண்டு தான் போனாள். ஆனால் அவளது அச்சத்தை வெளிக்காட்டாமல் “நான் எந்த ரூல்சையும் மறக்கவில்லைங்க சார்! மறக்கவும் மாட்டேன்” என்று இருபொருள் பதிய பேசியவள் “என்னோட பர்மிஷனை வெங்கட் அண்ணாக்கு வாட்சப் மெசேஜ் போட்டு இருக்கேன் சார்” என்று வெங்கட்டிற்கு மெசேஜ் போட்டிருந்ததை காண்பித்தாள்.
மயூரனோ “ட்ரஸ்ட் மெம்பர் நீ எனக்கும் நீ வர தாமதம் ஆகும்னு மேசேஜ் போட்டிருக்கணும் அண்ட் காலங்காத்தால உன் பிரண்ட்டை பார்த்து அரட்டை அடிக்க போறதுக்கெல்லாம் வெட்டியா பர்மிஷன் போடணுமா! எனக்கும் காலேஜ்ல உரிமை இருக்குனு மார்தட்டிக்க கூடாது பொறுப்பா இருக்கணும். உனக்குத்தான் பொறுப்புனா சுட்டுப்போட்டாலும் வராதே” என்று முகத்தை அஷ்டகோணலாக்கினான்.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மயூரன்” என்று விரலை நீட்டிய மான்வியின் கையை மடக்கி பிடித்தவன் “என்னடி பேர் சொல்லி கூப்பிடற அளவு தைரியம் வந்துடுச்சா?” என அவளை தன் பக்கம் இழுத்தான்.
அவளோ அவனது மார்பில் மோதாமல் தள்ளியே நின்றாலும் அவன் அழுத்திப்பிடித்ததில் அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது.
“ஸ்ஆஆ வலிக்குது விடுங்க” என்றவளுக்கு கண்கள் கலங்கவும் என்ன நினைத்தானோ தெரியவில்லை பட்டென்று அவளது கையை உதறிவிட்டு “நான் சொல்ற வேலையைத்தான் நீ பார்க்கணும்! அண்ட் நான் எப்போ வேணாலும் இந்த அறைக்கு வருவேன். நான் எந்த நேரத்திலும் உன்னை என்னோட அறைக்கு கூப்பிடுவேன் நீ ரொம்ப பெரிய பருப்பு மாதிரி சீன் போட்டு நான் வரமாட்டேன்னு சொன்னேன்னு வை நான் மனுசனா இருக்கமாட்டேன். என்னைப்பத்தி உனக்கு தெரியும்ல” என்றவனோ கைகாப்பை ஏத்திவிட்டு கன்னத்தை தேய்த்தான்.
“பேசி முடிச்சுட்டீங்களா மிஸ்டர் மயூரன் வேலை விசயமா ஈவ்னிங் ஐஞ்சு மணிவரை என்னை நீங்க பார்க்க வரலாம்! அண்ட் என்னையும் வேலை நேரத்துல கூப்பிட்டால் நானும் வருவேன்! அதை விட்டு எந்த நேரம் கூப்பிட்டாலும் நான் வரணும்னு அதிகாரம் பண்ண உங்களுக்கு உரிமை கிடையாது. நெக்ஸ்ட் என் கையை பிடிக்கவும் உங்களுக்கும் எந்த ரைட்ஸும் இல்லை நான் டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு கொடுத்திட்டேன். இனி நீங்க யாரோ நான் யாரோ” என்றாள் அவன் கண்ணில் வலியை பார்க்க
வேண்டுமென்று தான் பட்ட வலி வேதனைக்கு அவன் பதில் கூறியே ஆகவேண்டுமென்று அவனை எதிர்த்து பேசினாள்.
