22
சிதம்பரமும் சிவகாமியும் லவ் மேரேஜ்தான். அருணாச்சலத்திடம் அப்பா நான் சிதம்பரத்தை லவ் பண்ணுறேன் மேரேஜ் பண்ணி வைங்கனு சொன்னதும் என் பொண்ணை ஊர் பேர் தெரியாதவனுக்கு எப்படி கொடுக்க முடியும் காதல்கிற பேர்ல கண்ணை மூடிக்கிட்டு அவன் நல்லவனா கெட்டவனானு பார்க்காம பழகிடுவீங்க. அந்த பையனை வரச்சொல்லு அவங்க பேமலி பேக்கரவுண்ட எப்படினு விசாரிச்சுதான் கல்யாணத்துக்கு சரினு சொல்லமுடியும்னு என்று கட்டுபடியாக பேசி விட்டார் அருணாச்சலம்
“அப்பா அவருக்கு பேரண்ட்ஸ் கிடையாது ஆசிரமத்துல இருக்காரு இப்போ சின்னதா ஹோட்டல் வச்சிருக்காரு.. கல்யாணம் முடிச்சதும் அமெரிக்காவுல இந்தியன் புட் கோர்ட் ஆரம்பிக்கலாம்னு ப்ளான்ல இருக்காருப்பா” தயங்கியபடி சேலை நுனியை திருகிக்கொண்டு நின்றிருந்தார் சிவகாமி
“அந்த பையனை வரச்சொல்லு நான் பேசிட்டு என் முடிவை சொல்லுறேன் என்று ஒற்றைச்சொல்லோடு அவரது அறைக்குள் சென்றுவிட்டார்
சிதம்பரம் அடுத்த நாள் அருணாச்சலத்தை பார்க்க வந்திருந்தார். சிதம்பரத்தை மரியாதை குறைவாக நடத்தவில்லை அருணாச்சலம் .
என்பொண்ணுக்கு நான் எந்த சீர் சிறப்பும் பண்ணமாட்டான் சிவகாமி என் பொண்டாட்டியோட நகைமட்டும் போட்டு அனுப்புவேன் . அதுவும் என் பொண்டாட்டி இறக்கும்போது சிவகாமிக்கு நான் போட்டுருக்க நகை அனைத்தும் என் பொண்ணுக்கு கொடுத்துடுங்கனு கடைசியா வார்த்தையா சொல்லிட்டு போயிருக்கா! இப்பவும் என் பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிக்க விரும்புறீங்களா தம்பி !” என்றார் அழுத்தமாக
“உங்க அந்தஸ்தை பார்த்து நான் சிவகாமியை லவ் பண்ணல சார் ! உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருந்தது லவ்வை பண்ணிட்டேன் ! நான் கட்டுற மஞ்சள் கயித்தோட என் பொண்டாட்டியை அழைச்சிட்டு போறேன் சார்! என் பொண்டாட்டிக்கு ஐஞ்சு பவுன் தாலி கொடி பண்ணி போடுற அளவு என்கிட்ட பணம் இருக்கு” என்றார் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு
அருணாச்சலமோ இதழ் பிரித்து சிரித்தவர் “என்னோட பல கோடி சொத்துல என் பொண்ணுக்கு பங்கு இருக்குப்பா.. நீ ரெண்டு வருசம் காதலிச்ச பொண்ணுக்கு ஐஞ்சு பவுன் நகை போடுறனு சொல்லுற. என் பொண்ணை 21 வருசம் கண்ணுக்குள்ள வச்சு பொத்தி பொத்தி வளர்த்திருக்கேன் என் மகளுக்கு பண்ண வேண்டியதை பண்ணாம இருப்பேனா தம்பி உங்களை டெஸ்ட் பண்ணினேன் என் பொண்ணோட செலக்சன் எப்பவும் சோடை போகாது” என்று சோபாவிலிருந்து எழுந்தவர் சிதம்பரத்தை அணைத்துக்கொண்டு “தடபுடலா கல்யாணத்தை பண்ணிடலாம் மாப்பிள்ளை” என்றார் அருணாச்சலம்
“மாமா என் கல்யாணம் சிம்பிளா நடக்கட்டும் எனக்கு ஆடம்பரம் பிடிக்காது” என்றதும் அடுத்த முகூர்த்தத்தில் கோவிலில் எளிமையாக கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
சந்திரமதியோ ‘அனாதை பயதான் இவளுக்கு மாப்பிள்ளையா கிடைச்சானா! எப்படியோ நம்மை வீட்டை விட்டு இந்த சிவகாமி ஒழிச்சா சரி” என்று இருந்து விட்டார்.
