ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 21

யாழினியோ ஜெகதீஷுக்கு போன் போட்டு அலுத்துவிட்டாள்.

“என்ன மாமா போன் எடுக்கல… மான்வியோட முகத்தோடு வந்திருக்க குட்டி பிசாசை பார்த்தாவே எனக்கு பத்திக்கிட்டு வருது. 
எல்லாரையும் ஒழிச்சு கட்டுறேன் பாருங்க நான் நினைச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்காம போனா மயூரனையும் கொல்லுவேன்” என்றாள் மிருகத்தை போல.

சந்திரமதியோ “இந்த பெரியவன் ரெண்டு நாளா போன் எடுக்கவே இல்லை. பணம் வேணும்னா மட்டும் பணம் என் அகௌண்ட்டுக்கு அனுப்பி வைங்கனு கொஞ்சி பேசி என்கிட்ட பணத்தை வாங்கிட்டதும் நான் யாரோ போல நடந்துப்பான் மயூரனை பெத்த வயித்துலதான் இவனையும் பெத்தேன். சின்னவன் பொறுப்பா குடும்பத்தொழிலை நடத்துறான் இந்த ஜெகதீஷோ பொறுப்பு இல்லாம குடிச்சு கும்மாளம் போடுறானே! அவனுக்கு ஏதோ ஆபத்து நடந்திருக்குமோனு என் ஆழ் மனசு சொல்லிக்கிட்டேயிருக்கு” என்று கவலைப்பட்டு ஜெகதீஷ்க்கு போன் போட்டுக்கொண்டேயிருந்தார்.

மயூரன் வீட்டுக்குள் வந்தவன் சோபாவில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருக்கும் சந்திரமதியின் முன்னே கையை கட்டி நின்றவன் “என்னம்மா உங்க பெரிய மகன் போன் எடுக்கலையா? அவனை நடு ரோட்டுல அடிச்சு போட்டு வந்திருக்கேன்… எப்படி உங்க போனை எடுப்பான்?” என்றான்.

“எ.என்னடா சொல்ற ஜெகதீஷை அடிச்சு போட்டியா அதுவும் நடுரோட்டுல! எதனால அவனை எதுக்கு அடிச்ச சொல்லுடா அவன் உன் பொண்டாட்டி போல” என்று அடுத்த வார்த்தை பேச வாயெடுக்க “அம்மாஆஆ!” என்று அந்த வீடே அதிரும் படி உறுமியவன் “என் பொண்டாட்டியை பத்தி இன்னொரு முறை தவறா பேசினா நான் மனுசனா இருக்க மாட்டேன். நீங்க என்னை உங்க வயித்துலதான் பத்து மாசம் சுமந்து பெத்தீங்களா?” என்றதும் சந்திரமதி என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியாமல் பித்து பிடித்தது போல நின்றிருந்தார்.

கருணாகரணும் கதிரும் மயூரனின் சத்தத்தில் அவர்கள் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து நின்றனர்.

கருணாகரனோ “என்னப்பா ஆச்சு ஏன் சத்தம் போடுற?”

“இந்த அம்மா என் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்க பார்த்திருக்காங்கப்பா! மா.மான்வி இந்தம்மாவை கத்தியால குத்தலை! இவங்களா வயித்துல கத்தியால குத்திக்கிட்டு மானு மேல பழி போட்டிருக்காங்க என்னை பகடைக்காயா வச்சு மான்வி மேல கொலைகாரி பட்டம் சுமத்தி என் கையால என் மானுவோட கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வச்சிருக்காங்க. மான்வி என்னை காதலிச்ச பாவத்தை தவிர வேற எந்த பாவமும் பண்ணலையேப்பா… அவள் ஐஞ்சு வருசம் குழந்தைகளை வச்சிக்கிட்டு என்ன கஷ்டப்பட்டிருப்பா! இதே மான்வி உங்க வயித்துல பொறந்த பொண்ணாயிருந்தா அவ மேல அபாண்டமா பழி சுமத்தியிருப்பீங்களா! அந்த கேடுகெட்ட நாய் ஜெகதீஷ் கூட ச்சே ச்சே என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை இனிமே என்கிட்ட பேசாதீங்கம்மா!” என்றான்.