“எ.எனக்கு உன் கையை பிடிக்க உரிமை இல்லையாடி!” என்று தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டிக்கொண்டே வந்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தன் மார்பில் அணைப்பில் வைத்துக்கொண்டு அவளது ப்ளவுஸுக்குள் கையை விட்டதும்
“ம.மயூரன் என்ன பண்ணுறீங்க?” என்று கண்ணீர் வழிய உதடுகள் நடுங்க பேசியவள் தனது பலத்தை திரட்டி அவனது மார்பில் கையை வைத்து தள்ளிவிட்டாள்.
அவனோ சுதாரித்து நின்றதும் “உனக்கு டிவோர்ஸ் பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டேன்ல என்னோட கழுத்துக்கு கீழே கையை கொண்டு போற அறிவிருக்காடா?” என்று அவள் பத்ரகாளியாய் மாறிவிட்டாள்.
அவனோ விடாகண்டன் ஆச்சே!
“எனக்கு அறிவு மூளை நிறைய இருக்கப்போய்தான் பல கல்லூரிகளை உருவாக்கி இருக்கேன்! ஆனா உனக்குத்தான் அறிவு மழுங்கிப்போச்சு நான் உன் கழுத்துல கட்டிய தாலியை இன்னும் ஏன் டி போட்டிருக்க கையெழுத்து போட்ட அன்னிக்கே தாலியை கழட்டி என் முகத்துல எறிய வேண்டியதுதானே” என்றான் நெஞ்சில் ஈரம் இல்லாமல்.
மான்வியோ “தா.தாலிச் செயின்” என்று அவளது கழுத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டாள்.
“இந்த தாலி உன் கழுத்துல இருக்கப்போய்தான் உன்னை நான் தொட்டேன்டி” என்று பிளவுஸுக்குள் மறைத்து போட்டிருந்த தாலிசங்கிலியை அவளது அங்கம் தழுவியே வெளியே எடுத்துப்போட்டவன் தாலியை கையில் பிடித்துக்கொண்டான் அழுத்திப்பிடிக்கவில்லை லேசாகத்தான் பிடித்திருந்தான்.
அவளது மேனி முழுவதும் வியர்த்துக்கொட்டியது மயூரன் தாலியை கழட்டிவிடுவானோ என விதிர் விதிர்த்து போனவள் கைகள் நடுங்க தாலியை பிடித்துக்கொண்டு “ப்ளீஸ் மயூரன் தாலியை கழட்டச் சொல்லிடாதீங்க நா.நான் கழட்டமாட்டேன் எ.எ என்னால முடியாது நீ. நீங்க யாரை வேணா கல்யாணம் ப.பண்ணிக்கோங்க” என்று அவள் வார்த்தைகள் தடுமாற அவனிடம் தாலிப்பிச்சை கேட்டு கண்ணீர் விட்டாள் மான்வி.
“ச்சே நீதான்டி என்னை கொடூரனா மாத்தினது” தாலிச்செயினை மெதுவாக விட்டு கதவை காலால் அடித்து மூடிவிட்டுச் சென்றான் மயூரன் கடும் கோபத்தில்.
“கடவுளே எனக்கு இதுக்கு மேலயும் சோதனை கொடுக்காதே தாங்க முடியாது என் மயூவை நான் கண்ணால பார்த்துக்கிட்டே என்னோட வாழ்க்கையை போக்கிடுவேன் ஆனா என்னோட தாலியை கழட்டச் சொல்லி மயூரன் கேட்க கூடாது” என்று வெறும் தரையில் சுருண்டு படுத்துக்கொண்டு கதறினாள்.
மயூரனோ அவனது அறையில் இருக்கும் கேமராவில் மான்வி அழுவதை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். “உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வரவிடமாட்டேன் மானு” என்று தங்களது கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டு கூறும் வாக்கியத்தை எண்ணியவனுக்கு அவன் மீதே கோபம் வரத்தான் செய்தது. கோபத்தில் பேப்பர் வெயிட்டை தூக்கி அடித்தான் சுவற்றில்.
பூ 11
“மே ஐ கம் இன் மேம்” என்று ப்யூன் ஆறுமுகம் கதவு தட்டும் சத்தத்தில் கண்ணைத்துடைத்துக்கொண்டு தரையிலிருந்து எழுந்து நின்று “உள்ளே வாங்க” என்று கூறிவிட்டு அவசரமாக
வாஷ்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.