மாப்பிள்ளையும் பொண்ணும் வீட்டுக்கு வந்ததும் சிதம்பரத்தை புழுவை பார்ப்பது போல பார்த்தார் சந்திரமதி.
சிதம்பரமோ யாரையும் கண்டுகொள்ளவில்லை. பணமும் பகட்டும் அவரை பெரிதாக பாதிக்கவில்லை சிதம்பரத்தை. சம்பரதாயங்கள் முடித்ததும் அன்று இரவே தனது வீட்டுக்கு சிவகாமியை அழைத்து வந்துவிட்டார் சிதம்பரம்.
சென்னையில் இருந்த ஹோட்டலை நண்பனிடம் ஒப்படைத்து விட்டு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு சிவகாமியை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார் சிதம்பரம்
அருணாச்சலம் மகளுக்கு சீதனமாக கொடுத்த பணத்தை கைதொடவில்லை சிதம்பரம் தான் வேலை செய்து சேமித்து வைத்த பணத்தை வைத்து புட் கோர்ட்டை ஆரம்பித்தார். பிஸ்னஸ் ஆமோகமாக நடந்தது. அடுத்த வருசம் மான்வியும் பிறந்து விட்டாள். அமெரிகாவில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து வேறு பிஸ்னஸ்களும் ஆரம்பித்திருந்தார். மான்வி கண்ணில் ஒருநாளும் கண்ணீர் வரவைத்ததில்லை சிதம்பரமும் சிவகாமியும்.
மான்வி அமெரிக்கா யூனிவர்சிட்டியில் மாஸ்டரும் டிகிரியும் முடித்துவிட்டாள். மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது சிதம்பரம் குடும்பம். மான்வி இரண்டு முறை இந்தியா வந்திருக்கிறாள். பெரிய பொண்ணாகிதும் மான்வி இந்தியா வரவில்லை. அருணாச்சலம் கருணாகரனிடம் விடியோ கால் பேசிவிடுவாள். மாமா என் பொண்ணுக் கு வரன் பாருங்க என்று அருணாச்சலத்திடம் சிதம்பரம் கேட்டுக்கொண்டிருந்த வேளையில் சிதம்பரத்தின் பிஸ்னஸில் பலத்த அடி வாங்கியது.
அமெரிக்காவில் அவருடன் பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தவர்கள் சிதம்பரத்தின் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு அவரை ஏமாற்றிவிட்டனர்.
கடைசியில் மான்வி பெயரில் வாங்கின சொத்துக்களை மட்டும் வைத்துவிட்டு கையில் இருந்த பணத்தை வைத்து கடனை அடைத்து விட்டு விட்டார். அப்போதும் அருணாச்சலம் சீதனமாக கொடுத்த பணத்தை சிதம்பரம் கை தொட வில்லை.
சிவகாமியோ “என்னங்க நாம அமெரிக்காவுல இருக்க வேணாம். இந்தியாவுல இருக்க ஹோட்டலை பார்த்துக்கலாம்” என்று துண்டு இருந்த கணவனை தேற்றினார் சிவகாமி.
மான்வி யூனிவர்சிட்டியில் லெக்சரராக இருக்கவும் அவளால் உடனே வேலையை விட்டு இந்தியாவுக்கு வரமுடியவில்லை. மான்விக்கு இந்தியாவுக்கு போக விரும்பமும் இல்லை.
“மானவியை தனியா விட்ட நாம எப்படி இந்தியா போகறது சிவா.. நான் மறுபடியம் பிஸ்னஸ் ஆரம்பிக்குறேன் சிவா. நாம இந்தியாவுக்கு போக வேணாம். நான் ஏமாந்துட்டேன் யாருக்கும் தெரியக்கூடாது. என்னை ஏமாத்தினவங்க முன்னாடி நான் பிஸ்னஸ் பண்ணி முன்னேறி காட்டுவேன்” என்று திடமாக கூறியவர் அமெரிக்காவில் புதிதாக ஹோட்டலை ஆரம்பித்தார்.
இலாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.
சிதம்பரம் வளர்ந்த ஆசிரமத்தின் உரிமையாளர் இறந்துவிட அவரின் இறுதிகாரியத்திற்காக இந்தியா வந்த நேரம் தான் ப்ளைட் இறங்கிய நிலையில் ஆக்சிடன்ட் நடந்திருந்தது.