சந்திரமதி மகனுக்கு தன் உண்மை முகம் தெரிந்து விட்டதே! தன்னை வெறுத்துவிட்டானே என்று உடல் நடுங்க நின்றிருந்தார். மருமகளை கொடுமை செய்தாலும் மகனின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவருக்கு மகன் தன்னை நீயும் ஒரு தாயா என்று கேட்டதும் இப்போதுதான் தான் பெரிய பாவத்தை செய்துவிட்டோமென்று உறுத்தல் வந்தது.

“மயூரா நா.நான் சொல்றதை கேளுடா உன் அண்ணன் நல்லவன் அ.அவதான்” என்று மீண்டும் சொல்லி முடிக்கும் முன் கண்ணாடி டீபாயை தூக்கி போட்டு உடைத்தான். சில்லு சில்லாக தெறித்து விழுந்தது.

மயூரன் போட்ட கர்ஜனையில் யாழினியும் வந்துவிட்டாள். இப்போது நாம பேசக்கூடாதென அமைதியாக நின்றாள்.

டீபாயை நிலத்தில் ஓங்கி அடிக்கவும் யாழினியுமே பயந்து விட்டாள். தன்னை பற்றி மான்வி ஏதும் கூறியிருப்பாளோ என்று தொண்டைக் குழிக்குள் எச்சிலை கூட விழுங்க முடியவில்லை. 

“அண்ணா கோப்படாதீங்க” என்று மயூரனை பிடித்துக்கொண்டான்.

சந்திரமதிக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. அவரது கால்கள் நிலத்தில் நிற்க முடியாமல் தடுமாறியது.

“மாமா உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா யாரோ சொல்றதை கேட்டு அத்தையை நடு வீட்டுக்குள்ள வைச்சு கேள்வி கேட்குறீங்க?” என்றதும்

“நீ எங்க குடும்ப விசயத்துக்குள்ள மூக்கை நுழைக்காதே உனக்கு அந்த உரிமையில்லை” என்று அவளது மூக்கை உடைத்தான்.

“நா. நான் யாரா நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு மாமா !”

“உன் மேலயும் எனக்கு சந்தேகமா இருக்கு! நீயும் இவங்களோட கூட்டாளியோனு! நீதான் இந்த வீட்டு மருமகளா வரணும்னு என்கிட்ட அடம்பிடிச்சாங்க! நீ என்கிட்ட லவ் சொன்னதும் நான் மான்வியை விரும்புறேன்னு உன்கிட்ட சொன்னேன்தானே. யாழினி நீ இந்த வீட்டுல சின்னவயசுல இருந்து இருக்க. உன் கண்ணை தாண்டி பார்த்து நான் பேசியிருப்பேனா சொல்லு! இதோ இவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்கலனா நான் செத்து போயிருவேன்னு என்னை ப்ளாக் மெயில் பண்ணினாங்க. எந்த மகன் பெத்த அம்மாவை சாகடிக்க பார்ப்பான். அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு வாக்கு கொடுத்தேன்.

என் மானுகிட்டயும்தான் வாக்கு கொடுத்தேன் உன்னை காலம் பூரா கண் கலங்காம வச்சு பார்த்துப்பேன்னு ஆனா ஆனா இந்த மடையன் அவளை ஓடு ஒடுனு அவ கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினேன்! என் தலையில நானே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்! இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க என் பொண்டாட்டி குழந்தைகளை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து குடும்பம் நடத்தத்தான் போறேன் யாரும் எங்களை இனிமே பிரிக்க முடியாது!” என்று கண்ணில் கண்ணீரோடு நின்ற சந்திரமதியை பார்த்தவன் “உங்களுக்கு இனிமே ரெண்டு மகன்தான் என்னை மறந்துடுங்க” என்று சந்திரமதியின் இதயத்தில் ஈட்டியால் குத்திச் சென்றான் மயூரன்.

“இப்ப திருப்தியாடி! உண்மையை பல நாள் மறைக்க முடியாதுடி! உன மகன் மட்டுமல்ல நானும் உன்கூட பேசப்போறது இல்லை. உன்கையால ஒருவாய் சாப்பாடு கூட இனி சாப்பிட மாட்டேன். என் தங்கச்சி பொண்ணு தாய்மாமனை நம்பித்தானே வந்தா அவளை அநியாயமா பழி சுமத்தி ஐஞ்சு வருசம் வனவாசம் அனுபவிக்க வச்சிட்டியே நீயெல்லாம் பெண் ஜென்மத்துக்கே சாபக்கேடு” என்று அவரது பங்குக்கு சந்திரமதியை நோக்கி அமில வார்த்தைகள் கொட்டிச் சென்றார்.