தண்ணீரை முகத்தில் அள்ளி அடித்து கழுவிக்கொண்டு வெளியே வந்த சமயம் அங்கே ப்யூன் இல்லை அவளுக்கு பிடித்த கிரேப் ஜுஸ் டேபிளில் இருந்தது.
“இன்னும் என்னை நீங்க அடியோட வெறுக்கல மாமு… உங்களால என்னை வெறுக்கவும் முடியாது” என்றவளின் இதழ்களில் சிறு கீற்று புன்னகை உருவாகி மறைந்தது.
மான்வி அழுவதை கண்குளிர இரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த யாழினியோ ப்யூன் ஆறுமுகம் மான்வியின் அறைக்குள் கொண்டுச் சென்ற கிரேப் ஜுஸை பார்த்தவளின் முகம் மாறியது.
“ஐந்து வருடங்களுக்கு பிறகு மான்வி இன்றுதான் அருணாச்சலம் தாத்தாவோட கேபினுக்கு வந்திருக்கா! ஆறுமுகம் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள்தான் ஆகுது மான்விக்கு பிடித்த க்ரேப் ஜுஸ் கொண்டு போறார்னா அப்போ மயூரன் மாமா ஆறுமுகத்திடம் சொல்லித்தான் ஜுஸ் போயிருக்கு. அப்போ!! அப்போ! மாமா மனசுல மான்வி இன்னமும் நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கா. நோ!! நோ!! நான் தான் மயூரன் பொண்டாட்டி…
மான்வி மயூரனுக்கு எக்ஸ் பொண்டாட்டி மட்டும்தான்! ஏன் டி என்னோட வாழ்க்கையில குறுக்க வந்த நான் சின்னவயசுல இருந்து என் மாமாதான் எனக்கு புருசன்னு நினைச்சு வாழ்ந்திருந்தேன். ஏன் நான் வயசுக்கு வந்ததை அத்தைக்கிட்ட சொல்லாம என் மயூரன் மாமா கிட்டதான் ஃபர்ஸ்ட் சொன்னேன்டி! நான்தான் மாமாவை முதலில் லவ் பண்ணியது. ஆனா எனக்கு காலேஜ் லீவு விட்ட சமயம் அப்பா அம்மா கூட இருக்க லண்டன் போயிட்டேன்… அந்த கேப்ல நீ மாமா மனசுல எப்படியோ இடம்பிடிச்சு உட்கார்ந்துட்ட உங்க கல்யாணத்தை நிறுத்த நானும் எனக்கான வரை போராடிப்பார்த்தேன் எல்லாம் என் கையை மீறிப்போச்சு… இப்போ ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு விடமாட்டேன் மான்வி! மாமா எனக்குத்தான் எனக்குத்தான்” என்று பைத்தியம் போல உளறிக்கொண்டிருந்தாள் யாழினி.
ஜுஸை எடுத்து கேமராவை பார்த்துக்கொண்டே குடித்தாள் மான்வி.
மயூரனோ மான்வி ஜுஸ் குடிப்பதை பார்த்துக்கொண்டேயிருந்தான். அவள் குடித்து முடித்ததும் அன்றைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
ப்யூன் ஆறுமுகம் மான்விக்கு சர்க்குலர் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றதும் சர்க்குலரில் தினமும் இரண்டு மணிநேரம் மான்விக்கு கிளாஸ் செட்டியூல் போட்டு அனுப்பியிருந்தான்.
என்னை கேட்காம எப்படி செட்யூல் போடுவாரு! என்று மனதிற்குள் சண்டையிட்டாலும் ‘மான்வி உனக்கு கிளாஸ் எடுக்கத்தானே பிடிக்கும் அப்புறம் என்னடி! உன் மாமு உன் விருப்பத்தை தெரிஞ்சுதான் செட்டியூல் போட்டு இருக்கான்டி’ என்று இரணமாக இருந்த மனதிற்குள் ஏதோ மயிலிறகால் வருடியது போல இருந்தது மயூரனின் செயல்.