சிவகாமி உயிர் அந்த இடத்திலேயே பிரிந்து விட்டது. சிதம்பரம் மகளை பார்க்க வேண்டி இரண்டு நாள் ஹாஸ்பிட்டலில் உயிரை கையில் பிடித்து கொண்டிருந்தாரோ என்னவோ மான்வி ஹோச்பிடலுக்கு வந்ததும் தந்தையின் உயிர் ஊசலாடி கொண்டிருந்ததை கண்ட மான்வியோ சிதம்பரத்தின் கையை பிடித்து “அப்பா என்னை விட்டு போகாதீங்க” கதறினாள்
அருணாச்சலத்திடம் “என்பொண்ணை பத்திரமாக பார்த்துக்கோங்க மாமா என் பொண்ணு கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்ந்திருக்கேன் பார்த்துக்கோங்க.. மான்வியின் பக்கம் நின்ற கருணாகரனை பார்த்து எ.என் பொண்ணை ந நல்ல இடத்துல க. கல்யாணம் பபண்ணிகொடுங்க” என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை
“அப்பா அப்பா பேசுங்கப்பா ” என்று கதறிய மான்வியிடம்
கையை அசைத்து அழக்கூடாது அ..அப்பாவும் அ..அம்மாவும் உ.உன்னை விட்டு எங்கயும் போக மாட்டோம். உன் கூடவே தான் இ.இருப்போம்டா.. நீ அ.அழக்கூடாது என மகளின் கண்ணீரை விரலால் துடைத்து விட்டதும் அவரது கை பொத்தென கீழே விழுந்தது
“அப்பாஆஆ” என்று சிதம்பரத்தின் மார்பில் சாய்ந்து கதறினாள் மான்வி. சிவகாமி சிதம்பரத்தின் இறுதி காரியங்கள் முடித்துவிட்டு அருணாச்சலத்துடன் மான்வி கருணாகரன் வீட்டுக்குச் சென்றாள்.
அங்கே சந்திரமதியோ வா மருமகளே என்று வரவேற்கவில்லை. மான்வியை வேண்டாவெறுப்பாய் பார்த்தார்.
“வயசு பசங்க இருக்க இடத்துல உங்க தங்கச்சி பொண்ணை தங்க வைக்கறது நல்லா இல்லைங்க” என நொடித்தார் சந்திரமதி கருணாகரனிடம்
“ஏண்டி உன் உடன்பிறப்போட பொண்ணு யாழினி நம்ம வீட்டுல தானே இருக்கா அவளும் வயசுப்பொண்ணுதானே மான்வியை விட ஒரு வயசு மூத்த பொண்ண யாழினி.. அவ நம்ம வீட்டுல இருக்கும்போது என் தங்கை பொண்ணு இந்த வீட்டுல இருக்கறது உனக்கு குத்துதோ! மான்வி எங்க வீட்டு பொண்ணோட வாரிசு அவளை வெளியே போகச் சொல்ல எனக்கே உரிமை கிடையாது. இந்த வீடு எங்கப்பா சம்பாரிச்ச சொத்துல வாங்கினது நியாபகம் வச்சிக்கோ! என்று சந்திரமதியின் வாயை அடக்கிவைத்தார் கருணாகரன்
மான்வி வந்த நேரம் மயூரன் காலேஜ் செகரட்டரியாக பொறுப்பு எடுத்திருந்தான். சிவகாமி சிதம்பரம் இறுதி காரியத்தில் மான்வி அழுது கொண்டிருந்ததை பார்த்து மான்விக்கு ஆறுதல் கூற துடித்த கைகளுக்கு கடிவாளம் போட்டு நின்றான் மயூரன்
மான்வி அறையை விட்டு வெளியே வரவில்லை. சிவகாமியையும் சிதம்பரத்தை நினைத்து அழுதுகொண்டேயிருந்தாள். கடமைக்காக ஒருநாள் மட்டும் அவளது அறைக்கு சென்ற சந்திரமதியோ “சும்மா எதுக்கு அழுதுகிட்டேயிருக்க உங்க அப்பாவும் அம்மாவும் சாகணும் விதி இருக்கு.. நீ அழுதுகிட்டே இருந்தா போனவங்க திரும்பி வரவா போறாங்க.. உன்னை தினமும் சாப்பிடு சாப்பிடு வெண்ணெய் வைக்க முடியாது.. நேரத்துக்கு வந்து சாப்பிட்டு போ. பரூமுக்குள்ள வந்து அழு யாரு வேணாம்கிற உனக்காக சாப்பாடு சேர்த்து சமைக்கிறோம்.. நீ சாப்பிடலை அந்த சாப்பாடு வீணா போகும். எனக்கு சாப்பாட்டை வீண் பண்ணினா பிடிக்காது! அப்புறம் இந்த வீட்டு வந்த பொண்ணை பட்டினி போட்டானு எனக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்காதே!” என்று மூன்றாவது மனதரிடம் பேசவது போல முகத்தில் அடித்தாற் போல பேசிவிட்டு சென்றார் சந்திரமதி