சந்திரமதியோ சோபாவில் அமர்ந்தவர் கதிரை பார்த்து “நீயும் உன் பங்குக்கு என்னை பேசிவிடுடா”

“நான் கல்யாணம் பண்ணினா அடுத்த நாளே தனிக்குடித்தனம் போயிடுவேன் உன்கூட இருந்தா அவ்ளோதான் அண்ணாவையும் அண்ணியையும் பிரிச்சது போல எங்களையும் பிரிச்சு விடுவீங்க!” என்று பெருமமூச்சு விட்டு கதிரும் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

சந்திரமதியோ கணவனும் மகன்களும் பேசியதில் சோபாவில் சாய்ந்தவருக்கு நெஞ்சுக்குள் வலி வந்தது.

இப்போ இவங்க திருந்தினா நல்லாயிருக்காதே! என்று எண்ணியவள்

“அத்தை அத்தை பெரிய மாமாவை மயூரன் மாமா அடிச்சு போட்டதா சொன்னாங்கல்ல இப்ப உயிரோட இருப்பாரா அத்தை எனக்கு கவலையா இருக்கு!” என்றாள் போலிக்கண்ணிருடன்.

சந்திரமதியோ “ஜெகா ஜெகா நீ சாகக்கூடாதுடா அம்மா உன்னை காப்பாத்துவேன்!” என்று உளறிக்கொண்டிருந்த நேரம் சந்திரமதியின் போன் அடித்தது. போனில் உங்க மகனுக்கு ஆக்சிடன்ட் ஆகி … ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணியிருக்கோம் என்றதும் என் மகன் உயிருக்கு ஆபத்து இல்லையே என்று பதறியவர் “யாழு மா ஜெகதீஷை பார்க்க போகலாம்டி என்னை என் மகன்கிட்ட அழைச்சிட்டு போ” என்று பதட்டப்பட்டவரை அழைத்துக்கொண்டு ஜெகதீஷ் அட்மிட் ஆகியிருக்கும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றனர்.

ஐ.சியுவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான் ஜெகதீஷ்.

“உங்க மகனுக்கு தலையில பலத்த அடி ஆப்ரேசன் பண்ணனும் ஆப்ரேசன் பண்ணினாலும் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது” என்று டாக்டர் கூறியதும்

“எவ்ளோ பணம் செலவானாலும் பரவாயில்லை மாமாவை காப்பாத்துங்க” என்றாள் யாழினி.

“நாங்க எங்க கடமையை பண்ணுறோம் கடவுள் விட்ட வழி” என்று ஐசியுவிற்குள் சென்றார் டாக்டர்.

கருணாகரனுக்கு சந்திரமதி போனில் அழைத்து “நம்ம ஜெகதீஷ் உயிருக்கு போராடிட்டு இருக்கான்ங்க ஹாஸ்பிட்டலுக்கு வாங்க” என அழுகையுடன் கெஞ்சினார்.

“எனக்கு ஜெகதீஷ்னு ஒரு மகன் இல்லைடி மயூரன் கதிரை மட்டும்தான் என்னோட பசங்களா நினைக்குறேன். அந்த பொறுக்கி ராஸ்கல் மான்விகிட்ட முறை தவறி நடந்திருக்கான் அவனை நான் வந்து பார்க்கணுமா! எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சிட்டியாடி!  அவன் இந்த பூமியில வாழத்தகுதியில்லாதவன் செத்து ஒழியட்டும் நம்ம குடும்பம் நிம்மதியா இருக்கும்! நீ வேணா உன் மகன் கூட இருந்து ஆக வேண்டியதை பார்த்து முடிச்சிட்டு வா” என்று போனை கடுகடுவென பேசி வைத்திருந்தார்.

“அச்சோ என் பெரிய மகன் ஆயிரம் தப்பு பண்ணியிருந்தாலும் இந்த வயித்துல பெத்து தொலைச்சிட்டேன். உங்களை போல என்னால என் மகனை அம்போனு விட்டு வரமுடியுமா ஏன்டா இப்படி ஒழுக்கம் கெட்டு திரிஞ்சதனாலதானே உன் தம்பிகிட்ட அடி வாங்கி படுத்து கிடக்குற எல்லாம் அந்த கிரகம் பிடிச்சவ என் வீட்டுக்கு வந்த பிறகுதான்” என்று மான்வியை கரித்துக்கொட்டினார்.