முதல் நாளே கிளாஸ் எடுக்க சொல்லி ஆர்டர் போடுவானென்று அவள் கனவா கண்டாள். மயூரன் மனதிற்குள் என்ன நினைக்கிறான் என்று மான்விக்கே விடுகதையாய் இருந்ததே!
மான்வி யோசனையுடன் அவளது அறையை விட்டு வெளியே வந்ததும் தமிழ் டிபார்ட்மென்ட் ஹெச்ஓடி சாந்தினி மான்வியின் அருகே வந்தவர் “மேம் இன்னிக்கு தமிழ் டிபார்ட்மெண்டல மூணு ஸ்டாஃப் லீவ் போட்டிருக்காங்க இந்த ஹவர் ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ்க்கு ஸ்டாஃப் யாரும் இல்லை. ரெண்டு ஹவர் நானே கிளாஸ் எடுத்திட்டிருந்தேன் செகரட்டரி சார் ரவுண்ட்ஸ வந்தவரு”
‘ஏன் நீங்களே ரெண்டு ஹவரா கிளாஸ்ல இருக்கீங்க இந்த ஹவர் மெர்சிதானே இருக்கணும்?’ என்று புருவம் சுருக்கிய மயூரனிடம்
“மெர்சியை பொண்ணு பார்க்க வராங்க அதான் லீவு போட்டிருக்காங்க சார்… இன்னும் ரெண்டு பேர் முக்கியமான விஷேசம்னு லீவு போட்டிருக்காங்க” என்றதும்
“இந்த ஹவர்க்கு மான்வி வருவாங்க நீங்க கிளம்புங்கனு சொல்லிட்டாரு. மேம் உங்களுக்கு சர்க்குலர் வந்திருக்குமோ என்னவோனு தெரியாம உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண வந்தேன்” என மூச்சிறைக்க பேசினார்.
சாந்தினியின் கையிலிருந்த கோட்டை பார்த்த மான்வியோ “எனக்கு சர்க்குலர் பைஃவ் மினிட்ஸ் முன்னாடிதான் வந்துச்சுங்க மேம்… உங்க கோட்டை எனக்கு இந்த ஹவர் மட்டும் கொடுக்க முடியுமா நான் நாளைக்கு வாஷ் பண்ணி கொடுத்திடறேன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
‘உங்களுக்காகத்தான் இந்த ஒயிட் கோட்டை மயூரன் சார் கொடுத்துவிட்டிருக்காரு’ என்று சொல்ல துடித்த நாவை அடக்கிக்கொண்டு “போட்டுக்கோங்க மேம்” என்று சாந்தினி தன் கையிலிருந்த கோட்டை மான்விக்கு கொடுக்க அவளுக்கென அளவெடுத்து தைத்தது போல இருந்தது.
மான்வியோ “சாந்தினி மேம் இது உங்க கோட்டா இல்லை வேற யாரோடதுமா?” என்று கோட்டை போட்டுக்கொண்டு மான்வி கேட்கவும்
“அ.அது என்னோடதுதான் மேம் உங்களுக்கு சரியா இருக்கு எனக்கு செகரட்டரி சார் கூட மீட்டிங் இருக்கு மேம் நான் கிளம்புறேன்” என்று சுடுதண்ணியை காலில் ஊத்திக் கொண்டு பறப்பவர் போல பறந்து விட்டார் சாந்தினி.