யாராவது தனக்கு ஆறுதல் கூறமாட்டார்களா என்று எதிர்பார்த்த நேரத்தில் சந்திரமதி தன் மனதை நோகடித்ததும் “அப்பா நீங்க ஏன்ப்பா என்னைவிட்டு போனீங்க.. என்னையும் உங்ககூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்ல.. இவங்ககிட்டயெல்லாம் நான் பேச்சு கேட்க வேண்டியிருக்கு பாருங்கப்பா! நாம மூணு பேரும் அழகான கூட்டுக்குள்ள வாழ்ந்திட்டிருந்தோமே.. யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே என்னை ஏன் தனியா விட்டு போனீங்க.. கடவுளே என்னையும் எங்கப்பா அம்மாகிட்ட கூட்டிட்டு போயிடு எனக்கு இந்த உலகத்துல இருக்கறதே பிடிக்கலை!’ என்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் மான்வி.
மயூரனின் அறைக்கு பக்கத்தில்தான் மான்வி தங்கியிருந்தாள். அவனது அறையை விட்டு வெளியே வரும் நேரம் மான்வியின் அழுகை சத்தம் கேட்கவும் உள்ளே போகலாமா ஒரு பொண்ணோட அறைக்குள்ள எப்படி போவது என்று தயங்கிக்கொண்டிருந்தவன் மான்வியின் கேவல் அதிகமாகவும் “எக்ஸ்கீயூஸ் மீ” என்று கதவை மெதுவாக தட்டினான்
மான்வியின் கேவல் நின்று “யா.யாரு” என்றாள் மெல்லிய குரலில்
கதவு திறந்து வந்தவன் சுவற்றில் சாய்ந்து காலை குறுக்கி அமர்ந்திருந்தாள். தலைக்கு குளித்திருந்தாள் போலும் தலை முடியை விரித்து விட்டிருந்தாள். அழுதவளின் கண்கள் சிவந்து சற்று வீங்கியும் இருந்தது.
“நான் மயூரன் நீ ஏன் தரையில உட்கார்ந்திருக்க சோபாவுல உட்காரலாம்ல இப்படி மார்பில்ஸ்ல உட்கார்ந்திருந்தா ஜலதோஷம் பிடிக்கும்.. என்றவனை
யார் இவன் என்ற ரீதியில் பார்த்தாள் மான்வி
“நான் உங்க மாமா கருணாகரனோட ரெண்டாவது பையன் மயூரன் உன்னை சின்ன வயசுல பார்த்திருக்கேன்.. காலையில பிரேக் பாஸ்ட் சாப்பிட்டியா” அவளது பக்கம் அவனும் தரையில் அமர்ந்தான்
“இ.இல்ல எனக்கு சாப்பிட பிடிக்கல.. அப்பாவும் அம்மாவும் இல்லாம” என்று முட்டிக்கொண்டு வந்த அழுகையை இதழ் கடித்து அடக்கினாள். ஆனால் முடியவில்லை
“எனக்கு அப்பா அம்மா வேணும்” என்று சிறுபிள்ளை போல அழுதவளை கண்டு பெரும்மூச்சு விட்டவன் “அத்தையும் மாமாவும் இல்லாதது போனது பெரிய வருத்தம்தான் ஆனா அவங்களையே நினைச்சு சதா அழுதுகிட்டேயிருந்தா எப்படிமா! உடனே மறக்க முடியாத பந்தம் இல்லை தான் ஆனா நீ சந்தோசமா வாழணும்னுதான் அத்தையும் மாமாவும் நினைச்சிருப்பாங்க இப்போ நீ அழறதை பார்த்தா அத்தையும் மாமாவும் வருத்தப்படுவாங்கதானேப்பா! நீ பிஜி முடிச்சு யூனிவர்சிட்டில லெக்சர்னு கேள்விபட்டேன் இப்படி சின்ன குழந்தை போல அழறியேமா!’ என்று அவளது முகம் பாதி மறைத்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான்.
