ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 20

இத்தனை நாள் தன் மனதில் போட்டு அழுத்திக்கொண்டு வைத்திருந்ததை மயூரனிடம் கொட்டி வெடித்து விட்ட நிம்மதியில் இருந்தாலும் தன் மாமனை காயப்படுத்தி விட்டோமென்று பெண்ணவளின் மனதில் பெரும் கவலையும் வந்தது.

‘இல்லை நீ மயூரனிடம் பேசியது கரெக்ட்தான் மான்வி… பண்ணாத தவறுக்கு பல வருசமா தண்டனை அனுபவிச்ச… இப்போ எனக்கு இவன் செய்த கொடுமைக்கு தண்டனை அனுபவிக்கட்டும் நல்லா அனுபவிக்கட்டும்’ என்று மயூரனை பார்க்காமல் ஜன்னல் பக்கம் சென்று ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்து நின்றுக் கொண்டாள்.

“அம்மா உங்க மேல நான் வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டீங்களே! மகன் வாழ்க்கையில விளையாண்டு இருக்கீங்கம்மா! உங்களை என்னால காலம் முழுக்க மன்னிக்கவே முடியாது!” என்று பெரும்மூச்சு விட்டவன் ஜன்னல் கம்பியை பிடித்து நின்றிருந்த மான்வியின் பக்கம் சென்று அவளது தோளில் கையை வைத்தான்.  

பட்டென்று தட்டி விட்டு “என் மேல உன் கை பட்டா அருவருப்பா இருக்கு… என் பக்கம் நின்னு என் கடுப்பை கிளப்பாம வெளியே போய்டு உன் முகத்தை பார்த்தாலே பிடிக்கலடா” என்று கண்ணில் கண்ணீர் வந்தது கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசினாள்.

சட்டென மான்வியை தன்பக்கம் திருப்பியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான் அவளோ அவன் கண்களை பார்க்கவில்லை. “இங்க பாருடி” என்று அவளது கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தான். அவள் கண்களில் அவன் மீதான வெறுப்பை அமிலமாக வெளிப்படுத்தினாள்.

“நான் பண்ணிய தவறுக்கு இந்த ஜென்மம் முழுக்க உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்குறேன்டி…” அவள் கழுத்தில் கட்டியிருந்த தாலியை கையில் எடுத்து “இந்த தாலி உன் கழுத்துல இருக்கும்வரை எனக்கு உன்னை தொட உரிமை இருக்குடி!” என்றவனோ “எனக்கு புத்திமழுங்கி போயிடுச்சு மானு! ஆத்திரத்துல எடுக்கிற முடிவு ஆபத்துலதான் முடியும்னு எனக்கு தெரிஞ்சும் உன்னை இந்த கையால தானே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினேன் இதோ தண்டனை நானே கொடுத்துக்குறேன்” என்றவனோ அவனது கையை சுவற்றில் குத்திக்கொண்டான்.

அவளோ அவன் கையை சுவற்றில் குத்திக் கொள்வதை பார்த்துக்கொண்டேதான் நின்றாள் தடுக்கவில்லை.

“இது போல நான் ஆயிரம் முறை அடி வாங்கி இருக்கேன் மனதால… நல்லா அடிச்சுக்கோ… அச்சோ மாமா உங்க கை வலிக்கும் உங்களை காயப்படுத்திக்காதீங்கனு உன் கையை பிடிச்சு நிறுத்துவேன்னு மட்டும் நினைக்காதடா பாவி!! டார்லிங் டார்லிங்னு என்னை ஏமாத்திட்டடா அறிவுகெட்டவனே என் முன்னாடி நிற்காதே போய்டு போய்டு” என்று அவனது சட்டையை பிடித்து கிழித்து விட்டாள். 

“நா.நான் போயிடறேன்டி நீ எமோஷ்னல் ஆகாதே… இப்போ போறேன் ஆனா நாளைக்கு மீண்டும் உன்னை தேடி வருவேன். நீ போடா நாயேனு கழுத்தை பிடிச்சு தள்ளினாலும் உன்கிட்ட வந்துட்டே இருப்பேன் டார்லிங்” என்று அவளது கன்னத்தை விரலால் தொடப்போக அவன் விரலை தட்டிவிட்டு தள்ளி நின்று தீயாய் அவனை முறைத்தாள்.