“மயூரன் என்னோட அளவு என்னனு உங்களுக்கு மட்டும்தானே தெரியும். உங்களை தவிர இந்த கோட்டை யாரும் கொடுத்திருக்க முடியாது! ஏன் டா இன்னமும் என் மேல இருக்க கோபம் குறையாம அப்படியே இழுத்து பிடிச்சி வச்சிருக்கியா? உங்கம்மா குள்ளநரி உன் மாமா பொண்ணு நச்சு பாம்பு இரண்டு பேரும் பேசுவதை நம்பி என்னை நட்டாத்துல தள்ளி விட்டியே மாமு. ஐஞ்சு வருசமா குழந்தைகளை வளர்த்து ஆளாக்க நான் பட்ட கஷ்டத்தோட அளவு உனக்கு தெரியுமாடா. ஒருநாள் கூட நான் நிம்மதியா தூங்கல மாமு உன்னை விட்டு பிரிஞ்ச நாளிலிருந்து எனக்கு தூக்கம் எட்டாக்கனி தெரியுமா சீதாதேவி அனுபவிச்ச கஷ்டம் நானும் பட்டேன்டா” என்று பெரும்மூச்சு விட்டவள் ஃபர்ஸ்ட் இயர் கிளாஸுக்குள் சென்றாள்.
“குட்மார்னிங் ஸ்டுடன்ஸ் நான் உங்க டிபார்ட்மெண்ட் புது லெக்சரர்” என்று தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்டு “போன கிளாஸ்ல மெர்சி எடுத்த பாடம் எதுவரை போயிருக்கு?” என்று முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவியிடம் கேட்கவும் அந்த பெண்ணோ “கம்பராமயணத்துல யுத்தகாண்டம் முடிச்சு உத்திர காண்டம் எடுக்கணும் மேம்” என்றதும்
‘சீதை லவ குசனோடு வாழ்ந்த வாழ்க்கையை நான் இந்த கலியுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கேனே! என் வாழ்க்கையை பாடமாக எடுக்கணுமா!’ என்று மான்வியின் உள்ளம் குமறியது.
மாணவர்கள் முன்னே அவளது மனக் குமறலை மறைத்து பாடம் எடுக்கத்தொடங்கினாள்.
மான்வி பாடம் எடுப்பதை சிரத்தையாக கதைக்குள் ஒன்றி கண்சிமிட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தனர். டிவியில் இராமாயணம் பல முறை பார்த்திருந்தாலும் ஒலிநாடா வாயிலாகவும் கேட்டிருந்தாலும் ஜகம் புகழும் புண்ணிய கதையான இராமாயணத்தை திகட்டாத தேன் இன்பம் காதில் பாய்வது போல மான்வி எடுக்கும் உத்ரகாண்டத்தை கேட்டுக்கொண்டிருந்தனர் மாணவர்கள்.
சீதையின் ஒழுக்கத்தை நெறி தவறி பேசிய நாட்டு மக்கள் அதை ஊதி பெரிதாக்கி இந்த ஊரில் சீதை இருக்க கூடாது நாட்டுக்கே இழுக்கென்று உண்மை நடந்தது அறியாது பத்தினி தெய்வத்தின் மீது பழியை சுமத்தி விடவும் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு உன் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் செங்கோல் ஆட்சிக்கு இழுக்கு வராமல் இருக்க மக்களின் கூற்றை நீ செவிமடுக்கத்தான் வேண்டும் முடிவு உன் கையில் ராமா என்று வசிஷ்டர் கூறிச் சென்று விட்டார்.
லஷ்மணனை அழைத்து சீதையை காட்டில் விட்டு வா என்றதில் அண்ணனின் வாக்கை இதுவரை மீறி நடக்காதவன் மனதில் கவலையோடு சீதா தேவியிடம் அண்ணா உங்களை காட்டில் விட்டு வர சொன்னார் தாயே என்றதும் சீதை அதிர்ச்சியுற்றாலும் ஸ்ரீ ராமரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு காட்டுக்குச் சென்றாள்.
வால்மீகி ஆசிரமத்தில் லவன் குசன் என்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தாள் சீதா தேவி. லவன் குசனுக்கு தனுர் வித்தைகள் கற்று கொடுத்தார் வால்மீகி. சீதா ஸ்ரீ ராமரின் கதைகளை குழந்தைகளுக்கு பாடமாகவே சொல்லி கொடுத்தாள். குழந்தைகள் இருவரும் ஸ்ரீ ராமன் சீதையை தனியே காட்டில் விட்டது பாவம் அல்லவா என்றாவது ஸ்ரீ ராமனை காண நேரிட்டால் அவரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்று இருந்தனர்.