அவளோ அமெரிக்காவில் வளர்ந்தாலும் இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்தாள்.. அதுக்காக ஆண் நண்பர்கள் யாரும் இல்லையென்று கூற முடியாது. தனக்கென்று எல்லைக்கோடு போட்டு இருப்பாள் மான்வி. இதுவரை பார்த்திராத ஒரு ஆண் தன் தனியாக இருக்கும் அறைக்கு வந்து தனக்கு ஆறுதலாக பேசுகிறான். உரிமையாக தொடுகிறான் என்று அவளுக்குள் சிறு பயம் எட்டிப்பார்த்தது. அவனது கையை மெதுவாக விலக்கி விட்டாள் மான்வி
“ஓ சா.சாரி” என்று கையை எடுத்துக்கொண்டவன்
“நீ வீட்ல இருந்தா அத்தை மாமாவோட நினைவு வந்துட்டுத்தான் இருக்கும் நாளைக்கே நம்ம காலேஜ்க்கு வந்துடு. நீ என்ன மேஜர்” என்று புருவம் சுருக்கினான்
“ந.நான் கம்ப்யூட்டர் சஸின்ஸ் அண்ட் தமிழ் ரெண்டு சப்ஜட்டும் கேண்டல் பண்ணுவேன்” என்றவளின் முகம் இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தது.
“குட் அப்போ நம்ம காலேஜ் ரெண்டு டிப்பார்ட்மெண்டலயும் வேக்கன்சி இருக்கு.. உனக்கு எந்த டிப்பார்ட்மெண்டல வொர்க் பண்ண விருப்பம் இருக்கோ ஜாயின் பண்ணிக்கோ! முகத்தை கழுவிட்டு வா சாப்பிட போகலாம்! உனக்கு யாரும் இல்லைனு நினைக்காதே நாங்க இருக்கோம். என்னை உன் பிரண்டா நினைச்சிக்கோ என்கிட்ட நீ எந்த நேரமும் போன்ல பேசலாம்!” என்று குறுநகையுடன்
கருணாகரனோ தோசையை தட்டில் போட்டு எடுத்து வந்தவர் மயூரன் மருமகளிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு மான்வி “இவன் என்னோட ரெண்டாவது மகன் மயூரன் காலேஜ் செகரட்டரியா பொறுப்பெடுத்திருக்கான் ரொம்ப பேசி உன்னை அழவச்சிட்டானா!” என்றபடியே அவரும் தரையில் உட்காரவும்
“மா.மா நீ.நீங்க சோபாவுல உட்காருங்க” என்று எழுந்து நின்று விட்டாள். நைட் ட்ரஸ் போட்டிருந்தாள். அவளது இடுப்புக்கு கீழ் முடி இருந்தது. இவ அமெரிக்காவுல வளர்ந்தால இல்லை ஆண்டிப்பட்டியில இருந்த வந்தாளா என்று அவளது கூந்தலையே பார்த்துக்கொண்டிருந்தான் மயூரன்.
“நீ நேத்து நைட்டும் சரியா சாப்பிடலைனு அப்பா வருத்தப்பட்டாரு தங்கம்.. அதான் மாமாவே உனக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்” என்றவர் எழுந்து சோபாவில் உட்கார்ந்ததும் மயூரன் எழுந்து நின்று “அப்பா நாளைக்கே மான்வியை காலேஜ் ஜாயின் பண்ணிட சொல்லிட்டேன். அவ வீட்ல இருந்தா சரியா இருக்காது. காலேஜ்க்கு வந்தால கிளரஸ் எடுக்கறது அவ கவனம் போய்ட்டும் நீங்க என்ன சொல்றீங்க” என்று தந்தையின் பதிலுக்கு காத்திருந்தான்
“நான் நினைச்சிருந்ததை நீ சொல்லிட்டப்பா நாளைக்கே நான் மான்வியை காலேஜ்க்கு கூட்டிட்டு வந்துடறேன் உனக்கு நம்ம காலேஜ்ல ஒர்க் பண்ணறது ஓ.கேதானே மருமகளே!” என்றார் சின்ன சிரிப்புடன்
“ம்ம் எனக்கு விருப்பம்தான் மாமா” என்று மெல்ல இதழை விரித்தாள்
Как оформить временную регистрацию в другом городе: Пошаговое руководство
купить временную регистрацию [url=https://www.rega-msk99.ru/]https://www.rega-msk99.ru/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌
super