வெற்றுப்புன்னகையுடன் கதவை திறந்து வெளியேச் சென்றவன் அருணாச்சலத்தின் கையை பிடித்துக்கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க தாத்தா நா.நான் தப்பு பண்ணிட்டேன். நான் தப்பு பண்ண காரணமா இருந்தவங்களை சும்மா விடமாட்டேன்! எ.எனக்கு மான்வி வேணும்… அவளை என்கிட்ட தந்துடுங்க… என் கையில கிடைச்ச பொக்கிஷத்தை தவற விட்டுட்டேன். இப்போ மறுபடியும் என்கையில கிடைச்ச வைடூரியத்தை நான் இழக்க விரும்பலை” என்றவனின் குரல் கரகரத்து வந்தது. 

அருணாச்சலமோ “மான்வி எடுக்கற முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்! என் கையில எதுவும் இல்லை மயூரா!” என்று கையை விரித்து இதழ் பிதுக்கினார்.

அருணாச்சலம் பக்கம் நின்ற இளமாறனிடம் “என் மானு பக்கம் உன் கண்ணு போச்சு உன் முகத்துல கண்ணு இருக்காது பார்த்துக்கோ!” என்று விரலை நீட்டி எச்சரித்தான்.

இளமாறனோ “ப்ரோ மான்விக்கு என்னை பிடிச்சிருக்குனு சொன்னதாலதான் நான் மான்வியை பொண்ணு கேட்டு வந்தேன்! நீங்க எது பேசினாலும் மான்விகிட்ட பேசிக்கோங்க” என்றான் மௌனப்புன்னகையுடன்.

“மான்வி உன்னை பிடிச்சிருக்குனு சொல்லியிருக்க மாட்டா! இதோ இந்த தாத்தா உன்னை இப்படி பேச சொன்னாரா?” என்று இளமாறனிடம் எகிறினான்.

“இளமாறனை பொண்ணு பார்க்க நான்தான் வரச்சொன்னேன் மயூரன்… நீங்க இங்க நின்னு வெட்டியா வேதாந்தம் பேசாம உங்கம்மாகிட்ட போய் உங்களை மான்வி கத்தியால குத்தினது உண்மையானு கேளுங்க! சும்மா சவுண்ட் விட்டுக்கிட்டு” என முகத்தை சுளித்தாள்.

“தாத்தா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றவளோ மயூரனை பார்க்காமல் அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.

“நான் இங்கேயிருந்து போகணுமாடி இது என் தாத்தா வீடு! என்னை வராதேனு சொல்ல உனக்கு உரிமை கிடையாதுடி! நல்லா கேளுடி என்னை மீறி எவன் உன்னை கல்யாணம் பண்ணுறான்னு பார்க்குறேன்” என்று இளமாறனை நெருப்பு கக்கும் பார்வையுடன் பார்த்தான். 

பார்த்து விட்டு வேக நடையுடன் வெளியே வந்தவன் தான் போட்டிருந்த கிழிந்த சட்டையை கழட்டி விட்டு காரில் வைத்திருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன்

தோட்டத்து பக்கம் சென்று விளையாடிக்கொண்டிருந்த நேத்ரன் நேகாவை பார்த்தவன் “ஏஞ்சல்” என்றதும் நேகா சட்டென்று திரும்பியது. 

நேத்ரனோ “அப்பாவை பார்க்காதே நீ வா” என்று நேகாவின் கையை பிடித்தான்.

“ரெண்டு பேருக்கும் ஸ்கூலுக்கு டைம் ஆச்சு வாங்க போகலாம்” என்று குழந்தைகள் பக்கம் மயூரன் வரவும். 

“நேகா நேத்ரா” என்ற தாயின் குரலுக்கு இரு குழந்தைகளும் மான்வியின் பக்கம் சென்று நின்றுக் கொண்டது. மீண்டும் அவமானப்பட்டு போனான் மயூரன். 

மான்வியின் முகத்தில் கர்வப்புன்னகை மின்னியது.

இளமாறன் அருணாச்சலத்திடம் பேசிக்கொண்டே வெளியே வந்தவன் “போலாமா மான்வி?” என்று தன் கார் கதவை திறந்து விட்டான்.

மான்வியோ “நேகா நான் இளமாறன் சார் கார்ல போறேன் நீ அப்பா கூட போறியா இல்ல என்கூட வரியா!”