ஸ்ரீ ராமர் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவு படுத்த அஸ்வமேத யாகம் நடத்தினார். யாக குதிரையை லவனும் குசனும் மரத்தில் கட்டி வைத்து விட்டனர்.
படை வீரர்கள் லவ குசனிடம் குதிரையை விட கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர்.
இச்செய்தி ஸ்ரீ ராமருக்கு போக சத்ருகனை அனுப்பி வைத்தார். சத்ருகனை சாதுரியமாக தங்கள் அம்புகளை கொண்டு மயக்கம் கொள்ள செய்தனர். பரதன் லஷ்மணன் இருவரது திவ்ய அஸ்திரங்களையும் முறியடித்து அவர்களையும் மூர்ச்சை அடைய செய்தனர்.
ஸ்ரீராமரே களத்தில் இறங்க அவரால் தன் ரத்தத்தில் உதிர்த்த பிஞ்சுகளை வதைக்க முடியாது போனது. ஸ்ரீராமரிடம் ஏன் சீதா தேவியை காட்டில் விட்டீர்கள் என்று கேள்வி கேட்டனர் லவனும் குசனும். குழந்தைகள் கேள்விக்கு ஸ்ரீராமரால் பதில் கூறமுடியாமல் நாட்டுக்கு திரும்பிச் சென்றார்.
சீதா தேவிக்கு லவன் குசன் பண்ணிய செயல் தெரிந்து விட மகன்களை கடிந்துக் கொண்டாள். தந்தை யார் என்று சீதையிடம் கேட்க ஸ்ரீ ராமச்சந்திரன் தான் என்று கூறியதும் குழந்தைகள் ராமாயணத்தை பாடல் பாடிச் சென்றனர் அயோத்திக்கு.
ஸ்ரீ ராமர் முன்னே லவனும் குசனும் சீதை ஆசிரமத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததையும் சீதை பரிசுத்தமானவள் என்று தங்கள் முன்னே பாட்டு பாடுவது ஸ்ரீ ராமரின் புதல்வர்கள் தான் என்று கூறினர். ஸ்ரீ ராமரோ தன் குழந்தைகள் காட்டில் கஷ்டப்பட்டனரா என்று பெரும் கவலை கொண்டார்.
அயோத்தி மக்கள் சிறுவர்கள் கூறுவதை நம்பவில்லை. சீதை எங்கே என்று குழந்தைகளிடம் கேட்கவும் அவர்கள் ஆசிரமம் சென்று சீதையிடம் நடந்ததை கூற கொதித்தெழுந்து விட்டாள் சீதை.
ஸ்ரீ ராமர் அரசவைக்கு லவன் குசனோடு சென்று “என் கற்பை குறை கூறிய புண்ணிய ஆத்மாக்கள் யார்… நான் லட்சுமணன் போட்ட கோட்டை தாண்டிய தவறை தவிர வேறு பிழை செய்யவில்லை அற்ப மக்களே! பூமி தாயே நான் கற்புள்ளவள் என்றால் இந்த கணமே என்னை உன்னுடன் அழைத்துச் சென்று விடு” என்று கண்ணீர் விட்ட அடுத்த நிமிடம் பூமி பிளந்து வெளியே வந்த பூமா தேவி சீதையை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
அயோத்தி மக்கள் சீதையை தெய்வமாக கண்டு வணங்கினர்.
“உங்களது அவதாரம் நாளையோடு முடியப்போகிறது பூமியில் அவதரித்து நீங்கள் முடிக்க நினைத்த காரியம் அனைத்தும் விதிப்படி நடந்து விட்டது. இனி அடுத்து விஷ்ணு அவதாரம் எடுக்க வைகுண்டம் போகும் காலம் வந்துவிட்டது. சீதை தாய் மகாலஷ்மி பூமியின் கஷ்டங்களை அனுபவித்து முடித்து வைகுண்டத்தில் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்று கூறி மறைந்து விட்டான் காலதேவன்.