யாழினியோ தன் திட்டம் எதுவும் பலிக்காமல் போய்விட்டதே. ‘இந்த பெரிய மாமா அரைஉயிரா படுத்துகிடக்குறான் இவனை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை! நாமளே களத்துல இறங்கிட வேண்டியதுதான்’ என்று பெரும்மூச்சு விட்டு நிமிர்ந்த வேளையில் ஆப்ரேசன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக்டரோ “உங்க மகன் ஆபத்துக்கட்டத்தை தாண்டியாச்சு. அவரு எழுந்து நடக்கவே மூணு மாசம் ஆகும் ஜாக்கிரதையா பார்த்துக்கணும் கண் விழிச்சதும் போய் பாருங்க” என்று கூறியதும்

“என் மகன் உயிரை காப்பாத்திக்கொடுத்திருக்கீங்க” என்று கை கூப்பினார் சந்திரமதி.

ஆமா இவன் ஒருநாளுல செத்து போய்ட்டா ஒரே நாளுல எல்லா வலியும் அவனுக்கு தீர்ந்து போகும் அணுஅணுவா தினம் தினம் நரக வேதனையை அனுபவிக்க கடவுள் ஜெகதீஷை காப்பாத்தியிருக்கான்.

மான்வி குழந்தைகளை உறங்க வைத்து ஜன்னல் வழியே வந்த நிலா வெளிச்சத்தில் நின்றிருந்தாள். ஜெகதீஷ் தன்னிடம் அத்து மீறி நடந்ததை கூறும்போது மயூரனின் கண்கள் ரத்தச்சிவப்பேறியதை பார்த்து நின்றாள் தானே மான்வி.

‘இப்போ கேடுகெட்ட ஜெகதீஷை என்ன பண்ணிவச்சானோ தெரியலையே இவன் என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டான். இவன் ஜெயிலுக்கு போனா அந்த சந்திரமதி சும்மா இருக்கமாட்டா எல்லாம் என்னாலதான்னு கதகளி ஆடுவா! கடவுளே என் வாழ்க்கையில சந்தோசமே வராதா?’ என்று மனம் வெதும்பி நின்றாள்.

மயூரனின் கார் சத்தம் கேட்க மயூரன் காரிலிருந்து இறங்கியதை கண்டு அப்பாடா என்று பெரும்மூச்சு விட்டாலும் ‘இப்போ இங்க எதுக்கு வந்திருக்கான் நான் தூங்கறதே ஒரு மணிநேரம் அந்த தூக்கத்தையும் கெடுக்க வந்துட்டானா?’ என்று பெரும்மூச்சு விட்டு குழந்தைகளை பார்த்தவள் அவளது அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள்.

அருணாச்சலமோ போனில் “என்ன கதிர் சொல்லுற ஜெகதீஷ் உயிர்க்கு ஆபத்தோட ஹாஸ்பிட்டல இருக்கானா? அவன் யார்கிட்டயாவது வம்பு பண்ணியிருப்பான் அடிச்சு போட்டிருப்பாங்க அவன் ஒருத்தனால என்னால வெளியில தலை காட்ட முடியலை! நாளைக்கு அவனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்க

“நான் தான் அவனை அடிச்சு போட்டு வந்திருக்கேன் தாத்தா அநேகமா அவன் உயிரோட இருக்க மாட்டான்னு நினைக்குறேன்!” என்று அருணாசலத்தின் முன்னே வந்து நின்றான் வேங்கைப்புலியாக.

மான்விக்கு பக்கென்றிருந்தது.

“நீங்க எனக்காக போய் அவனை எதுக்கு அடிக்கணும்… அவன் செத்துப்போய்ட்டான்னா நீங்க ஜெயிலுக்கு போய்ருவீங்க நான் தான் காலம் முழுக்க குற்ற உணர்ச்சியோட நிம்மதியை இழந்து தவிக்கணும்… உங்கம்மா என்னாலதான் என் ரெண்டு மகன் வாழ்க்கையும் போச்சுனு ஆட்டம் ஆடுவாங்க. ஒரு தவறும் பண்ணாமலேயே நான் தினம் தினம் செத்து பிழைக்குறேன்” என்றாள் மனம் வெம்பி.