“நா.நான் உங்க கூட வரேன் ஈவ்னிங் ஸ்கூல் விட்டதும் அப்பா கூட வந்துக்குறேன்” என்று மான்விக்கு முன்னே இளமாறனின் காரில் ஏறிக்கொண்டது. 

நேத்ரனோ மயூரனுக்கு பழிப்பு காட்டி இளமாறனின் காரில் ஏறிவிட்டான்.

முகம் வெளிறி போய் நின்ற மயூரனை ஏளனபார்வையுடன் பார்த்து இளமாறனின் காரில் ஏறினாள். மயூரனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. 

தான் செய்த தவறுக்கு தண்டனையாக எண்ணிக்கொண்டு காரை எடுத்துச் சென்றுவிட்டான். 

மான்வியோ ‘நான் பட்ட வலி நீயும் படணும் மயூரா பொண்ணுங்கன்னா உன்னை போன்ற ஆண்களுக்கு கிள்ளுக் கீரையா போய்ட்டாங்களா நாங்களும் பொங்கி எழுந்தா நீங்க தாங்க மாட்டீங்க’ என்று பெரும்மூச்சு விட்டாள்.

“இளமாறன் நீங்க கிளம்புங்க நான் என்னோட கார்ல வந்துடறேன்!” என்றதும் குழந்தைகள் “நாங்களும் உங்க கார்லயே வந்துடறோம் அம்மா” என்று காரை விட்டு இறங்கி மான்வியின் காருக்குள் ஏறிக்கொண்டதும்.

“இந்த மான்வி எப்போதும் மயூரனுக்கு மட்டுமே சொந்தமானவ இளமாறன்! என்னால மயூரனை மறந்து இன்னொரு வாழ்க்கைக்குள்ள போக முடியாது. மன்னிச்சுடுங்க உங்களுக்கு வேற நல்ல பொண்ணு மனைவியா கிடைப்பா! ஆல் தி பெஸ்ட்” என்றவள் தன் கார் பக்கம் திரும்பினாள்.

“ஒரு நிமிசம் மான்வி”

“சொல்லுங்க சார்” என்றவளிடம்

“நானும் என் மனைவியும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்! என் மனைவியும் குழந்தையும் ட்ரைன் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க. அவங்களை மறக்க எனக்கு ரொம்ப காலம் ஆச்சு… இன்னமும் என் மனசுல இருக்காங்கதான். எனக்கு நேகாவையும் நேத்ரனை பார்க்கும்போது என் குழந்தையோட ஞாபகம் வந்துடும். மயூரன் உங்களை விட்டு பிரிஞ்சுட்டதா மாலதி என்கிட்ட சொன்னாங்க! எனக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் குழந்தைகளுக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன் மான்வி. மயூரன் உங்ககிட்ட பேசுவதையும் நீங்க அவர்கிட்ட சண்டை போடுவதையும் பார்த்தா ரெண்டு பேரும் எப்படி வாழ்ந்திருப்பீங்கனு எனக்கு புரியுது உங்க காதல் கதையை என்கிட்ட சொல்ல முடியுமா?” என்றான் புன்னகையுடன்.

“அந்த நாசமாபோன காதல் கதையை நான் இப்போ நினைக்க விரும்பல சார்! இன்னொரு நாள் சொல்லுறேன் நீங்க எனக்காக ஒரு உதவி மட்டும் பண்ணனும் அவரை நான் வெறுப்பேத்த உங்களை பயன்படுத்திக்க போறேன் சார். அவரை நான் சும்மா விடப்போவதில்லை. இப்போ ஸ்கூலுக்கு டைம் ஆச்சு கிளம்பலாம் சார் என் கதைய பத்தி பேசினா விடிய விடிய உட்கார்ந்து பேசணும்” என்று குறுஞ்சிரிப்புடன் காரில் ஏறினாள்.

மயூரனோ காரை எடுத்துக்கொண்டு எங்கே போகிறோமென்று தெரியாமல் சுற்றினான். அவன் மனம் சஞ்சலப்படும்போதெல்லாம் கடற்கரைக்குச் சென்றுவிடுவான். கடல் அலையில் நின்றுக் கொள்வான். ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல அவனது மனமும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.

போனை எடுத்தவன் “ஜெகதீஷ் எங்க இருக்கான்னு எனக்கு ஐஞ்சு நிமிசத்துல சொல்லணும்” என்று போனை வைத்துவிட்டான்.