ஸ்ரீ ராமரின் இந்த அவதாரத்தின் முற்றுப்புள்ளி வந்துவிட்டதே என்று தன்னையும் அறியாமல் ஸ்ரீ ராமரிடன் சென்று பதட்டத்துடன் ஸ்ரீ ராமரின் பாதம் பணிந்து கண்ணீர் விட்டான் லட்சுமணன்.
“லட்சுமணா கால தேவன் என்னிடம் பேசியதை கேட்டாய் அல்லவா! காலதேவனுக்கு நான் கொடுத்த வாக்கின்படி என்னால் உனக்கு தண்டனை கொடுக்க முடியாதே நீ என்னோட அன்பு சகோரன் இப்போது நான் என்ன செய்வேன்!” என்று மனம் சுணங்கினார்.
“அண்ணா நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன்” என்று தனது தவ சக்தியால் சரயு நதியில் இறங்கி லஷ்மணன் மோட்ஷம் அடைந்தான். ஆதிசேஷனின் லஷ்மண அவதராம் முற்று பெற்றது. அடுத்து பரதன் லஷ்மண மோஷம் அடைந்த செய்தியை கேட்டு அவனும் தன் மூச்சை நிறுத்தியிருந்தான். விஷ்ணுவின் சங்காக மாறி வைகுண்டத்திற்குச் சென்றான். பரதனின் அன்பு தம்பி சத்ருகன் பரதன் மோட்சம் அடைந்தது தெரிந்து அவனும் சரயு நதிக்கரையில் தனது சுவாசத்தை நிறுத்தி அடுத்த வினாடி சுதர்ஷன சக்கரமாக வைகுண்டத்தை அடைந்தனர்.
கடைசியாக ஸ்ரீ ராமரும் காலபுருசன் கூறியபடி தனது இறுதி பயணத்தை சரயு நதியில் விட்டு வைகுண்டம் சென்று விட்டார். ஸ்ரீ ராம அவதாரம் இனிதே முற்று பெற்றது.
லவனும் குசனும் அயோத்தி நாட்டை ஆட்சி புரிந்தனர். லவன் லவபுரி என்ற நகரத்தை கட்டினான். குசனும் கசூர் என்ற நகரத்தை கட்டி சீரும் சிறப்புமாக ஆட்சியை நடத்தினர். இத்துடன் ஸ்ரீ ராமாயணம் முற்று பெற்றது..! என்று பாடத்தை எடுத்து முடித்தவளின் நெஞ்சத்தில் பாரம் ஏறியது.
மாணவர்கள் கண் இமைக்காமல் கன்னத்தில் கைகொடுத்து பாடத்தை கண்முன்னே நடந்தது போல கேட்டவர்கள் அப்படியே சிலையாக அமர்ந்து விட்டனர்.
‘கடவுள் சீதையின் குழந்தைகளை நீங்கள் ஸ்ரீ ராமரின் குழந்தைகள் என்பதற்கு ஆதாரம் எங்கே என்று கேட்டவர்கள் இப்போது கலியுகத்தில் என் குழந்தைகள் மயூரனை காண நேர்ந்து அப்பா என்று அழைத்தால் ஏற்றுக்கொள்வார்களா! அப்போதும் மயூரன் ராமனை போல அமைதியாக இருந்து விடுவானா! என் குழந்தைகளுக்கு அப்பா மயூரன் வேண்டாம் தாய் நான் மட்டும் போதும்!’ என்று மனதிற்குள் பிதற்றிக்கொண்டு அந்த வகுப்பு அறையிலிருந்து வெளியே ஓடிவந்தவள் தன் எதிரே நின்ற மயூரனை கூட பார்க்காமல் காரை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super.👌👌👌👌👌👌👌👌👌
ரெண்டு எபி அதுல பாதி ராமாயணம் கதை போட்டுட்டிங்க கதை எல்லாம் சூப்பர் சூப்பர்