“அவன் செத்துப்போனாலும் என்னை போலீஸ் பிடிக்காது அடிச்சு ரோட்டுல தூக்கி போட்டு வந்திருக்கேன் ஆக்சிடன்ட் ஆகிடுச்சுனுதான் தூக்கிப்போட்டு போயிருக்காங்க. என் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண அவன் சார்பா யார் இருக்காங்க ஒரு நாதியும் கிடையாது. தாத்தா நான் ரொம்ப நொந்து போய் வந்திருக்கேன் குளிச்சிட்டு வரேன் எனக்கு உங்க வீட்டுல சாப்பாடு போடுவீங்களா?” என்றான் மான்வியை பார்த்துக்கொண்டே

அவளோ திரும்பி நின்றுக் கொண்டாள்.

பார்வையாளராக நின்ற ஜெயசீலனோ “சாந்தி மாப்பிள்ளைக்கு சாப்பாடு எடுத்துவை” என்றவர் “மாப்பிள்ளை நீங்க குளிச்சிட்டு வாங்க” என்றதும் “தேங்க்ஸ் மாமா” என்று சிறு புன்னகையுடன் அருணாச்சலத்தின் அறைக்குள் சென்றான்.

சாந்தியோ சமையல்கட்டிலிருந்தவாறே மான்வி “இங்க வாயேன்மா” என்று அழைக்க
 
குழந்தைகளை எட்டிப்பார்த்துவிட்டு “என்னங்கம்மா” என்றவளிடம்

“மாப்பிள்ளைக்கு என்ன சட்னி பிடிக்கும் முதன் முதல்ல என் கையால சாப்பிட போறாரு அதான் கேட்குறேன்” என்றார் தேங்காயை திருகிக்கொண்டு.

“ஆமா உங்க மாப்பிள்ளை மறுவீடு வந்திருக்காரு நீங்க விருந்து வைக்க அவனுக்கு என்ன பிடிக்கும்னு என்கிட்ட கேட்குறீங்க. அவன் காலையில ஒரு காபியும் மெதுவடையும் மட்டும்தான் சாப்பிட்டிருக்கான் வயிறு காய்ஞ்சு கிடக்கும் இட்லியும் சாம்பாரும் வைங்க அதுவே போதும். எனக்கு தூக்கம் வருது நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தவளின் கையை பிடித்த சாந்தியோ “ரெண்டு பேர்க்குள்ள ஆயிரம் சண்டையிருந்தாலும் வீட்டுக்கு வந்த மனுசனுக்கு உன் கையால சாப்பாடு போடணும் மான்வி” என்று அவர் சிறு அதட்டல் போடவும்

“டைவர்ஸ் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு போயிருக்கான் அவனுக்கு நான் சாப்பாடு போடணுமா போங்கம்மா எனக்கு தூக்கம் வருது” என்று கொட்டாவி விட்டு திரும்ப மயூரன் டீசர்ட் டிராக்பேண்ட்டோடு சமையல்கட்டுக்கு முன்னே நின்றிருந்தான்.

அவளோ அவனை சட்டை பண்ணாமல் வழிய விடுங்க என்ற விதத்தில் அவனை பார்க்கவும் அவனோ அவள் போட்டிருந்த நைட்டியை பார்த்தான். அவனது கண்கள் போன இடத்தை கண்டு “பொறுக்கி ராஸ்கல் தள்ளுடா” என்று மயூரனை இடித்து விட்டுச் சென்றாள்.

‘நீ என்ன வேணா பேசிக்கோடி! நீயா மாமா மாமா என்கிட்ட பேசுனு ஒருநாள் அழுவ பாருடி’ என்று தோளைக்குலுக்கி “அத்தை டிபன் ரெடியா?” என்று சாந்தியிடம் உரிமையாக கேட்டான்.

சாந்தியோ “இதோ ரெடியாகிடுச்சு தம்பி நீங்க டைனிங் டேபிளில உட்காருங்க இட்லியோட வரேன்” என்றதும்

“ஓ.கே கொண்டு வாங்க பசிக்குது அத்தை” என்று டைனிங் டேபிள் சென்றவன் கண்ணை மூடி அமர்ந்துக் கொண்டான். 