“டேய் மயூரா எங்க இருக்க காலேஜ்க்கு வரலையாடா சடன் இன்ஸ்பெக்ஷன் வந்துட்டாங்க வாடா” என்று வெங்கட் அவசரப்படுத்தவும் “பத்து நிமிசத்துல வரேன்டா” என்றவனோ காலேஜ்க்கு காரை விட்டான்.

அவனது அறைக்குள் சென்று முகம் கழுவி வந்தவனுக்கு சூடாக காபியும் அவனுக்கு பிடித்த மெதுவடையும் டேபிள் மீது இருந்தது.

வெங்கட்டோ அவசரமாக அறைக்குள் நுழைந்தவன் “மயூரா இன்னிக்கு வந்திருக்க இன்ஸ்பெக்டர் ரொம்ப கெடுபிடியான ஆள் போல ஒவ்வொரு விசயமா நோண்டி நொங்கு எடுக்குறாரு நீ வந்தா தான் அவரை சமாளிக்க முடியும்டா” என்று பரபரத்தான்.

மயூரனோ காபியை ருசித்து குடித்துக்கொண்டிருந்தான். 

“டேய் காபியை அப்புறம் குடிச்சிக்கலாம் வாடா” என்று அவசரப்படுத்தினான்.

“இருடா ரொம்ப வருசம் கழிச்சு என் பொண்டாட்டி போட்ட காபியை குடிச்சிட்டு இருக்கேன் வரேன் இரு” என்றதும் பூமி தலைகீழாய் மாறிவிட்டதா என்று வெங்கட்டிற்கு தலை சுற்றியது டேபிளை பிடித்துக்கொண்டான்.

“என்னடா திடீர்னு ஷாக் கொடுக்கற மான்வி கூட நீ சேர்ந்து வாழ்ந்தா என்னை விட சந்தோசப்படற ஆள் கிடையாதுடா” என்று காபி கப்பை குடித்து எழுந்த மயூரனை அணைத்துக்கொண்டான் வெங்கட்.

“சார் இன்ஸ்பெக்டர் செகரட்டரியை பார்க்கணும்னு சொல்லுறாரு சார்” என்றதும்

“நாங்க வரோம்” என்ற மயூரனோ சட்டையை பேண்ட்டுக்குள் இன் பண்ணிக்கொண்டு இன்ஸ்பெக்டரை பார்க்கச் சென்றான்.

இன்ஸ்பெக்டர் இருந்த அறைக்குள் மான்வி கையில் பைலுடன் நின்றிருந்தாள். 

மான்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “குட் ஆஃப்டர்நூன் சார்” என்று புன்னகையுடன் இன்ஸ்பெக்டர் அருகே அமர்ந்தான்.

“லேப் ஸ்பெஷாலிட்டி சூப்பர். உங்க கிளாஸ் ரூம் காற்றோட்டமா இருக்கு. பாத்ரூம் கூட க்ளீனா வச்சிருக்கீங்க என்னால ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியலை! அகௌண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் இப்போதான் செக் பண்ணினேன். ஃபர்கெட் உங்க நேம் என்ன மேம்?” என்று மான்வியை பார்த்தார்.

“மான்வி மயூரவாஹனன்” என்றான் மான்வியை முந்திக்கொண்டு.

அவளோ அதிகாரிகள் முன்னே அவமானப்படுத்த விரும்பாமல் மயூரனை முறைத்து விட்டு திரும்பிக்கொண்டாள்.

“ஓ ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப் ரெண்டு பேரும் காலேஜை நிர்வாகம் பண்ணுறீங்களா வெரிகுட் மயூரவாஹனன். உங்க வொய்ஃப் காலேஜ் அக்கவுண்ட்சை கிளியர்கட்டா எனக்கு விளக்கி சொல்லிட்டாங்க! ரிப்போர்ட் எழுதணும் மேனேஜ்மெண்ட் பீப்பிள் இருக்க கூடாது” என்றார் புன்னகையுடன்.

“ஷுயர் சார்” என்று தோளைக்குலுக்கிக்கொண்டு எழுந்த மயூரனோ மான்வியின் கைப்பிடித்து வெளியேச் சென்றான்.

அறைக்கு வெளியே வந்த மான்வியோ “கையை விடுடா….” என்று ரெண்டு கெட்ட வார்த்தை போட்டு பேசியவள் வெடுக்கென மயூரனிடமிருந்து கையை விலக்கிக்கொண்டாள்.