ஜெயசீலனோ டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார். சாந்தியோ இட்லியை தட்டில் போட்டு சாம்பாரை ஊற்றவும் “எப்படி அத்தை எனக்கு சாம்பார் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா?” என்றபடியே இட்லியை சாப்பிட்டான் காலையிலிருந்து அவன் பட்ட வேதனையும் ஜெகதீஷை அடித்து போட்ட வந்த மனஉளைச்சலிலும் நாலு இட்லியை சாப்பிட்டவன் “போதும் அத்தை ரொம்ப தேங்க்ஸ்” என்றபடியே தட்டில் கைகழுவி எழுந்ததும்

மான்வி அறைக்கதவை லாக் பண்ணிக்கொண்டாள்.

மயூரனோ “மான்வி கதவை திற குழந்தைகளை பார்க்கணும்”

“காலையில பார்த்துக்கோங்க” என்று கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.

“நீ இப்போ கதவை திறக்கலைனா பால்கனி வழியா ஏறி வருவேன்டி” என்றதும்

ஜெயசீலனும் சாந்தியும் சிரித்துக்கொண்டு அவர்களது அறைக்குள் சென்றனர். 

மான்வியோ கதவை திறந்து விட்டு குழந்தைகள் பக்கம் சென்று உட்கார்ந்துவிட்டாள்.

நேகாவும் நேத்ரனும் லேசாய் இதழ் பிரித்து அழகாய் உறங்கிக்கொண்டிருந்ததை ஐந்து நிமிடம் பார்த்துக்கொண்டே இருந்தவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டான்.

“குழந்தைகளை பார்த்தாச்சுல கிளம்பு” என்று கதவு பக்கம் கையை காட்டினாள்.

“நீ ஐஞ்சு வருசத்துக்கு மேல குழந்தைகள் கூட தூங்கினல்ல நான் கொஞ்ச நாள் குழந்தைகளோட தூங்கிக்கிறேன்!” என்று எழுந்து மெத்தையில் படுக்க போனவனின் கையை பிடித்து கதவு பக்கம்இழுத்துவந்து “இடத்தை கொடுத்தா நீ மடத்தை பிடிப்படா! குழந்தைகளை பார்த்துட்டல ஒழுங்கு மரியாதையா தாத்தா ரூம்ல போய் படுத்து தூங்குடா!” என்று அவன் முதுகில் கையை வைத்து வெளியே தள்ளி கதவை மூடிவிட்டு கதவில் சாய்ந்து நின்றுக் கொண்டவளுக்கு அழுகைதான் வந்தது.

மயூரனோ “ஏய் கதவை திறடி இன்னிக்கு ஒருநாள் குழந்தைகள் கூட தூங்குறேன்” என்று கெஞ்சிப்பார்த்தான் மயூரன். மான்வி மனம் இறங்கி வரவில்லை. ஹாலில் இருந்த சோபாவில் படுத்துவிட்டான் மயூரன். மயூரன் கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டான் இன்று அவன் மனது ஏனோ லேசாகி இருந்தது.

மான்வி உறங்கவில்லை. கதவை மெதுவாய் திறந்து பார்த்தாள் மயூரன் ஹாலிலிருந்த சோபாவில் காலைக்குறுக்கி படுத்திருந்தான்.

‘இராட்சசன் என்னை உயிரோட கொல்றதுக்கே பிறந்திருக்கான்’ என்று சலித்துக்கொண்டாலும் தன் அறையிலிருந்து போர்வையை எடுத்து வந்து போர்த்திவிட்டுச் சென்றாள்.

அடுத்தநாள் காலையில் மயூரன் வெங்கட்டுடன் மாலதியின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். 

மாலதியின் அப்பா சண்முகம்தான் கதவை திறந்தார்.

வெங்கட்டை பார்த்ததும் அவன் தன் மகளை வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றது நினைவில் வர அவருக்கு கோபம் தான் வந்தது.

நேற்று இரவே “அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் வெங்கட் நேத்து என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாரு. அவரும் என்னைய தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்கறதா தெரியலை… என்னாலயும் அவனை மறக்க முடியல… நான் அவனை மன்னிச்சிட்டேனானு தெரியலை அவன் பேசியதை மறந்துட்டேன்பா வெங்கட்டை கல்யாணம் பண்ணிக்குறேன் உங்க அனுமதியோட” என்ற மகளை அணைத்துக்கொண்டவர் “நீ அவனை கல்யாணம் பண்ணினாத்தான் சந்தோசமா இருப்பனா அந்த ராஸ்கலையே கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் மகளின் உச்சியில் முத்தமிட்டு.