இந்த காட்சியை வெங்கட் பார்த்துவிட்டான். தன் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டான் வெங்கட். 

மயூரனோ “நீ பார்த்த காட்சி உண்மைதான் டா… நான் ரொம்ப தப்பு பண்ணியிருக்கேன்டா” என்று மான்வி கூறியதில் ஜெகதீஷ் மான்வியிடம் நடந்துக் கொண்டதை மறைத்து “அம்மா இப்படி பண்ணுவாங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கல வெங்கட்” என்றான் வருத்தமான குரலில்.

“நான் உன்கிட்ட மான்வி தப்பு பண்ணியிருக்கமாட்டானு அடிச்சு சொன்னேன்லடா! நீ அப்ப எங்க நான் பேசுறதை காது கொடுத்து கேட்ட மான்வியை விரட்டி விடறதுலயே குறியா இருந்த” என்றான் கோபத்துடன்.

“அப்போ என் மூளை மழுங்கிப்போய்டுச்சுடா! உன்னோட காதலும் என்னால செத்துப்போச்சு நான் மாலதிகிட்ட மன்னிப்பு கேட்டு உன்னையும் மாலதியையும் சேர்த்து வைக்குறேன்டா” என்றவனிடம்

“அதுக்கு அவசியம் இல்லடா மான்வி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டா! இன்னிக்கு ஈவ்னிங் மாலதியை பார்த்து பேசப்போறேன்” என்றான் சந்தோசக்குரலுடன்.

“நான் ரொம்ப கெட்டவன் இல்லடா!” என ஆற்றாமையுடன் வெங்கட்டை பார்த்தான்.

“அப்படியெல்லாம் இல்லடா! இப்படித்தான் நடக்கணும்னு நமக்கு விதி விதிச்சிருக்கு விடு பார்த்துக்கலாம். மான்வி புடை போட்ட தங்கம்! உன் வாழ்க்கையில நீ செய்த புண்ணியம் மான்வி உனக்கு கிடைச்சிருக்கா அவளை விட்டுடாதே” என நண்பனுக்கு அட்வைஸ் பண்ணினான்.

“விடமாட்டேன்டா” என்றான்.

இன்ஸ்பெக்டர் அறையின் பெல்லை அழுத்தியதும் மயூரனும் மான்வியும் உள்ளேச் சென்றனர்.

“ரிப்போர்ட் எழுதி முடிச்சிட்டேன்! உங்க காலேஜ்ஜை பார்வையிட்டதுல நான் இம்பரஸ் ஆனது எல்லா டிபார்ட்மென்ட்லயும் வசதியில்லா பசங்களுக்கு ஃப்ரீ எஜிகேசன் கொடுக்கறதுதான்” என்று மயூரனுக்கு கைகொடுத்து “உங்க காலேஜ் பத்தி நல்லவிதமா ரிப்போர்ட் எழுதியிருக்கேன் வரேன்” என்று கைகொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

“சின்ன கிப்ட் சார்” என்று கவரை கொடுத்தான் மயூரன்.

“யங் மேன் நான் யார் கிட்டயும் கவர் வாங்கறது இல்லை. இந்த பணத்தை வசதியில்லா படிக்கற பசங்களுக்கு கொடுங்க கீப் இட் ராக்கிங் மயூரன்” என்று மயூரனை அணைத்துச் சென்றார் இன்ஸ்பெக்டர்.

மான்வி மயூரனை சட்டை பண்ணவேயில்லை. அன்று மயூரன் கண்ணில் படவேயில்லை. மான்வியின் அறைக்குள் கதவை தட்டாமல்தான் நுழைந்தான் மயூரன்.

“திறந்த வீட்டுல ஏதோ நுழைஞ்ச மாதிரி” என்று முணுமுணுத்துக்கொண்டாள் மான்வி.

“காலையில நாயேனு திட்டிட்ட டார்லிங் இப்பவும் நாயேனு திட்டு நான் கோவிச்சுக்க மாட்டேன்” என்று கண்ணைச் சிமிட்டினான்.

“இப்போ எதுக்கு வந்திருக்கீங்கனு சொல்லிட்டு கிளம்புங்க பசங்களுக்கு ஸ்கூல்ல விடற டைம் ஆச்சு நான் கிளம்பணும்” என்று எழுந்து விட்டாள்.