“அங்கிள் வெங்கட் மாலதி கல்யாண என்னாலதான் நின்னுடுச்சு… நான் மாலதிகிட்ட மன்னிப்பு கேட்டு வந்திருக்கேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். வெங்கட்டோட அம்மாவும் வந்திருக்காங்க உள்ளே வர சங்கடப்பட்டு நிற்குறாங்க” என்றதும்

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த மாலதியோ வெளியே எழுந்துச் சென்று “வாங்க ஆன்ட்டி ஏன் வெளியே நின்னுட்டீங்க” என்றாள் சிறு இதழ் புன்னகையுடன்.

“அம்மாடி இதுதான் நீ! நான் உன்னை அன்னிக்கு என்னவெல்லாம் பேசிட்டேன்! பணத்திமிரு பிடிச்சவ… மெத்த படிச்சிருக்கானு இறுமாப்புல இருக்கா… என் மகனுக்கு பொருத்தமான பொண்ணு நீ இல்ல! மேக்கப் போட்டு சுத்துறவனு இன்னும் வாய்க்கு வந்தபடி உன்னை கண்டமேனிக்கு திட்டிப்புட்டேன்… ஆனா நீ என்னை வாங்க ஆன்ட்டினு சொன்ன பாரு உன் நல்ல மனசை நான் புரிஞ்சுக்காம போனது என்னோட தவறுதான் மருமகளே! என் மகனும் உன்கிட்ட கொஞ்சம் அதிகமா பேசிட்டான் ஆனா உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு ஒத்தகாலுல நின்னான் தெரியுமா மருமகளே! எங்க வீட்டுக்கு விளக்கு ஏத்த நீ வரணும்” என்று மாலதியின் கையை பிடித்துக் கொண்டார்.

“நீங்க பேசினதை மறந்துட்டேன் அத்தை வாங்க” என்று வீட்டுக்குள் அழைத்துச்சென்றாள்.

வெங்கட்டிற்கு கால் தரையில் நிற்கவில்லை. பல வருடக்காதலுக்கு இன்றைக்குத்தான் மணி விழா கொண்டாடுவது போல மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தான். மாலதியை நொடிக்கொருதரம் பார்த்துக்கொண்டேயிருந்தான் வெங்கட். மாலதியோ வெங்கட்டை மருந்துக்கும் கூட பார்க்கவே இல்லை.

புவனாவோ சங்கடத்துடன்தான் மாலதியின் அருகே அமர்ந்திருந்தார்.

சண்முகமோ “வர வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள்தான் கல்யாணத்தை தள்ளிப்போட வேணாம்” என்று மாலதியை பார்த்தார்.

அவளோ தேங்க்ஸ்பா என்ற உதடசைத்து சமையல்கட்டுக்குச் சென்று காபியுடன் வந்தவள் முதலில் புவனாவுக்கு காபியை கொடுத்தாள்.

மயூரனுக்கு கொடுத்துவிட்டு வெங்கட்டிற்கு காபியை கொடுத்தாள். பெரும்மூச்சு விட்டு காபியை எடுத்துக்கொண்டு “தேங்க்ஸ் மாலு” என்றவனை கிஞ்சுத்தும் பார்க்கவில்லை. வச்சு செய்யப்போறானு தெரியுது என்று கண்ணை மூடித்திறந்தான்.

மயூரனோ ‘சாரிடா மச்சி என்னாலதான்’ என்று அவன் குற்றஉணர்ச்சியுடன் பார்த்தான்.

விடுடா என்று அவனது தோளில் கைவைத்தான்.

மயூரன் வீட்டுக்குச் செல்வதே குளித்து விட்டு உடை மாற்றி வருவதற்கு மட்டுமே.  சந்திரமதி மகனின் காலில் விழாதது மட்டும்தான் தம்பி தம்பி இந்த அம்மாவை மன்னிச்சுடு என்கிட்ட பேசு தம்பி என் முகத்தை பாரு கண்ணு என்று தினமும் அழுது கரைந்தார் சந்திரமதி. சந்திரமதியை திரும்பிகூட பார்க்காமல் வந்துவிடுவான்.

சந்திரமதியும் யாழினியும் ஜெகதீஷை பார்த்துக்கொண்டனர். ஜெகதீஷோ அடிப்பட்டும் திருந்தாத ஜென்மம் ஜுஸ் கொடுத்த யாழினியிடம் “என்னை அடிச்சு நடுரோட்டுல போட்ட மயூரனை நான் சும்மா விடமாட்டேன் யாழினி” என்றான் அடங்காதவனாய்.

“இதுக்கெல்லாம் காரணகர்த்தா மான்விதான் அவளை போட்டுத்தள்ளுங்க குழந்தைளை அனாதையாக்கிவிடலாம்” என்றாள் கேடு கெட்ட புத்திக்கொண்ட யாழினி.

வெங்கட் மாலதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக்கொண்டான். மாலதியின் கையை பிடித்துக்கொண்டான். மாலதியோ அடுத்த நொடி வெங்கட்டின் கையை விலக்கிக்கொண்டாள்.

இளமாறனும் திருமணத்திற்கு வந்திருந்தான். கல்யாணம் முடிந்ததும் மணமக்களை வெங்கட் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால் பழம் கொடுத்து விளக்கேற்ற வைத்து அன்று மாலை வரை மாலதியுடன்தான் இருந்தாள் மான்வி.

மயூரன் கல்யாணம் முடிஞ்சதும் கல்லூரிக்குச் சென்று விட்டான். கதிருடன் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டாள் மான்வி.

புவனாவோ “இன்னிக்கு நாள் நல்லாயிருக்குனு சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் குறிச்சிக்கொடுத்திருக்காரு ஐயர்” என்றார் மான்வியிடம்.

மாலதியோ தலைகுனிந்து நின்றாள். வெங்கட்டே ‘இன்னும் என்னோட பொண்டாட்டிக்கு என்மேல கோபம் தீராமதான் இருக்கு. இதுல ஃபர்ஸ்ட் நைட் எங்க போய் கொண்டாடுறது’ என்று புலம்பிக்கொண்டவன் “இப்போதைக்கு எதுவும் வேணாம் மா” என்று வெளியேச் சென்றுவிட்டான்.

வெங்கட் அங்கே இல்லையென்று தெரிந்ததும்  “அத்தை நீங்க சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று மான்வியுடன் புவனாவின் அறைக்குள் சென்றுவிட்டாள் மாலதி.

“என்னடி அண்ணா மேல செம கோபத்துல இருப்ப போல நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் வெங்கட் அண்ணா முகத்தை நீ பார்க்கவே இல்லையே அண்ணா முகம் வெளுத்துப்போய் நின்னாருடி” என்று அவள் வருத்தப்பட்டு கூறவும்

“நீ பேசாதடி! அவன் பேசியதை மறந்து அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டதே பெரிய விசயம் இதுல உடனே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடணுமோ உன் நொண்ணனுக்கு. பெரியவங்க மனசு சங்கடப்படக்கூடாதுனதான் ஃபர்ஸ்ட் நைட் நடக்க ஏற்பாடு பண்ணச் சொன்னேன்” என்றாள் வெடுப்பான பேச்சில்.

மயூரன் மான்வியை அழைத்துச்செல்ல வந்துவிட்டான். ஃபர்ஸ்ட் நைட் அறைக்குள் மாலதியை அனுப்பி வைத்து விட்டு மான்வி இளமாறனுக்கு போன் செய்தாள்.

வெங்கட்டிடம் “பார்த்து மச்சான் அவசரப்பட்டுடாதே! பொறுமை அவசியம்டா நான் அனுபவசாலி சொல்லுறேன் கேட்டுக்கோ நான் கிளம்புறேன் காலையில போன் பண்ணுடா” என்று வெங்கட்டின் தோளில் தட்டி வெளியே வந்தான்.

இளமாறன் காரில் மான்வி ஏறுவதை கண்டவனுக்கு உடம்பெல்லாம் திகு திகுவென எரிந்தது.

மான்வியோ “காரை எடுங்க இளமாறன்” என்றதும் இளமாறனோ “பை ப்ரோ” என்று கையசைத்துச் சென்றான்.

“பை ப்ரோவா டேய் என்னையே வெறுப்பேத்துறீங்கடா!” என்று காலை நிலத்தில் அடித்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.

“மான்வி உங்க வீட்டுக்கு போக அரைமணிநேரம் ஆகும் அதுக்குள்ள உங்க காதல் கதையை என்கிட்ட சொல்லுங்களேன்” என்றான் காரை ஓட்டிக்கொண்டே.

2 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top