எங்கே தன்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்துவிடுவானோ என்ற பயம் மான்விக்கு.

மான்வியின் கண்களில் வந்து போன அச்சத்தை கண்டு “மானு டார்லிங் நான் உன்னை கிஸ் பண்ண வரலை எனக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு நீ நேகாவை உன்கூட அழைச்சிட்டு போயிடு வேலையை முடிச்சிட்டு வந்து நேகாவை என்கூட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன்” என்றவனோ “இப்போவெல்லாம் உன்னோட கன்னம் ஷைனிங்கா இருக்குடி” என்று அவள் கன்னத்தை தடவி விட்டு கதவு வரை சென்றவனிடம்

“குழந்தையை அழைச்சிட்டு போறதை விட அப்படி எ.என்ன முக்கியமான வேலை இருக்கு யாரையும் போய் அடிச்சு வீணா போலீஸ் ஸ்டேசன் அலைய வேண்டாம்… எனக்கு பண்ணிய துரோகத்துக்கு கடவுள் கட்டாயம் பனிஷ்மென்ட் கொடுப்பான் உங்களுக்கும் சேர்த்துதான்” என்று அழுத்திக் கூறினாள்.

“கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டான் மானு” என்று வாய்க்குள் முனகினான்.

மயூரனோ மான்வியை திரும்பி பார்த்து விட்டு “என் பொண்டாட்டி மேல கையை வைக்க நினைச்சவன் உடம்புல உயிர் இருக்க கூடாது மானு டார்லிங் நான் வரேன்” என்று கதவை வேகமாக அடித்து சாத்தி விட்டுச் சென்றான்.

ஜெகதீஷ் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான்.

“டேய் விடுங்கடா என்னை விடுங்கடா நான் யாருனு தெரியாம என்னை கட்டி வச்சிருக்கீங்க நான் மயூரனோட அண்ணாடா” என்றான் அலறியபடியே.

“மயூரன் சார்தான் உங்களை தலைகீழா தொங்கப்போட சொன்னது” என்ற நேரம் மயூரன் அங்கே வந்த வேகத்தில் ஜெகதீஷ் முகத்தில் ஓங்கி குத்து விட்டதில் அவன் “அம்மா” என்று அலறினான்.

அங்கே நின்றவர்களை கண்களால் வெளியே போகச் சொல்லி விட்டு “ஏன்டா நாயே தங்கச்சி போல பார்க்க வேண்டிய என் பொண்டாட்டி மேல கையை வைக்க நினைச்சிருக்க நமக்கு ஒரு தங்கச்சி இருந்து இப்படி ஒருத்தன் கையை வச்சிருந்தா சும்மா இருப்பியாடா நாதாரி நாயே” என்று அவனது கையை பிடித்து மடக்கினான்.

அவனோ “டேய் மயூரா உன் பொண்டாட்டிதான் என்கிட்ட மிஸ் பிஹேவ்” என்று சொல்ல வாயெடுக்க கையை முறுக்கி வாயில் குத்தினான் பொல பொலவென இரத்தம் கொட்டியது ஜெகதீஷ்க்கு. 

“என் பொண்டாட்டியை பத்தி எனக்கு தெரியும்டா பொறுக்கி நாயே” என்று பல்லைக்கடித்தவன் ஜெகதீஷை கீழே இறக்கி போட்டு காலால் மிதித்தான்.

ஜெகதீஷ் உடலில் உயிரை மட்டும் விட்டு அவனது வெறி அடங்கும் வரை அடித்து போட்டு வெளியே தூக்கிக்கொண்டு போய் “இவனை தூக்கி ரோட்டுல போடுங்க தண்ணி லாரியில அடிப்பட்டு சாகட்டும்! இவனெல்லாம் உயிரோட இருக்கவே கூடாது என் கையால கொன்னு நான் ஜெயிலுக்கு போக விரும்பல” என்று ரத்தவெள்ளத்தில் படுத்துகிடந்த ஜெகதீஷை திரும்பிப் பார்க்காமல் சந்திரமதியை பார்க்க வீட்டுக்குச் சென்றான் மயூரன்

4 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

  1. Строительство каркасного дома под ключ: как выбрать подрядчика
    каркасные дома под ключ в спб цены [url=https://karkasnye-doma-pod-kluch178.ru/]https://karkasnye-doma-pod-kluch178.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top